PDA

View Full Version : மீண்டும் காத்திருக்கிறேன்திவ்யா
09-01-2008, 02:24 PM
உன்னை பார்க்கும் போது
சண்டைபோட வேண்டும் என்று
பல காரணங்களை சேகரித்து வைத்திருந்தேன்..

நீ எனக்கு பதில் அனுப்ப மறந்த மின்னஞ்சல்கள்
என்னுடன் சரியாக பேசாத தொலைபேசி உரையாடல்கள்
chatடில் எனக்கு பதிலாக தரும் வெறும் 'ம்'கள்
என்னை கோபப்பட வைக்கும் சில பதில்கள்
வருவதாக சொல்லி ஏமாற்றிய சந்திப்புகள்
இவற்றுக்கெல்லாம் எப்படி சண்டைபோடுவது என்று
ஒத்திகை கூட பார்த்துவிட்டேன்
ஆனால் நம் சந்திப்பின்போது
இவை அனைத்தும் மறந்துபோகின்றன

ஆகையால் மீண்டும் காத்திருக்கிறேன்
உன்னுடன் சண்டை போடுவதற்கான
அடுத்த சந்திப்பை எதிர்பார்த்து....

ஆதி
09-01-2008, 02:47 PM
உன்னுடனான
ஒவ்வொரு சந்திப்பிலும்
உதிர்ந்துவிடுகிறது
உன்னிடம் சண்டையிட
நான் ஏந்திவரும்
சம்பங்கள்..

என்றாலும்,
மறக்கப் போகும்
மற்றொரு சம்பவங்களையும்
மற்றொரு சந்திப்பையும்
எதிர்பார்த்து
காத்திருக்கிறேன்..

யதார்த்தமான காதல் கவிதை.. அழகியல் தூரும் வரிகள்.. எளிய நடை அத்தனையும் அருமை..

தங்களில் அத்தனை உணர்ச்சிகளையும் வார்த்துவிட எண்ணி நீங்கள் கவிதையின் கட்டமைப்பில் கவனம் செலுத்தவில்லை என நினைக்கிறேன்..

நெஞ்சில் காதலின் ஈரத்தைத் தூரிப்போனக் கவிதைக்கு உங்களுக்கும் பாராட்டுகள் திவ்யாஸ்..

அறிமுகப் பகுதியில் தங்களை அறிமுகம் செய்து கொள்ளலாமே..!!

அறிஞர்
09-01-2008, 02:50 PM
மனதில் ஏற்படும் இயல்பான வரிகள்....
-
சண்டை போட..
பேச நினைப்பவைகள்...
பல

ஆனால் பார்வை பட்டவுடன்..
அனைத்தும் மாயமாகிவிடுகின்றன...
--
அருமை..

தங்களை பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்களேன். தங்களை திவ்யா என்றே அழைக்கலாமா...

திவ்யா
09-01-2008, 03:05 PM
என்னை திவ்யா என்றே அழைக்கலாம்.மேலும் என்னைப் பற்றி அறிமுகப் பகுதியில் சொல்கிறேன்.

//தங்களில் அத்தனை உணர்ச்சிகளையும் வார்த்துவிட எண்ணி நீங்கள் கவிதையின் கட்டமைப்பில் கவனம் செலுத்தவில்லை என நினைக்கிறேன்//

நீங்கள் கூரியது சரிதான். மேலும் எனக்கு கவிதை எழுதி பழக்கமில்லை.
இது என் முதல் முயற்சி.

தங்களின் கருத்துகளுக்கு நன்றி

ஆதி
09-01-2008, 03:40 PM
மேலும் எனக்கு கவிதை எழுதி பழக்கமில்லை.
இது என் முதல் முயற்சி.

உண்மையில் முதல் முயற்சிக் கவிதைப் போல் தோன்றவில்லை.. உங்களுக்கு கவிதை வசப்படுகிறது தொடருங்கள் இன்னும் நிறைய எழுதுக்கங்கள்..

