PDA

View Full Version : தினமும் ஐந்து விடுகதைகள்

anna
15-01-2008, 03:25 AM
நண்பர்களே, தினமும் நான் 5 விடுகதைகள் சொல்லுவேன், அதற்கு சரியான பதில் சொல்லுவருக்கு விடுகதை வித்தகர் பட்டம் வழங்கப்படும். இப்போது இன்றைய 5 விடுகதைகள்

1.முத்து வீட்டுக்குள் தட்டு பலகை அது என்ன?
2.பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவன் யார்?
3.தலையை சீவினால் தாகம் தீர்ப்பான் அவன் யார்?
4.மண்ணுக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்?
5.அழுவேன் சிரிப்பேன், நீ செய்யும் அனைத்தும் செய்வேன் நான் யார்?

என்ன நண்பர்களே விடைகளை எழுதுங்கள்,பட்டத்தை தட்டி செல்லுங்கள்.

சிவா.ஜி
15-01-2008, 03:59 AM
1.முத்து வீட்டுக்குள் தட்டு பலகை அது என்ன?-நாக்கு
2.பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவன் யார்?-சீப்பு
3.தலையை சீவினால் தாகம் தீர்ப்பான் அவன் யார்?-இளநீர்
4.மண்ணுக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்?-மஞ்சள்
5.அழுவேன் சிரிப்பேன், நீ செய்யும் அனைத்தும் செய்வேன் நான் யார்?-கண்ணாடி

யவனிகா
15-01-2008, 04:50 AM
சிவா அண்ணா...என்ன இது..யாருடா விடுகதை சொல்லுவான்னு காத்திட்டிருந்த்தாப்பில டக்குன்னு ஓடி வந்து விடையச் சொல்லிட்டீங்க,நாங்கெல்லாம் யோசிக்க வேண்டாமா...

ஒன்னாங்கிளாஸ் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னனீங்க்ளே மூணாங்கிளாஸ் நௌபல் கேட்ட கேள்விக்கு திருதிருன்னு முழிச்சிட்டு நின்னீங்க..

நௌபல் டெய்லி ஒரு நோட் புக்ல கடி ஜோக்ஸ் எல்லாம் எழுதி வெக்கறான். எதுக்குடான்னா...அடுத்த முறை சிவா அங்கிள் வரும் போது கேக்கத்தான்...அப்படின்னான்.

ஏண்டா...அங்கிள் எல்லாத்துக்கும் டக்டக்ன்னு பதில் சொல்றாங்களா...அப்படீன்னதுக்கு,

இல்லம்மா, என்ன கேட்டாலும் "அங்கிள் தெரியல நீயே சொல்லு" அப்படின்னு ஒரே பதிலத் தான் சொல்றாரு.அப்படின்னு சொன்னான்.

சரிடா நீ விஜயம் அங்கிள்கிட்ட கேக்க வேண்டியது தான...அவருதான் நல்லவருக்கு நல்லவர்...புத்தி சாலிக்கு புத்திசாலி ஆச்சே...அப்படின்னா
அவன் சொல்றான் 'சிவா அங்கிள் கூட பரவாயில்லமா...தெரியல்லன்னா தெரியல்ல அப்படின்னு சொல்றார்...

விஜயம் அங்கிள் பந்தாவா "எங்க டீச்சர் இதெல்லாம் சொல்லிக் குடுக்கலே, நான் புத்திசாலி...எனக்கு விடை தெரியும் ஆனா இன்னைக்கு சொன்னா விடை தப்பாயிடும்..."இப்படியெல்லாம் சொல்றாரும்மா அப்படிங்கிறான்.

சரிடா விட்டுத்தள்ளு...அடுத்த முறை செல்வா அங்கிள்ன்னு ஒரு அதி புத்திசாலியும் கூட வருவார்...அவர்கிட்ட கேளு...அப்படின்னேன்.என்ன செல்வா ரெடியா?

