PDA

View Full Version : 3000 குடிசைக்கு திவைத்த லொள்ளுவாத்தியார்lolluvathiyar
10-01-2008, 06:46 AM
3000 குடிசைக்கு திவைத்த லொள்ளுவாத்தியார்

(முன்னமே பதித்தது அழின்து விட்டதால் ம்மறுபடியும் 3000 எட்டும்போது பதிகிறேன்)

முனுக் முனுகுனு இருந்துகிட்டு 300 குடிசைக்கு திவைப்பான் என்று அப்பாவியாக நடிப்பவனை சொல்வார்கள். அது போல தான் முனுக் முனுக்னு இருந்துகிட்டு 3000 குடிசைக்கு திவைத்து விட்டார் லொள்ளுவாத்தியார் என்று யாரோ முனுமுனுப்பது தெரிகிறது. அதென்ன 3000 குடிசை, அது வெறுன்னுமில்லீங்க 3000 பதிப்பு, அத தான் அப்படி சொல்லறேன். ஆம் இது என் 3000 ஆவது படைப்பு.

முதல் 1000 பதிப்புகள் என்னை ஒரு சிலருக்கு மட்டுமே அறிமுகபடுத்தியது. அதுவும் குறிபிட்ட முத்திரை குத்தபட்டு அறிமுகபடுத்தியது. அந்த சமயத்தில் நான் அதிகமாக விவாதங்களில் மட்டுமே பங்கு பெற்று கொண்டிருந்தேன். மன்றத்தை பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடியாமல் தவித்து கொண்டிருந்தேன். ஆனால் மன்றம் என்னை அறிந்து கொண்டது. சில சமயங்களில் விதிமுரை மீரல்கள் செய்து கொட்டு வாங்கி கொண்டேன்.

அடுத்த 2000 எட்டுவதற்குள் பதிவுக்குள் நான் கலாய்பு பகிதியில் பங்கு பெற ஆரம்பித்தேன். குறிப்பாக அரசியல் கலத்தில் பங்கு பெற்று நிரைய பேருடன் நட்பானேன். இந்த முரை மன்றம் பற்றி நன்றாகவே அறிந்து கொண்டு அதற்க்கு தகுந்தார் போல என்னை மாற்றி கொண்டேன். இந்த முரை கொட்டும் வாங்கவில்லை. அதே சமயம் முகம் சுழிக்கும் படைப்புகள் எதுவும் பதிக்கவில்லை.

இந்த 2000 - 3000 பதிவுகளில்தான் நான் மன்றத்தில் பல இடங்களில் சுற்ற ஆரம்பித்தேன். கதைகள் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கவிதையை மறந்து விட்டேன். கொஞ்ச பிழைகள் குரைந்து விட்டது. இந்த 1000 பதிவுகல் மன்றத்தில் சாதர்ன லொள்ளுவாத்தியாராக இருந்த என்னை மாவீரன் லொள்ளுவாத்தியாராகவே மாற்றி விட்டது என்று சொல்லலாம். அதன் மூலம் எனனிடம் நிரைய பேர் பழக ஆரம்பித்து விட்டார்கள். இந்த சமயத்தில் மன்றத்தில் விவாதங்களும் குரைந்து விட்டது. கிருக்கு பட்டம் ஆ பத்து கேள்வி போன்ற அருமை திரி ஆரம்பிக்க பட்டு பிறகு ஏனோ தூங்கி விட்டது கவலையளிக்கிறது. இந்த முரை திரிகள் பூட்டபடுவது குரைந்து விட்டது மகிழ்சி அளிகிறது. கடந்த இரு மாதமாக உருப்பினர்கள் என்னிக்கையும் அதிகரித்தது போல் தெரிகிறது.

மன்றத்தில் கூட நிரைய மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது வரவேற்க்க கூடியது. தமிழ்மன்றம் பற்றிய என்னுடைய ஆலோசனைகள் சிலவற்றை முன்வைக்க விரும்புகிறேன்.
குறிப்பாக உருப்பினர்கள் கலந்து கொள்ளும் விதம் பற்றி சொல்லியாக வேண்டும்.

