PDA

View Full Version : தென்னம்பூவும் தெக்கத்திப் பொண்ணும்.



роЗро│роЮрпНроЪрпВро░ро┐ропройрпН
05-01-2008, 03:34 PM
தென்னம்பூவும் தெக்கத்திப் பொண்ணும்.

குமுதம் விடுத்த எச்சரிக்கை :
begin quote
Уகிட்னியை சட்னியாக்கும் தேங்காய் பூ பயங்கரம்Ф

Уஇப்படி தேங்காய்க்கும், நமக்குமான காதல் மூன்று வயதிலேயே ஆரம்பித்து விடும். அதே நினைப்பில், அதே ரசனையில் ரோட்டொரம் தள்ளு வண்டியில் விற்கும் முளை விட்ட தேங்காயின் பூவை நின்று சுவைத்து ரசிக்க, ஒரு பெரிய ரசிகர் கூட்டமே அலை மோதுகிறதுЕ..

குடலுக்கு நல்லது; வயிற்றுக்கு நல்லது என்று தினமும் இந்தத் தேங்காய்ப் பூவை தினசரி தின்று வருபவர்களும் உண்டு. தப்பில்லை! ஆனால் அதற்காக உங்கள் கிட்னியை பலி கொடுக்கத் தயாரா? என்று ஒரு பகீர் கேள்வியை எழுப்புகின்றனர், தேங்காய்ப் பூவால் பாதிக்கப் பட்ட பலர்Е.

மரத்திலிருந்து தேங்காயைப் பறித்த பின்னர், நார் உரிக்காமல் பூமிக்கு அடியில் புதைத்து, தண்ணீர், உரம் போட்டு முளைக்கச் செய்வார்கள். இதுதான் நடைமுறை. ஆனால் செயற்கை முறையில் ரசாயன திரவங்களைச் சேர்த்து, தேங்காயில் பூக்களை முளைக்கச் செய்கிறார்கள் என்பது அதிர்ச்சித் தகவல். இதனால் மூன்று மாதங்கள் கழித்து முளை விட வேண்டிய தேங்காய் ஒரே மாதத்தில் பூப்படைந்து (!) சந்தைக்கு வந்து விடும்ЕЕ.. உதாரணமாக ஜிபரலிக் அமிலம், ஸியாட்டின், கைனடின்Е.. இப்படிЕ.. ஊசிக்கு பதில் தெளிப்பான்களாகЕ

இந்த ஹார்மோன்களை உறிஞ்சும் காய்கள் மள மளவென்று குருத்தை வெளியே அனுப்பி СபூТ தயார் என அறிவிப்பு வெளியிடும்.

சீக்கிரம் பூ வெளியே வரவேண்டும் என்பதற்காக இந்த ஹார்மோஙளின் அளவைக் கூட்டுவதாகச் சொல்கிறார்கள்.

இத்தனைக்கும் இந்த அதிர்ச்சிகளின் விலை மலிவுதான். ஒரு தேங்காய்ப்பூ பத்து ரூபாய்தான். முளை விட்ட கன்று 50 முதல் 100 ரூபாய் வரை விற்க, பத்து ரூபாய்க்கு அந்தக் கன்றைப் பிடுங்கித் தருகிறார்கள் என்றால் எப்படி?

பூஜை சமய்ங்களில் தேங்காயில் பூ வந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். ஆனால் அந்தப் பூவைச் சாப்பிட்ட எனது அண்ணன் மரணத்தின் வாயிலுக்கே போய்த் திரும்பினார். அதனால் இளம் வயதுக்காரர்கள் தேங்காய்ப் பூவைத் தொடாமல் இருப்பதே நல்லது என்று எச்சரிக்கிறார்Ф Ц end quote.

நன்றி; குமுதம் 23-01-2008.
இருப்பினும் என் கதை பதிப்பித்த இரண்டு வாரத்திற்குள் குமுதம் இப்படியொரு குண்டு போட்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

வங்கிப் பணியில் இருக்கையில், புரசவாக்கம் கிளைக்குத் தணிக்கைக்கு சென்றிருந்தேன். எங்கள் வீட்டிலிருந்து புரசவாக்கம் செல்ல எனக்கு நேரடியாக 7F பேருந்து இருந்தது. எனவே பெரும்பாலும் இந்தத் தணிக்கைக்குச் செல்கையில் நான் இந்த பேருந்தில்தான் செல்வேன்.

