PDA

View Full Version : ஈஸ்வரனின் துளிப்பா - 01

ஆர்.ஈஸ்வரன்
16-12-2007, 10:27 AM
விளை நிலங்கள்
விலை நிலங்களாய்
வறுமை

என்னவன் விஜய்
16-12-2007, 11:30 AM
களை எடுக்க
கூலி கொடுத்த நாட்கள் போய்
இன்று
களை பிடுங்கி பசி
களையும் நாட்களானது
வறுமை

தம்பி
19-12-2007, 08:53 AM
விளைநிலங்கள்
சீமெந்து மரக்காடுகளாக
செழுமை.

ஓவியன்
19-12-2007, 08:59 AM
விளைநிலங்கள்
சீமெந்து மரக்காடுகளாக
செழுமை.

அட, நச்சென்று ஒரு முரண்கவி...
பாராட்டுக்கள் தம்பி.....!! :icon_b:

ஆதவா
05-01-2008, 06:33 PM
அதற்கு வறுமை என்று அழைக்க எனக்கு விருப்பமில்லை ஈசுவரன். சீரழிவு.. இயற்கை அன்னையைப் பெண்டாளும் தனயர்களின் வேலையப்பா இது....

துளிப்பா இறுதி சொல்லில் சற்றே தவறி துளிர்த்துவிட்டது...

ஆர்.ஈஸ்வரன்
06-01-2008, 09:14 AM
அதற்கு வறுமை என்று அழைக்க எனக்கு விருப்பமில்லை ஈசுவரன். சீரழிவு.. இயற்கை அன்னையைப் பெண்டாளும் தனயர்களின் வேலையப்பா இது....

துளிப்பா இறுதி சொல்லில் சற்றே தவறி துளிர்த்துவிட்டது...

வறுமை வந்தால் தான் தெரியும்.

ஆதவா
06-01-2008, 09:24 AM
வறுமை வந்தால் தான் தெரியும்.

நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை ஈசுவரன்.. சற்றே விளங்கவைக்க இயலுமா!!

ஆர்.ஈஸ்வரன்
06-01-2008, 09:34 AM
நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை ஈசுவரன்.. சற்றே விளங்கவைக்க இயலுமா!!

ஒருவனுக்கு சொந்த நிலம் இருக்கிறது. கடன் தொல்லைகள் அதிமானால், வேறு வழி. விற்றுத்தான் கடனை அடைக்க முடியும். அதனால்தான் வறுமை ஒருவனுக்கு வந்தால் தான் தெரியும் என்று சொன்னேன்

ஆதவா
06-01-2008, 11:14 AM
ஒருவனுக்கு சொந்த நிலம் இருக்கிறது. கடன் தொல்லைகள் அதிமானால், வேறு வழி. விற்றுத்தான் கடனை அடைக்க முடியும். அதனால்தான் வறுமை ஒருவனுக்கு வந்தால் தான் தெரியும் என்று சொன்னேன்

அதுசரி... விளைநிலங்கள் எல்லாமுமே வறுமைக்கு விற்கப்படுவதில்லை... அதனால்தான் புரியாமல் விழித்தேன்... நன்றி விளக்கத்திற்கு...

ஆர்.ஈஸ்வரன்
07-01-2008, 09:56 AM

நன்றி