Log in

View Full Version : பொங்கட்டும் பொங்கல்!!!



சிவா.ஜி
14-01-2008, 04:07 AM
பொங்கும் உலையில்
பொங்கி வழியட்டும்
புத்துணர்ச்சி...புது மலர்ச்சி

தையின் பிறப்பு
தமிழருக்கு சிறப்பு
மஞ்சளணிந்த மண்கலயங்களில்
பொங்கிடும் பொங்கல்
நெஞ்சங்களை நிறைக்கட்டும்
இன்று சுவைக்கும் கரும்பின் சுவை
என்றுமிருக்கட்டும்!

உலகம் செழிக்க ஒளிதரும்
பகலவனுக்கு நன்றி
உழவன் செழிக்க உழைக்கும்
உழவுமாடுகளுக்கு நன்றி
உலகோர் உண்ன உணவுதரும்
உழவனுக்கும் நன்றி!

நேசம்
14-01-2008, 04:39 AM
நன்றி கூறும் திருவிழாவில் உழைக்கும் மக்கள் வாழ்க்கை சிறப்பா அமைய வாழ்த்துகள்

வசீகரன்
14-01-2008, 08:43 AM
அருமை அண்ணா அற்புதமான பொங்கல்
வாழ்த்து படைத்துள்ளீர்கள்.....!



உலகம் செழிக்க ஒளிதரும்
பகலவனுக்கு நன்றி
உழவன் செழிக்க உழைக்கும்
உழவுமாடுகளுக்கு நன்றி
உலகோர் உண்ன உணவுதரும்
உழவனுக்கும் நன்றி!

உழைப்பவர் உலகம் உயர்வு பெற
உரைத்திருக்கும் மேன்மை பெற்ற வரிகள்..!

சிவா.ஜி
14-01-2008, 08:49 AM
நன்றி வசீகரா.ஒரே சமயத்தில் இருவரும் பொங்கல் வாழ்த்து பதித்திருக்கிறோம். சேம் பிச்.

வசீகரன்
14-01-2008, 08:59 AM
ஆமாண்ணா..... ஆனால் தாங்கள் சீனியர் என்பதை நிரூபித்துள்ளீர்கள்....!
அருமையான வரிகளில்...வார்திருக்கிறீர்கள்.... உங்களை போன்று அழகு
வரி வடிவம் கொடுக்க முடியவில்லையே என்று யோசித்துகொண்டிருக்கிறேன் அண்ணா...!

இதயம்
14-01-2008, 09:18 AM
சிவாவின் பொங்கல் வாழ்த்து மனதுக்கு நிறைவை அளிக்கிறது. அவர் தன் கவி வரிகளில் கூறியது போலவே நிகழ்ந்து, தமிழர்கள் அனைவரும் வளமோடும், நலமோடும் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ இதயம் நிறைந்து வாழ்த்துகின்றேன்.!!

வாழ்த்துக்கவிக்கு நன்றி சிவா..!!

மயூ
14-01-2008, 09:23 AM
அருமையான பா சிவா.ஜி....!!
உங்களுக்கும் மன்றத்தாருக்கும் தைபெருநாள் வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
14-01-2008, 09:26 AM
இதயமே நிறைந்து வாழ்த்தும்போது இதயம் நிறைகிறது.நன்றி இதயம்.

சிவா.ஜி
14-01-2008, 09:27 AM
அருமையான பா சிவா.ஜி....!!
உங்களுக்கும் மன்றத்தாருக்கும் தைபெருநாள் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி மயூ.
உங்களுக்கும் உங்கள் அனைத்து நன்பர்களுக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள்.

மனோஜ்
14-01-2008, 09:32 AM
தித்திக்கும் இந்நாளில்
திகட்டாத பெங்கலாய்
திருப்திஅடைய்ட்டும் உல்லங்கள்

வாழ்த்து கவிதை அருமை சிவாஅவர்கலே நன்றி

சிவா.ஜி
14-01-2008, 09:56 AM
மிக்க நன்றி மனோஜ்.இனிய பொங்கல் வாழ்த்துகள்.