PDA

View Full Version : தையின் தனிச் சிறப்புகள்



mgandhi
14-01-2008, 06:44 PM
தையின் தனிச் சிறப்புகள்

தமிழ் ஆண்டின் முதல் மாதம் சித்திரை என்றே கருதிக் கொண்டிருக்கிறோம். வேறு சிலர் ஆவணியே முதல் மாதம் என்கிறார்கள். உழவர்கள் தை மாதத்தையே ஆண்டின் தொடக்க மாதம் என்று போற்றுகின்றனர். தை மாதப் பிறப்பை ஒரு புத்தாண்டைப் போல தெய்வ வழிபாட்டுடன் உண்டும், உடுத்தியும் கொண்டாடி மகிழ்கிறார்கள். தை மாதத்திற்குரிய சிறப்புகளும், பெருமைகளும் நிறைய உண்டு. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

தேவர்களின் பகல்: மனிதர்களின் ஓராண்டு காலம் என்பது தேவர்களின் ஒருநாள் ஆகும். தேவர்களுக்குரிய அந்த ஒருநாளில் ஆறு மாதங்கள் பகல்; ஆறு மாதங்கள் இரவு. தை மாதப் பிறப்புடன் பகல் தொடங்குகிறது.

உத்தராயணத் தொடக்கம்: சூரியன் தை முதல் ஆனி வரை புனித திசையான வட திசையை நோக்கிப் பயணம் செய்வது உத்தராயணம்; இதுவே சிறந்த அயணம். நல்ல காரியங்கள் நிறைவேற்றத் தகுதியான காலப் பகுதியும் இதுவே. ஆடி முதல் மார்கழி வரை, சூரியனின் தென் திசை நோக்கிய பயணம் தட்சிணாயனம். மேற்கண்ட இரண்டு அயணங்களும் இணைந்தது ஓர் ஆண்டு.

தையும், ஆடியும்: தையும், ஆடியும் இரண்டு அயணங்களின் தொடக்க மாதங்களாக உள்ளன. எனவே, இந்த இரண்டு மாதங்களும் தனிச்சிறப்பு பெற்ற மாதங்களாக விளங்குகின்றன.

தை வெள்ளி ஆடி வெள்ளி

தை அமாவாசை ஆடி அமாவாசை இவைகள் பல தெய்வங்களை வழிபட சிறந்த நாட்களாக இருக்கின்றன. தைக் கிருத்திகை ஆடிக் கிருத்திகை முருக வழிபாட்டிற்கு உகந்தவையாக இருக்கின்றன.

ஆடி மாதம் விதைக்கும் காலம். தை மாதம் அறுவடை காலம் என்ற வகையிலும் இரண்டு மாதங்களும் இணைகின்றன.

பொங்கல் விழா: பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகை போகிப் பண்டிகை என்று அழைக்கப்படும். இந்திரனுக்கு "போகி' என்ற பெயரும் உண்டு. அவனது அருளை நாடி, மழை பெய்து நாடு செழிக்க வேண்டும் என்று அவனை கொண்டாடுவதால் போகிப் பண்டிகை என்று பெயர் பெற்றது.

காயும், கனியும், கிழங்கும், மாடும் நிலம் தரும் செல்வம் அனைத்தும் வளர்வதற்கு இப்பொங்கல் திருநாள் மிகவும் முக்கியமானதாகும். விளையும் பொருட்கள் சிறந்து மேன்மை பெற்று விளங்க தெய்வத்தை வணங்குவதே "பொங்கல் திருவிழா' என்று அழைக்கப்படுகிறது.

தை மாதம் முதல் நாள் சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் நுழையும் நாளே தை மாதப் பிறப்பு என்றும் "மகர சங்கராந்தி' என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் ஒளியைக் கொடுத்து உயிரினங்கள் வாழ உணவையும், சக்தியையும் அளிக்கிறான். அதனால் சூரியனைப் போற்றி வணங்கும் திருநாளாக பொங்கல் விளங்குகிறது.

மாட்டுப் பொங்கல்: உழவர்கள் சூரியனை வணங்கிய மறுநாள் தங்கள் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகவே மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பசுக்களின் உடம்பில் தேவர்கள் அனைவரும் இருப்பதால் பசுக்களை வணங்கும் திருநாளாகவும் போற்றப்படுகிறது.

நன்றி தினமலர்

இளசு
14-01-2008, 07:59 PM
உலகமெங்கும் அறுவடைநாளுக்கு விழா எடுத்தவன் பழைய மனிதன்..

குறிப்பாய் சூரியப்பயண மாற்றம் கணித்து, தை முதல் நாளில் விழா எடுத்ததில் தமிழன் தனிச்சிறப்புள்ளவன்..

நல்ல தகவலுக்கு நன்றி - தினமலருக்கும், நண்பர் காந்தி அவர்களுக்கும்..

அறிஞர்
14-01-2008, 08:29 PM
புதிய தகவல்கள் நன்றி காந்தி...

இந்த வருடம் பொங்கலை.. தமிழர் புத்தாண்டாக அறிவிக்க போவதாக கூறினார்கள்.

ஆர்.ஈஸ்வரன்
15-01-2008, 10:24 AM
நல்ல தகவலுக்கு நன்றி

lolluvathiyar
17-01-2008, 07:46 AM
தை மாதத்தின் சிறப்பை பற்றி தந்த் காந்திக்கு மிக்க நன்றி.