PDA

View Full Version : அமரர் கல்கி -லொள்ளுவாத்தியார் பார்வையில்



lolluvathiyar
13-01-2008, 07:52 AM
அமரர் கல்கி -லொள்ளுவாத்தியார் பார்வையில்

பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் நாளில் இந்த இனிய படைப்பை பொங்கல் பரிசாக மன்ற மக்களுக்கு வழங்குகிறேன்.

நமது மன்றத்தில் சிலருக்கு இவரை தெரிந்திருக்கும், பலருக்கு இவரை தெரியாமலிருக்கலாம். அமரர் கல்கி மிக பிரபலமான சரித்திர கதை எழுத்தாளர். இவரை பற்றி எத்தனை சொன்னாலும் பத்தாது. இவரின் படைபுகளை பற்றிதான் நிரைய சொல்லவேண்டும். சர்வதேச அளவில் ஒரு பழமொழி உண்டு மனிதன் தன் வாழ்கையில் ஒரு முரையாது தாஜ் மகாலை பார்த்துவிடவேண்டும் என்று. அது போல நான் ஒரு பழமொழி சொல்கிறேன் தமிழர்கள் வாழ்கையில் ஒரு முரையாவது அமரர் கல்கியின் சில கதைகளை படித்து விடவேண்டும். கட்டாயம் ஒரு மிக பெரிய மன நிரைவு கிடைக்கும்.

சரித்திர கதைகளில் கல்கியை விட பிரபலமானவர் சாண்டிலியன். சாண்டில்யன் கதைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். சண்டில்யனின் திறமைக்கு ஈடு இனை இல்லை என்பதை மறுக்க முடியாது. கல்கி சாண்டில்யன் இருவரையும் ஒப்பீடு செய்ய கூடாது. இருவருக்கு தனி தனி திறமைகள் இருக்கும். ஆனால் இருவர் கதைகளிலும் என்னை அதிகம் கவர்ந்தது அமரர் கல்கியே. காரனம் சாண்டில்யன் கதையில் வர்னனைகள் கொஞ்சம் கடுமையான தமிழில் இருக்கும், கல்கி கதைகள் கொஞ்சம் புரியும் தமிழில் இருக்கும். சாண்டில்யன் விஞ்ஞானத்தில் அதிகம் கவனம் செலுத்துவார், கல்கி மனொதத்துவத்தில் அதிகம் கவனம் செலுத்துவார், சாண்டில்யன் கதாநாயர்கள் அனைத்து திறமைகளும் உள்ளடக்கி இருப்பார்கள், ஆனா கல்கி கதாநாயர்கள் சாதர்ன மனித சக்தி உட்பட்ட திறமைகளை தான் வைத்திருப்பார்கள். அதாவது கல்கி எக்ஸாஜரேட் பன்ன மாட்டார்.

இருவருமே வரலாற்றை நன்றாக அறிந்தவர்கள். ஆனால் சாண்டில்யன் பிரபலமானதுக்கு முக்கிய காரனம் அவரின் விஞ்ஞான திரமை மற்றும் பென்களை வர்னிக்கும் கலை, காதலை தத்ரூபமாக வர்னிக்கும் ஆற்றல் உள்ளவர். மேலும் குமுதத்தில் வந்தது. வார இதழ்களில் கல்கியை பலர் விரும்ப மாட்டார்கள். ஆனால் குமுதத்தை நிரைய பேர் விரும்புவார்கள். காரனம் குமுதத்தில் நிரைய மசாலா சமாசாரங்கள் இருக்கும். சாண்டில்யன் கல்கியைவிட பிரபலமானதுக்கு இது ஒரு முக்கிய காரனம்.

அமரர் கல்கி சிரித்திர சம்பவங்களை சரியான வரலாற்றிலிருந்து எடுப்பார் (ஆங்கிலேயர்கள் சொன்ன வரலாற்றிலிருந்து அல்ல). கதையில் வரலாற்று சம்பவங்களை ஆதாரத்துடன் கூறுவார். அதே சமயம் கதையின் கதாநாயகனாக மன்னர்களை வைக்க மாட்டார். அவர்களுக்கு துனை புரிந்த படைதலைவர்களை கதாநாயகனாக வைத்து தான் கதையை கொண்டு செல்வார். இவர் கதைகளில் ராஜ தந்திரிகள், வீரர்கள், மத தலைவர்கள், சதிகாரர்கள், ராஜ குல பென்மனிகள் மற்றும் பொது ஜன வீர பென்மனிகள் பலர் இருப்பார்கள். அவர்கள் குணத்தை அறிமுகபடுத்தி கடைசிவரை மாற்றாமல் கடைபிடிப்பார். அதுதான் கல்கியிடம் எனக்கு பிடித்த திறமை. கல்கி கதைகளை மின் புத்தமாக படிப்பது கடினம். கல்கியில் தொரர்கதைகளாக படிப்பது இன்னும் நன்றாக இருக்கும். அதுவும் சேர்த்து வைத்து பைண்ட் செய்து படிப்பது நல்ல அனுபவத்தை தரும். மனியம் அவர்களின் படத்துடன் இருந்தால் கதை இன்னும் சுவாரசியமாக இருக்கும்.

ஆரம்ப காலத்தில் அமரர் கல்கி கதையை படிக்க சொல்லி என் உறவினர் ஒருவர் சொல்லி இருந்தார். ஆனால் நான் அமரர் கல்கி பிராமனர் என்பதால் அவர் படைபுகள் ஏதோ பிராமனர்கள் சம்மந்த பட்ட கதைகளாக இருக்கும் அல்லது ஆன்மீக நூலாக இருக்கும் என்று நினைத்து அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். மேலும் கல்கி வார இதழில் படிப்பதற்க்கு எதுவும் சுவாரியயமாக இருக்காது அது ஒரு ஆன்மீக புத்தகம் போல இருக்கும். பொன்னியன் செல்வன் கல்கியில் வரபோகிறது என்று என் உறவினர் என்னை வற்புறுத்தி கல்கியை வாங்க வைத்தார். படிக்க ஆரம்பித்தவுடன் தான் தெரிந்து கொண்டேன் எத்தனை அற்புதமான மனிதர் என்று. என்னை கல்கி கதைகளை படிக்க சொல்லி தூண்டியவரை என்றும் நான் மறக்க மாட்டேன்.

அமரர் கல்கி பல கதைகள் எழுதி இருந்தாலும் நமது தேசத்து வரலாற்றை ஓரளவுக்கு அறிந்து கொள்ள அவரின் நான்கு கதைகளை வரிசையாக பட்டியலிடுகிறேன்.

சிவகாமியின் சபதம்

இது பல்லவர்கள் காலத்து கதை. பல்லவ மன்னரிகளில் மகேந்திரவர்மன் மற்றும் நரசிம்ம வர்மன் அவர்களின் கதை. இந்த கதையில் கல்கி நாட்டிய சிற்ப கலைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் அருமையாக விளக்கி இருப்பார். இந்த கதையின் நாயகி சிவகாமி ஒரு கற்பனை பாத்திரம், ஆனால் இந்த கதை நாயகி சிவகாமி தனது நாட்டிய திறமையால என்னை அதிகம் கவர்ந்தவர். என்னுடைய கல்லூரி பருவத்தில் வெளிவந்த சிவகாமியின் சபதம் கதையின் படங்களை நாண் பத்திரமாக வைத்து அதிலிருந்து சிவகாமியின் நடனத்தை ஸ்கேன் செய்து நமது தமிழ் மன்ற நேயர்களுக்கு பிரத்தியேகமாக சமர்பிக்கிறேன். இந்த படத்தை நன்பர்கள் சேவ் செய்து வைத்து கொள்ளுங்கள். இந்த படங்கள் வேறு எங்கும் கிடைக்காது. காரனம் இது நான் ஸ்கேன் செய்து உங்களுக்கு வழங்கும் படங்கள். இந்த அழகிய படங்கள் என் நினைவாக வைத்து கொள்ளுங்கள்.

சிவாகாமியின் சபதம் பல்லவர்கள் புலிகேசி மன்னன் - சாளுக்கியர்கள் (கர்நாடகா) இடையில் நடந்த போர் சம்மந்த பட்ட கதை. இந்த கதையில் பரஞ்சோதி என்ற படைதளபதிதான் கதாநாயகன். இவர் கற்பனை பாத்திரம் அல்ல, உன்மையில் 64 நாயன்பார்களில் சிறுதொண்டர் என்று அழைக்க பட்ட சிவனடியாரின் இளமை கால வாழ்கை வரலாறு. இந்த கதையில் வரும் நாநந்தி என்னும் கதாபாத்திரம் உன்மையிலேயே நம்மை நடுங்க வைக்கும் கதாபாத்திரம். இந்த கதையில் பல்லவ சக்ரவர்த்தி மகேந்திரவர்மனின் ராஜதந்திர திறமையும் ஒற்றர் சாம்ர்த்தியமும் தான் பிரசக்தி பெற்றது.

பார்த்திபன் கனவுஅறுபுதமான கதைகளை படைத்த கல்கியின் கதைகளில் இது ஓரளவுக்குதான் இருக்கும். மற்றவர்கள் கதையை விட பல மடங்கு தாண்டிவிடும். ஆனால் கல்கியின் திறமை குரைவாக தான் இருக்கும். இதை சிவகாமியின் சபதத்தின் தொடராகவே கருத வேண்டும். இதில் அடிமை தேசமாக இருக்கும் சோழ நாடு மீண்டும் எப்படி சுந்தந்திர நாடாக முயற்ச்சி செய்தது என்பதை பற்றிய கதை.

பொன்னியன் செல்வன்
அமரர் கல்கி கதைகளில் மாஸ்டர் பீஸ் என்றாலே அது பொன்னியன் செல்வன் தான். பொன்னியன் செல்வனுக்கு மட்டும் நிரைய ரசிகர்கள் இருகிறார்கள். அப்பப்பா எத்தனை கதா பாத்திரங்கள் எவ்வளவு அழகாக நகர்ந்த கதை. இந்த கதையின் உதவியால் தான் நான் மாவீரன் லொள்ளுவாத்தியார் எழுதி குறிப்பாக இலங்கையை சுற்றிய ரவுசு எல்லாம். பொன்னியன் செல்வன் என் மனதில் என்றுமே ஓடி கொண்டிருக்கும். அதன் கதா பாத்திரங்கள் என் மனதில் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதுவும் நான் பள்ளி பருவத்தில் மனியம் படத்துடன் தொடராக வந்த போது படித்தது.

