PDA

View Full Version : வெங்காய பாய்ஸ்ஸின் வரலாறு - IIமதி
09-01-2008, 09:50 AM
ஆரம்பித்து ஒரு வருசத்துக்கு மேலாச்சு. அப்போ வீட்டில் நான், மருது, பார்த்தி மற்றும் விஜய் இருந்தோம். எங்க கூட்டத்துல மருது மட்டும் விதிவிலக்கு. எப்போதும் லேட்டா தான் வருவான். மத்த மூணு பேரும் சுமார் பத்து மணிக்கெல்லாம் வீட்டில இருப்போம். ஆரம்பிச்சுடும் வழக்கம் போல மொக்கை.
அப்போ தான் அறிமுகமாச்சு யோகி-பியின் மடை திறந்து பாடல். ஆடியோவும் வீடியோவும் அடிக்கடி பார்த்தி லேப்டாப்பில் போட்டு பார்ப்போம்.

உதயமாயிற்று அந்த ஐடியா. நாம ஏன் பாடக் கூடாது? எச்சரிக்கை: இதுக்கு மேல படிப்பவர் நல்லா பஞ்சு வச்சு காத மூடிக்கோங்க. பார்த்தியோட மொபைல்ல வாய்ஸ் ரெக்கார்ட் பண்ற வசதி வேற இருந்துச்சு. ஆரம்பிச்சுட்டோம் எங்க லீலைகளை. அதுலேயும் ராத்திரி 12 மணி அளவில் உச்சஸ்தாயில் பாடும் சுகம் இருக்கே. தனி தான் போங்க. அப்போ நான் இருந்த வீட்டை சுற்றிலும் பெண்கள் பி.ஜி. பென்ஸ்கிட்ட கேளுங்க. ஒரு தடவை வீட்டுக்கு வந்து வயிறெரிஞ்சு போனார். பொழுது போக பாடுன மாதிரியும் ஆச்சு. மெண்டோஃப்ரஷ் போடாமலே இம்ப்ரஸ் பண்ணின மாதிரியும் ஆச்சு. தொடங்கியாச்சு எங்க வேலைகளை.

பாடணும். முதல்ல என்ன பாட்டு பாடலாம். அப்போ எல்லோரையும் கவர்ந்திருந்த மடை திறந்து பாடலையே பாடுவெதென்று முடிவாச்சு. அதுக்கு முன்னாடி குழுவுக்கு ஏதாச்சும் பேர் வைக்கணுமே. மூணு பேர் இருக்கோம். (இந்த விஷயத்தில் எங்க டைமும் மருது டைமும் சரிப்படாது). என்ன வைக்கலாம்? ரொம்பவே மண்டைய கொடஞ்சதுல கெடச்ச பேர் தான் வெங்காய பாய்ஸ். பிரபலமா இருக்குற Venga Boys மாதிரி வெங்காய பாய்ஸ். இதுக்கு சிம்பாலிக்கா சப்-டைட்டில் வேற. உரிக்க உரிக்க ஒன்னுமேயில்ல. எவனுக்கு பாட்டுல அன்னா ஹூம்.. அனா ஆவன்னா.. தப்பு தப்புசரிகம ன்னா என்னான்னே தெரியாது. இவங்கல்லாம் சேர்ந்தா வேற என்னா வரும்..? கண்ணுல தண்ணி வருதா? தொடச்சுக்கோங்க.

