PDA

View Full Version : நரகவேதனை பாகம் 2



தங்கவேல்
08-01-2008, 07:33 AM
ஏம்பா, ஒரு டீ அப்படியே வடை ஒன்னு. பிளாஸ்டிக் குவளையில் டீயும், மசால் வடையும் வர, குளிரில் நடுங்கி கொண்டிருந்ததற்கு ஏதுவாக சூடாக வயிற்றுக்குள் டீ பரவ, பசி தீர வடையினை ருசித்து சாப்பிட்டபடியே, டீ விற்பவரை பார்க்க, பார்க்க, ஒரு இருபது நிமிடத்திற்குள் டீ முழுதும் , வடைகளும் முடிந்து போக, சந்தோசமுகத்துடன் காசு வாங்க வந்தார் .

ஏங்க, தினமும் 100 கிடைக்குமா ? என்றேன்.

100க்கெல்லாம் எவன் சார் வேலை பார்ப்பான். தினமும் 300 முதல் 400 ரூபாய் கிடைத்து விடும். காலையில் எழுந்து வடை, பன்னு பஜ்ஜியும் சுட்டு எடுத்துக்கொண்டு, டீ கேனுடன் இங்கு வந்து விடுவேன். ஐந்து மணி நேரத்துக்குள் எல்லாம் முடிந்து விடும். மறுபடி ஒரு கேன் , மீத வடைகள். அதுவும் மாலைக்குள் முடிந்து விடும். குறையாமல் 300 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றார்.

மனதுக்குள் கணக்கு ஓடியது ( குறுக்கு புத்தி வேலை செய்ய ) மாதம் 9000 ரூபாய் இல்லையெனில் 12000 ரூபாய். படிப்பு இல்லை. காலும் கையும் தான். மனுசனுங்க படிக்கிறானுங்க படிக்கிறானுங்க கிட்டத்தட்ட 15 வருடம். படிச்சு முடிச்சா, மாதம் 3000 ரூபாயில் ஆரம்ப வேலை. நேரத்துக்கு வேலைக்கு போகனும். லீவு போட்டால் சம்பளம் கட்டு. இப்படி அப்படின்னு அசைய முடியாது. முதலாளி சொல்லுவதை கேட்டு நடக்கனும். மீறினா வாசல் தான்.

டீ விற்பவர் மாதம் குறைந்தது 10000 ரூபாய் சம்பாதிக்கின்றார். அதே படித்து பட்டம் கிட்டம் வாங்கி, பதக்கமும் வாங்கி மாதம் 3000த்திலிருந்து 75000 ரூபாக்கு குப்பை கொட்டும் படிப்பாளிகள் திறமைசாலிகளா அல்லது டீ விற்பவர் திறமைசாலியா என்ற மயக்கம் எனக்கு உண்டானது.

தொடரும்.....

lolluvathiyar
08-01-2008, 09:53 AM
டீ விற்பவர் மாதம் குறைந்தது 10000 ரூபாய் சம்பாதிக்கின்றார். அதே படித்து பட்டம் கிட்டம் வாங்கி, பதக்கமும் வாங்கி மாதம் 3000

ஆம் தங்கவேல் டீ விற்பவருக்கு தினமும் 300 கிடைக்கும்.
கட்டிட தொழிலாளி / பிளம்பர் / எலெக்டிரிசியன் இன்று தின கூலி 300 ஆகிவிட்டது
சாலையோரத்தில் கையேந்தி பவன் நடத்துபவனின் ஒரு நாள் வருமானம் 1000 க்கும் மேல். அதாவது மாதம் ரு. 30000. நகரங்களில் சிறு கடைகளில் தினமும் கூட்டும் பெருக்கி செல்லும் பென்மனிகள் மாத வருமானம் 15000 லிருந்து 30000 வரை. செப்டிக் டாங் வழிக்கும் தொழிலாளிக்கு மாத வருமானம் 25000 க்கும் குரையாது. இதெல்லாம் படிக்காமல் கௌரவம் பார்க்காமல் செய்யும் தொழில்கள், ஜனதொகை பெருக்கம் போட்டி இல்லாத சூல் நிலை நல்ல வருமானம் பார்ப்பார்கள்.
ஆனால் பட்டதாரி படிப்பு ஆரம்பத்தில் பல இடங்களில் வெறும் 3000 தான் வரும். அதுதான் உழைப்புக்கும் வெள்ளை காலர் வேலைக்கு இருக்கும் வித்தியாசம்.

ஆனால் இதெல்லாம் நகரங்களில்தான் கிராமங்களில் விவசாய தின*கூலி ரூ.100 கீழேதான் இருக்கும்.

தங்கவேல்
09-01-2008, 04:44 AM
வாத்தியார், என்னிடம் 40 ஏக்கர் விவசாய நிலம் இருக்கின்றது. வரப்பு வெட்ட கூலி ரூபாய் 200. உழுவதற்க்கு கூலி ரூபாய் 200. அதுவும் காலை ஒன்பது மணியிலிருந்து மதியம் 1.00 வரை மட்டும் தான். சாப்பாடு போட வேண்டும். அதன் செலவு தனி. வயல்களில் நெல் விளைந்து கிடக்கின்றது. வேலை செய்ய ஆள் கிடைக்க வில்லை. அதற்க்கு மேஸ்திரியை கவனிக்க வேண்டும். இப்படி விவசாய வேலைக்கு தற்போது அதிகம் கூலி கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பது இல்லை. இந்த லட்சனத்தில் நெல்லுக்கான விலை அப்படியே இருக்கின்றது. குவின்டாலுக்கு 830 ரூபாய் என்று இப்போது தான் உயர்த்தி இருக்கின்றார்கள். உழைப்பவன் கணக்குப்பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது என்பது முற்றிலும் உண்மை...