வாழ்த்துக்களுடன் ஆதி

lolluvathiyar
10-01-2008, 05:42 AM
சரியாக சொன்னீர்கள் காதல் பேச்சு தானாக வந்தால் தான் உன்டு ஒத்திகை பார்த்து சென்றால் எதுவும் வராது. அங்கு தான் கன்களே முக்காவாசி பேச்சு பேசி விடுகிறதே

செல்வா
10-01-2008, 06:44 AM
ஹா....ஹா....
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து -ன்

புதுக் கவிதை வடிவம்

முயற்சிக்கு வாழ்த்துக்கள்

சிவா.ஜி
10-01-2008, 06:50 AM
முதல் முயற்சியில் சொல்லவந்ததை சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் திவ்யா.இன்னும் போகப்போக எழுத்தில் கவிதைத்தனம் வந்துவிடும்.ஆதியின் பின்னூட்டம் பாருங்கள்.நீங்கள் சொன்ன கருத்தையே அழகாக்கியிருக்கிறார்.மன்றம் உங்களையும் நல்ல கவிதாயினி ஆக்கிவிடும்.வாழ்த்துகள்.

மதி
10-01-2008, 06:58 AM
நல்ல முதல் முயற்சி திவ்யா...
மேலும் கவிதை எழுத வாழ்த்துக்கள்..

வசீகரன்
10-01-2008, 10:58 AM
chatடில் எனக்கு பதிலாக தரும் வெறும் 'ம்'கள்
....

இது போன்ற ஆங்கில வார்த்தைகளை தவிருங்கள் திவ்யா..!
முதல் பதிப்பு என்று சொல்ல முடியாதபடிக்கு நன்றாக அமைத்திருக்கிறீர்கள்...! பாராட்டுக்கள் ஊடலும் கூடலும்.... தானே காதலில்.... சுவாரசியங்கள்....! தொடருங்கள் திவ்யா,
நல்ல ஆக்கம்...!

அமரன்
10-01-2008, 02:40 PM
கன்னி முயற்சிக்கு வாழ்த்துகள் திவ்யா..
அயராமல் இன்னும் எழுதுங்கள்..
சிங்காரிக்காத குழந்தையும் அழகே

சாலைஜெயராமன்
10-01-2008, 04:08 PM
அன்பு திவ்யா என் பெண்ணின் வயது உங்களுக்கு.

வயதுக்கேத்த சிந்தனைகள். ஊடலே காதலின் உண்மைச் சின்னம். கருத்துக்ளை இன்னும் சற்று ஆழமாக்கியிருக்கலாம். இருப்பினும் உணர்வு பூர்வமான வரிகள். காதல் சிந்தனைகள் தாண்டி கற்பனைகளை வளப்படுத்த கவியின்பம் கனிந்து வரும்

உங்கள் கருத்துக்களுக்கான என்னுடைய கவிதை முயற்சி. கருத்துக் கூறவும்.

சண்டையிடச் சேர்த்துவைத்த சாதாரணச் சங்கதிகள் உனைச்
சந்தித்தவுடன் சக்தியிழந்து சற்றே நிலைகுலைந்ததேன்
சடுதியில் சரியவைத்த உன் சத்திய அன்பினை மீண்டும்
சோதிக்க இயலாது சாதாரணச் சிந்தனைகளால்
மறந்தவற்றை நினைவு கொண்டு மவுனமாக சண்டையிட
களத்தை நோக்கி காத்திருப்பேன் காதலான கண்களோடு

ஆர்.ஈஸ்வரன்
12-01-2008, 09:28 AM
[QUOTE=திவ்யா;315513]உன்னை பார்க்கும் போது
சண்டைபோட வேண்டும் என்று
பல காரணங்களை சேகரித்து வைத்திருந்தேன்..

நீ எனக்கு பதில் அனுப்ப மறந்த மின்னஞ்சல்கள்
என்னுடன் சரியாக பேசாத தொலைபேசி உரையாடல்கள்
chatடில் எனக்கு பதிலாக தரும் வெறும் 'ம்'கள்
என்னை கோபப்பட வைக்கும் சில பதில்கள்
வருவதாக சொல்லி ஏமாற்றிய சந்திப்புகள்
இவற்றுக்கெல்லாம் எப்படி சண்டைபோடுவது என்று
ஒத்திகை கூட பார்த்துவிட்டேன்
ஆனால் நம் சந்திப்பின்போது
இவை அனைத்தும் மறந்துபோகின்றன

நிஜம் அப்படித்தான் இருக்கும்.

புரியாத பிரியம், பிரியும் போது புரியும்.

சுகந்தப்ரீதன்
12-01-2008, 11:59 AM
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் திவ்யா..!

தொடர்ந்து எழுதி வாருங்கள்.. இன்னும் மெருகு கூடும் உங்கள் கவிதை வரிகளில்..!

பென்ஸ்
18-01-2008, 01:41 PM
உணர்வுகளால் வரும் வார்த்தைகளை அப்படியே ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தார் போல் ...
நல்ல கவிதை கட்டமைப்புக்கு தகுதி பெறாவிட்டாலும், நல்ல முயற்ச்சி.
புதுகவிதையில் கிடைக்கு இலக்கணமின்மை என்ற வசதியை நம்மை போன்ற புதியவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்....

இன்னும் எழுதுங்கள்...
அன்பு திவ்யா என் பெண்ணின் வயது உங்களுக்கு.

வயதுக்கேத்த சிந்தனைகள். ஊடலே காதலின் உண்மைச் சின்னம். கருத்துக்ளை இன்னும் சற்று ஆழமாக்கியிருக்கலாம். இருப்பினும் உணர்வு பூர்வமான வரிகள். காதல் சிந்தனைகள் தாண்டி கற்பனைகளை வளப்படுத்த கவியின்பம் கனிந்து வரும்

உங்கள் கருத்துக்களுக்கான என்னுடைய கவிதை முயற்சி. கருத்துக் கூறவும்.

சண்டையிடச் சேர்த்துவைத்த சாதாரணச் சங்கதிகள் உனைச்
சந்தித்தவுடன் சக்தியிழந்து சற்றே நிலைகுலைந்ததேன்
சடுதியில் சரியவைத்த உன் சத்திய அன்பினை மீண்டும்
சோதிக்க இயலாது சாதாரணச் சிந்தனைகளால்
மறந்தவற்றை நினைவு கொண்டு மவுனமாக சண்டையிட
களத்தை நோக்கி காத்திருப்பேன் காதலான கண்களோடு

நல்ல கருத்துகள் சாலை ஜெயராமன் அவர்களே....
திவ்யாவின் வரிகளை வாசித்து புரிந்து கொண்ட உங்களுக்கு
உங்கள் மனதையும் புரிந்து கொள்ளும் அலைவரிசை இருக்கும் என்பதில் மகிழ்ச்சியே....

ஆனால் கவிதையில் உணர்வுகளுக்கு இடையில்
அனுபவ யதார்த்தம் புகுத்த படுகிறதோ???? :)
பாராட்டுகள் இருவருக்கும்...

ஷீ-நிசி
18-01-2008, 03:25 PM
உன்னை பார்க்கும் போது
சண்டைபோட வேண்டும் என்று
பல காரணங்களை சேகரித்து வைத்திருந்தேன்..

நீ எனக்கு பதில் அனுப்ப மறந்த மின்னஞ்சல்கள்
என்னுடன் சரியாக பேசாத தொலைபேசி உரையாடல்கள்
chatடில் எனக்கு பதிலாக தரும் வெறும் 'ம்'கள்
என்னை கோபப்பட வைக்கும் சில பதில்கள்
வருவதாக சொல்லி ஏமாற்றிய சந்திப்புகள்
இவற்றுக்கெல்லாம் எப்படி சண்டைபோடுவது என்று
ஒத்திகை கூட பார்த்துவிட்டேன்
ஆனால் நம் சந்திப்பின்போது
இவை அனைத்தும் மறந்துபோகின்றன

ஆகையால் மீண்டும் காத்திருக்கிறேன்
உன்னுடன் சண்டை போடுவதற்கான
அடுத்த சந்திப்பை எதிர்பார்த்து....

திவ்யா..... முதல் கவிதைக்கு என் வாழ்த்துக்கள்...

சின்ன சின்ன வரிகளில் முழு எண்ணங்களையும் உள்ளே கொண்டுவாங்க...

தொடர்ந்து எழுதுங்க... வாழ்த்துக்கள்...

யவனிகா
18-01-2008, 03:55 PM
தொடர்ந்து முயற்சியுங்கள் திவ்யா...நாங்களும் உங்களைப் போலத் தான்...வாழ்த்துக்கள்.

ஓவியன்
18-01-2008, 06:22 PM
நீங்கள் கூரியது சரிதான். மேலும் எனக்கு கவிதை எழுதி பழக்கமில்லை.
இது என் முதல் முயற்சி.

அட என்ன திவ்யா, மன்றத்துக்கு வரும் போதே நீங்கள் கவிதையுடன் வந்திருக்கிறீர்கள்...
நம்மில் ஒருவர் மன்றத்துக்கு வந்து ஒரு இரண்டாயிரம் பதிவுகளை பதித்த பின்னர்ர் தான் அட இதுதான் கவிதை என்று கண்டறிந்தார்...

அவருடன் ஒப்பிட்டால் நீங்கள் எத்துணையே மேல்...
தொடர்ந்து மன்றத்துடனும் கவிதைகளுடனும் இணைந்திருங்கள்...

மன்றத்தின் அசத்தல் கவிதாயினியாக கலக்குவீர்கள்...!! :icon_b:

அதற்கு என் முன் வாழ்த்துக்கள்..!! :)

திவ்யா
20-01-2008, 01:09 PM
அன்பு திவ்யா என் பெண்ணின் வயது உங்களுக்கு.

வயதுக்கேத்த சிந்தனைகள். ஊடலே காதலின் உண்மைச் சின்னம். கருத்துக்ளை இன்னும் சற்று ஆழமாக்கியிருக்கலாம். இருப்பினும் உணர்வு பூர்வமான வரிகள். காதல் சிந்தனைகள் தாண்டி கற்பனைகளை வளப்படுத்த கவியின்பம் கனிந்து வரும்

உங்கள் கருத்துக்களுக்கான என்னுடைய கவிதை முயற்சி. கருத்துக் கூறவும்.

சண்டையிடச் சேர்த்துவைத்த சாதாரணச் சங்கதிகள் உனைச்
சந்தித்தவுடன் சக்தியிழந்து சற்றே நிலைகுலைந்ததேன்
சடுதியில் சரியவைத்த உன் சத்திய அன்பினை மீண்டும்
சோதிக்க இயலாது சாதாரணச் சிந்தனைகளால்
மறந்தவற்றை நினைவு கொண்டு மவுனமாக சண்டையிட
களத்தை நோக்கி காத்திருப்பேன் காதலான கண்களோடு

உங்கள் கவிதை மிகவும் அருமை தந்தையே (தங்களை தந்தை என்று அழைக்கலாமா?)

திவ்யா
20-01-2008, 01:12 PM
அட என்ன திவ்யா, மன்றத்துக்கு வரும் போதே நீங்கள் கவீதையுடன் வந்திருக்கிறீர்கள்...
நம்மில் ஒருவர் மன்றத்துக்கு வந்து ஒரு இரண்டாயிரம் பதிவுகளை பதித்த பின்னர்ர் தான் அட இதுதான் கவிதை என்று கண்டறிந்தார்...

அவருடன் ஒப்பிட்டால் நீங்கள் எத்துணையே மேல்...
தொடர்ந்து மன்றத்துடனும் கவிதைகளுடனும் இணைந்திருங்கள்...

மன்றத்தின் அசத்தல் கவிதாயினியாக கலக்குவீர்கள்...!! :icon_b:

அதற்கு என் முன் வாழ்த்துக்கள்..!! :)

வாழ்துகளுக்கு நன்றி ஓவியன்:)

இன்பா
25-01-2008, 10:07 AM
இயல்பான வரிகளை கோர்த்து கவிதையாக ரசிக்க வைத்திருக்கிறீர்கள்...

நன்றி