PDA

View Full Version : காதல் நாடி

ஆதி
06-01-2008, 05:18 AM
சாவுக்கும் வாழ்வுக்கும் - இடை
சதுரங்கம் ஆடுகிற
பூவுக்கு புரியாத - பெரும்
புதிராஎன் காதல்

பாட்டுக்கு சொல்தந்து - என்
பார்வைக்கு உயிர்தந்து
தீட்டுகிற எழுத்துகளில் - நீ
தீராமல் இருக்கின்றாய்

பொன்னாடிச் சிலைப்போல - உன்
பொலிவான நினைவுகள்
வினாடிச் செடியில் - வந்து
விண்மீனாய் பூக்கிறது

சின்னஇதழ் விரித்து - நீ
சிரிக்கின்ற பொழுதில்விழும்
கன்னக்குழியில் குதித்து - ஒரு
கடவுள்நிலைக் அடைகின்றேன்

காணாதக் கனவுவந்து - என்
கண்ணிமையில் இறங்கிநின்று
நானாக இருந்தஎனை - உன்
நாணத்தில் கரைக்கின்றேன்

முன்னெழிலின் முற்றுகையில் - என்
முழுதவமும் முறித்துவிட்ட
பின்விழைவின் காரணமாய் - உன்
பெயரையே முணுமுணுத்தேன்

காதல்நாடி வந்து - இதயத்தின்
கரை உடைக்க
காதல்நாடி ஒன்று - என்
கண்ணீராய் வழிகிறது

ஈரநெருப்பால் உன்றன் - வெறும்
இதழ்கள் எரித்தாலும்
மாறவிருப்பம் இன்றி - மனம்
மரணம் போலாகிறது

-ஆதி

rocky
06-01-2008, 07:02 AM
அருமையான கவிதை தோழர் ஆதி அவர்களே,

காதலியை நினைத்து இன்னும் எத்தனை யுகங்களுக்கு கவிதை எழுதினாலும் அது புதிதாகவும் சுவையுடனும்தானிருக்கும். அத்ற்கு இந்தக் கவிதையும் ஒரு எடுத்துக்காட்டு.

காணாதக் கனவுவந்து - என்
கண்ணிமையில் இறங்கிநின்று
நானாக இருந்தஎனை - உன்
நாணத்தில் கரைக்கின்றேன்

முன்னெழிலின் முற்றுகையில் - என்
முழுதவமும் முறித்துவிட்ட
பின்விழைவின் காரணமாய் - உன்
பெயரையே முணுமுணுத்தேன்

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, இதே போல் எளிமையாகவும் அழகாகவும் உங்களிடமிருந்து இன்னும் நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தோழரே, தொடருங்கள்.

அமரன்
06-01-2008, 09:01 AM
பலருக்கு சொற்பமாகத்தெரிவது மலருக்கு வாழ்வுக்காலம். இதை புதிரென்பதா? புண்ணியம் என்பதா?

உடல் இழந்த உயிர்கள் எழுத்துகளில் தஞ்சமடைந்ததுக்கு உதாரணங்கள் தேவையில்லை.

இதுபோல சொல்வதற்குப் பல இக்கவிதையில்.. கவிதை சொல்வதும் பல..

ஆதியின் கவிதைகள் ரசங்கொட்டும் ரகங்கள்.. பருகியவர்களும் காதலர்களாகலாம்.. காதலே ஆதிக்கு காதலி யாகலாம்..

சிலிர்த்த மெய்யுடன் மெச்சுகின்றேன் ஆதி.

ஆதி
07-01-2008, 06:03 AM

பின்னூட்டத்திற்கு நன்றி ராக்கி.. உங்கள் எதிர்ப்பார்ப்பை எதிர்காலங்களில் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.. மகிழ்ச்சியுடன் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..

அன்புடன் ஆதி

அறிஞர்
08-01-2008, 10:25 PM
சாவுக்கும் வாழ்வுக்கும் - இடை
சதுரங்கம் ஆடுகிற
பூவுக்கு புரியாத - பெரும்
புதிராஎன் காதல்

காதல்நாடி வந்து - இதயத்தின்
கரை உடைக்க
காதல்நாடி ஒன்று - என்
கண்ணீராய் வழிகிறது

ஈரநெருப்பால் உன்றன் - வெறும்
இதழ்கள் எரித்தாலும்
மாறவிருப்பம் இன்றி - மனம்
மரணம் போலாகிறது

-ஆதி
அருமை ஆதி.. இன்னும் எழுதுங்கள்...

ஆதி
09-01-2008, 04:35 PM
பலருக்கு சொற்பமாகத்தெரிவது மலருக்கு வாழ்வுக்காலம். இதை புதிரென்பதா? புண்ணியம் என்பதா?

உடல் இழந்த உயிர்கள் எழுத்துகளில் தஞ்சமடைந்ததுக்கு உதாரணங்கள் தேவையில்லை.

இதுபோல சொல்வதற்குப் பல இக்கவிதையில்.. கவிதை சொல்வதும் பல..

ஆதியின் கவிதைகள் ரசங்கொட்டும் ரகங்கள்.. பருகியவர்களும் காதலர்களாகலாம்.. காதலே ஆதிக்கு காதலி யாகலாம்..

சிலிர்த்த மெய்யுடன் மெச்சுகின்றேன் ஆதி.

இதயம் சிலிர்க்க வைக்கும் பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கும் நன்றிகள் அமரன்..