PDA

View Full Version : வயநாட்டில் வெங்காய பாய்ஸ் - நிறைவு



роородро┐
11-01-2008, 04:23 AM
அநேகமா உங்களுக்கு இந்நேரம் வெங்காய பாய்ஸ் பத்தி தெரிஞ்சிருக்கும். நான் பெங்களூர் வந்து ஏறக்குறைய மூணு வருஷத்துக்கு மேலானாலும் கல்லூரி நண்பர்களோட எங்கேயும் டூர் போனதில்லை. பார்த்தி அடிக்கடி அவன் ஆபிஸ்ல டூர் போவான். அவந்தான் அடிக்கடி சொல்லுவான். Сநாம எல்லோரும் சேர்ந்து டூர் போலாம்டாТ.

ஏதோ இந்த திட்டம் ரொம்ப நாளா ஒத்துவராமலேயே இருந்துச்சு. ஒரு மாதிரி பேசிப்பேசி எல்லோரும் போலாம்னு முடிவு பண்ணினது புதன்கிழமை. வழக்கம் போல மருது அதாங்க Сகருத்து கண்ணாயிரம்Т அக்கா வீட்டுக்கு போகணும் வரலேன்னுட்டான்.

போக்கிரி வடிவேலு மாதிரி எங்க நெலம. Сஒரு ஆளு போச்சேТ. சரி இந்த வாரமும் ஒன்னும் ஒத்து வராதுன்னு முடிவாச்சு. திடீர்னு வியாழக்கிழமை ஆபிஸ்ல இருக்கும் போது பார்த்தியிடமிருந்து போன்.

Уடேய். என் ஆபிஸ் கொலிக் ரெண்டு பேர் வர்றேங்கராங்க. இந்த வாரம் வயநாடு போலாமா?Ф

ஆபிஸ்ல ஏற்கனவே நிறைய குடைச்சல். எங்கியாவது போகணும்னு தோணினதால உடனே வர்றேன்னுட்டேன்.

Уசரி. போலாம். வேற யாரெல்லாம் போறோம். நாளைக்குள்ள ஏற்பாடு பண்ண முடியுமா?Ф

Уஅதெல்லாம் பாத்துக்கலாம்டா. மருது வரல. அடுத்து பாடிக்கு (கண்ணனை வீட்டில் எல்லோரும் பாடிசோடான்னு தான் கூப்பிடுவோம். ஆள் நம்மூர் ஆர்னால்ட் வையாபுரி மாதிரி இருப்பதால அந்த பேர்) தான் போன் போடணும். விஜய் எப்படியும் வந்துடுவான். உன் தம்பி வேற இருக்கான். ஆறு பேருக்கு ஒரு குவாலிஸ் போதும்டா. நான் பாத்துக்கறேன்Ф

ஏற்கனவே நிறைய டூர் ஆர்கனைஸ் பண்ணியிருந்ததால பார்த்திக்கு டிராவல்ஸ் எல்லாம் பழக்கம். கண்ணனும் விஜயும் வர்றேனுட்டாங்க. பார்த்தி ஹோசூர்ல தெரிஞ்ச ஒரு டிராவல்ஸ்ல புக் பண்ணிட்டான்.

வெள்ளிக்கிழமை ராத்திரி. ஆபிஸ்ல இருந்து வந்தவுடன் பத்து மணிவாக்கில் கிளம்பலாம் என்று திட்டம். பார்த்தியும் அவன் நண்பர்களும் ஏற்கனவே ரெண்டு தடவை வயநாடு போய்ட்டு வந்திருக்காங்க. என்னமோ தெரியல கேரளானால எல்லோருக்கும் தனிகுஷி.

வண்டி வந்து வீட்டு முன்னாடி தயாரா இருந்துச்சு. ரெண்டு நாள் பயணத்துக்கு தேவையான துணியெல்லாம் எடுத்தாச்சு. விஜய்கிட்டேர்ந்து போன்.

Уடேய் நான் நாளைக்கு ஆபிஸ் வரணும். அவசர வேலை வந்துடுச்சு. நீங்க போங்க..Ф

Уஎன்னடா இப்படி சொல்ற. சரி.. நாங்க கிளம்பறோம்Ф

புறப்பட்டாச்சு வயநாடு நோக்கி பயணம். மடிவாலாலேர்ந்து கிளம்பி பனஷங்கரி பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில இருக்கற கோயிலுக்கு போய் பூட்டியிருந்த கோயிலுக்கு முன்னாடி நின்னு சாமி கும்பிட்டு ( கொஞ்சம் பக்தியும் உண்டுங்கன்னா) வண்டி விடு ஜூட்.

ஆரம்பிச்சாச்சு எங்க மொக்கை. எல்லா பயலுவலும் தமிழ். மாத்தி மாத்தி அவங்க வேலைய பத்தி ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

Уடேய். . ஆமா.. அந்த எக்ஸல் ஷீட்டுல என்னடா பண்ணுவ.. எப்ப பாத்தாலும் எக்ஸல், டாக்குமெண்ட்.. நல்ல பொழப்புடாФ

Уபோடா..டேய் எக்ஸல்ல இல்லாத மேட்டரே இல்ல.. உனக்கென்ன அதப்பத்தி தெரியும்.Ф

Уஆமாமா.. எந்த பிளாட்பாரத்துல வேலை பாக்குறன்னு கேட்டா மைக்ரோசாப்ட் ஆபிஸ்னு சொல்ற. ஊரே அதுல தான் வேல பாக்குது.. ஆனாலும் உன்னையும் வச்சுகிட்டு சம்பளம் குடுக்கறாங்க பாருЕФ

Уநீ மட்டும் என்னவாம்.. HR Цல வேல பாக்குறேன்னு ஒரே சீன்னு.. நீ பயன்படுத்தற டூல் கூட எக்ஸல் மாதிரி தானேЕ பெரிய இவனாட்டம்.Ф

என்ன பண்றோம்னு அடுத்தவனுக்கு தெரியற வரைக்கும் தான் மதிப்பு. தெரிஞ்சிடுச்சுன்னா மதிக்க மாட்டாங்க. இங்க அவனவன் பாக்குற வேலை எல்லோருக்கும் தெரியும்கறதால இப்படியும் இதவிட ரொம்ப பெருமையாவும் எல்லோருடைய வேலையும் பேசப்படும்.

Уஅங்க பாரு...சுள்ளான் என்னமோ யோசிச்சிட்டு வர்றான். டேய் ரபட்ட்டிக்ஸ்..என்னடா பண்ற..Ф வேற ஒன்னுமில்லீங்க அவன் ரோபோடிக்ஸ் இஞ்சினீயர்.

Уஅதுவா.. அடிக்கடி ரோபோ டெலிவரி.. அது இதுங்கறான். போய் பாத்தா தான் தெரியும். அங்க ஷோகேஸ்ல இருக்குற ரோபோவெல்லாம் தொடைக்கற வேலையாம். இன்னிக்கு நிறைய தூசியாடுச்சாம். அதான் கவலைФ

இப்படி மொக்கையாக இரவு போயிட்டிருந்தது. மைசூர் தாண்டி பந்திப்பூர் சாலையில் வண்டி திரும்பியது. குறிஞ்சியும் முல்லையும் அந்தகாரமா இருந்தது. ரோடு வேற மோசமா இருந்ததால கொஞ்சம் மெதுவா போனோம். வழியில ஒரு இடத்துல வண்டிய நிறுத்தி இயற்கைய ஸ்நேகிச்சுட்டு திரும்ப வண்டியிலேறி கொஞ்ச தூரம் தான் போயிருப்போம். திடீர்னு ஒரு சத்தம். வண்டி குலுங்கியது. அதுЕ.

aren
11-01-2008, 09:58 AM
நல்ல ஆரம்பம் மதி. இப்படி தனியா இருக்கும்பொழுது இந்த மாதிரி டூர் போனாத்தான் உண்டு. ஜமாய்!!!

рооропрпВ
11-01-2008, 04:28 PM
சத்தியமாகப் பேய் இல்லையே????

рооропрпВ
11-01-2008, 04:29 PM
நல்ல ஆரம்பம் மதி. இப்படி தனியா இருக்கும்பொழுது இந்த மாதிரி டூர் போனாத்தான் உண்டு. ஜமாய்!!!
அனுபவமோ?

роЪро┐ро╡ро╛.роЬро┐
12-01-2008, 03:55 AM
வயநாட்டுக்கு போகும்போது கூடவே வெங்காயமும் கொண்டுபோனீர்களா...? அட அதாங்க வெங்காய பாய்ஸ் குருப்பை சொன்னேன்.ஜாலியான பயணம்தான்.அந்த மைசூரிலிருந்து ஊட்டி போகும் சாலை மிக அழகாக இருக்கும்.தொடருங்க.

роородро┐
12-01-2008, 03:59 AM
போனது வெங்காய பாய்ஸ்ல மூணு பேர்...ஆனா...அங்க வெங்காயமும் இல்ல...பெருங்காயமும் இல்லை...

போகப்போகத் தெரியும்..

ропро╡ройро┐роХро╛
12-01-2008, 04:33 AM
அடடா...நீங்களும் வயநாடு போயிருக்கீங்களா...எங்க வீட்டயும் ஆன்னா ஊன்னா வயநாடு கிளம்பற பார்ட்டி ஒன்ணு இருக்கு...வயநாடு அழகான இடம்...அப்புறம் என்ன ஆச்சு?

роородро┐
12-01-2008, 04:36 AM
அடடா...நீங்களும் வயநாடு போயிருக்கீங்களா...எங்க வீட்டயும் ஆன்னா ஊன்னா வயநாடு கிளம்பற பார்ட்டி ஒன்ணு இருக்கு...வயநாடு அழகான இடம்...அப்புறம் என்ன ஆச்சு?

:D:D:D:D
இன்னும் எழுதல... பொங்கல் விடுமுறைக்கு வீட்டில்..
மதியம் மேல எழுதறேன்..

ஒரு சந்தேகம்... மொக்கையா இருக்கும்னு தெரிஞ்சு தான் படிக்கறீங்களா..?:eek::eek::eek::eek:

ропро╡ройро┐роХро╛
12-01-2008, 05:16 AM
இல்லை மதி...நிஜமாவே நல்லாயிருக்கு...தொடருங்க...அதும் டைட்டில் ரொம்பவே நல்லாருக்கு...

சொல்லப்போனா எங்களுடைய இன்றைய நாட்களை அப்படியே பிரதி பலிக்கிறது. என் மேல் வீட்டில் ஒரு சினேகிதி இருக்கிறாள்.தமிழ் தான். அவளும் நானும் சேர்தால் அதகளம் தான்...ரெண்டு பேருக்குமே பெண்களுக்கே உரித்தான் கீச்சுக் குரல்...சுமாராகத் தான் பாடுவோம்...ஆதனால் என்ன...விம்டோவா கர்ள்ஸ் தான்...மைக்கில் பாட வேண்டியது...அதை ரெக்கார்ட் செய்து, கேட்டு ஒருவரை ஒருவர் கலாய்க்க வேண்டியது...

இருவருமே மதியம் தான் பணிக்குப் போவோம்.
காலையில் போன் வரும்...டீ குடிக்கலாம் வா என்று...டீன்னு சொல்லி யார் என்ன போட்டுக் குடுத்தாலும் குடிப்பேன்...எங்க வீட்டுக் காரரை விட சுமாராத்தான் டீ போடுவா...சரின்னு மேல போன...சலங்கை ஒலி பாட்டு ஓடிட்டிருக்கு...ஞான வினோதங்கள்...நடன சந்தோசங்கள்...விடுவமா...பூகம்பம் வர்ற வரை ஆடித்தள்ளிட்டோம். அன்னைக்கு நைட்டு...அய்யோ கால் வலிக்குது புடிச்சு விடுங்கன்னு வீட்டில இவருகிட்ட வேற வாங்கிக் கட்டிக்கிட்டேன்.

