PDA

View Full Version : இதுவும் ஒரு காதல் கதை - நிறைவுமதி
08-01-2008, 07:42 AM
(முன் குறிப்பு: ஒருமுறை அலுவலகத்தில் மதிய இடைவேளையின் போது நடந்த அரட்டையின் தாக்கத்தில் எழுத ஆரம்பித்தது இது. தொடரா எழுதி ஏறக்குறைய ஏழெட்டு மாதங்கள் இருக்கும். ஆயினும் மன்றத்தில் இட தைரியம் வரவில்லை. எப்படியோ இது வரை எத்தனையோ கடிகளையும் மொக்கைகளையும் தாங்கிய மன்றம் இதனையும் தாங்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் 3000ம் பதிப்பாய்)

காலை ஒன்பது மணி. மணி அடிக்கிற சத்தம். கொஞ்ச நேரத்தில வகுப்புகள் தொடங்கப் போகிறது. ஆண்டு விடுமுறைக்குப் பின் இன்னிக்கு தான் பள்ளி திறக்கிறது. புது வகுப்புக்கு போற சந்தோஷத்துல பிள்ளைகள் புது சொக்காய் உடுத்தி வகுப்புத் தேடி ஓடினார்கள்.

அட..யாரது. யாரோ ஒரு பையன் வேகமாய் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வர்றான்? பையன் வந்த வேகத்தில் மண் சறுக்கியது. காலில் சிராய்ப்பு. கொஞ்சமாய் ரத்தம் வர ஆரம்பித்தது. அந்த பையன் சைக்கிளை நிறுத்திவிட்டு வருவதற்கு முன் அவனைப் பத்தி பாப்போமா?

அந்த பையன் பேர் ப்ரேம். சின்ன வயதிலிந்து அந்த பள்ளிக்கூடத்துல் தான் படிக்கிறான். அவனுக்கென்று ஒரு பெரிய தோழர் பட்டாளம் உண்டு. எட்டாவது முடித்துவிட்டு இதோ ஒன்பதாம் வகுப்புக்கு போகிறான். முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். ஓரளவுக்கு நல்லாவே படிக்கிற பையன். கொஞ்சம் சமர்த்து. பசங்களோட சேர்ந்தா கொஞ்சம் வால். இன்னிக்கு கொஞ்சம் தாமதமா எழுந்திருச்சதால வேகவேகமா வர வேண்டியதா போச்சு.

சிராய்த்திருந்த முட்டிக்கால்ல எச்சில் தொட்டு தேய்த்தவாறே பள்ளிக்கட்டிடத்தை பார்த்து ஓடினான். ரொம்ப நாள் கழிச்சு தோழர்களை பார்க்கிற சந்தோஷம். மனசு பட்டாம்பூச்சியா பறந்திட்டு இருந்தது. பள்ளி வராண்டாவில் வேகமா ஓடினவன் அறிவிப்பு பலகையில் தன் வகுப்பு எதுன்னு தேடினான். அங்கிருந்த ஏகப்பட்ட தாள்ல ஒரு தாளில் 9-A என்றிருந்தது. வரிசையா பார்த்துக்கொண்டே வந்தான். அதோ அவன் பேர்.

கொஞ்சம் ஆர்வமிகுதியால தன் ஆள்காட்டிவிரலால ஒவ்வொரு பேரா பார்த்துக்கிட்டே வந்தான். எல்லாம் தெரிஞ்ச பேர் தான். ப்ரேமோட விரல் ஒரு பேர் மேல் நின்றது. ஷில்பா. கேள்வி படாத பெயர். புதுசா வந்த பொண்ணா இருக்கும். இது வரைக்கும் இங்க பார்த்ததில்லை. யாராயிருக்கும்? மனசுக்குள்ள ஆயிரம் சிந்தனைகளோடு தன் வகுப்பு நோக்கி நடந்தான் ப்ரேம்.

டேய்என்னடா யோசிச்சுகிட்டே வர்றே? யார பத்திடா..?!

ப்ரேமோட நண்பன் கிஷோர். இவனும் அவன் வகுப்பு தான். எல்லோரும் ஒன்னா சேர்ந்து கொட்டமடிக்கற பசங்க. இன்னிக்கு அவனும் லேட். ஆனா கொஞ்சம் கூட பயமே இல்லாம ஆடிப் பாடிகிட்டு வந்தான்.

இல்லடா மச்சான்..கொஞ்சம் தூங்கிட்டேன். எந்திருச்சு பாத்தா எட்டு மணியாயிடுச்சு. அம்மாவும் அப்பாவும் வேற கல்யாணத்துக்கு போயிருக்காங்களா..அதான் யாரும் எழுப்பல. ஆமா நீ ஏன்டா லேட்டு?

(இப்பலாம் பயலுவ ஒன்னாப்புலேயே மாமன், மச்சான் னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாய்ங்க)

அத ஏண்டா கேக்குற. நானும் ஒன்ன மாதிரி தான். தூங்கிட்டேன். ஏன்டா இன்னும் எந்திருக்கலேன்னு அம்மா தண்ணி ஊத்திட்டாங்க. அரக்கபரக்க குளிச்சு முடிச்சு வந்து பாத்தா சைக்கிள் பஞ்சர். கடையில போய் பஞ்சர் ஒட்டிகிட்டு வர்றதுக்கு இம்புட்டு நேரமாச்சு. சரி வா..சீக்கிரம் போவோம். யாரு டீச்சர்ன்னே தெரியல. மொத நாளு அதுவுமா திட்டு வாங்க வேணாம்

ரெண்டு பேரும் ஓடிப்போய் மாடியில இருந்த அவங்க வகுப்பறை வாசலில் நின்றார்கள். அட! நம்ம மல்லிகா டீச்சர். மல்லிகா டீச்சர் தமிழ் பாடம் சொல்லிக் கொடுப்பவர். மத்த பாடத்துல எப்படி இருந்தாலும் ப்ரேம் அண்ட் கோ தமிழ்ல அடிச்சு புடிச்சு நல்ல மதிப்பெண் வாங்கிடுவாங்க. தமிழ்ல மட்டும் மத்த பிள்ளைங்களுக்கெல்லாம் நேர் எதிர். அதனால ப்ரேம் கிஷோர் ரெண்டு பேரும் மல்லிகா டீச்சருக்கு செல்லம். இந்த வருஷம் அவங்க தான் இவங்க வகுப்பாசிரியர்ங்கறது இவங்களுக்கு இன்ப அதிர்ச்சியா இருந்தது.

சத்தம் போட்டுகிட்டு இருந்த பசங்கள எல்லாம் அதட்டிட்டு டீச்சர் வாசல் பக்கம் திரும்புனாங்க.

வாங்கப்பா..வாங்க. மொத நாளு அதுவும் இவ்ளோ நேரங்கழிச்சா வர்றது? சரி சரி. உங்கள சும்மா உள்ளாற வுடப்படாது. தாமதமா வந்த காரணத்த சொல்லிட்டு உள்ள போய் உக்காருங்க?

கிஷோர் ஆரம்பித்தான்.
டீச்சர்..அது வந்துஇன்னிக்கு நான் ஸ்கூலுக்கு கிளம்பும் போது சைக்கிள் டயர் பஞ்சராயிடுச்சு. அத ஒட்டிகிட்டு வந்தேனா.

ப்ரேம் மனம் இதிலெல்லாம் போகவில்லை. அந்த வகுப்பறையில் நீண்ட பெஞ்சுகள் இருந்தன. ஒன்னொன்னுலேயும் ஐந்து பேர் உட்காரலாம். முதல் ரெண்டு பெஞ்சுலேயும் பொண்ணுங்க உட்காருவாங்க. பசங்க கடைசி பெஞ்சுலேர்ந்து உட்காருவாங்க. என்னிக்கு உருப்பட்டிருக்கானுங்க அவங்க..?

ஒவ்வொருத்தரா பார்த்துக்கிட்டே வந்தவன் ரெண்டாவது பெஞ்சில ஓரமா உட்கார்ந்திட்டிருந்த பொண்ணை பார்த்தான். ஓ..இது தான் புதுசா வந்தவளோ..? பார்த்திட்டு இருக்கும் போதே அவன் கண் இருட்ட ஆரம்பித்தது. தலை சுத்தற மாதிரி இருந்தது.

டீச்சரையே கவனிச்சிட்டு இருந்த ஷில்பா சட்டென துணுக்குற்றாள்.
யாரோ என்னை பார்க்கறாங்க

சுற்றும் முற்றும் பார்த்தவ கதவோரத்தில நின்ற ரெண்டு பேரையும் பார்த்தாள். அட! என்ன இது ஒருத்தன் தள்ளாடற மாதிரி இருக்கே?. அப்போ தான் அவன் காலில் ரத்தம் வழிவதை பார்த்தாள்.

டீச்சர்..டீச்சர்..அங்க பாருங்க. கிஷோரின் மேலிருந்த கவனம் சிதறி எல்லாரும் இவளைப் பார்த்தார்கள்.

ப்ரேமை நோக்கி கைகாட்டியவாறே,

டீச்சர்..அங்க பாருங்க. அவன் காலில ரத்தம் வழியுது. மயக்கமாகி கொண்டிருந்த ப்ரேமுக்கும் அப்போது தான் உறைத்தது. சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டதும் ரத்தம் வழிவதும் கூட மறந்து புது பெண்ணை பற்றி யோசித்துக்கொண்டிருந்திருக்கிறான்.

மல்லிகா டீச்சர் சட்டென போய் அவனைப் பிடித்தார். கைத்தாங்கலாய் அவனைப் பிடித்தவாறே பெஞ்சில் படுக்க வைத்தார்.

டேய் கிஷோர். உடனே ஓடிப்போய் ஆயாகிட்ட நான் கேட்டேன்னு ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வாங்கிட்டு வா..

கிஷோர் சிட்டாய் பறந்தான்.

மாணவர் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீர் எடுத்து அவன் மேல் தெளித்தார். இத்தனை களேபாரத்தையும் டீச்சர் கூடவே இருந்து கண்ணில் கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ஷில்பா. ப்ரேம் தண்ணீர் குடித்ததும் ஓரளவு தெளிவானான். கண்ணை விழித்து விழித்துப் பார்க்கையில் முதலில் தெரிந்தது அவள் உருவம் தான்.
அட..இவள் ஏன் கண் கலங்குறா? மனதுக்குள் நினைத்தவாறே எழுந்து உட்கார முயன்றான்.

இதற்கிடையில் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸோடு கிஷோர் வர அவன் காலுக்கு மருந்திட்டார் டீச்சர். பேண்ட் எய்ட் போட்டவுடன் ரத்தம் நின்றது. மற்ற மாணவர்கள் தத்தம் நண்பர்களோடு அரட்டை அடிக்க போய் விட்டனர்.

டீச்சர்! அவன் ஏதாச்சும் சாப்பிட்டானான்னு கேளுங்க. பார்க்க ரொம்ப டயர்டா தெரியறான் ஷில்பா தான்.

ப்ரேம், என்னாச்சு. காலையில ஒழுங்கா சாப்டியா?

அப்போ தான் அப்பா அம்மா ஊரிலில்லாததால சீக்கிரம் எந்திருக்க மறந்து அவசர அவசரமாய் கிளம்பி வந்ததை நினைத்துப் பார்த்தான். இதற்கிடையில் காலையில் சாப்பிட மறந்துவிட்டான். அதுவும் அடிபட்டதும் சேர்ந்து மயக்கம் வந்துவிட்டது.

இல்லையென்று தலையாட்டினான். உடனே தன் கூடையிலிருந்த டிபன் பாக்ஸை எடுத்து நீட்டினாள் ஷில்பா. அதை வாங்கி டிபன் பாக்ஸைத் திறந்தான் ப்ரேம். பார்த்தவுடன் அவன் கண்கள் விரிந்தது.

-மிச்சசொச்சம் தொடரும்

சிவா.ஜி
08-01-2008, 08:10 AM
ஆஹா மதி....அட்டகாசமான ஆரம்ப நாட்களின் காதலை அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டீர்களா...சூப்பரா கொண்டுபோறீங்க.
தொடக்கமே அசத்தல்.எடுத்தவுடனே சிம்பதி கிரியேட் பண்ணிட்டீங்க....இனிமே என்ன தூள்தான்.நடத்துங்க நடத்துங்க....

தாமரை
08-01-2008, 08:42 AM
ஷில்பா பேரைப் பார்த்தவுடன் மனசு பாடியது ஒரு ""ஜில்" பா.

டச்சிங் டச்சிங்காய் ஒரு கதை எழுதறீங்க..


கேள்வி படாத பெயர்.
புதுசா வந்த பொண்ணா இருக்கும்.
இது வரைக்கும் இங்க பார்த்ததில்லை.
யாராயிருக்கும்?

ஓ..இது தான் புதுசா வந்தவளோ..?

யாரோ என்னை பார்க்கறாங்க

டீச்சர்..அங்க பாருங்க. அவன் காலில ரத்தம் வழியுது.

அட..இவள் ஏன் கண் கலங்குறா?

டீச்சர்! அவன் ஏதாச்சும் சாப்பிட்டானான்னு கேளுங்க. பார்க்க ரொம்ப டயர்டா தெரியறான்


கடைசி வசனம் கொஞ்சம் ஒட்டலியே மதி.. நேச்சுரல் ஃப்ளோ மிஸ்ஸிங். வசனம் பெரிசா இருக்கு. இரண்டு வாக்கியங்கள்.. அப்புறம் அந்த டச்சிங் டச்சிங் பாணி மிஸ்ஸிங்.. ம்ம்..

அதுக்கப்புறம் டீச்சர் சொன்னது ஓகே


ப்ரேம், என்னாச்சு. காலையில ஒழுங்கா சாப்டியா?

எழுதுங்க எழுதுங்க...

மதி
08-01-2008, 09:34 AM
சீரியஸா....
எனக்கும் அதே தோணுச்சு... அதான் இதுவரை பதிக்கல..வெட்டியா என் கணினியில இருக்கேன்னு தான் என்ன இருக்குன்னு பார்க்காம கூட பதிச்சேன்....

இதுல ஷில்பா கொஞ்சம் மெச்சூர்டான பெண்..அப்படி வச்சுக்க வேண்டியது தான்... ஹிஹி

அமரன்
08-01-2008, 09:42 AM
எழுதும்போது அனுபவித்து எழுதுவர் சிலர். அனுபவித்ததை எழுதுவர் சிலர். இரண்டுமே வாசகனை கொள்ளைகொள்ளும். அதிலும் பள்ளிப்பருவம் என்றால்... தொடருங்கள் மதி. நல்லா இருக்கு.. வாழ்த்துகள்.

