PDA

View Full Version : என் படைப்புகளின் முகவரி - ஆதி



ஆதி
08-01-2008, 09:15 AM
என் படைப்புகள் பற்றியும் என்னைப் பற்றியும் ஒரு அறிமுகம்

நீ கவிஞனா ? என்கிறக் கேள்வி என்னுள் எழுகிறப் போதெல்லாம் நான் எழுத ஆரம்பிக்கிறேன். இதுவரைக்கும் என்ன எழுதீட பெருசா, எழுததான் ஊங்கிட்ட என்ன இருக்கு புதுசா ? என எனக்குள் இருப்பவன் எழுப்பும் கேள்விகளுக்கு, பதில் தேடிப் புரப்பட்ட என் எழுத்துக்கள் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றன அவனுக்கான பதிலை.

நீ எழுதுவது எல்லாம் எழுத்தா, உனக்கு என்ன தெரியும் எழுத ? என இன்னொரு துருவத்தில் இன்னொருவம் எழுப்பும் கேள்விகளில், கவிழ்தப் பாத்திரத்தில் கழலாமல் இருக்கிற பருக்கைகள் போல எஞ்சிக் கிடக்கிற என் ஏழை நம்பிக்கையும் சல்லி சல்லியாய் உடைகிறது.


சரி விடுங்கப்பா, அவன் எழுதிதான் பார்க்கட்டுமே.. என இன்னொரு முகமாய் இன்னொருத்தன், குறு முறுவலும், கொஞ்சம் நம்பிக்கையும், சில காகிதங்களையும் எழுதிப் பழுகு என கொடுத்துவிட்டுப் போகிறான் மற்றொரு துருவம் நோக்கி..


இந்த மூன்று துருவங்களின் மையப்ப புள்ளியில் இருந்து துவங்கி விடுகிறது தினம் தினம் ஒரு பயணம் படைப்பின் துருவம் நோக்கி..

இறுகிய ஆறுகள், நெகிழ்ந்த ஆறுகள், வறண்ட ஆறுகள், குளிர்ந்த ஆறுகள் என எல்லா ஆறுகளையும் அறுத்துக்கொண்டு நிகழும் என்றன் பயணங்களில் நான் அறிந்து கொண்டன சிலவே, அதுவும் முழுமையானது அல்ல..

இது தேவையான தேடலா, என் தேவைகளுக்கான தேடலா, இல்லை தேவைகளுக்கான தேவைகள் என கருதிக்கொண்டு தேவைகளாய் தேவைகளை தேவைகளற்று தேடும் தேடலா ? தெரியாமல் தெரியாத வழி போய் கொண்டிருக்கிறேன் வழிப்போக்கனாய்..


கையில் எடுப்பதும், விட்டெறிவதும், துறத்தி பிடிப்பதும், தரையில் அடிப்பதும், கைதட்டி சிரிப்பதும், மீண்டும் கையில் எடுப்பதும், என தொடரும் குழந்தையின் விளையாட்டுப் போல சிலப் பாடு பொருட்களை ஏந்திக் கொண்டு தொடர்கின்றன என் பயணங்கள் ஆசுவாசமில்லாமல்..


எண்ணக் குறிப்புகளாய் எழுதப்படுகிற சிலப் படைப்புகள், சின்னப் பிள்ளையின் மணல் வீடு போல குவிப்பதும் சரிவதும் மீள குவிப்பதும் சரிவதுமாய் தொடர்கிறது ஒரு முழுமை இல்லாமல்.


இந்த கவிதைகளின் என் ஏக்கத்தையும் தாகத்தையும் ஆற்றாமையையும் நீங்கள் சந்திக்க நேர்ந்தால் தயவு செய்து அவற்றை ஆற்றிப்போங்கள்..

இது என் கவிதை மழலைகள் தூங்கும் தொட்டில், பார்வையாளர்கள் தயவு செய்து சத்தம் போடாமல் உள்ளே வரவும், பார்வை நேரம் 00.00 - 24.00.

அன்பன் ஆதி

படைப்புகளின் முகவரிகள்

காதல் கவிதைகள்

காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13239)

உயிர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13679)

காதல் நாடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14013)

நம் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13713)

ஒரு துளிக் கடல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13752)

எப்படி இருக்கனும்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13414)

நீயும்.. நானும்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13575)

பிள்ளையார்சுழி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13536)

அவளுடன் ஒரு உரையாடால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13841)

இளநகை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13342)

பதிலற்றக்கேள்விகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13413)

என் காதல் கடிதம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13957)

பொய்யுரைக்கணிதன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13954)

இல்லியல் கவிதைகள்

முற்றம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13167)

வெக்கை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13100)

முரண் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13081)

தவம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13255)

வீடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13256)

ஜோடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=305516#post305516)

பரிசு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13440)

ஆர்.ஈஸ்வரன்
08-01-2008, 09:36 AM
கவிதைக்குத் தேவை கற்பனையும், யதார்த்தமும், உண்மையும், அதுதான் உங்களிடம் கொட்டிக்கிடக்கிறதே. அப்புறம் ஏன் இந்த சந்தேகங்களெல்லாம்

சிவா.ஜி
08-01-2008, 09:59 AM
நீ எழுதுவது எல்லாம் எழுத்தா, உனக்கு என்ன தெரியும் எழுத ? என இன்னொரு துருவத்தில் இன்னொருவம் எழுப்பும் கேள்விகளில், கவிழ்தப் பாத்திரத்தில் கழலாமல் இருக்கிற பருக்கைகள் போல எஞ்சிக் கிடக்கிற என் ஏழை நம்பிக்கையும் சல்லி சல்லியாய் உடைகிறது.

எதிர்ப்பு தரும் ஊக்கத்தைப் போல ஆதரவு கூட தருவதில்லை ஆதி.விழும் ஒவ்வொரு கல்லையும் உங்கள் கவி மாளிகையின் கட்டுமாணாப் பணிகளுக்கு பயண்படுத்திக்கொள்ளுங்கள்


சரி விடுங்கப்பா, அவன் எழுதிதான் பார்க்கட்டுமே.. என இன்னொரு முகமாய் இன்னொருத்தன், குறு முறுவலும், கொஞ்சம் நம்பிக்கையும், சில காகிதங்களையும் எழுதிப் பழுகு என கொடுத்துவிட்டுப் போகிறான் மற்றொரு துருவம் நோக்கி..

அதுதான்....பார்க்கட்டுமே என சொன்னவர்களும் பார்கட்டுமே உங்கள் படைப்புகளின் வீரியத்தை.


கையில் எடுப்பதும், விட்டெறிவதும், துறத்தி பிடிப்பதும், தரையில் அடிப்பதும், கைதட்டி சிரிப்பதும், மீண்டும் கையில் எடுப்பதும், என மீண்டும் தொடரும் குழந்தையின் விளையாட்டுப் பொருள் போல சிலப் பாடு பொருட்களை ஏந்திக் கொண்டு தொடர்கின்றன என் பயணங்கள் ஆசுவாசமில்லாமல்..

ஆசுவசிக்காமல் தொடருங்கள் உங்கள் தேடலை.வடிக்கின்ற ஒவ்வொன்றும் படிக்கின்ற பொருளாகும்போது தேடல் இனிக்கும்.


இது என் கவிதை மழலைகள் தூங்கும் தொட்டில், பார்வையாளர்கள் தயவு செய்து சத்தம் போடாமல் உள்ளே வரவும், பார்வை நேரம் 00.00 - 24.00.

அன்பன் ஆதி

எப்போதும் வருவோம் தூங்கும் மழலைகளை துயிலெழுப்பி கொஞ்சி சீராட்டி,பாராட்டி பக்கமிருப்போம்.வாழ்த்துகள் ஆதி.

சாலைஜெயராமன்
11-01-2008, 01:44 AM
உணர்வுகளை செய்தியாக்க அன்னைத் தமிழ் மொழியைத் தவிர எந்த மொழிக்கு தகுதியிருக்கிறது? பொய்க் கலப்பில்லாத எதார்த்தத்தைத் தெரிவிக்க கவிதையாகத்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. நவரசங்களையும் வெளிப்படுத்தினாலே போதும் கவிதையாகிவிடும். ஏனெனில் நம் மொழியே கவி அல்லவா?

புதியவர் திவ்யாவின் கவிதையைப் பாருங்கள். தொடருங்கள் ஆதி

அமரன்
11-01-2008, 07:26 AM
அருமை.. அருமை...

மையப்புள்ளியில் நின்று
பல்பக்க விசைகளின் வழி செல்லும்
'போக்க'னின் வாழ்க்கை வட்டப்பரப்பு
விசாலாமாகின்றது...
இரட்டைக் குளவிபோல
நிஜானுபவங்களும், கற்பனானுபவங்களும்..
அதனால்
குழந்தைகள் மகத்துவமானவையாக....

இன்னும் பல மழலை கொஞ்சல்களை எதிர்நோக்கி இருக்கின்றேன்..

சுகந்தப்ரீதன்
12-01-2008, 12:45 PM
கையில் எடுப்பதும், விட்டெறிவதும், துறத்தி பிடிப்பதும், தரையில் அடிப்பதும், கைதட்டி சிரிப்பதும், மீண்டும் கையில் எடுப்பதும், என தொடரும் குழந்தையின் விளையாட்டுப் போல சிலப் பாடு பொருட்களை ஏந்திக் கொண்டு தொடர்கின்றன என் பயணங்கள் ஆசுவாசமில்லாமல்..

கவிதை எழுதுவதை ஒரு குழந்தையின் செயலுடன் ஒப்பிட்ட உன் குழந்தைதனம் அருமை ஆதி..! எண்ணங்களின் எதிரொலியும் உணர்வுகளின் பிரதிபலிப்பும் மொழி வடிவில் வெளிபடுவதே கவிதை என கருதுகிறேன்.. உங்கள் கவிக்குழந்தைகள் நிச்சயம் தாலாட்டபடும் நண்பரே நம் மன்றத்து மாமணிகளால்..!

யவனிகா
18-01-2008, 10:23 AM
எனக்குப் படிப்பதில் கொஞ்சம் அவசர புத்தி உண்டு...ஆனால் ஆதியின் கவிதைகளை ரசித்து படிக்க வேண்டும்...பிரிண்ட் அவுட் எடுத்து,பயணிக்கும் நேரத்தில் படிக்க உத்தேசம்...விரைவில் பின்னூட்டம் இடுகிறேன்.

பென்ஸ்
18-01-2008, 01:29 PM
நீண்ட பதிவுகள் நான் திறந்து வாசிக்காமல் செல்லுபவை...
பொறுமையின்மையை நேரமின்மை என்று பெயர் சூடி என்னையே
நான் சமாதானபடுத்தி கொண்டாலும்,
சிலர் எழுத்துகள், எத்தனை பக்கங்கள் போனாலும் வாசித்து கொண்டே இருக்கலாம்....

தாமரையின் நகைசுவை நிறைந்த கட்டுரைகள்...
இளசுவின் ஆழமான பதிவுகள், பின்னூட்டங்கள்...
பாரதியின் தேதியில்லா குறிப்புகள்...
லியோ மோகன், ராகவனின் கதைகள்...
ஷீ, ஆதவாவின் கவிதைகள்...
என்று நீண்டு போகும் பட்டியலில் ... உங்கள் கவிதைகளும் இனைந்துள்ளன....

என் வாசிப்பு திறமை குறைவாக இருப்பதால் சின்ன பதிவுகளுடன் சென்று விடுவதற்கு வருந்தினாலும்,
மன்றம் என்னை போன்றவர்களுக்கும் தீனி கொடுக்கிறதே என்று எண்ணி மகிழ்ச்சிதான்...

மனோஜ்
30-01-2008, 02:18 PM
வாழ்த்துக்கள் ஆதி
தங்களின் கவிதைகள் தமிழின் முத்துக்கள்
மன்றதில் மகிழ்சிகள் நிறைந்த பல கவிதைகளும் பதிவுகளும் இன்னும் இன்னும் பல மடங்காக பங்கலிக்க வாழ்த்துக்கள்
தொடர்ந்து பயணிப்பொம் தமிழ்மன்றம் என்ற படகில்

அனுராகவன்
12-02-2008, 02:09 AM
வாழ்த்துக்கள் ஆதி !!
தொடர்ந்து எழுதுங்கள்..!!!
ம்ம் என் நன்றி!

பூமகள்
12-02-2008, 03:01 PM
ஒற்றைப் புள்ளியில்
கவிஞருக்கான இலக்கணம்..!
இரண்டாம் புள்ளியில்
நிரூபண சாட்சி கவிஞராய்..!
மூன்றாம் புள்ளியில்
கவிஞர்க்கு சாமரமாய் உள்மனம்...!

இத்தனை புள்ளிகள்
ஒன்று சேர்ந்து
பயணிக்கும்
கவிச்சாலையின்
ஆதி தொடங்கி
பயணம் முழுதுமே
காணக் கிடைப்பவை
ரத்னங்கள் தான்..!

விசாலமாகட்டும்
இன்னும் இன்னும்
பிரபஞ்சம் போலவும்
முடிவிலி போலவும்
உங்களுள் உருவாகும்
கவிக்கருவும்
கவிப்பொருளும்..!

படித்து சுவைத்து
பதியனிட கவிப்பூச்சோலையை
தயாரித்துக் கொள்கிறேன்..!

-------

வாழ்த்துகள் ஆதி..!
இன்னும் இன்னும் இங்கே புள்ளிகள் தேடலின் மைல்கற்களாய் அமைந்து வைர படைப்புகள் குவிய பாராட்டுகள்..!

செந்தமிழரசி
03-03-2008, 09:27 AM
பொதுவாக பெரும்பாலான உங்கள் படைப்புகள் என் விழிகளில் வியப்பை பெருகிகசியதான் வைக்கும். கவிதைகள்தான் அப்படி என்றால் கவிஞர் அறிமுகமுமா ? ஆதி, ஒரு வரிகளில் இருமனிதனாய் உள்முகத்தையும் வெளிமுகத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்த உங்களுக்கு தெரிகிறது.

நான்கு துருவங்களை நான்கு முகமாய் கண்டு, அதன் நடுவப்புள்ளியில் இருந்து புரப்படுவதாக உங்கள் பயணங்களுக்கு ஒரு பெயரையும் தந்து, எழுதப்பட்டிருக்கிற உங்கள் அறிமுகம் அசத்தல்.

இவனெல்லாம் எழுத்தாளனா ? என்னத்த எழுதப்போரான் என்று சொல்லும் சமுதாயத்தையும், எழுத உன்னிடம் என்ன இருக்கிறது ? இதுவரை என்ன எழுதிவிட்டாய் என்று எதிரொலிக்கும் உள்முகக் கேள்விகளையும் ஒருமையில் எழுப்பி சிந்திக்க வைக்கிற திறம் சிறப்புற இருக்கிறது உங்களிடம்.

மன்றம் வந்ததில் இருந்து நான் அதிகம் ரசித்திருக்கிற கவிதைகள் உங்களுடையவை. வலிந்து இழுக்காமல் வார்த்தை உங்களை தேடி வந்திருக்கிறதை கவனித்திருக்கிறேன் நான். பழமை என்கிறபடி ஆதி என்று பெயர் கொண்டிருந்தாலும் புதுமைகளாய்தான் மின்னுகிறது உங்கள் கவிதைகள்.

காதலும் இல்லியலும் அதிகம் பாடுகிற நீங்கள் அதையும் கடந்து மற்றவற்றையும் பாட வேண்டும் என்பது என் விருப்பம். இதை தங்கள் கவிதைகளின் ரசிகை என்கிற உரிமையிலேயே கேட்கிறேன்.

சாலைஜெயராமன்
08-03-2008, 05:19 PM
என் வேண்டுகோளுக்கு ஆதரவாய் இன்னொரு குரல்.

திரு ஆதி கவனிப்பீர்களா சகோதரி செந்தமிழரசியின் விருப்பத்தை.

ஆதி
14-03-2008, 03:11 PM
என் வேண்டுகோளுக்கு ஆதரவாய் இன்னொரு குரல்.

திரு ஆதி கவனிப்பீர்களா சகோதரி செந்தமிழரசியின் விருப்பத்தை.

நிச்சயமாய் வேறு பாட்ட பொருட்களை வேறு பட்ட கோணங்களில் பாட முயல்கிறேன் ஐய்யா அவ்வப்போது காதலையும். வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன் ஆதி

செல்வா
14-03-2008, 03:39 PM
கட்டுவோர் விலக்கிய கல்லே வீட்டிற்கு மூலைக்கல்லாயிற்று... நீயும் மூலைக்கல் தான் மறந்துவிடாதே அன்பு ஆதி....

kavitha
17-06-2008, 09:43 AM
விலக்கிய கல்? --- செல்வாவின் புதிர் விளங்கவில்லையே!

ஆதி - உங்களின் சமீபத்திய கவிதைகளின் சுட்டியையும் இதில் ஏற்றி வைக்கலாமே!