PDA

View Full Version : இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட்.



aren
12-01-2008, 02:00 PM
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் பெர்த் நகரில் புதன்கிழமை முதல் ஆரம்பமாகிறது. வெற்றிகிட்ட வாய்ப்புள்ள மெல்பார்ன் மற்றும் சிட்னி நகர டெஸ்ட்களில் இந்தியா தோல்வியடைந்தது (சிட்னி கொஞ்சம் பரிதாபம் - ஆஸ்திரேலியாவிற்கு 14 ஆட்கள் ஆடினார்கள்). பெர்த் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கபூமி. அதில் இந்தியாவால் தாக்குபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

போன டெஸ்டில் பிரச்சனையில் சிக்கிய ஹர்பஜன் சிங்கை இந்த ஆட்டத்தில் கழிக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது (பிரஸ்டீஜ் பிரச்சனை). ஆகையால் அவர் ஆடுவார். ஆனால் இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இடமாகையால் இரண்டு ஸ்பின்னர்களை களத்தில் இறக்குவதும் சரியாக படவில்லை. ஆகையால் இந்தியா 11 ஆட்டக்காரர்களை களத்தில் இறக்க கொஞ்சம் சிரமப்படும் என்றே தோன்றுகிறது.

எனக்குத் தெரிந்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் களத்தில் இறங்குவார்கள் என்றே நினைக்கிறேன். அப்படியானால் இர்பாஃன் பத்தான் உள்ளே வரலாம். அவர் வந்தால் யார் வெளியேறுவார். யுவராஜ் சிங்காகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஷேவாக் இன்று நடந்த பிராக்டிஸ் போட்டியில் நன்றாக ஆடி சதம் அடித்ததால் அவரை வாசீமிற்கு பதில் உள்ளே இறக்குவார்கள் என்றே நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்து இந்திய டீம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

1. ஷேவாக்
2. திராவிட்
3. லஷ்மன்
4. டெண்டுல்கர்
5. கங்குலி
6. தோனி
7. பதான்
8. கும்ளே
9. ஹர்பஜன்
10. ஆர்.பி.சிங்
11. சர்மா

இந்தியா சிறப்பாக ஆடி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

அறிஞர்
14-01-2008, 07:38 PM
இந்தியா டிரா செய்தாலே பெரிய விசயம் தான்.. இன்னும் 6 நாளில் முடிவு தெரியும்...

அறிஞர்
17-01-2008, 01:50 PM
இந்திய அணியின் எழுச்சி ஆட்டம் வெற்றியில் முடியுமா...

இந்தியா 330, 52/1
ஆஸ்திரேலியா 212

170 ரன்களில் முன்னனி வகிக்கிறது இந்தியா...

3 நாள் ஆட்டத்தில் 300 ரன்களுக்கு மேல் எடுத்தால், இந்தியா வெற்றியை பற்றி சிந்திக்க இயலும்.

ஷீ-நிசி
17-01-2008, 02:02 PM
நம்மவர்களுக்கு மிக அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது..

இந்த சாதகமான சூழ்நிலையை வெற்றியாக்கிக்கொள்ளவேண்டும்.. நாளை முழுவதும் ஆட்டம் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் வாய்ப்பு பிரகாசமாகும்...

அறிஞர்
17-01-2008, 02:26 PM
நம்மவர்களுக்கு மிக அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது..

இந்த சாதகமான சூழ்நிலையை வெற்றியாக்கிக்கொள்ளவேண்டும்.. நாளை முழுவதும் ஆட்டம் நம் கட்டுப்பாட்டில் இருந்தால் வாய்ப்பு பிரகாசமாகும்...
அடி கொடுத்துதான் அவர்களை அடக்கவேண்டும்...

அறிஞர்
18-01-2008, 01:51 PM
இந்தியா இன்னும் 80 ரன்கள் எடுத்திருந்தால் எளிதில் வெற்றியை நோக்கி பயணித்திருக்க முடியும்.

இந்தியா 330 & 294
ஆஸ்திரேலியா 212 & 65/2

ஆஸ்திரேலியா வெற்றி பெற 348 ரன்கள் தேவை.

இன்னும் 2 நாட்கள் இருப்பதால் ஆட்டத்தில் வெற்றி-தோல்வி தெரிந்துவிடும்.

இந்தியா சாதிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அன்புரசிகன்
18-01-2008, 02:05 PM
ஆஸ்திரேலியர்கள் சற்றே திக்குமுக்காடுகின்றனர். ஆர் பி சிங் சர்மா பதான் ஆகியோர் சிறப்பாக பந்துவீசுகின்றனர். நாளைக்குள் 5-6 விக்கட்டுக்களை இழந்தால் இந்தியா வெல்வது இலகு. ஆனாலும் அவுஸ்திரேலியர்களின் பின்வரிசை ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினால் அதுவும் தவிடுபொடியாகிடும்.

