PDA

View Full Version : என்னையும் பிடித்தது தமிழுக்கு..!! - அகரம்



ஆதி
10-01-2008, 11:18 AM
அதரம் பலுக்கிய அகரம்

ஆறாம் வகுப்பில் அனைவரும் ஆறுதன் வரலாறு கூறுதல் படித்துக் கொண்டிருந்த அதே தருணத்தில்தான் அ.., ஆ.. கற்க ஆரம்பித்தேன் நான்.

என் தந்தை மத்திய அரசு நிறுவணத்தில் பணியாற்றுவதால், நான் ஐந்தாம் வகுப்பு வரை மத்திய அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அதுவும் ஆங்கிலம் தவிர மற்றப் பாடங்கள் அனைத்தும் ஹிந்தியில்தான் இருக்கும்.

என் பால்யம் ஹிந்தி எழுத்துக்களில் சிக்கி கிடந்தது, என் நண்பர்களில் பெரும்பாலோர் வட இந்தியர் என்பதால் தமிழ் நான் வீட்டில் பேசப் பயன்படுத்தும் மொழியாக மட்டுமே இருந்தது.


மொழிப்பாடத்திலும் நான் ஹிந்தியில்தான் நிறையப் மதிப்பெண் எடுப்பேன், ஹிந்தியில் நான் அதிக மதிப்பெண் பெருவதை நான் என் பெற்றவர்களுக்கு தேடித்தரும் பெருமையாக எண்ணினேன்.

இப்படி தமிழின் அறிமுகம் இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்தக் காலத்தில், ஐதாம் வகுப்பு விடுமுறையில் எங்கள் சொந்த ஊர்க்கு சென்றோம்.

என் பெரியப்பா, ஒரு ஆசிரியர், அவருக்குதான் நான் மிகவும் அஞ்சுவேன், அவர் என்னை அடித்ததே இல்லை, இருந்தாலும் இன்றும் அவரிடம் பேசும் போதும் என் தொண்டைக்குழிகள் தான் வார்த்தைகளை உச்சரிக்கும் அவ்வளவு மரியாதை அவர் மீது எனக்கு.

நான் அதிகம் சேட்டை செய்யும் வால்பையன் என்பதால், என்னை அடக்க அவர் ஒரு யுக்தி வைத்திருந்தார், என்னவெனில் அவர் சொல்லும் பாடங்களைப் படித்து எழுதிக்காட்டுவதுதான். ஆங்கிலம்தான் பெரும்பாலும் எழுத வைப்பார். அந்த விடுமுறையில் என் பெயரை தமிழில் எழுதச் சொன்னார், மொழி தெரியாத ஊரில் பேசத் தெரிந்தவனும் ஊமை என்பதுப் போல், பெப்ப பெப்ப என முழிக்க ஆரம்பித்தேன்..

"தாய் மொழியில் பெயர் எழுதத் தெரியாத அளவுக்கு ஊஊர்ல இல்லாதப் பிள்ளைய வளது வச்சுருகீங்க" என எந்தைக்கும் தாய்க்கும் விழுந்த வசையின் பயனாய். தமிழை மொழிப்பாடமாய்க் கொண்ட மற்றொருப்பள்ளிக்கு மற்றப் பட்டேன் அந்த வருடம்..

புதியப் பள்ளி, புனித வள்ளனார்ப் பள்ளி, புது மாணவனாய் புதியப் பள்ளிச் சீருடையுடன், புத்தம் புது பூவாய் பூத்தேன் அங்கே. என் பெயர் என்ன ?, எந்தப் பள்ளியில் இதற்கு முன் படித்தேன் ?, என உசாவும் ஆவலில் என் புதிய நண்பர்கள் என்னை சூழ. ஒரே பதிலையே அனைவருக்கம் திரும்ப திரும்பச் சொல்லி குரல்வளை வறண்ட முதல் நாளை என்னால் மறக்க முடியாது..

அந்த நாள் என் வாழ்வில் ஒரு இறுக்கமான நாள், என் மனதில் நெருப்பு துளிகளை உதறிப்போன நாள், பழைய நண்பர்களை பிரிந்த சோகமும் புதிய இடத்தில், புதியவர்களிடம் நான் கடைப்பிடித்த தூரமும், என்னுள் தனிமையையும், எனக்கென இந்த உலகில் யாருமில்லை என்கிற அர்த்தமற்ற வெறுமையையும் கொட்டிப்போன நாள்..