யவனிகா
08-01-2008, 09:46 AM
மதி...மீண்டும் பள்ளிக்குப் போகலாம்..நம்மை நாம் அங்கே காணலாம்...அப்படின்னு பாட்டுப் படிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல...அடுத்தது பெஞ்சில ஆட்டின் வரைஞ்சு ஷில்பான்னு எழுதப் போறீங்க அதான...அப்புறம் நீங்க ஹோம் வொர்க் பண்ணாம எழுந்து நிக்கும் போது ஷில்பா நோட்டுத் தரப் போறா...தினப்படி உங்களுக்கும் சேர்த்து தயிர் சாதம்,மாவடு கொண்டு வரப் போறா...அப்புறம்....என்ன...அடடா மதி உங்க கதைய நான் எழுதிருவேன் போல.....வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

தாமரை
08-01-2008, 09:48 AM
எழுதும்போது அனுபவித்து எழுதுவர் சிலர். அனுபவித்ததை எழுதுவர் சிலர். இரண்டுமே வாசகனை கொள்ளைகொள்ளும். அதிலும் பள்ளிப்பருவம் என்றால்... தொடருங்கள் மதி. நல்லா இருக்கு.. வாழ்த்துகள்.

என்ன பத்த வைக்கிறீங்க அமர்..
சொன்னாக் கேளுங்க..

இதில் கொஞ்சம் கூட அனுபவம் இருக்கிற மாதிரி தெரியலை(?):icon_ush:.

இல்லையா மதி.:rolleyes:

மதி
08-01-2008, 10:00 AM
என்ன பத்த வைக்கிறீங்க அமர்..
சொன்னாக் கேளுங்க..

இதில் கொஞ்சம் கூட அனுபவம் இருக்கிற மாதிரி தெரியலை(?):icon_ush:.

இல்லையா மதி.:rolleyes:

அப்படியெல்லாம் இல்லீங்க..நிறைய அனுபவம் இருக்கு...
என் நண்பனின் அனுபவம்..எங்கியாவது என் அனுபவம்..
அதான் ஏற்கனவே சொல்லியாச்சே.. இது பள்ளியிலிருந்தே காதலித்து மணம் புரிந்த என் நண்பனின் கதையாக சொல்ல வந்து..எக்குத்தப்பா எகிறிய கதையாக்கும்... எல்லாம் லஞ்ச் டைம் டிஸ்கஷனால வந்தது... உசுப்பேத்தி ரணகளமாக்கிட்டாங்க...:icon_ush::icon_ush::icon_ush:

மதி
08-01-2008, 10:00 AM
மதி...மீண்டும் பள்ளிக்குப் போகலாம்..நம்மை நாம் அங்கே காணலாம்...அப்படின்னு பாட்டுப் படிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல...அடுத்தது பெஞ்சில ஆட்டின் வரைஞ்சு ஷில்பான்னு எழுதப் போறீங்க அதான...அப்புறம் நீங்க ஹோம் வொர்க் பண்ணாம எழுந்து நிக்கும் போது ஷில்பா நோட்டுத் தரப் போறா...தினப்படி உங்களுக்கும் சேர்த்து தயிர் சாதம்,மாவடு கொண்டு வரப் போறா...அப்புறம்....என்ன...அடடா மதி உங்க கதைய நான் எழுதிருவேன் போல.....வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

சபாஷ்..இதெல்லாம் எனக்கு தோணாம போயிடுச்சே...
என்னன்னாலும் அக்கான்னா அக்கா தான்.. உங்க அளவுக்கு அனுபவமெல்லாம் இல்லீங்க..:eek::eek:

மதி
08-01-2008, 10:01 AM
எழுதும்போது அனுபவித்து எழுதுவர் சிலர். அனுபவித்ததை எழுதுவர் சிலர். இரண்டுமே வாசகனை கொள்ளைகொள்ளும். அதிலும் பள்ளிப்பருவம் என்றால்... தொடருங்கள் மதி. நல்லா இருக்கு.. வாழ்த்துகள்.
இது எந்தவிதத்துல சேரும்னே தெரியல...:icon_ush::icon_ush::icon_ush:
ஆனா நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவனுங்க..

மதி
08-01-2008, 03:50 PM
பசி மயக்கத்தில் இருந்தமையாலும் ரத்தம் வெளியேறிய களைப்பினாலும் இருந்த ப்ரேமிற்கு பூரியைக் கண்டதும் சாப்பிடும் ஆவல் அதிகமாயிற்று. ஷில்பாவை நன்றிப்பெருக்கோடு பார்த்துக் கொண்டே சாப்பிடலானான். ப்ரேம் பலகாரம் விரும்பி. அவனுக்குப் பிடித்தது பூரி, சமோசா, பஜ்ஜி, போண்டா. இதுல காலை சிற்றுண்டியா பூரி கொடுத்தா கேட்கவா வேணும்?

நிற்க.
இதுவரைக்கும் ப்ரேம் பத்தி மட்டுமே பார்த்திட்டு இருந்தோம். இனி ஷில்பாவைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். ஷில்பா பேருக்கு ஏற்ற மாதிரியே ஜில்லுன்னு இருப்பா. யாரும் தப்பா நினைக்க வேண்டாம் அவ்வளவு கூலான பொண்ணு. நீங்க நினைக்கற எல்லா நற்குணங்களும் பொருந்திய இலட்சுமி கடாச்சம் கொண்ட பெண். இதுக்கு மேல எப்படிங்க வர்ணிக்கறது? ஆக மொத்தம் எல்லோருக்கும் பிடிக்கிற பெண். எல்லாத்துக்கும் மேல இரக்ககுணம் வேறு. அதைத் தான் முன்னாடியே படிச்சிருப்பீங்க.

அன்னிக்கு தான் முதன்முதலாய் பள்ளியில் சேர்ந்திருந்தாள். இதுக்கு முன்னாடி வேறொரு ஊரில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அவள் அப்பாவிற்கு அரசாங்க உத்தியோகம். உங்களுக்குத் தான் தெரியுமே? ஒவ்வொரு மூணு வருஷத்து ஒரு தடவை ஊரு மாத்திகிட்டே இருப்பாங்க. அப்படி ஒவ்வொரு ஊரா போய்ட்டு இதோ இந்த பள்ளியில் வந்து சேர்ந்திருக்கிறாள். எப்பவுமே முதல் ரேங்க் தான் எடுப்பாள். இந்த பள்ளியில் எப்படியோ என கொஞ்சம் பயந்திருந்தாள்.

அப்போ தான் ப்ரேமை பார்த்து பதறினாள். ப்ரேமிடம் தன் டிபன் பாக்ஸை கொடுத்துவிட்டு டீச்சர் பக்கம் திரும்பும் போது டீச்சர் கேட்டார்,
நீ தான் இந்த கிளாஸில புதுசா சேர்ந்திருக்கற பொண்ணா? உன் பேரு என்னம்மா?

ஷில்பா, டீச்சர்!

நல்லது. இன்னிக்கு காலைல உன்ன பத்தி தான் டீச்சர்ஸ் மத்தியில பேச்சு. பழைய ஸ்கூல்ல நீ தான் பர்ஸ்ட் ரேங்க் வாங்குவியாமே? உன் மார்க் ஷீட்டை பார்த்துட்டு பிரின்ஸிபல் கூட பாராட்டினாங்களாமே? குட்.

தேங்க்ஸ் டீச்சர்.
பூரியை சாப்பிடும் மும்முரத்தில் இருந்தமையால் ப்ரேம் இதையெல்லாம் கவனிக்கவில்லை.

ஒருவழியா பாடம் துவங்கியது. ப்ரேமின் மனம் இதிலெல்லாம் செல்லவில்லை. தனக்கு முன் பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஷில்பாவைப் பற்றியே யோசிக்கலானான்.

ச்சே..! எவ்ளோ நல்ல பொண்ணு? நமக்கு ஒன்னுனோட எப்படி கண் கலங்கி போயிட்டா

இளவயதில் பையன்களிடம் வரும் அதே தடுமாற்றம் ப்ரேமுக்கும் வந்தது. தன்னைப் பார்த்து ஒரு பெண் சிநேகமாய் சிரித்தாலோ ஏதாவதென்றால் பதறினாலோ தன் வலியையும் மீறி அவன் மனதினுள் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும். அந்த சமயத்தில் அவனை என்ன தான் நீங்க திட்டினாலும் கோபப்படவே மாட்டான். ப்ரேமும் அதற்கு விதிவிலக்கல்ல.

இந்தச் சம்பவம் நடந்து ஆறு வாரங்களாயிருக்கும். பள்ளியில் வழக்கம் போல் கூத்துக்களும் ஆசிரியரிடம் அடிவாங்குதலும் நடந்தேறின. ப்ரேம் மட்டும் ஏதோ மந்திரிச்சு விட்டவன் மாதிரியே திரியலானான்.

ஒருநாள் ஆர்வம் தாங்காமல் கிஷோரிடம்,
டேய்..நம்ம கிளாஸ் ஷில்பா எங்கிருந்துடா வர்றா? இப்பல்லாம் கிளாஸ்ல டீச்சர் கேக்குற எல்லா கேள்விக்கும் அவ தான் பதில் சொல்றா? ரொம்ப அறிவாளியா இருப்பாளோ? இதுக்கு முன்னாடி எங்க படிச்சா?..

டேய் நிறுத்து..நிறுத்து..! என்னடா இப்படி மூச்சு கூட வாங்காம வேகமா பேசற..? ஆமா..திடீர்னு என்ன உனக்கு ஷில்பா மேல அக்கறை. நானும் ஸ்கூல் ஆரம்பிச்சதிலேர்ந்து பாக்குறேன்.. நீ சரியில்ல. ஏதோ வீட்டில தெனமும் படிக்க ஆரம்பிச்சுட்டேனு கேள்விப்பட்டேன். இதெல்லாம் நல்லதுக்கில்லை ராசா..
யேய்..நீ வேற எதையாவது கதையை கிளப்பி விட்டுட்டு. சும்மா தான் கேட்டேன். சரி..சரி.. நான் இத கேட்டேன்னு யார்கிட்டேயும் சொல்லிடாதே. ஓட்டப் போறானுங்க

சரியா அடுத்த நாளே இந்த விஷயம் அவன் கூட்டாளிங்களுக்கு தெரிந்துவிட்டது. எல்லோரும் ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ப்ரேமுக்கு ஒரே கூச்சமா போய்விட்டது. அதிலிருந்து ஷில்பாவோட கொஞ்ச நஞ்சம் பேசிகிட்டு இருந்ததையும் நிறுத்தி விட்டான்.
இதைப் பற்றியெல்லாம் ஷில்பா கவலைப்படவில்லை. தான் உண்டு தன் படிப்புண்டு என்றிருந்தாள்.

இதற்கிடையே அப்பப்போ நடந்த டெஸ்டில் எல்லாம் முதல் மார்க் வாங்கி ஷில்பா பிரபலமாயிட்டாள். ப்ரேமும் ஏதோ ஒரு உந்துதலில் தீவிரமாய் படிக்க ஆரம்பித்தான்.

என்னடா கதை ஷில்பா, ப்ரேம் பத்தி மட்டும் நகருதேன்னு நினைக்காதீங்க. இவங்க ரெண்டு பேரும் தானே காதலிக்கப் போறாங்க. எவ்ளோ தாங்க கஷ்டப்படறது கதையை நகர்த்த..ம்..ஹூம்..நகருவேனாங்குது. கொஞ்சம் பொறுத்துக்குங்க.

ஷில்பா இப்பல்லாம் சீக்கிரமே பள்ளிக்கு வர ஆரம்பித்துவிட்டாள். முதல் நாள் நடந்த சம்பவம் அவளை எதுவும் பாதிக்கவில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக நடந்த விஷயங்கள் அவளாலும் நம்ப முடியாதவை.

ஒரு நாள் இப்படி தான் ஸ்கூலில் படம் வரைதல் போட்டி வைத்திருந்தாங்க. பழைய பள்ளிகளிலெல்லாம் ஷில்பா ஒரு போட்டியையும் விட்டதில்லை. எல்லாதிலேயும் பரிசு வாங்கிவிடுவாள். இந்த பள்ளியில் இது தான் முதல் போட்டி. அதனால் முத ஆளாய் பேர் கொடுத்திருந்தாள். போட்டி நாளும் வந்தது.

கிட்டத்தட்ட இருவது இருவத்தியைந்து பேர் கலந்து கொண்டனர். ப்ரேமும் ஒருவன். போட்டிக்கு கொடுக்கப் பட்ட தலைப்பு கருணை அல்லது அன்பு. பென்சிலும் ஸ்கெட்ச் பேனாவும் எடுத்து மாணவர்கள் வரைய முற்பட்டனர். ஷில்பா கருணை என்ற தலைப்பில் மழையின் நனையும் நாய்குட்டியை ஒரு சிறுமி தூக்குவது போல வரைந்தாள். சற்றே சிரமமான படம். ஆயினும் தன் கற்பனையெல்லாம் செலுத்தி அழகாய் சிறுமியை வரைந்திருந்தாள். தனக்கே முதல் பரிசு கிடைக்கும் என நம்பினாள்.

போட்டி முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டது. ஷில்பா எதிர்பார்த்த விதமாக அவளுக்கே முதல் பரிசு கிடைத்தது. ஆனால் அவள் எதிர்பாராத ஒன்றும் நடந்தது. சிறப்புப் பரிசு ஒன்று உண்டென்றும், போட்டி நடுவர்களாக வந்திருந்த ரோட்டரி சங்கத்தினர் ஒரு படத்தைப் பார்த்து அசந்துவிட்டனர் என்றும் அந்த படத்தை வரைந்தவரை சிங்கப்பூரில் பள்ளி மாணவரிடையே நடக்கும் போட்டிக்கு அனுப்பப்போவதாகவும் தெரிவித்தனர். பின் சிறப்பு பரிசுக்காக ப்ரேம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான்.