மதி
18-01-2008, 02:29 PM
சாதிக்கும் என்றே நம்புவோம்...

ஷீ-நிசி
18-01-2008, 02:33 PM
இந்தியா நாளை வெல்லும், நம்மவர்கள் கடினமாக உழைக்கவேண்டும்.

வெற்றியின் அருகே நெருங்கிவிட்டோம்.. கொஞ்சமும் அசந்துவிடாமல் ஆஸ்திரேலிய அணியை அசரவைக்கவேண்டும்...

வாழ்த்துக்கள் இந்தியா!

ஓவியன்
19-01-2008, 05:46 AM
தற்போதைய நிலவரப்படி 227 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகள் என்ற நிலையில் கிளார்க்கும் அவுஸ்திரேலியாவின் கில்லியும் களத்தில் நிற்கின்றார்கள், இருவரும் அருமையாகவே ஆடுகிறார்கள்..
இவர்கள் இருவரில் ஒருவரது விக்கெட்டை இந்தியா வீழ்த்தினால் வெற்றி பெறுவது பிரகாசமாகும்...

ஓவியன்
19-01-2008, 05:48 AM
வாவ்........!! :):):)

ஹில்கிறிஸ்ட் ஆட்டமிழந்தார், சேவக்கின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு.... :)

ஓவியன்
19-01-2008, 05:58 AM
மீண்டும் ஷேவக்...,
லக்ஸ்மனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கிறார் பிறட் லீ....

இந்தியா கிட்டத் தட்ட வெற்றியின் விளிம்புக்கு வந்து விட்டது எனலாம்..,.

வசீகரன்
19-01-2008, 06:05 AM
இந்தியா நாளை வெல்லும், நம்மவர்கள் கடினமாக உழைக்கவேண்டும்.வெற்றியின் அருகே நெருங்கிவிட்டோம்.. கொஞ்சமும் அசந்துவிடாமல் ஆஸ்திரேலிய அணியை அசரவைக்கவேண்டும்...
வாழ்த்துக்கள் இந்தியா!

நிச்சயமாக இது நமக்கு கவுரவ பிரச்சினை.... இரண்டாவது டெஸ்ட் போட்டியை.... அநியாயத்திற்க்கு... அழூகுணீ ஆட்டம் ஆடி வெற்றி பெற்றதாக கொக்கரித்த அழூகுணீ அணியை அவர்கள்
மண்ணிலேயே வீழ்த்தி.... முகத்தில் கரி பூச வேண்டும்....! நம்மவர்கள் செய்து முடிப்பார்கள் என நம்புகிறோம்.... விரைவில் பாண்டிங் அவுட் என்ற நல்ல செய்தியை எதிர்பார்க்கிறேன்...!

ஓவியன்
19-01-2008, 06:47 AM
இந்திய வெற்றியை மூடி மறைக்கும் திரையென களத்தில் நின்ற மைக்கல் கிளார்க் ஆட்டமிழந்தார்...
253 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுக்கள் என்ற மிக இக்கட்டான நிலையில் அவுஸ்திரேலிய அணியினர்..

ஓவியன்
19-01-2008, 07:36 AM
என்ன கொடுமை இது, ஸ்டூவர்ட் கிளார்க்கும் ஜோன்சனுமாக சேர்ந்து 9 வது விக்கட்டுக்கு பிளந்து கட்டுகிறார்களே..
இப்போது அவர்கள் முன்னேயுள்ள வெற்றி இலக்கு 89 மட்டுமே... :sprachlos020:

ஓவியன்
19-01-2008, 07:43 AM
அதிரடியாக பவுண்டரிகளாக அர்ச்சனை செய்து கொண்டிருந்த கிளார்க் ஆட்டமிழந்தார்...
பதானின் பந்து வீச்சில் டோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்...

சிவா.ஜி
19-01-2008, 07:50 AM
தற்போதைய நிலவரம்
327/9
ஒரு கேட்ச் ட்ராப் ஆகிவிட்டதால் ஆட்டம் தொடர்கிறது.இல்லையென்றால் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் குளோஸ்.

ஓவியன்
19-01-2008, 07:59 AM
இந்தியா 72 ஓட்டங்களினால் வெற்றி........!!

சிவா.ஜி
19-01-2008, 08:00 AM
இந்தியா வெற்றி!!!

அமரன்
19-01-2008, 08:13 AM
வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு.. சீண்டலால் சிலிர்த்தவர்கள் முழுத்திறமையையும் வெளிக்காட்டி சாதித்து விட்டார்கள்.

மதி
19-01-2008, 08:35 AM
போராடி பெற்ற வெற்றி...
இந்திய அணியினருக்குப் பாராட்டுக்கள்.. கடைசி வரைக்கும் டென்ஷன் ஆக்கிட்டாங்கப்பா..

வசீகரன்
19-01-2008, 09:19 AM
வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு.. சீண்டலால் சிலிர்த்தவர்கள் முழுத்திறமையையும் வெளிக்காட்டி சாதித்து விட்டார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு சங்...................கு!!!

mania
19-01-2008, 10:18 AM
என்ன ஒரு ஆணித்தரமான வெற்றி. இந்திய அணிக்கு என் பாராட்டுகள்.
அன்புடன்
மணியா

அறிஞர்
19-01-2008, 11:23 AM
2001ல் ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கடிவாளம் போட்டது.

இப்பொழுது.. 2007லும் இந்தியா தான்...

2003க்கு பிறகு ஆஸ்திரேலியாவை ஜெயித்த அணி இந்தியா...

வாழ்த்துக்க்கள்.. இந்த வெற்றிகள் இன்னும் தொடரட்டும்.

ஷீ-நிசி
19-01-2008, 12:36 PM
நாம் இந்த வெற்றியை எந்தளவிற்கு கொண்டாடினாலும் தகும்..

வாழ்த்துக்கள் இந்தியா!

செல்வா
19-01-2008, 02:41 PM
:aktion033::aktion033::aktion033::icon_drunk::icon_drunk::music-smiley-009::music-smiley-009::music-smiley-009::ernaehrung004::ernaehrung004:

ஓவியன்
19-01-2008, 03:28 PM
அவுஸ்திரேலியர்களின் சொந்த மண்ணிலே அதுவும் "பேர்த்" மைதானத்திலே வைத்து அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிச் சங்கிலியை இந்தியா முறியடிக்கும்னு அவுஸ்திரேலியர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

அந்த வகையில் அவர்கள் ஆணவத்துக்கு கிடைத்த மிகப் பெரிய அடி இது.....

பாராட்டுக்கள் இந்திய அணியினருக்கு, இந்த வெற்றியும் வெற்றிக்காகப் போராடும் குணமும் என்றுமே தொடரட்டும்...!! :icon_b:

ஓவியன்
19-01-2008, 03:58 PM
http://www.youtube.com/watch?v=ufGDJvqhrNg

http://www.youtube.com/watch?v=Wsm_szYpy7E

aren
19-01-2008, 05:44 PM
இந்த வெற்றி ஆஸ்திரேயர்களின் தலைகணத்தை கொஞ்சம் கீழிறக்க வைக்கும் என்று நினைக்கிறேன்.

வெற்றி பெற்ற இந்திய டீமீற்கு என் பாராட்டுக்கள்.

அக்னி
20-01-2008, 12:22 AM
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் வெற்றியைத் தக்க வைப்பார்கள் என நம்புவோம்.

மாதவர்
20-01-2008, 03:56 AM
வாழ்த்துக்கள்

அறிஞர்
24-01-2008, 02:14 PM
4 வது டெஸ்டில் இந்தியா 309/5

டெண்டுல்கர் அபாரமாக ஆடி... 124 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.....

500 ரன்கள் இந்தியா எடுத்தால் நன்றாக இருக்கும்.

அன்புரசிகன்
24-01-2008, 05:16 PM
இன்று ஏறத்தாள ஒருநாள் போட்டியில் ஆடியது போல் சச்சின் ஆடினார். நீண்டநாட்க்களுக்குப்பின் இவ்வாறான ஆட்டம் கண்டேன். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகள் பறந்தன. பெளன்ஸர்களை கூட லாவகமாக 4 ஓட்டமாக மாற்றியது கால்ப்பக்கமாக வரும் பந்துகளை மட்டையை மாற்றிப்பிடித்து 4 ஓட்டங்கள் பெற்றது என சாதூர்யமாக விளையாடினார் சச்சின். தொடரவேண்டும். 500 ஐ எட்டிப்பிடின்ன தோனி மற்றும் கும்ளே கைகொடுக்க வேண்டும். ஆனாலும் இன்றய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா கதிகலங்கி நிற்கிறது என்பது மட்டும் உண்மை.

அறிஞர்
24-01-2008, 06:10 PM
500 ஐ எட்டிப்பிடின்ன தோனி மற்றும் கும்ளே கைகொடுக்க வேண்டும். ஆனாலும் இன்றய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா கதிகலங்கி நிற்கிறது என்பது மட்டும் உண்மை.
அடிலெய்டில் சச்சின் 100 எடுத்தது அவருக்கு மிகப்பெரிய திருப்தி....

ஹர்பஜனை விட்டு விட்டீர்கள்.. அவர் ஒரு 50 ரன்கள் எடுப்பார்....

500ஐ தாண்டினால் சிறப்பாக இருக்கும்.

அனுராகவன்
27-01-2008, 03:06 PM
ஆகா என்ன இங்க கிரிக்கெடி வர்னனைகள் பலமாக இருந்திருக்கு...
அப்படி கொடுத்ததாலதான் இந்தியா வென்றுச்சா....
அடுத்த மேச்சுக்கு தொடருமா..
ம்ம் என் நன்றி