பொன்னியன் செல்வன் மொத்தம் 5 பாகம். இதன் கதை சுருக்கத்தை தரமுடியாது. ஆனால் இந்த கதை ராஜ ராஜ சோழர்கள் காலத்தில் தமிழகம் எந்த அளவுக்கு செளிப்பாகவும் தன்னிரைவாகவும் கல்வி அறிவாக இருந்தது என்று விளக்க கூடிய நூல். பொன்னியன் செல்வன் மூலம் பழையரை சோழ மன்னர்களில் வரலாற்றை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம். சோழ நாட்டின் ஒரு போர் வீரன் வந்தியதேவன் (உன்மை பாத்திரம்) கதாநாயகனாக வைத்து அருமையாக கொண்டு செல்லபட்ட கதை. இதில் ஒவ்வொரு கதா பாத்திரத்துக்கும் ஒவ்வொரு குனாதிசியங்களை தந்து அதை கடைசிவரை கடைபிடித்து வந்தார். அருள்மொழிவர்மன் என்று அழைக்கபட்ட ராஜ ராஜ சோழன், அவருடை தந்த சுந்தரசோழர், சகோதரன் ஆதித்த கரிகாலன், சகோதரி குந்தவை அவர்களுடைய பெரியபாட்டி செம்பியன் மாதேவி இந்த பாத்திரங்களை மையமாக வைத்து எழுத பட்ட கதை. இவர்கள் அனைவரும் நிஜ பாத்திரங்கள் என்பதை நினைக்கும் போது மெய்சிலிர்க்க வைத்தது. நாடுளும் விதம், ஜனநாயகம், பென் உரிமை, ஆண்மீகம் காதல் அனைத்து அற்புதமாக கையாளபட்டிருந்தது இந்த கதையில். இந்த கதையின் கதாநாயகன் வந்தியதேவனை அசாத்திய திறமைசாலியாகவோ விரனாகவோ படைக்கவில்லை. ஒரு சாதர்ன வீரன் தான் ஆனால் முந்திரிகொட்டை, மேலும் அவன் திட்டமிடாமல் காரியம் செய்வான், பிரச்சனைகள் தேடிவரும் பிறகு அது பலரின் உதவியாள் சரியாகிவிடும்.

காதல் இல்லாமல் காவியம் படைக்க முடியுமா. கல்கி அதிலும் ஒரு படி மேலே வசீகரம் கலக்கபடாமல் அன்பும் மென்மையும் கலந்து வந்தியதேவன் மற்றும் குந்தவையின் காதல் காட்சி நன்றாக இருக்கும். குந்தவை வந்தியதேவன் மீது காதல் கொண்டாலும் தனது கடமைக்கு தான் முக்கியத்துவம் தருகிறார். இந்த இடத்தில் கல்கி அரச குல பிரஜைகள் மக்கள் பிரச்சனைக்கு தான் முக்கியத்துவம் தரவேண்டும். அதன் பிறகுதான் சொந்த உனர்ச்சிகளுக்கும் இடம் என்று தெளிவாக விளக்கி இருப்பார். ராஜகழை பொருந்திய வானதியின் காதல் அதில் இருந்த தியாக என்னம் மிகவும் சிறப்பு பெற்றது. இன்னொரு சிறுப்பு மிக்க காதலும் வரும் அதை கடைசியில் விளக்குகிறேன்.

இந்த கதையில் கற்பனை பாத்திரமாக விளங்கும் நந்தினி என்னும் பென் படிப்பவர்களையே மதி மயக்கி விடுவார். அந்த அளவுக்கு அழகு உறுதி நிரைந்தவர் என்று சொல்லலாம். இன்னொரு கற்பனை பாத்திரம் பெரிய பழுவேட்டையார் தன்னுடை கடைசி கட்டத்தில் நம் மனதை மிகவும் கொள்ளை அடித்து விடுவார். அதுவும் ஆற்றில் விழுந்து அடித்த செல்லபட்ட காட்சிகளில் அவர் மனதில் ஓடிய சிந்தனைகள் என்றுமே நம் மனதை விட்டு அகலாது.

கல்கி கதைகளில் நகைசுவை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. பொன்னியன் செல்வனில் ஆழ்வார்கடியன் என்று ஒரு கற்பனை கதா பாத்திரத்தை படைத்திருப்பார், அடடா அவர் செய்யும் ரவுசு இருகிறதே. அப்படி ஒரு நகைசுவை செயல்கள் அதே சமயம் மிக புத்திசாலியாகவும் வருவான். பொன்னியன் செல்வனை படித்தவர்கள் ஆழ்வார்கடியானை மறக்க வாய்பே இல்லை.

பூங்குழலி - பொன்னியன் செல்வன் கதையில் ஒரு கற்பனை பாத்திரம்தான், கடலில் படகு செலுத்தும் மீனவ குலத்து பென் அது ஏனோ தெரியவில்லை இந்த பென் தான் என்னை மிகவும் கவர்ந்தவள். காரனம் என்ன தெரியுமா, இந்த பென்னின் துடுக்குதனம் தைரியம் வீரம் இதுதான். இந்த கற்பனை கதாபாத்திரத்தின் மீது நான் காதல் கொண்டேன் என்றால் அது மிகையல்ல. என் வாழ்கையில் வாலிப பருவத்தில் காதல் உனர்ச்சியை தோற்றுவித்தவளும் இந்த பாத்திரம்தான், இன்றும் அதை இளமையாக வைத்திருப்பதும் இந்த பூங்குழலி என்ற கதாபாத்திரத்தினால் தான். பூங்குழலியை கல்கி சாதர்ன பென்னாளிலிருந்து மாறு பட்டு படைத்திருகிறார். வெறும் வீரம் மட்டுமல்ல காதல் உனர்ச்சியிலும் வீரம் நிரைந்தவள், எந்த பென்னையும் விஞ்சி விடும் ஆற்றல் நிரைந்தவள். ஏழை பென்னாகா பிறந்தாலும் அரசியாக ஆசைபடுபவள், மன்னரை காதலித்தவள் சிம்மாசனம் ஏற துடித்தவள். அந்த அளவுக்கு ஆசை மட்டுமல்ல அதை அடைந்தே ஆகவேண்டும் என்று உறுதி கொண்டவள், இளவரசனை காதலித்து தோல்வி அடைந்தாலும் கூட இவள் கரம்பிடித்த ஒரு ஏழை இறுதியில் நாட்டுக்கு மன்னரவான். அந்த அளவுக்கு இவள் மண உறுதியை கல்கி விசேசமாக கையாண்டிருப்பார். பூங்குழலி பாடிய ஒரு பாடல் மட்டும் என் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தன.

அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்

என்ன அற்புதமான வரிகள் இந்த வரிகளை பூங்குழலி அடிகடி பாடுவாள். என் மனதிலும் நான் ராகத்துடன் பாடுவேன்.

சிவகாமி சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியன் செல்வன் இந்த மூண்று கதைகள் மூலம் அமரர் கல்கி நாட்டுக்கு ஒரு மெசேஜ் சொல்லி இருப்பார் அது தான் ஒற்று வேலை. ஒரு நாடு செழித்தோங்க வேண்டுமானால் மிக முக்கியமான விசயம் ஒற்றர் படை. இண்டலிஜன்ஸ் அல்லது புலனாய்வு துரை போல, நன்றாக கவனித்து பாருங்கள் நமது நாட்டில் நீண்ட காலமாக இண்டலிஜன்ஸ் சரியாக இல்லாததாலே பல பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருகிறோம்.

சரித்திர நாவல்களை எழுதி வந்த அமரர் கல்கி இறுதி நாளில்
அலைஓசை என்று ஒரு அற்புதமான நாவலையும் எழுதினார். பொன்னியன் செல்வன் அளவுக்கு இல்லாவிட்டாலு இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல். காரனம் என்ன தெரியும் விடுதலை போராட்டம் பாக்கிஸ்தான் பிரிவினை மதகலவரம் இதை ஒட்டிய ஒரு கதை இது. இந்த கதையில் ஒன்றுபட்ட இந்தியா (இன்றைய இந்தியா, பங்களாதேஸ், பாக்கிஸ்தான்) இப்படி அனைத்து இடங்களிலும் சுற்றி வரும் கதை. எங்கு பிரச்சனைகள் நட ந்ததோ அங்கு கதாநாயகியை கொண்டு சென்று விடுவார். வட இந்தியாவில் பாக்கிஸ்தான் பிரிவினையின் போது ஹிந்து மக்கள் எப்படி தமிழர்கள் அறிய இந்த கதையை கட்டாயம் படிக்க வேண்டும். அதே சமயம் மத நல்லினக்கத்தையும் வலியுறுத்தி இருக்கிறார் கல்கி. இதில் ஒரு சிறப்பு என்னவென்றாள் காந்திஅடிகள். இந்த அலைஓசையில் அமரர் கல்கி காந்தியை பற்றி ஒரு தவறான கன்னோட்டத்தில் சொல்ல ஆரம்பித்து கதையின் இறுதி பாகத்தில் காந்தியை சந்திக்க வைத்து காந்தியையின் மீது அளவு கடந்த பக்தியை வெளிகாட்டுவார். இந்த கதையிலிருந்து இஸ்பிரேசன் தான் ஹே ராம் திரைபடம்.

அன்பு தமிழ் மன்ற நன்பர்களே, வாய்பு கிடைத்தால் அமரர் கல்கியின் இந்த நாலு கதைகளை படித்து விடுங்கள். அறிய பொக்கிசம் இந்த கதைகள். பொன்னியன் செல்வன் கதை நான் பூஜை அரைவில் வைத்து பூஜை செய்யும் ஒரு நாவல். என் மனைவியிடம் நான் வைத்திருக்கும் கோரிக்கை என்ன தெரியுமா என் இறுதி நாட்களில் பொன்னியன் செல்வனை என் அருகிலேயே வைத்திருக்கும் படி தான். அந்த அளவுக்கு பொன்னியன் செல்வன் மீது எனக்கு பிடிப்பு.

பொங்கல் வாழ்த்துகள்

இந்த திரியில் படம் இருகிறது
சிவகாமியின் சபதம் படங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=316386#post316386)

சிவா.ஜி
13-01-2008, 09:00 AM
அடடா...அருமையான பதிவு வாத்தியார்.நானும் உங்களைப்போலவே பொன்னியின் செல்வனின் பரமரசிகன்.5 பாகங்களும் வைத்திருக்கிறேன்.மின் புத்தகமாகவும் இப்போதும் என் கணிணியில் வைத்திருக்கிறேன். இதில் நான் வாசிக்காதது காந்தியடிகள்தான். எனக்கு காந்தியை பிடிக்காது.அதனாலேயே அதை படிக்க விருப்பம் காட்டவில்லை.பார்த்திபன் கனவு பைண்ட் செய்த பழைய புத்தகமாக இருக்கிறது.
நீங்கள் அளித்துள்ள படங்களும் அருமை.மிக்க நன்றி வாத்தியார்.

யவனிகா
13-01-2008, 11:12 AM
பொன்னியின் செல்வன் நல்ல நாவல் தான்...ஏகப்பட்ட முடிச்சுகள்...எங்கெங்கோ இழுத்துச் சென்றாலும்...ஒவ்வொன்றாக அவிழ்க்கப் பட்டிருக்கும்...இறுதியில்,ஒரு ஓட்டை கூட இல்லாமல் அடைபட்டிருக்கும்.ஆனால் வெறும் வரலாற்று நாவல்,காதல் கலந்த கதை,சுவாரசியமான தமிழ் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் எழுத்து படிப்பவனின் மனதில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

சில எழுத்தாளர்களைப் படிக்கும் போது புத்தகத்தை அப்படியே மூடி வைத்து விட்டு மௌனமாக அமர்ந்திருக்கிறேன்.மீண்டும் திறந்து படிக்க வேண்டும் எனத் தோன்றும்...ஆனால் மனது நிறைந்து விட்டிருக்கும். அந்த ஒரு உணர்வு பொன்னியின் செல்வனில் ஏற்பட இல்லை. அதற்காக அதை குறை சொல்கிறேன் என்று அர்த்தம் இல்லை. வெறுமே கதை படிப்பது போல படித்து மூடி வைத்து விட்டு எழுத்தாளரின் கதைத் திறமையை ரசித்து விட்டுப் போய் விட்டேன்.

ஆனாலும் வர்ணிப்புகளுக்காகவும்,அழகுத் தமிழுக்காகவும் கண்டிப்பாகப் படிக்கப் படவேண்டிய புத்தகம். சிலாகித்து நீங்கள் எழுதியிருப்பது நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள் வாத்தியாரண்ணா...