நம் மன்றத்தில் நிரைய உருப்பினர்கள் கலாய்ப்பு பகுதியில்தான் அதிக நாட்டம் காட்டுகிறார்கள். அதில் தவறில்லை, ஆனால் கலாய்ப்பு ஓவராக இருக்க கூடாது. சம்மந்தமில்லாமல் திசை மாரி திரி பக்கம் பக்கமாக வளர கூடாது அல்லவா. முடிந்த வரையில் ஒரு வரி பதிப்புகளை குரைக்கலாமே. அதே போல அடுத்தது கவிதை பக்கம் சுருசுருப்பாக இயங்குகிறது. ஆனால் இலக்கியம், மருத்துவம் ஆன்மீகம் பயனுள்ள தகவல்கள் எல்லாம் சுருசுருப்பில்லாமல் இருக்கிறது. நானும் அந்த பக்கம் போவதில்லை என்பதையும் ஏற்று கொள்கிறேன்.

நமது மன்றம் தமிழ் மன்றம் (கலாய்ப்பு மன்றம் அல்லது கவிதை மன்றம் அல்ல). அதனால் மன்ற உருப்பினர்கள் (என்னையும் சேர்த்து) சில மாற்றங்களை ஏற்படுத்துவோம். அப்பப்ப மற்ற ஏரியாகளையும் ஒரு ரவுண்ட் வந்து பங்களிப்பவர்களை ஊக்குவிப்போம். அந்த பகுதியில் படைப்பவர்கள் உழைப்பு அதிகம். நாமும் அங்கு படைப்புகளை அதிக படுத்த வேண்டும். யவனிகாவின் ஜாலியா இளைக்கலாம் வாங்க போன்ற நகைசுவை கலந்த அதே சமயம் ஆக்கபூர்வமான படைப்புகள் ஆன்மீக பகுதி உட்பட கொடுக்க வேண்டும். அதே சமயம் ஆன்மீகம் மருத்துவம் பகுதியில் படைப்பவர்கள் சொந்த படைப்புகளை மட்டுமே பதிக்குமாரும் கேட்டு கொள்கிறேன். சாம்ந்தி மன்றத்தை நல்ல பல அறிய தகவல்களால் நிரப்புவோம்.

அடுத்தது நம் மன்றத்தில் சிலருக்கு கோட் பன்னுவதை சரியாக கடைபிடிப்பதில்லை. முழு டெக்ஸ்டையும் கோட் செய்து விடுகிறார்கள். அதை குரைக்க வேண்டும். பதிவில் குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் கோட் செய்து கருத்து சொல்லலாம். அதுவும் ஒருவர் பதிவுக்கு நேர் அடுத்த பதிவு பதிக்கும் போது கோட் செய்ய வேண்டாம். இதனால் பக்க அளவு அதிகரித்து பக்கம் திறக்க நேரம் ஆகிறது. மல்டி கோட் பழகி விடுங்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மூத்த உருப்பினர்கள் சிலர் கூட முழு டெஜ்ஸ்டையும் கோட் செய்கிறார்கள். அவர்களுக்கு தனி மடல் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்தது சில உருப்பினர்கள், கலந்து கொள்ளும் அனைத்து இடங்களிலும் தங்களுடைய கொள்கையில் மட்டுமே குறியாக இருப்பார்கள். அவர்கள் சம்மந்த பட்ட கருத்தை தவிர வேறு கருத்துகளை தரவேமாட்டார்கள். இதில் ஜோக் என்னன்னா சம்மந்தமில்லாத திரியிலும் கூட சம்மந்தமில்லாத சர்சையை கிளப்புவார்கள். ஆனால் போக போக மன்றத்தை உனர்ந்து மாறிகொள்கிறார்கள் என்பதில் சந்தோசம். அந்த மாதிரி சம்மந்தமில்லாமல் சர்சையை மட்டுமே பதிப்பவர்களின் பதிப்புகளை நாம் இக்னோர் செய்து விட்டால் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு பொருப்பாளர்களை தவிர மற்றவர்கள் அறிவுரை கூட சொல்வதை தவித்து விடலாம்.

அடுத்தது அடிகடி அவதாரை மாற்றாதீர்கள். சில சமயம் குழப்பி விடுகிறது. அப்படி விசேச நாட்களில் மாற்றினால் விரைவில் பழைய அவதாருக்கு வந்துவிடுங்கள்.

நம் மன்றத்தில் என்னை மிகவும் கவர்ந்தது ஒரே பாலிசிதான், யாரை திருப்தி படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் யாரையும் புன்படுத்த கூடாது என்ற கட்டுகோப்புடன் இயங்குவதுதான். அதற்க்கு மன்றத்தில் பொருப்பாளர்களில் உழைப்புதான் முக்கிய காரனம். சமீபகாலங்களாக நம் மன்றத்தி தனி நபர் சாடல் சுத்தமாக குரைந்து விட்டன என்பது மகிழ்ச்சியான செய்தி.

