PDA

View Full Version : என் இதயமும் தமிழ் மன்றமும்.Hayah Roohi
08-01-2008, 06:52 AM
என் ஆய்வுக்காக சின்ன உதவி.............


உறுப்பினர்கள் அனைவரும் சில வரிகளில் தமிழ் மன்றம் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே கூறுங்கள்.

.

இதயம்
08-01-2008, 07:00 AM
என் ஆய்வுக்காக சின்ன உதவி.............
உறுப்பினர்கள் அனைவரும் சில வரிகளில் தமிழ் மன்றம் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே கூறுங்கள்.

அன்பு ஹயா,
மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கும் தமிழ் மன்றத்திற்குமான தொடர்பை சில வரிகளில் சொல்லிவிடுவதென்பது இயலாத விஷயம். இந்த இனிய உறவை விளங்க வைக்க உங்களுடைய ஆய்வு பற்றிய திரியில் இளசு அண்ணா சொன்னது போல் என் இனிய தமிழ் மன்றம்..! - பார்வை (2000) (\"http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13446&page=3\") என்ற என் திரியை நேரம் ஒத்துழைத்தால் படியுங்கள். அது எந்த வகையிலாவது உங்கள் ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே..!!

சிவா.ஜி
08-01-2008, 07:08 AM
அன்பு ஹயாரூஹி,என்னுடைய மூன்றாயிரப் பதிவில் மன்றத்தைப் பற்றின என் எண்ணங்களை சிறிதாகக் காட்டியிருக்கிறேன்.அந்த பதிவை இங்கே கொடுத்திருக்கிறேன்.உங்களுக்கு உதவுமா பாருங்கள்.

எது என்னை ஈர்க்கிறது.....?சின்னச் சின்னதாய் அவ்வப்போது கிடைக்கும் பாராட்டு பின்னூட்டங்களா..?என் பெயரை எழுத்தில் பார்க்கிற சந்தோஷமா....?என் எழுத்தை இணையத்தில் படிக்கும் பரவசமா....? என்னைக் கேட்டால்...இவை எல்லாவற்றையும் விட..பெரிதானதாக நான் கருதுவது......எனக்கு பல உறவுகள் இங்கே என்ற பெருமிதம்,கிச்சுக் கிச்சு மூட்டி சிரிக்க வைப்பதும்,கலங்கினால் கண்துடைப்பதும்,ஆத்திரப்பட்டால் ஆசுவாசப்படுத்துவதும்,உரிமையுடன் ஓட்டுவதும்,அண்ணா என்றழைக்க அன்புத் தங்கைகளும்,தம்பிகளும்,இளையவனை வழிப்படுத்தும் அண்ணன்களும்,நன்பா என்று தோளணைக்கும் தோழர்களுமாய்....மகிழ்வான ஒரு கூட்டுக்குடும்பத்தின் ஓர் அங்கமாய் நான் இருப்பதைத்தான்.

என்னுடைய மூவாயிரமாவது பதிவு இது.மன்றத்தை பொறுத்தவரை ஆயிரங்கள் பெரிய சாதனையல்ல...சொல்லப்போனால்....இந்த மன்றத்தைப் பொறுத்தவரை எதுவுமே சாதனைகள் அல்ல.பன்னீராயிரம் தாண்டி பயணிக்கும் இளசுவும்..மனதார விழி விரித்து பாராட்டும் நூறுகூட எட்டாதவர்கள் இங்குண்டு.பட்டியலிட்டால் பக்கம் பக்கமாக விரியும்.ஆனால் சுருங்கச் சொன்னாலே அனைத்து உறவுகளுக்கும் புரியும்.அதுதான் இந்த மன்றத்தின் சிறப்பம்சம்.தலை மணியா மன்றத்தின் மூத்தவர் மட்டுமல்ல...வயதிலும் சிறிது மூத்தவர்...ஆனால்..அவரையும் உரிமையுடன் கலாய்க்கும் மற்ற உறவுகள்.இந்த அந்யோன்னியம்தான் இங்கே அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

நுரையீரல்
08-01-2008, 07:35 AM
தமிழ்மன்றம் மூலம் தமிழை வளர்க்க நான் இங்கு வரவில்லை. ஆனால் நிறைய தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள் எனக்கிங்கு. அந்த நட்பை வளர்க்கவே தினம் வருகிறேன், அதுவும் பளு இல்லாத வேலை காரணமாக.

ஒருவேளை, பணிப்பளுமிக்க வேலைக்கு செல்ல நேர்ந்தால், அலைபேசி தான் என் நட்பை வளர்க்க உதவும்.

என் மனசில பட்டதை சொல்லிட்டேன்!

