PDA

View Full Version : விடை தெரியாத கேள்வியே...யவனிகா
14-01-2008, 09:55 AM
பொழுது போகாமல்
நான் இருந்த நேரம்
நீ என் அருகில் வந்தாய்...
எப்போதும் போல
கண்ணாமூச்சி விளையாட அழைத்தாய்...

என் கண்ணைக் கட்டி விட்டு
குறுக்கும் நெடுக்குமாய் ஓட ஆரம்பித்தாய்...
என்னைப் பிடி என்று சொல்லி விட்டு
முன்னேற ஆரம்பித்தாய்.

திடிரென உணர்ந்த அமைதியால்
திடுக்கிட்டு கட்டை அவிழ்த்தேன்.
திசை தெரியா இருட்டில்
வழி தெரியா இடத்தில்
என்னை தனியாய் விட்டு விட்டு
மாயமாய் மறைந்திருந்தாய்...

அங்கிருந்து ,மீண்டு வருவதற்குள்
மாண்டு விடக் கூடும் என்றே பயந்தேன்...
தட்டுத்தடுமாறி தப்பித்து வந்து விட்டேன்...

எனக்குத் தெரியும்
மீண்டும் நீ வருவாய்...
விளையாட அழைப்பாய்...

விடை தெரியாத கேள்வியே...
அடுத்தது என் முறை...
உன் கண்ணைக் கட்ட
கருப்புத் துணி தேடிக்கொண்டிருக்கிறேன்....

ஆர்.ஈஸ்வரன்
14-01-2008, 09:57 AM
உன் கண்ணைக் கட்ட
கருப்புத் துணி தேடிக்கொண்டிருக்கிறேன்....

பதிலுக்குப் பதில் தானே

தாமரை
14-01-2008, 09:58 AM
விடை தெரியாத கேள்வியே...
அடுத்தது என் முறை...
உன் கண்ணைக் கட்ட
கருப்புத் துணி தேடிக்கொண்டிருக்கிறேன்....

கேள்விகள் அவுட் ஆனால்
கேள்விகளின் கண்ணில் கறுப்புத் துணி :D
அவுட் ஆக்குவீரா?..:lachen001:

நீதியும் அவுட்டோ
நீதி தேவதைக் கண்களை
கட்டி இருக்கிறார்களே!..:icon_b:

சிவா.ஜி
14-01-2008, 10:03 AM
ம்...ரொம்ப பெரிய விஷயத்தையெல்லாம் சர்வசாதாரணமா போறபோக்குல சொல்லிட்டு போறீங்க,உக்காந்து யோசிங்கப்பான்னு எங்களை யோசிக்க விட்டுட்டு.
எடுத்துக்கொண்ட கருத்தின் கனம் குறையாமல் வரிகளில் தருவது உங்களின் தனித்திறமை.அது இங்கேயும் பளிச்சிடுகிறது.வாழ்த்துகள் தங்கையே.

யவனிகா
14-01-2008, 10:44 AM
தாமரை எல்லாத்துக்கும் எதிர்க்கேள்வி வெச்சிருப்பீங்களோ?

பின்னூட்டத்திற்கு நன்றி ஈஸ்வரன் அவர்களே...

சிவா அண்ணா...வர வர பாசம் உங்க கண்ண மறைக்குது...தங்கச்சி பேப்பர்ல அ,ஆ...எழுதினாலே என் தங்கச்சி மெத்தப் படிச்சவ அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க....(சும்மா சொன்னேன் சிவா அண்ணா...நீங்களே சொல்லலேன்னா உங்க தங்கச்சிய யார் சொல்லுவாங்க சொல்லுங்க...)

பெரிய விசயம் இல்லை சிவா அண்ணா,சில நேரம் மனதில் வரும் கேள்விகள்...இழுத்துச் சென்று வேறெங்கோ நம்மை விட்டு விட்டு
ஓடிப்போய் விடும்...நாம் தனியே பதிலுக்காய் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்போம்...கேள்விதான் ஓடிப்போச்சே...தொலையட்டும் என்று விடவும் முடியாது...மறுபடி பல்லிளித்த படி வரும்...மறுபடி தொலைவோம் என்று தெரிந்தே..மீண்டும் யோசிப்போம்...சூடு சொரணை இல்லாத மனது..

