PDA

View Full Version : தமிழில் நிறை மொழி எனும் பரிபாஷை



சாலைஜெயராமன்
08-01-2008, 02:10 PM
பரிபாஷை என்னும் சங்கேத மொழி்யில் தமிழின் பங்கு

தமிழில் முன்வந்த இறை பெரியோர்கள் தங்கள் இறையியல் அனுபவ இன்பங்களை பின் வரும் சந்ததியினர் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தாங்கள் இயற்றிய நூல்களில் பலவிதமான முறையில் நல்வழிகாட்டி இட்டுச் சென்றுள்ளனர். தங்கள் அனுபவங்கள் மக்களை நல்வழிக்காக்கும் பொருட்டு்விட்டுச் சென்றதில் துன்மார்க்க நெறியோரும், வயிற்றுப்பாட்டுக்கான மக்களைப் பாதை மாற்றும் செயலைச் செய்வோரிமிருந்தும் காக்கும் பொருட்டு கையாண்ட சில உன்னத வழிகளில் பரிபாஷையெனும் சங்கேத மொழியில் பல பொக்கஷங்களை பரிசாக இட்டுச்சென்றுள்ளனர். தமிழ் மொழியின் பல்வேறு சிறப்புக்களில் இந்த வழிமுறையும் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது,

பரி பாஷை என்பது ஒரு கருத்தை மறைமுகமாகத் தெரிவிப்பது. அதுவும் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளைக கொண்டே சங்கேத முறையில் பேசிக் கொள்வது அல்லது அறிவிப்பது. இது தமிழ் மொழியில் மட்டும்தான் அதிகம் பயன் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வைத்திய சாஸ்திரத்தில் அதிகமாக கையாளப்பட்டுள்ளது. 'அகத்தியர் குழம்பு' போன்ற நூல் இதற்கு சான்றாகும். மற்றைய மொழிகளில் இவ்வாறு பரிபாஷைகள் வழக்கில் இருக்கிறதா என்பதை தமிழறிஞர்கள் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுவோம். ஒரு மொழியை சிறப்பித்துக் கூற வரும்போது பிற மொழிகளை குறைத்துக கூறுவது நாகரீகமாகாது. என் நோக்கம் அதுவுமல்ல. ஒவ்வொரு மொழியும் அதனதன் இயல்பிற்கு ஏற்றவாறு தன் தன் வளமையைக் கொண்டுள்ளது.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,தொடரும்..............(1)

சாலைஜெயராமன்
08-01-2008, 02:14 PM
ஆனால் மற்ற மொழிகளுக்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு தமிழுக்கு உண்டெனில் அது உயிரியலையும், வாழ்வியலையும் ஒருங்கே பெற்று உயிர் மொழியாக இருப்பதுதான்.

தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லுக்கும் மறை பொருளாகிய மெய்ப் பொருள் என்னும் மெய் அருத்தம் ஒன்று உண்டு. இதையே வள்ளுவர் பிரான் 'மெய்ப் பொருள் காண்பதறிவு' எனக் கூறுகிறார். தமிழ் மொழியின் இலக்கண நூலான தொல்காப்பியம் சொல்லுக்கு அமைப்பு இலக்கணமாக 'தமிழ்ச் சொற்களில், ஒவ்வொரு சொல்லும் 'ஆறு வீதி' 'பதினெட்டு சந்து' என்று சொல்லப் பெறுகிற லட்சணத்தைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறது. அதாவது எந்தஒரு சொல்லையும் பொருள் கொள்ளும் போது இடத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்ளலாம். ஆனால் அந்தச் சொல்லுக்கு மெய்யருத்தம் எனும் உண்மைப் பொருளைக் காணப் புறப்பட்டால் அது தன் முகத்தைக் காட்டாது மறைந்து நிற்கும் சிறப்பு தமிழுக்கே உண்டு. இந்த 'யுனிக்கோடு' அமைப்பு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களால் கையாளப்பட்டது என்பது நமது மொழியின் வளமைக்கு ஒரு எடுத்துக்காட்டு தமிழுக்கு ஒரு சிறப்பு.

எனவே நம் மொழியில் ஒவ்வொரு சொல்லுக்கும் புழக்கத்தில் கொள்ளும் அர்த்தத்தை தவிர அந்த சொல்லுக்குரிய மெய்யான பொருள் மறைவாக உள்ளது என்பது செய்தியாகும்.