மனோஜ்
08-01-2008, 08:56 AM
இதயங்கள் இனைந்திட இனைய வழி பாலம் தமிழ் மன்றம்

இனியவருக்கு இனிமையாய்
வன்மையருக்கு வலிமையாக
தகவல் பெட்டகமாக தமிழ் கலஞ்சியமாக
என்றும் நிலைக்கும் இனிய தலம் தமிழ் மன்றம்

இதமாய் பதமாய்
இதயங்கள் இனைந்திட
இல்லரம் அமைக்கும் நிர்வாகம்

உறுவிளைவிக்கும் உறவுகள்
மன்றத்தில் முளைத்தாலும்
உறுதியாய் இல்லரம் காக்ககும்
பெறுப்பாளர்கள்

மன்றத்தை பன்படுத்தும்
மனிக்க ஆலோசகர்கள்
தகவல்கள் அள்ளிதரும்
அன்புமூத்த உறுப்பினர்கள்

தேனீக்ளாய் உறுப்பினர்கள்
தேன்கூடாய் மன்றத்தில்
தன் தமிழ் பெக்கிசங்களை
சேர்கிறார்கள்

lolluvathiyar
08-01-2008, 09:42 AM
சில வரிகளில் தமிழ் மன்றம் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே கூறுங்கள்.

சில வரிகள் எல்லாம் வேண்டியதில்லை. ஒரே வரியில் முடித்து விடலாம், தமிழ்மன்றம் நல்லதொரு குடும்பம். அப்படி பட்ட குடும்பம் எப்படி இருக்கும் என்று நீங்களே ஊகித்து விடலாம்.

ஆர்.ஈஸ்வரன்
08-01-2008, 09:51 AM
என் ஆய்வுக்காக சின்ன உதவி.............


உறுப்பினர்கள் அனைவரும் சில வரிகளில் தமிழ் மன்றம் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே கூறுங்கள்.

தமிழ் மன்றத்தில் நுழைந்து விட்டு என்னால் திரும்பிச் செல்ல முடியவில்லை. அனைத்தும் கிடைக்கிறது

சாலைஜெயராமன்
08-01-2008, 03:04 PM
மெய்யாகச் சொல்லவேண்டுமென்றால், நான் ஒரு புதிய அங்கத்தினன். ஆனால் இரண்டு நாட்களுக்குள் நீண்ட காலம் தொடர்பு வைத்துக்கொண்டுள்ளது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. குறிப்பாக என் அறிமுக பின்னூட்டத்தில் அனைவரும் வரவேற்று இரண்டு வரி எழுதி வரவேற்றிருப்பது அதிலும் மிக விரைவாக மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. திரு பாரதி போன்றோர் உடன் பதிலளிக்கும் பண்பு போற்றுதற்குரியது. வாழ்க வளர்க தமிழ்மன்றம்.

அன்புரசிகன்
08-01-2008, 03:31 PM
சில வரிகள் எல்லாம் வேண்டியதில்லை. ஒரே வரியில் முடித்து விடலாம், தமிழ்மன்றம் நல்லதொரு குடும்பம். அப்படி பட்ட குடும்பம் எப்படி இருக்கும் என்று நீங்களே ஊகித்து விடலாம்.


தமிழ் மன்றத்தில் நுழைந்து விட்டு என்னால் திரும்பிச் செல்ல முடியவில்லை. அனைத்தும் கிடைக்கிறது

நண்பர்களே... ஹாயா அவர்கள் ஆய்வுக்கட்டுரைக்காக உங்களின் உதவியை நாடியுள்ளார். அதற்கேற்றாற்போல் சற்று விளக்கமாக பதில் தரலாமே.......

ஹாயா அவர்களுக்கு.......

ஒரு கேள்விப்பத்திரம் தயாரித்து இங்கே பதித்தால் (Questionnaire) பதிலளிப்பவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். உங்கள் ஆய்வுக்கும் அது உதவும் என் எண்ணுகிறேன். இதனையே உங்களது ஆய்வு செயற்படுத்தும் முறைகளில் (Research Methodology) ஒன்றாக உங்கள் சுருக்க அறிக்கையில் நீங்கள் வெளிப்படுத்தலாம்.

யவனிகா
08-01-2008, 07:51 PM
அன்பு ஹயா ரூஹி,

அழகான, ஆழமான கவிதைகளுக்குச் சொந்தக்காரர் நீங்கள்.
உங்கள் ஆய்விற்கு தமிழ்மன்றத்தை தேர்ந்தெடுத்தமை, மன்றத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயம்.

நன்றி நவில்வது யவனிகா (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=282599&postcount=1) எனும், எனது நூறாவது பதிப்பின் சுட்டியைக் கொடுத்துள்ளேன். அதுவே தமிழ்மன்றம் பற்றிய எனது கருத்து.

உங்கள் ஆய்வு இனிதே நிறைவடைய வாழ்த்துக்கள்.

அறிஞர்
08-01-2008, 08:58 PM
இணையத்தில் உலகத்தமிழர்களின் குடும்பம்.
-----
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து... இன்று ஒரு குடும்பம் போல் பல உறவுகளை பெற்றிருப்பதற்கு தமிழ் மன்றம் தான் காரணம்.