வெற்றிகரமா பேர் வச்ச திருப்தியில பாட நினைத்தோம். முதல்ல பாட்டு மொத பத்தி மட்டும் பாடலாம்னு திட்டம். ஆனா அதுக்கும் மனப்பாடம் பண்ணனுமே. கடைசியா என் தலையில் தான் விடிஞ்சது. அந்த பாட்டை திரும்பத் திரும்ப கேட்டு மொத பத்திய..அதாங்க சரணம்..வரணம்னு ஏதோ சொல்லுவாங்கள்ல அத எழுதியாச்சு. அப்புறம் ஆரம்பிச்சது எங்க கச்சேரி. ராத்திரி 11 மணிக்கு மேல. ஒவ்வொருத்தனா பாட வாய்ஸ் ஸிங்க் ஆகல. கர்ணகடூரமா இருந்துச்சு. கோரஸ் பாடுனா நல்லாருக்கும்னு ஒருத்தன் ஐடியா தர மறுபடி போராட்டம். ஏறக்குறைய 10, 20 தடவை பாடியும் எங்கியாவது தடங்கல் வரும். ஒவ்வொரு முறையும் பதிவு பண்ணி கேட்டு சிரிச்சு திரும்ப மறுபடி ஆரம்பிப்போம். இந்த விஷயத்துல கஜினி கூட தோத்திடுவான்னா பாத்துக்கங்களேன்.

முழுசா இதையே முடிக்கல. இதுக்குள்ள கரோகி பாடற ஆச வேற வந்துச்சு. மீசிக்கோட சேந்து பாடணும்டா. என்ன பண்றது? எங்க மூளை தான் அட்டகாசமா வேல செய்யுமே! மறுபடி பார்த்தி லேப்டாப். மீசிக் ஆரம்பிக்கற போது ஸ்பீக்கர்கிட்ட மொபைல் போன வச்சு ரெக்கார்ட் பண்ணிட்டு பாடல் ஆரம்பிக்கும் போது நாங்க பக்கத்துல போய் கத்த சாரி பாட ஆரம்பிச்சோம். சும்மா சொல்லக்கூடாது எல்லா பசங்களுக்கும் செம ஹை பிட்ச். காது கிழியற அளவு சத்தம். ரணகளப்பட்டு ரெக்கார்ட் பண்ணி ஒரு வழியா "வெங்காய பாய்ஸ்" திறப்பு விழா ஆச்சு. இதை அடுத்த நாள் ஆபிஸ்ல பார்த்தி போட்டு கேட்டு தனக்கு தானே சிரிச்சத பாத்து அவன் ஆபிஸே டர்ரானது தனிக்கதை. இப்படியா ரெண்டு மூணு பாடல் முயற்சி பண்ணினோம். அப்புறம் பார்த்தி 'ஆன்சைட்'க்காக மலேசியா போனதுடன் தற்காலிகமாக "வெங்காய பாய்ஸ்" கம்பெனிக்கு மூடுவிழா நடந்தது.

- தோ வர்றேன் அதுக்குள்ள ரத்தத்த தொடச்சுக்கோங்க.

பூமகள்
09-01-2008, 09:57 AM
யப்பா....!! :sprachlos020:
ஒரு எஸ்.பி.பி..ஒரு பி.பி ஸ்ரீநிவாஸ், ஹரிஹரன், கிரிஷ் எல்லாரையும் கூட்டாளியாக்கி வெங்காய பாய்ஸ்??!!!:icon_ush:

அந்த பக்கத்துல இருந்த பொண்ணுக நிலை...!! அவங்கள நினைச்சா தான் எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது...!! :traurig001::traurig001:

சேம் பிளட் கதையே தான்..!! :rolleyes::lachen001:

முடி..................லை...!! :confused::aetsch013:

தொடருந்து வெங்காயத்தை உரிங்க...!! :icon_b:

அழுதுட்டே படிக்கிறோம்..! :D:D

சிவா.ஜி
09-01-2008, 10:06 AM
அப்டி போடுங்க அருவாள....மொதப்பாட்டுதான் முடிஞ்சிருக்கு அதை ரிலீஸ் பண்றதுக்கு மலேசியா போயிட்டாரா பார்த்தி....ஆனாலும் நீங்க குடியிருக்கற வீட்டு ஓனர் வீட்டை ரொம்...................ப ஸ்ட்ராங்காவே கட்டியிருக்கார் போல.இம்மாம் பெரிய டெஸிபல்ல கத்தியும் ஒண்ணு............மே ஆகலையே....இன்னும் உரிங்க உங்க வெங்காயத்தை...கர்ச்சீப்போடு கூடவே வரோம்....