அடுத்த நாள் பிளாண்டில என் பிரண்டோட வீட்டுக்காரர் சொல்லியிருக்கார் இவர்கிட்ட...என்ன சார் நைட்டு கால் பிடிச்சு விட்டீங்களா...அப்படின்னு
இவரு ஆச்சர்யமா உங்களுக்கு எப்படித் தெரியும்ன்னு கேட்டிருக்கார்...அவரு சொன்னாராம்...எங்க வீட்லயும் இது தான நடந்ததுன்னு....இது எப்படி இருக்கு?

தலை தீபாவளி...தலைப் பொங்கல்...புது மோதிரம்...புதுத் துணி..புதுப் மனைவி... கலக்கிற சந்துரு...பொங்கலோ பொங்கல்.

роирпБро░рпИропрпАро░ро▓рпН
12-01-2008, 05:49 AM
பண்டிப்பூர் சாலையிலே குவாலிஸ் நிறுத்தி உச்சா போயிருப்பீங்க.. நீங்க உச்சா போனது ரோட்டோரமா படுத்திருந்த காட்டு யானை மேலையா இருக்கும்.

எனக்கும் காட்டு யானைகளுக்கும் இருக்குற பந்தம் இருக்கே.. அது சொன்னா புரியாது... என்னை நேரில பார்த்தீங்க, இவனெல்லாம் காட்டு யானை கூட.. அப்படினு சிரிப்பிங்க... ஆனா, அத்தான் எதுக்குமே அசராத (அ எல்லாம் போடப்படாது)சிங்கம்.

роородро┐
12-01-2008, 06:47 AM
அட..யவனி அக்கா..நீங்களும் நம்மள மாதிரி தானா...மாமா தான் பாவம்.. நீங்க ஆடுனதுக்கு அவர கொடுமை படுத்திட்டீங்க....

ஐயா..ராசா...மாமோவ்.. அதான் உச்சா போய்ட்டு தான் வண்டிய எடுத்தோம்னு சொல்லிருக்கேனே.. என்ன கொஞ்சம் புரியாத வார்த்தையா இருக்கும். நீங்க சொன்ன மேட்டர் பத்தியும் பேசிட்டிருந்தோம். என்ன பண்பட்டவர் பகுதியில கூட போட முடியாதபடி இருக்கு.. ஹிஹி

роЪрпЖро▓рпНро╡ро╛
12-01-2008, 07:10 AM
வண்டி குலுங்குச்சோ இல்லியோ எங்க நெஞ்சு குலுங்கிட்டுருக்கு ... சீக்கிரம் போடுங்கப்பு.. அடுத்த பாகத்தைத் தான்........
ஆவலுடன்
செல்வா... (தல மணியா பதிவுகளோட பாதிப்பு... :) )

роородро┐
13-01-2008, 12:06 PM
வண்டி குலுங்கியதும் ஓரக்கட்டினார் டிரைவர். Сஎன்னடா ஆச்சு கிளம்பும் போதேТன்னு எரிச்சல். அதுவும் எல்லோரும் தூங்க ஆரம்பித்திருந்த நேரம். கீழே இறங்கி போய் பார்த்தார். சுத்திலும் இருட்டு. வண்டி நின்னுட்டதால எல்லோரும் எரியும் கண்களுடன் கீழே இறங்கினோம். டிரைவர் இன்னமும் வண்டிய சுத்தி வந்துட்டு இருந்தார்.

Уஎன்னாச்சுங்க?Ф

Уஸ்பீடு பிரேக்கர் பார்க்காம வேகமா வந்துட்டேன். அதுல லெப்ட்ல சஸ்பென்ஷன் கட் ஆயிடுச்சுФ

யாருக்கும் ஒன்னும் புரியல. Сஎன்ன சொல்றார் இவர்? போக முடியுமா முடியாதா? தெளிவா சொல்ல மாட்டேங்கறாரே?Т ஒன்னு மட்டும் புரிஞ்சது எல்லோரும் தூங்கறாங்கன்னு அந்த ரோட்டில பறந்திருக்கார்.

Уசரி.. இப்ப என்ன பண்ணலாம். வண்டிய எடுக்க முடியுமா?Ф

Уபோலாம். வண்டி அடிபடாம எல்லோரும் ரைட் சைட்லேயே உக்காருங்கФ

Уசரி. இனிமே பார்த்து மெதுவா போங்கФ

ஒருவழியா எல்லோரும் ஏறி வலப்பக்கமா நெருக்கி உக்கார்ந்து வண்டி கிளம்பியது. மெதுவா 30 கி.மீ வேகத்திலேயே வண்டியை ஓட்டினார் டிரைவர். ரிப்பேர் பார்க்க கல்பேட்டா தான் போயாகணும். இப்படியே ஒரு 40-50 கி.மீ பிரயாணம் செஞ்சு கல்பேட்டா பக்கத்துல வந்துட்டோம்.

பார்த்தி தெரிஞ்ச கைட் மூலமா ரூம் புக் பண்ணிருந்தான். ஏறத்தாழ 5 மணிவாக்கில் அவருக்கு போன். பாவம்.. எங்களால அனுபவிச்சிருப்பார், அந்த குளிர்ல.
УЕ நாங்க வந்துட்டோம். எப்படி வரணும் அங்க?Ф

У..Ф

கைட்கிட்டேர்ந்து போன் நம்பர் வாங்கி நாங்க தங்க ஏற்பாடாயிருந்த இடத்து ஆளை புடிச்சோம். அந்த நேரத்துல கார் எடுத்துட்டு வந்து எங்கள கூட்டிட்டு போனார். அது வீட்டையே கொஞ்சம் பகுதிகளா பிரிச்சு கெஸ்ட் ஹவுஸ் மாதிரி ஆக்கிருந்தாங்க. போனதும் சூடா டீ. ராத்திரி நல்லா தூங்காததால கொஞ்ச நேரம் குட்டித் தூக்கம் போடலாம்னு எல்லோரும் அனந்த சயனம்.

ரொம்ப நேரமாச்சுன்னு பதறி அடிச்சு நான் எழுந்தப்போ மணி ஏழு. மத்த எல்லோரும் நல்லா தூங்கிட்டு இருந்தாங்க. எந்திருச்சு காலைக் கடன்களை முடிச்சிட்டு வெளியே வந்தாЕஸ்ஸ்ஸ்ஸ்ஸ்Е. பனித்துளி தழுவிய இலைகளும், கண்ணுக்கு குளிர்ச்சியா பச்சை மரங்களும், சில்லென்ற காற்றும்..இடமே ரம்மியமாய் இருந்தது. கீச்கீச்சென்ற பறவை ஒலிகள். அது ஒரு சுகானுபவம். பெங்களூரில் கிடைக்காது. அனுபவிச்சிட்டு நேரமாச்சுன்னு சுரீர்னு உறைக்க அவசரமாய் உள்ளே ஓடினேன். கஷ்டப்பட்டு எல்லோரையும் எழுப்பறத்துக்குள்ள நேரமாயிடுச்சு.

அதுக்குள்ள கைடும் வந்துட்டார். மறுபடியும் சூடாய் டீ வந்தது. குடிச்சிக்கிட்டே எங்க போலாம்னு பேச ஆரம்பிச்சோம். ஏதேதோ இடத்துக்கு போலாம், சீதோஷணம் நல்லா இருக்குன்னு சொன்னார். வண்டி சஸ்பென்ஷன் போனது நினைவுக்கு வர அவரை டிரைவருடன் வண்டியில் அனுப்பி பக்கத்து வொர்க் ஷாப்பில் சரி பண்ண சொல்லி விட்டு எல்லோரும் கிளம்ப ஆயத்தமானோம். குளித்து கிளம்பியது பசி பயிற்றைக் கிள்ள பொடிநடையா நடந்து பக்கத்துல இருந்த ஹோட்டலில் காலை சிற்றுண்டி.

போய் உக்கார்ந்தவுடன் Сஎன்ன வேண்டுமென்றுТ உபசரிப்பு. தண்ணி கேட்டா சூடா ஜீரகத் தண்ணி சிவப்பு கலர்ல. எப்படியோ சுடசுட எல்லாம் சாப்பிட்டு மறுபடியும் தங்கியிருந்த இடத்துக்கே வந்தோம்.
அன்று ஏதோ இந்தியா பங்கு பெற்ற ஒரு முக்கிய கிரிக்கெட் போட்டி. எல்லோரும் சுவாரஸ்யமா பாத்துட்டு இருந்தோம் மணி ஆனதையும் கவனிக்காமல். நேரமாக ஆக ஒவ்வொருத்தனா முணுமுணுக்க ஆரம்பிச்சாங்க.

Уடேய்..போய் 2 மணி நேரமாகப் போகுது. என்னாச்சுன்னு கேளு?Ф

எப்போ டிரைவருக்கு போன் போட்டாலும் Сஇன்னும் அஞ்சு நிமிஷம், இன்னும் பத்து நிமிஷம்Т இது தான் பதில். எல்லோருக்கும் பொறுமை போக ஆரம்பிச்சிடுச்சு. சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.

Уஇந்த மேட்ச் பாக்கறதுக்காகவா இங்க வந்தோம்.. அந்தாள கூப்பிட்டு என்னான்னு கேளுடா..!Ф

நிலைமை முத்திப் போய் ஒருவழியா அந்த கைட்டை பிடிச்சு வண்டியையும் டிரைவரையும் அங்கியே விட்டுட்டு வேற இரு ஜீப் பிடிச்சு வர சொன்னோம். எரிச்சலுற்ற முகம் மற்றும் மனதுடன் மதிய உணவுக்காக வயிறு ஏங்க பேரம் பேசி ஜீப்பில் ஏறினோம்.

அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. விதி அங்க கையைக் கட்டி உட்கார்ந்திருந்தது. குறிப்பா அது என்னையும் பார்த்தியையும் பார்த்து சிரித்தது.

роЪро┐ро╡ро╛.роЬро┐
13-01-2008, 12:48 PM
போன ஜென்மத்துல விதிக்கு பக்கத்துவீட்டுக்காரராய் இருந்து உங்க வீட்டுக் குப்பையை அவங்க வீட்ல கொட்டியிருப்பீங்க அதான் இந்த ஜென்மத்துல எங்க போனாலும் விதி உங்களையே குறி வெச்சு டர்ரியலாக்குதுன்னு நெனைக்கிறேன்.விதியால் மதி நொந்த கதையை சொல்லுங்க...

рооропрпВ
13-01-2008, 02:00 PM
அடடா.. இப்படி ஒரு இரத்தக் கண்ணீர் ஸ்டோரி உங்க்ள் பயனத்தின் பின்னால் உள்ளதா??? பாவமாக உள்ளது!!!!

mukilan
13-01-2008, 04:03 PM
மதி நான் முழுசாப் படிச்சிட்டுத்தான் கருத்து கந்தசாமி ஆவேனாக்கும்.

роЬрпЖропро╛ро╕рпНродро╛
13-01-2008, 04:04 PM
ஹி...ஹி...ஹி... மதி நல்லா சுவராசியமாகத்தான் சொல்றீங்க.... சரி தொடரந்து சொல்லுங்க....!

роородро┐
17-01-2008, 02:20 AM
பேரம் பேசி ஜீப்பை எடுத்ததும் அடுத்த திட்டம் மீன்முட்டி அருவி. எல்லோரும் பசி மயக்கத்தில் இருந்ததால வழியில் ஒரு இடத்தில் நிறுத்தி சூப்பரான மீன் குழம்புடன் சாப்பாடு. உண்ட மயக்கத்தில் மறுபடி பயணம். வழியில் குடிக்க ரெண்டு தண்ணி பாட்டில்கள் வேறு. கூட வந்த கைட் அந்த அருவிய பத்தி ஓவரா சொல்லிக்கிட்டே வந்தாரு. டிரெக்கிங் போகணும் அப்புறம் தான் அருவி பக்கத்துலேயே போக முடியும்.

Уஎவ்ளோ தூரம் இருக்கும்..அங்க போய் சேர?Ф

Уஅது இருக்கும்.. ஒரு ரெண்டு கிலோமீட்டருக்கும் மேல..ஒத்தயடி பாதையில தான் போகணும். நல்லா ஸ்டீப்பா இருக்கும்Ф

அப்போ தான் எல்லோருக்கும் உறைச்சுது. எல்லோரும் ஷூவை பெங்களூரிலிருந்து வந்த குவாலிஸ்லியே வச்சிருந்தோம். இப்போ செருப்புக் காலோட தான் போறோம். சரி. பரவாயில்ல நடப்பது நடக்கட்டும்.

எங்கெங்கோ பாதையிலே திரும்பி ஒரு இடத்துல போய் ஜீப் நின்னுது. அந்த பாதையில போனதுல சாப்பிட்ட அரைமணி நேரத்துலேயே செரித்து விட்டிருந்தது. இடம் அவ்ளோ ரம்மியமா இருந்தது. நேரம் மதியம் இரண்டரை. ஆங்காங்கே பனிமேகங்கள் நம் தலை தொட்டு நின்றது. சில்லுன்னு ஒரு காத்து உடம்புக்குள்ள ஊடுருவி உடல் ரோமங்கள் சிலிர்க்க ஆரம்பித்து விட்டது. கொஞ்ச நேரம் அங்க நின்னு கண்ணுக்கெட்டிய தூரம் இயற்கையை அனுபவித்துவிட்டு புறப்பட ஆரம்பித்தோம்.

அங்கிருந்து வலப்புறம் திரும்பி பின் இடப்புறம் திரும்பியவுடன் ஒற்றையடிப் பாதை ஆரம்பித்தது. அங்கிருந்த சிறுவன் அந்த வழியா போகக்கூடாதுன்னு மலையாளத்தில் தகராறு பண்ணினான். Сபோகக்கூடாதுன்னா போர்ட் வைய்யிடாТன்னு அவன்கிட்ட சொல்லிட்டு அவர் முன்னாடி நடக்க ஆரம்பிச்சார்.
நடக்க ஆரம்பித்த நூறடிக்குள்ளேயே எதுத்தாப்புல ஒரு கூட்டம் வந்தது. ஏதோ காலேஜோ ஐ.டி. கம்பெனியோ ஆண்களும் பெண்களும் சரிசமமாய் இருந்தனர். அவர்கள் முகத்தைப் பார்த்தாலே பேயறைந்தது போலிருந்தது. ஆளுக்கொரு கழியுடன் வந்தனர். அநேகத்திற்கும் களைத்திருந்தனர்.

Сபாதை ரொம்ப குறுகலானது. அங்கங்க வழுக்கிவிடும். பத்திரமா ஏதாச்சும் கழி எடுத்துட்டு போங்க. இல்லாட்டி கஷ்டம்Т

அவங்க அனுபவத்தில எங்களுக்கு அறிவுரை வேறு. அவங்களை பாத்தவுடனே முடிவாயிடுச்சு. எப்படியும் இன்னிக்கு ஒழிஞ்சிடும். ஈரமாயிருந்த பாதையினூடே எங்க கால்கள் போக ஆரம்பித்தது. வழியில் கிடந்த இரண்டு மூன்று கம்பு கழிகளை பொறுக்கிக் கொண்டோம்.

போகும் பாதை மிகக் குறுகலாகவும் வழுக்குத் தன்மையுள்ளதாகவும் இருந்தது. ஒன்றிரண்டு இடத்தில் செங்குத்தாய் வேற்ய் இருந்தது. யாராவது ஒருத்தர் பத்திரமாய் கீழிறங்கி மற்றவரை இறங்க சொல்லி சென்றோம்.

இன்னுமோர் இடத்தில் மிக பயங்கரம். ஒற்றைக் காலை மட்டுமே வைக்கும்படி பாதை. நீட்டிக் கொண்டிருந்த பாறையில் முடிந்தது. அப்புறம் ஒன்றரை அடிக்கு ஒன்றுமில்லை. அப்புறம் கல்லுடன் சேர்ந்து பாதை இருந்தது. இங்கிருந்து அந்த பாறையை பிடித்துக் கொண்டே அடுத்த பாறைக்கு தாவ வேண்டும். சற்று தப்பினால் கீழே விழுந்து பலத்த அடிபடும். மனதில் என்ன தான் உற்சாகமிருந்தாலும் சிறிது எச்சரிக்கையுடன் ஒவ்வொருவராய் கடந்தோம்.

அடுத்ததா ஒரு சின்ன அருவி போன்ற தோற்றம். பார்ப்பதற்கு இயற்கை அன்னை போட்ட செட் மாதிரியே. ஒரு அருவி மினியேச்சர்ல இருக்கறமாதிரி. அங்கங்க நின்னு போட்டோ எடுத்துட்டு நடையை கட்டினோம். மற்றவரெல்லாம் சற்று அசந்து மெல்ல நடை போட ஆர்வக் கோளாரில் நானும் பார்த்தியும் வேகமாக நடை போட்டோம். கைடும் மற்றவருடன் வந்து கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரத்திலேயே அருவி பலமாய் கொட்டும் சத்தமும் சாறலும் உணர முடிந்தது. மனதில் சந்தோஷப்பறவை சிறகடிக்க எங்க நடையை வேகப்படுத்தினோம். இதுவரை ஏறி இறங்கிக் கொண்டிருந்த பாதை அருவியருகில் இறங்க ஆரம்பித்தது. அருவி கண்ணுக்குத் தெரிந்ததும் ஏற்பட்ட உணர்வு இருக்கிறதே. பெரியதாய் ஆக்ரோஷத்துடன் சீறி வரும் அருவியின் பாதி உயரத்தில் பக்கவாட்டில் நின்றிருந்தோம். சாறல் அள்ளித் தெளித்தது. சாறல் பொங்கிய அருவி கீழே விழுந்து உற்சாகத்துடன் துள்ளி ஓடியது. நாங்க ரெண்டு பேரும் நின்றிருந்த இடத்திருலிருந்து பத்தடி தூரத்திலிலேயே அருவி ஓட்டம். கிட்டத்தட்ட அம்பது அடி இருக்கும். கீழே விழாமலிருக்க வேலியோ எதுவுமில்லை கரணம் தப்பினால் மரணம். சாறல் பட்டு அந்த இடமே சேறாயிருந்தது.

நாங்க நின்றிருந்த இடத்துக்கு கொஞ்சம் தள்ளி கீழே ஒரு மரம் இருந்தது. அங்கு போய் இன்னும் பக்கத்தில் அருவியை பார்க்கலாம் என்றொரு எண்ணம் தோன்றியது. ஆனந்த பரவசத்தில் மதி மயங்கி முன்னே ஒரு அடி வைத்தேன்.
அவ்வளவு தான். செருப்பு கால்கள் பதிய இடமில்லாமல் முன்னே வழுக்க்க்க்Е..

роЪро┐ро╡ро╛.роЬро┐
17-01-2008, 03:36 AM
குறுகலான மலைபாதையில் ஏறுவதை விட இறங்குவது மிகக்கடினம்.அருவியை பார்க்கும் ஆவலில் எல்லோரும் போயிரூக்கிறீர்கள்.
ஆபத்து என்று தெரிந்தும் அசராமல் போனது தைரியம்தானென்றாலும் கொஞ்சம் எச்சரிக்கையும் அவசியம்.மதிக்கு ஒன்றும் ஆகியிருக்காதென்றாலும் அந்த நேரத்தில் மனசுக்குள்ள ஒரு பக் வந்திருக்கும்.நல்லா கொண்டு போறீங்க உங்க பயணத்தை.இன்னும் சொல்லுங்க மதி.

роородро┐
17-01-2008, 04:03 AM
உண்மைதான் சிவா.ஜி. கொஞ்சம் அஜாக்கிரதையாய் இருந்துட்டேன். தப்பியது தெய்வாதீனம்...

роЬрпЖропро╛ро╕рпНродро╛
17-01-2008, 05:38 AM
செம த்ரிலிங்கான பயணம்தான் இல்ல மதி...! நல்ல சஸ்பென்சா கொண்டு போறீங்க.... அப்புறம் என்ன ஆச்சு...! நாங்க களக்காட்டு மலைக்மேல் 'செங்கல்தேரி' என்னும் இடத்துக்கு போன மாதிரி இருக்கு உங்க கதை.... அதப்பத்தி சீக்கிரமே நானும் எழுத ஆரம்பிக்கப்போறேன்.

роЪро┐ро╡ро╛.роЬро┐
17-01-2008, 05:51 AM
ஆஹா...ஜெயஸ்தாவும் பயணக்கட்டுரை
ஆரம்பிக்கப்போறாரா....தூள்தான்.நிறைய இந்தமாதிரி கட்டுரைகள் எழுதுங்க.இன்னும் பார்க்காத இடங்கள் பல இருக்கு.இந்த கட்டுரைகளின் மூலமா நிறைய விவரங்கள் கிடைக்கும்.

роЬрпЖропро╛ро╕рпНродро╛
17-01-2008, 07:03 AM
ஆஹா...ஜெயஸ்தாவும் பயணக்கட்டுரை
ஆரம்பிக்கப்போறாரா....தூள்தான்.நிறைய இந்தமாதிரி கட்டுரைகள் எழுதுங்க.இன்னும் பார்க்காத இடங்கள் பல இருக்கு.இந்த கட்டுரைகளின் மூலமா நிறைய விவரங்கள் கிடைக்கும்.

ஆஹா.... ஆரம்பிக்கறதுக்கு முன்பே வரவேற்புக்கொடுத்து ஊக்கமளிக்கிறீர்களே..... ஆனால் அதுல மிகமுக்கியான உண்மைச் சமாச்சரங்களை எல்லாம் 'சென்சார்' பண்ணித்தான் எழுதவேண்டியிருக்கும். காரணம் என்னவென்றால் என் தம்பியுடன் நம் மன்றத்தின் லொள்ளுப்பார்ட்டி ஒருத்தார் இப்போ பழக ஆரம்பிச்சுட்டார். நான் ஏதாவது எழுதி அவரு என் தம்பியிடம் ஏதாவது போட்டுக்கொடுத்திட்டா....? அதான் கொஞ்சம் பயமா இருக்கு...!!!

роородро┐
17-01-2008, 07:04 AM
அட..
நடத்துங்க ஜெயா...
இங்க மட்டும் அப்படியேவா எழுதறோம்... எல்லாத்தையும் எழுதினா பண்பட்டவர் பகுதியில் கூட போட முடியாது..