சிரிப்பு விடுகதை இரண்டையும் தனிதனியாக பிரித்து விடலாம் என்பது என் கருத்து. அரட்டை பகுதி என்று தனியாக ஒரு பகுதி மல்லி மன்றத்தில் வைக்கலாம். சில மாற்ற வேண்டிய பகுதிகளை பட்டியலிடுகிறேன்.
வாழ்த்துகள் தாமரை மன்றத்தில் இருப்பதற்க்கு பதிலாக மல்லி மன்றத்துக்கு கொண்டு செல்லலாம்
செய்தி சோலையை மல்லி மன்றத்தில் இருப்பதற்க்கு பதிலாக சாமந்தி மன்றத்துக்கு கொண்டு செல்லலாம்
இலங்கியம் புத்தகம் மல்லி மன்றத்தில் இருப்பதற்க்கு பதிலாக செவ்வந்தி மன்றத்துக்கு கொண்டு செல்லலாம்
கல்வி அறிவியல் சாமந்தி மன்றத்தில் இருப்பதற்க்கு பதிலாக ரோஜா மன்றத்துக்கு கொண்டு செல்லலாம்
இப்படி சில மாற்றங்களை செய்யலாம்.

அடுத்தது இந்த முரை மன்றத்தில் என்னை சங்கடமாக்கிய விசயம் ஒன்றையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். வெறும் பாராட்டை மட்டும் சொல்லி விட்டு சங்கடங்களையும் சொல்லாமல் செல்வது நிரைவு ஆகாது. அதே சமயம் அது என் மனதில் உருத்தி கொண்டே இருக்கும். அது வெறு ஒன்றும் இல்லை. இனியா அவர்கள் ஆரம்பித்த ஒரு பட்டி மன்றத்தின் தலைப்பு மன்றத்தில் வயதான உருப்பினர்கள் பங்கு பெற ஆர்வமாக இருந்த போது ஒரு சில இழைய உருப்பினர்கள் அதற்க்கு ஆட்சேபம் செய்தார்கள். கருத்தை ஆட்சேபம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு (அதை நான் வரவேற்க்க கூடியவன்). ஆனால் தலைப்பை விவாதம் நடைபறுவதையே ஆட்சேபித்தது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. சங்கடம் ஆட்சேபித்தவர்களால் அல்ல. அதற்க்கு நிர்வாகம் அந்த தலைப்பை விவாதிக்க தடை செய்ததுதான் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதை ஏன் நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன் என்றால், மூத்த உருப்பினர்கள் பலர் பட்டிமன்றம் நிறுத்தபட்டது பற்றி வருத்தம் கொண்டு பொதுவில் பதிக்காமல் என்னிடம் தனி மடல் மூலம் தங்கள் அதிர்ப்தியை தெரிவித்தார்கள். அவர்கள் அனைவர் சார்பாகவும் இந்த கருத்தை நான் இந்த 3000 ஆவது பதிப்பில் பொது கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மன்ற நேயர்களே விவாதங்களில் தனி நபர் சாடல் மதம் அரசியல் சாடல் தவிர்க்க பட வேண்டுமே தவிர சமுதாயத்தில் ஏதார்த்தமாக நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை ஆக்கபூர்வமாக விவாதிக்க கூடாது என்று ஆட்சேபம் செய்வது நல்லதில்லை. யோசித்து பாருங்கள் இப்படி ஒவ்வொரு தலைப்பை யாராவது ஆட்சேபம் செய்து கொண்டிருந்தால் பிறகு எதை தான் விவாதிக்க முடியும். பட்டி மன்றத்தில் கலந்து பாயிண்டுக்கு கவுண்டர் பாயிண்ட் கொடுக்க வேண்டும்.

இந்த 3000 பதிவில் நான் எந்த அளவுக்கு சாதித்தேன் என்பதை விட பல முத்தான நட்புகளை சம்பாரித்து விட்டேன் என்பதை நினைத்தாலே என் சந்தோசம் பன்மடங்கு ஆகிறது. சிலர் அவ்வபோது எனக்கு தனி மடலில் அன்பு அள்ளிதந்து என்னை கரைத்து விடுவார்கள். இரவு கனவில் கூட மன்ற நன்பர்கள் அவதார் மூலம் வந்து விளையாடுகிறார்கள் (கலாய்கிறார்கள்). கனவிலேயே அப்படி என்றால் நினைவில் பகல் கனவில் எந்த அளவுக்கு இம்சை கொடுத்திருப்பார்கள். இறுதியாக மன்றத்துக்கு நான் சொல்லிகொள்வது என் தமிழை வளர்த்தி, எழுத்து பிழைகளை குரைத்து, பன்பட்டவனாக்கி சில அறிவுகளை வளர்த்தி சந்தோசமாக வைத்திருக்கும் உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி.

சிவா.ஜி
10-01-2008, 07:46 AM
மிகவும் சங்கடத்துடன் உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது வாத்தியார்.எல்லாமும் இருக்கும் இடம்தான் இந்த மன்றம் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.அரட்டை அடிப்பதில் தவறில்லை.ஆனால் மிக அருமையான படைப்புகள் கூட இரண்டொருவரின் பார்வை மட்டுமே பட்டு மறைந்து விடுகிறது.நல்ல ஆக்கங்களுக்கான தளம் இதுவல்லவோ என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை.
ஆனாலும் மன்றத்தை பழைய சிறப்பில் பார்க்கமுடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது.

மலர்
10-01-2008, 09:07 AM
3000 குடிசைக்கு திவைத்த லொள்ளுவாத்தியார் டைட்டிலை பாத்ததும் ஒருநிமிஷம் ஆடிப்போயிட்டேன்,,,,
அப்புறம் லொள்ளுவாத்தியார் நு பேரை பாத்ததும் வழக்கம் போல நம்ம வாத்தியாரு அண்ணாவின் பிழை நு நினைச்சிக்கிட்டேன்....
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிசிறப்பு நு பாக்கும் போது வாத்தியாரு அண்ணாவின் கலகலப்பான பதிவுகள் என்றுமே சிறப்பு...

எப்போ படித்தாலும்
லொள்ளபுரிவரலாற்று காவியம் திகட்டியதே இல்லை...
ஒவ்வொருவரையும் போட்டு தாக்கியிருப்பது ஹைலைட்...

அண்ணா நீங்க சொல்லியிருப்பது மாதிரி இலக்கியம், மருத்துவம் ஆன்மீகம் பயனுள்ள தகவல்கள் பக்கம் நானும் போவதே இல்லை.. எல்லா நாளும் நினைப்பேன்.. மன்றத்தில எல்லா பகுதிக்கும் போணுமின்னு... ஆனால் இதுவரை முழுமையா எல்லா பகுதிக்கும் போனதே இல்லை....இனிமே....ம்ம்... பாக்கலாம்
இரவு கனவில் கூட மன்ற நன்பர்கள் அவதார் மூலம் வந்து விளையாடுகிறார்கள் (கலாய்கிறார்கள்). கனவிலேயே அப்படி என்றால் நினைவில் பகல் கனவில் எந்த அளவுக்கு இம்சை கொடுத்திருப்பார்கள்.
ஆஹா... வாத்தியாரு அண்ணாவை பகலில இம்சை படுத்துறது பத்தாதுன்னு நைட்லயும் கனவுல போய் கலாய்த்த அவா ட்டார் யாருன்னு கண்டுபிடிங்கப்பா...

சுகந்தப்ரீதன்
10-01-2008, 09:45 AM
நம் மன்றத்தில் நிரைய உருப்பினர்கள் கலாய்ப்பு பகுதியில்தான் அதிக நாட்டம் காட்டுகிறார்கள். அதில் தவறில்லை, ஆனால் கலாய்ப்பு ஓவராக இருக்க கூடாது. சம்மந்தமில்லாமல் திசை மாரி திரி பக்கம் பக்கமாக வளர கூடாது அல்லவா. முடிந்த வரையில் ஒரு வரி பதிப்புகளை குரைக்கலாமே. நன்றி.
இதை நானும் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன்.. அதற்குள் எங்க வாத்தியார் முந்திகிட்டாரு..! சில இடங்களில் இதுபோன்ற தவறுகளை நானும் செய்தது உண்டு.. பிறகுதான் வெருமனே பின்னூட்ட பதிவும் ஒரு வரி பதிவும் போட்டு பதிவின் எண்ணிக்கையை கூட்டுவது சரியல்ல என்று பதிவுகளின் எண்ணிக்கையை குறைக்க தொடங்கினேன்..!