சுகந்தப்ரீதன்
13-01-2008, 12:49 PM
வாத்தியாரே நான் இதுவரை நீங்கள் கூறிய எதையும் படித்ததாக நினைவில் இல்லை.. நீங்கள் இத்தனை பெரிய விளக்கம் அளித்திருப்பதை பார்த்ததும் தேடி பிடித்து படித்துவிட வேண்டும் போலிருக்கிறது..! கண்டிப்பாக படித்துவிடுவேன்..! உங்களின் தூண்டுதலுக்கு மிக்க நன்றி வாத்தியாரே..! இந்த பதிவுக்கும் எனது வாழ்த்துக்கள்..!

மனோஜ்
13-01-2008, 01:11 PM
நான் புத்தகங்கல் அவ்வளவாக படிப்பதில்லை
தாங்கள் பதிவினால் அதில் என்ன அப்படி உள்ளது என்று படிக்க ஆர்வம் அதிகம் பதிவுக்கு நன்றி

மயூ
13-01-2008, 02:24 PM
முதலில் சிவகாமியின் சபதம் பின்னர் பார்த்தீபன் கனவு பின்னர் பொன்னியின் செல்வன் என்ற ஒழுங்கில் வாசித்தேன்!!!!

பொன்னியின் செல்வன் கதை இப்போதும் என் மனதில் திரைப்படமாக ஓடும்.. உலகில் இதற்கு இணையாக எந்தவொரு தமிழ் நாவலும் எழுதப்படவில்லை!!! தமிழர் பெருமையை தமிழரே அறியவைத்த நாவல்...

சாண்டில்யன் நான் வாசித்ததில்லை.... பெண்களை வர்ணிப்பதில் பெரும் கில்லாடி என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்!

மயூ
13-01-2008, 02:25 PM
வாத்தியாரே நான் இதுவரை நீங்கள் கூறிய எதையும் படித்ததாக நினைவில் இல்லை.. .!
பொன்னியின் செல்வன்...தமிழர் அனைவரும் படிக்க வேண்டிய நாவல்!!! அதிலிருந்து ஆரம்பியுங்கள்!!! :icon_b:

ஜெயாஸ்தா
13-01-2008, 03:13 PM
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் எங்கள் ஊர் நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். நிறைய நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். இன்னதென்று கிடையாது எது கிடைத்தாலும் படித்தேன் புஷ்பாதங்கத்துரையும் படித்தேன். ஜெயகாந்தைனையும் படித்தேன். சில காலம் காதல் கதைகள் பிடித்தது. சில காலம் துப்பறியும் கிரைம் கதைகள் பிடித்தது. சில காலம் விஞ்ஞான கதைகள் பிடித்தது. ஆனால் எப்போதுமே பிடித்தது வரலாற்று நாவல்கள்தான். வரலாற்று நாவல்களை படிக்கும்போது நானே அந்த கதையின் நாயகனாக மாறிவிடுவேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் சமயம் பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்தேன். என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம் ஒரு புத்தகத்தை எடுத்தால் முழுவதும் படிக்காமல் வைக்க மனது வராது. பொன்னியின் செல்வனை ஒரு நாள் இரவு முழுவதும் கண்விழித்து படித்து வீட்டில் வாங்கிக்கட்டிக்கொண்டது தனிக்கதை.

இவைகளில் படிப்பினை இருக்கிறதே இல்லையோ என்று எனக்குத் தெரியவில்லை. நம் மனதை மயக்கும் மிகப்பெரிய போதை இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

ஜெயாஸ்தா
13-01-2008, 03:22 PM
ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன் வாத்தியார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஓவியம் வரைந்தவர் மணியம் செல்வன் என்ற ம.செ. அவரின் மாணவர் பெயர் மணியம். நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர். அவர்தான் கல்கி இதழில் வெளிவந்த பொன்னியின் செல்வனுக்கு ஓவியம் வரைந்தவர். அவரிடம் சில காலம் நான் மாணவனாக இருந்திருக்கிறேன். அவரிடம் ஓவியம் அதிகம் பயின்றதை விட, பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் கதைகளைத்தான் அதிகமாக பயின்றிருக்கிறேன். ஓவிய வகுப்பு வந்தாலே மாணவர்களான எங்களுக்கு ஏற்படும் சந்தோசத்தை அளவிடமுடியாது. காரணம், மணியம் சார் மிக அருமையாக இந்தக் கதைகளை எங்களுக்கு சொல்லித்தருவார். கதை சொல்லும் போது கண்களை மூடிக்கொண்டு அப்படி கதையோடு ஒன்றியபடி சொல்வார். இடையிடையே கரும்பலகையிலும் ஓவியம் வரைந்து அதைக்கொண்டும் கதையை விளக்குவார். பழைய ஞபாகத்தை கிளிறிவிட்டுவிட்டீர்கள் வாத்தியார்.

செல்வா
13-01-2008, 04:20 PM
சவுதி வந்து இரண்டு ஆண்டுகளாக தமிழ் தமிழ் என்று தேடிஅலைந்து கொண்டிருந்த நான் ஒரு இணையதளம் வாயிலாக இந்த கதைகளை பார்த்தேன். வறியவன் பெற்ற பொற்குவியல் போல்.... அந்த நேரத்தில் அலுவலகத்திலும் கடுமையான பணி... இரவு 2 மணிக்கு மேல்தான் வீடு வருவோம் அனைவரும் தூங்கி விட நான் மட்டும் கணிணியை வைத்து கதை படித்துக் கொண்டிருப்பேன்..... எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த தமிழ் ஆர்வத்தை மீண்டும் தூண்டிய பெருமை கல்கியை யே சாரும். இரசித்துப் படித்த நாவல்கள் ... சிவகாமியின் சபதம்.... பார்த்திபன் கனவு... பொன்னியின் செல்வன்...
இவர்களின் தாக்கத்தால் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே சரித்திர நாவல் எழுதுகிறேன் பேர்வழி என்று நாவல் எழுத ஆரம்பித்தேன் என்பதை நம்புவீர்களா?
அதுவும் ஏனோ தானோ என்று அல்ல... நூலகத்தில் சென்று சேரன் செங்குட்டுவனின் வாழ்க்கையைப் பற்றிப் படித்து .... ஹா...ஹா... வேடிக்கையாகத் தோன்றுகிறது ....... இப்போது நினைத்தால். பாடங்களை படிக்காமல் கதைபடிக்க ஆரம்பித்தால் தூக்கி வீசப்பட்ட அந்த காகிதக் கத்தைகளை .... இன்று வரை தேடுகிறென் கிடைக்கவில்லை. இனி அவை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை... ஒரு வேளை கிடைத்து விட்டால் இன்று இலக்கியச் சோலை எழுதும் செல்வாவை விட அன்றைய சரித்திர நாவல் நன்றாக இருந்ததை புரிந்து கொள்வீர்கள்........

அடடா.... கல்கிய பத்தி பேசுண்ணு சொன்னா.... என்னப் பத்தி பேசுறன் பாருங்க.... என்ன பண்றது கல்கி மறுபடியும் மலரும் நினைவுகள தூண்டிவிட்டுட்டாரு....

mukilan
13-01-2008, 05:07 PM
தமிழர் திருநாளை ஒட்டி பொருத்தமான படைப்பு. வாத்தியார் குறிப்பிட்டுள்ள அனைத்துக் கதைகளையும் படித்துள்ளேன். முற்றிலும் உண்மை.சாண்டில்யன் தனது கதைகளை பெரும்பாலும் கற்பனையாகவே எழுதியிருப்பார். கல்கியின் கதைகள் அனைத்துமே சரித்திர ஆதாரம் கொண்டவை. கதைக்குச் சுவையூட்ட கற்பனையான கதாபாத்திரங்கள் சேர்க்கப் பட்டன. எனக்கு இன்னமும் பொன்னியின் செல்வனின் முதல் வரி நன்கு நினைவில் இருக்கிறது. "தில்லைச் சிற்றம்பலத்திற்கு மேற்கே மூன்று காத தூரத்தில்..... என்று ஆரம்பிப்பார். வீரநாராயணத்து புரத்து ஏரி என்று பெயர் என்று முடியும் அத்தொடர். வீரநாராயணபுரம் தான் கால்ப்போக்கில் மருவி வீராணம் என்றாகியது. சென்னைக்கு குடிநீர் கொண்டுவர இரண்டு கழக அரசுகளும் விவாதம் செய்தே காலம் கடத்திய தோல்வியில் முடிந்த ஒரு திட்டம்.வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர் என்று வந்தியத்தேவந்தான் கதையின் முதன்முதாலாக அறிமுகம் ஆகும் பாத்திரம். என்னைப் பொறுத்தவரையில் கதாநாயகனும் அவன் தான். அதில் ஒரு கோவிலை வர்ணிப்பார். அந்தக் கோயில் உள்ள ஊருக்கு அருகில் என் கல்லூரி இரண்டாம் ஆண்டில் முன்றுமாத கிராமத்தில் தங்கிப் பயிற்சிபெரும் முகாமில் தங்கியிருந்தேன். அந்தக்கிராமத்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டு முதியவர்தான் எனக்கு கல்கியின் புத்தகங்களை அறிமுகம் செய்தார். கதை நிகழும் இடம் முழுவதும் தஞ்சை, கும்பகோணம்(குடந்தை சோதிடர்) மற்றும் சிதம்பரம் (கொஞ்சம் மட்டும்) கங்கைகொண்ட சோழபுரம், விழுப்புரம், திருக்கோவிலூர் (வானதியின் தாத்தாவின் சிற்றரசு), கொடும்பாளூர் (கந்தமாறன்,மணிமேகலை), பழையாறை (பெரியபிராட்டியார் செம்பியன் மாதேவி, மதுராந்தகச் சோழன் ஆகியோரின் இருப்பிடம்) நாகப்பட்டிணம் (சூடாமணி விகாரம், புத்த பிட்சுகள்), கோடியக்கரை (பூங்குழலியும் சேந்தன் அமுதனும் சுற்றித் திரிந்த பகுதிகள்) என கதைக்களம் முழுவதும் செல்லும் பாக்கியம் எனக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றதாலேயே கிடைத்தது.அது மட்டுமன்றி அக்காலத்தில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு அந்தப் புதினத்தின் முழுமையும் காணக் கிடைக்கும். மந்தாகினி தேவிக்கும் சுந்தர சோழருக்கும் உள்ள காதல் ஈழம், தமிழகத்தோடு எவ்வளவு ஒன்றி இருந்தது என்பதை விளக்கும்.அருண்மொழிவர்மரே கூட ஈழத்தில் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவும் பொறுட்டே அங்கிருந்தார். எனக்கு கதையில் பிடித்த மற்றொரு பாத்திரம் "ஆதித்த கரிகாலன்". அவர் எப்படி இறந்தார் என்பதை வாசகர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுவார் ஆசிரியர். வல்லவரையன் வந்தியத்தேவன், சோழ சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிய வல்லம் என்ற பகுதியின் சிறுநிலமன்னன். வல்லம் இப்பொழுதும் உள்ளது ஆனால் அதுதான் கதையில் வரும் வல்லமா எனத் தெரியாது. திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் வல்லம் எனும் பேரூராட்சி உள்ளது. நம் நண்பர் மதி, பயின்ற புகழ்பெற்ற சாஸ்ட்ரா எனும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமும், பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியற் கல்லூரியும் அங்குதான் உள்ளன.

அலைஓசையும் நம்மை பிரிட்டிஷ் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுவிடும். அக்கால வாழ்க்கை முறையை நாமெல்லாம் அறிந்துகொள்ள அலை ஓசை ஒரு காலக்கருவூலம். ரன்னர் பாலகிருஷ்ணன் என்று ஒரு பாத்திரம். அக்காலகட்டத்தில் அஞ்சல்காரர்கள் கையில் மணியுடன் ஒவ்வொர் ஊருக்கும் ஓடிச்சென்று கொடுத்ததாக குறிப்பிட்டிருக்கும். ராகவன் ஒரு சிறந்த பொருளாதார மேதை.தேசிய அளவில் தேர்வெழுதி வெற்று பெறுவான். போட்டித்தேர்வுகட்கு மாணவர்கள் எப்படி அக்காலகட்டத்தில் தேர்வாகினர் எனபது தெளிவாகத் தெரியும். அக்காலகட்டத்தில் கலப்புமணங்கள் எப்படி ஆதரிக்க/எதிர்க்கப் பட்டன என்றும் தெரிந்து கொள்ளலாம். முனிசீப் என்ற பழங்கால ஊராட்சி முறை(பட்டாமணியம் கிட்டாவய்யர் கல்கி நகைச்சுவைப்பிரியர்). அது இந்தக் கதையின் முழுமையும் தெரியும்.பெரும்பாலானோர் பெண்ணடிமை எண்ணத்துடன் வாழ்ந்த அக்காலகட்டத்தில் சூரி, சூர்யா (சூர்யநாராயணன் என்றால் அவனுக்குப் பிடிக்காது) கலப்பு மணம் புரிவதோடு மட்டுமில்லாமல் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவெண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பான். இவ்வாறாக கல்கியின் கதைகள் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு அறிவுரையை அவ்வப்பொழுது சொல்கின்றன.

கல்கியின் மற்ற படைப்புக்கள் பொய்மான் கரடு (சிறுகதை), சோலமலை இளவரசி. இன்னமும் இருக்கலாம் எனக்குத் தெரிந்தவை இவையே!


தக்க நேரத்தில் நல்ல படைப்புக் கொடுத்து மலரும் நினைவுகளைக் கீறிவிட்ட வாத்தியாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

mukilan
13-01-2008, 05:12 PM
அடடா...அருமையான பதிவு வாத்தியார்.நானும் உங்களைப்போலவே பொன்னியின் செல்வனின் பரமரசிகன்.5 பாகங்களும் வைத்திருக்கிறேன்.மின் புத்தகமாகவும் இப்போதும் என் கணிணியில் வைத்திருக்கிறேன். இதில் நான் வாசிக்காதது காந்தியடிகள்தான். எனக்கு காந்தியை பிடிக்காது.அதனாலேயே அதை படிக்க விருப்பம் காட்டவில்லை.பார்த்திபன் கனவு பைண்ட் செய்த பழைய புத்தகமாக இருக்கிறது.
நீங்கள் அளித்துள்ள படங்களும் அருமை.மிக்க நன்றி வாத்தியார்.

நண்பர் சிவா.ஜி தான் காந்தியடிகள் என்றகதையைப் படிக்கவில்லை என்றார்.அப்படி ஒரு கதை இல்லை. காந்தியடிகள் அலைஓசையில் இருப்பதைக் குறிப்பிடவே வாத்தியார் அழுத்தம் கொடுத்திருந்தார். அதுதான் குழப்பிவிட்டதென நினைக்கிறேன்.:D:D

mukilan
13-01-2008, 05:17 PM
ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன் வாத்தியார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு ஓவியம் வரைந்தவர் மணியம் செல்வன் என்ற ம.செ. அவரின் மாணவர் பெயர் மணியம். நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர். அவர்தான் கல்கி இதழில் வெளிவந்த பொன்னியின் செல்வனுக்கு ஓவியம் வரைந்தவர். அவரிடம் சில காலம் நான் மாணவனாக இருந்திருக்கிறேன். அவரிடம் ஓவியம் அதிகம் பயின்றதை விட, பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் கதைகளைத்தான் அதிகமாக பயின்றிருக்கிறேன். ஓவிய வகுப்பு வந்தாலே மாணவர்களான எங்களுக்கு ஏற்படும் சந்தோசத்தை அளவிடமுடியாது. காரணம், மணியம் சார் மிக அருமையாக இந்தக் கதைகளை எங்களுக்கு சொல்லித்தருவார். கதை சொல்லும் போது கண்களை மூடிக்கொண்டு அப்படி கதையோடு ஒன்றியபடி சொல்வார். இடையிடையே கரும்பலகையிலும் ஓவியம் வரைந்து அதைக்கொண்டும் கதையை விளக்குவார். பழைய ஞபாகத்தை கிளிறிவிட்டுவிட்டீர்கள் வாத்தியார்.

பொன்னியின் செல்வன், கல்கியின் காலகட்டங்களில் வெளிவந்தபொழுது ஓவியம் வரைந்தவர்தான் மணியம். இப்பொழுது மீள்பதிப்பாக வந்த பொன்னியின் செல்வனுக்கு ஓவியம் வரைபவர்தான் மணியம் செல்வன் (ம.செ). அஃதோடு அவர் மணியம் அவர்களின் மகன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மாணவர் மட்டுந்தானா? ம.செ இப்பொழுது ஆனந்தவிகடனில் பல ஓவியங்கள் வரைகிறார். கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம் (வைரமுத்துவிற்கு சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றுக் கொடுத்த நூல்) மற்றும் பல சிறுகதைகட்கும் அவர் ஓவியம் வரைந்த்துள்ளார்.

இதயம்
15-01-2008, 12:29 PM
உங்கள் பதிவை படித்ததில் அமரர் கல்கியின் படைப்புக்களை நீங்கள் சிலாகித்து எழுதியிருப்பதன் மூலம் அவற்றை எத்தனை தூரம் நீங்கள் இரசித்து மகிழ்ந்திருக்கிறீர்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. நானும் கல்கியின் படைப்புகளான பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, அலை ஓசை, சிவகாமியின் சபதம், மோகினித் தீவு, பொய்மான் கரடு, தியாக பூமி, மகுடபதி, கள்வனின் காதலி, சோலைமலை இளவரசி ஆகியவற்றை என் பல்வேறு பிராய கட்டங்களில் படித்திருக்கிறேன். அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு கள்வனின் காதலி..!! அவரின் படைப்புகளில் பொன்னியின் செல்வன் சாகா வரம் பெற்றது என்பதை அதைப்பற்றி பெரும் நெகிழ்ச்சியுடன் பேசும் மனிதர்களை கொண்டு கணித்தும் இருக்கிறேன்.

ஆனால், இந்த விஷயத்தில் நான் உங்களின் எதிர் துருவம் என்று தான் சொல்ல வேண்டும். படைப்பாளியின் கதைகளில் இரு வகை உள்ளது. 1 வெறும் பொழுது போக்கை அடிப்படையாக கொண்ட கற்பனை (Fantasy) கதைகள். 2. இயல்பை விட்டு கொஞ்சமும் விலகாத கதாபாத்திரம், நிகழ்வுகளை உள்ளடக்கிய உணர்வுகளுடன் கலந்துறவாடும் கதைகள். நீங்கள் குறிப்பிடும் கல்கியின் கதைகள் பெரும்பாலும் முதல் வகையை சார்ந்தவை. அவை பெரும்பாலும் காதல், வீரம், நீதி என்று கற்பனையை சுற்றி வந்து, இயல்பு வாழ்க்கையில் நடக்காத ஒன்றிற்காக நிம்மதியை தொலைக்கும் நம் மனதை கற்பனை கொண்டு ஆறுதல் அளிக்கும் கதைகள். இந்த வகை கதைகளுக்கு வாசகர்களிடையே என்றும் பெரும் வரவேற்பு உண்டு (ஹாரிபாட்டரை விட, ஜேம்ஸ் பாண்டை விட ஒரு சரியான உதாரணம் வேண்டுமா என்ன..?). கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கனவுகளில் மிதக்கவிடும் கதைகள் என்பதாலோ என்னவோ, எதார்த்தத்தை விரும்புவபவர்களை இந்த கதைகள் அவ்வளவாக கவருவதே இல்லை. 20, 30 பாகங்கள் கொண்ட இது போன்ற வீர, பராக்கிரம கதைகளை விட 20 வரிகளை கொண்ட ஒரு சிறுகதை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையுடையதாக இருக்கிறது. காரணம், எதார்த்தத்தின் சக்தி அத்தனை வலியது..!

கல்கியின் கதைகளில் வர்ணனைகள், சம்பவங்கள், உரையாடல்கள் மிகவும் அழகான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் (சாண்டில்யனின் படைப்புக்களும் அப்படியே..!). ஆனால், எதார்த்தம் அத்தனை அழகில்லையே..! அதனாலேயே என்னைப்போன்றவர்களுக்கு அந்த கதைக்குள் தன்னை நுழைத்து, கதையின் போக்கோடு நாம் செல்வதில் பெரும் தடை ஏற்படும். கற்பனை கதைகளின் மீதான என் ஈடுபாடு சிறுவயதில் ஏற்பட்டு அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆரவல்லி, சூரவல்லி கதைகள் வரை சுற்றித்திரிந்திருக்கிறது. கால ஓட்டத்தில் அத்தகைய கற்பனையை ஒட்டிய கதைகளின் ஆர்வம் குறைந்து, இறுதியாக வடிந்து இதயத்தை நெகிழ வைக்கும் உணர்வு பூர்வமான கதைகளில் உள்ளத்தை பறிகொடுக்க வைக்கிறது. அப்படி ஒரு சூழ்நிலைக்கு ஆளானாதாலோ என்னவோ வெறுமையாக எடுக்கப்பட்ட செல்லாத ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படம், கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் கொடுக்காத ஒரு பாதிப்பை, நிறைவை எனக்கு கொடுக்கிறது.

உங்களுடைய கற்பனை உணர்வை எங்களுடன் பகிர்ந்ததில் மகிழ்ச்சி எனக்கு. ! அதே போல் இது தொடர்பான என் மன ஓட்டத்தை இங்கே பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி..!! உங்களுக்கு ஆதரவாக இங்கே நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அப்புறமென்ன... நடத்துங்கள் உங்கள் இராஜாங்கத்தை..!!

ஆதி
16-01-2008, 08:56 AM
பழைய நினைவுகளுக்குள் கொண்டு போய் தள்ளிவிட்டது, வாதியார் ஐயாவின் இந்தப் பதிப்பு..

என்னிடம் கல்கியின் நீங்கள் மேல் குறிப்பிட்ட அத்தனை நாவல்களும் உள்ளது, ஆனாலும் நான் படித்தது இரண்டுதான் பார்த்தீபன் கனவு, சிவகாமியின் சபதம், இரண்டையும் இரண்டு நாளில் படித்து முடித்தேன்.

படிக்கும் போது மனதில், நினைவுகளில், உணர்ச்சிகளில் சுழன்றக் கதாப்பாத்திரங்கள், முழுக்கதையையும் படித்த உடன் எந்த ஒரு பாதிப்பையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை, முந்தியில் இருந்தே கதை என்பது பொழுதுகளை இருட்டடிக்கும் ஒரு வேலை என்று எண்ணி இருந்ததான் இந்தக் கதைகளை படித்தவுடன் நான் எண்ணியது சரியே என உறுதி செய்து கொண்டேன்..

இருந்தாலும் எனக்குள் ஒரு நெருடல் இருப்பது உண்டு, கல்கியும் புதுமைப்பித்தனும் வாழ்ந்தது ஒரே காலத்தில் தான் என்றாலும், கல்கிக்கு இருந்த பெயர், புகழ் புதுமைப்பித்தனுக்கு கிடைக்கவில்லை.

ஆனால் புதுமைப்பித்தன் கதைகள் படிப்பவர் அனைவரையும் பாதிப்புக்குள்ளாகும் ஒரு அரூப சக்தியைக் கொண்டது, பெரும்பாலும் சமூகம் சார்ந்த மூடப்பழக்கம் சார்ந்த ஒரு படைப்பாகவே இருக்கும்..

பாரதிப் போல் புதுமைப்பித்தனும் வாழும் காலங்களில் கண்டுக்கொள்ளப் படாத படைப்பாளியாகவே இருந்துள்ளார்..

அன்புடன் ஆதி

Narathar
16-01-2008, 10:57 AM
லொள்ளூவாத்தியாரைப்போல்ல் கல்கியா அல்லது சாண்டில்யனா சிறந்தவர் என்ற கேள்வி என் மனதிலும் எழுந்ததுண்டு...

அவர்கள் இருவரது கைவண்ணத்திலும் மதிமயங்கியிருக்கின்றேன்..... நான் ஏழாம் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே நாவல்களில் ஆவல் கொண்டு கண்ட கண்ட நாவல்களையெல்லாம் படிக்க ஆரம்பித்தேன், பின்னர் சிறிது சுதாகரித்து நல்ல நாவல்களை தேடித்தேடி படிக்கலானேன்.... அந்தவகையில் எனக்கு முதலில் கிடைத்தது "கடல் புறா" சாண்டில்யனின் நாவல்.. அதிலிருந்து அவரின் நாவல்களில் பைத்தியம் பிடித்திருந்தேன்... அந்த வயதிலேயே அந்த பைபள் கட்டு போன்ற நாவலை கையில் வைத்து நாள் கணக்காக படிக்கும் என்னை சகதோழர்கள் ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்தார்கள், நான் விடவில்லை பாடசாலை வசிகசாலையிலிருந்த சகல நாவல்களையும் முடித்துவிட்டேன்.....

சமீபத்தில் ஒரு கண்காட்சியில் சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களையும் வாங்கி "ஆங்கில" மீடியத்தில் படிக்கும் எனது மகளுக்கு பரிசளித்தேன்....

lolluvathiyar
17-01-2008, 01:20 PM
இதில் நான் வாசிக்காதது காந்தியடிகள்தான்..

சிவா ஜி, அது காந்தியடிகள் புத்தகம் அல்ல. அலையோசையில் கல்கி காந்தியை பற்றி எழுதியதை தான் அப்படி குறிப்பிட்டேன். போல்ட் செய்ததால் வந்த குழப்பம் சரி செய்து விட்டேன்.


எனக்கு காந்தியை பிடிக்காது.அதனாலேயே அதை படிக்க விருப்பம் காட்டவில்லை. /QUOTE]

கொள்கை ரீதியாக அவரை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் எழுதிய விசயங்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். காந்தி எழுதிய்வைகளை அதை படித்து பாருங்கள் பிறகு மாற்றி கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

[QUOTE=சிவா.ஜி;316399]நீங்கள் அளித்துள்ள படங்களும் அருமை.மிக்க நன்றி வாத்தியார்.

அங்கயே ஒரு வார்த்தை பாராட்டி போட்டிருக்கலாமே. சந்தோச பட்டிருப்பனே

ஓவியன்
20-01-2008, 05:17 AM
வேறுபடுகிறேன் வாத்தியாரே, வேறுபடுகிறேன்...
இது உங்களது பார்வையாக மட்டும் இருக்கின்ற போதிலும் பல இடங்களில் வேறுபடுகிறேன்...

சாண்டில்யனையும் கல்கியையும் ஒப்பிடக் கூடாது என்று தொடங்கிவிட்டு தொடர்சியாக இருவரையும் ஒப்பிட்டு இருக்கிறீர்களே...??
அது எந்த வகையில் நியாயம்...??:confused:

சிவா.ஜி
20-01-2008, 05:55 AM
கொள்கை ரீதியாக அவரை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் எழுதிய விசயங்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். காந்தி எழுதிய்வைகளை அதை படித்து பாருங்கள் பிறகு மாற்றி கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அவரையும்,அவரது கொள்கைகளையும் அறவே பிடிக்காது எனும்போது அவர் எழுத்து மட்டும் எப்படி பிடிக்கும் வாத்தியார்?இன்றிருக்கும் அரசியல்வாதிகளைவிட மோசமானவர் அவர்.இரட்டை வேஷதாரி... இதற்குமேல் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

lolluvathiyar
20-01-2008, 06:35 AM
காந்தியை பற்றியும் அவர் கருத்துகள் பற்றியும் விவாதிக்க வேறு திரி தொடங்கி விடலாம். இந்த திரி அமரர் கல்கியை பற்றி மட்டுமே இருக்கட்டும்.

சாலைஜெயராமன்
20-01-2008, 06:37 AM
தவறுதான். ஏற்றுக் கொள்கிறேன் திரு வாத்தியார். அதையும் ஆரம்பித்து "வையுங்களேன்".

ஜெயாஸ்தா
20-01-2008, 06:49 AM
வருத்தத்துடன் ஒரு கருத்து.

வக்கிரபுத்தியுடைய ஒரு தனிமனிதன் தன்னைச் சோதித்துக்கொள்ள தேர்ந்தெடுத்த களம் இந்திய நாட்டின் சுதந்திரம்.

அந்த மனிதரின் வறட்டுப் பிடிவாத குணத்தால், பிறரின் உணர்வுகளுக்கு மதிப்புத் தராத பண்பினால், தேசத் தலைவர்கள் திரு சுபாஷ் சந்திரபோஸ், வீர சவார்க்கர் போன்ற எத்தனையே தன்னலமற்ற தியாகங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டதுதான் இன்றளவும் உண்மை.

தங்களின் இந்தக்கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறேன் ஜெயராம் அண்ணா. வழக்கம் போல் இந்த கருத்தை வைத்து ஒரு புதிய திரியை பற்ற வைக்க அன்பு நண்பர் புள்ளியை அழைக்கிறேன்.
புள்ளி எங்கிருந்தாலும் உடனடியாக கொள்ளிக்கட்டையுடன் மேடைக்கு வரவும். (நான் கொள்ளிக்கட்டையுடன் என்று குறிப்பிட்டதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நாம் விவாதிக்கும் போது நம்முடைய அறியாமைக்கு கொள்ளிவைக்கபடுகிறது என்ற கண்ணோட்டத்துடன்தான் அப்படிச் சொன்னேன். ஹி...ஹி...ஹி....!)

சிவா.ஜி
20-01-2008, 10:18 AM
தனித்திரியில தொடரலாமே...(தனித் திரி தொடங்கும் பட்சத்தில் பொறுப்பாளர்கள் தயவு செய்து இவற்றை அங்கே மாற்றிவிடவும்.நன்றி)

இதயம்
20-01-2008, 11:08 AM
காந்தியடிகள் தொடர்பான விவாதத்தை பொது விவாதப்பகுதியில் தொடங்கியிருக்கிறேன். இங்கே அவர் தொடர்பான பதிவுகளை அங்கே நகர்த்துமாறு பொறுப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன்..!! இது தொடர்பில் விவாதிக்க நினைப்பவர்களை அங்கே அழைக்கிறேன்.! இங்கே திரி தொடர்பானவை மட்டும் இருக்கட்டும்..!!

lolluvathiyar
24-01-2008, 01:02 PM
வெறுமே கதை படிப்பது போல படித்து மூடி வைத்து விட்டு எழுத்தாளரின் கதைத் திறமையை ரசித்து விட்டுப் போய் விட்டேன்.
ஆனாலும் வர்ணிப்புகளுக்காகவும்,அழகுத் தமிழுக்காகவும் கண்டிப்பாகப் படிக்கப் படவேண்டிய புத்தகம்.

தங்கை யவனிகாவுக்கு பொன்னியன் செல்வன் படித்த பிறகும் கூட உங்கள் மனதில் அது பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பதை கேட்டவுடன் உன்மையில் ஆச்சரிய பட்டேன். ஏன் உங்கள் மீது கொஞ்சம் கோபமும் கூட அடைந்தேன்.
பொன்னியன் ரசிப்பதற்காக படைக்க படைப்பு அல்ல தங்கையே, அதிலிருந்ந்த கதை கூட முக்கியமால்ல, அந்த காலத்தில் சோழர் ஆட்சிகாலத்தில் (கொஞ்சம் விரிவாக தமிழர்கள் ஆட்சி காலத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாக இந்தியர்கள் ஆட்சி காலத்தில்) நமது கலாசாரம் ஆட்சி முரை எப்படி இருந்தது என்று விளக்கி வரும் ஒரு வரலாற்று பொக்கிசம் என்றே சொல்லலாம். பென்னுரிமை எப்படி இருந்தது என்று ஆனை மங்கல செப்புதகடுகளின் ஆதாரத்தை வைத்து அமரர் கல்கி விளக்கி இருப்பார். நமது பழைய கலாசாரத்தை ஆங்கிலேயர்களால் பொய்யாக திரித்த விட்டார்கள். அதை தகர்க்க பல நூல் கள் உள்ளது. அதில் பொன்னியல் செல்வனும் ஒன்று.

எனக்காக மீன்டும் ஒரு முரை பொன்னியன் செல்வன் படியுங்கள், அதை படிக்கும் போது நாம் மதத்தை மறக்க வேன்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அதற்க்கு காரனம் இருகிறது. அந்த நாவலில் கொஞ்சம் ஹிந்து மதம் தழுவிய் ஆன்மீக கருத்துகளும் ஒட்டி வரும். மற்ற மதத்தவர்களின் நம்பிக்கையில் இருந்து முரன்படும் கருத்துகளும் இருகிறது. ஆனால் அதை நாம் வேறு விதமாக எடுத்து கொன்டு பொன்னியன் செல்வனை படிக்க வேன்டும். 1000 வருடங்களுக்கு மூன் வாழ்ந்த நமது மூதாதையார்களின் வாழ்கை முரை. நாம் அனைவரும் அவர்களின் கொள்ளு கொள்ளு பேரன்க பேத்திகள்தான்.

விக்கிபிடியாவில் முதலில் தமிழர்களின் வரலாற்றை படித்து விடுங்கள் அப்புரம் பொன்னியன் செல்வன் படியுங்கள்

ஓவியன்
25-01-2008, 07:27 AM
வாத்தியாரே மீள வந்து விட்டேன்...

அமரர் கல்கி, என் மதிப்புக்கு உரியவர் எனக்கு அவர் படைப்புக்கள் பிடிக்கும் அதே வேளை சாண்டில்யனும் பிடிக்கும். ஆனால் இருவரையுமே நான் ஒப்பிடு செய்யப் போனதில்லை. ஒப்பிடவும் முடியாது, ஏனென்றால் இருவரும் வேவ்வேறு சட்டங்களில் படைப்புக்களைத் தந்தவர்கள் இருவரையுமே ஒப்பீடு செய்ய எந்த ஒரு பொதுவான சார்பு சட்டமும் (Relative frame) இல்லை. அப்படி ஒரு நிலை இருந்தால் ஒப்பிடலாம், இல்லையென்றால் இருவரில் ஒருவரது சட்டத்தில் வைத்தே மற்றவரை ஒப்பிடலாம். அதாவது நீங்கள் கல்கியின் சட்டத்தில் வைத்து சாண்டில்யனை ஒப்பிட்டது போல....