உதாரணமாக 'படி' என்ற ஒரு பதத்திற்கு பொருள் கூறும் போது படித்தல் என்று வினைச் சொல்லாகவும், பெயர்ச் சொல்லாக வரும்போது அளக்கும் உபகரணமான படி, வாயிற் படி, அடுக்கு என்ற பொருள் பட வரும். இவ்வாறாக பயன் பாட்டுச் சொல்லாக வரும்போது ஆறு வீதி வழியாக அனைவர் பார்வைக்கும் பட நிற்கும். மெய்யருத்தம் காணும் முகத்தான் படி என்ற பதத்திற்கு மெய்ப்பொருளைத் தேடினால் 18 சந்து களில் தன்னை மறைத்துக் கொண்டு சத்திய வழி நடப்பவர்களுக்கு மட்டும் தன் முகத்தைக் காட்டும்.

இதை மேலும் விவரிக்குமிடத்து, ஒரு பெயர்ச் சொல்லை எடுத்துக் கொள்வோம். ' முயல் ' என்ற ஒரு சொல்லானது வெளித் தோற்ற வழியாக பொதுவாகச் சொல்லுமிடத்து,ஒரு பிராணியைக் குறித்து வரும். இதையே சித்தர்கள் , ஞானிகள் தங்கள் இறை அனுபவங்களைக் கூறுமிடத்து, சாமானியர்களும், துன் மார்க்கர்களும் தங்கள் நெறி வழிகளை துஷ்பிரயோகம் செய்யாமலிருக்கும் பொருட்டு மெய்ப் பொருளை மறைத்துக் கூறுவர். முயற்சியுடையோர் ஒரு மெய்யான ஆசான் மூலம் அறிந்து கொள்ளட்டும் என விட்டுவிடுவர்,முயல் என்ற சொல்லை ஆழ்ந்து நோக்கினால், முயலுதல் என்ற ஒரு செயலுக்கும், அந்த முயலுதல் என்ற காரியப்படும் போது மறைந்து நிற்கும் முயலின் அருங் குணங்களைக் கைக் கொண்டால் முயலுதல் வெற்றியைத் தரும்.
முயலின் குணங்களாவது தூய்மைக்கு உதாரணமாகவும், சுத்தத்திற்கு எடுத்துக் காட்டாகவும் முயல் என்ற பிராணியின். பிறவி அமைப்பு. இதைக் கூர்ந்து நோக்குவோர் மட்டும் அறிந்து கொள்வர். அதிகாலை Dawn என்று சொல்லப் பெறும் பிரம்ம முகூர்த்த காலத்தில் மட்டும் முயலானது நீர் அருந்தும் அருங்குணம் கொண்டது. அது தரையில் உள்ள னீரை அருந்துவதில்லை. காலை வேளையில் வயல் வெளிகளில் நிறைந்து காணப்படும் புற்களின் மேல் பரவி நிற்கும் தூய்மையான பனி நீரை அருந்தும் குணமுடையது முயல். இந்த குணம் சத்வ குணமானதால் இதை முயற்சி செய்தல் நலம். இதை வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தூய்மையையும் சத்தியத்தையும் கைக் கொண்டு நடைமுறையில் முறையான பயிற்சியில் ஒரு ஆசானின் துணையோடு முயல்வோமேயானால் அதுவே முக்திநிலை. இங்கும் முக்தி னிலை என்பது ஒரு பரிபாஷையே.

....................தொடரும்....................(3)

சாலைஜெயராமன்
08-01-2008, 02:15 PM
வெறும் சத்வ குணம், ரஜோ குணம், தமச குணம் என்று கூறுவதைக் காட்டிலும், அந்தக் குணங்களை நாம் தமிழ்வழியில் தேடிக் கண்டடையலாம். அடுத்து ஒரு பரிபாஷை பார்ப்போம்.

குணங்களைப் பற்றிப் பேசும் போது புறங்கூறுதல் என்ற ஒரு தீமையான குணத்திற்கு அர்த்தம் கொள்ளும் போது, சாமானியர்கள் பார்வையில், ஒருவரைப் பற்றி அவர் இல்லாத இடத்து அவரைப் பற்றி தவறான கருத்துக்களை மிகச் சாதாரணமாக உபயோகிப்பது என்பது பொருள். ஆனால் இதையே ஞானிகள் பார்வையில் வேறாக உள்ளது. வடலுார் வள்ளல் பிரான் திரு ராமலிங்க அடிகள் இதைக் கூறுமிடத்து, 'அகத்தைப் பற்றிப் கூறாத எல்லாமும், எதுவும் புறங்கூறுதலே ஆகும்' என்பார். புறம் என்றால் வெளியே / அகம் என்றால் உள்ளே. இயன்றவரை புறத்தினைப் பற்றி சிந்திக்காமல் அகத்துள் உறைந்துள்ள ஈசனை வெளியே தேடாமல் உள்ளேயே சிந்தித்திருப்போமேயானல், தியானம் என்ற தவனிலையை அடையலாம்.

இதையே 'சிவாய நம வென சிந்தித்திருப்போருக்கு' என சைவ ஆகமங்கள் கூறுகிறது. இதையே வள்ளுவ பிரான் எவ்வாறு கையாண்டுள்ளார்கள் எனக் காண்போம்.

நிறை மொழி மாந்தர் தம் பெருமை நிலத்து
அவர்தம் மறைமொழி காட்டிவிடும்

தக்கார் தகவிலார் என்பார் அவர்தம்
எச்சத்தால் காணப் பெறும்

அடக்கம்அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்,

இதில் நிறைமொழி, எச்சம், அடக்கம், ஆரிருள் போன்றவை பரிபாஷைகளாக உள்ளன.

மேலும் இந்தக் குறள்களை (கொரல்களை) நன்கு கூர்ந்து நோக்கின் மெய்யர்த்தம் வேறொன்றாக இருக்கிறது. அது சாமானியர்களுக்கு சாதாரணப் பொருளையும், பரிபாஷை கண்ட நிறை மொழி மாந்தர்க்கு மெய்ப் பொருளான ஒரு மெய்யையும் கொண்டுள்ளது என அறியலாம்.

........................தொடரும்,,,,,,,,,,,,,,,,,, (4)

சாலைஜெயராமன்
08-01-2008, 02:16 PM
எனவே கடவுள் என்பது புறத்தில் அதாவது வெளியில் இல்லை.
சொர்க்கம் என்பது வான வெளியினில் அல்ல. அது நம் அகத்தே உள்ள ஒரு நன்னிலமாகும். எரேபிய மொழியிலிருந்து பைபிளை தமிழாக்கம் செய்யப்பட்டபோது தமிழின் சிறப்பால் புனித பைபிளானது ஒரு மெய்ஞானப் பெட்டகமாக மிளிர்கிறது. உதாரணமாக பிராமண குலத்து மக்களிடையே புழங்கப்படும் பூணுல் என்ற சொல்லை முப்புரி நூல் என்று பைபிளில் கையாளப்பட்டுள்ளது மிக ஆச்சிரியத்தைத்தரும்.. மெய்யான பொருள் மெய்நிலை அடைந்தோருக்கே கிட்டும். பைபிள் பிரசங்கி (4 12) அதிகாரத்தில் முப்புரி நூல் பற்றி வருகிறது. தமிழில் மொழியாகக்கம் செய்யப்பட்டபோதுதான் இந்த வார்த்தைகள் மொழியியலாரிடை மாற்றான வேறு ஒரு சொல் கையாள முடியாது புழக்கத்தில் வந்ததிருக்க வேண்டும். ஏனெனில் பைபிள் ஒரு புனித ஆகமம் அல்லவா. தமிழுக்கு மாற்றப்பட்டபோது நமது மெய்னிலை கண்ட தமிழ்ப் பெரியோர்கள் விட்டுச் சென்ற கருத்துக்கள் பல பைபிளில் உள்ளது. இது நமது மொழிக்கு ஒரு மகத்தான சிறப்பு அல்லவா?

தமிழின் மற்றொறு சிறப்பையும், இதுவரை யாரும் அறிந்திராத ஒரு செய்தியும் இங்கு தர விரும்புகிறேன். நம்முடைய மூச்சுக் காற்றோடு அதாவது உயிரோடு மிகக் கவனமாக இணைக்கப் பட்ட மொழி நமது தமிழ். தமிழ் எங்கள் மூச்சாம் என்ற வாசகமானது எவ்வளவு சத்தியமான ஒன்று என்பதைப் பார்ப்போம்.

நாம் ஒரு நாளைக்கு விடும் மூச்சுக் காற்றானது 21600 முறை என வேலை மெனக்கெட்டு கவனமாக எண்ணப்பட்டது நமது மூதாதையர்களால். அக்ஷ்ரக் கல்வி என்று சொல்லப்படும் நமது தமிழ் மொழியின் உயிர், மெய் எழுத்துக்கள் 216 உடன் 100 சுவாசங்களை ஒரு அட்சரத்திற்கு கொண்டு 21600 சுவாசத்தையும் மொழியோடு இணைத்துள்ளனர். சுவாசப் பயிற்சியெனும் உயர்நிலை யோக நெறி கைவசப்பட்டால் மூச்சோடாத பெரு நிலை தியானத்தைக் கைவசப்படுத்தலாம்.

மூச்சை இழுத்து வெளியே விடும் சுவாசம், மனிதன் பிறந்தவுடன் தொடர்கிறது. இயல்பு னிலையில் நாம் 8 அங்குலக் காற்றை உள்ளே இழுத்து 12 அங்குல அசுத்த காற்றை வெளியில் விடுகிறோம். இந்த இயக்கம் நின்று விட்டால் இறப்புதான். 12 அங்குல காற்று ஒவ்வொரு சுவாசத்திலும் வெளியேற்றப்படுவதால் நரை, திரை, மூப்பு என்னும் நிலைகளில் சின்னாபின்னப்பட்டு பின் இந்த உடல் வீழ்ந்து விடுகிறது. சராசரியாக 100 வயதிற்குட்படுத்தப்பட்ட நம் வாழ்வு தற் காலங்களில் 50க் குள் முடிந்து விடுவதைப் பார்க்கிறோம். வையத்துள் வாழ்வாங்கு வாழவேண்டி பல நூல்கள் சித்த புருஷர்களால் தமிழில் உள்ளதை அறிவோம். அகத்தியமாமுனி அவர்கள் பல காய கல்ப நூல்களைத் தந்துள்ளார்கள்.

இறவாமை என்ற நிலையை மனிதன் அடையவே அனைத்து வேதங்களும், அனைத்து மதகர்த்தர்களின் கொள்கை வகுத்து தொண்டாற்றி வந்தனர். சுவாச னிலையில் இது வெளிப்படுகிறது. சுவாசம் நம் வசப்பட்டால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம். இயல்பான சுவாசத்தை கட்டுக்குள் கொண்டு வர பல யுத்திகள் வகுத்துத் தந்துள்ளனர் நமது முன்னோர்கள். இயலபான சுவாசத்தில் 12 அங்குலம் விரையமாகும் மூச்சானது நமது தேகம் வீழ்ந்துவிடுவதில் முக்கிய பங்கு வகிக்கறிது. இதில் கோபத்தின் வசப்பட்டால் 12 அங்குல சுவாசமானது இயல்புனிலையிலிருந்து 36 மாறி விரையமாகிறது. அதுவே காமத்தில் போகிக்கும் போது 68 ஆகவும், உறக்கத்தில் ஏறக் குறைய 108 அங்குலம் குறட்டை ரூபத்தில் வெளியேறி சாவின் எல்லை சென்று திரும்புகிறது.

இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை 'உறங்குவது போல் சாக்காடு' எனக் கூறுகிறார்.

...................தொடரும் ............(5)

சாலைஜெயராமன்
08-01-2008, 02:17 PM
ஆனால் முயற்சி செய்தால் இந்த 8 அங்குல சுவாசத்தை 4 அங்குலமாக மாற்றி அதையே பின் மூக்கினுள் மட்டும் சுவாசிக்கும் யோக நிலையை அடைய மனிதனால் மட்டுமே முடியும். இந்த சுவாசம் தான வெற்றியைத் தரும் வி சுவாசம்(நம்பிக்கை) என்ற பொருளாக மறைந்து உள்ளது.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் மிகச் சாதாரணமாக பொருளாதாயத் தேட்டலினால் சுவாசத்தை இழந்து மிகச சிறிய வயதில் பொலிவிழந்து டென்ஷன் டென்ஷன் என நம்மை நாமே இழந்து விடுகிறோம். சைவத் தமிழ் நூல்கள் இந்த ஒப்பற்ற சுவாசம் பழகும் யோக நெறியைப் போதிக்கிறது. இதையே முக்தி நெறியாக ஆக்கி உள்ளது தமிழ் வேத ஆகமங்கள்.

அதைப் போல் 'கண்+நாக்கு = கணக்கு' என்பதில் கணிதம் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. கண் நாக்கு இரண்டினாலும் கவனமான அணுகுமுறைக் கைகொண்டால் மிகச் சிறந்த யோக நெறி வசமாகும். தமிழில் மட்டும்தான் இப்படிப் காரணப் பெயர்கள் அதிகம் உள்ளது,


ஆவல் அவா
அறிவு ஞானம்

போன்ற சொற்களும் மிக நீண்ட பாரம்பரியமான மறைபொருளைக் கொண்டுள்ளது உள்ளது. போகப் போக சிறிது சிறிதாகப் பார்ப்போம்.
இவை அனைத்துத் தகவலும் ஆன்மீகத்தோடு சம்மந்தப்பட்டிருந்தாலும் தனியாக சாதி மதம் மொழி என்ற பேதமற்று சத்தியமாக கடைப்பிடித்தால் மட்டும் போதும் வையத்துள் வாழ்வாங்கு இனிமையாக வாழலாம் என்ற கருத்தை சொல்ல விரும்பியே இத்தகவல்களைத் தந்துள்ளேன்.

,,,,,,,,,,,,,,,,,தொடரும்.........(6)

சாலைஜெயராமன்
08-01-2008, 02:18 PM
பொதுவான ஒரு இறைவுலகை அறிவித்தே எல்லா வேதங்களும் இப்பூமிக்கு இறக்கப்பட்டுள்ளன. சைவம் கைலாயம் என்றும், வைணவம் வைகுண்டம் என்றும், இஸ்லாம் மெஹராஜ் என்றும். கிருத்துவம் பரலோக இராஜ்யம் என்றும் இந்த னிலவுலகைத் தாண்டி மோட்ச சாம்ராஜ்ய உலகு ஒன்று உள்ளதை பொதுவாகக் கூறி வைத்துள்ளது.
வள்ளுவப் பெருந்தகை பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை. அருளில்லார்க்கு அவ்வுலகில்லை எனக் கூறிவைத்ததும் இதையே.

தனிமனிதன் பெயர், புகழுக்காக எழுதுவதற்கும், சான்றோர்கள் பிறர் வாழ எழுதி இறக்கியதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. 'இறக்கப்பட்டவை' என்று ஏன் சொன்னேன் என்றால், இரக்கத்தினால்தான், பெரியோர்கள் வருங்கால சந்ததியினர் பயன்படும் வகையில் வேதங்களை எங்கோ இறக்கி வைத்துள்ளனர். அதனால் தான் அச்சுகள், கணிணிகள் இல்லாத காலத்தில் எழுதப்பட்டவை இன்றளவும் நமக்கு கிடைத்து வருகிறது.

சல் முகம்மது நபி பிரானவர்கள் வஹி என்னும் சப்த தொனியால் புனித குரான் இயற்றி இறக்கினார்கள். அதை தமிழில் தர்ஜமா என்று தமிழ் உரையில் இஸ்லாம் மார்க்கத்தின் வேத மந்திரமான பிஸ்மில்லா ஹிர் ரஹ்மான் ஹிர் ரஹீம் என்ற புனித மந்திரத்தின் 24 அட்சரங்களும் ஹிந்து தர்மத்தின் மகாமந்திரமான காயத்ரி மந்ரத்திற்கும் 24 அட்சரங்கள் என்பது வியப்பான செய்தியில்லையா. மனிதன் தன்னை அறியாதவரையில் மதங்களால் மாறுபடுவான் . தன்னை அறிந்தால் எல்லா மதமும் எம்மதமே என்பது புரிய வரும். வேதங்களை இயக்கிய அல்லது எழுதிய செம்மல்கள் ஒரே பொருளைத்தான் பேசியுள்ளார்கள். புரியாததால்தான் பேதங்கள். எனவே எல்லா மார்க்கமும் ஒன்றே என்பதை அகத்துள்தான் தேட முடியும்,

பிரிவினைகளை விடுவோம், அகத்துள் கூடுவோம், பிறரைப் பார்க்காமல். பிற மதங்களை நிந்திக்காமல், பேதங்களும் ஒற்றுமைக்காக ஏற்பட்ட ஒன்றே என்று தர்க்க ரீதியாக சிந்திப்போம். இறைவனை மறுத்து பின் இறையோடு ஒன்றுவோம். ஏனெனில் நாமே கடவுள். பிரிதொரு கடவுள் தனியாக எங்கோ ஆகாயத்தில் இல்லை.

