PDA

View Full Version : சிறுகீரை



mgandhi
05-01-2008, 04:42 PM
சிறுகீரை

சிண்டுக்கீரை இனத் தைச் சேர்ந்தது சிறுகீரை. இதன் தண்டு பெரிதாக நீண் டும், இலைகள் சிறிதாகவும்இருக் கும். எளிதில் ஜீரணமாகக் கூடிய கீரை இது.

இதில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து போன்றவை மிக அதிக அளவில் உள்ளன. 90 சதவிகிதம் நீர்ச் சத்தும் மற்றும் புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுச் சத்து ஆகியவையும் இதில் உள்ளன. 100 கலோரி சக்தியைக் கொடுக்கவல்ல கீரை இது. வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் இதில் சம விகிதத்தில் கலந்துள்ளன.

சிறுகீரையுடன் துவரம்பருப்பு, வெங் காயம், பெருங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்துத் தாளித்து சாம்பா ராகவும் செய்து சாப்பிடலாம்.



துவரம்பருப்பும் வெங்காயமும் சேர்த்து இந்தக் கீரையை நெய்யில்வதக் கிக் கடைந்து, தொடர்ச்சியாக ஒரு மண் டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும்.

பொதுவாக இந்தக் கீரை வாதநோய் களைத் தீர்க்கும் சக்தியுடையது. பித்த நோய்களைக் கட்டுப்படுத்தும்.விஷக்கடிகளையும், விஷக்கட்டிகளையும் போக்கும். கல்லீரலுக்கு வலிமையை உண்டாக்கும்.

சிறுகீரையை தினசரி சாப்பிட்டு வருபவர்களுக்கு தேள், சிலந்தி, பூரான், குளவி போன்றவற்றின் விஷங்களைக் கரைக்கும் சக்தி உண்டாகும்.

சிறுகீரை உடலுக்கு அழகையும், முகத்துக்குப் பொலிவையும் தருகிறது. ஆறாத ரணங்களைத் தீர்க்கிறது. கல்லீரல் நோய்களைத் தடுக்கிறது. ரத்த சோகையையும் நீக்கவல்லது இது.

இதை நம் வீடுகளில் சாதாரண தொட்டிகளிலேயே கூட வளர்க்கலாம். வாரம் ஒருமுறையாவது தவறாமல் இந்தக் கீரையை உண்டு, ஆரோக்கியம் பெறுவோம்!

நன்றி விகடன்

இளந்தமிழ்ச்செல்வன்
05-01-2008, 08:41 PM
மிகவும் பயனுள்ள தகவல். தொடருங்கள்

aren
05-01-2008, 11:59 PM
நல்ல தகவல் காந்தி. ஆனால் சில பேர் கீரைவகைகளை ஒரேயடியாக சாப்பிடவேண்டாம் என்று சொல்கிறார்கள். உங்கள் கருத்தென்ன!!!