ஆனால் இந்த வகை ஒப்பீடுகள் தவறானவை, அவ்வாறான ஒப்பீடுகளுக்கு நாம் முனையவும் கூடாது. அதாவது கண்ணாதாசனையும் வைரமுத்துவையும் அல்லது மெல்லியை மன்னரையும் இசை ஞானியையும் ஒப்பிடுவது எத்தனை தவறானதோ அதே போன்றதே இந்த விடயமும்.

இருவரையும் ஒப்பிடக் கூடாதென தொடங்கி விட்டு தொடரும் வரிகளில் சாண்டில்யனையும் கல்கியையும் நீங்கள் ஒப்பீடு செய்தமையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை கூறுவதற்கு நான் எடுத்துக் கொண்ட தகுதி இரு படைப்பாளிகளின் படைப்புக்களில் பெரும்பாலனவற்றை நான் படித்தவன் என்ற ஒரே காரணமே.

"குமுதம்" புத்தகத்தினால் தான் சாண்டில்யன் பிரபலமானது என்ற கூற்று சிரிக்க வைக்கிறது. ஒரு காலத்தில் குமுதம் பத்திரிகை சாண்டில்யனின் "கன்னி மாடம்" தொடர் நவீனத்துக்காகவே எங்கள் வீட்டுக்கு வந்தது. அதுவரை நாம் குமுதத்தை வீட்டிலே வாங்கியதில்லை....

எந்த ஒரு படைப்பாளிக்கும் அவர்கள் படைப்பு வெளிவரும் பின் புலம் வெறும் வரவேற்பை மட்டுமே கொடுக்க முடியும். பின்னர் அந்த படைப்பாளி மக்களைக் கவர வேண்டுமென்றால் அவரது சொந்த உழைப்பு நிச்சயமாக தேவையே. "ரோஹான்" கவாஸ்கருக்கு சுனில் கவாஸ்கார் ஒன்றிரண்டு வாய்ப்புக்களை எடுத்துக் கொடுக்கலாம், ஆனால் அவரைத் தொடர்ந்து விளையாட வைக்க தந்தை கவாஸ்கரால் முடியாது. அது அவராக விளையாடினாற் தான் உண்டு. இங்கேயும் இந்த உதாரணம் மிகப் பொருந்தும். வெறும் குமுதத்தினால் சாண்டில்யன் பிரபலமானதில்லை, சாண்டில்யனின் நவீனத்தை வெளியிட்டால் நன்கு பத்திரிகை வியாபாரம் நடக்கும் என்றறிந்துமே குமுதம் நிறுவனத்தினர் தொடர்ந்து சாண்டில்யனை தங்கள் பத்திரிகை சரித்திர ஆசிரியர்களாக வைத்திருந்தனர்.

அடுத்து இன்னுமோர் இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள் உண்மை வரலாறு, ஆங்கில வரலாறு என்று...
ஆங்கில பிரபல சரித்திர நவீனங்களை யாத்தவர்களுக்கு இலகுவில் கிடைத்த ஆதாரச் சான்றுகள், தமிழிலே சரித்திர நவீனங்களை யாத்தவர்களுக்கு இலகுவில் கிடைக்கவில்லை என்பது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் இருக்கும் தூசிடிஸ்(Thocydides), செனபன்(Xenophon), டாசிடஸ்(Tacitus) போன்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆங்கில சரித்திர நவீன படைப்பாளிகளுக்கு விட்டுச் சென்ற சரித்திர குறிப்புக்கள் போன்று சொல்லிக் கொள்ள கூடிய அளவுக்கு தமிழிலே சரித்திர ஆதாரங்கள் விட்டுச் செல்லப் படவில்லை என்பது உண்மை.

ஆதலால் கிடைத்த ஆதாரங்களை வைத்தும் மீதியை தங்கள் கற்பனையாலுமே இருவருமே படைத்தார்கள். அந்த வகையில் சாண்டில்யன் ஆங்கில நூல்கள், இந்திய வரலாற்று நூல்களிலிருந்தே தன் படைப்புக்களுக்கான ஆதாரங்களை வைத்திருந்தார். அத்துடன் சாண்டில்யனின் படைப்புக்களில் மிக பிரமாண்ட வெற்றி பெற்ற "யவனராணி", "கடல்புறா", "ஜலதீபம்" மூன்றுமே இந்தியாக்கு வெளியேயும் கதை நடக்கும் களத்தைக் கொண்டதால் அவர் ஆங்கில ஆதாரங்களை நாடியது ஒன்றும் தப்பில்லை. இந்தியா கதைக் களமாக இருக்கையில் அவர் இந்திய ஆதாரங்களை முன் வைத்தே கதை யாத்திருந்தார்.

அப்படி இருந்தும் யவனராணி கதையை யாப்பதற்கு சாண்டில்யன் இந்தியாவிலேயே எடுத்த ஆதாரங்கள்..

A History of South India from prehistorc times to the fall of Vijayanagar. - By Sri K.A. நீலகண்ட சாஸ்திரி M,A
பட்டினப் பாலை
சிலப்பதிகாரம்
பெருநராற்றுப்படை


இவை சரியான ஆதாரங்கள் இல்லை என்று பொத்தாம் பொதுவாகக் கூற வாத்தியாரே உங்களுக்கு இருக்கும் ஆதாரம் யாது...??

வாத்தியார் இது உங்களது பார்வையாக இருந்தாலும் தகுந்த ஆதாரங்களின்றி பொதுவாக சில முக்கிய விடயங்களை அலசுவது தப்பு. கல்கியைப் பற்றியும் அவர் படைப்புக்களைப் பற்றியும் கூற இருந்தால் அவற்றைப் பற்றியே பேசலாமே, ஏன் இந்த தவறான ஒரு ஒப்பீடு...???

lolluvathiyar
25-01-2008, 07:58 AM
சான்டில்யனையும் கல்கியை ஒப்பிட்டது தவறுதான் ஓவியன். அமரர் கல்கி சில பெருமைகளை காட்ட தான் ஒப்பீடு செய்தேன், மற்றபடி சான்டில்யன் பற்றி தவறான கன்னோட்டத்தில் எதுவும் சொல்லவில்லை. எனக்கு சான்டியல் கதையும் மிகவும் பிடிக்கும்

ஓவியன்
25-01-2008, 08:07 AM
சான்டில்யனையும் கல்கியை ஒப்பிட்டது தவறுதான் ஓவியன். அமரர் கல்கி சில பெருமைகளை காட்ட தான் ஒப்பீடு செய்தேன், மற்றபடி சான்டில்யன் பற்றி தவறான கன்னோட்டத்தில் எதுவும் சொல்லவில்லை. எனக்கு சான்டியல் கதையும் மிகவும் பிடிக்கும்

மிக்க நன்றி வாத்தியாரே தெளிவான புரிந்துணர்வுக்கு..!! :)

lolluvathiyar
26-01-2008, 10:31 AM
நான் இதுவரை நீங்கள் கூறிய எதையும் படித்ததாக நினைவில் இல்லை..

நான் புத்தகங்கல் அவ்வளவாக படிப்பதில்லை


எப்ப*டியோ மேலே நான் சொன்ன* புத்த*க*ங்க*ளை வாய்பு கிடைக்கும் போது க*ட்டாய*ம் ப*டியுங்க*ள். உன்மையில் உங்க*ளுக்கு மிக*வும் பிடிக்கும்.



சாண்டில்யன் நான் வாசித்ததில்லை.... பெண்களை வர்ணிப்பதில் பெரும் கில்லாடி என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்!

அதையும் படியுங்கள். குறிப்பாக யவன ரானி கடல்புறா இரன்டையும் படியுங்கள். வர்னனையில் சான்டில்யனை யாராலும் மிஞ்ச முடியாது

mayakrishnan
27-01-2008, 03:36 AM
என் இறுதி நாட்களில் பொன்னியன் செல்வனை என் அருகிலேயே வைத்திருக்கும் படி தான். அந்த அளவுக்கு பொன்னியன் செல்வன் மீது எனக்கு பிடிப்பு.

அட பாவமே! இது தெரியாம தான் நான் அப்படி ஒரு தனிமடலை அனுப்பி விட்டேனா? ஐயோ பாவம் வாத்தியார். மன்னிச்சிடுங்க வாத்தி!


அவரின் படைப்புகளில் பொன்னியின் செல்வன் சாகா வரம் பெற்றது என்பதை அதைப்பற்றி பெரும் நெகிழ்ச்சியுடன் பேசும் மனிதர்களை கொண்டு கணித்தும் இருக்கிறேன்.

ஆனால், இந்த விஷயத்தில் நான் உங்களின் எதிர் துருவம் என்று தான் சொல்ல வேண்டும். படைப்பாளியின் கதைகளில் இரு வகை உள்ளது. 1 வெறும் பொழுது போக்கை அடிப்படையாக கொண்ட கற்பனை (Fantasy) கதைகள். 2. இயல்பை விட்டு கொஞ்சமும் விலகாத கதாபாத்திரம், நிகழ்வுகளை உள்ளடக்கிய உணர்வுகளுடன் கலந்துறவாடும் கதைகள். நீங்கள் குறிப்பிடும் கல்கியின் கதைகள் பெரும்பாலும் முதல் வகையை சார்ந்தவை. அவை பெரும்பாலும் காதல், வீரம், நீதி என்று கற்பனையை சுற்றி வந்து, இயல்பு வாழ்க்கையில் நடக்காத ஒன்றிற்காக நிம்மதியை தொலைக்கும் நம் மனதை கற்பனை கொண்டு ஆறுதல் அளிக்கும் கதைகள். இந்த வகை கதைகளுக்கு வாசகர்களிடையே என்றும் பெரும் வரவேற்பு உண்டு (ஹாரிபாட்டரை விட, ஜேம்ஸ் பாண்டை விட ஒரு சரியான உதாரணம் வேண்டுமா என்ன..?). கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கனவுகளில் மிதக்கவிடும் கதைகள் என்பதாலோ என்னவோ, எதார்த்தத்தை விரும்புவபவர்களை இந்த கதைகள் அவ்வளவாக கவருவதே இல்லை. 20, 30 பாகங்கள் கொண்ட இது போன்ற வீர, பராக்கிரம கதைகளை விட 20 வரிகளை கொண்ட ஒரு சிறுகதை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையுடையதாக இருக்கிறது. காரணம், எதார்த்தத்தின் சக்தி அத்தனை வலியது..!

1 வெறும் பொழுது போக்கை அடிப்படையாக கொண்ட கற்பனை (Fantasy) கதைகள்.
2. இயல்பை விட்டு கொஞ்சமும் விலகாத கதாபாத்திரம், நிகழ்வுகளை உள்ளடக்கிய உணர்வுகளுடன் கலந்துறவாடும் கதைகள்.

நவீன கதைகளை இவ்வளவு எளிதாக பிரிக்க முடியாது. அது more complicated. பல இழைகளால் ஆன ஆய்வு அது! அதனால் இதுவா அதுவா என ஒரு கதையை சுலபமாய் எடை போட முடியாது!

சிறுகதை, தொடர்கதை, நாவல் வடிவம் தோன்றுவதற்கு முன்பே கதை சொல்லுதல் பல வடிவங்களில் இருந்து கொண்டு தானே இருந்தது. கதை கேட்கும் சுவாரஸ்யமும், இலக்கிய ரசனையும் எப்போதும் பிரிந்தே இருந்திருக்கிறது. சில சமயம் விதிவிலக்கு நடப்பதுண்டு!

கல்கியின் எழுத்துகள் ஜனரஞ்சக வாசகர்களுக்கானது என இப்போது ஒதுக்கி விட்டார்கள். அவருடைய எழுத்துகளில் இந்துத்துவா இழை ஓடுகிறது என கூட விமர்சன கட்டுரைகள் வெளிவந்தன. ஆனால் என்னுடைய பார்வையில் கல்கியின் எழுத்துக்களை இலக்கிய உலகம் ஏற்று கொள்ளும் கட்டாயம் ஏற்படுமென கருதுகிறேன்.

ஆதவா
27-01-2008, 09:24 AM
வாத்தியாரே! பக்கத்தத சேமித்து வைத்திருக்கிறேன்... பொறுமையாகப் படிப்பதற்கு.....

கல்கி பற்றிய எனது எண்ணங்கள் அனைத்தும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்..... மேலும் சொல்வதற்கு என்னிடம் ஏதுமில்லை....

நன்றி... பக்கத்தை சேமிகக்க் கொடுத்தமைக்கு..
பாராட்டு....இப்படி ஒரு அருமையான திரி ஆரம்பித்ததற்கு

rocky
28-01-2008, 04:00 AM
அன்புள்ள லொள்ளுவாத்தியார் அவர்களுக்கு,

முதலில் என்னுடைய நன்றிகள், இதுபோன்றதொரு பதிவை இட்டதற்க்கு. உங்களைப்போல் நானும் அமரர் கல்கியின் மிகத்தீவிர ரசிகன். அவரின் புத்தகங்களில் நீங்கள் கூரிய அனைத்தையும் படித்துவிட்டேன், அலை ஓசையின் மூன்றாம் பாகத்தை தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன். அவருடைய புத்தகங்கலில் நான் முதலில் படித்தது "பொன்னியின் செல்வன்" தான். பொன்னியின் செல்வனைப் படித்த பிறகு யாராலும் அவருடைய மற்ற புத்தகங்களை தேடிப்பிடித்துப் படிக்காமல் இருக்க முடியாது, அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா. பிறகு வரிசையாக "பார்த்திபன் கனவு", "சிவகாமியின் சபதம்", "சோலைமலை இளவரசி" தற்போது "அலை ஓசை" என்று தொடர்கிறது.

"பொன்னியின் செல்வனை" பற்றி நான் ஏற்கனவே என்னுடைய புத்தகம் பதிப்பில் கூறியிருக்கிறேன். ஆனால் அப்போது ஏன் படிக்கவில்லை என்ற கோபத்தை மட்டும் காட்டினேனே தவிர ஏன் படிக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூரவில்லை, அதை உங்களின் திரியில் இடுவதற்க்காக மகிழ்கிறேன். பொன்னியின் செல்வனைப் படிக்கச் சொல்வதற்க்கான முக்கியக் காரணம் நம்முடைய முன்னோர்களின் உண்மையான வரலாற்றை மிகவும் சுவாரஸ்யமாக தெளிவாக எளிமையாக நாம் தெரிந்துகொள்ள இதைவிட வேறு நல்ல புத்தகம் எனக்குத் தெரிந்து இல்லை. இன்னொன்று நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது ஒரு எனக்கு ஒரு கதையைப் படிக்கிறோம் என்ற உணர்வு துளியும் ஏற்படவில்லை, ஏதோ நானே அந்தக் காலத்தில் அங்கு இருந்து அனைத்தையும் பார்த்தது போல் உணர்ந்தேன்.

மற்றொரு குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால் நாம் படிக்கும் பொழுதே நம் மனத்திரையில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் நம்மால் உருவகப்படுத்திக் கொள்ளமுடியும். ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வு ஏற்படும் (பின்னனி இசையுடன்.) கதாப்பாத்திரம் மட்டுமல்ல எளுத்தாளர் வருணித்திருக்கும் பிண்னனியையும் நம்மால் காட்சிபடுத்தமுடியும். நான் இந்தப் புத்தகத்தின் ஐந்து பாகங்களையும் மலிவு விலைப்பதிப்பில் தான் வாங்கினேன். அதில் படங்கள் இருக்காது, ஆனால் அந்த அரன்மனைகளையும், காவிரி நதியையும், பச்சை வயல்களையும், பூங்குழலி படகு விட்ட அலைகடலையும், சுரங்கப்பாதைகளின் இருளையும், வந்தியத்தேவனின் வீரத்தையும், குந்தவையின் அறிவையும், நந்தினியின் அழகையும், பூங்குழலியின் தைரியத்தையும், வானதியின் காதலையும், பளுவேட்டையர்களின் பலத்தையும், இன்னும் அனைத்தையும் நான் நேரில் பார்த்தேன், ரசித்தேன், உணர்ந்தேன். லொள்ளுவாத்தியார் வெளியிட்டிருக்கும் சிவகாமியின் படங்களுக்கும் நான் சிவகாமியைக் கற்பனை செய்து வைத்திருந்த உருவத்திற்கும் நான் பெரிய வித்தியாசங்களைக் கண்டுவிடல்லை. அதை வரைந்த ஓவியரும் இதை மிகவும் அனுபவித்து கல்கி அவர்கள் எழுத்தில் வரைந்ததை அவர் அப்படியே வண்னங்களில் தீட்டியிருக்கிறார். உதாரணத்திற்கு ஒன்று மட்டும் சொல்கிறேன், மன்னர் சுந்தரசோழரை நந்தினி இரவில் வந்து பயமுறுத்துவதாக வரும் காட்சியில் அந்த தனி அறையில் நந்தினியை தன்னிடைய இறந்து போன பழைய காதலி ஊமைப்பெண் என்று என்னி பயந்து பலம்பும் போது வீட்டில் என்னுடைய அறையில் தனியாகப் படித்துக் கொண்டிருந்த என்னை என் அம்மா உள்ளே வந்து திடீரென அழைத்ததும் பயந்து போய் புத்தகத்தை கீழே போட்டுவிட்டு பதறி எழுந்ததை மறக்க முடியாது, அந்த அளவிற்கு அதில் மூழ்கிவிட்டேன்.

சாதாரணமாக நான் ஒரு முன்னூறு பக்கம் கொண்ட ஒரு புத்தகத்தைப் படிப்பதற்க்கே இரண்டு மாதங்களாவது ஆகும். ஆனால் "பொன்னியின் செல்வன்" ஐந்து பாகங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 1500 பக்கங்கள் வரும் வெரும் ஒன்றரை மாதங்களில் நான் படித்துவிட்டேன், இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது மட்டுமே என்னால் இதைச் செய்ய முடிந்தது, கழிவரையைத் தவிர மற்ற அனைத்து இடங்களிளும் புத்தகத்துடனேயே அழைந்தேன், லொள்ளுவாத்தியார் அவர்கள் நான் இறக்கும் போதும் "பொன்னியின் செல்வன்" புத்தகத்தை பக்கத்தில் வைக்குமாறு சொன்னதை நீங்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் அவர் ஏதோ அதிகமாக மிகைபடுத்திக் கூறுகிறார் என்று யாரும் எண்னிவிட வேண்டாம், நிச்சயமாக அமரர் கல்கி என்ற எழுத்தாளருக்கு அந்த மரியாதையை தரலாம். இந்த நாவலை எழுதி கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் ஆகியிருக்கலாம், இன்னும் நூறு ஆண்டுகள் ஆகலாம் ஆனால் அப்போதும் பொன்னியின் செல்வனை நிச்சயம் படிக்கலாம், அப்படி படிப்பதற்கு நாமும் நமக்கு அடுத்த தலைமுறைக்கு இந்த ஒப்பற்ற
புத்தகத்தை அறிமுகப்படுத்த வேண்டும். விட்டால் "பொன்னியின் செல்வனைப்" பற்றியே இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் மற்ற புத்தகங்களைப் பற்றியும் சிறிது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

"சிவகாமியின் சபதம்" அதுவும் ஒரு முக்கியமான நூலாகும். சோழர்களுக்கு பொன்னியின் செல்வனைப் போல பல்லவர்களைப் பற்றி அறிய இந்நூல். இதிலும் கதானாயகனாக பல்லவ மன்னர் இருக்கமாட்டார், பரஞ்சோதி என்ற ஒரு தளபதிதான் முக்கியமாக மையபடுத்தியிருப்பார். எனக்கு பரதநாட்டியம் பார்ப்பதற்க்கு பிடிக்காது இந்தப் புத்தகம் படிக்கும் வரை, ஆனால் இப்பொழுது வாரம் தோரும் ஜெயா தொலைக்காட்சியில் தகதிமிதா என்ற பரத நிகழ்ச்சியைப் பார்க்கிறேன், ஆனால் கல்கியின் எலுத்தில் நான் கண்ட சிவகாமியின் உணர்ச்சிமிகுந்த நடநத்தை இதுவரை எந்த பெண்னும் அந்த நிகழ்ச்சியில் ஆடவில்லை. பென்னுக்காக நாட்டை விட்டு கொடுப்பான், நாட்டை அழிப்பான், என எது வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை இதில் பார்க்கலாம். ஒரு பெண்னின் சபதத்திற்காக பெரும்படை திரட்டி வரும் பல்லவ மன்னன் ஒருபக்கம் என்றால் அந்த பெண்மீது கொண்ட காதலால் தன் நாடு அழியும் என்று தெரிந்தே அவளின் ஆசைக்காக நாட்டைக் காப்பாற்றாமல் அழிய விடும் ஒரு சாமியாரும் இருக்கிறார். கெட்டவனிடமும்
மிக உயர்ந்த காதல் இருப்பதாக இதன் மூலம் காணலாம். வாதாபி யுத்தத்தை கண்முன் நிருத்திய புத்தகம் இது. ஆனால் இதில் எந்த அளவு கற்பனையும் எந்த அளவு உண்மையும் இருக்கிறதென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

"சோலைமலை இள்வரசி" என்ற நூல் ஒரு குறுநாவல் எனலாம். மிகவும் அருமையான திரைக்கதை ஆசிரியராக இந்த படைப்பில் அவரை பார்க்கலாம். கனவுலகில் இளவரசனாகவும் நிகழ்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரனாகவும் மாறி மாறி கதை சொல்லியிருப்பார், ஒரே கதையை ஒரே நாவலில் இருமுறை படித்தாலும் சுவாரஸ்யமாக இருக்குமாறு எளுதியிருப்பார். இதுவும் ஒரு மிக அருமையான நாவல்.

"பார்த்திபன் கனவு" நலிந்த சோழர்களின் ஆட்சி மீண்டும் தழைப்பதற்கான ஆரம்பம் இந்த நாவலில் காணலாம். சிவகாமியின் சபதத்தின் தொடர்கதையாகவும் இது இருக்கும். கண்டவுடன் காதலை இந்த நாவலிலும் நாம் பார்க்கலாம், எப்படி "பொன்னியின் செல்வனுக்கு" ஒரு "வந்தியத்தேவன் குந்தவையின் காதல்" போல் சிவகாமியின் சபதத்தில் "மாமல்லர் சிவகாமியின் காதல்" போல் "சோலைமலை இளவரசியில்" "சுந்தரபாண்டியத்தேவன் மாணிக்கவல்லியின் காதல்" போல் இதிலும் ஒரு அழகான காதல் உண்டு, அது சோழமன்னன் விக்ரமனுக்கும் பல்லவ இளவரசி குந்தவிக்கும் உள்ள காதல். கல்கி அவர்கள் வரலாற்றை எழுதுவதில் உள்ள அழகு காதலிலும் இருக்கும். ஒரு ஆணால் பெண்னின் காதல் புலம்பலைப் பற்றி சிவகாமி புலம்புவதாக அவர் எழுதியிருப்பதை நிச்சயம் வேறு யாராலும் செய்ய முடியாது. மற்ற அனைத்து காதலும் மிகுந்த அழகுடனும் மென்மையாகவும் கூறியிருந்தாலும் "மாமல்லர் சிவகாமியின் காதல்தான் மிகவும் அருமையாக இருக்கும். போதும் இதோடு முடித்துக்கொள்கிறேன், அனைவரும் நிச்சயம் படிக்கவேண்டிய
புத்தகங்கள் அமரர் கல்கியினுடையது. கண்டிப்பாக படியுங்கள்.

பின் குறிப்பு : இது என்னுடைய நூறாவது பதிப்பு. நான் சதமடித்துவிட்டேன். ஹையா. என்னாடா எல்லாரும் ஆயிரமாவது பதிப்பை கொண்டாடும் போது இவன் நூறுக்கே சந்தோசப்படரான்னு நினைக்க வேண்டாம். (நாங்க லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போடுவோம்) இது எப்படி இருக்கு.

lolluvathiyar
01-02-2008, 06:13 AM
மனியம் அவர்களின் மானவன் ஜெயஸ்தா என்பதை நினைத்து மிகவும் பெருமை அடைந்தேன். உங்கள் பின்னூட்டமும் மிக அருமை. நன்றி

முகிலன் அவர்களும் பொன்னியன் செல்வன் நினைவில் இறங்கி மிகவும் பரவச பட்டிருக்க வேன்டும். அன்த உனர்ச்சி அவரின் பதிவில் தெரிந்தது. ஆகா எத்தனை அழகான தகவல் தந்திருகிறார். நான் எழுதிய இந்த திரிக்கு முகிழன் மேலும் தகவல் தந்து பெருமை சேர் த்தார் என்பது மிகை அல்ல. மிக்க நன்றி முகிலன்


கல்கியின் மற்ற படைப்புக்கள் பொய்மான் கரடு (சிறுகதை), சோலமலை இளவரசி.


சோலமலை இளவரசி நான் படித்ததில்லை. ஆனால் பொய்மான் கரடு ஒரு சிறு நாவல் எனக்கு அவ்வளவாக பிடிக்க வில்லை. கொஞ்சம் மசாலா தனமாக இருக்கும் அதிலும் ஒரு மெசேஜ் இருக்கும் அந்த கதையில் வரும் பொய்மான் கரடு சேலத்துக்கு அருகில் இருக்கிறது. மலையில் உள்ள குகையில் மான் இரு கொம்புகளுடன் இருப்பது போன்ற பொய்த் தோற்றம் காணப்படும். அருகே சென்று பார்த்தால் ஒன்றும் இருக்காது. இது பல ஆண்டுகளாக உள்ள அதிசயம்.
அதன் புகைபடத்தையும் கீழே தந்துள்ளேன்.


http://farm3.static.flickr.com/2341/2234457192_456900bf82.jpg

ஓவியன்
01-02-2008, 04:02 PM
பின் குறிப்பு : இது என்னுடைய நூறாவது பதிப்பு. நான் சதமடித்துவிட்டேன். ஹையா. என்னாடா எல்லாரும் ஆயிரமாவது பதிப்பை கொண்டாடும் போது இவன் நூறுக்கே சந்தோசப்படரான்னு நினைக்க வேண்டாம். (நாங்க லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போடுவோம்) இது எப்படி இருக்கு.

பாராட்டுக்கள் ராக்கி உங்களது நூறாவது பதிவுக்கு...!!

உங்களது இலக்கிய ரசனையை இரசித்தேன், அருமையான பதிவு...!! :icon_b:

rocky
02-02-2008, 04:00 AM
மிக்க நன்றி தோழர் ஓவியன் அவர்களே,

நான் ஏதோ விளையாட்டாக ஹையா நூறாவது பதிப்பு என்று போட்டுவிட்டோன், ஆனால் அதற்கும் தங்களைப் போல் 10,000 பதிவு இட்டவர் வாழ்த்துச் சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் மன்றத்தில் இனைந்த நாளிலிருந்து கணக்குப் பார்த்தால் என்னுடைய பதிவுகளின் எண்னிக்கை மிக மிக குறைவாகவே இருக்கும், காரணம் நான் இனையத்திற்க்கு வரும் நேரங்கள் மிகவும் குறைவுதான், அலுவலக வேளையாக ஏதாவது மின்னஞ்சல் அனுப்பும் நேரத்தில் ஏற்கனவே தயாரித்து வைத்த பதிவுகளை இட்டுவிட்டு உடனே சென்றுவிடுவேன், பிறகு மீண்டும் வேளை வரும்போது வந்தே அதற்கான பின்னூட்டங்களையோ அல்லது பதிலையோ பார்ப்பேன், என்னுடைய பதிவுகள் மிகவும் குறைவாக இருப்பதற்க்கு இதுவே காரணம். ஆனால் நான் இடும் பதிப்புகள் நிச்சயம் ஒரு கருத்துடனோ அல்லது ஒரு நல்ல பின்னூட்டமாகவோ மட்டுமே இருக்கும் (கவிதைகளைத் தவிர அது கிறுக்கள்கள்). மீண்டும் உங்களுக்கு எனது நன்றிகள் ஓவியன் அவர்களே.

கிஷோர்
02-02-2008, 11:39 AM
லொள்ளுவாத்தியார் அவர்களே ! ஏராளமான பதிவுகளை செய்கிறீர்கள், நிறைய எழுத்து பிழைகள், சிறிது கவனம் செலுத்தினீர்களானால் நன்றாயிருக்கும் என்பது எனது மிக தாழ்மையான விருப்பம்.

கிஷோர்
02-02-2008, 11:56 AM
கல்கியின் பொன்னியின் செல்வன் ....ஆகா என்ன அருமையான ஒரு காவியம். ஒவ்வொருவருடைய பார்வையிலும் மாறுபடும் மொனாலிசா போல் ஒவ்வொருவருடைய வாசிப்பிலும் வேறுபடும் சொல்லொவியம்.
வந்தியதேவன் இன்றும் என் நாயகன்.

வளரும் எமது சந்ததிக்கு அதை அறிய தந்த உங்களுக்கு நன்றி..நன்றி..நன்றி..நன்றி..

lolluvathiyar
16-02-2008, 07:29 AM
கல்கியின் கதைகளில் வர்ணனைகள், சம்பவங்கள், உரையாடல்கள் மிகவும் அழகான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆனால், எதார்த்தம் அத்தனை அழகில்லையே..!

இதயம் நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் பொன்னியன் செல்வனை எந்த கன்னோட்டத்தில் படித்தீர்கள் என்று தெரியவில்லை. வரலாற்று நாவல்கள் எழுதுபவர்களில் கல்கி தான் எதார்த்தில் இருந்து கொஞ்சம் கூட குரையாமல் எழுதும் ஆற்றல் கொன்டவர். எனக்கு கல்கி மீது ஈர்ப்பு ஏற்பட காரனமே அவர் கதையில் இருக்கும் எதார்த்த நடை. கல்கி எந்த பாத்திரத்தை மிகை படுத்தி எழுதியதாக எனக்கு நினைவில்லை.
தஞ்சைகாரான நீங்கள் என்னை விட பொன்னியன் செல்வனை அதிகம் விரும்பி இருப்பீர்கள் என்று நினைத்தேன். உங்கள் பதிவு உன்மையிலேயே எனக்கு அதர்ச்சியை தந்து விட்டது.


நீங்கள் குறிப்பிடும் கல்கியின் கதைகள் பெரும்பாலும்
காதல், வீரம், நீதி என்று கற்பனையை சுற்றி வந்து,


இதயம் அவர்களே சோழமன்னர்கள் காலத்தில் வீரம் என்பது புனைக்கபட்ட கற்பனை அல்ல அது முற்றிலும் உன்மை. அது கல்கி கற்பனையாக சொன்னது அல்ல உலக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் பலர் பல நாடுகளில் பதிவு செய்து வைத்திருகின்றனர். போன வருடம் கூட சோழ மன்னர்களின் நகர அமைப்பை எப்படி ஏற்படுத்தி இருந்தார்கள் என்பதை பற்றி ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்திருகிறார்கள்.

அடுத்தது காதல் என்பது எந்த காலத்திலும் கற்பனை ஆகாது.
நீதி என்பது எப்படி கற்பனை என்று சொல்ல முடியும் அந்த காலத்தில் எவை நீதியாக கருதபட்டது என்று வரலாற்று சான்றுகள் நம்மிடம் நிரைய இருகின்றன.

பொன்னியன் செல்வனை நான் அதிகமாக விரும்பியதால் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். சரி ஒரு சின்ன கோரிக்கை நேரம் கிடைக்கும் போது இந்த லொள்ளுவாத்தியாருக்காக நீங்கள் பொன்னியன் செல்வனை இன்னொரு முரை படியுங்கள், உங்களுக்கு நிச்சயம் நான் சொன்னதை உனர்வீர்கள் என்று நம்புகிறேன்.

lolluvathiyar
27-02-2008, 07:17 AM
மிக பொருமையாக பதிவு செய்ததுக்கு நன்றி ராக்கி, உங்கள் பதிவை பார்த்தவுடன் தெரிந்து கொன்டேன், பொன்னியன் செல்வனை நீங்கள் எந்த அளவுக்கு விரும்பி இருப்பீர்கள் என்று. நான் எழுத மறந்ததை நீங்கள் எழுதி விட்டீர்கள் பொன்னிய செல்வனுக்கு தனி திரி போட்டாலும் எழுத பத்தாது.



"சிவகாமியின் சபதம்"
மிக உயர்ந்த காதல் இருப்பதாக இதன் மூலம் காணலாம். வாதாபி யுத்தத்தை கண்முன் நிருத்திய புத்தகம் இது. ஆனால் இதில் எந்த அளவு கற்பனையும் எந்த அளவு உண்மையும் இருக்கிறதென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

சிவகாமியின் சபதம் கதையில் சிவகாமி, ஆயன சிற்பி, நாகநந்தி மூவருமே கற்பனை பாத்திரங்கள் தான். அதை தவிர மீதி சம்பவங்கள் அனைத்தும் உன்மை. காஞ்சி கோட்டை முற்றுகை, பிறகு வாதாபி போர் இவை எல்லாம் உன்மை சம்பவங்கள்தான். இதனால் மாமல்லபுரம் சிற்பங்கள் பாதியில் நின்று போனதும் உன்மைதான்.

பரஞ்சோதி கதாபாத்திரமும் உன்மைபாத்திரம் தான், இவர் சிறு தொன்டர் என்ற அடிகளார் ஆகி விட்டார் என்பது உன்மைதான்.வாதாபியிலிருன்து விநாயகர் சிலை கொண்டு வந்து திருவென்காட்டில் வைத்திருப்பது இன்றும் இருகிறது.


பின் குறிப்பு : இது என்னுடைய நூறாவது பதிப்பு. நான் சதமடித்துவிட்டேன்.

சதமடிக்க இந்த திரியை தேர்ந்தெடுத்தது உன்மையில் எனக்கு சந்தோசமாக இருக்கிறது

பின்னூட்டம் இட்ட் மற்றவர்களுக்கும் நன்றி