PDA

View Full Version : வீதியில் ஒரு சேதி!ஷீ-நிசி
07-01-2008, 01:57 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/VeethiyiloruSethi1.jpg

அமரன்
07-01-2008, 02:00 PM
அய்யோ.. என்ன ஒரு கற்பனை..:icon_b::icon_b:
இரைச்சல்களுக்கு மத்தியில் சுகத்தூக்க பா(ர்)ட்டிகளை பார்த்து வியப்பில் ஆழ்துள்ளேன். அவர்களை இவ்வகை கனவுகளும் தாலாட்டுகின்றன என்பதை அறிந்துகொண்டேன்...

sarcharan
07-01-2008, 02:01 PM
கவிதையை ரசிக்க முடியவில்லை அன்பரே..
பெற்ற வயிறு இன்று .. அப்பப்பா...

வீதியில் பிள்ளை விழுந்தால் துடித்தது அவள் உள்ளம் - அன்று
வீதியில் அவளே வீழ்ந்து கிடக்கின்றாள் கேட்பாரற்று - இன்று.

ஷீ-நிசி
07-01-2008, 02:05 PM
நன்றி அமரன்

உண்மைதான்.. சரண் அவர்களே!

மனோஜ்
07-01-2008, 02:28 PM
பிறக்கும் பொழுது தாயின் மனம்
தொட்டிலில் கிடக்கும் பொழுது
ஆட்டிடும் குணம் இன்று
இவள் படுக்கும் பொழுது
எங்கு பொனது இவளது
இரத்தம்

அருமை வரிகள் ஷீ

ஷீ-நிசி
07-01-2008, 02:35 PM
நன்றி மனோஜ்!

ஆர்.ஈஸ்வரன்
08-01-2008, 08:13 AM
கவிதையும், புகைப்படமும் சிறப்பாக இருக்கிறது.

ஷீ-நிசி
09-01-2008, 01:13 AM
நன்றி ஈஸ்வரன்

யவனிகா
09-01-2008, 04:38 AM
நெகிழவைக்கும் கவிதை...வாழ்த்துக்கள் தோழரே.

தாமரை
09-01-2008, 07:48 AM
குமாரபாளையம்.. பவானி அருகில் இருக்கும் ஊர்..

இந்த ஊர் பேருந்து நிலையத்தில் அடிக்கடிக் காணக்கிடைக்கும் வேதனை இது..

ஆதரவற்ற முதியோருக்கு அங்கிருக்கும் டீக்கடைகளே தஞ்சம்..

ஆனால்..ஆனால்

அப்போதும் பிள்ளைகள் பெருமை பேசும் அந்தச் சிலதருணங்கள்..

தாய்மனது!

ஷீ-நிசி
09-01-2008, 12:19 PM
நன்றி யவனிகா.....

நன்றி தாமரை அவர்களே! :)

சிவா.ஜி
09-01-2008, 12:21 PM
ஷீ-நிசியின் இந்த மனதை நெகிழ்த்தும் படமும்.அதற்கான அந்த கவிதை வரிகளும்.....வலிக்கிறது.
இந்த படத்தைப் பார்த்ததும் இதற்குமுன் நான் மன்றத்தில் பதித்த ஒரு கவிதை பொருத்தமாகத் தோன்றியதால் அதை இந்த பின்னூட்டத்தில் கொடுக்கிறேன்(என்னால் லின்க் கொடுக்க இயலாததால் முழுகவிதையும்...)