அவன் வரந்திருந்த தலைப்பு கருணை அல்லது அன்பு. ஒரு சிறிய மாணவன் முதுகில் புத்தக மூட்டையும் ஒரு வயதான தாத்தாவுக்கு சாலையை கடக்க உதவுவதாக வரைந்திருந்தான். படம் நல்லாயிருந்ததாலும் அதில் அவன் கொடுத்திருந்த நுணுக்கங்கள் எல்லோரையும் அசந்திருந்தது. அவள் மனதினில் ஒருவித பிரமிப்பு வந்திருந்தது.

ஒருநாள் பக்கத்து சீட்டு கவிதாவிடம் ப்ரேமைப் பத்தி விசாரிக்க போய் அவள் இருவரையும் இணைத்து ஓட்ட ஆரம்பித்துவிட்டாள். இதனால் ஷில்பாவும் ப்ரேமிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள்.

இருவரது நட்பு வட்டாரமும் ப்ரேமை பத்தியும் ஷில்பாவை பத்தியும் அரசல் புரசலா ஓட்டிட்டு இருந்தாங்க. முன்னெல்லாம் எதையும் கண்டுக் கொள்ளாத ஷில்பா இப்ப நமுட்டு சிரிப்பு சிரிக்க ஆரம்பித்து விட்டாள். ப்ரேம் உற்சாக வெள்ளத்தில் மிதந்தான். இதற்குள் ஷில்பா அந்த வகுப்பின் கனவுக்கன்னியானாள். பல மாணவரும் அவள் கவனத்தத ஈர்க்க போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

இப்படித் தான் ஒருநாள் மல்லிகா டீச்சர் டெஸ்ட் வைத்திருந்தார்கள். கொஞ்சம் சுலபமான டெஸ்ட் தான். ஷில்பா முன்னதாகவே முடித்து விட்டாள். டீச்சர் ஷில்பாவையே டெஸ்ட் பேப்பரை எல்லோரிடமும் வாங்க சொன்னார். டெஸ்ட் முடித்த ஒவ்வொருவரும் ஷில்பாவிடம் தத்தம் பேப்பர்களை கொடுக்க ஆரம்பித்தனர். ப்ரேமும் எழுதி முடித்து தன் பேப்பரை கொடுத்தான்.

எல்லா பையன்களிடமும் ஒருவித பரபரப்பு. ஷில்பா யாருடைய பேப்பரை முதலில் வைத்திருக்கிறாள் என்று. தன் பேப்பராய் இருக்கக்கூடாதா என தனக்குப் பிடித்த கடவுளை வேண்ட ஆரம்பிச்சுட்டாங்க.

ஷில்பா பேப்பரை டீச்சரிடம் கொடுத்தவுடன் டீச்சர் அதை வாங்கி மேசை மேல் வைத்தார். பசங்க கண்ணு எல்லாம் அது மேலேயே இருந்தது. இதற்கிடையே ரொம்பவும் சுட்டியான கணேஷ் டீச்சரிடம் போய்,
டீச்சர். பாத்ரூம் வருது?

போய்த் தொலை..நேரங்கெட்ட நேரத்துல
சந்தடிசாக்கில் மேலிருந்த பேப்பரை பார்த்துவிட்டான். கேலிச்சிரிப்புடன் வெளியே ஓடிவிட்டான். மதிய இடைவெளியில் விஷயம் பரவி விட்டது. முதலிலிருந்தது ப்ரேம் பேப்பராம். இத்தனைக்கும் ப்ரேம் ஆறாவது ஆளாய் குடுத்திருந்தான்.

கேட்க வேண்டுமா? ஒரு குறுகிய வட்டத்திற்கு மட்டும் தெரிந்திருந்தது இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இருவரும் பார்ப்பதையே சுத்தமாய் தவிர்த்து விட்டனர். இதற்கிடையில் ஷில்பாவும் ப்ரேமும் மாறி மாறி முதல் ரேங்க எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இதுவும் கேலிகிண்டலை அதிகமாக்கியது.

ஆண்டுத் தேர்வு நெருங்கியது. எல்லோரும் படிக்க ஆரம்பித்து விட்டனர். ப்ரேம் தன் படிப்போடு சேர்ந்து சிங்கப்பூர் போட்டிக்காக தயார் படுத்த ஆரம்பித்து விட்டான். பரிட்சைகள் நிமிஷமாய் நடந்தன. ஆயிற்று. இன்று தான் கடைசி பரிட்சை.

என்றும் இல்லாத் திருநாளாய் எல்லோர் முகத்தில் சந்தோஷம். அடுத்து லீவ் தானே. ஆனாலும் அதுவும் பத்து நாளைக்கு தான். பத்தாவது வகுப்பிற்கு உடனே பாடம் ஆரம்பிக்கப் போறாங்க.

கடைசித் தேர்வு முடிந்து தன் கூட்டணியோடு வந்தான் ப்ரேம். எதிரில் தோழியரோடு ஷில்பா. ரொம்ப நாள் கழித்து ஷில்பாவை கண்ணுக்கு கண் நோக்கினான். பரஸ்பரம் பரிமாற்றங்கள். அப்போது இருவரும் அறிந்திருக்கவில்லை. இதுவே அப்பள்ளியில் அவர்களின் கடைசி சந்திப்பென்று.

அறிஞர்
08-01-2008, 06:45 PM
3000வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

இத்தனை அருமையான கதாசிரியர் இவ்வளவு நாட்கள் எங்கு ஒளிந்துக்கொண்டு இருந்தார்.

கதை அருமையாக செல்கிறது...

பள்ளிக்கூட நாட்களில் வரும் முதல் காதல் அனுபவம் பற்றிய கதை அருமை..

செல்வா
08-01-2008, 09:29 PM
இப்படி எல்லாம் கத எழுதி எங்க தூக்கத்தயும் கெடுக்குறீங்களேயா.........

மோட்டுவளையப் பாத்துகிட்டே.... தூங்காம யோசிப்பீங்களோ.........

சிவா.ஜி
09-01-2008, 03:28 AM
கதை ரொம்ப இயல்பா நகருது மதி.ரொம்ப சரியாஅந்த வயதுக்கே உரிய எண்ணங்களை அழகா வெளிப்படுத்துறீங்க.எல்லோருக்குள்ளும் ஒரு பிரேமும்,ஒரு ஷில்பாவும் இருக்கறதுனால கதையை ரொம்ப ரசிக்க முடியுது.ம்...அடுத்தபாகத்துக்கு ஆர்வத்தை தூண்டிட்டீங்க....தொடருங்க.

பூமகள்
09-01-2008, 04:00 AM
ஷில்பா... ப்ரேம் இரண்டுமே பிடித்தமான பெயர்கள். பெயர் தேர்வுக்கு ஒரு முதல் பாராட்டு.:)

பள்ளிக்கூட கால சைட்டடிப்புகளை நினைவுபடுத்துகிறது.(எனக்கு மட்டும் இல்லீங்களோ..!!:lachen001: ஏன்னா... ஏன்னா.. நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்ல பொண்ணுங்கோ....................!!:rolleyes:) பல சம்பவங்கள் தத்துரூபமாக சொல்லியிருப்பது சிறப்பு. அதிலும் டெஸ்ட் பேப்பர் கலக்ட் செய்வது...!! (ஆஹா... நான் உண்மையை உளறிடுவேன் போல் இருக்கே...!!:D)

உன் மார்க் ஷீட்டை பார்த்துட்டு பிரின்ஸிபல் கூட பாராட்டினாங்களாமே?
நீங்க சொன்ன பள்ளி அரசுப் பள்ளியா அல்லது தனியார் பள்ளியா??
அரசுப் பள்ளியில் பிரின்சிபல் இருப்பதாய் எனக்குத் தெரியாதே..!
ஹெட் மாஸ்டர் தான் இருப்பார்...!!

**************************************************************************************************

ஒரே மூச்சில் இரு பாகத்தையும் படிச்சிட்டேன்...! :D
ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான எழுத்து நடை..!
பள்ளிக்கூடத்துக்குளேயே மனம் லயிக்கிறது...!

சொந்த அனுபவம் ஏதும் இல்லாட்டியும், நினைவுச் சங்கிலியில் இருக்கிறதா என்று நமக்குளேயே ஒரு டிடெக்டிவ் வேலை நடத்தும் படி இருக்கு...!!


இத்தனை திறமை வைச்சிட்டு, ஏன் 3000 ஆவது பதிவு வரும் வரை காத்திருந்தீர்கள் என்று தான் பெரிய கோபம் மற்றும் சின்ன வருத்தம்...! :frown:


அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சாலும், நீங்க சொல்லும்போது சுவாரஸ்யமா இருக்கு...!!

மனமார்ந்த பாராட்டுகள்..!!
அசத்துங்க.....!!:icon_b:

மதி
09-01-2008, 07:16 AM
சிங்கப்பூருக்கு சென்று முதல் பரிசினை வாங்கி வந்த ப்ரேமுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முகமெல்லாம் பூரிப்புடன் கோப்பையுடன் வகுப்பிற்கு வந்தவன் கண்ணில் முதலில் பட்டது ஷில்பா உட்கார்ந்திருந்த இடம். அது வெறுமையாய் இருந்தது. ஷில்பாவை காணவில்லை. பதறியது அவன் மனம். எதையும் காட்டிக் கொள்ளாமல் நண்பர்கள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டான்.

என்னவாயிற்று ஷில்பாவிற்கு? பலவாறு மனம் பரிதவித்தது. வெளியில் காட்டிக்கொள்ளாமல் தவித்தான். நடந்ததை தெரிந்து கொள்ள சரியான சந்தர்ப்பம் மதிய உணவு இடைவேளையில் வந்தது.

கிஷோருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மல்லிகா டீச்சர் அழைப்பதாய் கணேஷ் வந்து சொன்னான். மல்லிகா டீச்சர் அவனை தனியே அழைத்து,

ப்ரேம்! உன் பயணமெல்லாம் எப்படி இருந்துச்சு? யார் யாரை பார்த்தே? என்ன நடந்துச்சு?

பயணம் ரொம்ப சூப்பரா இருந்துச்சு டீச்சர். அங்க ஏறக்குறைய 12 நாட்டிலேர்ந்து ஸ்டூடண்ட்ஸ் வந்திருந்தாங்க. மொத்தம் 120 பேர். நம்ம நாட்டிலேர்ந்து 10 பேர் போய் இருந்தோம். தமிழ்நாட்டுலேர்ந்து நான் மட்டும் தான். அங்க இருந்த ஒரு வாரமும் செம ஜாலியா போச்சு. ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க.

ஓ..சூப்பர். அப்ப ஒரு வாரமும் கலக்கலா அனுபவிச்சிருக்கே..? குட்..

ஆமாம். டீச்சர். நல்லபடியா போச்சு. ரெண்டு நாள் ஊர் சுத்தி காமிச்சாங்க. எல்லா இடமும் அவ்வலவு சூப்பரா போச்சு.

ம். சரி உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.

கேளுங்க டீச்சர். என்ன விஷயம்.

உனக்கும் ஷில்பாக்கும் ஏதாச்சும் பிரச்சனையா?

திக்கென்று அதிர்ந்தான் ப்ரேம். டீச்சர் எதுக்கு இத பத்தியெல்லாம் கேக்கறாங்க?

இல்லியே டீச்சர். ஏன் என்ன ஆச்சு?

ஒன்னுமில்லை. சும்மா தான் கேட்டேன். நீ ஊருக்கு போயிருந்த அடுத்த நாள் ஷில்பாவோட அப்பாவும் அம்மாவும் வந்திருந்தாங்க. உன்னைப் பத்தி விசாரிச்சாங்க.

என்னைப் பத்தியா? எதுக்கு டீச்சர்? பதறினான் ப்ரேம்.

உன்னைப் பத்தி ஷில்பாவோட வீட்டுக்கு ஒரு மொட்டை கடுதாசி போயிருக்கு. கையெழுத்தெல்லாம் கிறுக்கலா இருந்திருக்கு. அதுல உன்னையும் ஷில்பாவையும் சேர்த்து எவனோ தப்புதப்பா எழுதியிருக்கான். பதறிப் போய் ஷில்பாவை கேட்டிருக்காங்க. அவ உனக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லேன்னு சொல்லிட்டா. அதான் என்கிட்ட வந்து உன்னை பத்தி விசாரிச்சாங்க?

முகம் வெளிறிப் போனவனாக,
என்ன ஆச்சு டீச்சர்?

உன்னைப் பத்தியெல்லாம் சொன்னேன். உனக்கு சிங்கப்பூர் போக சான்ஸ் கிடைச்சத பிடிக்காத எவனோ எழுதியிருக்கான். ஆனாலும் அவ பெற்றோர் இது மாதிரி சம்பவங்களால தன் பொண்ணோட எதிர்காலம் பாதிக்கப்படும்னு டி.சி. வாங்கிட்டு போய்ட்டாங்க. பிரின்ஸிபாலுக்கு கூட மனவருத்தம் தான். நீயும் அவளும் தான் மாவட்ட அளவில மார்க் வாங்குவீங்கன்னு எதிர்பார்த்தாங்க. இப்போ நீ மட்டும் தான்.

அன்னிக்கு அவள பாக்கணுமே, கண்ணெல்லாம் கலங்கி போய் நின்னா. பார்க்கவே பாவமா இருந்துச்சு. நல்ல பொண்ணு அவ. அதான் உனக்கு ஏதாச்சும் தெரியுமான்னு கேட்டேன்.

சுரத்தற்றவனாக,
இல்லை டீச்சர். எனக்கு ஒன்னும் தெரியாது. யார் இப்படியெல்லாம் பண்ணினாங்கன்னு தெரியல. ஏன் பண்ணினாங்கன்னும் புரியல.
சரி. சரி. இத பத்தியெல்லாம் மனச போட்டு குழப்பிக்காம படிப்பில கவனம் செலுத்து. நீ தான் இந்த மாவட்டத்துல முதல் மதிப்பெண் வாங்கணும். என்ன புரியுதா?

சரி.டீச்சர்

மனத்தில் ஆயிரம் சிந்தனைகளோடு அங்கிருந்து நகர்ந்தான். ஓரளவுக்கு நல்லா படிச்சிட்டிருந்த அவனை ரொம்பவே நல்லா படிக்க வைச்ச பெருமை ஷில்பாவுக்கே சேரும். அவளோடு போட்டி போட்டே நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருந்தான். சிந்தனை வயப்பட்டவாறே இடத்திற்கு போய் அமர்ந்தான்.

அங்கிருந்த கிஷோர்,
என்னடா எதுக்கு கூப்பிட்டாங்க?