சிவா அண்ணா சொன்னது போல் தரமான நல்ல படைப்புகள் பல தவறவிடப்பட்டிருக்கிறது நம் மன்றத்தில்..! இதனால் அந்த படைப்பின் நோக்கமே பாழ்பட்டு போவதை உணந்தும் இருக்கிறேன்..! ஆனால் இதில் நாம் யாரையும் குறையோ குற்றமோ சொல்வதற்கில்லை.. ஏனெனில் இங்கே அவரவர்களுக்கும் வேலை குடும்பம் என்று இருப்பதால் மன்றம் வரும் வேலையில் சிக்குவதை மட்டும் படித்துவிட்டு செல்பவர்களும் உண்டு.. தேடி சென்று சில படைப்புகளை உண்பவர்களும் உண்டு..! ஆகையால் கண்டுகொள்ள பட்ட படைப்புகள் மட்டுமே தரமானவை என்றும் மற்றவை அப்படியல்ல என்றும் யாரும் கூறிவிட முடியாது..! அதுமட்டுமில்லாமல் அவரவர்களுக்கு என்று தனிபட்ட ரசனையும் இருக்க கூடும்..! கவிதையை பற்றிய விருப்பமோ ஆர்வமோ இல்லாத ஒருவர் எப்படி கவிதை பக்கம் போவார்..? அது போலத்தான் அவரவர் விருப்பத்திற்கிணங்க பதிவுகளை பார்வை இடுவார்கள்..!

அடுத்து வாத்தியார் கூறியது போல் காலாய்ப்பு இன்று மன்றத்தின் எல்லா பகுதிகளிலும் நடக்கிறது.. திரியின் தன்மைக்கு ஏற்ப பதிவு கொடுக்க நினைக்கும் நானே சிலசமயங்களில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து கலகலப்பில் இறங்கியிருக்கிறேன்...! இதை தவிர்ப்பது மிகவும் நல்லது.. இல்லையென்றால் திரியின் திசை மாறுவதோடு சமயத்தில் கருவே காணாமல் போய் அரட்டையில் முடிந்து விடுகிறது..! இது ஆக்கபூர்வமானது அல்ல... ஆக தவிர்த்து விடுவதே நல்லது..!

கடைசியாக நானும்கூட மன்றத்தை இன்னும் முழுதாக சுற்றி பார்க்கவில்லை.. ஆனால் வாத்தியார் கால்வைக்காத இடமில்லை என்றே தோன்றுகிறது.. ஆகையால அவர்கூறும் சிலமாற்றங்களை நிர்வாகம் செய்து வைக்கும் என்றே நம்புகிறேன்..!

அருமையான பதிவை 3000 வது பதிவாக தந்த வாத்தியாருக்கு எனது வாழ்த்துக்கள்..!

thangasi
10-01-2008, 10:57 AM
முதலில் மூவாயிரம் பதிவுகள் செய்தமைக்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே...

தமிழ்நாட்டில் 'வாத்தியார்' எனப் புகழ் பெற்றவர் மறைந்த முன்னாள் முதல்வர் முனைவர் திரு.ராமச்சந்திரன் (MGR) அவர்கள். இங்கு அந்தளவு புகழ் உங்களுக்கு...

எனக்கு இந்த தளம் புதிது...இங்குள்ள நண்பர்கள் புதிது... ஆனால் புதியவர்கள் பலருக்கும் எப்படி வாத்தியார் மட்டும் இத்தனை பழையவராய் தெரிகிறார் என்பது தெரியவில்லை...

வாத்தியார் = நம்பிக்கை, நட்பு, நல்லூக்கம்...

அமரன்
10-01-2008, 06:12 PM
நினைத்ததை எல்லம் எல்லாராலும் சொல்ல முடிவதில்லை..
தோழமை வெளியேறுகை உள்வருகை முக்கிய காரணம்..
மன்ற மறவர்களிடத்தில் எதையும் வெளிப்படையாக சொல்லக்கூடியதாக இருப்பது வரம்..
மன்றம் வரும் எல்லாரும் இன்புற்ற வேண்டும் என்பதே எனது பேராவல்......
ஒரு வரி ஆனாலும் கரு வரை அகழும் விமர்சனக்களை சமீபகாலமாகக் காணக்கிடைப்பதில்லை என்பது பலரின் ஆதங்கம். உண்மை எனது வேதனை...

எப்படி தொடங்குவது என்று தவித்த எனக்கு வழிகாட்டிய முதல் தீக்குச்சி துவங்கி தொடர்ந்தவை வரை அனைவருக்கும் நன்றி.. தொடர்ந்து நிறைகுறைகளை சொல்லுங்கள் வாத்தியாரே!

mgandhi
10-01-2008, 06:50 PM
மூவாயிரம் பதிவுகள் செய்தமைக்கு
வாழ்த்துக்கள் லொள்ளுவாத்தியாரே

இளஞ்சூரியன்
22-01-2008, 11:36 AM
3000 பதிவுகள் செய்த எங்கள் வாத்திக்கு வாழ்த்துக்கள்.