எனக்கு முன்ன
சாமிக்கிட்ட போன எஞ்சாமி,
ஒன்னோட நானும் போயிருந்தா
மண்ணோட போயிருக்கும் இந்த பொறப்பு
நாய்க்கும் வேணா இப்ப
நான் பொழைக்கும் இந்த பொழப்பு!
பிஞ்சிப்போனாலும் ஒதவுமேன்னு
உள்ள வெச்சுக்கிட்டான் பாயை
ஓஞ்சி போன சென்மமின்னு
ஒதுக்கித்தள்ளிட்டான் தாயை!
மவனுக்கு பால் குடுத்த
மாரும் காஞ்சிப்போச்சி,
மருமவ மகராசியால
வயிறும் வறண்டு போச்சி!
பார்வை கொறைஞ்சிப் போச்சி,
கேள்வி மந்தமாச்சி,
நாக்கு ருசி செத்து போச்சி,
பாழாப்போன பசி மட்டும் போவலியே!
நாள பின்ன நான் செத்தா
வாக்கரிசி வெப்பீங்களே,
செத்தவளுக்கு போடறதுல கொஞ்சம் இந்த
பெத்தவளுக்கும் போடுய்யா
பசியால செத்தான்னு பேரு வேணா
சாபம் குடுத்து செத்தான்னு பேச்சு வேணா!

இதயம்
09-01-2008, 12:32 PM
என்ன எழுத பின்னூட்டத்தில்..? புகைப்படம் பார்த்து நொந்து போன மனதை என் பின்னூட்டம் சரி செய்துவிடுமா தெரியவில்லை. ஒரு தாயை தெருவில் தவிக்க விடும் நாயை என்ன தண்டனை கொடுத்து தண்டிப்பது..? (நாயை கேவலப்படுத்தியதற்கு வருந்துகிறேன்). 10 மாதம் வயிற்றில் சுமந்து, கடும் துன்பம் கடந்து பெற்று, வளர்த்த வேளையில் இந்த பிள்ளை இப்படி ஒரு நிலைக்கு தன்னை ஆளாக்கும் என்று என்று இந்த அன்பு மனம் நினைத்திருக்குமா..? பெற்ற தாயை வைத்து பராமரிக்க தெரியாத அவனுக்கு இந்த உலகில் வாழ என்ன அருகதை இருக்கிறது..?!! முதுமை என்பது அனைவருக்கும் ஒரு நாள் வந்தே தீரும். அப்போது தெரியும் அதன் வலியும், வேதனையும் நம் ஒவ்வொருவருக்கும்..!

இந்த படம் பார்க்கும் போதெல்லாம் என் இரத்த அழுத்தம் எகிறுவதை உணர்ந்து இந்த பக்கம் வராமலேயே இருந்தேன். ஆனால், இன்று என்னை கட்டுப்படுத்த முடியாமல் கலங்கி எழுதுகிறேன்.! இந்த தாயை தெருவில் விட்ட அந்த பாவி நாசமாய் போகட்டும்..!!

நல்ல கவிதை என்று பாராட்ட என்னால் முடியவில்லை ஷீ..! மன்னிக்கவும்..!!

ஷீ-நிசி
09-01-2008, 12:54 PM
நன்றி சிவா... உங்கள் கவிதையில் அந்த தாயின் சோகம் கண்முன்னே நிழலாடுகிறது..

உண்மைதான் இதயம்.. இந்த படத்தை பார்க்கிற அனைவரின் ரத்தமும் ஒருமுறை எகிறத்தான் செய்கிறது..

என்ன செய்ய... குறைந்தபட்சம் முதியோர் இல்லத்திலாகிலும் சேர்த்திருந்திருக்கலாம்...

நன்றி இதயம்

பூமகள்
09-01-2008, 02:28 PM
ரொம்ப டச்சிங் கவிதை ஷீ..!!
மனசின் ஆழம் வரை செல்லும் கவிதை வடிப்பதில் நீங்கள் வல்லவர்..!
ஆனா... இப்படி ஒரு கனத்தை மனத்தில் ஏற்படுத்திட்டீங்களே...!!

மூதாட்டிகளை கையேந்தி பார்க்கையில் என் அம்மாயி நினைவு வந்து அழும் மனம்...!!

இங்கே இந்தப் பாட்டியினைக் காணுகையிலும் அழுகையா வருது..!!