நான் வீடு திரும்ப, கங்காதீஸ்வரர் கோயில் எதிரே இருக்கும் நிழற்குடைக்கு வந்து, அங்கிருந்து 7F பிடிக்கவேண்டும். நிழற்குடையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் என் வங்கியின் கிளை இருந்தது.

எங்கள் தணிக்கையின் ஒரு பகுதியாக, வங்கியில் சிறுதொழில்/சில்லறைக் கடன் வாங்கியுள்ளவர்களை, தணிக்கை செய்ய என்னைத்தான் அனுப்புவார்கள்.

பெரிய கடன் வாங்கியவர்களைத் தணிக்கை செய்ய எங்கள் குழுவின் மூத்த உறுப்பினர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் செல்வர்.

பெரிய கடன் தணிக்கை என்றால் அன்பளிப்பு பெரிதாக இருக்கும். நல்ல ஸ்காட்ச்; வெளி மாநிலங்களில் ஊர் சுற்றிப் பார்க்க ஆடம்பரமான வசதிகள்; மாலை நேர பொழுதுபோக்கு; சில இடங்களில் இன்ன பிறவும்; உணவுக்கு 5 ஸ்டார் விடுதிகள் என பல சௌகரியங்கள் உண்டு. ஒரு மூத்த அதிகாரி, வங்கி அலுவலகத்தில் பணி புரிய நேர்கையில் மதிய உணவாக தயிர் சாதம்தான் கொண்டு வருவார்; ஆனால் தணிக்கைக்கு வந்தால், நெய்யில் பொறித்த கோழிதான் சாப்பிடுவதற்கு வேண்டும் என்பார்!!

எந்த ஒரு பெரிய கடனில், ஏமாற்று வேலை அதிகமோ, அவ்வளக்கவ்வளவு, கவனிப்பும், உபசாரமும் பலமாக இருக்கும்!!

வங்கியில் தணிக்கைக் குழுவில் இல்லாமல் வேறு துறைகளில் இருந்திருந்தால் ஒரு வேளை, வங்கிப் பணியில் நீடித்திருப்பேன். தணிக்கைக் குழுவில் சேர்ந்ததால், ஊழலை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. இதெல்லாம் பிடிக்காமல்தான், பின்னர் வங்கியிலிருந்து விலகி விட்டேன்.

சிறு கடன்களை தணிக்கை செய்வது, எனக்கும் பிடித்தமாகவே இருந்தது. இதனால் தணிக்கைக் குழுவின் நேரடி மற்றும் மறைமுக ஊழல்களின் நிழல் என் மீது படியாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது.

அன்றும் அவ்வாறே காலையில் ஏழு மணிக்கே என் தணிக்கைச் சோதனையை ஆரம்பித்து, பத்து மணிக்கெல்லாம் சுமார் 15 கணக்குகளைச் சரி பார்த்து விட்டேன். இன்னும் ஒரு பத்து கணக்குகளைப் பார்த்துவிட்டால் அன்றைய கோட்டா முடிந்துவிடும். வங்கிக் கிளைக்குத் திரும்பி வருகையில், 7F நிறுத்த நிழல் குடையின் நிழலில் நின்று, சுற்றுச் சூழலை ரசித்துக் கொண்டிருந்தேன். அதாவதுЕ.. ஹா..ஹ்.. ஹாЕ. அவ்வழியாகப் போகும் பேருந்துகளை எண்ணிக் கொண்டிருந்தேன்.

அந்த நிழற்குடையை ஒட்டிதான் ஒரு தென்னம்பூ விற்கும் உந்து வண்டி இருந்தது. தென்னம்பூவாЕ. சோமாறி என்ன்னாது அது என்று சென்னை வாசிகள் கேட்பார்கள். தென்னம்பூЕ..? முளை விட்ட தேங்காய் ஓட்டின் உள்ளே இருப்பதால் பூ கண்ணுக்குத் தெரியாது. உந்து வண்டிக்காரன் அது போன்ற முளை விட்ட தேங்காய் ஒன்றை எடுத்து, அதன் மத்தியில், சுற்றி மெதுவாகத் தட்டி, தட்டி, தட்ட்ட்டிЕ.. தேங்காய் ஓடு நடுவில் உடைபட்டவுடன், தேங்காய்ப் பருப்பை, பேனாக் கத்தியால் கீறி, ஒரு பாதியைப் பிரித்தவுடன்Е. தென்னம்பூ தரிசனம் தரும்!!!!

தென்னம்பூЕ. முளை விட்ட தேங்காய் ஓட்டின் உள்ளே, இலந்தம்பழம் போல; வடு மாங்கா போல; அவிச்ச முட்டை போல; என பார்ப்பவர்களின் கண்ணைப் பொறுத்து அதன் வடிவமும், இளம் மஞ்சள் அல்லது பழுப்பு வெள்ளையில், அதன் வண்ணமும் இருக்கும். பிரிபட்ட தேங்காயின் மறு பாதியில் அது ஒட்டிக் கொண்டு இருக்கும். ஒரு சில பூ தேங்காய் முழுதும் நிறைந்து இருக்கும். ஒரு சில தேங்காய்களில், ஒரு சிறு கோலிக் குண்டு போலவும் பூ ஒட்டிக் கொண்டு இருக்கும்.

சரிங்க, தென்னம்பூЕ.. ? அதிலே என்னங்க விசேஷம். அதன் மகிமையைப் பின்புதான், அந்த தெக்கத்திப் பெண் கிட்டதான், தெரிந்து கொண்டேன். அது வேற ஒண்ணும் இல்லங்க. நம்ம ஸ்டெம் செல் மாதிரியான சமாச்சாரம்தாங்க. நம்ம ரேஞ்சுக்கு தென்னம்பூவைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டதே பெரிய சமாச்சாரமுங்க. ஸ்டெம் செல்லைப் பத்தியெல்லாம், நெட்ல பாத்துக் கிட்டமுங்க. முழு விளக்கத்திற்கு மெத்தப் படிச்சவங்கதாங்க உதவிக்கு வரணும்!!

என்னால் முடிந்த அளவில் விளக்குகிறேன். தென்னம்பூவைச் சாப்பிட்டால் இளமை திரும்புமாம். ஆனால் வயாகரா மாதிரி சமாச்சாரம் இல்லை. முகச் சுருக்கங்கள் மறைந்து, முகம் பொலிவுறுமாம்; வழுக்கைத் தலையனுக்கு புதிய முடி முளைக்குமாம்; நரைத்த முடி கறுப்பாகுமாம்; நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுமாம்; இவ்வாறாக இளமையின் சின்னங்கள் அனைத்தும் வர வாய்ப்பு இருப்பதாக நான் படித்தேன். இதையே சற்று பெரிய அளவில் யோசித்தால் அதுதாங்க ஸ்டெம் செல்!! அவ்வளவுதாங்க மேட்டர்!!!!

உந்து வண்டிக்காரனால், விற்கும் அளவிற்கு, தேங்காயைத் தட்டி தென்னம்பூவை அதிகம் உற்பத்தி செய்ய முடியவில்லை. அந்த அளவிற்கு அமோக விற்பனை. பாதி தென்னம்பூ ஐந்து ரூபாய்; முழுசு பத்து ரூபாய்; பூவோடு தேங்காயும் சேர்த்து பதினைந்து ரூபாய்.

கொஞ்சம் பெரிய பெரிசு ஒன்னு முழு தென்னம்பூவை வாங்கி, அதனை முகர்ந்து, கையால் தடவி, ஆனந்தமாய் எடுத்துக் கொண்டு சென்றது. தென்னம்பூ கொஞ்சம் மெத்து மெத்தென்றிருக்கும். அந்த அனுபவத்திலேயே அவருக்கு இளமை திரும்பியிருக்கும்!!