என் இறுக்கங்களை குறைத்துக் கொண்டு மற்றவர்களுடன் நெருக்கங்கள் கொள்ள துவங்கியப் பொழுதுதான், துவங்கியது ஆறு தன் வரலாறு கூறுதல் பாடம். முதல் பாடம் என என் தமிழ் ஆசிரியைச் சொன்னக் காரணத்தால், தமிழ் நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைத் திறந்துவைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன், என் விழிகள் வினோதமானப் பொருட்களைப் பார்ப்பதுப் போல தமிழ் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டிருந்தன..


தொடரும்..

பூமகள்
10-01-2008, 01:43 PM
தமிழினை ஆதி முதல் தொட்ட காலத்துக்கு எங்க எல்லாரையும் அழைத்துச் செல்கிறீர்களா ஆதி...??!! ;)
பலே பலே...!! :)
கலக்குங்க..!! :icon_b:
கூடவே நாங்களும் வருகிறோம்..!!:rolleyes:

உங்களுக்கு ஹிந்தி தெரியுமா??:sprachlos020::icon_ush:
அச்சச்சோ, இனி நான் அரைகுறை இந்தியை இங்கு கலாய்ப்பில் உளருவதை குறைச்சுக்கனும்...!! :D:D

மனோஜ்
10-01-2008, 02:59 PM
அருமையான தொடக்கம் தொடர்ந்து தாருங்கள் ஆதி

மயூ
10-01-2008, 04:37 PM
தொடருங்க நண்பரே.. வாசிக்கக் காத்திருக்கின்றோம்!

பாரதி
10-01-2008, 05:02 PM
ஆதி மொழியாயிற்றே...! ஆதியை தமிழுக்கு பிடிக்காமலிருக்குமா என்ன..?? வாழ்த்துக்கள் நண்பரே.

ஆதி
11-01-2008, 06:48 AM
பின்னூட்டமிட்டு ஊக்கம் கொடுத்த அணைவருக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றிகள்..

அன்புடன் ஆதி

சிவா.ஜி
11-01-2008, 06:55 AM
ஆதி தமிழை....ஆதி படித்த கதை...ம்....சுவாரஸ்யமாக இருக்கிறது.தொடருங்கள்....

மதி
11-01-2008, 07:02 AM
நண்பரே..தொடருங்கள்..
தமிழ் உங்களுக்கு அறிமுகமான கதையை..

ஆதி
11-01-2008, 07:48 AM
பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி சிவா அண்ணா, நன்றி மதி..

ஆதி
17-01-2008, 07:11 AM
பாடத்தை வாசித்துக்கொண்டிருந்த என் ஆசிரியை, மறுப்பக்கம் புரட்டுவதை பார்த்துதான் எனக்கு புரிந்தது, நான் தவறான இடத்தில் இருக்கிறேன் என்பது.

உடனே என் பக்கத்தில் அமர்ந்து இருந்த நண்பனின் புத்தக்கதில் பக்க எண் பார்த்து சரியான பக்கத்திற்கு திருப்பிக் கொண்டேன். அதைப் பார்த்த அவன் என்னை நோக்கி புன்னகைத்தான், பதிலுக்கு நானும் புன்னகைக்கையில், ஆசிரியை என்னைப் பார்த்துவிட்டார்.


தம்பி எழுந்திடு, உன் பெயர் என்ன ? என வினவினார்..

தினேஷ்.. என்றேன்.

பாடம் நடத்தும் போது என்ன சிரிக்க இருக்கிறது என காரமாய் கேட்டார்..

என் நாவில் வார்த்தைகள் நங்கூரம் பாய்ச்சி ஆசைய மறுத்தன..

பயத்தின் கைகள் என் இதயத்தின் குடுமியை பிடித்து அரைக்க.. துடிப்பு அதிகமானது..

தினேஷ் ஊங்கிட்டதான் கேக்குறேம்பா.. சிரிக்கிற மாதிரியா நான் பாடம் நடத்துறேன் என ஒரு வெப்பம் விளாவிய புன்னகையுடன்.. வினவினார்..

பயத்தின் மட்டம் உயர.. என் வார்த்தைகள் விறைக்க.. விழிகளில் பயம் நீர்மமாய் ஊற, வயிற்றில் ஒரு ரசாயண மாற்றம் நிகழ ஆரம்பித்தது..

பதில் இல்லாத இதழ்களைப் பார்க்கப் பார்க்க அவரின் பொருமை கரைந்து கண்களில் கோவமாய் வழிந்து முகத்தின் மீதூர்ந்தது.

உண்மையை சொல்லும் திராணியும் இழந்த நிலையில், ஸ்தம்பிப்புகளில் நின்றிருந்த என் வார்த்தைகளை என்னால் அசைவுகளுக்குள் இழுக்க முடியவில்லை..

அவர் இன்னும் வெகுன்டெழ, சரி நான் இதுவரை என்ன நடத்துனேன் அதைச் சொல்லுப் பாக்கலாம், என குரல் உயர்ந்த கோப தொனியில் கர்ஜித்தார்..

