PDA

View Full Version : கா(வ)தல் தவிப்பு!!



சிவா.ஜி
06-01-2008, 11:25 AM
இறுக்கிய கைகள்
இறுக்கத்தால் சுருங்கிய முகம்
ஓரக்கண்ணால் பார்த்தும்
ஒதுக்கிவிட்டு மேலும் நடை.....

குடைராட்டினத்தில்
குட்டிராட்டினங்கள்
பஞ்சு மிட்டாயோடு
பிஞ்சு மொட்டுகள்

அடுக்கி வைத்த வளைமீது
அலை பாயும் கண்களோடு
அத்தானின் அதிகபட்ச
பொருளிருப்பை மனதுக்குள்
கணக்கு போடும்
கண்டாங்கி சேலைகள்!

திரை நாயகனின்
வரை ஓவியத்தோடு
நிழல் படமெடுக்க
வெயில் வாங்கும்
வெள்ளை ரசிகர்கள்!

மூன்று தலை குழந்தை
பாம்பு உடல் கன்னி
கரும்புச்சாறு சக்கரம்
இரும்புக்கடையில் சல்லடை....

விழி பார்க்கும் பலதையும்
விரும்பினாலும் திரும்பாது,
வேண்டுதலை நிறைவேற்ற
வேகமாய் போக வேண்டும்!

ஆரவாரமுமில்லை
ஆண்டவனுமில்லை
அச்சம் மட்டுமே
அந்த வேளை அவனில்.....

இடைதொடும் கைகளிலிருந்து
இளம் மனைவியை காத்து
இலக்குவரை போகவேண்டும்.....

இறுக்கிப் பிடித்த கைகள்
இன்னும் சிவக்க....
இயல்பான ஆசைகள்
வழியெங்கும் இரைய....

மேலும் நடை...............

யவனிகா
06-01-2008, 11:45 AM
அண்ணா...பொது விவாதத் திரியின் பாதிப்பு இங்கே கவிதையாய் வந்திருக்கு போல...திருவிழாப் பிண்ணனியா?நல்லாயிருக்கு அண்ணா....

சிவா.ஜி
06-01-2008, 11:52 AM
ஹா..ஹா....தங்கச்சி ரொம்ப ஷார்ப். நன்றிம்மா.

ஆதவா
06-01-2008, 12:29 PM
அத்தானின் காவல் அவள் மேல்.. திருவிழாக் கூட்டத்தில்..

திருவிழா பிண்ணனியை வைத்து காவலை மையமாகக் கொண்டு வரைந்த கவிதையில் சில இடங்கள் நம்மை அந்த இடத்திற்கே கொண்டு செல்கின்றன.. வளையலை வாங்க எண்ணி அத்தானை நோண்டும் கிராமத்துப் பெண்கள், திரைக் கதாநாயகர்களின் ஓவியத்திற்கு அருகே நின்று புகைப்படம் எடுக்கும் ரசிகர்கள் மற்றும் வித்தியாசமான மூன்றுதலை பாம்பு உடல் துப்பாக்கிச் சூடு என பல விளையாட்டுக்களோடு,

இடைதொடும் கயவர்களை நேரில் கண்டதுண்டு... காப்பது நம் கடமை, திருத்தமுயல்வது வீண் வேலை.

அச்சத்தை ஆண்டவனாக்கி வழிபடவும் சில நேரங்கள் நமக்கு தெய்வாதீனமாக அமைந்து விடுகிறது...

(மன்னிக்கவும், அதிகம் எழுத முற்பட்டு முடியாமல் போய்விட்டது..)

சிவா.ஜி
06-01-2008, 12:39 PM
நன்றி ஆதவா...இந்த மாதிரியான, வரிகளை உள்வாங்கி,உள்ளது உரைக்கும் பின்னூட்டங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

சொன்னது சரிதான்.நம்மையும் நம்மை சேர்ந்தவர்களையும் நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

சுகந்தப்ரீதன்
06-01-2008, 12:53 PM
எப்படி அண்ணா.. முடிகிறது.. ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு.. காட்சிகளை கவிதை வடிவில் வடிக்க உங்களால்.. அத்தனையும் கண்முன்னே தோன்றுகிறது.. அதிலும் கட்டியவளை காக்க வேண்டிய கணவனின் பொறுப்பை பொருத்தமான் பிண்ணனி கொண்டு கவிதை
புனைந்தவிதம் அருமை.. அருமை..! வாழ்த்துக்கள் அண்ணா..!

சிவா.ஜி
06-01-2008, 01:23 PM
மிக்க நன்றி சுபி.தெரிந்த சில வார்த்தைகளை வைத்துக்கொண்டு என்னவோ எழுதுகிறேன்.அதற்கும் பாராட்டுக் கிடைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

நேசம்
06-01-2008, 01:47 PM
காட்சிகள் அழகான விவரிப்பில் கணவனின் கடமை அழகாக சொல்லும் நல்ல கவிதை.பாரட்டுகள் சிவாண்ணா

சிவா.ஜி
06-01-2008, 01:48 PM
நன்றி நேசம்.ஊரில் அனைவரும் நலமா?

அமரன்
08-01-2008, 11:57 AM
இதைப் படித்ததும் மௌனம்பேசியதே திரப்படத்தின் பாகமொன்று நினைவுக்கு வந்தது.

வீதியில் இளம் மனைவியை தோள்மேல் கைபோட்டு அணைத்துச் செல்லும் ஒருவனை நாயகன் ஏசுவார். இரண்டையும் தொடர்புபடுத்தி பார்த்தேன்..

நெரிசல் நெருக்கடி, ஆலய வளாகம் வரை ஆட்சிப்பரப்பை விசாலமாக்கிக்கொண்டுள்ளது...

கொக்கி போட்டு இழுப்பவர்கள் யார் என்ற சப்பைக் கட்டுக் காரணம்..

சேலைப்பொண்ணில் கெண்டைக்கால்..
சுடிதார் மங்கையின் ஆடை இறுக்கம்..
காற்றில் பறக்கும் துப்பட்டா..

இப்படி காந்தங்களை, இரும்புகள் சாட்சியாகக் காட்சிக்கு கொணர்ந்து தப்ப நினைப்பது வாடிக்கையாகி விட்டது வேடிக்கை மனிதர்களால்..

கொதிக்கும் உள்ளத்தில் இருந்து துள்ளிவிழுந்த துளி குளிரைத்தருகின்றது சிவா..

சிவா.ஜி
08-01-2008, 12:05 PM
நன்றி அமரன்.இளம் மனைவியின் பாதுகாப்பு எத்தனை பெரிய அவஸ்தையை அந்த அன்புக்கணவனுக்குத் தருமென்று அனுபவித்ததுதான்.
அதை சற்றே வார்த்தைகளில் இட்டுப் பார்த்தேன்.
மிக்க நன்றி அமரன்.

அறிஞர்
12-01-2008, 05:06 PM
திருவிழாவை கண்ணில் முன் நிறுத்திய கவிதை...
இளம் மனைவியின் மீது பரிவும் அருமை.... சிவா...

சிவா.ஜி
12-01-2008, 05:53 PM
மிக்க நன்றி அறிஞர்.