PDA

View Full Version : கவலை



ஆதி
07-01-2008, 11:20 AM
எவர் கையிலும்
சிக்காது
என்றாலும்
அலைகள் பற்றிய
கவலைதான் எனக்கு..

-ஆதி

யவனிகா
07-01-2008, 11:29 AM
உன் கற்பனையில் சிக்கி
என்ன பாடு படப் போகிறதோ...
அந்தக் கவலையும்
சேர்ந்து விட்டது
இப்போது எனக்கு....

ஆதி
07-01-2008, 11:33 AM
உன் கற்பனையில் சிக்கி
என்ன பாடு படப் போகிறதோ...
அந்தக் கவலையும்
சேர்ந்து விட்டது
இப்போது எனக்கு....

:), இது ஒரு ஹைகூ பானிக் கவிதை அக்கா..

அலைகள் யாரிடமும் சிக்காது, ஆனா சுனாமில நாம சிக்கீருவமோ னு தான் எனக்கு கவலை.. அதைத் தான் சொல்ல முயன்றேன்..

தம்பி
07-01-2008, 11:34 AM
அலைகள் ஆடும்போது
நனைந்து விடுகின்றது
(காற்)சட்டை..

அலை நனைகிறது
இத்தமிழ் சட்டை பார்த்து

சாரணங்களை
சாதா ரணமாக்கி
சாதாரணமாக்கும்
காலம்
கனியவில்லையோ

சிவா.ஜி
07-01-2008, 11:40 AM
சிக்காத அலைகளுக்குள்ளேயே சிக்கிக்கொள்வோமோ என்ற கவலை.
ஆழிப் பேரலை மட்டுமா சிக்க வைக்கும்....அன்றாடம் மனதில் ஆடும் ஆயிரம் அலைகளில் ஏதேனும் ஒன்றுகூட சிக்கவைத்து சீரழித்துவிடும்.
அலை பாயும் மனது ஆபத்தானது.
சின்ன கவிதை சிந்திக்க வைத்தது. வாழ்த்துகள் ஆதி

ஆர்.ஈஸ்வரன்
08-01-2008, 09:59 AM
காற்றைப் பிடிக்க
கைகளை மூடினேன்
அடடா காற்றுக்குள் கை

அமுத பாரதியின் ஹைக்கூ ஞாபகம் வருகிறது.

அமரன்
11-01-2008, 07:54 AM
ஈழத்தில் மிகையொலியலை.
இளமையில் காதலலை.
முதுமையில் பாசவலை.

இப்படி எல்லா அலைகளும் அலைகளிப்பது போதாதென்று இது வேறு..
கவலையை கலையாகச் சொன்ன களையான கவிதை ஆதி.