PDA

View Full Version : நடுவரின் முடிவை எதிர்த்து வீரர்கள் முறைப



IDEALEYE
08-01-2008, 03:56 AM
நடுவரின் முடிவை எதிர்த்து வீரர்கள் முறைப்பாடு செய்யும் திட்டத்தை கொண்டுவரலாமா? என்று சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) பரிசீலனை செய்து வருகிறது.

சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அவுஸ்திரேலிய அணிக்கு சாதகமாக நடுவர் ஸ்ரீவ் பக்னர் வழங்கிய தவறான முடிவுகளைத் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் கிரிக்கெட் போட்டிகளில் சந்தேகம் ஏற்பட்டால் நடுவர்கள், தொழில்நுட்பத்தின் உதவியுடன் முடிவை எடுக்கலாமா? என்பது குறித்த ஆலோசனை வலுப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஐ.சி.சி. தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது;

தேவைப்பட்டால் தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடுவர்கள் முடிவு எடுக்கும் திட்டம் செப்டெம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அமுல்படுத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. டெஸ்ட் போட்டியில் இதனை அமுல்படுத்தும் திட்டமெதுவும் இல்லை.

புதிய திட்டத்தின்படி வீரர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஆட்டமிழப்பில் திருப்தியில்லாவிட்டால் நடுவரின் முடிவுக்கு எதிராக உடனடியாக 3 ஆவது நடுவரிடம் முறைப்பாடு செய்யலாம். ஒரு இனிங்ஸில் குறிப்பிட்ட தடவை மட்டும் தான் (மூன்று தடவை) முறைப்பாடு செய்ய முடியும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நாங்கள் ஆதரவாக இல்லை. ஆட்டத்தின் பாரம்பரியத்தை நாங்கள் மதிக்கிறோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடுவர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

வீரர்கள் ஆட்டமிழந்ததை உணர்ந்தால் தானாக வெளியேறுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். அடுத்த 2 ஆண்டுகளுக்கு பொதுவான நடுவர் முறை நிச்சயம் நீடிக்குமென்றார்.
"நன்றி தினக்குரல்"

மேற்படி விடயம் ஒன்றும் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்யும் எண்ணத்துடன் அல்ல, இதுபோன்ற ஏராளமான சந்தர்ப்பங்கள் கிரிக்கட் உலகில் தோன்றியிருக்கின்றது, எனினும் இப்போதுள்ள தொழில் நுட்ப முன்னேற்றத்துடன் இவை எவ்வளவு உடன்பாட்டுடன் இருக்கின்றன என்பதுவே இத்தகைய மாற்றங்களுக்கான காரணம் எனப்படுகின்றது, 100% தொழில் நுட்பப்பயன்பாடு இருக்கும் பட்சட்த்தில் விளையாட்டு விளையாட்டாக இருக்காது மாற்றமாக ஒரு தந்திர,மந்திர வித்தை என்ற நிலைக்குச்சென்றுவிடும்.
எனவே விளையாட்டில் நீதம் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதற்காக மட்டுமே தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவேண்டும்.

உதயா
08-01-2008, 05:29 AM
ஏற்கெனவே ஒரு திரி இது பற்றி விவாதிக்கப்பட்டுவருகிறதே... http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14035 அங்கேயே இதையும் பதித்திருக்கலாம்.

அட்மின் ஆட்கள் இதை அங்கே இணைக்கலாமே

நேசம்
08-01-2008, 06:05 AM
அறிஞர் அண்ணா தொடங்கிய திரியில் தலைப்புக்கும் ஐடியல் ஆரம்பித்த திரிக்கும் வித்தியாசம் இருக்கிறது.அதனால் இந்த தலைப்பை ஓட்டி இங்கு விவாதிக்கலாம் இல்லையா