роЪрпЖро▓рпНро╡ро╛
17-01-2008, 07:42 AM
தமிழ் மன்றத்தோட வெற்றியே....... எழுதத் தெரியாத என்ன மாதிரி புச்சியமா வரவங்களயும் ..... நாமளும் இந்த மாதிரி எழுதணும் அப்டிண்ணு ஏங்க வைக்குற.... சிறந்த எழுத்தாளர்கள் நிறைய பேர தனக்குள்ள வச்சுருக்குறது தான். நான் அறிமுகப்படுத்துறவங்ககிட்ட எல்லாம் சொல்றது இது ஒண்ணுதான் "நீங்க எதும் எழுதணும்ணு கவலபடாதீங்க ... முதல்ல வாசிக்க ஆரம்பிங்க... உங்கள அறியாமலே நீங்க எழுத ஆரம்பிச்சுடுவீங்க .... அந்த சக்திய .. உணர்வைதூண்ட கூடிய சிறந்த எழுத்தாளர்கள் .. நிறஞ்சிருக்காங்க....."
அப்படிப் பட்டவங்கள்ள ஒருத்தர் மதி...... அடுத்து என்ன ஆச்சு..சீக்கிரம் சொல்லுங்க.

роУро╡ро┐ропройрпН
17-01-2008, 08:05 AM
அனுபவிங்க ராசா அனுபவிங்க, இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இப்படி ஜாலியானு.........

விதி உங்களைப் பார்த்துச் சிரிக்குது....!! :D

அதுசரி, அது என்ன "வய நாடு", கேரளாவை அப்படியும் சொல்லுவீங்களா...???

роЪро┐ро╡ро╛.роЬро┐
17-01-2008, 08:17 AM
அனுபவிங்க ராசா அனுபவிங்க, இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் இப்படி ஜாலியானு.........

விதி உங்களைப் பார்த்துச் சிரிக்குது....!! http://www.tamilmantram.com:80/vb/

அதுசரி, அது என்ன \"வய நாடு\", கேரளாவை அப்படியும் சொல்லுவீங்களா...???

அது எப்படி ஓவியன்? விதி உங்களைப் பாத்து இப்ப ஒய்யாரமா சிரிச்சிக்கிட்டிருக்கே அப்டியா...?

வயநாடுங்கறது கேரளத்தின் ஒரு பகுதி.இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம்.

роЪро┐ро╡ро╛.роЬро┐
17-01-2008, 08:19 AM
காரணம் என்னவென்றால் என் தம்பியுடன் நம் மன்றத்தின் லொள்ளுப்பார்ட்டி ஒருத்தார் இப்போ பழக ஆரம்பிச்சுட்டார். நான் ஏதாவது எழுதி அவரு என் தம்பியிடம் ஏதாவது போட்டுக்கொடுத்திட்டா....? அதான் கொஞ்சம் பயமா இருக்கு...!!!

கவலைப் படாதீங்க ஜெயஸ்தா....அந்த மாதிரியெல்லாம் எதுவும் நடக்காது.நீங்க சின்னதா கோடு மட்டும் போட்டுக் காட்டுங்க....நாங்க ரோடு போட்டுக்கறோம்...ஹி...ஹி...

роУро╡ро┐ропройрпН
17-01-2008, 08:35 AM
அது எப்படி ஓவியன்? விதி உங்களைப் பாத்து இப்ப ஒய்யாரமா சிரிச்சிக்கிட்டிருக்கே அப்டியா...?.

விதியை வெல்ல நான் என்ன மதியா??? :lachen001:

роЪро┐ро╡ро╛.роЬро┐
17-01-2008, 08:37 AM
அப்ப நீங்க க்ளீன் போல்டா(என்னை மாதிரியே...).....ம்....மதி என்ன செய்யப்போறார் பார்ப்போம்.

роЗродропроорпН
17-01-2008, 08:45 AM
ஆனால் அதுல மிகமுக்கியான உண்மைச் சமாச்சரங்களை எல்லாம் \'சென்சார்\' பண்ணித்தான் எழுதவேண்டியிருக்கும். காரணம் என்னவென்றால் என் தம்பியுடன் நம் மன்றத்தின் லொள்ளுப்பார்ட்டி ஒருத்தார் இப்போ பழக ஆரம்பிச்சுட்டார்.

யார்ங்க அது..? எனக்கு மட்டும் சொல்லுங்களேன்..!! நான் யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டேன்..!! :icon_ush::icon_ush:

роУро╡ро┐ропройрпН
17-01-2008, 08:45 AM
அப்ப நீங்க க்ளீன் போல்டா.

இல்லை, சிக்சர் அடிக்க போயி "கேச்" கொடுத்திட்டேன்..... :)

роУро╡ро┐ропройрпН
17-01-2008, 08:49 AM
யார்ங்க அது..? எனக்கு மட்டும் சொல்லுங்களேன்..!! நான் யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டேன்..!! :icon_ush::icon_ush:

அப்போ தூர நின்று ஃபோனிலே சொல்லுவீங்களோ.....??? :eek:

роЗродропроорпН
17-01-2008, 08:52 AM
அப்போ தூர நின்று ஃபோனிலே சொல்லுவீங்களோ.....???:eek:

ஐயா தமிழறிஞர்களே.. என் செந்தமிழை பிரிச்சி மேயுற ஓவியனின் அழிச்சாட்டியத்தை யாரும் அடக்கவே மாட்டீங்களா..?:sauer028::sauer028:

роЬрпЖропро╛ро╕рпНродро╛
17-01-2008, 12:46 PM
அப்போ தூர நின்று ஃபோனிலே சொல்லுவீங்களோ.....??? :eek:


ஐயா தமிழறிஞர்களே.. என் செந்தமிழை பிரிச்சி மேயுற ஓவியனின் அழிச்சாட்டியத்தை யாரும் அடக்கவே மாட்டீங்களா..?:sauer028::sauer028:

:lachen001: :lachen001: :lachen001: :lachen001:

роЪрпБроХроирпНродрокрпНро░рпАродройрпН
19-01-2008, 11:34 AM
வெங்காய பாய்ஸ்-ன்னு சரியாதான் தலைப்பு வச்சிருக்கீக மதி..!

உரிக்க உரிக்க கடைசியில ஒன்னுமே இருக்காது..வெங்காயம்.. அதுமாதிரி சஸ்பென்ஸ் வச்சி வச்சி எழுதிபுட்டு கடைசியில நல்லா அருவியில குளிச்சிட்டு வந்தோன்னு எழுதி மொக்கைய போட்டுருவாரோ நம்ப மதின்னு எங்க மதியெல்லாம் கல்ங்குது மதி..! வந்து மிச்ச சொச்சத்தையும் சொல்லிட்டு போவீகளா..இப்படி இழு இழுன்னு இழுத்துக்கிட்டு..ஹி..ஹி..!

ропро╡ройро┐роХро╛
19-01-2008, 06:13 PM
வெங்காய பாய்ஸ்-ன்னு சரியாதான் தலைப்பு வச்சிருக்கீக மதி..!

சொல்லிட்டு போவீகளா..இப்படி இழு இழுன்னு இழுத்துக்கிட்டு..ஹி..ஹி..!

இப்படியெல்லாம் சொல்லக்கூடாது சுகந்தா...அவரு இழுக்கற வரை இழுக்கறது அவரோட உரிமை...உனக்கு ஜெலூசில் வேணுமான என்னக் கேள்...வயிறு பர்ன்ன் ஆகதற எல்லாம் இப்படி பப்ளிக் பண்ணப்படாதோன்னோ...

நீங்க இழுங்க மதி...புல் ரைட்ஸ் இருக்கு உங்களுக்கு....

роородро┐
20-01-2008, 03:49 AM
இப்படியெல்லாம் சொல்லக்கூடாது சுகந்தா...அவரு இழுக்கற வரை இழுக்கறது அவரோட உரிமை...உனக்கு ஜெலூசில் வேணுமான என்னக் கேள்...வயிறு பர்ன்ன் ஆகதற எல்லாம் இப்படி பப்ளிக் பண்ணப்படாதோன்னோ...

நீங்க இழுங்க மதி...புல் ரைட்ஸ் இருக்கு உங்களுக்கு....

ஹிஹி.. என்னைய நல்லா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க.. தாங்க்ஸ்..
அப்புறம் என்ன நடந்ததுன்னு.. இன்னிக்கு மாலை இல்லை நாளை எழுதறேன்.. கொஞ்சம் பிஸி..:D:D:D

роородро┐
28-01-2008, 02:09 PM
அந்த நொடியில் ஒன்னுமே புரியவில்லை, என்ன நடக்குதுன்னு. ஒரு கால் மட்டும் வானத்துல பறக்குது.. இன்னொரு கால் சேத்துல வழுக்குது. பத்தடி தூரத்திலேயே பள்ளம் இருக்குது. அருவியின் சாரல் கண்ணாடியில் தெரிக்குது. என்ன சொல்ல? பயம்ங்கற உணர்வே இல்லை. அந்த நொடியில் ஏதோ மிதக்கற உணர்வு. அதுக்குள்ள சொர்க்கத்துக்கு வந்தாச்சா..?

காற்றில் அலைமோதிய கைகளோடு சேர்ந்து முதுகும் தரையில் மோத கொஞ்சமே இருந்த புல்லும் கையோடு வர தட்டுத்தடுமாறி பக்கத்திலிருந்த கடைசி செடியை பிடித்து கையெல்லாம் இலையாக மல்லாந்தேன். இருக்கும் ஒரே பிடிப்பு அந்த இலைகள் தான். அதிர்ச்சியிலிருந்த பார்த்தி கொஞ்சம் சுதாரித்தான். பலமாய் செடியை பிடித்துக் கொண்டே அவன் கையை பிடித்து கொஞ்சம் கொஞ்சமாய் எழத் தொடங்கினேன். மறுபடி வழுக்கிற்று. இம்முறை முட்டிக்காலை அழுந்தப் பதித்து தப்பித்தேன். இருதய துடிப்பு எவ்ளோ இருந்துதுன்னு சத்தியமா தெரியல. ஆனா தாறுமாறா எகிறிக்கிட்டு இருந்துச்சு. கஷ்டப்பட்டு எழுந்து நின்னா உலகம் ரம்மியமா தெரிஞ்சுது. ஏதோ வானலோகப் பயணத்த பாதி வரைக்கும் போய்விட்டு வந்த மாதிரி. அருவி இன்னும் அழகா தோணுச்சு. பசுமை இன்னும் அதிகமாயிட்டு போல. சிவப்பாய் ஓடியிருக்க வேண்டிய அருவி இப்போது மண்ணை மட்டும் அடித்து சென்றுக் கொண்டிருந்தது.


http://img525.imageshack.us/img525/2198/dsc00492bb7.jpg
விழுந்த இடத்திலிருந்து சில அடி தொலைவில் பள்ளம்

அருவி சாரலில் முகம் காட்டி கையில் நீர் பிடித்து கண்ணாடி துடைத்தேன். காலில் இருந்த செருப்பை கவனமாக கழட்டி வைத்தேன். அங்கிருந்த நீண்ட கொம்பை எடுத்து துணைக்கு வைத்துக் கொண்டேன். இம்முறை அருவிக்கு மிகப் பக்கத்திலிருந்த மரம் நோக்கி பார்த்தி செல்வதற்கு முனைந்தான். ஒரு அடி தான் எடுத்து வைத்திருப்பான். அதே சேறு..அதே வழுக்கல். அதே மாதிரி விழுந்தான். இம்முறை என் கை பற்றிவிட்டான். பக்கத்திலிருந்ததால் கவனமாக தப்பி விட்டான். ரெண்டு பேருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

கொஞ்ச நேரம் அங்கேயே நின்றிருந்தோம். பயம் சுத்தமாக இல்லை. இனி எதுவும் எங்களை ஒன்றும் செய்யாதென்ற குருட்டு தைரியம். எப்படியும் பக்கத்திலிருந்த மரம் நோக்கி போவதென்று முடிவு செய்தோம். சரி. கைடு வரட்டும் என காத்திருந்தோம்.


http://img525.imageshack.us/img525/2335/dsc00489pp0.jpg
ஆக்ரோஷமாய் மீன்முட்டி அருவி

பத்து நிமிஷத்திலேயே கைடுடன் மற்றவர் வந்தனர். எங்கள் சேறு பூசிய டி-சர்ட்டுகளை பார்த்து என்னாயிற்று என வினவினர். நடந்ததை சொன்னதும் கைடு,

Уநல்லவேளை தப்பிச்சீங்க.. இந்த இடத்துல விழுந்து நிறைய பேர் பரலோக ப்ராப்தி அடஞ்சிருக்காங்கФ

சுத்தம். கண்டத்துலேர்ந்து தப்பிச்சாச்சு. அப்புறம் அவரிட கெஞ்சி கூத்தாடி அந்த மரம் பக்கத்திலே போகணும்னு சொன்னோம். பெரிய கழிய வச்சுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சம் அங்க கூட்டிட்டு போனார். நானும் பார்த்தி மற்றும் பார்த்தி நண்பன் மூன்று பேரும் பார்த்து பார்த்து மரம் பக்கம் போய் நின்று போட்டோகள் எடுத்தாயிற்று.