நுரையீரல்
09-01-2008, 10:10 AM
ஆமா, மதி நீங்க பாட டிரை பண்ணின பாட்டு "நின்னுக்கோரி வரணும்" (கவுண்டமணி காமெடி) தானே...

மதி
09-01-2008, 10:14 AM
வர்ணம்..எல்லாம் இல்லீங்க.... அந்த பாட்டு மட்டும் தான்.. அப்புறம் வேற ஏதோ ஒரு பாட்டு பாடுன ஞாபகம்...சரியா நினைவில்லை..

இதயம்
09-01-2008, 11:50 AM
என்னை கொடுமை மதி இது..? எங்களுக்கெல்லாம் வாயில்லையா..? நாங்க வாய் திறந்தா சத்தம் வராதா..? அதுக்காக நாங்க வெங்காய பாய்ஸ், தக்காளி பாய்ஸ்ன்னு பேர் வச்சிக்கிட்டு பாடி(கத்தி!) பக்கத்து வீட்டுக்காரங்களை கொடுமைப்படுத்திக்கிட்ட திரியறோம்..?!! எத்தனை கமுக்கமா ஜன்னலை இறுக்கமா சாத்திட்டு, இல்லேன்னா வண்டியில் தனியா போகும் போது 8, 10 கட்டையில கத்தலை..? அது மாதிரி செய்யாம இப்படி என்னென்னவோ செஞ்சிருக்கீங்க..! அது சரி... இப்படி கத்தி, கத்தி வீட்டுப்பக்கத்துல இருந்த பொண்ணுங்களெல்லாம் விரட்டி விட்டிருப்பீங்களே..!! பென்ஸ் பாவம் சும்மாவா விடும்..? அவர் கல்யாணம் கூட பண்ணாம இருந்தவரை கடுப்பேத்தியிருக்கீங்க..!!

அதென்ன உரிக்க, உரிக்க ஒண்ணுமேயில்லை..? அப்படின்னா என்ன கேட்டாலும் அது பாட்டு மாதிரியே இருக்காதுன்னோ..?!! இவ்வளவு நாளா நான் தான் பாடுறேன்னு கேனத்தனமா எதையாவது பண்ணிட்டு இருக்கேன்னு நினைச்சேன்.. எனக்கு துணைக்கு என்னை மாதிரியே நெறைய கே....இருக்காங்கப்பா..!(கே-கேள்வி ஞானம் உள்ளவர்கள்..!)

படிக்க ரொம்ப சுவையா இருக்கு.. எழுதுங்க இன்னும்..!!

மயூ
09-01-2008, 12:11 PM
என்ன கொடுமை சார்!!! ;)
நீங்க ஆபீசில போட்டுக்காட்டலியா? அந்த MP3 கோப்பு இருந்தா எனக்கு மட்டும் தனி மடலில!!!!

இதயம்
09-01-2008, 12:13 PM
என்ன கொடுமை சார்!!! ;)
நீங்க ஆபீசில போட்டுக்காட்டலியா? அந்த MP3 கோப்பு இருந்தா எனக்கு மட்டும் தனி மடலில!!!!

உங்களுக்கு தான் ரொம்ப மன தைரியம் மயூ..!! வாழ்த்துக்கள்..!!:D:D

மதி
09-01-2008, 12:22 PM
இப்படியாக ஊரில எல்லோரும் அமைதியா இருந்த நெலமையில மறுபடி ஒரு புயல் கொஞ்ச காலத்துக்கு முன் வீச ஆரம்பிச்சுது. அதுக்குள்ள சில மாற்றங்கள் நடந்துடுச்சு. கண்ணனும் வந்து சேர்ந்ததால் பெரிய வீடாக பக்கதிலேயே ஒரு டபுள் பெட்ரூம் ப்ளாட்டுக்கு குடி வந்துட்டோம். பார்த்தி ஆன்சைட்ல இருந்து திரும்பி வந்துட்டான். மருது கம்பெனி மாறினாலும் வழக்கம் போல. நானும் மாற்ற(ம்) விரும்பினேன். ஒன்னும் நடக்கல.

