PDA

View Full Version : எனது கல்லூரி அனுபவம்திவ்யா
09-01-2008, 04:34 PM
நான் கல்லூரியில்(பெண்கள் கல்லூரி) இரண்டாம் ஆண்டு படிக்கும் போது நடந்த சம்பவம் இது.

எங்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர் ஒருவருக்கு பேச்சு சற்று குளறும்.
அவர் நடத்துவது எதுவும் எங்களுக்கு சரி வர புரியாது. அதனால் கவனிக்க மாட்டோம். (மற்ற வகுப்புகளை எல்லாம் நல்லா கவனிப்பேன் பா. ஏன்னா நான் நல்ல பொண்ணு).இதனால் பொதுவாகவே அவர் பாடம் நடத்தும் போது வகுப்பில் சத்தம் சற்று அதிகமாகவே இருக்கும். எங்கள் ஆசிரியரும் விடாமல் நடத்துவார். அப்போது அவரை பார்க்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.

நான், அவர் மனதை புண்படுத்தக்கூடாது என்பதற்காக கவனிப்பது போல் நடிப்பேன். ஒரு நாள் அவ்வாறு நடிக்கும் போது என்னையும் அறியாமல் தூக்கம் வந்துவிட்டது. அன்று அவருக்கு தொடற்சியாக இரண்டு வகுப்பு வேறு. தூங்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். யோசனையின் முடிவில் வீட்டிற்கு கடிதம் எழுத முடிவு செய்தேன்.

ஆசிரியருக்கு தெரியாமல் எழுத வேண்டும் என்பதால் (தெரிஞ்சா அவர் மனசு கஷ்டபடும் பாருங்க, அதான்)அவர் நடத்தும் போது என்ன எழுதலாம் என்று யோசிப்பேன் (அதாவது பாடத்தை கவனிப்பேன்).பின்பு அவர் கரும்பலகையில் எழுதும் போது, நானும் எழுதுவேன்.

வகுப்பில் அனைவரும் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் பாடத்தை கவனித்தது(!!!) அவருக்கு வியப்பையும், சந்தோஷத்தையும் அளித்தது. அவர் என்னை கவனித்ததை நான் பார்க்க வில்லை. அப்போது, அடுத்து என்ன எழுதுவது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன்.

என் பெயரைச் சொல்லி கூப்பிட்டார். நான் கடிதம் எழுதுவது தெறிந்துதான் எழச்சொல்கிறாரோ என்று பயந்துவிட்டேன். காரணம் புரியாமல் திருதிரு வென முழித்துகொண்டே எழுந்து நின்றேன்.என் நிலைமையை பார்த்து அருகில் இருந்த தோழிகள் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

எப்போதும் கோபம் கொள்ளாத எங்கள் ஆசிரியருக்கு கடுங்கோபம் வந்து விட்டது.(பின்ன, அவர் வகுப்பை கவனிக்கும் ஒரே பெண் நான் தான், என்னை கேலி செய்தால் பொறுத்துக்கொள்வாரா,நீங்களே சொல்லுங்க.)அனைவரையும் பார்த்து "ஏன் அந்த பெண்ணை பார்த்து சிரிக்கிறீர்கள். அந்த பெண்ணை பார்த்து வகுப்பில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

பின்பு, என்னை பார்த்து "உனக்கு என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேள், பயப்படாதே" என்றார். அப்போது தான் எனக்கு தெரிந்தது, நான் கடிதத்தில் அடுத்து என்ன எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்ததை, அவர் நடத்திய பாடத்தில் எனக்கு ஏதோ சந்தேகம் என்று நினைத்துக் கொண்டார் என்பது.

என்ன நடத்தினார் என்று தெறிந்தால் தானே கேள்வி கேட்க முடியும். அதனால் நான், "sir எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் சத்தம் போடுவதால் நீங்கள் கூறுவது எதுவும் என் காதில் சரியாக விழவில்லை" என்றேன். அவர் மறுபடியும் அனைவரையும் திட்டிவிட்டு, எனக்காக திரும்பவும் அதனை நடத்தினார்.