எனக்கு சற்றே நெருடலான ஒரு செய்தியையும் இங்கு பதிவு செய்து விடுகிறேன். 14-09-2007 அன்று முதல் முதலாய் வேறு ஒரு தளத்தில் சேர்ந்து, தமிழ் தட்டச்சு அறிந்து, பின்பு கதை புனையும் ஆர்வம் ஏற்பட்டு, அங்கு கதைகள் படைத்து, ஓரளவு நேசிக்கப் படுபவனாக விளங்குகிறேன்.

அந்த தளத்தில்தான் தமிழ் மன்றம் குறித்து விவரம் அறிந்து இங்கு வந்து இணைந்தேன். இங்கு பெரும் புதையல் இருக்கிறது என்பது பெரு மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.

நான்கு கதைகளைப் படைத்தேன். அனுபவக் கதைகளாக அவை தெரியுமே தவிர, சுவை கருதி, என் நிலையில், நான் அனுபவிப்பது போல் பதித்தேன்; ஆனால் அவற்றில் இரண்டினை நீதிக் கதைகள் பக்கம் கொண்டு செல்லப் பட்டு விட்டது!! எனக்கே நீதி போதனை என்றால் ஒத்துக் கொள்வதில்லை!!! அப்படியிருக்க நீதி போதனைப் பகுதியில் என் கதைகள்!!!!

என் வங்கிக் கணக்கில் கடன் இருந்தாலே எனக்குப் பிடிக்காது. ஆனால் தமிழ் மன்றத்தில் icash - இபணம் என்னைக் கடன்காரனாகக் காட்டுகிறது!! இதுவும் எப்படி எனப் புரியவில்லை.

இன்னும் நான் 2000 பதிவுகள் செய்தால்தான் அடுத்த நிலைக்கோ அல்லது உயர் நிலைக்கோ போக இயலும் என்பது எனக்கு சிறிதும் ஒத்துக் கொள்ளாத ஒன்று. ஒரு வார்த்தைப் பதிவுகள் "ம்ம்ம் பிரமாதம்" என செய்வது மிகச் சுலபம். ஆனால் எனக்குப் பிடிக்காத ஒன்று. அவ்வாறு அனைத்து மன்றங்களிலும் நான் நுழைந்து, ஒரு மணி நேரத்தில் எதியும் படிக்காமலே, எதையும் சுவைக்காமலே, 50 பதிவுகள் செய்து 2000 என்ற இலக்கினை சுமார் இரண்டு மாதத்தில் எட்டி விட இயலும்.

நமது நிர்வாகம், இது போன்ற பதிவுகளைத்தான் விரும்புகிறதா? லொள்ளு வாத்தியார் என்னைப் பற்றி ஓரளவு அறிந்தவர் என்பதால் அவரின் திரியில் இக்கருத்துக்களைப் பதிக்கிறேன்.

தவறு என்று தோன்றினால் நிர்வாகிகள், இக்கருத்தினை நீக்கி விடவும்.

இவண் இளஞ்சூரியன்.

இதயம்
22-01-2008, 11:56 AM
நண்பர் இளஞ்சூரியனுக்கு,
என் பதில் உங்கள் கேள்விகளுக்கு சரியான பதிலை தரும் என்று நம்புகிறேன். நம் தளத்தில் இணைந்து தமிழ் தட்டக்கற்று அனுபவக்கதை எழுதுமளவுக்கு தங்களை உயர்த்திக்கொண்ட உங்கள் உழைப்பும், தமிழ் மீதான உங்கள் பற்றும் பாராட்டுக்குரியது.!!

உங்களுடைய அனுபவங்கள் நீதிக்கதை பகுதிக்கு கொண்டு போனதற்கு 2 காரணங்கள் இருக்கிறது. 1. அதை சரியாக இட அனுபவக்கதைகள் என்று எந்த தனிப்பிரிவும் மன்றத்தில் இல்லை. 2. ஒவ்வொரு அனுபவங்களின் உள்ளேயும் கண்ணுக்கு தெரிந்தோ, தெரியாமலோ சில நீதி இருக்கும். அதுமட்டுமல்லாமல் அது சுவையான சம்பவங்களையும் உள்ளடக்கி இருக்கும் என்பதால் அதை நீதிக்கதைகள் சுவையான சம்பவங்கள் பகுதிக்கு நகர்த்தியதில் எந்த தவறும் இல்லை. காரணம், எங்களுடைய படைப்புகளும் அங்கு தான் வைக்கப்படுகின்றன.