விழிகளுக்கு தமிழ் தெரியாது என்றாலும், காதுகளுக்கு தெரியும் அல்லவா, அவர் நடத்தியதை அப்படியேச் சொன்னேன்..

ஆறு செடிக்கொடிகளுக்கு தாய்ப் போன்றது, தாய்பால் போன்றது, சொல்லிவிட்டு.. இடைச்சொறுகளாய் எங்கோ கேட்ட சிலவார்த்தைகளையும் சேர்த்து சொன்னேன் இப்படி..

ஊரோடு ஒத்து வாழ் என்பதைப் போல் ஆறுகள் தான் கடந்து வரும் பாதைகளில் உள்ள நிலங்களில் நிறத்திற்கு ஏற்ப தன் நிறத்தையும் மாற்றிக்கொள்ளும் என்றேன்..

ஒரு சின்ன முறுவலுடன் என்னை அமரச்சொன்னார்.. நான் சொன்னது சரியா தவறா என்று அவர் ஆராயவில்லை...

பெரிய பயங்கரத்தில் இருந்து தப்பித்து பிழைத்தவன் போல் அமைதியாய் அமர்ந்தேன்.. புத்தகத்தில் தன் பார்வைகளை நடுக்கொண்ட என் அரண்ட விழிகளின் இருண்ட நிலங்களில் மெல்ல அமைதியின் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது..

அந்த வகுப்பு முழுவது மாப்பிள்ளை வீட்டார் முன் தலைகுனிந்து அமர்ந்திருக்கும் பெண் போல அமர்ந்திருந்தேன்..

வகுப்பு முடிந்து செல்லும் முன் என் தமிழ் அம்மா என்னை அழைத்து ஆசிரியர் அறைக்கு வரச்சொன்னார்.. தன் அரக்க சக்திகளை வடியவிட்டுக் கொண்டிருந்த பயம் மீண்டும் உந்தல் கொண்டு இன்னும் வலிமையாய் எனக்குள் வேதி மாற்றங்களை ஏற்படுத்த துவங்கியது....

பெரும் பயத்துடன்.. பெரும் ஐய்யக்குறிகளுடன் என்ன நடக்கப் போகிறதோ எனும் பெரும் கேள்விகளுடன்.. ஆசிரியர் அறைக்குள் நுழைந்த என்னை, இங்கு வா என்பது போல் மேலிருந்து கீழாய் தலையசைத்தார்..

அண்டையில் சென்றதும், வகுப்பில் ஏன் சிரித்தாய் என்றார்.. மீண்டும் என் உதடுகள் மௌனத்தில் விறைத்தன..

ஒருச் சின்ன முறுவலை உதறியவாறு சொன்னார், தம்பி பாடத்தின் சில வரி மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு ஒரு உதார்னத்தோடு நீ பதில் சொன்னது ரொம்ப பிடித்டிருந்தது. அதான் உன்னவிட்டுடேன், ஆனா மீண்டும் இதுப்போல் வகுப்பில் நடந்தால் நிச்சயம் கடுமையான தண்டனைக்கிடைக்கும் என்றார்..

மெதுவாய் தலையை ஒரு சின்ன அசைவில் நிறுத்து சரிங்கமா என்றேன்..

வகுப்புக்குப் போ என்றார்.. மீள ஒரு பெரும் ஆபத்தில் இருந்து தப்பித்த சின்ன மகிழ்ச்சியோடும், பதட்டத்தோடும் வகுப்புக்கு திரும்பினேன். ஆனால் இந்த ஆறுதன் வரலாறுக் கூறுதல் என் கண்ணீருக்கு காரணமாய் ஆகப்போவதை நான் அப்போது அறியவில்லை..

தொடரும்...

மதி
17-01-2008, 07:32 AM
எல்லோரும் இப்படி சஸ்பென்ஸோடு முடிக்கறதையே பொழப்பா வச்சிருக்காங்க...ஹ்ம்..
சின்ன வயசிலே இப்படியெல்லாம் மாட்டிகிட்டு முழிச்சீங்களா..? நடத்துங்க

சுகந்தப்ரீதன்
17-01-2008, 07:47 AM
ஆதி ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் எழுத்தறியாதவரா நீங்கள்..? சத்தியமாய் நம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கிறது.. உங்கள் தமிழை காண்கையில்..!

ஆதி நல்ல சுவையான நடையுடன் நிகழ்வுடனும் தொடங்கியுள்ளது உங்கள் பயணம்...!
தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிருங்கள்..!எனது வாழ்த்தும் பாராட்டும்..உங்களுக்கு..!