ஒன்னுமில்லை. பத்தாவதுல நல்லா படிச்சு நல்ல மார்க் எடுக்கணும்னு சொன்னாங்க

அதுக்கு ஏண்டா உன் மூஞ்சி பேய் அறைஞ்ச மாதிரி இருக்கு.

அதெல்லாம் ஒன்னுமில்லையே. நல்லா தான் இருக்கேன்.
சொன்னவனை சந்தேகப் பார்வையோடு பார்த்தான் கிஷோர்.

பத்தாம் வகுப்பு பரபரவென போனது. படிப்பில் கவனம் செலுத்தியதால் ப்ரேம் ஷில்பாவை பற்றி மறந்தே விட்டிருந்தான். மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுப்பதே அவன் கொள்கையாயிருந்தது.

தீவிரமாய் படிப்பில் கவனம் செலுத்தி பொதுத் தேர்வினை நன்கு எழுதினான். தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கலானான். எதிர்பார்த்த மாதிரியே தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தான். இனிய அதிர்ச்சியாக மாநில அளவிலும் முதலாவதாய் வந்திருந்தான்.

இப்படியாக வாழ்க்கைச் சக்கரம் வேகமாக சுழல பன்னிரண்டாம் வகுப்பிலும் நன்மதிப்பெண் பெற்று ஐ.ஐ.டியில் சேர விண்ணப்பித்தான். ஒருவழியாக தன் கனவான சென்னை ஐ.ஐ.டியில் இடமும் பிடித்து விட்டான். ஷில்பாவை இவன் சந்திப்பதற்கான தருணமும் வந்தது. இனி

- கொஞ்சம் பொறுத்துக்குங்க

பூமகள்
09-01-2008, 07:32 AM
ஸ்பீட் ஆரம்பிச்சிருச்சே...!!

பள்ளியிலிருந்து டைரக்டா... கல்லூரி...!! அதுவும் சென்னை ஐஐடி...........!!
கொடுத்து வைச்ச மகராசா ப்ரேம்..!!:rolleyes:

அடுத்து என்ன நாயகி சந்திப்பு..................!!;):p

எப்படி இருக்குன்னு பார்க்க ஆவல்..!!:icon_b:

தொடருங்க மதி..!! :icon_b:
கலக்கலா போகுது....!!
பாராட்டுகள்..!!:)

தாமரை
09-01-2008, 08:20 AM
சட்டுன்னு டாப் கியர் போட்டு தூக்கிட்டீங்க...

அதுசரி..

அவளில்லாத காலங்கள்
நீண்டவைதான் என்றாலும்
சொல்லும்படி
ஒன்றும் இருப்பதில்லையே

மதி
09-01-2008, 08:45 AM
சட்டுன்னு டாப் கியர் போட்டு தூக்கிட்டீங்க...

அதுசரி..

அவளில்லாத காலங்கள்
நீண்டவைதான் என்றாலும்
சொல்லும்படி
ஒன்றும் இருப்பதில்லையே

ரொம்ப சரி...
ஒன்னுமே இல்லேங்கறது தானே சிதம்பர ரகசியமே...

மதி
09-01-2008, 03:07 PM
ஷில்பா மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள். சத்தியமாய் இது அவள் எதிர்பார்க்காதது. பின் நல்ல பெண்ணாய் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தவளை அந்த கடிதம் உருக்குலைய வைக்காதா என்ன?

மனத்தினுள் ஆயிரம் சிந்தனைகள்.
யார் அவன்? ஏன் இப்படி எழுதியிருக்கான்? எனக்கும் ப்ரேமுக்கும் தான் எந்த சம்பந்தமும் இல்லியே. பின் ஏன் இப்படி எழுதியிருக்கான்? யப்பா.. அந்தக் கடிதம் வந்ததும் அப்பா பார்த்த பார்வை. என்னிக்குமே அவர் பார்வையில் ஒரு கனிவு, சிரிப்பு இருக்கும். ஆனால் இன்று அவர் பார்த்தது சலனமற்ற பார்வை.

ஷில்பாக்கு அப்பாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுலேர்ந்தே அப்பா அவளை திட்டினதில்லை. அடிச்சதில்லை. வீட்டிற்கு ஒரே பொண்ணு வேற. கேட்க வேண்டுமா? எப்பவுமே படிப்பில் மிக சுட்டி. அதனால வீட்டில் ஒரே கொஞ்சல் தான். அப்பா தான் அவளள கராத்தேக்கும், ஹிந்தி ட்யூசனுக்கும் போக சொன்னது. இதோ ஒன்பதாவதிலேயே ஹிந்தியில் விஷாரத் உத்ராத் வரை முடித்து விட்டாள். கராத்தேலேயும் பிளாக் பெல்ட். சுருக்கமா சகலகலாவல்லி.

இப்போ பள்ளி ஆண்டு விடுமுறை. காலையிலேயே எழுந்து வாசல் பெருக்கி சமையலறையில் அம்மாவிற்கு உதவி கொண்டிருந்தாள். அப்போ தான் அந்த கடிதம் வந்தது. அப்பா தான் முதலில் படித்தார். படித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் அவளிடம் தந்தார். வேறேதும் கேட்காமல் சென்று விட்டார். கடிதத்தைவிட அப்பாவின் மௌனம் மேலும் அவளை பாடாய் படுத்தியது.

இரவு அப்பா வந்தார். ஷில்பாவை கூப்பிட்டு,
ஷில்பா, என்னம்மா. அந்த லெட்டர பத்தி என்ன நிணைக்கிற?

அம்மா இடையே குறுக்கிட்டு,
என்னங்க நீங்க, இதையெல்லாம் சின்ன பொண்ணுகிட்ட கேட்டுகிட்டு?

நீ சும்மா இரு. சின்ன பொண்ணில்ல. எது நல்லது கெட்டதுன்னு அவளுக்கும் தெரியும். நீ சொல்லும்மா
அப்பா, ப்ரேம் பத்தி தான் சொல்லிருக்கேனே. அவன் என்கூட படிக்கிறான். என் ஃப்ரெண்ட். அதத் தவிர வேறேதும் இல்ல. வேற யாரோ வேணும்னே வம்பிழுக்கிறாங்க.

சரிம்மா, இப்படியே விட்டா பிரச்சனைகள் அதிகமாயிடும். இப்போ நீ பத்தாவது போற. இங்க தான் படிக்கணும்னு விரும்பறியா?

இது அவள் எதிர்பாராதது. இதுவரை படித்த பள்ளியிலேயே இந்த பள்ளியைத் தான் அவள் மிகவும் நேசித்திருந்தாள். அப்பா ஒரு குண்டைத் தூக்கி போடறாரே!

ஏன்ப்பா, எதுக்கு கேட்கறீங்க?

இல்லம்மா, இது உனக்கு பத்தாவது. பொதுத்தேர்வு. இந்த சமயத்துல இத மாதிரி விஷயங்கள் எல்லாம் உன் கவனத்தை சிதறடிச்சுடுமோன்னு பயமா இருக்கு.

இல்லப்பா, அப்படி ஏதும் ஆகாது

கொஞ்சம் யோசிச்சு பாரும்மா. உன்ன நான் கட்டாயப்படுத்தல. எவன் இத அனுப்பிச்சானே தெரியல. எப்படியும் உன்கூட படிக்கிறவனா தான் இருப்பான். இன்னிக்கு இப்படி பண்ணினவன் நாளை இன்னும் அசிங்கமா ஏதாச்சும் பண்ணுவான். அதுக்கு தான் சொன்னேன். இதெல்லாம் உன் கவனத்த சிதற அடிச்சுடக் கூடாது

அப்பா சொல்வதும் உண்மை தான். துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்னு சொல்வாங்க. இங்க துஷ்டன் யாருன்னே தெரியல. அதனால அப்பா விருப்படியே நடக்கலாம்

சரிப்பா உங்க இஷ்டம்.

இப்ப தாம்மா சந்தோஷம். எங்க இங்கேயே படிப்பேன்னு அடம் பிடிப்பியோனு நினைச்சேன். நீ பத்தாவது உங்க சித்தி வீட்டிலேர்ந்து படிம்மா. நான் சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு அந்த ஊருக்கு வந்துடறேன்

அப்புறம் சம்பவங்கள் எல்லாம் திரித கதியில் நடைந்தேறின. மறுநாள் அப்பா பள்ளிக்கு போனது, டி.சி. வாங்கினது, பின் சித்தி வீட்டிற்கு வந்து படித்தது, எல்லாமே அதிவேகமாய் காலச் சக்கரத்தில் போயின. ப்ரேம் போலவே இவளும் ப்ரேமை மறக்கலானாள்.
எப்படியோ நல்ல மதிப்பெண் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துவிட்டாள். இனிமே என்னங்க

ஹீரோவும் ஹீரோயினும் சந்திச்சுக்க வேண்டியது தானே..???!

பூமகள்
09-01-2008, 03:25 PM
ஹீரோவும் ஹீரோயினும் சந்திச்சுக்க வேண்டியது தானே..???!
இன்னுமா சந்திக்கலை...!! :sprachlos020::rolleyes:

டூ பேட்...!! :icon_ush:

சீக்கிரமா சந்திக்க வைச்சிருங்க கதாசிரியரே..!!:icon_b:

அறிஞர்
09-01-2008, 07:52 PM
ஐஐடி, அண்ணா பல்கலை கழகம் என பக்கத்து பக்கத்து கேம்பஸ் கொண்டு வந்து விட்டிடிங்க...

இனி காதல் கலாட்டா...

தொடருங்க.. மதி..

மதி
10-01-2008, 01:09 AM
பரவாயில்லை.. நல்லா கதைவுடறதையும் படிக்க நிறைய பேர் இருக்காங்க.. எல்லோருக்கும் மிக்க நன்றி..இது எப்படி ஆரம்பித்தது பற்றிய கதையை, இது முடிந்ததும் எழுதறேன். எல்லாம் உங்க விதி..யாரால மாத்த முடியும்..

மதி
10-01-2008, 01:14 AM
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. ப்ரேம் கல்லூரியில் சேர்ந்து ஆண்டுகள் மூன்று முடியப்போகிறது. விடுதியில் இருந்த ப்ரேம் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். எப்படியாச்சும் இந்த ப்ராஜக்டை வெற்றிகரமாக முடித்துவிட வேண்டும். இதில் தான் எதிர்காலமே இருக்கிறது.

விஷயம் இது தான். வட இந்தியாவில் உள்ள பிரபல தொழில்நுட்ப நிறுவனமொன்று பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கிடையே போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இன்றைய இளைஞர்களின் கனவான ரோபோ தயாரித்தல் போட்டி. இந்திய அளவில் நடைபெறும் போட்டி என்பதாலும் முதல் பரிசாக ரூபாய் ஒரு இலட்சம் என்பதாலும் மாணவரிடையே பெரும் போட்டி நிலவியது. அதற்காகத் தான் ப்ரேம் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

மதியம் அவன் அறைக்கு வகுப்புத் தோழன் ரூபேஷ் வந்தான். ரூபேஷ் வடக்கத்திய பையன். நல்ல திறமைசாலி. சென்னை வந்து சேர்ந்திருந்த மூன்று வருடங்களில் தமிழ் நன்றாக பேசக் கற்றிருந்தான். எல்லாம் ப்ரேம் புண்ணியத்தில். இன்னும் ஒரு வருஷம் போனால் தமிழ் இலக்கண பாடம் எடுக்குமளவுக்கு முன்னேறிவிடுவான்.


"என்னடா ப்ரேம், சும்மா உட்கார்ந்துட்டுருக்கே.?"

"இல்லடா..அந்த ரோபோ ப்ராஜக்ட் பத்தி தான். எப்படியாவது நாம அதில ஜெயிச்சாகணும். அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்.."

"ஃப்பூ..இவ்வளவு தானா. அதுக்கு தான் இவ்ளோ கவலையோ. இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. வாடா..எங்கியாவது வெளியே போய் ஊர் சுத்திட்டு வரலாம். இங்கியே இருந்து போர் அடிக்குது."

"எங்க போகலாம்..நீயே சொல்லு."

"புதுசா சிட்டி செண்டர் திறந்திருக்கானாம். வா போய் ஐநாக்ஸ்-ல ஏதாவது படம் பாத்துட்டு வரலாம்."

"சரி..வா." ப்ராஜக்ட் பத்தி மறந்தவனாய் ரூபேஷ் கூட சென்றான்.

சிட்டி செண்டர். எங்க பார்த்தாலும் இளைஞர்களின் கூட்டம். அதிலேயும் ஜோடி ஜோடியாக வருபவர்கள் தான் அதிகம். பராக்கு பார்த்துகிட்டே ப்ரேம் இருக்க ரூபேஷ் டிக்கட் வாங்கிட்டு வந்தான். இந்த இடத்துல ஒன்னு சொல்லியாகணும். ரூபேஷுக்கும் சரி..ப்ரேமுக்கும் சரிகேர்ள் பிரண்ட்ஸ் கிடையாது. இருந்திருந்தா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து படத்துக்கு வந்திருப்பாங்களா..

அது ஒரு பாடாவதி ஆங்கிலப் படம். ஹீரோ எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்துகிட்டு ஸ்பை கேம் மூலமா எல்லோரையும் மிரட்டி பணம் பறிச்சுட்டு இருந்தான். ஏன்டா வந்தோம்னு ஆயிடுச்சு. இண்டெர்வெல்ல ரெண்டு பேரும் பாப்கார்ன் வாங்க நின்னுகிட்டு இருந்தாங்க. அப்போ ஒரு குரல்,

"ஷில்பாஉனக்கு என்ன வேணும், பெப்ஸியா..கோக்கா..?"

சடாரென திரும்பினான் ப்ரேம். ரொம்பவும் பரிச்சயமான பெயர். சிரமப்பட்டு பெயருக்கும் தனக்கும் உண்டான தொடர்பை கண்டான். ஒன்பதாவதில் கூட படித்த பெண். சத்தம் வந்த திசையை நோக்கி பார்வையை திருப்பினான். எங்கு பார்த்தாலும் பெண்கள். கூட வழிந்து கொண்டே ஆண்கள். யாரந்த ஷில்பா ஒரு வேளை நமக்குத் தெரிந்த பெண் தானா அது..? மீதி படத்தை பார்க்க தியேட்டருக்குள் சென்றான்.

