PDA

View Full Version : என்னாடி......!!



பூமகள்
09-01-2008, 08:41 AM
க.மு. (கல்யாணத்துக்கு முன்[னாடி]:D)

"என்னாடி...!!"

அவள் முகம் சிவந்தது..!
சிணுங்கலால்..!

க.பி. (கல்யாணத்துக்கு பின்[னாடி]:D)

"என்னாடி....!!"

அவன் முகம் சிவந்தது..!
சினத்தால்..!

தாமரை
09-01-2008, 08:43 AM
க.மு. (கல்யாணத்துக்கு முன்[னாடி]:D)

"என்னாடி...!!"

அவள் முகம் சிவந்தது..!
சிணுங்களால்..!

க.பி. (கல்யாணத்துக்கு பின்[னாடி]:D)

"என்னாடி....!!"

அவன் முகம் சிவந்தது..!
சினத்தால்..!


கடைசி வரியில் சிறுதிருத்தம்


பளார்.!

பூமகள்
09-01-2008, 08:44 AM
கடைசி வரியில் சிறுதிருத்தம்
பளார்.!
:lachen001::lachen001:
அனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும்..!! :D

இதயம்
09-01-2008, 08:45 AM
கடைசி வரியில் சிறுதிருத்தம்
பளார்.!

அண்ணிக்கு கொஞ்சம் கை நீளம் தான்..!! பாவம் நீங்க..!!:D:D

பூமகள்
09-01-2008, 09:16 AM
அண்ணிக்கு கொஞ்சம் கை நீளம் தான்..!! பாவம் நீங்க..!!:D:D
அண்ணா,

இப்படி சபையில் போட்டு உடைச்சா... :icon_ush:

இத் யம் அண்ணாவின் வீட்டில் நடப்பவையும் வெளியிட வேண்டிவரும் என்று தாமரை அண்ணா சொல்லச் சொன்னார்...!!:rolleyes::lachen001:


(வந்த காரியம் வெற்றி...!! வெற்றி...!! வெற்றி...!!)

தாமரை
09-01-2008, 09:31 AM
:lachen001::lachen001:
அனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும்..!! :D

இன்னும் ஒரு சின்ன திருத்தம்

இன்னொரு லைன் சேத்துக்குங்க

என்னா அடி! :D

பூமகள்
09-01-2008, 09:37 AM
என்னா அடி! :D

என்னடி..!

என்னாடி..!

என்னா அடி..!

எண்ணா அடி..!!

எண்ணி அடி..!

என்னாடி.........!!:lachen001:

ஆர்.ஈஸ்வரன்
09-01-2008, 10:23 AM
என்னடி..!

என்னாடி..!

என்னா அடி..!

எண்ணா அடி..!!

எண்ணி அடி..!

என்னாடி.........!!:lachen001:

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

என் அடி

என்னாடீ

அமரன்
09-01-2008, 11:09 AM
முன்னாடி மனிதன்..
பின்னாடி முனிவன்

ஆதி
09-01-2008, 11:12 AM
முன்னாடி மனிதன்..
பின்னாடி முனிவன்

அட :D; சூப்பருசூப்பரு சூ..ப்பரு.. :icon_b:

பூமகள்
09-01-2008, 12:15 PM
முன்னாடி மனிதன்..
பின்னாடி முனிவன்
கண்ணாடி பின்னாடி..! - கூலர் பந்தா
கண்ணடி முன்னாடி..! - சைட்
கல்லடி பின்னாடி..! - கயல் கல் அடி
தாடி முன்னாடி..!! - தேவதாஸ்

அறிஞர்
09-01-2008, 02:07 PM
முன்னாடி, பின்னாடி.. என ஒரேடியா அடித்துவிட்டீர்கள்...
அருமை பூ..

