PDA

View Full Version : நரகவேதனை - இறுதி



தங்கவேல்
12-01-2008, 11:10 AM
ஒத்தப் பொண்ணுங்க. ரொம்ப செல்லமா வளர்த்தேன். சாதி பார்த்து, வசதி பார்த்து கல்யாணம் செய்து கொடுத்தேன். இன்னைக்கு பாருங்க. தனிமரமா நிக்கிறா. இவள் புருஷன் ( ?) சபரி மலைக்கு மாலை போடுறான். பிள்ளையோ ஐசியூவில் இருக்கிறான். பத்து பைசா கொடுக்க மாட்டான். காலையில வந்தான். போயிட்டான். பெரியவர் ஒருவர் அழுதார். சாதி , சாதி என்று தலையில் தூக்கி வைத்து ஆடும் சாதி இன்று வந்து அந்தப் பெண்ணுக்கு உதவியதா ? இல்லை ஏதாவது தட்டித்தான் கேட்குமா ? எங்கே போயிடுச்சு அந்த சாதி. அதை ஏன் இந்த முட்டாள் மனிதன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகின்றான். தெரியவில்லை.

சரி விசயத்துக்கு வருகின்றேன்....

டாக்டர் எனது நண்பரிடம் பாப்பா ரொம்ப சீரியஸ் கண்டிஷனில் தான் இருக்கிறது. ஒவ்வொரு டெஸ்டா எடுத்து எதுக்கு பிட்ஸ் வந்தது என்று கண்டுபிடிக்கனும் என்று சொல்லி விட்டு அட்மிட் செய்துடுங்க என்று சொல்லிச் சென்றார்.

காரணம் என்ன ? அம்முவுக்கு என்னதான் பிரச்சனை. அதை முதலில் சொல்லிவிட்டால் பின்னர் நடந்த கூத்து எல்லாம் எப்படி என்று தெரியும்.


அந்துருண்டை என்ற ஒன்று இருக்கிறது. அதை அம்மு சாப்பிட்டு விட்டாள். சாப்பிட்டு செரித்தும் விட்டது. அதனால் வந்தது தான் வாயில் நுரை. மயக்கம்.

ஆனால் என் மனைவி டாக்டரிடம் சொல்லியது பிட்ஸ் வந்து விட்டது என்று.பிடித்துக் கொண்டார்கள் சரியாக.

பிளட் டெஸ்ட் அறை, குளுக்கோஸ், மற்ற மருந்துகள் என்று காசு...காசு...

ம் பாப்போம்... பிளட் டெஸ்ட் எடுத்து பார்த்தாச்சு. ஒன்னும் தெரியலை. தண்டுவடத்தில் இருந்து நீர் எடுத்து டெஸ்ட் பன்னனும். ஆனால் குழந்தை சீரியஸாத்தான் இருக்கு. டாக்டரின் பதில்
குளுக்கோஸ் இறங்கி கொண்டு இருந்தது. அம்மு வாந்தி வாந்தியாய் எடுக்கிறது.

யூரின் வரவில்லையா, அப்போ சீரியஸ் தான் டாக்டர் சொல்லி விட்டு சென்ற அடுத்த வினாடி அம்மு யூரின் போனாள்.


இன்னும் மயக்கம் தெளியவில்லையா ? அப்போ ரொம்ப சீரியஸ் தான். அம்மு அடிக்கடி விழித்துப் பார்த்து வாமிட் செய்து விட்டு அம்மா, அம்மா என்று சொல்லி விட்டு மயக்கமாகிறது. இரண்டு ஹெவி சிலீப்பிங் டோஸ் கொடுத்துள்ளார்கள்.

மணி, பதினொன்று, டாக்டர் அழைக்கின்றார். மசானிக் கொண்டு செல்லுங்கள். இங்கு வசதியில்லை என்று சொல்லுகின்றார். இதை ஏன் முன்பே சொல்ல வில்லை. அவருக்குத்தான் வெளிச்சம்.

மசானிக்கில் அட்மிட் செய்யும் போது மணி 12.20...உடனடி எமர்ஜென்சியில் அனுமதி.. மனைவியை வெளியே போகச் சொல்லுறாங்க. அம்மு அழுகின்றாள்.


அம்மா போகாதேம்மா... குத்துறாங்க... வலிக்குது வெளியில் இருக்கையில் நானும் எனது நண்பர் மற்றும் எனது அண்ணன்..


மீண்டும் இரத்தப் பரிசோதனை. கேஜியில் டெஸ்ட். பரிசோதனை ரிசல்ட் வந்த பிறகு இன்று ஐசியூவில் இருக்கட்டும். நாளை பார்க்கலாம். ஒன்னும் கவலைப்பட வேண்டாம் இது மசானிக் ஆஸ்பிட்டலில் டாக்டர் சொன்னது.
சற்று நிம்மதியுடன் வீட்டுக்கு வந்தேன். மனைவி ஆஸ்பிட்டலில் இருந்தார்.

காலையில் மீண்டும் ஆஸ்பிட்டல் வாசம். காரணத்தை மிகச் சரியாக கண்டு பிடித்து விட்டார்கள் மசானிக்கில். இரண்டு நாட்களில் அம்மு திரும்பவும் வம்பு பேச ஆரம்பித்து விட்டாள்.

டாக்டர்கள் தெய்வம் போன்றவர்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் தெய்வத்தின் வாக்காக தெரியும் அந்த சூழ் நிலையில். என்ன பேசுகின்றோம் என்று தெரிந்து பேச வேண்டும். எனக்கு நண்பர்கள் டாக்டர்கள் தான். எனது தோழி ஒரு டாக்டர். அவரின் கணவர் ஒரு டாக்டர். இன்னுமொரு நண்பர் டாக்டர். அவரிடம் ஒரு நாளாவது பேசாமல் இருந்தது இல்லை. அம்முக்குட்டிக்கு கையில் பால் ஊற்றி விட்டது. கரூர் ஹாஸ்பிட்டலின் நிர்வாகியின் மனைவி என் மனைவியை திட்டியதை இன்னும் மறக்கவில்லை. அங்குள்ள நர்ஸுகள் அம்முவை பார்த்ததும் ஓடி வந்து சிரிப்பூட்டி மகிழ வைத்து கைக்கு மருந்திடுவார்கள்.

அம்முவை முதன் முதலில் பார்த்த குழந்தைகள் டாக்டர் இருக்கின்றாரே, அவரை போல ஒருவரை இது வரை சந்தித்தது இல்லை. என்ன ஒரு பயங்கரமான வார்த்தைகளால் பேசுகின்றார். வார்த்தைகளுக்கான வலிமையினை அன்றுதான் உணர்ந்தேன்.

இந்தப் பதிவில் இரு நிகழ்ச்சிகளை எழுதி இருந்தேன். அது மசானிக் ஆஸ்பிட்டலின் முன்புறம் டீ விற்பவரிடம் டீ குடிக்கும் போது அறிந்தது. மற்றொன்று ஆஸ்பிட்டலில் சந்தித்த்து. வாழ்க்கை சந்திப்புகளால் வழி நடத்தப்படுகின்றது....