ஒருவழியா எல்லோரும் சேர்ந்து மொக்கைத் தொழிலை ஆரம்பிச்சுட்டோம். ராத்திரி பத்து மணி சுமாருக்கு ஆரம்பிச்சா அது போகும் 12, 1 மணிக்கு. என்ன பேசுறோம்னே தெரியாது. ஊர் கதை உலகத்துக்கத எல்லாம் பேசப்படும். தமிழ்மன்றத்துலேயே நான் குடியிருக்கறேன்னு வேற ஓட்டுவாங்க. இது ஒரு மாதிரி போர் அடிக்க ஆரம்பிச்சதும் பார்த்தி தான் மறுபடி வெங்காய பாய்ஸ் கம்பெனிய புதுப்பிக்கற மாதிரி ஐடியா குடுத்தான். எங்க வீட்டுல எவனுக்கும் ஊர் சுத்தறது பிடிக்காது, அதுலேயும் எவனுக்கும் கேர்ள் பிரண்ட் வேற இல்லியா. சனி, ஞாயிறானா இழுத்தி போர்த்திட்டு தூங்கறது தான் வேலை. ஸோ..கிரியேட்டிவ்வா ஏதாச்சும் பண்ணலாம்னு திரும்ப வெங்காய பாய்ஸ்

அன்னிக்கு வெங்காய பாய்ஸ் மறுபிறப்பு. கண்ணனும் இந்த விஷயத்துல ரொம்ப ஆர்வமா இருந்ததால ( அவனுக்கும் எங்க மாதிரி தான் ரொம்ம்ம்ம்ம்ப சங்கீதா..சாரி சங்கீத ஞானம்) அவனையும் சேர்த்துக்கலாம்னு முடிவு பண்ணினோம். அதுக்காக இண்டெர்வ்யூ வைக்கணும்னு விஜய் தான் ஐடியா குடுத்தான். வழக்கம் போல ஒரு நாள் ராத்திரி பத்து மணிக்கு எல்லோரும் கூடினோம். படுக்கை மத்தியில லேப்டாப்பை வச்சுட்டு அதனை சுத்தி எல்லோரும் உக்காந்தோம்.

கண்ணா.. உனக்கு டெஸ்ட்..உனக்கு பிடிச்ச பாட்டு பாடு! இது பார்த்தி.

ஆமா. அப்புறம் ஃபோக், வெஸ்டர்ன் எல்லாமும் பாடணும் இது நான்.

எல்லாம் சூப்பர் சிங்கர் ஸ்டைல் தான். நெளிஞ்சுக்கிட்ட இருந்த கண்ணன், நீங்களே எதாச்சும் பாட்டு சொல்லுங்கடா என்றான். ஃபீல்டுக்கு புதுசுல்ல ஆரம்பத்துல அப்படி தான் இருப்பான் என நினைத்து விஜய்,
சரி, மெலடி பாடு. கல்யாணத் தேனிலா பாடு

தொண்டையை கனைத்துக் கொண்டே லேப்டாப்பில் இருந்த பாட்டை கேட்டு மனப்பாடம் செய்தான் கண்ணன். அவன் குரல் என்ன தான் காட்டுத்தனமா இருந்தாலும் பாடும் போது எஸ்.பி.பின்னு அவனுக்கு நினைப்பு. மனப்பாடம் செஞ்சத பாட சொன்னா ரேவதி மாதிரி வெறும் காத்து தான் வந்துச்சு. கல்யாண கேட்டுச்சு..அப்புறம் முடிக்கும் போது நிலா கேட்டுச்சு. நடுவுல எஸ்.ஏ.ராஜ்குமார் மாதிரி லாலலா ஃபில் பண்ணிட்டான். வயிறு வலிக்க சிரிச்சு சிரிச்சு ஒரு வழியா போனா போவுதுன்னு சேத்துக்கிட்டோம். அன்னிக்கு செலக்ட் பண்ணின பாட்டு காட்டுக்குள்ள மனசுக்குள்ள. இதுல வர்ற ஒரு பத்தி

