PDA

View Full Version : படித்துக்காட்டும் பிடிஎப் டாக்குமெண்ட்

தங்கவேல்
10-01-2008, 01:14 AM
அனைவருக்கும் பிடிஎப் டாக்குமென்டுகள் பற்றி தெரியும் என்று நினைக்கின்றேன். ஆங்கில மொழியில் இருக்கும் பிடிஎப் டாக்குமெண்டை திறந்து கொள்ளவும். கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + வி சேர்த்து அழுத்தினால் திறந்து இருக்கும் பக்கத்தை அழகாக படித்து காட்டுகின்றது. கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + இ அழுத்தினால் நின்று விடும். முழு டாக்குமெண்டையும் படிக்க கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + பி அழுத்த வேண்டும். அடோப் அக்ரோபேட் ரீடர் 6 அல்லது 7ம் பதிப்பில் வேலை செய்கின்றது. ஜாலியா கேளுங்க, கேளுங்க , கேட்டுக்கிட்டே இருங்க.....

அப்புறம் ஸ்பீக்கர் வேணுமா என்றெல்லாம் கேள்வி கேட்டு கலாய்க்க கூடாது.

அதிகப் பிரசிங்கத்தனமா தமிழைக் கேட்கலாம் என்று டாக்குமெண்டுகளை திறந்து மேற்படி கீகளை அழுத்தினால் ஒன்றும் வராது. பேக் சிலாஷ் அது இதுவென்று அழகிய தமிழ் பாடல்களாக கேட்கும்.

இசை அமைப்பாளர்கள் இதனை உபயோகப்படுத்தலாம். அடியேனும் முயற்சி செய்து கதிகலங்கிப் போனேன்...

ஷீ-நிசி
10-01-2008, 01:50 AM
உண்மையிலேயே இன்றைக்குதான் கேள்விபடுகிறேன்...

நன்றி தங்கவேல்... பகிர்ந்தமைக்கு.....

Hayath
10-01-2008, 11:07 AM
மிக்க நன்றி..அருமையாக வேலை செய்கிறது.ஆங்கிலத்திலுள்ள எல்லாவற்றையும் படித்து காண்பிக்கிறது. தமிழில் உள்ளதை படிக்க சொன்னால் எச்சரிக்கை சொல்கிறது.

அன்புரசிகன்
10-01-2008, 11:08 AM
வீடு சென்று முயன்று பார்க்க வேண்டும். நன்றி தங்கம்.

ஓவியன்
10-01-2008, 11:49 AM
உண்மைதான் ஒலி வடிவில் கேட்கலாம், முன்பு என்னுடன் கூட இருந்த நண்பனொருவன் ஆங்கில உச்சரிப்பு முறை படிக்கிறேன் பேர்வழி என்று கணினியில் இருந்த அக்ரோபாட் கோப்புக்களை எல்லாம் ஒலிக்க செய்து என் தூக்கத்தைக் கெடுத்து இம்சை செய்த போது அறிந்து கொண்டேன். :D

ஏற்கனவே அக்ரோபாட் போலவே Microsoft Reader (http://www.microsoft.com/reader/downloads/pc.mspx) என்றொரு மென்பொருள் உண்டு, இதுவும் அழகாக வாசித்துக் காட்டும்.....

மன்ற மின்னிதழ் பகுதியிலுள்ள இந்த புத்தகத்தைப் (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=16) படிக்க இந்த மென்பொருள் வேண்டும்...

மயூ
10-01-2008, 04:09 PM
Computer Generated Voice என்று இதனைச் சொல்வார்...!!!
ஆபீஸ் 2003 ல் நாங்கள் பேச தட்டச்சிடும் வசதியும் உண்டு!!!

தங்கவேல்
10-01-2008, 10:43 PM
அத் எப்படி என்று சொல்லுங்கள் மயூ..

மயூ
11-01-2008, 02:23 AM
அத் எப்படி என்று சொல்லுங்கள் மயூ..
இந்த வார இறுதியில் ஒரு தனிப் பதிவு போடுகின்றேன்!!!!! :)

அறிஞர்
11-01-2008, 03:51 AM
தொழில் நுட்ப புரட்சி.. எங்கெல்லாம் இழுத்து செல்கிறது..

பார்வை தெரியாதவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக அமையும்...

நேசம்
11-01-2008, 05:37 AM
நல்ல தகவல்.பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணா

தங்கவேல்
12-01-2008, 12:32 AM
மயூ, அந்த பதிவு இட்ட உடன் , தனி மடல் ஒன்று போடுங்கள்....

அக்னி
18-01-2008, 02:46 AM
புதிய தகவல்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தங்கவேல் & ஓவியன்.

எப்படி நிறுத்துவது என்றுதான் புரியவில்லை. கோப்பை ஒரேயடியாக மூடித்தான் நிறுத்தவேண்டுமா அல்லது கோப்பை மூடாமல் ஒலியை மட்டும் நிறுத்த வேறு வழிவகை உண்டா?

அன்புரசிகன்
18-01-2008, 05:31 PM
எப்படி நிறுத்துவது என்றுதான் புரியவில்லை. கோப்பை ஒரேயடியாக மூடித்தான் நிறுத்தவேண்டுமா அல்லது கோப்பை மூடாமல் ஒலியை மட்டும் நிறுத்த வேறு வழிவகை உண்டா?

அனைவருக்கும் பிடிஎப் டாக்குமென்டுகள் பற்றி தெரியும் என்று நினைக்கின்றேன். ஆங்கில மொழியில் இருக்கும் பிடிஎப் டாக்குமெண்டை திறந்து கொள்ளவும். கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + வி சேர்த்து அழுத்தினால் திறந்து இருக்கும் பக்கத்தை அழகாக படித்து காட்டுகின்றது. கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + இ அழுத்தினால் நின்று விடும். முழு டாக்குமெண்டையும் படிக்க கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + பி அழுத்த வேண்டும். அடோப் அக்ரோபேட் ரீடர் 6 அல்லது 7ம் பதிப்பில் வேலை செய்கின்றது. ஜாலியா கேளுங்க, கேளுங்க , கேட்டுக்கிட்டே இருங்க.....

:icon_b: :icon_b: :icon_b:

பூமகள்
27-02-2008, 01:50 PM
சூப்பர் தகவல்..!!
இப்ப தான் கவனித்தேன்.. என் கணினியில் அக்ரோ பேட்டில் இ-புத்தகத்தை படிக்க விட்டு.. கவனிக்க ரொம்ப அழகாக தகுந்த ஏற்ற இறக்கத்துடன் கேட்க இயலுகிறது.

மிக மிக பயனுள்ள தகவல் தங்கவேல் அண்ணா. மிகுந்த நன்றிகள். :)

தமிழ்
05-04-2008, 06:28 AM
அருமையான* மிக பயனுள்ல தகவல். வேலைசெய்வதைப் பார்த்ததும் அரண்டு போய்விட்டேன்.
பகிந்துகொண்டதற்க்கு நன்றி..