PDA

View Full Version : அரசு நிலங்களை வளைத்த திரையுலக பிரமுகர்



மாதவர்
10-01-2008, 01:30 AM
சென்னை அருகே பொன்னேரி, கரடிபுத்தூரில் கிராமத்தில்அரசு புறம்போக்கு நிலங்களை திரையுலக நடிகர்,இயக்குனர் ஆகியோர் ஏக்கர் கணக்கில் வளைத்துள்ளது அண்மையில் தெரிய வந்துள்ளது.
என்ன கொடுமை என்றால் முதல்வன், ஜெண்டில்மேன் போன்ற படங்களில் ஊருக்கு நீதி சொன்னவர் தானே 15 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வளைத்து விட்டது மிகவும் ஆச்சர்யம்!!
நடிகர் ,கட்சிதலைவர் சட்டமன்ற உறுப்பினர் புரட்சி கரமாக ரமணா படம் நடித்தவர் இவர் எடுத்துக்கொண்டது 12 ஏக்கர் புறம்போக்கு நிலம்
ஊருக்கு உபதேசம்!!!

சிவா.ஜி
10-01-2008, 03:46 AM
ஊருக்குத்தான் உபதேசம் போலிருக்கிறது.செல்வாக்கை எப்படியெல்லாம் பயண்படுத்துகிறார்கள்.சட்டம் தன் வேலை செய்யுமென்று எதிர் பார்க்கமுடியாது.
இளிச்சவாய பொதுமாக்கள் தேமேயென்று விழித்துக்கொண்டு நிற்க வேண்டியதுதான்.

lolluvathiyar
10-01-2008, 04:35 AM
இது எங்கிருந்து எடுக்கபட்ட செய்தி, சற்று புரியாததாக இருகிறது. அரசு புறம்போக்குகளில் பல வகை இருகிறது.
அதில் சில வகை இடங்கள் விவசாயிகள் கையில் இருக்கும். பல நாள் கழித்து அவை அந்த விவசாயிக்கு பட்டா தந்து விடுவார்கள். சில இடங்களில் விவசாயி வரி கட்டி கொண்டு அனுபவித்து வந்திருப்பார். அந்த இடங்களை சட்டரீதியாக அவருக்கே சொந்தம் மாதிரிதான். அவர் மாட்கெட் ரேட்டுக்கு கேட்ட்டால் அவருக்கு அளிக்க வேன்டும். அவர் யாருக்கும் தர சொல்க்றார்களோ அவருக்கு போய் சேரும். அந்த மாதிரி இடங்களை இவர்கள் வாங்கி இருப்பார்கள். அரசாங்கம் எதிராளிகளுக்கு பிரச்சனை தர பழைய ரெகார்டுகளை வைத்து தொல்லை தருவார்கள். பிறகு கவனிப்பு மூலம் உரியவர் நிலங்களை காப்பாற்றி கொள்வார்கள்.

மாதவர்
11-01-2008, 02:02 AM
இது அதிகாரபூர்வமான செய்தி. எல்லா தினசரியிலும் வந்துள்ளது
எவ்வித பட்டாவும் இல்லாமல் ஊரில் உள்ள சமுக விரோதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு இந்த கனவான்கள் நிலங்களை அபகரித்துள்ளனர்.
எதோ ஒரு சில நல்ல அதிகாரிகள்( திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்,பொன்னேரி வருவாய் கோட்ட அலுவர்) விடாமுயற்சியால் மேற்படி நிலங்கள் கையகப்படுட்த்தப்படுள்ளன.

நேசம்
11-01-2008, 05:34 AM
இதை கேட்டு ஆச்சர்யபடுவதற்கு ஒன்றும்மில்லை

உதயசூரியன்
11-01-2008, 03:40 PM
ஆமாம் இப்ப தான் தினசரியில் படித்தேன்..

விஜய காந்தும்..
இயக்குனர்.. ஷங்கரும்..

வாழ்க தமிழ்