PDA

View Full Version : தமிழே சுவாசமாய்....



rambal
03-04-2003, 12:22 PM
அழகான பொய்
அசட்டுத்தனமான வீரம்

காத்திருத்தலில்
வெட்டிச் சுகம்
காணுதல்..

உலகமே
பிரகாசமாகிவிட்டதாய்
ஒரு மாய உணர்வு...

கனவு உலகத்திற்குள்
புக வைக்கும்
நுழைவு வாயில்..

இயற்கையோடு
கிறுக்குத்தனமாக
பேசுதல்

கொஞ்சம் தாடி..
சில கவிதை..
சிறிது கண்ணீர்..

வேறென்ன இருக்கிறது
இந்தக் காதலில்?

இருக்கிறது...
ஒன்றே ஒன்று மட்டும்..
தமிழே சுவாசமாய்..
வேறென்ன வேண்டும் இதற்கு மேல்...

இளசு
03-04-2003, 01:14 PM
சுவாசம் தந்த வாசம் வீசும் கவிதையும் கிடைக்கிறது..
கூடுதல் வரவு ரசிகனுக்கு
பாராட்டுகள் கவிஞனுக்கு

anushajasmin
03-04-2003, 01:15 PM
வேறெதுவுமே இல்லை என்பதுதான் இந்த காதலில் விஷயமே... நல்ல கவிதை
வழங்கிய நண்வருக்கு பாராட்டுகள்

Narathar
04-04-2003, 02:54 AM
சிலருக்கு காதல்தான் தாய்மொழி தமிழின் அருமையை உணர்த்துகிறது!!
தமிழ் வாத்தியார் சொல்லிப்புரியாததை இந்த காதல் புரிய வைக்கிறது!!
அட.... காதலும் கூட தமிழ் வளர்க்கிறதே....!!!!!