PDA

View Full Version : மாற்ற(ம்) விரும்பி



மதி
09-01-2008, 09:58 AM
மாறுதலே இல்லா வாழ்க்கையால்
மாறிக்கொண்டிருக்கிறேன் நான்
சிரிப்பு தான் வருகிறது
நேற்றும் இதே தான்
இன்றும் இதே தான்
நாளையும் இது தானோ?
முயற்சிக்கத் தெரியவில்லை
முடிவெடுக்கத் துணிவில்லை
புன்முறுவல் பூத்த முகம்
புன்னகையைத் தொலைக்க ஆரம்பித்துள்ளது
எண்ணங்கள் கரைய பயம் பெருக
'வேறொருவன் முந்திவிடுவானோ?'
செய்ய ஆரம்பித்துவிட்டேன்
என்றும் செய்யும் காப்பி பேஸ்ட்டை.

பூமகள்
09-01-2008, 10:04 AM
புன்சிரிப்பு பூத்தமுகம்
புன்னகை தொலைக்க..!

புரியாமல் விழித்திருக்கும்
பூவிழிக் கண்கள்..!

முந்துபவர் வந்தாலும்
முயற்சி திருவினையாக்கும்..!

காப்பி பேஸ்டும்
கை கொடுக்கும்..!! :icon_b:

தாமரை
09-01-2008, 10:05 AM
செய்ய ஆரம்பித்துவிட்டேன்
என்றும் செய்யும் காப்பி பேஸ்ட்டை.

காப்பி பேஸ்டை வச்சு நல்லா விளக்கிட்டீங்க மதி :D

நல்ல விஷயங்கள் அதிகமா இருந்தா
மாறித்தானே ஆகணும்:lachen001::lachen001:

அறிஞர்
12-01-2008, 05:11 PM
மாற்றம் விரும்பி...
காப்பி பேஸ்ட்...

மற்றவர் முந்தால் இருக்க அது கைகொடுக்கட்டும்.