சமூக பிரச்சனையை, நாம் சந்திக்கும் நிதர்சனத்தை சில வரிகளில் கவிதையாக்கி கலங்க வைத்து சிந்திக்க வைப்பது அவ்வளவு எளிதன்று...!!

அந்த வன்மை உங்களிடம் இருப்பது பெருமை எனக்கு..!!

சிந்தையைத் தட்டிவிட்ட கவிதை..!
சிந்திப்பாரா பெற்றவளை
பிரித்த பிள்ளைகள்???

வாழ்த்துகள் ஷீ...!

ஷீ-நிசி
10-01-2008, 01:32 AM
உணர்வுகள் மேலோங்கிய பின்னூட்டம்...

நன்றி பூமகள்!

சாலைஜெயராமன்
10-01-2008, 05:23 PM
உள்ளத்தின் சோகம் உணர்வுகளில் கோபம்
உறக்கத்தால் உண்மையை உணர்த்திட்டாள்
உண்மைகள் மேலும் உறங்கட்டும்
ஏனெனில் உண்மைகள் என்றும் கசக்கும்

99 சதவிகத இந்திய முதியோர்களின் அவல னிலை இதுதான். வீதிக்கு வந்துவிட்டாள் இந்த மூதாட்டி. கொடுத்து வைத்தவள்.
ஆனால் விதியை நொந்துகொண்டு, பிள்ளைகள் மருமகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இலக்காகி நிற்கும் எத்தனையோ மூத்தகுடிமக்களின் அவல நிலை நமது பாரம்பரிய கலாச்சாரத்திற்கு ஒரு அவக்கேடு ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகைஇல்லை.
என் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.


என் வங்கிப்பணியில் நான் மாதம் முதல் வாரத்தில் கண்டும் கேட்டும் பழகிப்போன சோகநிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

வழக்கமாக மாதத்தின் கடைசி நாளில் ஒவ்வொரு ஓய்வூதிய பெருமகக்ளின் கணக்குகளில் ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படும்,
முதல் ஒருவாரங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். காலை 10 மணியிலிருந்து 1 மணியளவில் ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டுவிடும். பிற்பகலில் அனைத்துக் கூட்டங்களையும் சமாளித்து அனுப்பிவிடுவோம். மதியம் அவ்வளவாகக் கூட்டம் இருக்காது.

ஆனால் மாலைவேளைகளிலும் பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டாலும், காலை வேளையில்தான் முண்டியடித்து
நிற்கக்கூட முடியாமல் தடுமாறி வரிசையில் நின்றுதான் கஷ்டப்படுவார்கள். எவ்வளவு கூறினாலும், கஷ்டப்பட்டாவது
காலை 12 மணிக்குள் பணத்தைப் பெற்றுக்கொண்டால்தான் திருப்தி அடைவார்கள். மாலைப் பணிக்காலங்களில் கூட்டமில்லாமல் இருக்கும் நேரத்தில் வந்து வாங்கிச் செல்லலாமே காலை வேளைக்
கூட்டத்தை தவிர்த்துவிட்டால் எளிதாக வாங்கிக் கொள்ளலாம் என்று எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.
ஆரம்ப காலங்களில் இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.

இதை ஒருமுறை ஒரு பெரியவரிடம் கேட்டே விட்டேன். ஏன் ஐயா இவ்வளவு கூட்டத்தைத் தவிர்த்து மதியம் 2 மணிக்குமேல் வந்தால்
சுலபமாக வரிசையிலே நிற்காமல் பணம் பெற்றுச் செல்லலாமே. ஏன் இவ்வாறு வரிசையில் இருந்து கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்டதுதான் தாமதம் கண் கலங்கி விட்டார். எனக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. நாம் ஏதும் தவறுதலாக
அவர் மனம் புண்படும்படி ஏதாவது கூறிவிட்டோமோ என்று கலங்கி மன்னிப்பைக் கேட்டுக் கொண்டேன்.

ஆனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிறிது நேரத்தில் அவர் கூறிய பதில் என்னை மிகவும் விசனப்படவைத்தது

பெரியவார் கூறுகிறார்.

"தம்பி இங்கு மாலை வேளையில் கூட்டமில்லாமல் இருப்பது எனக்கு நன்கு தெரியும். மேலும் உங்களைப் போன்றோர்கள் என்னிடம் மிகவும் அன்புடன் நடந்து கொண்டு உடனடியாக பணத்தைக் கொடுத்துவிடுவீர்கள் என்பதும் தெரியும். ஆனாலும் என்னால்
மாலை வேளையில் வர முடியாது"

என்று கூறிவிட்டு மீண்டும் அதிகமாக வருத்தமாகிவிட்டார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

நான் மெல்ல, ஐயா காரணத்தைக் கூறுங்கள் உங்களுக்கு உதவியாக நான் எதுவும் செய்கிறேன். இங்கு எங்கள் அலுவலகப் பணியாளர்கள் மாலையில் உங்களுக்கு ஏதும் கஷ்டம் தருகிறார்களா? என்னிடம் கூறுங்கள். நான் தங்களுக்கு ஆவன செய்கிறேன், வருத்தப்படாதீர்கள் என்று எவ்வளவோ கூறியும் அவர் கவலையை என்னால் மாற்ற இயலவி்ல்லை.

பின் மவுனம் கலைந்து அவர் கூறிய பதில் என்னைமட்டுமல்ல. இதைக் காணும் அனைவரையும் நிச்சியம் சோகத்தில் ஆழ்த்தும்.

"தம்பி உங்களிடம் உண்மையைக் கூறுகிறேன். என்னால் மாதத்தில் இந்த ஒருநாள் மட்டும் தான் வெளியே வர இயலும். என் மகனும்
மருமகளும் மற்ற நேரங்களில் என்னை வெளியே வி்டுவதில்லை. வீட்டு விஷயத்தை வெளியில் சொல்கிறேன் என்று என்னை ஒரு
அறையிலேயே வைத்திருக்கிறார்கள். மல ஜலம் கழிப்பதும் அதே அறையில்தான். நான் சுதந்திரமாக வெளியே வருவது இன்று ஒரு நாள் மட்டும்தான். காலையிலேயே நான் மறந்தாலும் என் மருமகள் என்னை வங்கிக்குச் செல்ல விரட்டியடிப்பாள். நான் சிறிது தாமதமாகச் செல்கிறேன் என்று சொன்னாலும் கேட்கமாட்டாள். அதுவும் 9 மணிக்குள் நான் வங்கிக்குச் சென்றுவிடவேண்டும்.

நான் திரும்பி பணத்தை எடுத்துச் செல்வதுதான் தாமதம். என் ஓய்வூதியத் தொகை அத்தனையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டு என்னை அறைக்குச் செல்ல ஆணையிடுவாள். என் செலவுக்கென்று ஒரு ரூபாய் வேண்டுமென்றாலும் அவளிடம் கணக்குச் சொல்லிவிட்டுத்தான் பெற்றுக் கொள்ள முடியும்.

இத்தனைக்கும் என் பையன் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான். என் பணம் அவர்களுக்கு ஒன்றும் பெரிதானது இல்லை. இருப்பினும் என்னை ஒரு அடிமையைப் போல் நடத்துகின்றனர். என் கவலையைக் கூறிக் கொள்ளக்கூட ஒரு நாதியும் இல்லை. என் பையன் மனைவி பேச்சுக்கு மறு பேச்சு பேச பயப்படும் ஒரு பிள்ளை. என் மனைவியும் உடல் நலமில்லாமல் இருக்கிறாள். எனக்குப் பிடித்த உணவுகூட நான் சாப்பிட முடியாது. இதுதான் என் னிலை என்று கூறினார்.