உங்கள் இ-பணம் ஏன் கடன் கணக்கில் காட்டுகிறது என்பது தொடர்பான காரணம் எனக்கு விளங்கவில்லை. அதை நிர்வாகத்தினர் உங்களுக்கு விளக்குவார்கள் அல்லது சரி செய்வார்கள். இங்கு உறுப்பினர்களுக்கு கிடைக்கும் பதவிகள் புதியவர், இளம்புயல், இனியவர், அனைவரின் நண்பர், மன்றத்தின் தூண் ஆகியவை நீங்கள் சொன்னது போல் பதிவின் எண்ணிக்கை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. இதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. நான் முதல்ல, நீ கடைசியில் திரியில் 3 நாட்கள் நீங்கள் சுற்றினால் நீங்க முதல்ல (அதாவது மன்றத்தின் தூண்) ஆகிவிடலாம். ஆனால், இங்கு வரும் உறுப்பினர்கள் அவர்களின் பதிவின் எண்ணிக்கையில் வைத்து கணிக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அது பெரும் தவறு. இங்கு வரும் பெருந்தலைகள் எல்லாம் தங்களின் திறமையான, அறிவார்ந்த படைப்புகளால் புகழ்பெற்று விளங்குகிறார்கள். மன்றத்தின் தூணாகியும் ஒருவர் பெறாத பெயரை, புகழை இளம்புயல் ஒருவர் பெரும் வாய்ப்பு இங்கே இருக்கிறது. எனவே பதிவு எண்ணிக்கை மனதில் கொண்டு பதிவதை விட அதில் கொடுக்கும் கருத்தை முன்னிறுத்திப்பார்ப்பதே சிறந்தது.

ஆனால், இ-பணம் பதிவெண்ணிக்கை அடிப்படையில் அமைக்கப்பட்டதல்ல. உங்களின் எழுத்தெண்ணிக்கையை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதிலும் எனக்கு உடன்பாடில்லை. காரணம், இணையத்தில் உள்ளதை வெட்டி ஒட்டினாலும் அதையும் சொந்த படைப்பு போலவே கருதி இ-பணத்தை தளம் வழங்கும்.

இதையெல்லாம் தாண்டி, நாம் நம் அறிவை பகிர்ந்து கொள்ளவும், மற்றவரிடமிருந்து கற்கவும் வருகிறோம் என்பதை உணர்ந்து அதற்காக மன்றத்தை பயன்படுத்திக்கொண்டால் மேற்சொன்னவற்றை பற்றிய கவலைகள் ஏற்பட வாய்ப்பே இல்லை..!! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்..!!

அறிஞர்
22-01-2008, 02:51 PM
3000 பதிவு தந்த வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.
-------
மன்றத்தின் நிலை பற்றி தங்களின் எண்ணத்தை கொடுத்ததற்கு நன்றி...

மன்றத்தில் கலாய்ப்பது ஆதி முதல் இருக்கிறது. அதை கட்டுபடுத்த... அரட்டைப்பகுதி என்ற பகுதியை ஆரம்பித்தோம் (விவாத பகுதியில்). பொதுவாக மற்றத்திரிகளில் அரட்டை காணப்பட்டால் பொறுப்பாளர்கள் அரட்டைத்திரிக்கு மாற்றிவிடுவர்.. அங்கு அனைவரும் அரட்டையை தொடரலாம்.

இது நம் மன்றம். நாம் அனைவரும் சேர்ந்தால் இதைக் குறைத்துவிடலாம். (கலாய்ப்பது யாருங்க.... நாம் தானே...). இனி பொறுப்பாளர்களும் கொஞ்சம் கண்டிப்புடன் நடப்பார்கள்.
-----
பகுதிகளை மாற்றுவதைக்குறித்து தாங்கள் கூறியதை.. கருத்தில் கொள்கிறோம்.

எந்த நோக்கத்தோடு... அந்த அந்த மன்றங்களில் திரிகள் ஆரம்பிக்கப்பட்டது.. என ஆலோசகர்களிடம் பேசி... தகுந்த மாற்றத்தை கொண்டுவருகிறோம்.

திரிகளை பூட்டுவது பற்றி... பொதுவில் அறிவிப்புக்கொடுத்து தான் பூட்ட முயலுகிறோம். ஏதும் தவறு நடந்தால் எனக்கு தெரிவியுங்கள்....

அறிஞர்
22-01-2008, 02:52 PM
இளஞ்சூரியன் தங்கள் பங்கு இன்னும் பெருகட்டும்.. ஐகேஷ் + மாறியுள்ளது.

