PDA

View Full Version : நான் அசடு வழிந்த தருணம் :)



திவ்யா
09-01-2008, 04:36 PM
நான் முதலாம் ஆண்டு படிக்கும் போது நடந்த நிகழ்ச்சி இது.

கல்லூரியில் சேர்வதற்கு முன் எனக்கு எங்கும் தனியாக சென்று பழக்கமில்லை.அதனால் முதலாம் ஆண்டு படிக்கும் போது விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பும் போதெல்லாம், என் தந்தை தான் என்னை அழைத்துச் செல்வார். எங்கள் ஊருக்கும், நான் பயிலும் கல்லூரி உள்ள ஊருக்கும் செல்ல, ஒரே பேருந்து மிகக் குறைவு. நடுவில் ஒரு நிருத்தத்தில் இறங்கி வேறு பேருந்து மாற வேண்டி இருக்கும்.

ஒரு முறை, என் தந்தையால் என்னுடன் வர இயலவில்லை. அது தேர்வு சமயம் என்பதால் நான் கல்லூரி சென்றே ஆகவேண்டும். வேறு வழி இல்லாமல் என்னை தனியாக அனுப்ப முடிவு செய்தார். என்னை வழி அனுப்ப பேருந்து நிறுத்தம் வரை வந்தார். ஒரே அறிவுரை தான். எனக்கும் உள்ளுக்குள் பயம் இருக்கத்தான் செய்தது.(முதல் முறை அல்லவா).

நான் பேருந்தில் ஏறி அமர்ந்த பின்பு என் தந்தையின் அறிவுரை (ஜன்னல் அருகில் நின்று) தொடர்ந்தது. நானும் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம், எனது பின் இருக்கையில் ஒரு வாலிபன் வந்து அமர்ந்தான். என் தந்தையோ விடாமல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் அவர் நடத்துனரிடம் சொல்லிவிட்டு செல்லட்டுமா என்று வேறு கேட்டார்.

எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.(அந்த பையன் என்ன பத்தி என்ன நினைப்பான் என்று எண்ணிதான்). உடனே என் தந்தையிடம், நான் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் செல்லுங்கள் என்று கூறிவிட்டேன். பேருந்தும் கிளம்பிவிட்டது. நான் இறங்க வேண்டிய நிறுத்தமும் வந்தது.

நான் அடுத்த பேருந்து ஏற வேண்டும். அதுவோ பெரிய பேருந்து நிருத்தம், நான் செல்ல வேண்டிய பேருந்து எங்கு நிற்கும் என்று கூட எனக்கு தெரியாது. இந்த பதற்றத்தில், அந்த வாலிபனை சுத்தமாக மறந்து விட்டேன். அப்போது ஒரு பேருந்து வந்து நின்றது. அதன் பின் புறத்தில் நான் செல்ல வேண்டிய ஊரின் பெயர் போட்டிருப்பது பார்த்து, வேகமாக சென்று ஏறிக்கொண்டேன். ஜென்னலோரமாக இடம் பார்த்து அமர்ந்து கொண்டேன். பரவாயில்லை நாம் இனிமேல் தனியாகவே வரலாம் போல, வீணா அப்பாவ வேறு கஷ்டபடுத்த வேண்டாம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தேன்.

என்னுடன் பயணம் செய்த அந்த வாலிபன், ஜென்னல் அருகில் வந்து நின்று " என்னங்க உங்க அப்பா கல்லூரிக்கு தான போக சொன்னாரு நீங்க திரும்ப வீட்டுக்கே போறிங்க" என்று சொன்னான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் அவன் "நிஜமா தாங்க சொல்றேன், கீழே இறங்குங்க " என்றான். உடனே நான் எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் கேட்டேன்.

அப்போது தான் தெரிந்தது, நான் பேருந்தின் பின்புறம் பார்த்து தவறுதலாக ஏறிவிட்டேன் என்று. எனக்கு மிகவும் அசிங்கமாக போய்விட்டது. மேலும் அந்த பேருந்தில் இருந்த ஒருவர் "பாத்தா படிச்ச பொண்ணாட்டம் இருக்க பாத்து ஏறமாட்டியாமா" என்றார். ஒன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே இறங்கி விட்டேன்.பிறகு, அந்த வாலிபன் தான் நான் போகவேண்டிய பேருந்தில் இடம் பிடித்துக் கொடுத்தான். :)

சிவா.ஜி
09-01-2008, 04:44 PM
அந்த நேர பதட்டத்தில் அப்படி செய்திருக்கிறீர்கள்.எல்லோருக்கும் ஏற்படுவதுதான்.நீங்களாவது அந்த வாலிபன் துணையால் உடனே இறங்கிவிட்டீர்கள்.என் நன்பனொருவன் 50 கிலோமீட்டர் போய் திரும்பி வந்திருக்கிறான்.(தூங்கிவிட்டதால்)

அனுபவத்தை அழகான தமிழில் சொல்லத்தெரிகிறது உங்களுக்கு.வாழ்த்துகள்.

