PDA

View Full Version : பொங்கி வந்திடு பொங்கலே....!



வசீகரன்
14-01-2008, 08:27 AM
http://thumb2.webshots.net/t/61/61/4/79/59/2957479590093539102DROUJc_th.jpg (http://travel.webshots.com/photo/2957479590093539102DROUJc)
பொங்கலோ பொங்கல்..... என போற்றிட
எம் தமிழர் வாழ்வுதனில் வந்திட்ட பொங்கலே....!

பழையன கழிந்து புதியன புகுத்த
புன்னகையோடு வந்திட்ட பொங்கலே....!

தை நந்நாளை தமிழ் ஆண்டின் முதல் நாளாய்
அரசாணை பிறப்பிக்க வந்துள்ள வெண் பொங்கே..!

தரணி வாழ் தமிழர் எல்லோரும் இதயங்கள்
இணைந்து இருகரம் கூப்பி இன்முகமேந்தி
வரவேற்க்க வந்துவிட்ட இனியபொங்கலே....!

எம் விவசாய தோழனின் நிலம் சிந்திய
வியர்வை துளிகளில் விளைய பெற்று
கதிர்களாக களம் அடித்து
பாரிகளில் குவிக்கப்பெற்ற
நெற்மணிகளை புது பானை கொண்டு
மஞ்சக்கிழங்கு மத்தியிட்டு
புடைத்தெடுத்த புத்தரிசியிட்டு
புத்தாடைஅணிந்து புன்னகை முகமெய்தி
உலை கொதித்து நுரை தள்ளி பொங்கி வர....

பொங்கலோ பொங்கல்
என போற்றி நிற்க வந்திருக்கும் பொங்கலே....!

எம் வாழ்வும் பொங்கு வெள்ளம்மென மகிழ்வு
கொண்டு.... பொங்கிநிற்க வேண்டி வரவேற்றோம்...!

பொங்கலோ பொங்கல்..!



மன்ற நண்பர்கள் அத்துணை பேருக்கும் எனது
பொங்கல் திருநாள்..... நல்வாழ்த்துக்கள்...!

மயூ
14-01-2008, 08:29 AM
அட அருமையான பா!!!!
இச் சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் புத்தண்டு வாழத்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்!!!!
வாழ்த்துக்கள் வசீகரன்!

இதயம்
14-01-2008, 08:30 AM
அருமையான பொங்கல் வாழ்த்து..! அளித்திட்ட வசீகரனுக்கு என் நன்றிகளும், பாராட்டுக்களும்..!!

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!

வசீகரன்
14-01-2008, 08:36 AM
அட அருமையான பா!!!!
இச் சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் புத்தண்டு வாழத்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்!!!!
வாழ்த்துக்கள் வசீகரன்!

மிக்க நன்றி மயூ....! உங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

வசீகரன்
14-01-2008, 08:39 AM
அருமையான பொங்கல் வாழ்த்து..! அளித்திட்ட வசீகரனுக்கு என் நன்றிகளும், பாராட்டுக்களும்..!!

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!

மிக்க நன்றிகள் இதயம்....!

சிவா.ஜி
14-01-2008, 08:42 AM
பொங்கும் பொங்கலின் உற்சாகம் இந்த பாவிலும் பொங்குகிறதே...
இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் வசீகரா.

வசீகரன்
14-01-2008, 08:50 AM
பொங்கும் பொங்கலின் உற்சாகம் இந்த பாவிலும் பொங்குகிறதே...
இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் வசீகரா.

நன்றி.... நன்றி.... மனம் நிறைந்த நன்றிகள்
சீவாண்ணா.....!

பொங்கல் இங்கேயா சௌதியிலேயாண்ணா..?

சிவா.ஜி
14-01-2008, 09:00 AM
பொங்கல் இங்கேதான் நான் மட்டும் சவுதியில்.
(அதுசரி என்னை சீவாண்ணா என்று சொன்னதில் உள்குத்து ஒன்றுமில்லையே...நான் தலை சீவ முடி யாதவன் என்பதுதான் அனைவருக்கும் தெரியுமே)

வசீகரன்
14-01-2008, 09:19 AM
பொங்கல் இங்கேதான் நான் மட்டும் சவுதியில்.
(அதுசரி என்னை சீவாண்ணா என்று சொன்னதில் உள்குத்து ஒன்றுமில்லையே...நான் தலை சீவ முடி யாதவன் என்பதுதான் அனைவருக்கும் தெரியுமே)

அப்படியா சங்கதி...!இந்த மேட்டர் இப்பத்தான் எனக்கு தெரியும்.....!

தெரியாத நம்ம மக்களுக்கும் தெரிஞ்சிருக்குமேன்னா.....
மூ(மு)டி மறைக்க வேண்டிய விஷயத்த..... முக்குல போட்டு
ஒடச்சிட்டீங்ளேன்னா.... மன்றம் இனி வெறும் வாயை மெள்ளுமா.....?

மனோஜ்
14-01-2008, 09:38 AM
தரணி வாழ் தமிழர் எல்லோரும் இதயங்கள்
இணைந்து இருகரம் கூப்பி இன்முகமேந்தி
வரவேற்க்க வந்துவிட்ட இனியபொங்கலே....!
அருமை வரிகள் வசீகரன் வாழ்த்துக்கள் அனைருக்கும் உங்கள் கதவிதைக்கும்

வசீகரன்
14-01-2008, 10:00 AM
மிக்க நன்றிகள் மனோஜ் அவர்களே...! உங்களுக்கும் எனது தை திருநாள் வாழ்த்துக்கள்...!

ஆர்.ஈஸ்வரன்
14-01-2008, 10:05 AM
அருமையான பொங்கல் வாழ்த்து

வசீகரன்
14-01-2008, 11:45 AM
அருமையான பொங்கல் வாழ்த்து

நன்றி ஈஸ்வரன்.....! பொங்கல்
நல் வாழ்த்துக்கள்..!

இதயம்
14-01-2008, 11:56 AM
பொங்கல் இங்கேதான் நான் மட்டும் சவுதியில்.
(அதுசரி என்னை சீவாண்ணா என்று சொன்னதில் உள்குத்து ஒன்றுமில்லையே...நான் தலை சீவ முடி யாதவன் என்பதுதான் அனைவருக்கும் தெரியுமே)

ஆஹா... சிவாவோட எட்டப்ப எதிரிகளோட எண்ணிக்கை எக்குத்தப்பா எகிறிக்கிட்டே போகுதே..!!:icon_rollout::icon_rollout: முடிய(இ)ல்ல..!!:D:D