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
நட்பைக்கூட கற்பை போல எண்ணுவேன்
நாலு பேரு இருக்கோம். ஆளுக்கொரு லைன் பாடணும்னு முடிவு பண்ணினோம். முதல்ல விஜய் ஆரம்பிக்கணும். அப்புறம் நான். அடுத்து பார்த்தி. கடைசியா கண்ணன். பாட்டை ஓட விட்டுட்டே விஜய் ஆரம்பிச்சான். அடுத்து நான். ஏகப்பட்ட தடுமாற்றங்கள். அடிக்கடி பல வார்த்தைகளை மறந்தோம். ஒருவழியா முயற்சி பண்ணும் போது கண்ணன் முறை வந்தது. ஒழுங்கா பாட்டை கேட்டு பாடுடான்னு சொன்னோம். நல்லா தெரியும்னு அவன் வரிய பாடுனான்..
'என் நண்பன் போட்ட சோறு நிதமும் திம்பேன் பாரு. நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்'

அவ்வளவு தான் வீடே அதிர்ந்தது ராத்திரி 12 மணிக்கு. டேய் இது வரை தின்ன. இனியும் திம்பேன்னு சொல்றியே. இது உனக்கே அடுக்குமான்னு செமையா கேலி. அப்புறம் மறுபடி பேக் டு த ஃபார்ம். ஏகப்பட்ட ரிகர்சல் முடிச்சு ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சோம். வழக்கம் போல ஹைபிட்ச்ல விஜய் கத்த..சாரி பாட.. அதை விட தேனமுதான குரலில் நான் சாதகம் பண்ண..பார்த்தியும் முடிச்சான். கண்ணன் ஆரம்பிச்சான் என்னமோ பாட்டுக்கு கூட வலிக்கும்னு அவனுக்கு தோணிருக்கும் போல. எங்கியோ 100 அடி ஆழ கிணத்துக்குள்ள இருந்து வர்ற அவலக்குரல் மாதிரி சிரிப்பையும் சேர்த்து ரெக்கார்ட் பண்ணிக்கிட்டே பாடி முடிச்சாச்சு சத்தியமா.. எங்க மூணு பேர் வாய்ஸும்செம ஹை பிட்ச்.. கண்ணன் மட்டும் கிணத்துக்குள்ளிருந்து முனகறான். பரவாயில்லன்னு அதையே வச்சிருக்கோம்.

இப்போ புதுசா ஒரு பாட்டு புடிச்சிருக்காங்க. அதுக்கு கரோகி கிடைக்குமான்னு வேற வலையில் ஒரே தேடுதல் படலம். இனி sound forge எல்லாம் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்கு போக போறோம். ரெண்டு நாளா சீக்கிரம் வந்துடுன்னு ஒரே அன்புத் தொல்லை. ஹ்ம்ம்.. நாளைக்கு தான் கச்சேரி நடக்கும் போல. உங்க ஆசிர்வாதத்தால எப்படியும் கூடிய சீக்கிரம் 'வெங்காய பாய்ஸ் ஆடியோ கம்பெனி' ஆரம்பிச்சிடுவோம்னு பயமா இருக்கு. யோசிச்சு சொல்லுங்க..

பி.கு: வெங்காயம் உரிக்கும் போது மட்டுமில்லாம இனி அந்த பேர கேக்கும் போதே உங்க கண்ணுல தண்ணி என்ன ரத்தமே வரும்னு நினைக்கிறேன். அப்புறம்..ஒரு முக்கியமான விஷயம். ஒரு வார இறுதியில ஜோடி நம்பர் ஒன் மாதிரி டான்ஸ் போட்டி வேற நடந்துச்சு. சொல்லட்டா..

மதி
09-01-2008, 12:27 PM
இதையும் படிச்சு பதிவிட்ட எல்லோருக்கும் மிக்க நன்றி..ஹிஹி...

மதி
09-01-2008, 12:28 PM
என்ன கொடுமை சார்!!! ;)
நீங்க ஆபீசில போட்டுக்காட்டலியா? அந்த MP3 கோப்பு இருந்தா எனக்கு மட்டும் தனி மடலில!!!!
பார்த்திகிட்ட தான் இருக்கணும்.. ஆனா வேணாம்...சொல்லிட்டேன். நான் எதுக்கும் உத்தரவாதமில்லை..