சிவா.ஜி
15-01-2008, 06:51 AM
எப்புடி இப்புடி...ஒரு குடும்பமே பயங்கரவாதிகளா இருக்காங்களே....அடுத்தமுறை நௌஃபல்லுக்கு சாக்லேட் கிடையாது.அம்ரூவுக்கு மட்டும்தான்.

anna
16-01-2008, 12:11 PM
அண்ணா சிவாஜிக்கு விடுகதை வித்தகர் என்ற பட்டம் வழங்கப்படுகிறது, அடுத்தாக இனறைய விடுகதை படியுங்க,பதிலை எழுதுங்க,பட்டத்தை தட்டுங்க*

anna
16-01-2008, 12:19 PM
1. ஊரல்லாம் ஒரே விளக்கு, அதற்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு, அந்த விளக்கு எது?
2.நாலு காலுண்டு,ஆனால் வீச வாலில்லை அவன் யார்?
3. கொம்பு நிறைய கம்பு அது என்ன?
4.கோடி கோடியாய் வெள்ளிபண்ம் கொட்டி கிடக்குது வீதியிலே அது என்ன?
5.காலடியில் கிடக்கிறானே என்று இவனை எட்டி உதைக்க முடியாது அவன் யார்?

ப*தில் சொல்லுங்க*

achunara
16-01-2008, 12:50 PM

பதில்

1.:confused:
2. நாற்காளி(chair)
3.கொம்பு மான்(deer)
4.:confused:
5.மிதியடி(slipper or shoe)

தாமரை
16-01-2008, 12:51 PM
இதை சிறுவர் பக்கத்துக்கு நகர்த்துங்கப்பா..

ஆதி
16-01-2008, 12:51 PM
இதை சிறுவர் பக்கத்துக்கு நகர்த்துங்கப்பா..

:D:D:D

தாமரை
16-01-2008, 12:55 PM
பதில்

1.:confused:
2. நாற்காளி(chair)
3.கொம்பு மான்(deer)
4.:confused:
5.மிதியடி(slipper or shoe)

1. நிலா
2. நாற்காலி
3. கலைமான்
4. நட்சத்திரங்கள்
5. நிழல்
இப்படிச் சொதப்பிட்டீரே!

anna
17-01-2008, 11:11 AM
பதில்கள்: *
1.நிலா
2.நாற்காலி
3.மாதுளம் பழம்
4.நட்சத்திரங்கள்
5. முள்

யாருமே ச*ரியான* ப*தில் சொல்லையே என*வே இன்றைய* ப*ட்ட*ம் க*ம்பெனிக்கு

anna
17-01-2008, 11:21 AM
இன்றைய விடுகதைகள் போட நான் ரெடி, பதில் சொல்ல நீங்க ரெடியா?

1.இந்த மானால் நடக்க முடியாது அது எந்த மான்?
2. பூப்பூவா பூத்திருக்கு ஆனா தலையில வைக்க முடியாதது அது எந்த பூ ?
3.எங்க அக்கா சிவப்பு குளிச்சானா கருப்பு அப்படி பட்ட அக்கா யார்?
4.தாய் குப்பையிலே மகள் சந்தையிலே யார் அந்த தாயும் மகளும் ?
5.வெளிச்சத்தில் பிடிபட்டவனுக்கு இருட்டில் விடுதலை யார் அவன் ?

நண்பர்களே பதில் சொல்லுங்க சீக்கிரம்,சீக்கிரம்

சிவா.ஜி
17-01-2008, 11:40 AM
1.இந்த மானால் நடக்க முடியாது அது எந்த மான்?-அந்தமான்
2. பூப்பூவா பூத்திருக்கு ஆனா தலையில வைக்க முடியாதது அது எந்த பூ ?-நட்சத்திரம்
3.எங்க அக்கா சிவப்பு குளிச்சானா கருப்பு அப்படி பட்ட அக்கா யார்?-தெரியல
4.தாய் குப்பையிலே மகள் சந்தையிலே யார் அந்த தாயும் மகளும் ?-வாழைமரம்,வாழைக்குலை
5.வெளிச்சத்தில் பிடிபட்டவனுக்கு இருட்டில் விடுதலை யார் அவன் ?-நிலா

anna
17-01-2008, 11:45 AM
சாரி அண்ணா நீங்க சொன்னதுல ஒண்ணுதான் சரி,மற்றது எல்லாம் தவறு அண்ணா தவறு முயற்சி பண்ணுங்க

sarcharan
17-01-2008, 11:53 AM
1.இந்த மானால் நடக்க முடியாது அது எந்த மான்? - அந்தமான்
2. பூப்பூவா பூத்திருக்கு ஆனா தலையில வைக்க முடியாதது அது எந்த பூ? - சிரிப்பு
3.எங்க அக்கா சிவப்பு குளிச்சானா கருப்பு அப்படி பட்ட அக்கா யார்? இரும்பு.