இத்தனைக்கும் அரசுப் பணியில் ஒரு உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் அந்த முதியவர்.

கிட்டத்தட்ட ஓய்வுவூதியம் பெறும் அனைத்து முதியோர்களின் னிலை இதுதான். அந்த மூதாட்டி கூட சுதந்திரமாக பிச்சையெடுத்து
காலத்தை தள்ளும் பாக்கியம் பெற்றிருக்கிறாள். முதுமையி்லும் தன்னால் இயன்ற பொருளுதவி செய்தாலும், தன் குடும்பத்தாராலேயே சிறைவைக்கப்பட்டு, நோயிலும், வறுமையிலும் ஊமையாய் வாழும் எத்தனையோ பெரியவர்களின் அவல நிலையை சட்டம் கொண்டு மாற்றும் அளவிற்கு நாம் இன்று முன்னேறியிருக்கிறோம் என்பதை நினைக்கையில் மெளனமும், கவலையும்தான் விடையாக உள்ளது.

நல்ல உயிரோட்டாமான எதார்த்தமான புகைப்படக் கவிதை பாராட்டுக்குரியது. பாராட்டுக்கள்.

ஷீ-நிசி
11-01-2008, 03:29 AM
மிகவும் மனதை பாரமாக்கிவிட்டது நீங்கள் பகிர்ந்துகொண்ட இந்த சம்பவம்.

என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை..

நன்றி நண்பரே!

அறிஞர்
11-01-2008, 03:59 AM
உயிரோட்டனமான படம் ஒரு பக்கம்...
அதற்கு மெருகூட்டும் ஷீ-நிசி வரிகள்...
மனதில் பாரத்தை உருவாக்கும் கருத்துக்கள்.....

ஒரு கவிஞனுக்கு இதற்கு மேல் வேறென்ன வேண்டும்...

அருமை ஷீ-நிசி...

ஷீ-நிசி
11-01-2008, 08:08 AM
மிக்க நன்றி அறிஞரே!

ஆதவா
12-01-2008, 06:53 PM
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என்ற பெயரில் வெளிவந்த எத்தனையோ கவிதைகள் படித்ததுண்டு... ஆனால் இங்கே சற்று வித்தியாசமாக... இந்தமாதிரி காட்சிகள் அடிக்கடி கண்டு கண்கள் அலுத்து, என்ன செய்யமுடியும் என்னால் என்ற நிலைக்கு வந்த பின்னரும்....

உண்மையைச் சொல்லுகிறேன். என்னால் வேடமிடமுடியாது. அவர்களைக் காணும்போது நோகமட்டுமே என்னால் முடியும்... மனம் வெந்து உழலுவதில்லை.. காரணம் தெரியவில்லை.

கவிதையைப் பொறுத்தவரையிலும் அந்த மூதாட்டியின் தற்காலிகத் திருப்தியைக் கலைப்பதைத் தடுக்கும் கூக்குரலாகத் தென்படுகிறது... அவள் எப்படிப் பட்டவள், கைவிட்டபிறகு வரும் நிலை அய்யோ அம்மா என்று எதையும் உணர்ச்சியால் பிழியாமல் வேறு ஒரு கோணம்...

இவ்வகைப் பூக்கள் உறங்காமல் இருக்கவேண்டும் என்பது நம் விருப்பம்... அதற்குமேலும் ஏதும் செய்வதற்கில்லை...

ஷீ-நிசி
13-01-2008, 02:42 AM
நன்றி ஆதவா.......


நீண்........................ட இடைவெளிக்கு பின் ஆதவாவின் விமர்சனம்...

இளசு
12-02-2008, 10:18 PM
ஒரு புகைப்படம்..

ஷீயின் தற்குறிப்பேற்ற .. ஆனால் தற்கால நிகழ்வுக்கேற்ற கவிதை!