இரை தேடுவோம் இறையையும் தேடுவோம்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

உடம்பினைப் பெற்ற பயன் ஆவதெல்லாம்,

உடம்பினுள் உத்தமனைக்காண்

உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்

போன்ற உயிருக்கான பொன் மொழிகள் தமிழைத்தவிர எந்த இலக்கியத்திலும் இல்லை. தமிழ் ஒன்றுதான் இலக்கை இயம்பும் அதாவது இலக்காகிய முக்தி வீடை இயம்பும் மொழி. நமது இலக்கு பொருள் தேடுவது அல்ல. அருளைத் தேடுவதே, அதற்கான உபகாரமே பரோபகாரம்.

காக்கை குருவி போன்ற பறவையினங்களும், யானை போன்ற பெருவயிறு படைத்த மிருகங்களும் உணவுக்காக யாருடைய உதவியையும் நாடவில்லை. தொண்டு, பணி, உதவி போன்ற செயல்களெல்லாம் அகங்காரத்திற்கு வழிவகுக்குமேயல்லாது நிஜ உதவியாகாது. ஞானத்திற்கு செய்யும் உதவியே பேருதவி. அதுவே பயனுக்கு வருவது. கர்வத்தை அழிப்பது. மற்ற உதவியெல்லாம் போலியே.

அனைத்துயிரையும் நம் உயிராகப் பாவிக்கும் போது, தனிப்பட்ட முறையில் உதவி செய்வேண்டியது அவசியம் இல்லை. அதற்காக இரக்கமற்ற பாவியராய் கொடுமை செய்ய வேண்டுமென்பது பொருளல்ல.

எனவே பரிபாஷைகள் அனைத்தும், முறையாக குருவழி அறிந்து கொள்ள வேண்டி முன் வந்த இறையிலார்கள் தங்கள் இறை அனுபவங்களை முறைப்படுத்தி வைத்துள்ளனர். அதில் தமிழ் பெரும் பங்கு வகிக்கிறது என்ற செய்தியோடு தற்சமயம் முடித்துக் கொள்கிறேன்.


.........................................நிறைவு..................................

நாகரா
17-04-2008, 04:57 AM
ஐயா, நீவிர் ஆரம்பித்திருக்கும் இத்தொடரை இன்றே பார்த்தேன், உமது வலைப்பூவில் ஒரு பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். "உடம்பு" என்ற நற்றமிழ்ச்சொல்லில் நான் கண்ட மெய்ப்பொருள் விளக்கத்தை மன்றத்தில் பகிர்வதில் மகிழ்கிறேன்.

உடம்பு = உட்+அம்பு = உள்+நீர் = உண்ணீர் = உள்ளமுதம்

இந்த "உள்ளமுதமே" மெய்யென்ற காயகற்பமாய் திடப்பட்டிருக்கிறது.

உள்ளமுதம் = அருளொளி = Spiritual Light = சிதாகாசம்

அருளோளியே படிப்படியாக திடப்பட்டு முதலில் பருவெளியாய்(Material Space), அடுத்து வெள்ளொளியாய்(Material Light), ஈறாக பருப்பொருளாம் உடம்பெனும் மெய்யாய் மாறுகிறது.

அருளொளியாம் தாய் பெருவெளியாம் தந்தையில்(சுத்த வெளி, வெட்டவெளி, பரமாகாசம், Spiritual Space, Great Void, சூன்யம், பூரணம்) அடக்கம் என்பதால், வெட்டவெளியின் மிகச் சிறந்த வெளிப்பாடாம் திடமே நம் உடம்பு, எனவே உடம்புக்கு மெய்யென்று தமிழில் பெயர். வெட்டவெளி எனும் மெய்யே உடம்பாம் மெய்க்கு ஆதாரம் மற்றும் அதன் மூலப் பொருள். மூலப்பொருள் சுத்தமாகவே எப்போதும் இருப்பதால், அதிலிருந்து தயாரான உடம்பாம் மெய்யும் சுத்த தேகமே. எனவே நித்தியப் பெருவாழ்வு உயிர்திரள் ஒவ்வொன்றின் அடிப்படை இயல்பு மற்றும் ஜீவாதார உரிமை. இதை நாம் உணர்ந்து, மாயையின் நரை, திரை, நோய், தேய்வு, மூப்பு மற்றும் மரணப் பேயாட்டம் மாய ஐயன் வள்ளல் பிரான் வழி நடத்துதலை இறைஞ்சி நிற்கிறேன்.