PDA

View Full Version : பொறியியல்



என்னவன் விஜய்
11-01-2008, 10:46 AM
நண்பர்களே , எனக்கு Civil Engineering படிப்பதற்கு ,இது தொடர்பான மேலதிக விபரம் தேவை.
இங்கே பல்கலைக்கழகத்தில் விசாரித்ததில் கிடைத்த பாடத்திட்டம் கிழே உள்ளது. இதில் எதனை எடுத்து படிக்கலாம் என தகவல் தெரிந்தவர்கள் அறிவுரை தாருங்கள்
Civil Engineering with Architecture BEng (Hons)
Civil Engineering including Foundation BEng (Hons)
Civil Engineering with Surveying BEng (Hons)
Civil Engineering BEng (Hons)
Civil Engineering with Water & Environmental Management BEng (Hons)
Civil Engineering with Project Management BEng (Hons)
Civil Engineering with Sustainability BEng (Hons)
இவற்றை விட வேறு ஏதும் இது தொடர்பான பாடத்திட்டம் இருந்தால் தெரியப்படுத்துங்கள்
நன்றி

அன்புரசிகன்
11-01-2008, 01:47 PM
Civil Engineering with Project Management BEng (Hons) என்பதற்கு தகுந்த கிராக்கி எல்லாநாடுகளிலும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் ஐக்கியராச்சியத்தில் இது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மத்தியகிழக்கிலும் கூட. முகாமைத்துவத்துடன் கூடிய பொறியியல் மிகவும் நல்லது. அது எந்த துறையாக இருந்தாலும்.

முடிந்தால் கணியஅளவியல் படிக்க முடிந்தால் படியுங்கள். (Quantity Surveying) இதற்கு பல நாடுகளில் பல பெயர்களில் உண்டு. என்ன... உங்களை அந்த படிப்பு முடிக்கும் வரைக்கும் சற்று தியாகம் செய்யவேண்டும். (ஆனால் எனக்கும் தியாகத்திற்கும் வெகு இடைவெளி என்பது வேறுவிடையம்:D)

aren
11-01-2008, 03:13 PM
Civil Engineering-ல் எதை எடுத்து படித்தாலும் அதற்கு இப்பொழுது கிராக்கி உள்ளது. இந்தியா அடுத்த பத்து ஆண்டுகளில் பல பெரிய கட்டிடங்களை கட்டவிருக்கிறது. கட்டிடத்துறையில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

என்னவன் விஜய்
12-01-2008, 11:52 AM
நன்றி அன்புரசிகன், Aren.
நான் இன்னும் 5,6 வருடங்களில் சிங்கபூருக்கு சென்றுவிடுவேன்,நானும் இன்னும் சிலரிடம் விசாரித்ததில் அவர்களும் இதைதாம் சொல்கிறார்கள்.