அடிக்கடி திரையில் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பளிச்சென ஒரு திட்டம் உதித்தது. ரூபேஷை கூப்பிட்டு,
"டேய்..ஒரு விஷயம். சீக்கிரம் வா. நாம ஹாஸ்டலுக்கு போலாம்."

"அதுக்குள்ள என்னடா. இன்னும் படம் முடிய நேரம் இருக்கே.."

"ஆமாமா..இது ஒரு படம்..நீ வாடா. ஒரு முக்கியமான விஷயம் சொல்றேன்."

எரிச்சலுடன் ரூபேஷ் ப்ரேமுடன் ஹாஸ்டலுக்கு புறப்பட்டான். இவர்கள் கிளம்பி சென்றதை ஒரு ஜோடி கண்கள் கவனித்துக் கொண்டிருந்தது.

ஹாஸ்டலுக்கு போனவன் நேராக தன் கணிணி இருக்கும் இடத்திற்கு சென்றான். அவனைத் தொடர்ந்து ரூபேஷும் சென்றான்.

"என்னடா ஆச்சு உனக்கு? உன்னால ஒரு படம் கூட நிம்மதியா பார்க்க முடியல

"அத விடுடா. நம்ம ப்ராஜட்க்கு அருமையான ஒரு திட்டம் கிடச்சிருக்கு"

ரூபேஷ் ஆர்வமானான். கணிணியில் கூகிளாண்டவரை சொடுக்கிவிட்டு ப்ரேம் ரூபேஷ் பக்கம் திரும்பினான்.

"சொல்றேன் கேளு. முன்னாடில்லாம் நாம கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது பிளாப்பிகளை அதிகமாக பயன்படுத்தினோம். இப்ப கொஞ்சம் கொஞ்சமா ஏகப்பட்ட டிஸ்க் வந்திடுச்சு. பிளாப்பிகளோட பயன்பாடும் கொறஞ்சுடுச்சு. இனி எப்படியும் அஞ்சு வருஷத்துக்குள்ள பிளாப்பிகளே தேவைப்படாது."

உன்னிப்பாய் கவனிக்கத் தொடங்கினான் ரூபேஷ்.

"அப்போபிளாப்பிகளை பயன்படுத்தத் தேவையான பிளாப்பி டிரைவ்கள் எதற்கும் பயன்படாது. அதை வச்சு நாம ஏன் ரோபோ செய்ய முயற்சி பண்ணக்கூடாது."

சுவாரஸ்யம் குறைந்தவனாய் ரூபேஷ், "இது தானா. ஆமா இது சாத்தியமாகும்கற."

"எல்லாம் முடியும். என்ன கொஞ்சம் மாற்றங்கள செய்ய வேண்டிவரும். பார்ப்போம். நெட்ல தேடுவோம். புரொபஸரை பார்ப்போம். நம்மால கண்டிப்பா முடியும்."

ப்ராஜக்ட் வேலைகள் பரபரப்பாக ஆரம்பித்தது. ப்ரேம், ரூபேஷ் முழுமையாக ரோபோ தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். அவ்வப்போது தங்கள் புரொபஸரை அணுகி சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர். ப்ராஜக்ட் பத்தி விண்ணப்பிக்கும் கடைசி நாளன்று ஒரு வழியாக ரோபோவை முடித்து விட்டனர். வெற்றிகரமாக சோதனையும் செய்து விட்டனர்.

போட்டி முடிவு அறிவிக்கப்படும் நாள் வந்தது. இருவரும் அந்த நிறுவனத்தின் இணையத் தளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவழியாக முடிவுகள் வந்தது. தேர்ந்தெடுக்கப் பட்ட பத்து ப்ராஜக்ட்களில் இவர்களுடையதும் ஒன்று.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயினர். இனி அடுத்து அந்த கல்லூரிக்கு சென்று தத்தம் ப்ராஜக்ட்களை டெமோ செய்து காண்பிக்க வேண்டும். கிளம்ப வேண்டிய நாளன்று, புரபொஸர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துக்களை பெற்று புகைவண்டி நிலையம் வந்தனர்.

மாணவர் கன்ஸெஸனில் வாங்கிய மூன்றாம் ஏ.சி. பெட்டியில் ஏறி அமர்ந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். அப்போது ப்ரேம் அறிந்திருக்கவில்லை. இந்தப் பயணம் அவன் வாழ்க்கையை திசை திருப்பப் போகிறதென்று.

- கொஞ்சம் பொறுத்துக்குங்க..

பூமகள்
10-01-2008, 06:23 AM
ரோபோ ப்ரோஜக்ட்..!
ரோபோ ஆகப்போறார் ப்ரேம்னு முன்கூட்டியே அறிவிச்சிட்டீங்க..!!

கீ கொடுக்க யாரு வருவா?? ஷில்பா தானே...??!! :D:D

நல்லா நகர்த்துறீங்க கதையை..!!(நிஜமாவே தான் சொல்றேன்.. ஓட்டலைங்கோவ்...!!:D:D)

வாழ்த்துகள்!! :)

மதி
10-01-2008, 06:56 AM
ரோபோ ப்ரோஜக்ட்..!
ரோபோ ஆகப்போறார் ப்ரேம்னு முன்கூட்டியே அறிவிச்சிட்டீங்க..!!

கீ கொடுக்க யாரு வருவா?? ஷில்பா தானே...??!! :D:D

நல்லா நகர்த்துறீங்க கதையை..!!(நிஜமாவே தான் சொல்றேன்.. ஓட்டலைங்கோவ்...!!:D:D)

வாழ்த்துகள்!! :)


பொறுத்திருந்து பாருங்க.. வேற யாராவது வந்தாலும் வரக்கூடும்..

பூமகள்
10-01-2008, 07:57 AM
பொறுத்திருந்து பாருங்க.. வேற யாராவது வந்தாலும் வரக்கூடும்..
வரட்டும்.. வரட்டும்... தாராளமாவே வரட்டும்..!!:sauer028:
ஒரு கை பார்த்துருவா நம்ம ஹீரோயினி ஷில்பா...!!:icon_b:

மதி
10-01-2008, 11:02 AM
ரயிலில் அநேகம் முறை சென்றிருந்தாலும் வடஇந்தியா செல்வது ப்ரேமுக்கு இதே முதல் முறை. தத்துபித்தென்று சிறிதளவு ஹிந்தி உளறுவான். அவ்வளவு தான். ரூபேஷ் இருக்கும் தைரியத்தில் தான் பயணத்துக்கு தயாரானான். இரவு கிளம்பிய ரயில் எதைப் பற்றியும் கவலைப் படாமல் தனக்கிட்ட வழியில் போய்க்கொண்டிருந்தது. எங்கும் எந்த சலனமும் இல்லை.

விடிந்தது. சீக்கிரமே எழுந்துவிட்டான் ப்ரேம். டெல்லி போய் சேர இன்னும் ஒரு நாளாகும். ரூபேஷ் ராத்திரி போட்டிருந்த மொக்கை காரணமாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். ரயில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது. எட்டிப் பார்த்தால் வாராங்கல் என்று பெயர் பலகை சொன்னது.

பசிக்கிறது. என்ன பண்ணலாம்..இந்த ரூபேஷ் பய வேற பேய் தூக்கம் தூங்கறான்.ம்ம்..

வெளியே எட்டிப் பார்த்தான். இப்போ தான் விடிய ஆரம்பித்திருந்தது. ஸ்டேஷன் பேர் பலகைக்கு பின்னாடி அட்டகாசமாய் சூரியன் வேலைய பார்க்க கிளம்பிகிட்டு இருந்தான். அதுவும் பாருங்க காலையிலேயே எவ்ளோ புத்துணர்ச்சியோடு கிளம்பறான். அவன் ஒளி பட்டு அங்கங்க தங்கமாய் ஜொலித்தது. பசியையும் மறந்து கீழே இறங்கி பார்க்கலானான்.

திடீரென்று ஒரு உருவம் சில்லவுட்டில். முகம் சரியாக தெரியவில்லை. ஆனாலும் தேவதை தான். அவள் போட்டிருந்த சூடிதார் எடுப்பாகக் காட்டியது. கையில் தண்ணிபாட்டிலுடன் வேகமாக ஓடிவந்து அவள் நாலு பெட்டி தள்ளி ஏறவும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது. தன்னை மறந்தவனாய் இருந்த ப்ரேம் கொஞ்சம் தெளிஞ்சு ரயில் ஏறிட்டாள்.

யாருடா அவ..செமையா இருந்தா. சிந்தனைவயப்பட்டான். சரி எப்படியும் நாலு பெட்டி தள்ளி தானே இருக்கா. எப்படியும் பார்த்திடலாம்.

ஒன்பது மணிவாக்குல ரூபேஷ் எழுந்து உட்கார்ந்து தன் மொக்கைய ஆரம்பித்துவிட்டான். ப்ரேம் கவனமெல்லாம் அதில இருந்தா தானே. இவன் இருக்கறது வேற ஏ.சி. கம்பார்ட்மெண்ட். இப்போ போயும் பார்க்க முடியாது. எப்படியும் ஒன்னொரு முறை பார்த்திட வேண்டும்டா..

அன்னிக்கு நாளெல்லாம் ரயிலிலேயே கழிந்தது. ராத்திரி 8 மணிவாக்கில் ரயில் போபால் ஸ்டேஷனில் வந்து நின்றது. ரயில் கிளம்ப கொஞ்ச நேரமாகும்னு தோன்றியது. வெளியே போய் அந்த பொண்ணை பார்க்கலாம்னு முடிவு பண்ணி கீழே இறங்கினான் ப்ரேம். ஸ்டேஷன்ல ரொம்பவே கூட்டமா இருந்தது. எட்டி எட்டி பார்த்துகொண்டே போய்கிட்டு இருந்தான்.

அந்த நேரத்துல யாரோ அவன் மேல மோதற மாதிரி இருந்தது. திரும்பிப் பார்த்தால் எவனோ அவன் பர்ஸை பிக்பாக்கெட் அடித்து ஓடிக் கொண்டிருந்தான்.

புடிங்க..அவன புடிங்க

எல்லோரும் அவனை வித்தியாசமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ பாஷையில யாரோ கத்திகிட்டு இருக்கான்னு விட்டுட்டாங்க. அவனை துரத்திக் கொண்டே ஓட ஆரம்பித்தான். கொஞ்ச தூரத்தில் அந்த ஆள் கீழே விழுவதை பார்த்தான். பக்கத்தில் யாரோ ஒரு பெண். வேகமாய் ஓடி மூச்சிரைத்துக் கொண்டே அவள் பக்கத்தில் நின்றாள்.

இவன்..இவன். என் பர்ஸை தூக்கிட்டு ஓடறான்.

இன்னும் அவனுக்கு பதட்டம் குறையவில்லை. வேறொரு மாநிலத்தில் இருக்கிறோம் என்கிற விஷயமே அவனுக்கு மறந்துவிட்டிருந்தது. அந்த பெண் அவனை மொத்திக் கொண்டிருந்தாள். அவன்கிட்ட இருந்து அந்த பர்ஸை வாங்கி இவன்கிட்ட கொடுத்து,

என்னங்க நீங்க. பத்திரமா பாத்துக்கறதில்லையா?

ஸாரிங்க. தெரிஞ்சவங்கள தேடி போய்கிட்டு இருந்தேன். கொஞ்சம் கவன்குறைவா இருந்துட்டேன்.

என்னமோ போங்க

அந்த பெண்ணுக்கு ஏறக்குறைய இவன் வயது தான் இருக்கும். அழகாக இருந்தாள். இப்போது தான் ப்ரேமுக்கு உறைத்தது. இது தான் அவன் தேடின பெண். அவள் முகத்தைப் பார்த்து ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டே இருந்தது.
எங்கியோ பார்த்த மாதிரியே இருக்காளே..
ஆனாலும் அவள் வீரத்தில் கொஞ்சம் அயர்ந்து போயிருந்தான். ரயில் கிளம்பப் போற சத்தம் கேட்டது.

ஹலோ..ட்ரெயின எடுக்கப் போறான். சீக்கிரம் போய் ஏறுங்க. அப்புறம் அதையும் மிஸ் பண்ணிட போறீங்க.

நக்கலாய் சிரித்துக் கொண்டே தன் பெட்டியில் ஏறினாள் ஷில்பா. மனத்துக்குள் சின்னதா ஒரு சந்தோஷம். எதையோ சாதித்து விட்டோம்னு. அன்னிக்கு கத்துகிட்ட கராத்தே அவளை தைரியான பெண்ணாய் மாற்றிவிட்டிருந்தது.

இப்போது ஒரு கல்சுரல்ஸ் போட்டியில கலந்துக்க போய் கொண்டிருக்கிறாள். இவள் கல்லூரி மாணவரெல்லாம் ஒரு நாள் முன்னாடியே கிளம்பிவிட்டனர். தன் வீட்டில் விசேஷம் இருந்ததால் ஒருநாள் கழித்து வருவதாக சொல்லிவிட்டாள். இதோ தன் தோழர்படையை சந்திக்க போய் கொண்டிருக்கிறாள். ப்ரேமுக்கு ஏற்பட்ட அதே உணர்வு இவளுக்கும் ஏற்பட்டது.

இவனை எங்கியோ பார்த்திருக்கிறோமே. மறுபடியும் அவனை பார்த்தால் கேட்க வேண்டும்.

தூங்கிப் போனாள் ஷில்பா.

டில்லியில் இறங்கியதும் ப்ரேமையும் ரூபேஷையும் கூட்டிக் செல்ல அந்த கல்லூரியிலிருந்து வந்திருந்தனர். அவர்களுடன் சென்று கல்லூரி ஹாஸ்டலில் தங்கி இளைப்பாறினர். மறுநாள் தான் போட்டி. அன்று எப்படியாச்சும் கழித்தாகனுமே.

காலையில் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் கல்லூரியை சுற்றி வரலாம் என்று கிளம்பினான் ப்ரேம். அவனுக்கு உதவி புரிவதற்காகவே பிறந்தவன் மாதிரி தூங்கப் போய்விட்டான் ரூபேஷ். காலாற நடந்து எல்லா கட்டிடங்களையும் கடந்து பூங்கா பக்கம் வந்துவிட்டான்.

புது ஊரு புது இடம். மனதுக்குள் சின்ன சஞ்சலம். ஹிந்தி வேற சரியா தெரியாது. இங்க என்னடான்னா ஒரு பயலும் இங்கிலீஷ்ல பேச மாட்டேங்கறான். எப்ப பார்த்தாலும் யார் போடறானுவ. வசந்தகாலம் அது. ஆங்காங்கே மரம் பூத்து குலுங்கியது. ரசித்துக் கொண்டே என்றும் மறக்காமல் கொண்டு செல்லும் நோட் புக்கினை எடுத்து வைத்து ஒரு பெஞ்சில் உட்கார்ந்தான். இதுவரை சொல்ல தேவைப்பட்டிருக்காத ஒரு விஷயம் ப்ரேம் ஒரு இயற்கைவிரும்பி. ஏதாவது ரம்மியமான சூழலிலிருந்தால் தன்னை மறந்துவிடிவான். ரசிக்கத் தெரிந்தவனுக்கு கவிதை வருவது இயற்கை தானே? அதான் நோட்டும் கையுமாய் அலைகிறான்.

தூரத்தில் ஒரு மரத்தடியில் தன் கல்லூரி நண்பர்களோடு உட்கார்ந்திருந்த ஷில்பா இவனைப் பார்த்தாள்.
அட..இவன் இங்க தான் வந்திருக்கானா.? சந்தர்ப்பம் இவ்ளோ சீக்கிரமா அமையுது.

ஏய். இருங்கப்பா. எனக்குத் தெரிஞ்சவன் ஒருத்தன் அங்க உட்கார்ந்திருக்கான். அவன்கிட்ட போய் பேசிகிட்டு வந்துடறேன்

சொல்லிக் கொண்டே கிளம்பினாள்.

யாருடி அது? உனக்குத் தெரிஞ்சவன்? என்ன மேட்டர் சொல்லுடி?

ச்சீ. ஒன்னுமில்லை. நேத்து ரயில்ல பாத்தேன். இங்க தான் வர்றான்னு தெரியாது. அதான் கொஞ்ச நேரம் அவனைப் போய் கலாய்ச்சிட்டு வரலாம்னு

பாத்துடி. அவன் உன்னை கலாய்ச்சிட போறான். ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணினா ரெண்டு குத்து விட்டுடு.

பாவம்டி. அவன் அப்படிப் பட்டவன் இல்லேன்னு நினைக்கிறேன். பயந்த சுபாவமா இருக்கான்.

சரிடி. பாத்து

ப்ரேமை நோக்கி போனாள் ஷில்பா.

ஹலோ சார். என்ன இங்க?

எதையோ யோசித்து எழுதிக் கொண்டிருந்த ப்ரேம் திடுக்கிட்டான்.

ம்ம். ஹலோ நீங்களா? நான் இங்க ஒரு போட்டிக்காக வந்திருக்கேன்.

இயல்பான சுபாவம் அவனை கேள்வி கேட்க விடவில்லை.

ஓ..அப்படியா. நேத்திக்கு ஹெல்ப் பண்ணினேன். ஒரு தாங்க்ஸ் கூட சொல்லாம ஓடிப் போய்ட்டீங்க. ஆமா என்ன போட்டிக்கு வந்திருக்கீங்க?

அப்போது தான் உறைத்தது ப்ரேமுக்கு. நேத்து நாம தாங்க்ஸ் சொல்லவே இல்லை.

ஸாரிங்க. தாங்ஸ்ங்க.

அதைவிடுங்க. என்ன போட்டிக்கு இங்க வந்திரூக்கீங்க?

போட்டியைப் பற்றி கேட்டவுடன் உற்சாகமானான். அதுவா இது ரோபோ போட்டி. நாம புதுசா ஒரு ரோபோ தயாரிச்சு காட்டணும். ஏற்கனவே பிரிலிம்ஸ்ல செலக்ட் ஆகி இப்போ ஃபைனல்ஸ்.

ஓ..இது தானா? இதுக்கு கூட எங்க காலேஜ்லேர்ந்து பசங்க வந்திருக்காங்க

அப்ப இது உங்க காலேஜ் இல்லியா?

நல்லதா போச்சு. நான் அண்ணா யுனிவர்ஸிட்டியில படிக்கிறேன். நீங்க எங்க?

நீங்களும் சென்னை தானா? நான் ஐ.ஐ.டி. சென்னையில படிக்கிறேன்.

பலே ஆளு தான். இப்ப தாங்க ஒரு சந்தேகம் தீர்ந்துச்சு. உங்கள எங்கியோ பார்த்த மாதிரி இருக்குதேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். சென்னையில எங்கியாவது பார்த்திருப்போம்

எனக்கும் கூட அதே ஃபீலிங் தான். கேட்டா தப்பா நெனச்சிடுவீங்களோன்னு கேக்கல.

இதுல என்னங்க தப்பு இருக்கு. ஆமா.நான் எதுக்கு வந்தேன்னு கேக்க மாட்டீங்களா?

அட. ஆமாங்க. கேக்கவே இல்லை. எதுக்கு வந்திருக்கீங்க?
இங்க நாங்க கல்சுரல்ஸ்ல கலந்துக்க வந்திருக்கோம். இன்னிக்கு ஈவினிங் ப்ரோகிராம் இருக்கு ஆடிட்டோரியத்துல.

என்ன மாதிரி கல்சுரல்ஸ்? பாட்டு பாட போறீங்களா? டான்ஸ் ஆடப் போறீங்களா?

எதுவும் இல்லை. எங்க ப்ரோகிராம் எல்லாத்தையும் காம்பியர் பண்ணப் போறேன்.

ஓஹோ

சரி தான் நான் கேள்விப் பட்டது சரி தான்.

என்னத்த கேள்விப் பட்டீங்க?

ஐ.ஐ.டில படிக்கற பசங்கல்லாம் சரியான சொம்புன்னு. தானா போய் போய் ஒரு பொண்ணுகிட்ட பேச வேணாம். வந்து பேசற பொண்ணுகிட்டயாவது ஒழுங்கா பேசலாமில்லையா?

அதெல்லாம் ஒன்னுமில்லீங்க. கொஞ்சம் வேற சிந்தனையில இருந்தேன். அப்ப வந்துட்டீங்க.

ஆமா. கையில என்ன நோட்புக்?

ஒன்னுமில்லீங்க. மறைக்க முயன்றான் ப்ரேம்.

எங்க காட்டுங்க..? எட்டிப் பறித்தாள் ஷில்பா.

என்னங்க ஒரே கவிதையா இருக்கு. யாரையாவது காதலிக்கிறீங்களா?

கவிதை எழுதனும்னா காதலிக்கணுமா என்ன?

இல்ல. ஒரு தடவை எங்கப்பா சொன்னார். கவிதை எழுதணும்னா காதலிக்க தெரியணும்னு. அதான் கேட்டேன்.

ஓஉங்கப்பா கவிதையெல்லாம் எழுதுவாரா? அவர் சொன்னது கரெக்ட் தான். கவிதை எழுத காதலிக்க தெரியணும். ஆனா அது ஒரு ஆணாவோ பெண்ணாவோ இருக்கணும்னு அவசியம் இல்லை. ஒரு பொருளாவோ..ஏன் இந்த செடியாவோ மரமாவோ இருக்கலாம். எத நாம அதீதமா ரசிக்கறமோ எதைப் பார்த்து நாம சந்தோஷப் படறோமோ. அப்பவே நாம காதலிக்க ஆரம்பிச்சுட்டோம்னு அர்த்தம். அந்த அர்த்தத்துல தான் உங்கப்பா சொல்லிருக்கார்.

அட..பெரிய பிரசங்கமே நடத்துறீங்க. உங்ககிட்ட பேசினதுல ரொம்ப சந்தோஷம். ரிகர்சலுக்கு நேரமாகுது. சாயந்திரம் எங்க ப்ரோகிராமுக்கு வாங்க. போகும் போது கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்க பேர் என்ன?

ப்ரேம். நீங்க?

ஷில்பா..!

இருவர் மனதிலும் பிரளயங்கள் ஆரம்பித்திருந்தன.

- தொடரும்...:icon_rollout::icon_rollout:

மதி
10-01-2008, 11:06 AM
இன்னும் இரண்டு பாகங்களில் முடியும்...
அதுவரை....

ரொம்ப பாவம் நீங்க...:D:D:eek::eek::icon_ush::icon_ush:

மதி
12-01-2008, 12:01 PM
அட..எல்லோரும் தெளிவா இருக்கீங்க....
ஆனாலும் தப்பிக்க முடியாது....

மதி
12-01-2008, 12:03 PM
இவள் தானா அது? மனதில் ஆயிரம் சிந்தனைகள்..குழப்பங்கள். எப்படியும் அவளிடம் கேட்டுவிட வேண்டும். ஒன்பதாவது எந்த ஊரில் படித்தாயென்று? சிந்தித்தவாறே விடுதி நோக்கி நடந்தான் ப்ரேம்.

அன்று மாலை. ஆடிட்டோரியத்தில் ஒரே கூட்டமாய் இருந்தது. பாட்டுப் போட்டி அது இதுவென இடமே கலை கட்டியிருந்தது. ரூபேஷை அழைத்துக் கொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்தான் ப்ரேம்.

டேய் ப்ரேம். எதுக்குட இங்க கூட்டிட்டு வந்தே. ஹாஸ்டல்ல இருந்தோம்னா நாளைக்கு போட்டிக்கு ப்ரிப்பேர் பண்ணிட்டாவது இருப்போம்ல

ஒரு ப்ரெண்ட் கிடச்சிருக்காங்கடா. அவங்க தான் கூப்பிட்டாங்க. இரு அவங்க வர்றாங்களான்னு பார்ப்போம்

இதற்கிடையில் மேடையேறி ஷில்பா பேச ஆரம்பித்திருந்தாள். வைத்த கண் வாங்காமல் பார்த்த ரூபேஷ்,
நல்லவேளை கூட்டிட்டு வந்த. இல்லாட்டா இதையெல்லாம் மிஸ் பண்ணிருப்போமில்ல

அவங்க தான் டா நான் சொன்ன ப்ரெண்ட்.. முறைத்தவாறே சொன்னான் ப்ரேம்.

ஓ..சாரிடா. உன் ப்ரெண்டுனோட யாராவது ப்ரொபஸரா இருக்கும்னு நினைச்சேன். சிரித்தவாறே ரூபேஷ். இருவரும் போட்டியை கவனிக்க ஆரம்பித்தனர்.

ஒருவழியா போட்டி எல்லாம் முடிஞ்சவுடன் இவர்களைத் தேடி ஷில்பா வந்தாள்.

ஹாய். கரெக்டா வந்தீங்க. எப்படி இருந்துச்சு எங்க பர்ஃபாமென்ஸ்?

ஜூப்பரு கலாய்த்தான் ரூபேஷ். அப்போது தான் ரூபேஷை கவனித்தாள் ஷில்பா.

இவர்..?

அது வரை ஷில்பாவையே பார்த்துக் கொண்டிருந்த ப்ரேம் சற்று தெளிந்தவனாய்,
இது..இது என் கூட படிக்கிற ஃப்ரெண்ட் ரூபேஷ். நானும் இவனும் தான் அந்த போட்டிக்கு வந்திருக்கோம்.

ஓ..அப்படியா! எங்க வேலை முடிஞ்சுடுச்சு. இனி ரிசல்ட் சொல்ல வேண்டியது தான் பாக்கி. நாளைக்கு காலையில நாங்க கிளம்பறோம்.

துணுக்குற்றவனாய்,அப்படியா. நாளைக்கு எங்க போட்டிக்கு உங்கள கூப்பிடலாம்னு பார்த்தோம்.

இல்லீங்க. ஏற்கனவே டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு. போகும் போது டில்லி, ஆக்ரால்லாம் சுத்திட்டு போறோம். மறுபடியும் சென்னையில பார்ப்போம்.

சுரத்தற்றவனாய், சரி. உங்க மெயில் ஐ.டி. இருந்தா குடுத்துட்டு போங்க. உங்களுக்கு மெயில் பண்றேன்.

ம்ம். தர்றேன். சென்னையில கண்டிப்பா மீட் பண்றோம். படிப்பு அதுன்னெல்லாம் சாக்கு சொல்லக் கூடாது.

ம்..

இமெயில் ஐ.டி தந்தாள் ஷில்பா. ஐ.டி. தந்தவுடன், சரி. நான் கிளம்பறேன். நேரமாச்சு. மறுபடியும் மீட் பண்ணலாம். நாளைக்கு நீங்க தான் ஜெயிப்பீங்க. All the Best

ப்ரேம் மனதில் இனம் புரியாத கவலை . நீண்ட கால தொடர்பொன்று பிரிந்து போவது போல். முகம் சுருங்கி நின்றவனை கவனித்தவனாய் ரூபேஷ்,
டேய்.. நேரமாச்சு. நாளைக்கு ப்ரிப்பேர் பண்ணனும். சீக்கிரம் வாடா..

எதுவும் பேசாமல் அவனை பின் தொடர்ந்து சென்றான் ப்ரேம். சட்டைப் பையில் அவள் தந்த இமெயில் முகவரியுடன்.

மறுநாள் பலத்த போட்டியை எதிர்நோக்கி போட்டிக்கு சென்றான். இந்தியாவிலிருந்து பல புகழ்பெற்ற கல்லூரியிலிருந்தெல்லாம் வந்திருந்தனர். புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமொன்று இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பலரும் பலவித கனவுகளோடு உட்கார்ந்திருந்தனர். போட்டியில் இரண்டாவதாக அழைக்கப்பட்டான் ப்ரேம். ரூபேஷ் துணையுடன் தன் ரோபோ மாடலின் செயல்முறை விளக்கத்தை அனைவருக்கும் விளக்கினான். முடிவில்,

இந்தியாவில் இடப்பற்றாக்குறை பெருமளவில் நிலவி வருகிறது. மேலும் பல விஞ்ஞான முன்னேற்றங்களினால் நாளுக்கு நாள் புதுப்புது பொருட்கள் உபயோகத்திற்கு வருகின்றன. இதில் கவனிக்கப் படவேண்டியது என்னவென்றால் ஒரு பொருளுக்கு Warranty Date முடிவதற்குள்ளாகவே வேறொரு பொருள் வந்து மக்கள் கவனத்தை ஈர்க்கிறது. இதில் பயன்காலம் முடியும் முன்பே ஒதுக்கப்பட்ட பல எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளன. நல்ல நிலையில் உள்ள பொருளை அதன் பயன்காலம் முடியும் முன்னே ஒதுக்குவது விஞ்ஞான முன்னேற்றம் என்றாலும் அத்தகைய பொருளை அப்புறப்படுத்துவதற்கோ வேறொரு வழியில் உபயோகப் படுத்துவதற்கோ முயற்சித்தல் வேண்டும். இல்லையென்றால் இன்னும் 20 வருடங்களில் மற்ற குப்பைகளைவிட மக்காத தன்மையுடைய விஞ்ஞான குப்பைகள் அதிகமாகி விடும். அதை கருத்தில் கொண்டு தயாரிக்கப் பட்டது தான் இந்த விஞ்ஞான ரோபோ. இதனால் ஏற்படும் பயன்களை தான் இதுவரை விவரித்தோம்.