அந்தப் பெரிசைப் பார்த்ததில் கொஞ்சம் வாய் விட்டே சிரித்துவிட்டேன் போலிருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண். வயது 25க்குள்தான் இருக்கும். அவளும் அந்தப் பெரிசு செய்ததைப் பார்த்திருக்க வேண்டும். முகத்தில் புன்முறுவல் பூத்திருந்தது. தென்னம்பூவின் அழகு அந்தப் புன்முறுவலில்; இளமையாக; அழகாக; மெத்து மெத்தென்று இதமாக; Сஎன்னங்க அந்தக் கிழவரைப் பாத்திங்களாТ என்றாள்.

அந்த பேருந்து நிறுத்த நிழற் கொடையின் கீழ், நிழலில், அவள் ஒரு குடை விரித்து, அதன் நிழலில் நின்றிருந்தாள். நான் இன்னும் பலமாகச் சிரித்து விட்டேன். அவள் சென்னை வாலிபர்கள் எல்லாரும் லூசுப் பசங்க என்று நினைத்திருக்கக் கூடும். முகத்தைத் திருப்பிக் கொண்டாள். Сஏனுங்ங்ங்கЕ. குடைய மடக்க மறந்துட்டீயளாТ என்று மொழியைக் கோவைக்கும், மதுரைக்குமாக இழுத்தேன். குடையை மடக்காமல் இருந்ததை அப்போதுதான் அவள் உணர்ந்திருக்க வேண்டும். மிகவும் இயல்பான வெட்கத்துடன், குடையை மடக்கி விட்டு, நட்பாக என்னைப் பார்த்து சிரித்தாள்.

பொதுவாக மலயாளப் பெண்கள் தான் இப்படிக் குடையும் கையுமாக அலைவார்கள்; அது அவர்களின் மண் வாசனை. இவளைப் பார்த்தால் ஒரு கேரளத்துப் பெண்குட்டியாகத் தெரியவில்லை. நாகர் கோயில் Е.. திருநெல்வேலிЕ..? என என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவள் போல் Сகுளச்சல்Т என்றாள். எவ்வளவு பொருத்தமான அலை வரிசையில் இருவரும்; இருவருமே சிரித்து விட்டோம்!!!

அவள் அங்கே 7F பேருந்துக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறாள். இவ்வாறு நாங்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு 7F பேருந்துகள் வந்து நின்றன. ஒன்று மிகவும் காலியாகக் கூட இருந்தது. ஆனாலும் அவள் பேருந்தில் ஏறவில்லை. என்னுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு பேருந்துகள் வந்ததையே கவனிக்காதது போல் இருந்து விட்டாள்!!

கன்யாகுமரி மாவட்ட குளச்சல் பொண்ணுக்கு, தெக்கத்திப் பொண்ணுக்கு, ஈஸ்வரிக்குத் திருமணம் ஆகவில்லை. அது இதென்று ஏதோ ஜாதக தோஷம். எனக்கு இந்த ஜாதகம், எண் ராசி என எதிலும் நம்பிக்கை கிடையாது.

ஈஸ்வரிக்கு இங்கு ஒரு கார்பொரேட் கிளப்பில், வரவேற்பில் பணி. நல்ல சம்பளம். சென்னை வேலையை விட முடியாத குடும்ப சூழ்நிலை. இங்கு தனியாக ஒரு வீடு எடுத்துத் தங்கியிருக்கிறாள்.

அவள் என்னைப் பற்றி விசாரிக்க; நான் அவளைப் பற்றி அறிந்து கொள்ள; பேச்சு ஈடுபாட்டில், நாங்கள் மற்ற பேருந்து உபயோகிப்போருக்கு இடைஞ்சல் இல்லாமல் ஒதுங்கி, பேருந்து நிழற்கொடையை விட்டு விலகி விட்டோம். 11 மணி வெய்யில் சுறீர் என்றது. அவளின் குடை விரிந்தது; எனக்கும் சேர்த்து. இருவரும் ஒரு குடை நிழலில்; மனமும் ஒரே அலை வரிசையில்.