உங்களுக்கு தான் ரொம்ப மன தைரியம் மயூ..!! வாழ்த்துக்கள்..!!:D:D
சீரியஸா..ரொம்ப தான் மனதைரியம்...:D:D:D

மதி
09-01-2008, 12:29 PM
என்னை கொடுமை மதி இது..? எங்களுக்கெல்லாம் வாயில்லையா..? நாங்க வாய் திறந்தா சத்தம் வராதா..? அதுக்காக நாங்க வெங்காய பாய்ஸ், தக்காளி பாய்ஸ்ன்னு பேர் வச்சிக்கிட்டு பாடி(கத்தி!) பக்கத்து வீட்டுக்காரங்களை கொடுமைப்படுத்திக்கிட்ட திரியறோம்..?!! எத்தனை கமுக்கமா ஜன்னலை இறுக்கமா சாத்திட்டு, இல்லேன்னா வண்டியில் தனியா போகும் போது 8, 10 கட்டையில கத்தலை..? அது மாதிரி செய்யாம இப்படி என்னென்னவோ செஞ்சிருக்கீங்க..! அது சரி... இப்படி கத்தி, கத்தி வீட்டுப்பக்கத்துல இருந்த பொண்ணுங்களெல்லாம் விரட்டி விட்டிருப்பீங்களே..!! பென்ஸ் பாவம் சும்மாவா விடும்..? அவர் கல்யாணம் கூட பண்ணாம இருந்தவரை கடுப்பேத்தியிருக்கீங்க..!!

அதென்ன உரிக்க, உரிக்க ஒண்ணுமேயில்லை..? அப்படின்னா என்ன கேட்டாலும் அது பாட்டு மாதிரியே இருக்காதுன்னோ..?!! இவ்வளவு நாளா நான் தான் பாடுறேன்னு கேனத்தனமா எதையாவது பண்ணிட்டு இருக்கேன்னு நினைச்சேன்.. எனக்கு துணைக்கு என்னை மாதிரியே நெறைய கே....இருக்காங்கப்பா..!(கே-கேள்வி ஞானம் உள்ளவர்கள்..!)

படிக்க ரொம்ப சுவையா இருக்கு.. எழுதுங்க இன்னும்..!!

அட..நீங்களும் எங்கள மாதிரி தானா.. வாங்க..வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க...

மயூ
09-01-2008, 01:10 PM
ஹா. ஹா... ஒரே கூத்தாக இருக்கிறதே!!!
நானும் உங்க ரூமுக்கு வரட்டா? நான் கூட நல்லா ஹைபிச்சில பாடுவன்!!!!

மதி
09-01-2008, 01:30 PM
வாருமைய்யா... வாரும்..

மயூ
09-01-2008, 01:33 PM
வாருமைய்யா... வாரும்..
வந்தப்புறம் ஆடிஷன் வைத்துத்தான் எடுப்போம் என்று சொல்லக்கூடாது!

மதி
09-01-2008, 01:46 PM
வந்தப்புறம் ஆடிஷன் வைத்துத்தான் எடுப்போம் என்று சொல்லக்கூடாது!

அது இல்லாமலா... அதெல்லாம் உண்டு

மதி
09-01-2008, 01:53 PM
வந்தப்புறம் ஆடிஷன் வைத்துத்தான் எடுப்போம் என்று சொல்லக்கூடாது!

அது இல்லாமலா... அதெல்லாம் உண்டு

பூமகள்
09-01-2008, 01:53 PM
கண்ணு கலங்க சிரிக்க வைச்சிட்டீங்க...!!

சரி... இந்த திரியில் ஒரு மாபெரும் தவறு இருக்கு..............!!:sprachlos020::eek:

என்னப்பா யாருமே கண்டுக்கலையா??:confused::icon_ush:

என் தங்கச்சி மலரு நீ கேளேன்...!! ...ராசா அண்ணா நீ(ங்க) கேளேன்...!:D:D

என் அன்பு யவனி அக்கா, நீ(ங்க) கேளேன்..!!:icon_ush:


தாமரை: ஏன்னு சொல்லுமா பூ..!!