அனைவரும் என்னை கோபமாக பார்த்தார்கள். நான் யாரையும் கண்டு கொள்ளாமல் ஒழுங்காக பாடத்தை கவனித்தேன் (வேறு வழியில்லாமல் தான்). வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியில் சென்றதும் என் கதி என்னவாகிருக்கும் என்று நான் சொல்ல வேண்டுமா என்ன.

பாரதி
09-01-2008, 05:18 PM
ஹஹஹா.... நல்ல அனுபவம்தான்..! எப்படியெல்லாம் யோசித்து நீங்கள் உங்கள் நேரத்தை பயனுள்ளதாகவும் ஆக்கி இருக்கிறீர்கள்.. ஆனால் ஒன்று நம் மன்றத்தில் இணைந்த உறவுகள் அனைவரும் நல்லவர்களாகவே இருக்கிறார்களே..! எப்படி? சுவாரஸ்யமான பதிவிற்கு பாராட்டுக்கள் திவ்யா.

திவ்யா
09-01-2008, 05:26 PM
நன்றி பாரதி :)

செல்வா
09-01-2008, 06:03 PM
நல்ல நகைச்சுவை போங்கள் இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஆனால் உண்மையில் இந்தநிகழ்ச்சி நடக்கும் பொது கண்டிப்பாக கண்ணைக் கட்டியிருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி...


ஆனால் ஒன்று நம் மன்றத்தில் இணைந்த உறவுகள் அனைவரும் நல்லவர்களாகவே இருக்கிறார்களே..! எப்படி?

:traurig001::traurig001::traurig001:

எல்லாரும் நல்லவிங்களா இருக்குறதப் பாத்து ... அழுக அழுகயா... வருது....


(இலக்கியச் சோலைண்ணு ஒண்ணப் போட்டு ஊரக் கெடுத்துட்டு இருக்காரெ அவரக்கூடவாச் சொல்றீங்க....:eek::eek:)

மயூ
10-01-2008, 05:16 PM
ஹா ஹா!!!
நல்ல வாத்தி, நல்ல மாணாக்கர்!!! எங்க காலேஜூலநா அடிச்சுப்பின்னிடுவாங்க!!!

aren
11-01-2008, 11:02 AM
ஆமாம், எல்லோரும் நான் ரொம்பவும் நல்லவங்க என்று சொல்வது இங்கே அதிகமாகிவிட்டது.

திவ்யா நல்ல பதிவு. ஆனால் உங்களுக்கு என்னவாச்சு என்று கொஞ்சம் எழுதினால் எங்களுக்கும் படிக்க சந்தோஷமாக இருக்கும்!!!

சுகந்தப்ரீதன்
20-01-2008, 10:22 AM
ஆஹா...! முன்னமே தெரிஞ்சிருந்தா நான் கூட காலேஜ் படிக்கையில உங்க யுக்திய உபயோகிச்சி பயணடைஞ்சிருப்பேனே..!

பாவம் உங்க வாத்தியாரு.. வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புவாரு போலிருக்கு...! பின்ன என்ன திவ்யா உங்கள போயி நம்பி இருக்காருல்ல அவரு..?!

திவ்யா
20-01-2008, 01:50 PM
ஆமாம், எல்லோரும் நான் ரொம்பவும் நல்லவங்க என்று சொல்வது இங்கே அதிகமாகிவிட்டது.

திவ்யா நல்ல பதிவு. ஆனால் உங்களுக்கு என்னவாச்சு என்று கொஞ்சம் எழுதினால் எங்களுக்கும் படிக்க சந்தோஷமாக இருக்கும்!!!