அடுத்து என்ன இனி திரும்பும் படலம் தான். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு என்றெண்ணி திரும்ப ஆரம்பித்தோம். அப்போதும் தெரிந்திருக்கவில்லை. இன்னுமோர் கண்டம் காத்திருக்கிறது என்று.

роЬрпЖропро╛ро╕рпНродро╛
29-01-2008, 04:50 AM
ஆஹா மதி படம் போட்டு கதை சொல்ல ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் எழுத்துக்கு படமே தேவையில்லை. நீங்கள் விவரிப்பதில் எங்கள் மனக்கண்ணில் காட்சி அப்படி நிழற்படமாய் ஓடுகிறது. இருந்தாலும் படமும் நன்றாகத்தான் இருக்கிறது. என்ன கஞ்சத்தனம் இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதுங்கள்....! (பணிப் பளு என்றெல்லாம் சும்மா சல்ஜாப்பு சொல்லக்கூடாது.... நம்ம பணியே இதுதானே.... ! :icon_b: )

роЪрпЖро▓рпНро╡ро╛
29-01-2008, 05:40 AM
அடப்பாவி மக்கா...... பாத்து சூதானமா இருந்துக்கங்கப்பூ..... பாவம் ஒரு கன்னி கழியாத வாலிபப்பய.... அதுக்குள்ள அந்தரத்துக்கு போனா அப்புறம் அவரையே... நம்பி இருக்குறவங்க கதி என்ன ஆகுறது. பதைக்க வைத்துவிட்டீரே.... அதோடு.... அங்கே செல்லவேண்டும் என்ற ஆசையையும்..... ஹி..ஹி.

роЪро┐ро╡ро╛.роЬро┐
29-01-2008, 05:46 AM
பத்தடியில பள்ளம்.....தள்ளிப் போயிருந்தா அவ்ளோதான்....இவருக்கு பறக்கற மாதிரி இருந்ததாம்....அடப்பாவிமக்கா.....ஜாலிப் பயணத்துல காலியாக இருந்தீங்களே....கொஞ்சம் சாக்கிரதையா போகப்ப்டாது...??

படங்கள் சூப்பர்.போகனும்.எனக்கும் போகனும்.உடனே போகனும்.கையோட ஒரு கம்பையும் எடுத்துக்கிட்டுப் போகனும்.
ஆவல் வந்துடிச்சி ஆசையா போகப்போறேன்.

роородро┐
29-01-2008, 05:59 AM
அப்போ ஒன்னும் தெரியல.. திரும்ப நினைச்சு பாக்கும் போது தான் பகீர்ங்குது.. பரவாயில்ல... எல்லாமே அனுபவம் தானே.. வீர சாகஸமெல்லாம் இல்லை.. ஆர்வக்கோளாறு தான்.

ропро╡ройро┐роХро╛
29-01-2008, 09:42 AM
இன்னும் ஒரு கண்டமா...
கண்டம் எல்லாம் உன்ன மாதிரி ஆளைப் பாத்தா கண்டம் விட்டு கண்டம் ஓடிடுமே...அப்புறம் என்ன ஆச்சி?

роЬрпЖропро╛ро╕рпНродро╛
29-01-2008, 03:23 PM
இன்னும் ஒரு கண்டமா...
கண்டம் எல்லாம் உன்ன மாதிரி ஆளைப் பாத்தா கண்டம் விட்டு கண்டம் ஓடிடுமே...அப்புறம் என்ன ஆச்சி?

அதானே...! கண்டத்தையே, உப்புக்கண்டம் போடக்கூடியவரு நம்ம மதி... அவருக்கே ஒரு கண்டமா? :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

роородро┐
31-01-2008, 01:22 PM
வெற்றிகரமாக மறுபடியும் மலையேறி இறங்கும் படலம். நீண்ட தூரம் நடந்திருந்ததால் கால்கள் கெஞ்சி கூத்தாட ஆரம்பித்திருந்தன. இன்னும் நீண்ட தூரம் போகணுமே என்று மலைப்பு வேற. வழியில் ஒரு ஓடை மாதிரி இருந்த இடத்தில் இறங்கி கை, கால், முகம் கழுவி, டீ-சர்ட்களில் இருந்த சேற்றினை அலம்பி புறப்பட்டோம். மூச்சை பிடித்துக் கொண்டே Сஇதோ வந்துடும், அதோ வந்துடும்Тனு ரணகளப் பட்டாச்சு. அப்போ தான் நாங்க இறங்க ஆரம்பிக்கும் போது எதிரில் வந்த கோஷ்டியின் முகங்கள் ஞாபகம் வந்தது. இப்போ எங்களுடையதும் அதே மாதிரி தான் இருந்தது.

ஜீப் பக்கத்தில் வருகையில் அங்கிருந்த ஒரே ஒரு பொட்டிக் கடையில் மோர் வாங்கி குடித்து புறப்பட்டோம். மறுபடி ஜீப் பயணம். நல்ல களைப்பு. எல்லோர் முகத்திலேயும் தெரிந்தது. அடுத்து எங்க போகலாம்னு எல்லோருக்கும் ஒரே யோசனை. மணி வேறு ஆறு தாண்டி விட்டிருந்தது. இனி எங்கே போனாலும் ஒன்னும் பார்க்க முடியாது.

Уபேசாம ரூமுக்கே போய் குளிச்சிட்டு சாப்டுட்டு தூங்க வேண்டியது தான்.Ф

Уபோடா இவனே.. இவ்ளோ தூரம் வந்துட்டு தூங்கறதாம். எங்கியாவது வெளியே நடந்து போய்ட்டு வருவோம்.Ф

Уஏன் இது வரைக்கும் நடந்தது போதாதா? இனியும் நடந்தா செத்திருவேன். என்ன வீட்டில எறக்கி விட்டுடுங்க.Ф

Уடேய்.. உடம்பு வலிக்கு எங்கியாவது மசாஜ் செண்டர் போனா என்ன?Ф ஒருவன் கண்ணடித்தான்.

கைட் சொன்னார். Уஇங்க நல்ல செண்டர் ஒன்னு இருக்கு. ஆயுர்வேத ஹாஸ்பிடல். நல்லா மசாஜ் பண்ணிவுடுவாங்க. ஏற்கனவே மசாஜ் பண்ணிருக்கீங்களா?Ф
இரண்டு பயலுவ தலையாட்டினாங்க. குற்றாலத்துல பண்ணிக்கிட்டாங்களாம். அங்க போய் அவங்ககிட்ட பேசி இருந்த ரெண்டு ரூமுக்குள்ள ரெண்டு பேர் போயிட்டாங்க.

இனியென்ன பண்ண. ஒரு மணி நேரம் அங்கியே காத்திருக்கறதுக்கு பதிலா வெளியே வந்தோம். இருந்த தெருவோரக் கடையில இரண்டு ஆம்லேட் வாங்இ சாப்டுட்டு மறுபடி நடை. அங்கிருந்த பேக்கரியில் தேன்ல ஊற வைத்திருந்த பெரிய நெல்லிக்காயைப் பார்த்து வாயிலும் ஊற ஆரம்பித்துவிட்டது. ஆளுக்கு வாங்கி ரெண்டு முழுங்கிவிட்டு கேரள ஸ்பெஷல் டீயையும் குடிச்சு வெளியே வரும் போது மழை தூற ஆரம்பித்தது. பாதி நனைந்தும் நனையாமலும் அந்த இடத்திற்கு போயாச்சு.

அங்க போய் மறுபடி மசாஜ் பண்ணிக்கிட்டு (உண்மையிலேயே கன்னாபின்னானு அடிச்ச மாதிரி இருந்தது) வெளியே வந்தா நல்ல புத்துணர்ச்சி. களைப்பையும் உடல் வலியையும் தாண்டி நல்லா இருந்தது. வண்டிய கிளப்பிக்கிட்டு தங்கியிருந்த இடத்துக்கு போனா ஏற்கனவே சாப்பாடு வாங்கி வச்சிருந்தாங்க. அரக்கபரக்க குளிச்சிட்டு சாப்பிட உக்கார்ந்தா கண்முன்னாடி எல்லாம் சுத்துது. சாப்டுட்டு அங்கியே நல்ல தூக்கம்.

அன்னிக்கு நல்ல ஆழ்ந்த தூக்கம். கைட் வேற சீக்கிரமே வரேன்னு சொல்லிருந்தார். ஒருவழியா எந்திருச்சு காலைக் கடன்களை முடிச்சிட்டு கிளம்பிட்டோம் சூச்சிபரா அருவிக்கு. ஒரு வழியா குவாலிஸ் டிரைவர் ரிப்பேர் முடிஞ்சு வண்டிய கொண்டு வந்திருந்தான்.

வெயில் வந்திருந்த நேரம். மலையில் நடுவில் பயணம். இருபுறமும் தேயிலைத் தோட்டங்கள். ரசிக்கத் தெரியாதவனும் ரசிக்க ஆரம்பித்துவிடுவான். நாங்களும் அப்படி தான். ரம்மியமான காலைப் பொழுதில் ரசிப்பது எப்படின்னு இயற்கை எங்களுக்கு கத்து குடுத்த பாடத்தை படிச்சிக்கிட்டே பயணித்தோம். டிரைவர் ஓட்டுன வேகம் வேற சுகமா இருந்தது. பின்ன வண்டி தர்மர் ரதம் மாதிரி தரையிலேர்ந்து ஒரு அடிக்கு மேல போனா என்னான்னு சொல்றது?
குறுகலான பாதையில் போய் அருவி அருகில் போயாச்சு. இனி வண்டியை அங்கியே விட்டுட்டு நடக்க வேண்டியது தான். குளிப்பதற்காக கொண்டு வந்த துணிமணிகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்த கடையில் காலை சிற்றுண்டிக்கு பூரி ஆர்டர் பண்ணிட்டு நடக்க ஆரம்பித்தோம்.

அங்கங்க நின்னு போட்டோ எடுத்துட்டு மறுபடி நடை. இங்க மீன்முட்டி இல்லாம பொதுமக்கள் வந்து போவதற்காக கருங்கல் படிகள் இருந்தது சௌகர்யமா இருந்தது. போகும் போது ரெண்டு மூணு பேர் குளிச்சிட்டு இருந்தாங்க. கீழே இறங்கி அருவியை பார்க்கும் போது மலைப்பா இருந்தது. அவ்ளோ சூப்பரா இருந்தது. பொங்கி வந்த அருவி பாறைகளில் மோதி எந்நேரமும் சாரலை அள்ளித் தெளித்தது. சட்டையை அவிழ்த்துவிட்டு பர்மொடாஸுடன் இறங்கி அருவி விழும் இடத்திற்கு அருகில் போயாச்சு. அருவிக்கு பக்கதிலேயே இருந்த பாறையில் ஏறி தியான நிலையில் உக்கார்ந்து கண்மூடி சாரலை அனுபவித்தேன்.

அப்போது தோன்றியது இது தான். ஏய் படத்தில் வரும் Уஅர்ச்சுனா அர்ச்சுனாФ பாட்டு. இது மாதிரி இடத்தில் தானே சரத் குமாரும் இருந்தார். கண்விழித்துப் பார்த்தா நமீதாவை காணவில்லை. ஹ்ம்ம்.. அந்த பாக்கியமெல்லாம் நமக்கு எங்க கிடைக்கப் போகுது. சுள்ளென்று அடித்த வெயிலில் தண்ணீரில் இறங்கி ஆட்டம் போட்டது சுகமாய் இருந்தது.

அப்போது ஒரு சுற்றுலாக்கு வந்த தெந்தமிழக கல்லூரிக்கூட்டம் கும்பலாய் வர கொஞ்ச நேரத்திலேயே ஏற ஆரம்பித்துவிட்டோம். பயலுவ எஞ்ஜாய் பண்ணட்டும். திரும்ப வண்டி இருந்த இடத்திற்கே வந்து செமத்தியா பூரியை கோழி மசாலுடன் சேர்த்து சாப்பிட்டது ஆஹாЕஅற்புதம். அந்நேரத்திற்கு அது அவ்ளோ தேவையாயிருந்தது.

மறுபடி தங்கியிருந்த இடம் நோக்கி பயணம். வழியில் ஆங்காங்க நின்று பசுமையான பிண்ணனியில் போட்டோக்கள் வேறு. பின்ன கல்யாணத்துக்கு குடுக்க நல்ல போட்டோ வேண்டாமா என்ன?

அடுத்து எங்க போறதுன்னு ஒரே குடைச்சல். மணி பதினொன்றுக்கு மேலாச்சு. இனி வேறு இடத்திற்கு போனா ஊருக்கு கிளம்ப லேட்டாயிடும். இப்பவே கிளம்பினா ரொம்ப சீக்கிரமே போயிடுவோம். என்ன பண்ணலாம்னு ஒரே விவாதம். ஒருவழியா போற வழியில் பந்திப்பூர் போயிட்டு போகலாம்னு ஏகமனதாய் முடிவெடுத்தோம்.

ரூமை காலி பண்ணிட்டு போற வழியில் சாப்பிட ஒன்னுமிருக்காதுன்னு ஒரு ஹோட்டலில் நிறுத்தி பரோட்டா, மீன் எல்லாம் வாங்கிட்டு பயணத்தை ஆரம்பிச்சாச்சு. கொளுத்தற வெயில்ல உக்கார இடமில்லாம பந்திப்பூர் பக்கத்தில போய் தான் சாப்பிட்டோம். அதுலேயே பாதி பயலுவ மயங்கற நிலைமைக்கு போயாச்சு. பின்ன இதோ வந்துடும் இதோ வந்துடும்னு.. நாலு மணி வரைக்கும் சாப்பிட நிறுத்தாம இருந்தா..?

роЪро┐ро╡ро╛.роЬро┐
31-01-2008, 06:59 PM
மதி ரொம்பநல்லா எழுதுறீங்க.ரசிக்கத்தெரியாதவனும் ரசிக்கற மாதிரி தேயிலைத்தோட்டமும்,சரத்குமாராகியும் நமீதா கிட்டாததையும் ரொம்ப நல்ல ரசிக்கிற மாதிரி ரொம்ப நல்லா எழுதறீங்க.அசத்தலா இருக்கு.ஜமாய்ங்க மதி.

aren
31-01-2008, 08:38 PM
விதியை வெல்ல நான் என்ன மதியா??? :lachen001:

என்ன சொல்ல வரீங்க. உங்களுக்கு மதி இல்லையென்றா?

aren
31-01-2008, 08:48 PM
அருமை மதி. இப்பொழுதே அனுபவிச்சாதான் உண்டு. பின்னர் இதெல்லாம் வெறும் கனவுதான்.. எஞ்ஜாய்!!!!

роЕроХрпНройро┐
31-01-2008, 11:43 PM
அசத்தல் அனுபவக் கட்டுரை.
வார்த்தை விளிப்புகளும், காட்சி விவரிப்புக்களும் எம்மையும் கூடவே அழைத்துச் செல்கின்றன.
மிகுந்த பாராட்டுக்கள் மதி...

ஆமா... ஒரு சந்தேகம்...
முற்றும் போடமுன்னர் யாவும் கற்பனையே என்று போட்டுவிட மாட்டீர்கள்தானே...???

роородро┐
01-02-2008, 03:17 AM
மதி ரொம்பநல்லா எழுதுறீங்க.ரசிக்கத்தெரியாதவனும் ரசிக்கற மாதிரி தேயிலைத்தோட்டமும்,சரத்குமாராகியும் நமீதா கிட்டாததையும் ரொம்ப நல்ல ரசிக்கிற மாதிரி ரொம்ப நல்லா எழுதறீங்க.அசத்தலா இருக்கு.ஜமாய்ங்க மதி.
மிக்க நன்றி சிவாண்ணா...
உங்கள மாதிரி பல பேர பாத்து படிச்சு எழுத ஆரம்பிச்சுது. உங்களுக்கு பிடிச்சதுன்னா சரி தான்..


அருமை மதி. இப்பொழுதே அனுபவிச்சாதான் உண்டு. பின்னர் இதெல்லாம் வெறும் கனவுதான்.. எஞ்ஜாய்!!!!
உண்மை ஆரென்..
எவ்ளோ நாள் தான் சந்தோஷமா இருப்பேன்னு அப்பாக்கு என் மேல செம கடுப்பு..

அசத்தல் அனுபவக் கட்டுரை.
வார்த்தை விளிப்புகளும், காட்சி விவரிப்புக்களும் எம்மையும் கூடவே அழைத்துச் செல்கின்றன.
மிகுந்த பாராட்டுக்கள் மதி...

ஆமா... ஒரு சந்தேகம்...
முற்றும் போடமுன்னர் யாவும் கற்பனையே என்று போட்டுவிட மாட்டீர்கள்தானே...???

அட..நூத்துக்கு நூறு நிஜம்ங்க.. இதுல என்ன கற்பனை இருக்கப் போவுது..:eek::eek:

роородро┐
01-02-2008, 11:45 AM
அரை மயக்கத்தில் எல்லோரும் சாப்பிட ஆரம்பிக்க பக்கத்திலிருந்த பண்ணையிலிருந்து ஒரு நாய் ஓடி வந்தது. பார்க்க பரிதாபமாய் சாப்பிட்டே நாளாயிருக்கும் போல. வாங்கியிருந்த மீன் வாடையை மோப்பம் பிடித்துக் கொண்டே எச்சில் ஒழுக நின்றிருந்தது. கொஞ்சம் மீன் எடுத்துப் போட்டோம். நல்லா சாப்பிட்டது. திரும்பவும் நாக்கு தொங்கல் படலம்.

போய் தொலையுதுன்னு இருந்த ஆம்லேட்டையும் போட்டாச்சு. பரோட்டாவை சாப்பிட ஆரம்பித்தா குருமா ஏகத்துக்கும் காரம். வாயிலேயே வைக்க முடியல. குருமா பாக்கெட்டை தூக்கி எறிஞ்சா ஏதோ இதுக்கு தான் போடறோம்னு ஓடிப் போயிடுச்சு. அப்புறம் திரும்பி வரல. ஒரு வேளை அதையும் நக்கி சாப்பிட்டிருக்குமோ? வயிறெரிஞ்சு சாபம் விட்டிருக்குமோ? ஒரு வேளை அது தான் அப்படி நடந்ததுக்கு காரணமாயிருக்குமோ? தெரியல. ஒரு வேளை இருக்கக் கூடும்.

சாப்பிட்டு கொஞ்சம் தெம்பு வந்தவுடன் கிளம்ப எத்தனித்தோம். அப்போ தான் கவனித்தேன். அங்க இருந்த பண்ணைங்கல்லாம் மின்வேலி போட்டிருந்தாங்க. ஒரு வேளை காட்டு மிருகங்கள் வராம தடுப்பதற்காக இருக்கும்.

கிளம்பி பந்திப்பூர் போய் சேர்ந்தாச்சு. எக்கச்சக்க கூட்டம். மணி வேறு அஞ்சை நெருங்கிட்டு இருந்தது. தனியா ஒரு வண்டியை வாடகைக்குப் பிடிக்கலாம்னா இல்லேன்னுட்டாங்க. ஆறு மணியோட சஃபாரியை மூடிடுவாங்க. சரியான நேரத்திற்கு போய் சேர்ந்திருந்தோம். கடைசியா போற சஃபாரிக்கு டிக்கட் புக் பண்ணி காத்திருக்க ஆரம்பித்தோம். ஏகத்துக்கும் மக்கள் எஞ்ஜாய் பண்றாங்க. ஆங்காங்கே குடும்பத்துடன் சேர்ந்து குவிந்திருந்தனர்.

அப்போது சஃபாரிக்கு போகும் வேன் ஒன்று நுழைந்தது. மக்கள் வேக வேகமாக ஓடி போனர். நாங்களும் தான். எங்க வண்டி நம்பர் வேற. வந்திருந்த வண்டி நம்பர் வேற. ஏறப்போன போது இதை கவனித்து நானும் ஏனையோரும் திரும்பிவிட்டோம். இது தெரியாத பார்த்தியின் நண்பன் முதல் ஆளாய் ஏறி சீட்டில் உட்கார அங்கு வந்தவர் அவர் இடமென்று சொல்லியிருக்கிறார். கோபம் தலைக்கேறி அவன் டிக்கெட் செக் பண்ணிவதற்காக திரும்பி பார்க்க நாங்கள் யாரும் இல்லை. வழிந்து கொண்டே அவன் இறங்கியதைப் பார்த்து எங்களுக்கு குபீர் சிரிப்பு. கொஞ்சம் கடுகடுப்புடனே இருந்தான் யாரையாவது பழி வாங்கணும்னு.

இப்படி சிரித்து ஓட்டிக் கொண்டிருந்த போது எங்கள் வாகனம் வந்தது. இம்முறை நம்பர் சரி பார்த்தே ஏறினோம். யாராவது மாட்டுவாங்கன்னு பார்த்தாங்க. ம்ஹூம். எல்லோரும் புத்திசாலிகளா இருக்காங்க. கசமுசவென்று வண்டியினுள் அமர்ந்த எல்லோரும் பேச ஆரம்பிக்க டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டார்.

Уசார். எல்லோரும் அமைதியா வாங்க. சத்தம் போட்டா எந்த மிருகத்தையும் பார்க்க முடியாது..Ф

அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டனர். கொஞ்ச தூரம் போனதும் நாங்க குசுகுசுவென்று பேச ஆரம்பித்து விட்டோம். வண்டி போகுது போகுது.. போய்க்கிட்டே இருந்தது. திடீரென்று ஒரு இடத்தில் நிறுத்தினார். தூரத்தில் ரெண்டு மான். இப்படி ஆங்காங்கே வண்டிய நிறுத்தி காட்டியது கொஞ்சம் மான், கொஞ்சம் காட்டெருமை, ரெண்டு மயில். அவ்வளவு தான். இதுக்கா இவ்வளவு தூரம் வந்தோம்னு ஆயிடுச்சு.

காட்டைவிட்டு வெளியே ரோட்டை தொடும் சமயம் ஒருத்தன் கை காட்டினான்.
Уஅதோ யானை..Ф

உண்மை தான். யானைகள் வரிசையாய் போய்கிட்டு இருந்தது. கூடவே குட்டி யானையும். பார்க்கவே சூப்பரா இருந்தது. அப்போது தான் கவனித்தோம். அதன் கால்களில் கட்டியிருந்த சங்கிலிகளை. அடச்சேЕ
காட்டுக்குள்ளே யானையை பாக்கலாம்னா இதெல்லாம் இவங்க வளர்க்கற யானைகளா.. மூஞ்சி செத்துப் போச்சு. கிளம்பின இடத்துக்கே வந்து சேர்ந்தாச்சு.
ஒரு மணிநேரமா வண்டியில குலுங்கி வந்ததால அங்கிருந்த புல் வெளியில் கொஞ்ச ரெஸ்ட் எடுக்க உக்கார்ந்தோம். ஆரம்பிச்சாச்சு. மறுபடி போட்டோ படலம். அப்போ தான் முன்பே பார்த்திருந்த யானைகள் வர ஆரம்பிச்சுது. அதன் பிண்ணனியில் படம் எடுக்க ஆசைப்பட்டு ஒவ்வொருத்தனும் முகத்தில் பயத்துடன் இருபது அடி முன்னாடி நின்னு படம் பிடித்தோம். இதில் ரெண்டு பேரை யானை ஓடி வருதுன்னு சொல்லி அரளவும் வச்சாச்சு.

பின்னாடியே குட்டி யானை பாகனுடன் வந்தது. ஆசை ஆசையாய் அதனருகில் ஓடினோம். போட்டோ எடுக்கத் தான். எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கங்க. இருபது ரூபாய் குடுங்கன்னான் பாகன். போகட்டும்னு ஒத்துக்கிட்டு யானைக்குட்டியுடன் மறுபடி புகைப்படம்.

அதன் மேல் கைவைக்கும் போதே கூசியது. அடர்ட்தியான முடி. கையில் குத்தியது. சத்தம் போட ஆரம்பிக்கையில் பாகன் எச்சரித்தான். தாய் தாக்கினாலும் தாக்குமென்று. வாலை மூட்டைக் கட்டி வைத்து யானையுடன் விளையாட ஆரம்பித்தோம்.

குட்டி யானை தும்பிக்கையை தொட்டு விளையாடினோம். அப்போது கண்ணன் ..அதாங்க பாடி சோடா கையை நீட்டினான். கை நல்லா மெலிசா இருக்குமா.. ஏதோ கரும்புன்னு நெனச்சு அப்படியே சுத்தி வாய்கிட்ட கொண்டு போயிடுச்சு. அவன் கத்த பாகன் வந்து விடுவிச்சார். எல்லோரும் கொட்டம் அடிச்சுக் கொண்டே பந்திப்பூரிலிருந்து கிளம்பினோம். கொஞ்ச தூரத்திலேயே வண்டியை நிறுத்தி காட்டுப் பகுதியில் பாட்டு போட்டு செம குத்தாட்டம் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு இது வரை பயண களைப்பையும் மறந்து. ஆடி ஆஞ்சு ஓஞ்சு வண்டி புறப்பட்டது. பார்த்தி முன்னாடி உட்கார்ந்திருக்க எல்லோரும் தூங்கத் தொடங்கினோம்.

மைசூர் தாண்டி ஒரு இடத்தில் டீ குடிச்சிட்டு மறுபடி பயணம். அசதியில எல்லோரும் அரைத் தூக்கத்தில் இருந்தோம். வண்டி நெடுஞ்சாலையில் வேகமா போயிட்டிருந்தது. அப்போது தான் அது நடந்ததுЕ க்றீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்......



வண்டி பறந்தது.

aren
01-02-2008, 12:53 PM
உண்மை ஆரென்..
எவ்ளோ நாள் தான் சந்தோஷமா இருப்பேன்னு அப்பாக்கு என் மேல செம கடுப்பு..
:

உங்கப்பா பட்ட கஷ்டத்தை நீங்களும் படவேண்டும் என்று நினைக்கிறார் போலிருக்குது. விதி யாரை விட்டது. அனுபவியுங்கள்.

роородро┐
04-02-2008, 12:07 PM
நடந்தது இது தான். மைசூரைத் தாண்டியது எங்கள் டிரைவருக்கு திடீரென வேகம் வந்துவிட்டது. எல்லோரும் அரை மயக்கத்திலிருக்க வண்டி நூறு, நூத்தி இருவது என போனது பெங்களூர் மைசூர் ஹைவே-யில். நேரம் ஆக ஆக வேகமும் அதிகரித்தது. அதுலேயும் மற்ற வண்டிகளை ஓவர்டேக் பண்ணும் போது வீடியோ கேம்ஸ் தான் ஞாபகத்துக்கு வந்தது. யாருக்கும் ஏதும் பேசத் தோணவில்லை. டிரைவரை கூப்பிட்டு எங்கியாவது போய் இடிச்சுடுவாரோன்னு பயம். சர் சர்ன்னு சினிமா சேசிங் மாதிரி இருந்துச்சு. வரிசையா பல டிராவல்ஸ் வண்டியை தாண்டி போனது. இப்படி ஒரு எஸ்.ஆர்.எஸ் டிராவல்ஸ் வண்டியை ஓவர்டேக் பண்ணி பத்தி நிமிட நேரத்தில் அது நிகழ்ந்தது.

எங்களுக்கு முன் ஒரு டாட்டா சுமோ வண்டி. அது ஒரு க்ராசிங் ஆகையால் ஒரு பக்கம் மட்டும் வண்டி செல்ல தடுப்பு வைத்திருந்தனர். முன் சென்ற வண்டி சற்று நிதானித்து வலப்புறம் சென்றது. பார்த்து கொண்டிருந்த பார்த்தி, முன் சீட்டிலிருந்த சீட் பெல்ட்டை எடுக்கவும்.. க்ரீச்சென்று சத்தத்துடன் எங்கள் வண்டி அந்த சுமோவின் மீது மோதவும் சரியாக இருந்தது. கட்டுப்பாடு இல்லாமல் போனதால் டிரைவர் ப்ரேக் மீது ஏறி நின்றாலும் ரொம்பவும் அருகில் சென்று விட்டது. இதை உணர்ந்த எங்கள் டிரைவர் இன்னும் வலப்புரம் வண்டியை திருப்பிட்டார். நேராக அந்த வண்டியின் மீது மோதாமல் பக்கவாட்டில் சென்று உரசி, பின் அங்கிருந்த ஒரு அடி உயர தடுப்பின் மீது ஏறி..கொஞ்சமே கொஞ்சமாய் பறந்து கிட்டத்தட்ட நூறு அடி தள்ளி நின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் சிறு கீறல் கூட இல்லை. வண்டியின் முன் டயர் பஞ்சராகி விட்டது.

ஏதோ எதிர்பார்த்தது நடந்தது போல் எல்லோரும் கீழிறிங்கினோம். சண்டை வலுத்து விட்டது. அந்த வண்டிக்காரருக்கும் எங்கள் வண்டிக்காரருக்கும். கூட்டம் கூடி விட்டது. கண்களில் இருந்த தூக்க கலக்கம் எரிச்சலாய் மாறியது. பெரிய விபத்திலிருந்து தப்பித்த சொரணையே இல்லை. ஏதோ பேசினார்கள். அப்புறம் இருவரும் அவரவர் அட்ரெஸ்களை வாங்கிக்கொண்டு அந்த சுமோகாரர்கள் போய்விட்டனர்.

அடுத்து என்ன செய்வது? வண்டியோ பஞ்சர். அது ஒரு கிராமம் மாதிரி இருந்தது. இங்க எந்த பஸ்ஸும் வேறு நிறுத்த மாட்டான். பார்த்தியும் அவன் பிரண்டும் அங்கிருந்த நபர்களிடம் விசாரிக்க சென்றனர். இதனிடையில் வண்டி ஓனரை பிடிப்பதற்காக மருதுவிற்கு போன் பண்ணினேன். ஓசூரிலிருந்தான். அவனிடம் ஒன்றும் சொல்லாமல் போன் நம்பரை மட்டும் கேட்டேன். என்னாச்சுன்னான். ஒன்னுமில்லை..பஞ்சராயிடுச்சு. வர லேட்டாகும்னு சொல்லி நம்பர் வாங்கினேன்.

இதனிடையில் ஸ்டெப்னி எடுக்க சரியான டூல்ஸ் கொண்டு வரவில்லை அந்த டிரைவர். ஏதேனும் ஸ்பானர் கிடைக்குமா என்று அங்க நின்னுக்கிட்டு இருந்தவங்ககிட்ட கேக்கப் போனப்போ அங்கிருந்த ஒருவர் எச்சரித்தார்.
Уநீங்க..தமிழ்.. இங்க.. மாண்டியால தான் காவிரி பிரச்சனை நடந்தது..Ф

திக்கென்றது. இதென்ன வம்பா போச்சு. இங்கேயே வெட்டி குழி தோண்டி புதைச்சுவாங்க போல. அப்புறமா தமிழில் பேசுவதை தவிர்க்கலானோம்.

இதற்கிடையில் விபத்து நடப்பத்தற்கு பத்து நிமிடத்துக்கு முன் நாங்க ஓவர்டேக் பண்ணிருந்த பேருந்து அரை மணி நேரம் கழித்து வந்தது. அப்போ தான் நாங்கள் வந்திருந்த பேய் வேகம் உறைத்தது. மழை வேறு நன்றாக பிடித்துக் கொண்டது.

இனி எப்படி போக..? என்ன செய்ய? கையில் நூறு ரூபாயோ என்னவோ இருந்தது. வேறு வண்டி பிடிக்கலாமென்றால் எங்க போவது? அப்போது அங்க இருந்த ஒரு பெருந்தலை தன் சுமோவை கொடுக்க முன் வந்தார். ஒரு பேருந்துநிறுத்தத்தில் நின்று கொண்டே பேச பார்த்தியும் அவன் நண்பரும் பேச ஆரம்பித்தார்கள்.

நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்துவிட்டது. நாங்க ஒரு சின்ன கட்டிடத்தின் அடியில் ஒண்டிக்கொண்டிருந்தோம். பேசப் போன பார்த்தியும் அவன் நண்பனும் வரவில்லை. போன் பண்ணிக் கேட்டா..

Уஇதோ வந்துடறோம்..Ф இதான் பதில். என்ன நடக்குதுன்னே புரியல.

மழை சக்கையாக பெய்ததால் அவரின் டிரைவர் பெங்களூர் வர மறுத்துவிட்டார். அப்புறமா எங்கோ போன் பண்ணி அவர் பக்கத்து ஊரிலிருந்த சுமோவை வர சொன்னார். மணி ஒன்பதரைக்கும் மேலாகி விட்டது. பசி இன்னும் அதிகமாக வயிற்றைக் கிள்ளவே பெங்களூரிலிருந்த விஜய்க்கு போன் பண்ணி சாப்பாடு வாங்கி வைக்க சொன்னோம்.

ஒருவழியா சுமோ வந்து எங்க மூட்டைகளை ஏற்றி, குவாலிஸ் ஓனருடன் பேசி புறப்பட்டோம். வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் வாடை வந்தது. ஒருவரை ஒருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டோம். பெட்ரோலோ டீசலோ ஏதோ ஒன்னு போடறத்துக்காக வண்டியை ஒரு பெட்ரோல் பங்க்கில் அவர் நிறுத்திட்டு வெளியே இறங்க கண்ணன் புலம்ப ஆரம்பிச்சுட்டான்.

Уஅப்பவே சொன்னேன்Е என்னடா பண்ணலாம்.. அந்த டிரைவரும் உருப்படியில்லை. இவனும் நல்லா தண்ணிய போட்டிருக்கான். இவன நம்பி எப்படி இன்னும் 100 கி.மீ போறது..?Ф

Уசரி..சரி..விடு. ஏறியாச்சு. இதவிட்டா எதுவும் கிடைக்காது. இங்கயே மழையில இருக்க வேண்டியது தான். இந்தாள் கிட்டேயாவது கொஞ்சம் பேச்சு குடுத்து மெதுவா ஓட்ட சொல்லுவோம்.Ф

டிரைவர் ஏறி வண்டி கிளப்பினார். எல்லோரும் செம டென்ஷன். நல்ல அனுபவமா இந்த பயணம் அமைஞ்சுடுச்சு. இப்போ இது தான் கடைசியா ..இல்லை இன்னும் இருக்கான்னு தெரியல. அப்போ தான் அந்த கேள்விய டிரைவர் கேட்டார்..

Уபோரடிக்காம இருக்க ஏதாச்சும் படம் பாக்கறீங்களா..?Ф

ஏற்கனவே திக்..திக்..இரவு. இதுல போரா..? ஒழுங்கா வீட்டுக்கு போய் சேர்ந்தா போதும் சாமி. ஆனாலும் ஆச யார விட்டது. ஏதோ ஒரு ஆங்கில படத்தை பார்க்க ஆரம்பித்தோம். ப்ளைட் அது இதுன்னு ஒரே களேபரம். கொஞ்சம் பாத்துட்டு அசதியில தூங்கிட்டேன்.

கண்முழிச்சு பாக்குறப்போ பெங்களூரை நெருங்கிட்டிருந்தோம். படமும் க்ளைமாக்ஸில். இந்த பிரச்சனையிலேயும் படத்தை முழுசா பாத்திருக்காங்க பாவிங்க. வழியில் ஒரு ஏ.டி.எம்மில் நிறுத்து பணம் எடுத்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் ஓடிப் போய் செய்த இரண்டு காரியம்.

சாமி படத்தை கும்பிட்டு பத்திரமா சேர்த்ததுக்கு நன்றி சொன்னது; விஜய் வாங்கி வச்சிருந்த டிபனை கன்னாபின்னாவென்று கொட்டிக்கிட்டது.


-நிறைவு-

роЪро┐ро╡ро╛.роЬро┐
04-02-2008, 12:17 PM
அப்பா...செம அட்வெஞ்சர்தான்....பாத்ததை,அனுபவிச்சதை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க மதி.அதிலயும் அந்த சங்கிலியால் கட்டப்பட்ட யானைக்கூட்டம்....ஹீம்...எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா.
தலைக்கு வந்தது தொப்பியோடு போச்சுங்கற மாதிரி அந்த விபத்துலருந்து தப்பிச்சிருக்கீங்க.இந்த ட்ராவல்ஸ் சுமோக் காரங்க அப்படித்தான் பேய் ஓட்டு ஓட்டுவாங்க...நாங்களும் ஒரு முறை பட்டமே..
பரவாயில்ல நீங்க சொன்ன மாதிரியே விஜய் டிபன் வாங்கி வெச்சிருந்திருக்காரே....அதுவரைக்கும் பிழைச்சீங்க.அசத்தல் மதி.அடுத்த பயண அனுபவம் எப்ப.........??

роородро┐
04-02-2008, 12:25 PM
அப்பா...செம அட்வெஞ்சர்தான்....பாத்ததை,அனுபவிச்சதை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க மதி.அதிலயும் அந்த சங்கிலியால் கட்டப்பட்ட யானைக்கூட்டம்....ஹீம்...எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா.
தலைக்கு வந்தது தொப்பியோடு போச்சுங்கற மாதிரி அந்த விபத்துலருந்து தப்பிச்சிருக்கீங்க.இந்த ட்ராவல்ஸ் சுமோக் காரங்க அப்படித்தான் பேய் ஓட்டு ஓட்டுவாங்க...நாங்களும் ஒரு முறை பட்டமே..
பரவாயில்ல நீங்க சொன்ன மாதிரியே விஜய் டிபன் வாங்கி வெச்சிருந்திருக்காரே....அதுவரைக்கும் பிழைச்சீங்க.அசத்தல் மதி.அடுத்த பயண அனுபவம் எப்ப.........??

அட.. இவ்வளவு வேகத்தில் பின்னூட்டமா... ரொம்ப நன்றி சிவாண்ணா..
உண்மையிலேயே செம அட்வெஞ்சர் தான்.. இருமுறை தப்பி பிழைத்தோம்.

அடுத்த பயண அனுபவமா...? என்ன இப்படி கேட்டுட்டீங்க...! போற போக்கை பாத்தால்.. தமிழ்வாணன் மாதிரி..ஜப்பானில் சங்கர்லால், சிங்கப்பூரில் சங்கர்லால் மாதிரி.. இலங்கையில் வெங்காய பாய்ஸ்...துபாயில் வெங்காய பாய்ஸ்னு தான் கதை எழுதணும்.. பார்க்கலாம்... :)

роЪро┐ро╡ро╛.роЬро┐
04-02-2008, 12:28 PM
அடுத்த பயண அனுபவமா...? என்ன இப்படி கேட்டுட்டீங்க...! போற போக்கை பாத்தால்.. தமிழ்வாணன் மாதிரி..ஜப்பானில் சங்கர்லால், சிங்கப்பூரில் சங்கர்லால் மாதிரி.. இலங்கையில் வெங்காய பாய்ஸ்...துபாயில் வெங்காய பாய்ஸ்னு தான் கதை எழுதணும்.. பார்க்கலாம்... http://www.tamilmantram.com:80/vb/

அட நல்ல ஐடியாவா இருக்கே.....கதை வேண்டாம்...அனுபவம் எழுதுங்க...நீங்க சொன்ன ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்து அதை...இதே சுவாரசியத்தோடு எழுதனுன்னு வாழ்த்துகிறேன்.

ропро╡ройро┐роХро╛
04-02-2008, 12:37 PM
அப்பாடா...முடிச்சிட்டாருப்பா முடிச்சிட்டாரு...
ஆகக் கூடி பத்திரமா புள்ளங்க வீடு வந்து சேந்திருச்சு,
இப்பத்தான் நிம்மதி.

பாச்சிலர் வாழ்க்கை அழகானது.மதி, நீங்கள் பாலகுமாரனின் சேவல் பண்ணை படித்திருக்கிறீர்களா....கொடுமையான பாச்சிலர் மேன்சன் வாழ்க்கை பற்றியது.

அப்படி இல்லாமல் அழகான நட்புறவு வட்டம் இந்த சமயத்தில் கிடைப்பது ஆரோக்கியமானது, ஆனால் சீரியஸாகவும் இல்லாமல் அந்த வயதுக்கே உரிய துள்ளலோடும், கேலி, கிண்டலோடும் களை கட்டும் நல்ல நட்பு, வாழ்க்கையை சுவாரஸியமாக்கி விடும்.

நீங்கள் எழுதியதைப் படிக்கும் போது நுரைக்கெல்லாம் காதில் புகை. இதை விட அடாதுடியான அழகான நண்பர்களை விட்டு விட்டு தனித்திருக்கிறோம் சௌதியில் என்று.வாழ்த்துக்கள் மதி. இன்னும் தொடந்து கொடுங்கள்.

роородро┐
04-02-2008, 12:50 PM
அட நல்ல ஐடியாவா இருக்கே.....கதை வேண்டாம்...அனுபவம் எழுதுங்க...நீங்க சொன்ன ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்து அதை...இதே சுவாரசியத்தோடு எழுதனுன்னு வாழ்த்துகிறேன்.

தங்கள் வாழ்த்துக்கு நன்றி.. உங்கள மாதிரியே உலகம் சுற்றும் வாலிபனாகனும்.. இன்னுமோர் பயணம் இருக்கு... அதைப் பற்றி எப்படி எழுதறதுன்னு தான் யோசிச்சுட்டு இருக்கேன்.. :)

роородро┐
04-02-2008, 12:56 PM
அப்பாடா...முடிச்சிட்டாருப்பா முடிச்சிட்டாரு...
ஆகக் கூடி பத்திரமா புள்ளங்க வீடு வந்து சேந்திருச்சு,
இப்பத்தான் நிம்மதி.

பாச்சிலர் வாழ்க்கை அழகானது.மதி, நீங்கள் பாலகுமாரனின் சேவல் பண்ணை படித்திருக்கிறீர்களா....கொடுமையான பாச்சிலர் மேன்சன் வாழ்க்கை பற்றியது.

அப்படி இல்லாமல் அழகான நட்புறவு வட்டம் இந்த சமயத்தில் கிடைப்பது ஆரோக்கியமானது, ஆனால் சீரியஸாகவும் இல்லாமல் அந்த வயதுக்கே உரிய துள்ளலோடும், கேலி, கிண்டலோடும் களை கட்டும் நல்ல நட்பு, வாழ்க்கையை சுவாரஸியமாக்கி விடும்.

நீங்கள் எழுதியதைப் படிக்கும் போது நுரைக்கெல்லாம் காதில் புகை. இதை விட அடாதுடியான அழகான நண்பர்களை விட்டு விட்டு தனித்திருக்கிறோம் சௌதியில் என்று.வாழ்த்துக்கள் மதி. இன்னும் தொடந்து கொடுங்கள்.

நன்றிக்கா..

ஆமாம் நல்லபடியா வந்து சேர்ந்துட்டோம்.. சேவல் பண்ணை படித்த ஞாபகம்.. ஆனால் இப்போ தலைப்பு மட்டும் ஞாபகத்தில் இருக்கு. பாச்சுலர் வாழ்க்கை சுவாரஸ்யமானது தான். ஆனால் இதே டயலாக்கை என் அம்மாவும் சொல்றது தான் கொடுமையா இருக்கு. "பொறுமையா பொண்ணு பாக்கலாம்.. பேச்சுலர் லைஃப் அப்புறம் கிடைக்காது.."

இந்த வாழ்க்கையில் உண்மையிலேயே நிறைய விட்டுக் கொடுத்தலையும் புரிதலையும் கற்றிருக்கேன்.

роЗро│роЮрпНроЪрпВро░ро┐ропройрпН
04-02-2008, 06:06 PM
மதி அண்ணா, மிக அருமையான ஒளிப்பதிவினைத் தந்து அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.