...
..
..
..பூ: "இந்த திரி இந்த செக்சனில் இருக்க வேண்டியதே இல்லை..!!
சிரிப்பு நகைச்சுவை பகுதிக்கு மாத்திடனும்...!! அவ்வளோ சிரிப்பு..!!"
-------------------------------
பேஸ்...பேஸ்... ரொம்ப நன்னாருக்குடா அம்பி...!!
காட்டுக் கச்சேரின்னா இது தான்..!!

டேன்சு பார்க்க அடுத்தவீட்டு பொம்முனாட்டிகளையும் அழைச்சுட்டு வாரேன்..!! வெயிட் வெயிட்...!! :D:D

மயூ
09-01-2008, 01:54 PM
அது இல்லாமலா... அதெல்லாம் உண்டு
அடடா!!! சொல்றதப் பார்த்தா பேசாம இவங்க டீமில பாடுறதுக்குப் பதிலாக ரகுமான் கூட ஒரு பாட்டுப் பாடிடலாம் போல இருக்கு!!!!

பூமகள்
09-01-2008, 02:00 PM
பூ: "இந்த திரி இந்த செக்சனில் இருக்க வேண்டியதே இல்லை..!!
சிரிப்பு நகைச்சுவை பகுதிக்கு மாத்திடனும்...!! அவ்வளோ சிரிப்பு..!!"

அச்சச்சோ...!:sprachlos020:
சிரிச்சு கண்ணு கலங்கினதுல ஏற்கனவே இந்த திரி இருக்கும் பகுதியை கவனிக்காம விட்டுட்டேனே..!!:icon_ush::icon_ush:
மன்னிச்சிருங்க மக்களே...!:icon_ush::confused:
பூவு பதிவையும் பார்த்து சிரிச்சி வையுங்க...!!:icon_rollout:

அறிஞர்
09-01-2008, 02:01 PM
நண்பர்கள் ஒன்றாய் இணைந்து கொண்டாடும்.... காலம் இனிய காலம்..

அருமை மதி..

ராத்திரி... பாட ஆரம்பித்தால்... முதலில் ஹோட்டல் ஒன்றை தயார்... செய்து விட்டு... ஆரம்பியுங்கள்.. அப்பதான்... 12 மணிக்குள் மேல் சரிபடும்.

மனோஜ்
09-01-2008, 02:01 PM
வெங்காய பாய்ஸ் மிக அருமையாக பாடி அக்கப்கம் துங்கவிடாது வெற்றிபெறுகிறீர்கள் ஏன்ன இது வரை யாரும் உங்களை திட்டலை என்று நினைக்கிறோன் வாழ்த்துக்கள் தொடர்ந்து வெங்காயம் உரிங்க

மதி
09-01-2008, 02:51 PM
இது வரை யாரும் திட்டு வாங்கல...இன்னிக்கு வேக வேகமா டைப் பண்ணி அனுப்பினதுக்கு வீட்டில யாரும் ஒன்னும் சொல்லல..
போனா தான் தெரியும் என்ன சங்கதின்னு... ஆனா நாளை ராத்திரி கண்டிப்பா ஆடிஷன் இருக்கு...

மதி
09-01-2008, 02:52 PM
அடடா!!! சொல்றதப் பார்த்தா பேசாம இவங்க டீமில பாடுறதுக்குப் பதிலாக ரகுமான் கூட ஒரு பாட்டுப் பாடிடலாம் போல இருக்கு!!!!

அங்க பாடறத விட எங்க கேங்ல பாடறது கஷ்டமாச்சே...

பாரதி
09-01-2008, 02:54 PM
மதி.. எதுக்கும் உங்கள் நிறுவனத்தின் அருமையான பெயரை அரசு அலுவலகத்தில் பதிவு செய்து வையுங்கள். எதிர்காலத்தில் உண்மையிலேயே கைகொடுக்கக் கூடும்..! இன்னும் சொல்லுங்க..!