ஷீ-நிசி
10-01-2008, 02:00 AM
நாங்கூட தூக்கத்துல ரயிலில் பயணம்செய்யும்போது அடுத்த நிறுத்தத்தில் இறங்கின அசடு வழியும் சம்பவங்களில் சிக்கியிருக்கிறேன்...

நல்ல கட்டுரை தொகுப்பு திவ்யா..

இந்த கட்டுரை என்ன சொல்லுது....

"பட்சிக்கிற இடத்திலிருந்து பட்சணம்" வரும்னு ஒரு வசனம் உண்டு பைபிளில்..

அதேதான்.. நாம யாரை கண்டு பயப்படுறோமா அவங்க எதிரியா இருப்பாங்கன்றது நிச்சயமில்லை..

தொடர்ந்து பயணியுங்கள்.. வாழ்த்துக்கள்!

ஓவியன்
20-01-2008, 02:04 AM
அட இதிலென்ன இருக்கு திவ்யா...
நாம எல்லாம் நம்ம கல்லூரி வழி போகும் பஸ்ஸில் ஏறி இறங்க வேண்டிய இடத்தில் இறங்காம (தூங்கினா எப்படி இறங்குறதாம்...!! :D). கல்லூரியைத் தாண்டி நாலு ஊருக்கு அப்பாலே இறங்கி மறு படி பஸ் பிடிச்சு எல்லாம் வந்திருக்கோமாக்கும்....

ஹீ,ஹீ..........!! :D:D:D

நல்ல நடை தொடர்ந்து எழுதுங்க...... :)

ஆதவா
20-01-2008, 02:26 AM
நல்ல கட்டுரை திவ்யா அவர்களே!

இருந்தாலும் நீங்க ரொம்ப பயப்படறீங்க. பசங்க எவ்ளோஓஓ நல்லவங்க பாத்தீங்களா???

- ஆதவன்

சுகந்தப்ரீதன்
20-01-2008, 08:30 AM
நல்லவேளை அந்த வாலிபன் உண்மையை சொல்லி உதவுனதால உங்களால தேர்வு எழுதி பாஸாகி இப்ப மன்றம் வந்து அனுபவத்த சொல்ல முடிஞ்சுது.. அதுக்கு அந்த வாலிபனுக்குதான் நன்றி சொல்லனும் திவ்யா..!

ஆர்.ஈஸ்வரன்
20-01-2008, 09:16 AM
கடைசிவரை திடுக்கிட வைத்துவிட்டீர்கள். நான் அந்த வாலிபன் பொய்யைத் தான் சொல்கிறான் என்று கடைசி நினைத்துவிட்டேன். தப்பித்துக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்.

திவ்யா
20-01-2008, 01:02 PM
நல்லவேளை அந்த வாலிபன் உண்மையை சொல்லி உதவுனதால உங்களால தேர்வு எழுதி பாஸாகி இப்ப மன்றம் வந்து அனுபவத்த சொல்ல முடிஞ்சுது.. அதுக்கு அந்த வாலிபனுக்குதான் நன்றி சொல்லனும் திவ்யா..!


நீங்கள் சொல்வது சரிதான். தற்பொழுது கூட அந்த பேருந்து நிலையம் செல்லும் போது என்னை அறியாமல் தானாக சிரிப்பு வந்து விடும்

திவ்யா
20-01-2008, 01:03 PM
நாங்கூட தூக்கத்துல ரயிலில் பயணம்செய்யும்போது அடுத்த நிறுத்தத்தில் இறங்கின அசடு வழியும் சம்பவங்களில் சிக்கியிருக்கிறேன்...

நல்ல கட்டுரை தொகுப்பு திவ்யா..

இந்த கட்டுரை என்ன சொல்லுது....

"பட்சிக்கிற இடத்திலிருந்து பட்சணம்" வரும்னு ஒரு வசனம் உண்டு பைபிளில்..

அதேதான்.. நாம யாரை கண்டு பயப்படுறோமா அவங்க எதிரியா இருப்பாங்கன்றது நிச்சயமில்லை..

தொடர்ந்து பயணியுங்கள்.. வாழ்த்துக்கள்!

நன்றி ஷீ-நிசி அவர்களே