சமூக அவலத்தைக் கூட நளினமாய்ச் சொல்வது ஷீயின் தனிச்சொத்து!
(சில ஆசிரியர்கள் குரல்/கரம் உயர்த்தாமல் கண்டிப்பார்களே அப்படி..)

சிவாவின் மறுபதிப்பும் சாலையாரின் நினைவுப்பகிர்வும் இன்னும் கனம் கூட்டின..

பலமுறைச் சொல்லியிருக்கிறேன் -
பாலர் பணி
வன்கொடுமை
பெண் சுரண்டல்
ஊனமுற்றோர் உதாசீனம்
முதியோர் ஒதுக்கல் --

இவை மாறாமல் மென்பொருள், பங்குச்சந்தைகள் மட்டுமே
இந்தியாவை வல்லரசாக்க முடியாது..

அடிவாரம் உளுத்துக்கொண்டிருக்க
கோபுரத்தை உயர்த்தி வண்ணம் பூசினால் - நிலைக்காது!

சாலைஜெயராமன்
13-02-2008, 01:46 PM
[QUOTE=இளசு;325165]
இவை மாறாமல் மென்பொருள், பங்குச்சந்தைகள் மட்டுமே
இந்தியாவை வல்லரசாக்க முடியாது..

அடிவாரம் உளுத்துக்கொண்டிருக்க
கோபுரத்தை உயர்த்தி வண்ணம் பூசினால் - நிலைக்காது!

என்ன ஆணித்தரமான சிந்தனை.

ஆத்தாமேனி காத்தாடுது மகன் வஸ்தர தானம் பண்ணினானாம்.

அந்தக் கதைதான் மென் பொருள், பங்குச் சந்தைப் புள்ளி விவரத்தால் இந்தியாவை வல்லரசாக்க முயலும் பேதமைக் கூட்டம். நமது இறையாண்மை என்பதே நம் மூதாதையர் கட்டிக்காத்த கலாச்சாரப் பொக்கிஷங்கள்தானே. அதைக் காற்றில் பறக்க விட்டு என்ன வேண்டியிருக்கு வல்லராக்கும் முயற்சி.

அனுராகவன்
17-02-2008, 01:03 AM
ஆகா ..
என்ன நல்ல சிந்தனை
ம்ம் மிக்க நன்றி ஷீ!!

ஓவியன்
28-03-2008, 12:22 PM
அன்பான ஷீ......!!

இந்தத் திரியினை நான் பார்த்தவேளையில் என்னால் உடனடியாக பின்னூட்டமிடமுடியவில்லை. அது நம் மன்றத்தின் முதலாவது மின்னிதழ் வேலைகளில் மூழ்கியிருந்த நேரம், பார்த்த வேளையிலிருந்து மனதினைத் தைத்த படமும் வரிகளும் உள்ளத்தினை சம்மட்டி அடிகளாக நொருக்கிக் கொண்டிருந்தன...

அந்த சம்மட்டி அடிகள் இன்னும் பலரையும் தாக்கட்டுமென நம் மன்ற மின்னிதழிலும் இந்த படக் கவிதையை இணைத்தோம், ஆனால் அந்த அடியிலும் பலத்த அடியாக சாலை ஜெயராமன் ஐயாவின் பின்னூட்டம் நெஞ்சத்தினை அறைகிறது....

தன் விஞ்ஞான அறிவினால் பிரபஞ்சத்தை வெற்றி பெற்று முன்னேற்றப் பாதையில் முன்னேறும் மனிதன் இத்தகைய சம்பவங்களால் பல அடிகள் பின்னோக்கி விழுந்து கொண்டிருக்கின்றான் - வேறென்ன நான் சொல்ல....

மன்மதன்
28-03-2008, 02:39 PM
படமும் கவிதையும், பின்னூட்டங்களும் மனதை கலங்கடித்து விட்டது..