பூமகள்
09-01-2008, 02:14 PM
அடிச்சாவாவது பூவுக்கு பயப்படுறாங்களான்னு பார்க்கிறேன்..!! :D:D
யாரும் பயப்பட்ட மாதிரி தெரியலையே...!! ;)

நன்றிகள் அறிஞர் அண்ணா. :)

அமரன்
11-01-2008, 07:39 AM
கண்ணாடி பின்னாடி..! - கூலர் பந்தா
நிலைக்குதுமிடம்
பெண்கள் அறியாது இருக்க
கண்ணாடி பின்னாடி கண்கள்.
பின்னாடி
காது குத்தலுக்கு அச்சாரம்


கண்ணடி முன்னாடி..! - சைட்
கல்லடி பின்னாடி..! - கயல் கல் அடி

வலது கண்துடித்தல்
அல்லலின் வரவஞ்சலாம்..
கயல் துடிப்பது
வற்றிய ஈரத்தாலன்றோ?


இதிலிருந்து என்ன தெரிகின்றது
காதலென்பது இருபக்கம் சார்ந்தது.

சுகந்தப்ரீதன்
12-01-2008, 09:48 AM
காதலென்பது இருபக்கம் சார்ந்தது.
அப்படியானால் பக்கத்திற்க்கு நாற்பது சரிதானா... என் கணக்கு..?

அமரன்
12-01-2008, 09:52 AM
அப்படியானால் பக்கத்திற்க்கு நாற்பது சரிதானா... என் கணக்கு..?
மீதி இருபது
யார் கணக்கு???

சுகந்தப்ரீதன்
12-01-2008, 10:03 AM
மீதி இருபது
யார் கணக்கு???
காதல் என்பது இருபக்கம் சார்ந்தது...

காதல் நாற்பது+காதல் நாற்பது= காதல் என்பது

சரிதானே..? இதில் இருபது எங்கே வந்தது..?

அமரன்
12-01-2008, 10:07 AM
காதல் என்பது இருபக்கம் சார்ந்தது...

காதல் நாற்பது+காதல் நாற்பது= காதல் என்பது

சரிதானே..? இதில் இருபது எங்கே வந்தது..?
எண்பது என்பதை
எப்படி எழுதுவது என்று
தடிக்க வைக்கலையோ
உடலை
உங்கள் தமிழாசான்.!!!!

சுகந்தப்ரீதன்
12-01-2008, 10:28 AM
எண்பது என்பதை
எப்படி எழுதுவது என்று
தடிக்க வைக்கலையோ
உடலை
உங்கள் தமிழாசான்.!!!!
விளையாடி நாளாச்சு
வீம்பாக என்பேச்சு
இப்ப வீணாகிப்போச்சு
தடிக்கவும் இல்லை
தடியெடுத்து அடிக்கவுமில்லை!
ஆசானற்ற என் தமிழ்
என் ஆர்வத்தின் உமிழ்!

சிவா.ஜி
12-01-2008, 10:47 AM
நகைச்சுவை பகுதியில் நன்றாய் பொருந்தும்......கவிதையென்று சொல்ல மனம் வரவில்லையே என்ன செய்ய தங்கையே.மிகச்சிறந்த கவிதாயினிடமிருந்து இப்படி ஒன்றா?

சாலைஜெயராமன்
17-01-2008, 05:15 PM
மூன்று அடி கேட்டான் வாமனன் மூவுலகம் அளந்தான்
கணவன் அடி பற்றிப்போக அடிதான் அடித்தளம் ஏனெனில்
அடி ஒன்றி்ற்கும் அரை டஜன் புடவையாச்சே. வரவுதானே.

ஒரு அனுபவம் தான்

சூறாவளி
05-10-2010, 06:38 PM
இதை நகைச்சுவை பகுதியில் தான் தூக்கி வைக்கணும்...:D:D

சிரிப்புதான் வருது...

என்னாமாஅடிக்கிறாங்க மன்றத்து உறவுகள்.. எல்லாருக்கும் அனுபவம் சொல்லுது போல...:icon_ush::lachen001:

குணமதி
06-10-2010, 02:14 AM
என்னடி..!

என்னாடி..!

என்னா அடி..!

எண்ணா அடி..!!

எண்ணி அடி..!

என்னாடி.........!!:lachen001:

அப்படி அடி!

அப்பாடி!