இதயம்
09-01-2008, 04:56 AM
இப்படி விவசாய வேலைக்கு தற்போது அதிகம் கூலி கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பது இல்லை. இந்த லட்சனத்தில் நெல்லுக்கான விலை அப்படியே இருக்கின்றது. குவின்டாலுக்கு 830 ரூபாய் என்று இப்போது தான் உயர்த்தி இருக்கின்றார்கள். உழைப்பவன் கணக்குப்பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது என்பது முற்றிலும் உண்மை...
இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்று காந்தியடிகள் சொன்னார். உண்மை..! காரணம், தேச முன்னேற்றத்திற்கு காரணமானவர்கள் மட்டுமல்ல, அதற்கு காரணமானவைகளும் கிராமங்களிலிருந்து தான் நமக்கு கிடைக்கிறது. ஆனால், நம் அரசு விவசாயத்துறைக்கு ஓரவஞ்சனை செய்ததால் இன்று விவசாய தொழிலே அழியும் நிலை இருந்து வருகிறது. விவசாயிகள் நிலத்தில் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டு வேறு தொழில் பார்க்க தொடங்கி விட்டனர். தங்கவேல் அண்ணா சொன்னது போல் விவசாயம் செய்து வருமானம் ஈட்டுவது என்பது மிகவும் கடினமான செயலாகிவிட்டது. தேசத்திற்கே உணவு கொடுப்பவனை மதிக்க தெரியவில்லை இந்த தேசத்திற்கும், அதன் மக்களுக்கும்.! என்ன புலம்பி என்ன பயன்.? நாம் ஊதும் சங்கு சத்தத்தை கேட்பவர்கள் செவிடர்களாக இருக்கிறார்களே..!!


தங்கவேல் அண்ணா.. உங்கள் பதிவில் ஒரு சின்னத்திருத்தம். அது உழைப்பவன் கணக்குப்பார்த்தால் அல்ல.. உழுபவன்(விவசாயி) கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது தான் சரி..!!

lolluvathiyar
09-01-2008, 06:05 AM
வாத்தியார், வரப்பு வெட்ட கூலி ரூபாய் 200. உழுவதற்க்கு கூலி ரூபாய் 200.

மன்னிக்கவும் தவறாக கனக்கு சொல்லி விட்டேன். இப்ப எனக்கு விவசாயத்துக்கு கொஞ்ச கேப் விட்டு போச்சு. கூலி ஆள் கிடைக்காம எங்க ஊர்ல முக்காவாசி காடுக எல்லாம் சைட் போட்டு இப்ப நகராகி கொண்டு இருக்கு. எங்க அப்பா இப்ப வெள்ளாமைய நிறுத்தீட்டாரு. பன்டம் பாடிக்கு அளவா சோழம் மட்டும் போடறார். அதுவும் அறுக்கரதுக்கு ஆள் கிடைக்கறதில்ல.

நெல்லுக்கு குவின்டாலுக்கு 1000 தர மறுக்கு அதே அரசு நெல்லை ரூ1250 க்கும் கோதுமை ரூ1400 க்கும் இறக்குமதி செய்கிறது. இது தான் கொடுமை.


இன்று விவசாய தொழிலே அழியும் நிலை இருந்து வருகிறது.

அந்த கவலை எனக்கு அதிகம் உண்டு இதயம். காரனம் என்னன்னா


விவசாயிகள் நிலத்தில் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டு வேறு தொழில் பார்க்க தொடங்கி விட்டனர்.

ஆள் தட்டுபாடு (எங்க ஊரில் தன்னீர் தட்டுபாடு இல்ல) காரனமாக செய்யமுடியவில்லை. அருகில் கோவை நகரம் இருப்பதால் குரைந்த சம்பளத்துக்கு கூட டவுனுக்கு ஆரோக்கியமற்ற வேலைக்கு போகிறார்கள். ஆனால் அதிக சம்பளம் தந்தாலும் காட்டுல வெய்யில்ல வெறும் 4 மனி நேரம் உழைக்க விரும்புவதில்லை. அதனால் நாங்க நிறுத்தி விட்டோம். ஆனா என் குழந்தைகளுக்கு அந்த பழக்கத்தை விட விரும்புவதில்லை. விடுமுரைகளில் தோட்டத்து கூட்டீட்டு போய் அப்பாவிடம் விட்டுவிடுவேன். லீவு பூரா கோழி, மாடுகளோட சுத்திகிட்டு விளையாடுங்க. திருப்பி கூட்டீட்டு வரதுகுள்ள போதும் போதும்னு ஆயிரும்.


தேசத்திற்கே உணவு கொடுப்பவனை மதிக்க தெரியவில்லை

உனவு மட்டுமல்ல, உடைக்கு தேவையான பருத்தியும், தோல் எல்லாம் அங்கிருந்துதான் கிடைக்கும்

நுரையீரல்
09-01-2008, 06:57 AM
நரகவேதனை நகரவேதனையாகி நகரமறுப்பது ஏன்?

தங்கவேல்
09-01-2008, 11:58 AM
நரகவேதனை நகரவேதனையாகி நகரமறுப்பது ஏன்?

ராஜா, காரணம் இருக்கின்றது. நரக வேதனை பதிவினை வித்தியாசமாக முடிக்கனும் என்றுள்ளேன்... பொருத்தருளும்..