4.தாய் குப்பையிலே மகள் சந்தையிலே யார் அந்த தாயும் மகளும்? பலாப்பழம்

5.வெளிச்சத்தில் பிடிபட்டவனுக்கு இருட்டில் விடுதலை யார் அவன்? நிலா

anna
17-01-2008, 12:12 PM
சாரி அண்ணா நீங்க சொன்னதுல ஒண்ணுதான் சரி,மற்றது எல்லாம் தவறு அண்ணா தவறு முயற்சி பண்ணுங்க

இதயம்
17-01-2008, 12:15 PM
1.இந்த மானால் நடக்க முடியாது அது எந்த மான்?-அந்தமான்
2. பூப்பூவா பூத்திருக்கு ஆனா தலையில வைக்க முடியாதது அது எந்த பூ ? உப்பு
3.எங்க அக்கா சிவப்பு குளிச்சானா கருப்பு அப்படி பட்ட அக்கா யார்?-தெரியல
4.தாய் குப்பையிலே மகள் சந்தையிலே யார் அந்த தாயும் மகளும் ?-வாழைமரம்,வாழைக்குலை
5.வெளிச்சத்தில் பிடிபட்டவனுக்கு இருட்டில் விடுதலை யார் அவன் ?-ஃபோட்டோ

anna
17-01-2008, 12:27 PM
இதயம் அண்ணா நீங்க சொன்னதுல இரண்டு தான் சரி,மற்றதெல்லாம் தவறு.

அறிஞர்
17-01-2008, 09:43 PM
எது தவறு எது.. சரிங்க.... சார்...

சொன்னா மற்றவர்களுக்கு எளிதா இருக்குமே..

mania
18-01-2008, 05:36 AM
கேள்வி மூணாவதுக்கு பதில் நெருப்பு
அன்புடன்
மணியா

anna
18-01-2008, 02:44 PM
இதோ பதில்கள்
1.அந்த மான்
2.காலி ஃப்ளவர்
3.அடுப்பு கரி
4.வைக்கோல், நெல்
5.போட்டோ

ச*ரியான* ப*தில் யாரும் சொல்ல*லையே,ச*ரி இன்றைய* விடுக*தையை ப*டித்துட்டு ப*தில் எழுதுங்க*

anna
18-01-2008, 02:57 PM
இன்றைய ஐந்து விடுகதைகள், பதில் சொல்லுங்க சீக்கிரம்,சீக்கிரம்.
1.எட்டி நின்று பார்த்தால் இரும்பு குண்டு,உடைத்து பார்த்தால் இனிய பழம் அது என்ன?
2.ஒரு தாய்க்கு ஆயிரம் பிள்ளைகள்,அத்தனை பிள்ளைகளும் தாயுடனே யார் அந்த தாய்,சேய் ?
3.பச்சை பெட்டியில் பத்து சரம் முத்து அது என்ன?
4.செக்க செப்பிய நாங்க, கட்டி குடுத்த போவோம்,கல்லு தடுக்கினா சாவோம் அது என்ன?
5.கரையிலே போகிற கண்கவர் பாப்பவுக்கு முதுகுலே மூன்று சுழி அது என்ன?

மலர்
19-01-2008, 09:33 AM
ஹீ..ஹீ... ரொம்ப யோசிச்சி பாத்தாலும்
பதில் தெரியலை....

3)வெண்டைக்காய்
5)அணில்

அமரன்
19-01-2008, 09:45 AM
அன்பரே!!!
எல்லா விடுகதைகளும் ஒரே இடத்தில் இருந்தால் நுகர்வு இலகுவாகும் என்பதால் ஒன்றிணைத்துள்ளேன்.

மலர்
19-01-2008, 10:43 AM
இன்றைய ஐந்து விடுகதைகள், பதில் சொல்லுங்க சீக்கிரம்,சீக்கிரம்.
1.எட்டி நின்று பார்த்தால் இரும்பு குண்டு,உடைத்து பார்த்தால் இனிய பழம் அது என்ன?