அன்புரசிகன்
08-01-2008, 06:21 AM
அண்மைய ஆஸ்திரேலிய போட்டியில் கங்குலிக்கு நிகழ்ந்த கேவலம் மிக கொடுமையானது. காரணம் திராவிட் இன் ஆட்டமிழந்த தீர்ப்பு என்பது professional negligence எனலாம். காரணம் அது பக்கச்சார்பானது என கூறமுடியாது. ஆனால் கங்குலியின் ஆட்டமிழப்பு தீர்வு என்பது மிக மிக பக்கச்சார்பானது. பந்து பிடித்தவரிடம் நீ பந்தை பிடித்தாயா என்று கேட்டுவிட்டு கையை உயர்த்தினார் அந்த நடுவர். அந்தநேரம் நேரடிவர்ணணையில் இருந்த ஒரு அவுஸ்திரேலியரே இதை கூறினார். காரணம் அவர் பந்தை நிலத்தில் ஊன்றியது மிக தெளிவாக தெரிகிறது. அத்துடன் அந்த பந்து ஓய்வுக்கு வரமுன்னமே பந்தை நிலத்தில் ஊன்றியது (while action of taking catch) ஆட்டமிழந்ததாக கருதமுடியாது. இது பக்கச்சார்பான முடிவென்று அந்த நேரடிவர்ணணையாளரே குறிப்பிட்டிருந்தார். நடுவர் தானாக கொடுத்திருந்தாலும் பரவாயில்லை. எதிரணியிடம் கேட்டுவிட்ட அளித்த தீர்ப்பு நிச்சயம் பக்கச்சார்பானதே என்று அந்த வர்ணணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

துடுப்பாட்டவீரர் முறையீடு வந்தால் இவ்வகையான பக்கச்சார்புகளை தவிர்க்கலாம்.

IDEALEYE
08-01-2008, 11:34 AM
அன்புரசிகன் கூறியது போல துடுப்பாட்ட வீரர்கள் மட்டும் அல்ல, களத்தடுப்பு வீரர்கலும் முறையிடும் அமைப்பே நீதியானது, ஆனால் கிரிக்கட் ஏனைய விளையாட்டுகளை விடவும் விதிகளால் நிரம்பி வழியும் ஒரு விளையாட்டு ஒரு துடுப்பாட்ட வீரர் 10 முறைகளில் ஆட்டமிழக்க முடியும். இந்நிலையில் தொழில் நுட்பத்தின் உதவி இப்பத்து முறைமைகளையும் உறுதிசெய்யவே பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
பத்து முறைகளும் பின்வருமாறு

கட்ச் பிடித்தால்
பந்து நேராக விக்கட்டில் படுதல்
விக்கட்டிற்கு முன்னால் காலை வைத்து பந்து விக்கட்டில் படுவதற்கு இடையூறு செய்தல்
ஓட்டமொன்றைப்பெற முனைந்து ஆடமிழத்தல்
எல்லைக்கு முன்னால் வந்து நிற்கும் போது விக்கட் காப்பாளரால் ஸ்டம்ப் செய்யப்படுதல்
விக்கெட்டை காலல் தாக்குதல் கிட் விக்கட்
துடுப்பாட்ட வீரர் பந்தை கைகளால் பிடித்தல்
பந்தை இரண்டு முறை துடுப்பினால் அடித்தல்
களத்தடுப்புக்கு இடையூறு செய்தல்
ஒருவீரர் ஆட்டமிழந்து சென்றபின் மறுவீரர் ஆடுகளத்திற்குள் நுழைந்து துடுப்பாட்டத்திற்கு தயாராவதற்கு 3 நிமிடங்களுக்கு மேல் செல்லுமாயின் புதிதாக நுழையும் துடுப்பாட்டவீரர் ஆட்டமிழந்து விடுவார்


மேற்படி 10 முறைகளினை உறுதி செய்வதற்கு தொழில்நுட்ப உதவி அன்மைக்காலங்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் துடுப்பாட்ட வீரர்களோ அல்லது களத்தடுப்பு வீரர்களோ தமக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்பிற்கு ஆட்சேபம் தெரிவிக்கவோ, முறையிடவோ முடியாத நிலை இரூந்தது. ஆனால் இப்போது முறையிடும் புதிய நடைமுறை குறித்துப்பரீசீலிக்கப்படுகின்றது. அதற்கான காரணிகளுள் முதன்மையானது நடுவர்களிடையே காணப்படும் பாரபட்சம் மற்றும் வியாபார நோக்கம் எனலாம். அப்படி ஒரு முறையிடும் வழமை வரினும் அது எவ்வளவு வினைத்திறனுடன் கூடியதாக இருக்கப்போகின்றது என்பது கேள்விக்குறியே.

