PDA

View Full Version : நடிகர் பாண்டியன் மரணம்



mgandhi
10-01-2008, 06:26 PM
நடிகர் பாண்டியன் மரணம்


நடிகர் பாண்டியன் உடல் நலக்குறைவால் மதுரை மருத்துவமனையில் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 48.

மதுரையைச் சேர்ந்த பாண்டியன், பாரதிராஜாவின் மண் வாசனை படம் மூலம் நடிகரானார். பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் பின்னர் 2ம் நாயகனாகவும் நடித்தார். சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த்துடன், குரு சிஷ்யன் படத்தில் அவரது தம்பியாக நடித்துள்ளார். அவர் நடித்த ஆண் பாவம் திரைப்படம் பெரும் புகழ் பெற்றது. இதையடுத்து பல படங்களில் அவர் நாயகனாக நடித்தார். 80 படங்கள் வரை பாண்டியன் நடித்துள்ளார்.

நடிகராக பிரபலமாக இருந்த காலத்தில் திமுகவில் இணைந்து பல காலம் திமுகவில் இருந்த அவர் பின்னர் அதிமுகவுக்கு மாறினார். அதிமுகவில் பெரிய அளவில் பாண்டியன் கவனிக்கப்படவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மதுரை கொண்டு செல்லப்பட்ட பாண்டியன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலை அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து அவர் மரணமடைந்தார்.

பாண்டியன் மறைவுக்கு தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நம் மன்றம் சார்பாக ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிரேன்

உதயசூரியன்
10-01-2008, 07:46 PM
வருத்தமான செய்தி..
வருந்துகிறேன்....
என்னுடைய அஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்

நுரையீரல்
10-01-2008, 08:25 PM
இரங்கல் செய்தி கேட்டு வருந்துகிறேன்.

aren
11-01-2008, 08:24 AM
நல்ல நடிகர். இவ்வளவு இளம் வயதில் இப்படியாகிவிட்டதே. மிகவும் வருத்தமான செய்தி.

அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமரன்
11-01-2008, 08:26 AM
சிறந்த நடிகர்.. குறிபட்டுச் சொல்லக்கூடிய வெற்றிப் படங்களுக்கு சொந்தக்காரர்...
அன்னாரின் ஆத்ம திருப்திக்கு எனது பிரார்த்தனைகள்..
புரிவுத்துயரால் வாடும் குடுப்பத்தினருக்கு ஆறுதல்கள்..

ஆதி
11-01-2008, 08:30 AM
யதார்த்தமாக நடிக்கும் நடிகர், அவர் ஆன்ம சாந்திக்கு என் பிராத்தனைகள்.. அவர் குடும்பத்தாற்கு என் மனம் நெகிழ்ந்த இறங்கலும் ஆறுதலும்..

ஆர்.ஈஸ்வரன்
11-01-2008, 09:59 AM
மிகவும் வருத்தமான செய்தி.அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

aren
11-01-2008, 10:09 AM
கல்லீரலில் பிரச்சனையென்றால் - குடிப்பிரச்சனையாக இருக்குமோ?

நம் மன்ற வைத்தியர்கள் விளக்கமாக எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

sarcharan
11-01-2008, 11:52 AM
ஒரு நல்ல நடிகர். கிழக்குச்சீமையிலே, ஆண்பாவம் போன்ற படத்துல பாத்திருக்கேன்,
அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

virumaandi
11-01-2008, 12:40 PM
வருத்தங்கள்

அன்புரசிகன்
11-01-2008, 12:41 PM
பல படங்கள் பாத்திருக்கிறேன். மண்வாசனை எனக்கு மிகப்பிடித்தது. அத்துடன் ஆவதும் பெண்ணாலே என்ற பாடல் வரும் விசுவின் படம்... மிக்க நல்ல பாடங்களை சொல்லித்தரும் படம் ஒன்று...

அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.

மயூ
11-01-2008, 04:26 PM
நல்ல நடிகர் இப்படியாக இளம் வயதில் இறையடி சேர்ந்தமை வருத்தமழிக்கின்றது!!! :(