யவனிகா
09-01-2008, 02:59 PM
மதி... ரொம்ம நல்லா இருக்கு மதி...இத்தன நாள் உங்கள மொக்கை கவிஞர்ன்னு தான் நினைச்சேன்...இப்ப மொக்கை பாடகர் தான்னு நிரூபிச்சிட்டீங்க...சூப்பர் போங்க...

நீங்க ஆடியோ தான ரிலீஸ் பண்ணியிருக்கீங்க..நாங்க வீடியோவே விட்டிருக்கோம் வெளியே...வீட்டுக்கு வந்தவங்க கிட்ட போட்டு கதற அடிச்சிட்டமில்ல...கேட்டுப் பாருங்க...சிவா அண்ணங்கிட்ட...அட்ரஸ் குடுத்தா அனுப்பி வைப்போம் மதி...

மதி
09-01-2008, 03:05 PM
ஹ்ம்ம்...படிச்சேன்.. ராஜா மாமா திறமைய... இங்கேயும் அந்த மாதிரி சங்கதி எல்லாம் நடந்துச்சு... என்ன செய்ய "எங்கேயும் எப்போதும்.. சந்தோஷம் சங்கீதம்.."

பென்ஸ்
10-01-2008, 01:52 PM
ஆஆஅ... ஆஆஆஅ..
லலலாஆ.. ல்லாஆஅ...

மக் டெஸ்டிங் ஒன் டு திரி....

ல லால் லலலா லாலாலா.....

சான்ஸ் குடுங்க சாமி...

செல்வா
10-01-2008, 03:46 PM
அடடா..... தப்பு பண்ணிட்டீங்களே...... இதயத்துக்கு ஒரு வாய்ப்பு குடுத்துருந்தீங்கண்ணா நல்லா பாட்டு படிச்சுருப்பார்ல அநியாயமா ஒரு ஏசுதாச மிஸ் பண்ணிட்டீங்க

aren
11-01-2008, 10:07 AM
அனுபவி மதி அனுபவி!!!

மதி
11-01-2008, 10:13 AM
எங்களால (கஷ்டத்த) அனுபவிச்சவங்க தான் அதிகம்..

தாமரை
14-01-2008, 10:41 AM
மதி... ரொம்ம நல்லா இருக்கு மதி...இத்தன நாள் உங்கள மொக்கை கவிஞர்ன்னு தான் நினைச்சேன்...இப்ப மொக்கை பாடகர் தான்னு நிரூபிச்சிட்டீங்க...சூப்பர் போங்க...

நீங்க ஆடியோ தான ரிலீஸ் பண்ணியிருக்கீங்க..நாங்க வீடியோவே விட்டிருக்கோம் வெளியே...வீட்டுக்கு வந்தவங்க கிட்ட போட்டு கதற அடிச்சிட்டமில்ல...கேட்டுப் பாருங்க...சிவா அண்ணங்கிட்ட...அட்ரஸ் குடுத்தா அனுப்பி வைப்போம் மதி...


அட எங்க ஆஃபிஸ்ல 6 மாசத்துக்கு முன்னால ஒரு படம் பண்ணினோம்.. சிஸ்லிங் செந்தில் அப்படின்னு.. அந்தக் கதையைக் கேட்டா நொந்து போயிருவீங்க...:icon_rollout:

மயூ
14-01-2008, 10:58 AM
அட எங்க ஆஃபிஸ்ல 6 மாசத்துக்கு முன்னால ஒரு படம் பண்ணினோம்.. சிஸ்லிங் செந்தில் அப்படின்னு.. அந்தக் கதையைக் கேட்டா நொந்து போயிருவீங்க...:icon_rollout:
இந்தால் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில்... அடுத்த பதிவு ஒன்று தயாராகிட்டுது!!!! :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

மயூ
14-01-2008, 10:59 AM
எங்களால (கஷ்டத்த) அனுபவிச்சவங்க தான் அதிகம்..
க(ந)ஷ்டம் :lachen001: