PDA

View Full Version : மழை காலம்



ஆதி
09-01-2008, 11:30 AM
ஒவ்வொரு மழைகாலமும்
தூறிப் போகிறது
எதாவது ஒரு ஈரத்தை
மனதிலும்..
விழியிலும்..

மழையால் மூழ்கின வீடுகள்
மழையால் சாய்ந்தன மரங்கள்
மழையால் இறந்தனர் ஜனங்கள்
எனும்,
வழக்கமான சம்பவங்களை
செய்தி தாள்களில்
புரட்டுவதின் ஊடே..

எங்காவது ஒரு திசையில்
யாராவது ஒருவர்
எதிர்ப்பார்த்துதான் இருப்பர்
மற்றொரு மழை காலத்தை..

-ஆதி

அமரன்
11-01-2008, 07:37 AM
எந்த ஒரு விசைக்கும் மட்டுமல்ல,
வினைக்கும் எதிர் வினை உண்டு.

ஈரம்....
அழிவுகளின் பெறுதி.
அதுவே
விளைகளின் தாயும்..

பாராட்டுகள் ஆதி.

சாம்பவி
11-01-2008, 06:58 PM
ஒவ்வொரு மழைகாலமும்
தூரிப் போகிறது
எதாவது ஒரு ஈரத்தை
மனதிலும்..
விழியிலும்..

****ஆதி

தூறிப் போனது
தூரப் போனதோ... !!!

அறிஞர்
11-01-2008, 09:18 PM
அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே ஆபத்துதான்.

அளவான மழை...
செழுமையான நிலம்

செல்வா
12-01-2008, 06:56 AM
சும்மாவா வள்ளுவன் கடவுளிற்கு அடுத்து வான்சிறப்பு வைத்தான். இயற்கை நியதியை மாற்ற இயலுமா? சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள் ஆதி.
(சம்பங்களை - சம்பவங்களை என நினைக்கிறேன் 'வ' விடுபட்டுள்ளது)

சிவா.ஜி
12-01-2008, 07:04 AM
மழையின் மறுபக்கம்....சில சமயங்களில் அழிவைத்தருவதாகவும் இருக்கிறது.இருந்தும் இந்த கவிதை சொல்வதைப்போல மீண்டும் வராதா மழை என எல்லோரையும் ஏங்க வைக்கிறது.
சிறந்த பார்வை.வாழ்த்துகள் ஆதி.

ஆர்.ஈஸ்வரன்
12-01-2008, 09:16 AM
ஒவ்வொரு மழைகாலமும்
தூரிப் போகிறது
எதாவது ஒரு ஈரத்தை
மனதிலும்..
விழியிலும்..

அருமையான கவிதை வரிகள்.

பென்ஸ்
17-01-2008, 05:30 PM
வானம் அழுதாதான் இந்த பூமியே சிரிக்கும்....

சண்டை நடந்தாதான் வக்கீலுக்கு வாழ்க்கை....
நோய் வந்தாதான் வைத்தியனுக்கு வாழ்க்கை..

ஷீ-நிசி
18-01-2008, 01:24 AM
நல்ல கவிதை ஆதி!

வாழ்த்துக்கள்!

சுகந்தப்ரீதன்
02-02-2008, 11:22 AM
எல்லாவற்றிற்க்கும் பக்கங்கள் இரண்டு...! மழையை பற்றிய மாறுப்பட்ட கோணத்தில் அமைந்த கவிதைக்கு நன்றி நண்பா..!! வாழ்த்துக்கள்..!!

அனுராகவன்
03-02-2008, 03:38 AM
நல்ல சோக கவி..!
மழையே நம்பி ஒருபுறம்.!.
மழையால் போனது மறுபுறம்..!
என்ன செய்ய காலம் மாறும்..!
காட்சிகள் தெரியட்டும்..!!!