PDA

View Full Version : இளமையுடன் இருக்க ரகசியம் தினமும் 50 கிராம் &#



mgandhi
06-01-2008, 04:09 PM
இளமையுடன் இருக்க ரகசியம் தினமும் 50 கிராம் வேர்க்கடலை

நியூயார்க்: தினமும் ஐம்பது கிராம் வேகவைத்த வேர்க் கடலைச் சாப்பிட்டால், இளமையாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நியூயார்க், எல்பாசா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உணவுப் பழக்கம் தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தினர். அதில் பல்வேறு உணவுப் பொருட்களில் உள்ள பயன்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டது. வேகவைத்த வேர்க்கடலையில், விஷக்கிருமிகளை கொல்லும் ஆற்றல் அதிகமாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர். அன்றாடம் சாப்பிடும் உணவு மற்றும் காய்கறிகள் மூலமாகவும் உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்படுகின்றன. இது போன்ற விஷக்கிருமிகளோடு போராடும் சக்தி வேர்க்கடலையில் அதிகமாக உள்ளது. தினமும் 50 கிராம் வேகவைத்த வேர்க்கடலையை காலையில் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன் உடல் இளமையோடும் இருக்கும் என்கிறது ஆய்வு.
நன்றி தினமலர்

பூமகள்
06-01-2008, 04:33 PM
மிக நல்ல தகவல் காந்தி அண்ணா.
எல்லோருக்கும் பயனுள்ள மற்றும் அவசியம் தேவையான தகவல்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா. :)

mgandhi
06-01-2008, 04:45 PM
மிக நல்ல தகவல் காந்தி அண்ணா.
எல்லோருக்கும் பயனுள்ள மற்றும் அவசியம் தேவையான தகவல்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா. :)


நன்றி பூமகள்

மாதவர்
06-01-2008, 06:08 PM
வேகவைத்த வேர்க்கடலையை காலையில்சாப்பிட வேண்டும்.பொதுவாக வறுத்த வேர்க்கடலை மட்டுமே நம்மில் பலர் உண்போம். இனி மாற்றி கொள்வோம்!!

இளந்தமிழ்ச்செல்வன்
06-01-2008, 07:58 PM
காந்தியின் உணவு. உடன் ஆட்டுப்பாலும் உண்டு.

இதயம்
07-01-2008, 03:16 AM
நீங்கள் என்ன தான் உணவு முறைகளை கடைபிடித்தாலும் மனதை இளமையாக வைத்துக்கொள்ளாத பட்சத்தில் அது உடலையும் நிச்சயம் பாதிக்கும். எனவே கவலைகளை மறந்து எப்போதும் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும் மனதை வைத்துக்கொண்டால் உடலும் இளமையாக தெரியும்..!!

lolluvathiyar
07-01-2008, 06:59 AM
ஹி ஹி நான் தினமும் கடலை சாப்பிடுகிறேனே, அதனால நான் என்று பதினாறு அப்படினு என் மனைவி சொல்லுவாளே.

இதயம்
07-01-2008, 07:14 AM
ஹி ஹி நான் தினமும் கடலை சாப்பிடுகிறேனே, அதனால நான் என்று பதினாறு அப்படினு என் மனைவி சொல்லுவாளே.

ஒருவேளை உங்கள் மிச்சமிருக்கிற பற்களின் எண்ணிக்கையை அண்ணி சொல்லியிருப்பாங்களோ..?!!:icon_rollout::icon_rollout: