PDA

View Full Version : நான் தேடிக்கொண்டு........



கனவும் மனிதன்
11-01-2008, 03:59 AM
நெஞ்சமெல்லாம்
நிறைந்து போனது
உன் புன்னகைகள் தின்று..

உன்னை கண்ட பின்
என்னை தொலைத்த
துரதிஷ்டம் என் போன்ற ஆண் வர்க்கத்திற்கே

நீ உன்னை மீட்டுவிட்டாய்..
நான் இன்னும் என்னை தேடுகின்றேன்.
எங்கிருக்கிறாய்?.........

எங்காவது இருப்பாய்..
திருமதியாகி.........

அமரன்
11-01-2008, 09:17 AM
என்னை நான் இன்னும்
தேடிக்கொண்டு இருக்கின்றேன்..
அப்புறம் எப்படி
அவளில் என்னை தொலைப்பது..

அமரன்
11-01-2008, 09:21 AM
நெஞ்சமெல்லாம்
நிறைந்து போனது
உன் புன்னகைகள் தின்று..

உன்னை கண்ட பின்
என்னை தொலைத்த
துரதிஷ்டம் என் போன்ற ஆண் வர்க்கத்திற்கே

நீ உன்னை மீட்டுவிட்டாய்..
நான் இன்னும் என்னை தேடுகின்றேன்.
எங்கிருக்கிறாய்?.........

எங்காவது இருப்பாய்..
திருமதியாகி.........

என்ன ஒரு வில்லத்தனம்..
புன்னகைகளை தின்றதில்
நெஞ்சம் நிறைந்ததா உமக்கு..

தன்னை மீட்டெடுத்த அவள்
புன்னகைகளை தொலைத்து
'உம்'மானது உம்மால்தானா???

இல்லறத்தின் திரு புன்னகை
இல்லையே அது அவளிடம்.
திருவும் மதியை காவுகொடுத்து
திருமதி எப்படி திருப்தியாய்..

இதெல்லாம் லுலுவாயிக்கு...
நிசமாவே கவிதை நல்லா இருக்குங்க...
தொலைத்த இடத்தில்தான் எடுக்கமுடியும்..
நீங்கள் தொலைத்தது காதலில்..

பாராட்டுகள் கனவும் மனிதனே..:icon_b:

ஆதி
11-01-2008, 09:29 AM
பெருமணற் பரப்பில் விழுந்த
நாணயம் போலதான்
காதலில் மனதும்..
தொலைத்தால் மீளக்கிடைப்பது அரிது..

வாழ்த்துக்கள் கனவும் மனிதன்..
நல்ல கவிதைக்கும் உங்களுக்கும்..

அன்புடன் ஆதி

சிவா.ஜி
12-01-2008, 07:08 AM
ஒரு மனதை தொலைத்த மனது அழுகிறது அடம்பிடித்து....தொலைத்ததே திரும்ப வேண்டுமென்று.ஆனால் அந்த மனது இன்னொரு மனதுக்குள் ஐக்கியமாகியிருக்க அழுகை மட்டுமே மிச்சம்.
அழகிய வரிகள்.வாழ்த்துகள் கனவும் மனிதன்.

அறிஞர்
12-01-2008, 05:04 PM
கைகெட்டாத காதலில்
தன்னை தொலைத்து விட்டு...
தேடும் மனிதனின் வரிகள் அருமை...

மனோஜ்
12-01-2008, 05:11 PM
கணவுகள் பலித்துவிட்டால்
நினைவுகள் இருப்பதில்லை
நினைவுகள் இருந்துவிட்டால்
கணவுகள் மறந்துவிடும்

அருமை கவிதை வரிகள் தேடிகிடைக்க வாழ்த்துக்கள்

ஆதவா
12-01-2008, 06:35 PM
காதல் பிறப்பதற்கு எளிதாகவும் இறப்பதற்கு வலிதாகவும் உள்ளது. இருமனங்களும் பிளந்துபோனால் ஒருமனமாவது அதை நோண்டாமல் இருப்பதில்லை. மறத்தலும் காதலின் அங்கம். அது காதல் இழந்தபின்னோ முடிந்த பின்னோ பிறக்கவேண்டும். அசைப்போடுதல் அழகுதான்... ஆனால் வலியோடு நினைப்பது இறந்தகாதலின் ஆத்மாவிற்கு நாமிழைக்கும் இன்னல்.

எங்காவது அவள் இருப்பதாக இருந்துகொண்டு தொலைந்த நம்மைத் தேடியலைவது அல்லது தேடியெடுத்தும் மீட்டாமல் இருப்பது வாழ்வதன் அர்த்தமல்ல.

அவள் அவளை மீட்டதன் காரணம் சந்தர்ப்பம், கட்டாயம். அவன் அவனை மீட்கத் தேடுவது முட்டாள்த்தனம். மீளத் தெரிந்தவன் மனிதன். இங்கே தொலைக்க மட்டுமே தெரிந்தவர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள்.

நல்ல கவிதை....