IDEALEYE
08-01-2008, 04:08 PM
சிட்னி போட்டியில் ஸ்டிவ் பக்னர் அளித்த முடிவுகள் சில இந்திய அணிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தன.
சிட்னி போட்டியில் ஸ்டிவ் பக்னர் அளித்த முடிவுகள் சில இந்திய அணிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தன.
உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் அறியப்பட்டவரும் மரியாதை பெற்றவருமான ஸ்டீவ் பக்னர் 120 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். ஆனாலும் சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் அளித்த சில முடிவுகளில் இருந்த தவறுகள் காரணமாக அவர் மீது பரந்துபட்ட விமர்சனங்கள் எழுந்த்துள்ளன. அவர் இந்தத் தொடரில் நடுவராக பணிபுரிவதிலிருந்து மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனாலும் இது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக் கூடும். சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிமுறைகளின் படி எந்த நாட்டின் கிரிக்கெட் அணிக்கும் நடுவர்களின் நியமனம் குறித்து ஆட்சேபனை எழுப்பும் உரிமையில்லை. ஆனால் இந்தியக் கிரிக்கெட் அணி ஒரு சாதாரண அணி அல்ல. கிரிக்கெட் ஆட்டத்தில் நிதி விவகாரங்களைப் பொறுத்த வரையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் நாடித்துடிப்பாகவே இந்தியா பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பெறப்படும் விளம்பரங்கள், தொலைக்காட்சி உரிமைகள் ஆகியவை மூலம் இந்தியாதான் சர்வதேச கிரிக்கெட் சபையின் நிதி ஆதாரங்களுக்கு பெருமளவு உதவி செய்கிறது.

இந்தியாவின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது அதிகாரம் மற்றும் வலிமையின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மீது கணிசமான அழுத்தத்தை கொடுத்து அதன் மூலம் ஐ சி சி யின் கட்டுப்பாட்டை தன்னிடம் வைத்துக் கொள்ள முனைகிறது என்கிற கவலை பெருகி வரும் நிலையில், தற்போது நடைபெறும் போட்டித் தொடரிலிருந்து ஸ்டீவ் பக்னரை நீக்கியதன் மூலம் அந்தக் கவலைகள் மேலும் அதிகரித்துள்ளது.

ஆனாலும், பெர்த்தில் நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய நடுவரை நியமித்ததுள்ளது, போட்டித் தொடர் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்கிற யதார்த்த ரீதியில் எடுக்கப்பட்ட முடிவுதான் என்றும், இந்திய் அழுத்தங்களினால் எடுக்கப்பட்டது அல்ல எனவும் சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை அதிகாரியான மால்கம் ஸ்பீட் தெரிவித்துள்ளார்.
நன்றி பீபீஸி

உதயா
08-01-2008, 04:21 PM
இதை விளையாட்டுப்பகுதியில் பதிக்கலாம், அதில்லாமல் இந்த பற்றி ஒரு விவாதம் நடந்துகொண்டுக்கிறது, அங்கேயே பதிக்கலாமே? ஒவ்வொரு பதிப்புக்கும் ஒரு திரி தேவையா?

உதயா
08-01-2008, 04:25 PM
அறிஞர் அண்ணா தொடங்கிய திரியில் தலைப்புக்கும் ஐடியல் ஆரம்பித்த திரிக்கும் வித்தியாசம் இருக்கிறது.அதனால் இந்த தலைப்பை ஓட்டி இங்கு விவாதிக்கலாம் இல்லையா
பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பதிப்பு, அறிஞரால் துவங்கப்பட்ட திரியோடு ஒத்துப்போககூடியதாக எனக்கு படுக்கிறது நண்பரே...

அன்மின் நண்பர்கள் யாரும் பதில் தரவில்லையே? ஏன்?