அதை சொன்னால் எனக்கு நன்றாக இருக்காது. அதான் சொல்லவில்லை:p

திவ்யா
20-01-2008, 01:56 PM
ஆஹா...! முன்னமே தெரிஞ்சிருந்தா நான் கூட காலேஜ் படிக்கையில உங்க யுக்திய உபயோகிச்சி பயணடைஞ்சிருப்பேனே..!

பாவம் உங்க வாத்தியாரு.. வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புவாரு போலிருக்கு...! பின்ன என்ன திவ்யா உங்கள போயி நம்பி இருக்காருல்ல அவரு..?!

என்ன இப்படி சொல்லிடீங்க. என்ன மாதிரி நல்ல பொண்ணு தேடினாலும் கிடைக்கமாட்டங்க. :rolleyes:
என்ன நம்பாம வேற யார நம்புவாரு பாவும்

ஓவியன்
20-01-2008, 02:05 PM
ஹா,ஹா இதுக்குதான் நம்மளைப் போல வகுப்பிலே முன்னாலும் உட்காராம, பின்னாலும் உட்காராம நடுவிலே உட்காரணும்கிறது. கடிதம் என்ன அன்று ஒப்படைக்க வேண்டிய புரோஜெக்டையே வகுப்பிலே பாடம் நடக்கும் போது தான் எழுதி முடிப்போமாக்கும்... :aetsch013:

________________________________________________________________________________________

சுவையான நல்ல ஞாபகங்கள், தோடருங்க திவ்யா..!! :)

ஓவியன்
20-01-2008, 02:07 PM
ஆஹா...! முன்னமே தெரிஞ்சிருந்தா நான் கூட காலேஜ் படிக்கையில உங்க யுக்திய உபயோகிச்சி பயணடைஞ்சிருப்பேனே..!

உங்களுக்கு தான் பிரச்சினை இல்லெயே சுபி...
நீங்க தான் எப்போதும் முகத்தை பொத்திட்டு இருப்பீங்களே...
முகத்தைப் பொத்திக் கொண்டு தூங்கினால் என்ன தெரியவா போகுது...??? :D:D:D

ஷீ-நிசி
20-01-2008, 02:14 PM
ஹா.. ஹா...

அந்த சம்பவம் அப்படியே படிக்க படிக்க கற்பனையில ஓடிச்சி.. அடடா...

அந்த ஆசிரியர் நெஜமாவே ரொம்ப நல்லவருப்பா..... :)

சாலைஜெயராமன்
20-01-2008, 06:35 PM
நிஜமாகவே தப்பித்திருக்கிறீர்கள் திவ்யா. தான் எடுத்த பாடத்தை மாணவர்களுக்கு திரும்பவும் எடுக்கச் சொல்லி உங்களைப் பணித்திருந்தால் என்ன கதி ஆகியிருக்கும். எழுதிய கடிதத்தில் உள்ள அனைத்து விவரங்களும் அனிச்சையாக ஆசிரியர் முன் வந்திருக்கும். ஏனென்றால் தூக்கக் கலக்கத்தில்தானே நீங்கள் கடிதம் எழுதினீர்கள். ரொம்பவும் நடிக்கமுடியாது பாருங்க.

மனோஜ்
20-01-2008, 06:44 PM
நல்ல அனுபவம் பாவம் அந்த ஆசிரியர்
கவனித்த மாணவியும் இப்படி கவினிச்சுருக்காங்கனா அவர நினைத்தா பரிதாபமாக இருக்கு
பகிந்தமைக்கு நன்றி திவ்யா அவர்களே

இன்பா
25-01-2008, 10:55 AM
இதுப்போல் அனுபவம் அனைவர் பள்ளி/கல்லூரி வாழ்க்கையுலும் நடந்திருக்கும்... ஆனால் நீங்கள் சொல்லியவிதம் ரசிக்கவைக்கிறது திவ்யா...

இப்படித்தான், வாத்தியார் பாடம் எடுக்கும் போது அமைதியே உருவாய், நல்ல பிள்ளைகளில் சிகரமாய் நடிப்போம், பாவம் அது அறியாத ஆசானோ நம்மேல் காட்டும் அக்கரை...???

நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள் திவ்யா...

அனுராகவன்
03-02-2008, 09:24 AM
நன்றி திவ்யா..!!
ம்ம் நல்ல பகிர்வு!!!
நல்ல அனுபவம்தான்..
என் நன்றி

யவனிகா
03-02-2008, 12:06 PM
நல்ல பதிவு திவ்யா. அநியாயத்துக்கு நல்ல பிள்ளையா இருந்திருக்கீங்க.

நாங்க எல்லாம் உங்கள போல இல்லை. எங்களுக்கு போரடிச்சா என்ன செய்வோம் தெரியுமா...ஒரு வெள்ளப் பேப்பர் எடுத்து ஆரம்பிப்போம்.ஒவ்வொருத்தரா பாஸ் ஆகும் பேப்பர்.

அகிலா : ஏண்டி, இந்த லெக்சரர் இந்த கடி போடுது....எனக்கு தூக்கமும் அழுகையும் சேந்து வருது தெரியுமா

கல்பனா :இதை யாரு டயட்டடிக்ஸ் லெக்சரரா போட்டது...நல்லா அரிசி மூட்ட மாதிரி இருக்கு.

தீபா: அத விடு, அடுத்த அவர் கேட்டரிங் பிராக்டிகல்ஸ்...இன்னைக்கு என்ன செய்யலாம்...பஜ்ஜி சாப்பினனும்னு ஆசையா இருக்கு.

திவ்யா: ஏன் சொல்ல மாட்ட...பஜ்ஜியா தின்னு கன்னம் முழுக்க பரு நிறைஞ்சு கிடக்கு...இன்னைக்கு ஸ்பெசல் "
ஸீகந்த்."

மீனா : அடியே...கே.ஜி. ல என்ன படம்? விஜய் படமா....நேருக்கு நேர் ன்னு நினைக்கிறேன். அது யாருடி புதுப் பையன் . சூர்யா. சிவக்குமார் பையனா. டேம் ஸ்வீட்.

அர்ச்சனா : ஆமாண்டி... ஆனா டான்ஸ் ஆடறான் பாரு...அவள் வருவாளா அவள் வருவாளா ன்னு பாப்பாவக் கூப்பிடற மாதிரி ஆடறாம்ப்பா...

திலகா: வெளிய என்னவோ வாசம் வருது...கேண்டின்ல வடை போடறாங்களா? நான் வேணா வெளிய போய் பாத்துட்டு 10 பிளேட் ரிசர்வ் செய்யவா?

வனிதா: எப்படி டி போவ...இது ரம்பத்த நிறுத்த மாட்டீங்குதே....

மேம்...டூ மச் ஹெட் ஏக் மேம்...அய் பீல் லைக் வாமிட்டிங்...கேன் இ கோ அவுட் மேம்....

தெரியும் நீ எங்க போறேன்னு கிட்டு...வாமிட் வந்தா உன் சீட்லியே எடு. பரவாயில்லை.இனி என் கிளாஸ தொந்தரவு செய்தா ஹெ.ஓ.டி. கிட்ட அனுப்புவேன்.

aren
03-02-2008, 02:45 PM
யவனியக்கா ரொம்பவும் நல்லவங்கப்பா!!!!

இப்படி உண்மைகளை போட்டு இங்கே உடைக்கிறார்களே??????

saguni
03-02-2008, 06:34 PM
ரொம்ப நல்ல படைப்பு!! வாழ்த்துக்கள்

தங்கவேல்
04-02-2008, 12:10 AM
எனது வகுப்பிலேயும் இப்படித்தான் இருந்திருப்பாய்ங்களோ ??? இந்த பொண்ணுங்களை நம்பவே முடியவில்லையே...