சாலைஜெயராமன்
28-03-2008, 04:46 PM
அன்பு மன்ற மணிகளே

என் அனுபவ நிகிழ்ச்சியில் குறிப்பிட்டிருந்த அந்தப் பெரியவர் சென்ற மாத பென்ஷன் பணம் வாங்க வரவில்லை, எனக்கு ஒரே ஆச்சரியம், எப்படியும் 9,30 மணிக்கு ஆஜராகிவிடுவாரே என்ன ஆச்சு என்று பார்க்கையில் மாலை 4 மணி அளவில் ஊரே இரண்டு படும்படியான சவ ஊர்வலம். வாண வேடிக்கை, ஆட்டம் பாட்டம் முன்னாலே அந்த முதியவரின் பையன்.

ஏக தடபுடலாகச் செலவு செய்து ஈமக்கிரியை பண்ணிய பெருமையை மகனும் மருமகளும் உறவுகளால் மெச்சப்பட்டு புளகாங்கிதம் அடைந்திருந்தார்கள்.

பெரியவரின் ஆத்மா நிஜமாகவே சாந்தி அடைந்திருக்குமா.

என் இரண்டு சொட்டு கண்ணீரை அவருக்கு அஞ்சலியாக்கினேன். இனி விடுதலைதான் அவருக்கு. மாதத்தில் இனிமேல் முதல்நாள் நான் அவரைக் காண இயலாதே.

நெஞ்சம் கனத்தது

ஓவியன்
29-03-2008, 02:15 AM
அன்பான ஜெயராமன் ஐயா..!!

அந்தப் பெரியவின் ஆன்மா உங்களது பலனை எதிர்பாராத இரண்டு சொட்டுக் கண்ணீரில் நிச்சயமாக சாந்தியடைந்திருக்கும்....

நிச்சயமாக அந்த உயிர் விடுதலையடைந்தே விட்டது...!!

ஜெயாஸ்தா
29-03-2008, 02:55 AM
ஷி நிசி நெஞ்சை நெகழ வைத்த படம்... கண்களை கலங்க வைத்த கவிதை...! தாய்க்கு ஈடாக அன்பு காட்ட இந்த உலகில் எவருமிலர். அந்த தாயையே இப்படி நடுரோட்டில் விட்ட அந்த ஜென்மங்களை என்ன சொல்வது? தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்பது இறைதூதர் வாக்கு. இதை உணர்ந்த உள்ளங்களே மனிதர்கள்.

சிவா அண்ணாவின் பின்னூட்டக்கவிதை. இதற்கு முன்னால் எப்படியோ இந்த கவிதையை படிக்காமல் விட்டுவிட்டேன் என நினைக்கிறேன். ஒரு ஆதரவற்ற தாயின் புலம்பல்களை வேதனை கவிதையாய் வடித்துள்ளார். செத்த பின் போடும் வாய்க்கரிசியை இப்போது உணவாய் கேட்கும் அவலம். பண்பாடு மிக்க பாரதம் என்பது சொல்வதெல்லாம் பொய்யா?

சாலையண்ணாவின் பின்னூட்ட சம்பவங்களும் மனதை கனக்க வைத்தது.

kavitha
29-03-2008, 06:28 AM
என் பையன் மனைவி பேச்சுக்கு மறு பேச்சு பேச பயப்படும் ஒரு பிள்ளை.

இதே பிள்ளை ஒரு காலத்தில் அப்பா பேச்சுக்கு பயந்திருந்த பிள்ளை தானே. பெற்றவயிறுக்கு சோறு போடாத பிள்ளைக்கு அவளைக்காரணம் காட்டுதலை விட, அவளை இரண்டு காட்டு காட்டியிருக்கலாம்.
இப்படி விட எப்படி மனம் வருகிறது?

படமும்- கவிதையும், தொடர்ந்த சர்சரண், இளசு அண்ணா, சாலைஜெயராமன் வரிகள் அருமை.

நன்றி ஷீ.

ஷீ-நிசி
11-02-2009, 01:40 AM
மீண்டும் என் நன்றிகள் பல உறவுகளே!