பலத்த கரகோஷங்களுக்கிடையே தன் செயல்முறை விளக்கத்தை முடித்தான். மற்ற போட்டியாளர்களின் செயல்முறை விளக்கங்களும் நடந்தது. முடிவுகள் அறிவிக்கப்படும் நேரம் வந்தது.

சிறப்பு விருந்தினரான பிரபல மென்பொருள் நிறுவனத்தின் பொது மேலாளர் முடிவுகளை அறிவிக்க வந்தார். ஆவலுடன் ப்ரேமுன் ரூபேஷும் நாற்காலி முனையில் உட்கார்ந்திருந்தனர். எப்படியும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. சிறப்பு விருந்தினர் முடிவுகளை அறிவித்தார்.

நடந்து முடிந்த இந்த செயல்முறை விளக்கம், இந்தியாவில் பல நம்பிக்கை நட்சத்திரங்கள் பெருகி வருவதை காண்பிக்கிறது. மாணவர்கள் இளம் வயதிலேயே நாட்டுக்கு உதவும் பல நல்ல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். இதன் மூலம் இந்தியா வெகு விரைவில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

இதோ போட்டியின் முடிவுகள்: இரண்டாம் பரிசினை தட்டிச் செல்வது மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள். முதல் பரிசு..சென்னை ஐ.ஐ.டியை சேர்ந்த ப்ரேம் மற்றும் ரூபேஷ். அத்துடன் முதல் பரிசை தட்டிச் சென்ற இருவருக்கும் எங்கள் நிறுவனத்திலேயே வேலைக்கு சேர அழைப்பு விடுக்கப்படும்

ப்ரேமும் ரூபேஷும் வானத்தில் மிதக்க ஆரம்பித்தனர். பின்னே உலக புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலையென்றால் சும்மாவா?

பலத்த கரகோஷங்களுக்கிடையே பரிசினை பெற்ற இருவரும் வேகவேகமாக ஊருக்குத் திரும்ப ஆயத்தமாயினர். பெட்டியை எடுத்துக்கொண்டு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தபடி ரயிலில் பயணமாயினர். வழியெல்லாம் அவங்களுக்கு கிடைத்த அந்த பரிசு பற்றி தான் பேச்சு.

சென்னையை அடைந்து விடுதிக்கு வந்ததும் நண்பர்கள் வரவேற்பை ஏற்று அறைக்கு வந்தபின் தான் ப்ரேமுக்கு ஷில்பா ஞாபகம் வந்தது. இந்த விஷயத்தை அவளிடம் சொல்ல வேண்டும். நாளைக்கு மறக்காமல் மெயில் அனுப்பனும் என்றெண்ணி தூங்கலானான்.

மறுநாள் குளித்து கிளம்பி கல்லூரிக்கு செல்லும் போது சட்டை பைகளில் ஷில்பா குடுத்த பேப்பரைத் தேடினான். அது தொலைந்து விட்டிருந்தது.

-அடுத்த பாகத்தில் முடியலாம்.:eek:

யவனிகா
12-01-2008, 06:57 PM
நிஜமாவே கலக்கறீங்க மதி...அப்புறம் என்னாச்சு?

அமரன்
12-01-2008, 07:03 PM
வாராந்தரிகளில் வரும் தொடர்களைப் படித்து விட்டு அடுத்த இதழ் எப்படா வரும் என்று காத்திருந்து காத்திருந்து உடல்நலத்தை அழித்த காலத்தை நீட்டிப்பதில் நாட்டமில்லை. விரைவில் சுபம் போட எனது கண்டிப்பான உத்தரவு. ஆனால் ஒரு கண்டிசன்.. எல்லாத்தையும் எழுதவேண்டும்.:icon_b:

மதி
12-01-2008, 11:21 PM
நிஜமாவே கலக்கறீங்க மதி...அப்புறம் என்னாச்சு?
ஏற்கனவே எழுதினதால எனக்குத் தெரியுமே...
நான் சொல்லமாட்டேன்க்கா... இப்போ..

வாராந்தரிகளில் வரும் தொடர்களைப் படித்து விட்டு அடுத்த இதழ் எப்படா வரும் என்று காத்திருந்து காத்திருந்து உடல்நலத்தை அழித்த காலத்தை நீட்டிப்பதில் நாட்டமில்லை. விரைவில் சுபம் போட எனது கண்டிப்பான உத்தரவு. ஆனால் ஒரு கண்டிசன்.. எல்லாத்தையும் எழுதவேண்டும்.:icon_b:
இனிமே எழுத ஒன்னுமில்லை. அடுத்து சுபம் தான். :D

மதி
13-01-2008, 11:41 AM
பதட்டத்துடன் தேடியவனுக்கு மெயில் ஐ.டி இருந்த பேப்பர் எங்கேயும் கிடைக்கவில்லை. சரி, எப்படியாச்சும் வாங்கிடலாம் என்று கல்லூரிக்கு போனான். அங்கே அவனை வரவேற்க ஒரு கூட்டமே ஏற்பாடு செய்திருந்தது. கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் இருவரையும் புகழ்ந்து தள்ளிவிட்டனர். ஆரவாரமெல்லாம் முடிந்து விடுதிக்கு திரும்பியவன் நேரே அப்பா அம்மாவை பார்க்க ஊருக்கு கிளம்பி போய்விட்டான்.

பெற்றோருடன் சந்தோஷமாய் கழித்துவிட்டு சென்னைக்கு திரும்பியவன் ஷில்பாவை மறந்திருந்தான். அவன் எண்ணமெல்லாம் அந்த ப்ராஜக்டை முடிப்பதிலேயே இருந்தது. அவன் அந்த ப்ராஜக்டை முடிப்பதற்கும் கல்லூரி முடிவதற்கும் சரியாக இருந்தது.

இதோ வேலைக்கும் சேர்ந்துவிட்டான். நினைத்துப் பார்த்தால் எல்லாம் வேக வேகமாக முடிந்தது போலிருந்தது. போட்டிக்கு விண்ணப்பித்தது, தேர்வு பெற்றது, ஷில்பாவை சந்தித்ததுஎல்லாமே. இடையில் ஞாபகம் வரும் போதெல்லாம் ஷில்பாவை பற்றி தகவலறிய முயன்றான். வேலைப் பளு அதிகமிருந்ததால் அவளைப் பற்றி அறிய முடியவில்லை.

ஆயிற்று ரூபேஷும் அவனும் வெவ்வேறு துறைகளில் இருந்தனர். வேலைக்கு சேர்ந்து ஆறு மாதம் கழித்து பயிற்சிக்காக அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வந்தது. சென்ற இடம் ஒரு பாலைவனம். துணைக்கும் யாருமில்லை. அலுவலகத்தில் வேறு எல்லோரும் 4 மணிக்கே சென்றுவிடுகிறார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது அறிமுகமானது தான் ப்ளாகும் (Blog), ஆர்குட்டும் (Orkut).

தனிமையான நேரங்களில் ஆர்குட்டில் நண்பர்களை தேட ஆரம்பித்தான். ஒருநாள் ரூபேஷுடன் சாட்(chat)டிக்கொண்டிருக்கும் போது ஆர்குட்டில் ஒரு ஸ்கிராப் (scrap) வந்தது. கிஷோரிடமிருந்து

மச்சான் எப்படிடா இருக்கே..? Do u remember me..

அடையாளம் கண்டு கொண்டான் ப்ரேம். கிஷோர்பதினொன்னாம் வகுப்பு..ஷில்பாமல்லிகா டீச்சர்..எல்லாமே.

டேய்..கிஷோர் ..எங்கடா இருக்கே..? எப்படி இருக்கே..? அப்பா அம்மா எல்லோரும் சௌக்கியமா?

டேய் ..நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்க?

நல்லா இருக்கேன். இப்ப நான் அமெரிக்கால இருக்கேன். ட்ரெயினிங்காக வந்தேன். மூணு மாசம். செம போர். பேசக் கூட ஒருத்தனும் இல்ல. நீ எங்கடா இருக்க..? என்ன பண்ற.?

நான் இப்ப ஸ்வீடன்ல இருக்கேன் டா. ப்ராஜக்ட் வொர்க். கம்பெனியில வேல பாக்குறேன்

ஓ..கூல்ல்ல்ல்.. அப்பறம் வேற யார் கூடயாவது இன்னும் டட்ச் (touch) இருக்கா?

ஓ..நம்ம ஸ்கூல்ல படிச்ச நெறைய பேர் கூட. உனக்கு ஒன்னு தெரியுமா? நம்ம கூட படிச்ச ஷில்பா கூட அங்க அமெரிக்கால தான் படிச்சிட்டு இருக்கா

ஜிவ்வென்றிருந்தது ப்ரேமுக்கு. அப்படியா.. என்ன பண்றா அவ?

அங்க ஏதோ யுனிவர்சிட்டியில P.G. பண்றாலாம்

ப்ரேம் உடனே கிஷோரின் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் பார்த்து அதில் ஷில்பா என்றிருந்த சுட்டியை கிளிக்கினான். இணையத்தில் பாதுகாப்பு கருதி தன் புகைப்படம் எதுவும் வைக்கவில்லை அவள். அதில் ஸ்கிராப் செய்தான்.

Do you remember me? This is Prem

எதேச்சையாய் தன் ஆர்குட்டை திறந்த ஷில்பா புது ஸ்கிராபை பார்த்து வியந்தாள். எந்த ப்ரேம்?

பதிலளித்தாள். ஸ்கூல்ல படிச்ச ப்ரேம் தானே?. பதில் வந்தது.

அவனே தான்
இப்படியாக இரண்டு முறை விட்டு போன உறவு மறுபடியும் ஆரம்பித்தது. அவள் அமெரிக்காவில் படிப்பது, அவன் அமெரிக்காவில் இருப்பது..எல்லாமே chat-ல் நடந்தது.

ஷில்பா.. உன்னை ஸ்கூல்ல பார்த்தது. உன் போட்டோஸ் இருந்தா அனுப்பேன்

ம்ம்..சரி..

Flickr-ல் தன் போட்டோக்கள் இருந்த லிங்கை அனுப்பி வைத்தாள். திறந்து பார்த்தவன் கண்களுக்கு முதலில் தெரிந்தது ஷில்பா தன் தோழிகளுடன் அந்த விழாவில் எடுத்துக் கொண்ட போட்டோ தான். சந்தேகமே இல்லை..அவள் தான். போட்டியில் பார்த்த அதே பெண் தான் ஷில்பா.

மெயில் அனுப்பினாள் ஷில்பா. உன் போட்டோவை அனுப்பு..

அவளிடம் கொஞ்சம் விளையாட விரும்பி, இப்பொதைக்கு எந்த போட்டோவும் இல்லை. அப்புறமா எடுத்தனுப்பறேன்

ம்ம்..சரி..

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உரையாடல்கள் தொடர்ந்தது. தனிமையில் இருந்த இருவருக்கும் அது நல்லதொரு பொழுதுபோக்காகவும் இருந்தது. ஆனால் தான் படித்த கல்லூரி பற்றியோ, அந்த போட்டி பற்றியோ ப்ரேம் மூச்சு விடவில்லை. அவள் பலமுறை வற்புறுத்தியும் தன் போட்டோவை அனுப்பவில்லை.
இறுதியாய் அவன் அமெரிக்காவை விட்டு கிளம்ப இன்னும் ஒரு மாத காலம் தான் இருந்தது. அதற்குள் இருவரும் சந்தித்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். மெல்ல மெல்ல ஆரம்பித்த பேச்சு இருவருக்குள்ளும் காதலாய் மாறியிருந்தது. ஆனால் சொல்லாமல் தவிர்த்து வந்தனர். வீட்டை விட்டு நண்பர்களை விட்டு தள்ளி இருக்கும் இருவர் பேசும் போது ஏற்படும் ஈர்ப்பு பின்பு காதலாய் மாறுதல் சகஜம் தானே. சந்திக்கும் போது தத்தம் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்றிருந்தனர்.

அதிஷ்டவசமாக ப்ரேம் வேலை பார்க்கும் கம்பெனி, இந்தியா திரும்பும் வழியில், அவள் படிக்கும் நகருக்கு சென்றுவிட்டு செல்ல சொல்லியது. அவர்கள் பிரிவு ஒன்று அங்கு இயங்குவதால் அங்கு சில வேலைகளை முடித்துவிட்டு செல்ல சொல்லியது.
கரும்பு தின்ன கூலியா? சந்தோஷமாய் ஒத்துக் கொண்டான் ப்ரேம். எப்படியும் ஷில்பாவை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேற போகிறதே. விஷயத்தை ஷில்பாவிடம் சொன்னான்.

வாவ்.. சூப்பர் நியூஸ்பா.. என்னிக்கு வர்ற..?

வர ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் வர்றேன். திங்கள், செவ்வாய் அங்கிருப்பேன். செவ்வாய் இரவு இந்தியாக்கு ப்ளைட்

ஓ..எப்போ மீட் பண்ணலாம்..

திங்கட்கிழமை, பாதி நாள் தான் எனக்கு வேலை. மாலை எங்காவது சந்திக்கலாம். நீயே இடத்தை சொல்லு

ம்ம்..சரி. அன்னிக்கு சாயங்காலம் என் காலேஜ்க்கு வா. அங்கிருந்து எங்கியாவது போய் சாப்பிடலாம். சரி..எப்படி இருப்பே நீ.. முகமே மறந்து போச்சு. உன் போட்டோவை அனுப்பு.

இல்லை..நானே உன்னைத் தேடி வர்றேன். ஈஸியா கண்டுபுடிச்சிடலாம்

ப்ரேம் வரும் போது தரவேண்டுமென்று ஒரு நினைவு பரிசு பொருளையும் சிரத்தையாய் தயார் செய்தாள் ஷில்பா. மனம் விரும்பியவர்க்கு கடையில் வாங்கும் பரிசுப்பொருளை விட தாமே செய்து தருவது தான் நிறைய சந்தோஷம் தரும்.

திங்கள் காலை. ஹோட்டலில் இருந்து அலுவலகம் சென்று வேலையை முடித்துவிட்டு மீண்டும் ஹோட்டலுக்குத் திரும்பினான். மாலை தான் ஷில்பாவை சந்திக்க இருப்பதால் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு செல்லலாம் என்றெண்ணி தூங்கப் போனான். தூங்குவதற்கு முன் மறக்காமல் ஒரு பொக்கேவுக்கு ஆர்டர் கொடுத்தான்.

சாயங்காலம் பொக்கே வந்திருந்தது. கிளம்பி, கொஞ்சம் நேரம் டிவி பார்க்கலாம் என்று டிவி போட்டவன் அதிர்ந்தான். எந்த சேனலைப் போட்டாலும் பிளாஷ் நியுஸ் ஓடிக் கொண்டிருந்தது. ஷில்பா பயிலும் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு.

யாரோ ஒருவன் வெறிபிடித்து வகுப்பறைக்குள் நுழைந்து கண்ணில் பட்டவரையெல்லாம் சுட்டுவிட்டானாம். யாரெல்லாம் இறந்தனர் என்று தெரியவில்லை. ப்ரேம் உடம்பில் பதட்டம் தொற்றிக் கொண்டது. ஷில்பாக்கு என்னாயிற்றோ?

பரபரவென்று வந்திருந்த பொக்கேவை எடுத்துக் கொண்டு அவள் படிக்கும் கல்லூரிக்கு சென்றான். ஒரே அவலம். எல்லா இடமும் போலிஸ் தலைகள். அங்கிருந்த என்கொயரி கவுண்டருக்கு ஓடினான். ஆங்கிலத்தில்,

இங்க ஷில்பான்னு ஒரு பொண்ணு..இந்தியன்?

அவர், இதுவரைக்கும் இரண்டு இந்தியர்கள் இறந்திருக்கிறார்கள். ஒரு புரொபஸர். ஒரு ஸ்டூடண்ட். ஸ்டூடண்ட் பேர் தெரியல. ஒரு பொண்ணு

பைத்தியம் பிடித்தவனானான் ப்ரேம். ஷில்பாவா இருக்கக் கூடாதேகடவுளே..எங்க போய் தேடுவேன்..

கல்லூரியெங்கும் தேடினான். பெண்கள் விடுதிக்கு சென்று அவளைப் பத்தி விசாரித்தான். யாரும் பதில் கூறும் மனநிலையில் இல்லை. தெளிந்திருந்தவர்களுக்கும் அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. சுத்தமாய் தெம்பற்றவனாய் கண்ணில் கண்ணீருடன் ஓய்ந்து போய் கல்லூரி குளத்தருக்கில் இருக்கும் சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தான்.

ஆளரவமற்ற அங்கு குளத்தருகில் இருந்து ஒரு விசும்பல். சற்றே தெளிந்தவனாய் பின்பக்கம் சென்று பார்த்தான். ஷில்பா அங்கு உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். என்ன தான் கராத்தே பயின்றிருந்தாலும் பெண்ணாயிற்றே? துப்பாக்கிசூடு நடந்த வகுப்பறையில் அவளும் இருந்தாளாம். அதிர்ஷ்டவசமாக அவள் தப்பினாளாம். அவள் கூட படிக்கும் நிறைய பேர் இறந்திருந்தனர். இதெல்லாம் பிற்பாடு அவளிடமிருந்து ப்ரேம் தெரிந்து கொண்டது.

அவளைப் பார்த்ததும் கண்ணீர் மல்க கூவினான். ஷில்பாஆஆஆஅ.

திரும்பி பார்த்தவள் ஒரு நிமிடம் நிதானித்து அவனை கண்டு கொண்டாள். ப்ரேம். இரண்டு முறை தவறவிட்ட உறவு இதோ வந்திருக்கிறது அவனைத் தேடி. அவளுக்கு ஆறுதல் சொல்ல. எழுந்து அவளை நோக்கி ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டாள். இனி என்றென்றும் அவனை விட மாட்டாள்.

அப்புறம் நடந்தவை:
1. ப்ரேம் அங்கேயே இருந்து தன் விசா காலம் முடியும் போது இந்தியா திரும்பினான்.
2. தன் வீட்டிலும் ஷில்பா வீட்டிலும் தங்கள் காதலை சொல்லி சம்மதம் வாங்கினான்.
3. ஷில்பா படிப்பு முடிந்தவுடன் அவர்கள் திருமணம் இனிதே நடந்தது.
4. இன்று இரு குழந்தைகளுக்கு நல்லதொரு பெற்றோராய் வாழ்க்கை நடத்திவருகின்றனர்.


-----சுபம்------

சிவா.ஜி
13-01-2008, 11:55 AM
அசத்திட்டீங்க மதி ஒரு நிஜ நிகழ்வை கதையில் புகுத்தி அதையே க்ளமேக்ஸுக்கு உபயோகப்படுத்திய யுக்தி சூப்பர்.அப்படியே சினிமா பார்ப்பதைப்போலிருந்தது.அதனாலேயே கொஞ்சம் சினிமாத்தனமும் இருக்கிறது.அதாங்க எல்லாமே பட்டு பட்டுன்னு நடக்கறதை சொல்றேன்.

எப்படியோ சின்ன ஒரு சஸ்பென்ஸை வெச்சி கொஞ்ச நேரத்துக்கு எங்களை சுத்தல்ல விட்டுட்டீங்க.பிரமாதம் மதி.மனம் நிறைந்த பாராட்டுகள்.

மதி
13-01-2008, 12:16 PM
மிக்க சந்தோஷம் சிவாண்ணா..
இதுவரை சம்பவங்களா மட்டும் தான் எழுதினேன். கதை அப்படின்னு எதுவும் எழுதியதில்லை. முதல்ல என்ன கேரக்டர், அவங்க குணாதிசயங்கள் எப்படி நிர்ணயிக்கிறதுன்னு புரியல. அப்போ தான் சிறுகதை மற்றும் தொடர்கதை எழுத்தாளர்கள் மேல மிகப்பெரிய மதிப்பு வந்தது.

அப்புறம் ஒரு விஷயம். இந்த கதை கதாநாயகனா என் நண்பன் இருந்ததா நாங்க காட்டினாலும் சில அரசியல் பண்ணவெ இந்த கதை ஆரம்பித்தது. எங்க டீமில சேர்ந்து காதல் பண்ணின ஜோடிகளை பத்தி எழுதத் தான் ஆரம்பித்தோம். அவங்க காதல் ரகசியமாக காக்கப்பட்டது. அதைவிட ரகசியமா எங்க எல்லோருக்கும் அவங்க காதல் தெரியும்ங்கற மேட்டரையும் நாங்க காத்தோம். எல்லோரும் உசுப்பேத்துனதால் ஏறக்குறைய ஆறு பாகம் வேகமா எழுதியாச்சு. இனி கம்பெனி போய் காதல் பண்ணி கல்யாணம் பண்ற மாதிரி தான் இருந்தது. ஆனால் காதலை மற்றவர்க்கு அவங்க சொல்லாத நிலையில் இதை எழுதினா தேவையில்லாத பிரச்சனை வரும்னு நினைத்ததால எழுதாம இருந்தேன். சீக்கிரமே கல்யாண தேதி அறிவிச்சுடுவாங்கன்னு. ஆனா எதுவும் நடக்காததாலயும் காத்திருக்க முடியாம எல்லோரும் அசிங்கமா திட்ட ஆரம்பிச்சதாலேயும் சினிமாத்தனமா முடிவு சொல்ல வேண்டியதா போச்சு. இதுக்கு முக்கிய இன்ஸ்பிரேஷனே "கனா காணும் காலங்கள்" தான்.

பி.கு: இக்கதை யாரை நோக்கி எழுத ஆரம்பிக்கப்பட்டதோ அவங்களுக்கு கூடிய விரைவிலேயே திருமணம்.

சிவா.ஜி
13-01-2008, 12:26 PM
அட்றா சக்கை...அப்படி போகுதா கதை.....நிஜத்தில் இணையவிருக்கும் அந்த காதல் ஜோடிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

மதி
13-01-2008, 12:34 PM
பாருங்க... "காதல்" எப்படியெல்லாம் எழுத வைக்குது..

சுகந்தப்ரீதன்
16-01-2008, 09:03 AM
மதி அருமையாக கதையை நகர்த்தி இருக்கிறீர்கள்..! கண்முன்னே நிகழ்வது போல இன்றைய காலகட்டத்திற்க்கு முழுதும் பொருந்தும் வகையில் சில இடங்களை கையாண்டிருப்பது திறமை..! இது முதல் பாகம் என்று முடித்துவிட்டு இதன் இரண்டாம் பாகத்தை அலைபாயுதே ஸ்டைலில் கற்பனை கலந்து எங்களுக்கு அளிக்கலாமே..?! செய்வீர்கள் என்று நம்புகிறோம்..!

முதல் பாகத்திற்கு முத்தமெல்லாம் கிடையாது ஏன்னா இதுவும் ஒரு காதல் கதைன்னு ஆயிடும்ல.. ஸோ வாழ்த்தும் பாராட்டும் மட்டும் மதியோட மதிக்கு..!

மதி
16-01-2008, 11:38 AM
மதி அருமையாக கதையை நகர்த்தி இருக்கிறீர்கள்..! கண்முன்னே நிகழ்வது போல இன்றைய காலகட்டத்திற்க்கு முழுதும் பொருந்தும் வகையில் சில இடங்களை கையாண்டிருப்பது திறமை..! இது முதல் பாகம் என்று முடித்துவிட்டு இதன் இரண்டாம் பாகத்தை அலைபாயுதே ஸ்டைலில் கற்பனை கலந்து எங்களுக்கு அளிக்கலாமே..?! செய்வீர்கள் என்று நம்புகிறோம்..!

முதல் பாகத்திற்கு முத்தமெல்லாம் கிடையாது ஏன்னா இதுவும் ஒரு காதல் கதைன்னு ஆயிடும்ல.. ஸோ வாழ்த்தும் பாராட்டும் மட்டும் மதியோட மதிக்கு..!
நன்றி ப்ரீதன்... இது எழுதறதுக்கே நாக்கு தள்ளிடுச்சு.. மக்கள்லாம் எப்படி தான் தொடர்கதை எழுதறாங்களோ...? மேலும் கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பிரச்சனையெல்லாம் நடக்கக்கூடும்னு எனக்குத் தெரியாததால் இப்போது எழுதுவது சரியாகாது...

யப்பாடி எஸ்கேப்...:eek::eek::D:D

யவனிகா
16-01-2008, 12:05 PM
உண்மைதான் நாங்களும் கூடவே கதையோட பயணித்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்...அடுத்தது சினிமாவுக்கு கதை திரைக்கதை எழுத போகப் போகிறீர்களா மதி...நல்ல ஒரு தொடர் சுறு சுறு காதல் கதையைக் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் மதி

மதி
16-01-2008, 12:10 PM
உண்மைதான் நாங்களும் கூடவே கதையோட பயணித்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்...அடுத்தது சினிமாவுக்கு கதை திரைக்கதை எழுத போகப் போகிறீர்களா மதி...நல்ல ஒரு தொடர் சுறு சுறு காதல் கதையைக் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் மதி

அக்கா...
நீங்க நெசமா தான் சொல்றீங்களா...? இதுவரைக்கும் எல்லோரும் ஓட்டுறாங்கன்னுல்ல நெனச்சேன்.. என்னமோ எனக்கே இந்த கதையில நம்பிக்கை யில்லாததால தான் மன்றத்துல பதியாம இருந்தேன். இப்படியெல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடாதீங்க..

மயூ
16-01-2008, 12:50 PM
மதி மதி...!!!
உங்க கையைக் கொடுங்க!!! பயந்து பயந்து வாசித்தேன்!!! சுபமாக முடித்திட்டீங்க!! மேலும் பல கதைகள் எழுத இத்தால் வேண்டுகின்றேன்!!!

அமரன்
17-01-2008, 08:36 AM
பள்ளிப்பருவம்... கல்லூரிப் பருவம்... முதிநிலைக் கல்விப் பருவம்... முப்பருவக் கதையை தொய்வில்லாமல் சொல்லி உள்ளீர்கள். அதனால் கடுகதி நகர்வில் கதை..

அலைபாயும் மனதை கைதட்டி அழைக்கும் ரசனைமிகு கதையில் "மதி"நுட்பம் இழையோடுகிறது...

கதைநாயகி கற்ற கராத்தே, கதையில் உயிரோட்டஙக்ளின் மீள் சந்திப்புக்கு உறுதுணையாயிருப்பதாக அமைத்து இருப்பது கவர்கின்றது..

நடைமுறை விடயங்களை கதையில் புகுத்தி, திருப்பங்களுக்கும் நகர்வுக்கும் பொருத்தியிருப்பதில் நிலைத்து நிற்கின்றது எனது மனப்பறவை..

முதல் பாகம் படித்து விட்டு சொன்னேன்.. எழுதுபோது அனுபவிப்பர் சிலர்.. அனுபவித்ததை எழுதுவர் சிலர். இரண்டிலும் உறுதிப்படுத்தப்பட்ட வெற்றி உள்ளது.

இப்போ இன்னொன்று வாசிக்கும்போது அனுபவிப்பர் சிலர்.. அனுபவித்ததை வாசிப்பர் சிலர்.. இரண்டும் வெற்றிப்பாதையில் படைப்பை இட்டுச்செல்வன..

உங்கள் நட்புக் குளத்து மீன்களின் அந்தரங்கத்தை அடிப்படையாக கொண்டு இழைக்கபட்ட இப்பட்டும் அந்தரகத்தை சேர்ந்தது.. பாராட்டுகள்...:icon_b: தொடருங்கள்..

மதி
17-01-2008, 09:43 AM
நன்றி அமரன்...
இப்படியெல்லாம் கூட விமர்சிக்கலாமோ..? இதையெல்லாம் பார்க்கும் போது.. அட நாம கூட ஏதோ எழுதியிருக்கோம்னு தோணுது.. நிறைய சின்ன சின்ன விஷயங்கள் என் வாழ்விலும் நிகழ்ந்தவை தான்.. :)