பனம் பழமா..... :confused: :confused:

இதயம்
19-01-2008, 10:52 AM
இது எல்லாத்துக்கும் எங்க மலர் பாட்டி விடை சொல்வாங்க..!!!:D

சிவா.ஜி
19-01-2008, 10:53 AM
1.எட்டி நின்று பார்த்தால் இரும்பு குண்டு,உடைத்து பார்த்தால் இனிய பழம் அது என்ன?-பனம்பழம்
2.ஒரு தாய்க்கு ஆயிரம் பிள்ளைகள்,அத்தனை பிள்ளைகளும் தாயுடனே யார் அந்த தாய்,சேய் ?நண்டு அதன் குஞ்சுகள் அல்லது வானம்/நட்சத்திரங்கள்
3.பச்சை பெட்டியில் பத்து சரம் முத்து அது என்ன?-கொடுக்காபுளி
4.செக்க செப்பிய நாங்க, கட்டி குடுத்த போவோம்,கல்லு தடுக்கினா சாவோம் அது என்ன?சட்டிபானை
5.கரையிலே போகிற கண்கவர் பாப்பவுக்கு முதுகுலே மூன்று சுழி அது என்ன?-நத்தை

anna
19-01-2008, 11:42 AM
அன்பரே!!!
எல்லா விடுகதைகளும் ஒரே இடத்தில் இருந்தால் நுகர்வு இலகுவாகும் என்பதால் ஒன்றிணைத்துள்ளேன்.

நன்றி

anna
19-01-2008, 11:45 AM
பனம் பழமா..... :confused: :confused:

எட்டி நின்று பார்த்தால் இரும்பு குண்டு, உடைத்து பார்த்தால் இனிய பழம் அது என்ன?

பழம் என்பதே சரி

anna
19-01-2008, 11:50 AM
1.எட்டி நின்று பார்த்தால் இரும்பு குண்டு,உடைத்து பார்த்தால் இனிய பழம் அது என்ன?-பனம்பழம்
2.ஒரு தாய்க்கு ஆயிரம் பிள்ளைகள்,அத்தனை பிள்ளைகளும் தாயுடனே யார் அந்த தாய்,சேய் ?நண்டு அதன் குஞ்சுகள் அல்லது வானம்/நட்சத்திரங்கள்
3.பச்சை பெட்டியில் பத்து சரம் முத்து அது என்ன?-கொடுக்காபுளி
4.செக்க செப்பிய நாங்க, கட்டி குடுத்த போவோம்,கல்லு தடுக்கினா சாவோம் அது என்ன?சட்டிபானை
5.கரையிலே போகிற கண்கவர் பாப்பவுக்கு முதுகுலே மூன்று சுழி அது என்ன?-நத்தை

நான்காவது விடுகதைக்கான பதில் ஒன்று மட்டுமே சரி,மற்றதெல்லாம் தவறு

anna
19-01-2008, 11:53 AM
ஹீ..ஹீ... ரொம்ப யோசிச்சி பாத்தாலும்
பதில் தெரியலை....

3)வெண்டைக்காய்
5)அணில்

இந்த பதில்கள் இரண்டும் சரி

சிவா.ஜி
19-01-2008, 12:10 PM
நானும் வெண்டைக்காய்தான் முதலில் நினைத்தேன்.அதேபோல அணில்தான் நான் முதலில் எழுதியது, ஆனால் திரும்ப கேள்வியைப் படித்தால் சுழி என்று இருந்தது கரைமீது என்றிருந்தது. நத்தைக்குத்தான் மூன்று சுழியுடன் கூடிய ஓடு இருக்கும்,அது கரைமீது ஊர்ந்து போகும்.அதனால் அப்படி எழுதினேன்.

achunara
19-01-2008, 12:35 PM
1.விளாம்பழம்

மலர்
19-01-2008, 01:17 PM
1.விளாம்பழம்
விளாம் பழம்ன்னா... எப்படி இருக்கும்,,,:confused: :confused:

achunara
19-01-2008, 02:07 PM
விளாம் பழம்ன்னா... எப்படி இருக்கும்,,,:confused: :confused:

திரு.மலர் அவர்களே!

விளாம் பழம்ன்னா...

தமிழ் பெயர் விளாம்பழம்
ஆங்கில பெயர் Wood apple
அறிவியல் பெயர் Limonia acidissima

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

anna
19-01-2008, 04:59 PM
இன்றைய ஐந்து விடுகதைகள், பதில் சொல்லுங்க சீக்கிரம்,சீக்கிரம்.
1.எட்டி நின்று பார்த்தால் இரும்பு குண்டு,உடைத்து பார்த்தால் இனிய பழம் அது என்ன?
2.ஒரு தாய்க்கு ஆயிரம் பிள்ளைகள்,அத்தனை பிள்ளைகளும் தாயுடனே யார் அந்த தாய்,சேய் ?
3.பச்சை பெட்டியில் பத்து சரம் முத்து அது என்ன?
4.செக்க செப்பிய நாங்க, கட்டி குடுத்த போவோம்,கல்லு தடுக்கினா சாவோம் அது என்ன?
5.கரையிலே போகிற கண்கவர் பாப்பவுக்கு முதுகுலே மூன்று சுழி அது என்ன?

ஒகே
இதோ பதில்கள்
1. விளாம்பழம்
2. ஆலமரமும் விழுதுகளும்
3. வெண்டைக்காய்
4. மண்பானை
5. அணில்

ச*ரி இன்றைய* விடுகதையை போடுறேன்,ப*தில் சொலலுஙக*

1 காலையில் ஊதும் ச*ங்கு க*றி ச*மைக*க*வும் உத*வும் அது என்ன*?
2.ம*ண்ணுக்குள்ளே ம்ட்காத* க*யிறு அது என்ன*?
3.இந்த* ஊரின் முத*ல் எழுத்தை நீக்கினால் ஜாக்ச*ன் வ*ருவார்,முத*லுக்கு அடுத்த* எழுத*தை நீக்கினால் தாவி செல்வார்,அத*ற்கு அடுத்த* எழுத்தை நீக்கினால் போதை த*ருவார் அது எந்த* ஊர் அது எங்க*ள் ஊர்?
4.க*ன*த்த* பெட்டி க*த*வை திற*ந்தால் மூட* முடியாது அது என்ன*?
5.அப்ப்ன் சோறிய*ன்,அம்மா ச*டைச்சி,பிள்ளைக*ள் எல்லாம் ச*க்க*ரை க*ட்டி அது என்ன*?

anna
19-01-2008, 05:01 PM
நானும் வெண்டைக்காய்தான் முதலில் நினைத்தேன்.அதேபோல அணில்தான் நான் முதலில் எழுதியது, ஆனால் திரும்ப கேள்வியைப் படித்தால் சுழி என்று இருந்தது கரைமீது என்றிருந்தது. நத்தைக்குத்தான் மூன்று சுழியுடன் கூடிய ஓடு இருக்கும்,அது கரைமீது ஊர்ந்து போகும்.அதனால் அப்படி எழுதினேன்.

நண்பரே நத்தைக்கு மூன்று சுழி இருக்காது,ஒரே சுழிதான் சுற்றி இருக்கும்

anna
19-01-2008, 05:05 PM
திரு.மலர் அவர்களே!

விளாம் பழம்ன்னா...

தமிழ் பெயர் விளாம்பழம்
ஆங்கில பெயர் Wood apple
அறிவியல் பெயர் Limonia acidissima

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

சூப்ப*ரான* விள*க்க*ம், இதுக்கு மேல* விளாம்ப*ழ்த்துக்கு கிளாஸ் எடுக்க* முடியாது.கால்சிய*ம் ச*த்து நிர*ம்பிய* ப*ழ*ம் என்ப*து வரைதான் என*க்கு தெரியும். விளாம்ப*ழ*த்தை ப*ற்றி ப*ல* விச*ய*ங்க*ளை அறிந்தேன். மிக்க* ந*ன்றி

anna
20-01-2008, 08:56 AM
சரி இன்றைய விடுகதையை போடுறேன்,பதில் சொலலுஙக

1 காலையில் ஊதும் சங்கு கறி சமைககவும் உதவும் அது என்ன?
2.மண்ணுக்குள்ளே ம்ட்காத கயிறு அது என்ன?
3.இந்த ஊரின் முதல் எழுத்தை நீக்கினால் ஜாக்சன் வருவார்,முதலுக்கு அடுத்த எழுததை நீக்கினால் தாவி செல்வார்,அதற்கு அடுத்த எழுத்தை நீக்கினால் போதை தருவார் அது எந்த ஊர் அது எங்கள் ஊர்?
4.கனத்த பெட்டி கதவை திறந்தால் மூட முடியாது அது என்ன?
5.அப்ப்ன் சோறியன்,அம்மா சடைச்சி,பிள்ளைகள் எல்லாம் சக்கரை கட்டி அது என்ன?[/

என்ன* ந*ண்ப*ர்க*ளே யாருமே ப*தில் சொல்லை ஓகே இன்றைய* விடுக*தையை போடுறேன் இரண்டுக்கும் சேர்த்து ப*தில் சொல்லுங்க*

1. ப*ன்னிரெண்டு பிள்ளைக*ளில் இந்த* பிள்ளைம்ட்டுமே ச*வ*லைப்பிள்ளை,அது இரண்டாவ*து பிள்ளை அந்த* பிள்ளை யார்?

2. முல்லை தோட்ட*த்தில் க*ருப்பு முத்து அது என்ன*?

3.எல்லா இட*த்திலும் இருப்பேன், ஆனாலும் என்னை கையால் பிடிக்க* முடிக்க* முடியாது அது என்ன*?

4.வினா இல்லாம*ல் ஒரு விடை உண்டு அது என்ன* விடை?

5.வாயை திற*ந்த* வாயாடி அழுகிறாள் அவ*ன் யார்?

மலர்
21-01-2008, 06:30 AM
1 காலையில் ஊதும் சங்கு கறி சமைககவும் உதவும் அது என்ன?
சேவல் இல்லாட்டி கோழி

2.மண்ணுக்குள்ளே ம்ட்காத கயிறு அது என்ன?
மண்புழு

3.இந்த ஊரின் முதல் எழுத்தை நீக்கினால் ஜாக்சன் வருவார்,முதலுக்கு அடுத்த எழுததை நீக்கினால் தாவி செல்வார்,அதற்கு அடுத்த எழுத்தை நீக்கினால் போதை தருவார் அது எந்த ஊர் அது எங்கள் ஊர்?
மதுரை

4.கனத்த பெட்டி கதவை திறந்தால் மூட முடியாது அது என்ன?
முத்து இருக்கும் சிப்பி

5.அப்ப்ன் சொறியன்,அம்மா சடைச்சி,பிள்ளைகள் எல்லாம் சக்கரை கட்டி அது என்ன?
பலாப்பழம்...

மலர்
21-01-2008, 06:31 AM
திரு.மலர் அவர்களே!
விளாம் பழம்ன்னா...
விளக்கத்துக்கு
நன்றி சகோதரரே.....

சிவா.ஜி
21-01-2008, 06:56 AM
மலரு தூள்மா....அசத்திட்ட....

மலர்
21-01-2008, 07:22 AM
மலரு தூள்மா....அசத்திட்ட....
இன்னைக்கு உள்ளவிடுகதைக்கு பதில் சொல்லுங்கண்ணா...
நேக்கு தெரியலை.....

சிவா.ஜி
21-01-2008, 08:40 AM
1. ப*ன்னிரெண்டு பிள்ளைக*ளில் இந்த* பிள்ளைம்ட்டுமே ச*வ*லைப்பிள்ளை,அது இரண்டாவ*து பிள்ளை அந்த* பிள்ளை யார்?-பிப்ரவரி

2. முல்லை தோட்ட*த்தில் க*ருப்பு முத்து அது என்ன*?-கண்

3.எல்லா இட*த்திலும் இருப்பேன், ஆனாலும் என்னை கையால் பிடிக்க* முடிக்க* முடியாது அது என்ன*?-காற்று

4.வினா இல்லாம*ல் ஒரு விடை உண்டு அது என்ன* விடை?-பணிவிடை

5.வாயை திற*ந்த* வாயாடி அழுகிறாள் அவ*ன் யார்?-குளிர்பாண பாட்டில்(ஆ)

இதயம்
21-01-2008, 09:42 AM
[COLOR=black]1 காலையில் ஊதும் சங்கு கறி சமைககவும் உதவும் அது என்ன?சேவல் இல்லாட்டி கோழி

அட.. அட.. எந்தங்காச்சிக்கு என்னா அறிவு..?!!:D மல்ரு..எப்படி.. இப்படி.?? (அது சரி.. உங்க ஊர்ல சேவலை தவிர கோழியும் கூவுமா..? திருநெல்வேலியி பெண்கள் தான் இப்படின்னா.. கோழியுமா..?? :eek::eek: என்ன மலரு கைய்யி முதுகு பக்கம் போகுது..!! ஒரு வேளை முதுகு அரிக்குதோ..?!!:wuerg019::wuerg019:)