சில புதியவர்களுக்கு கணக்கு -ல் ஆரம்பிக்கிறது.. அதை கவனிக்கிறோம்.

அக்னி
22-01-2008, 11:51 PM
3000 பதிவுகள் கண்ட வாத்தியாருக்கு எனது வாழ்த்துக்கள்.
தடைகள் குறுக்கிடுகையில் சோர்ந்து போகும் மனம், மனிதமனம்.
ஆனால், எழுத்துப் பிழை என்னும் தடையைத் தாண்டி, வெற்றிநடை போடும் உங்கள் தமிழ் ஆர்வத்திற்கும், முயற்சிக்கும் தலைவணங்குகின்றேன்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். மன்றத்தை உயர்த்துவோம்.

செல்வா
23-01-2008, 06:45 AM
3000 பதிவுகள் படைக்கும் வாத்தியாரண்ணாவுக்கு வாழ்த்துக்கள். சாதாரணமாக குற்றம் குறைகளை யாரும் முன் வந்து கூறுவதில்லை. எனக்கென்ன வந்தது நமக்கேன் வம்பு என்ற படி ஒதுங்கிச் சென்றுவிடுவர். ஒருவர் மீது அன்பு இருந்தால் மட்டுமே இயலும் காரியம் இது. அநத விதத்தில் குறைகளைச் சுட்டியது வாத்தியாரண்ணாவுக்கு நமத மன்றத்தின் மீதுள்ள அன்பும் இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும் என்னும் ஆர்வமும் ஆதங்கமும் தெரிகிறது. கண்டிப்பாக இக்குறைகளை களைய எல்லோரும் நினைப்போம் முயலுவோம்.

இளஞ்சூரியன்
24-01-2008, 03:35 AM
# 09 நல் இதயத்திற்கு நன்றி. உடனடியாக என் பங்களிப்பை அதிகரிக்க இயலவில்லை. இருப்பினும் தமிழ் மன்றத்திற்கு தொடர்ந்து பங்களிக்க, முயலுவேன்.

இபணம் குறித்து நான் எழுதியது நகைச்சுவை கருதியே தவிர உள்ளர்த்தம் கொண்டல்ல.

நான் யார் மனதையும் புண்படுத்தவில்லை என நம்புகிறேன். நன்றி வணக்கம்.

lolluvathiyar
24-01-2008, 01:46 PM
இன்னும் நான் 2000 பதிவுகள் செய்தால்தான் அடுத்த நிலைக்கோ அல்லது உயர் நிலைக்கோ போக இயலும் என்பது எனக்கு சிறிதும் ஒத்துக் கொள்ளாத ஒன்று.

படைப்பதோடு நான் கடமை முடிந்து விட்டது அதன் பயன் இருக்கிறதா என்று ஆராய்சி செய்து கொன்டு இருக்க கூடாது. நாம் படைப்பது மற்றவர்களுக்கு பயன்படுகிறதோ இல்லையே நிச்சயம் நமக்கு பயன்படுகிறது. படைக்க படைக்க தகுதியும் பக்குவமும் கூடி கொன்டு இருகிறது. அந்த வகையில் மன்றத்துக்கு நன்றி கடன் பட்டிருகிறோம்

மனோஜ்
26-01-2008, 08:26 AM
3000 பதிவுக்க வாழ்த்துக்கள் வாத்தியாரே
கருத்துகள் அருமை நன்றி

venkai
29-02-2008, 02:47 PM
உங்களுக்கு பைத்தியம் ஏதவது பிடித்துவிட்டதா? ஏன் இப்படி உங்களைப்பற்றியே ஒரு திரி ஆரம்பித்து மற்றத் திரிகளை அவமானப்படுத்துகிறீர்கள்

அமரன்
29-02-2008, 04:05 PM
உங்களுக்கு பைத்தியம் ஏதவது பிடித்துவிட்டதா? ஏன் இப்படி உங்களைப்பற்றியே ஒரு திரி ஆரம்பித்து மற்றத் திரிகளை அவமானப்படுத்துகிறீர்கள்
அன்பரே!
அன்பாகவும் பண்பாகவும் மிகவும் நாகரிகமாகவும் பழகும் மன்றத்தில் இப்படி ஒரு பதிவா? வேதனையாக உள்ளது. எதிர்காலத்தில் தவிர்த்து புரிதலுடன் செயல்படுங்கள். இன்னொருதடவை இதுபோல செயல்பட்டு எச்சரிக்கைப் புள்ளியை அதிகரித்துக்கொள்ளாதீர்கள்.

நன்றி.