பி.கு. நண்பர் IDEAL அவர்களால் மீண்டும் ஒரு திரி இதுபோல் துவங்கப்பட்டுள்ளது.

aren
08-01-2008, 04:35 PM
சில வருடங்களாகவே ஸ்டீவ் பக்னரின் முடிவுகள் பல சர்ச்சைக்குள்ளாகிவுள்ளன. அவர் எப்பொழுது ஓய்வு பெற்றிருக்கவேண்டும். ஏன் இதுவரை ஓய்வு பெறவில்லை என்று தெரியவில்லை. இனிமேலாவது அவர் அந்த முடிவுக்கு வரவேண்டும் என்பது என்னுடைய கருத்து.

aren
08-01-2008, 04:39 PM
நான் திராவிட் மற்றும் கங்குலியின் விக்கெட் இழப்பை தொலைகாட்சியில் பார்த்து ஸ்தம்பித்துவிட்டேன். இப்படியும் நடக்குமா என்பது சந்தேகமே. மகா மட்டமான நடுவர்களாக அவர்கள் இருவரும் செயல்பட்டார்கள்.

நான் அவுட் என்றால் தானாகவே போய்விடுவேன் என்று ஜம்பம் அடிக்கும் கில்கிரிஸ்டும் இதற்கு உடன்பாடு. எல்லாம் வெறும் பித்தலாட்டமாக இருக்கிறது என்பதே உண்மை.

IDEALEYE
08-01-2008, 04:39 PM
இதை ஒரு செய்தியாகத்தான் பதித்தேன், விவாதக்குறிப்பாக அல்ல
நண்பர்களே.
அன்புடன் ஐஐ

அமரன்
08-01-2008, 05:32 PM
வாசகர்கள் வசதிக்காக இரு திரிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

திரிகளை துவங்குகையில் விடயத்தின் பல்லிட இருப்பை கவனத்தில்கொள்ளுங்கள் நண்பரே!

IDEALEYE
10-01-2008, 04:30 AM
அன்புடன் அமரன் அண்ணா
இரண்டு திரிகளையும் வாசகர் நலன்கருதி இணைத்துள்ளீர்கள், ஆனால் இரண்டினதும் உள்ளடக்கம், விவாதப்பொருள் வித்தியாசமாக உள்ளதே? செய்திச்சோலை என்று வரும்போது அங்கு வெறுமனே ஒரு செய்தி மட்டும்தான் பரிமாறப்படுகின்றது. அதிலும் விவாதமும் பதில்களூம் தேவையில்லைதானே....
செய்திச்சோலை என்பதில் எனக்குள்ள பதிவு இதுதான். இப்பொழுது உங்களின் கூற்றுப்படி பார்க்கின்றபோது எல்லாமே வித்தியாசமாக இருக்கின்றது...

அன்புரசிகன்
10-01-2008, 04:46 AM
நேற்று ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அதாவது கும்ளேயிற்கும் பொன்டிங் இற்கும் இடையில் சிறு ஒப்பந்தம். அதாவது ஒருவர் பிடி மூலம் ஆட்டமிழக்கப்பட்டால் அந்த பிடியின் நம்பகத்தன்மையை களத்தடுப்பில் இருக்கும் வீரர் (பிடிக்கு சொந்தக்காரர்) இன் முடிவு பெறலாம் என்பது. ஆனால் இந்த ஒப்பந்தம் ஒரு வேடிக்கையாகவும் உள்ளது. காரணம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 3வது நடுவர் உள்ளபோது ஏன் இந்த ஒப்பந்தம் என்று. இந்த செய்தி உண்மையாயின் அவுஸ்திரேலிய வீரர்களுடன் ஒப்பந்தம் வைத்த இந்தியவீரர்கள் அதி(???!!!)புத்திசாலிகள் தான். ஆனால் இந்த ஒப்பந்த விடைய செய்தியின் நம்பகம் பற்றி தெரியவில்லை.

ஒருநாள் போட்டியில் விளையாடும் நாடுகளில் ஒரு நடுவர் அந்த நாடுகளில் இருந்து வரலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அந்த நாடுகளில் இருந்து நடுவர்கள் வரமுடியாது. தவிர நடுவர்களின் குற்றச்சாட்டுக்கள் தொழில்நுட்ப உதவியுடன் ஆட்டத்தில் பங்குகொள்ளும் ஒரு அணி நிரூபித்தால் அந்த அணிக்கு அந்த நடுவரை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யும் அதிகாரம் உண்டு. அதுவரை ஆட்டத்தை நிறுத்திவைக்கும் அதிகாரம் அந்த நாட்டு துடுப்பாட்டவாரியத்திற்கும் உண்டு.