தாமரை
14-01-2008, 10:56 AM

இல்லைங்க.. கேள்வி அவுட்டாகாட்டி மறுபடியும் நீங்கதானே கண்ணைக் கட்டிக்கணும்.. அழுகுணி ஆட்டம் ஆடற தங்கை இல்லிங்களே நீங்க (ஐஸ்)

சொல்லப் போனா நான் சொன்னது எதிர் கேள்வி இல்லை. ஒரு ஆலோசனை..

இப்போ எனக்கு ஒரு கேள்விக்கு விடை தெரியலைன்னா ரொம்ப நேரம் கண்ணாமூச்சி ஆடமாட்டேன். கேள்வியை அவுட் ஆக்கிடுவேன்..

ஒரு உதாரணம் சொல்லட்டுமா? பயந்திடக் கூடாது.. ஒரு முறை என்னுள் ஒருகேள்வி..

நம்ம உடம்புக்குள்ள எக்கச்சக்க பாக்டீரியா வைரஸ் எல்லாம் இருக்கு இல்லியா.. அதே மாதிரி அண்டம் ஒரு மிகப் பெரிய உயிரி.. அதுக்குள்ள இருக்கிற ஒரு சின்ன வைரஸ் நாம. வைரஸ் மாதிரியே பெருகி உலகத்தை ஆக்ரமிச்சு அப்புறம் அடுத்த செல்லான நிலவுக்கும் செவ்வாய்க்கும் போயி அதை அழிச்சி .. இப்படி அண்டம் என்ற உயிருக்குள் ஊடுருவிய நோயா நாம்?..

இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்குமா.. கண்ணாமூச்சி காட்டிச்சி.. இப்ப பாருங்க கேள்வி அவுட் ஆயிடுச்சா.. விவாதங்கள் பகுதியில தனி திரி ஆரம்பிச்சி கேள்வியின் கண்ணைக் கட்டி மக்கள் கண்ணாமூச்சி ஆடுவாங்க.

:lachen001::lachen001::lachen001:

யவனிகா
14-01-2008, 11:06 AM
அய்யையோ பாவம் அண்ணி...நிஜமாவே எனக்கொரு சந்தேகம் தாமரை...புத்திசாலிக கூட குடும்பம் நடத்தறது கஷ்டம் அப்படின்னு அப்பப்போ என் வீட்டுக்காரர் சொல்லுவாரு...அண்ணி என்ன சொல்லுவாங்க?

தாமரை
14-01-2008, 11:08 AM
அய்யையோ பாவம் அண்ணி...நிஜமாவே எனக்கொரு சந்தேகம் தாமரை...புத்திசாலிக கூட குடும்பம் நடத்தறது கஷ்டம் அப்படின்னு அப்பப்போ என் வீட்டுக்காரர் சொல்லுவாரு...அண்ணி என்ன சொல்லுவாங்க?

அப்ப உங்களுக்கு அது தெரியாதா? ராசா! தங்கச்சி இப்படி ஆப்பு வச்சிட்டாங்களே!!!:eek::eek::eek:

அண்ணியா!! வாங்க வீட்டுக்கு வந்து கேளுங்க..

யாரைப் பத்திக் கேட்கறீங்க? என்ன சொல்றீங்கன்னு உங்களைக் கேள்வியாலயே திணறடிப்பாங்க..:rolleyes::rolleyes:

யவனிகா
14-01-2008, 11:48 AM
யாரைப் பத்திக் கேட்கறீங்க? என்ன சொல்றீங்கன்னு உங்களைக் கேள்வியாலயே திணறடிப்பாங்க..:rolleyes::rolleyes:

அப்ப சரி..இப்பத் தெரிஞ்சு போச்சி நிஜ புத்திசாலி யாருன்னு....

தாமரை
14-01-2008, 12:28 PM
அப்ப சரி..இப்பத் தெரிஞ்சு போச்சி நிஜ புத்திசாலி யாருன்னு....

அதே மாதிரி நிஜமுட்டாள் யாருன்னும் எனக்குப் புரிஞ்சி போச்சு!

இளசு
14-01-2008, 08:09 PM
உண்மையைத் தேடும் இந்த கண்டொளி விளையாட்டில்
எப்போதும் கருப்புத்துணி ஓர் அணிக்கு மட்டுமே...

ஆட்டமிழந்து ஓயும்வரை
அந்தத்துணி நம் விழிவசமே..

விநோத விதியுள்ள விளையாட்டுதான் - ஆனால்
விளையாடாமல் வாளாவிருக்க முடிகிறதா..???

வாழ்த்துகள் யவனிகா..

யவனிகா
15-01-2008, 04:34 AM
வாழ்த்துகள் யவனிகா..

நன்றி இளசு அண்ணா..

ஆர்.ஈஸ்வரன்
15-01-2008, 09:13 AM
நன்றிக்கு ஒரு நன்றி

சுகந்தப்ரீதன்
15-01-2008, 10:09 AM
உட்காந்து யோசிப்போர் சங்கத்துல சிவா அண்ணாவுக்கு அடுத்து யவனி அக்காவும் சேந்துட்டாங்க போலிருக்கு..! வாழ்த்துக்கள் அக்கா..!

இன்னும் எங்க அக்காவுக்கு விளையாட்டுதனம் போகலை போலிருக்கு..? என்ன ஒரு வில்லத்தனம்.. விடை தெரியாதுன்னு தெரிஞ்சும் விடை தேடுறாங்க.. கூடவே கருப்பு துணி வேற கண்ண கட்டறதுக்கு..! கேள்வியே தப்பிச்சுக்கோ.. மாட்டிக்காத..!

யவனிகா
16-01-2008, 03:51 AM
உட்காந்து யோசிப்போர் சங்கத்துல சிவா அண்ணாவுக்கு அடுத்து யவனி அக்காவும் சேந்துட்டாங்க போலிருக்கு..! வாழ்த்துக்கள் அக்கா..!

கூடிய சீக்கிரம் உன்னையும் உள்ள இழுத்துப் போட சதியாலோசனை வேற செய்யறோமாக்கும்...

சுகந்தப்ரீதன்
16-01-2008, 04:31 AM
கூடிய சீக்கிரம் உன்னையும் உள்ள இழுத்துப் போட சதியாலோசனை வேற செய்யறோமாக்கும்...
சவுதியில ஒரு சதின்னு சொன்னது இதுதானா..? ஆமா இதுல மாமாவுக்கும் பங்கு உண்டா அக்கா..?!:sprachlos020:

ஓவியன்
22-01-2008, 01:49 PM
வாழ்க்கையில் அங்காங்கே பல இடங்களில் விடை தெரியாத வினாக்கள்...
சிறு வயதில் விடை தெரியாதவற்றுக்கு பெரிய வயதில் கிடைக்க...
சிறு வயதில் விடை தெரிந்தவைக்கு பெரிய வயதில் விடை தெரியாமல்...

அடிக்கடி இப்படித்தான் கண்ணைக் கட்டி விட்டு விட்டு
தப்பிக்கின்றன இந்த விடை தெரியாத வினாக்கள் (விடை தெரியா கேள்வி என்பதிலும் விடை தெரியா வினா என்பது அழகாக இருக்கிறதே..!! :) ).

சிலவேளைகளில் நம் முன்னே இருக்கும் பல விடை தெரியாத வினாக்களுக்கு விடை தெரியாமல் இருப்பது நல்லது தான் அக்கா, இல்லையென்றால் அட இவ்வளவு தானா என்று ஓய்ந்து விடுவோம்....

தெரியாமல் இருப்ப்பதனால் தானே,
நம் தேடலும் அதிகரித்து
வாழ்க்கையின் சுவராசியமூம் அதிகரிக்கிறது.....
உங்கள் கவிதையைப் படிப்பது போல....!! :icon_b:

ஷீ-நிசி
22-01-2008, 03:22 PM
விடை தெரியாத கேள்வியே...

உன் கண்களை கட்ட கருப்புத்துணி தேடிக்கொண்டிருக்கிறேன்...

அந்த கருப்புதுணி வேறொரு கண்களை கட்டிவிட்டபடி

திசை தெரியா இருட்டில்
வழி தெரியா இடத்தில்
தனியாய் விட்டு விட்டு

இந்நேரத்தில் அலையவிட்டுக்கொண்டிருக்குமோ....

நீங்கள் என்ன நோக்கத்தில் இந்த கவிதை வடித்திருக்கிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லை.. ஆனால் அந்த கவிதையின் சூழ்நிலை மிக அழகாக சொல்லபட்டிருக்கிறது..

வாழ்த்துக்கள் யவனிகா!