7A, 7B, 7C, 7D, 7E, 7F என நிறையப் பேருந்துகள் நின்று சென்றன. அவளுக்கும் எனக்கும் பேச நிறைய Е.. நாங்கள் இப்போது ஒருவரோடு ஒருவர் கண்ணால் மட்டும் பேசிக் கொண்டுЕ..

பேச்சு திரும்பவும் அந்தப் பெரிசு வைத்துக் கொண்டிருந்த தென்னம்பூவைப் பற்றி சுற்றி வந்தது. அப்பொழுதுதான் தென்னம்பூவின் மஹாத்மியம், அந்தத் தெக்கத்திப் பெண் மூலம், எனக்குத் தெரிந்தது.ஒரு முழு தென்னம்பூவை உந்து வண்டிக்காரனிடம் வாங்கி அவளிடம் கொடுத்தேன். தென்னம்பூவை ஒரு கடி கடித்துவிட்டு, குறும்பாக என்னைப் பார்த்து சிரித்து விட்டு, காக்கா கடி பட்ட தென்னம்பூவை என்னிடம் நீட்டினாள்.

மதுரைக்கு வந்த சோதனை!!!!! வேண்டாம் என்று மறுத்தால் இணக்கமான அலை வரிசைக்கு அத்துடன் ஒரு பெரிய வணக்கம் போடவேண்டியதுதான்! ஒத்துக் கொண்டாலோ வங்கித் தணிக்கைக்கு அன்றைய மீத வேலைகளுக்கு ஹல்வாதான். அது மட்டும்தான் காரணமா என்று என் மனசாட்சி இடித்தது.

உங்கள் யூகம் சரிதான். வங்கி வேலையாவது, மண்ணாவது. ஒரு தெக்கத்திப் பெண்ணோடு, கடலை போடுவதைத் தவிர வேறு என்ன வேலை இருக்க முடியும். இப்படி எண்ணித்தான் அந்தத் தென்னம்பூவை வாங்கி நானும் ஒரு கடி கடித்துவிட்டு அவளிடமே திரும்பவும் நீட்டினேன்.

இந்த முறை அவள் அதனைக் கடிக்கவில்லை; மாறாக தன் கைப் பையின் ஜிப்பைத் திறந்து அந்த தென்னம்பூவை உள்ளே வைத்துக் கொண்டாள். காக்காக் கடி தொடரும் என நினைத்த எனக்கு ஏமாற்றம். என் புருவம் உயர்ந்ததைப் பார்த்து, மிக்க நாணத்துடன் Сவீட்டிற்கு எடுத்துப் போய் அனுபவித்துச் சாப்பிடனும்Т என்றாள்.

ஒரு காக்காக் கடி தென்னம்பூவுக்கு இவ்வளவு வலிமையா!!!!

அந்த ஷணத்தில் எனக்குள், அவள் மேல் காதல் முகிழ்த்தது.

рооро▓ро░рпН
05-01-2008, 05:41 PM
கண்டதும் காதலா....???
எப்பிடி இப்பிடி.......??? :fragend005: :fragend005:

рооропрпВ
05-01-2008, 05:54 PM
கண்டதும் காதலா....???
எப்பிடி இப்பிடி.......??? :fragend005: :fragend005:
அதெல்லாம் அனுபவப்பட்டால்தான் புரியுமாக்கும்!!! :cool:

சரியா இளஞ்சூரியன்!??? :smilie_abcfra: ;)

рооро▓ро░рпН
05-01-2008, 05:57 PM
அதெல்லாம் அனுபவப்பட்டால்தான் புரியுமாக்கும்!!! :cool:
அப்போ மயூவுக்கு அநுபவமோ.....:D :D

рооропрпВ
05-01-2008, 05:59 PM
அப்போ மயூவுக்கு அநுபவமோ.....:D :D
அதையேன் கேட்பான்!!! யாருமே திரும்பிக்கூடப் பாக்கிறாங்க இல்லை!!! இதில கண்டதும் காதல்தான் இல்லாத குறை! :traurig001:

роЪро┐ро╡ро╛.роЬро┐
06-01-2008, 05:04 AM
மச்சக்காரரய்யா நீங்கள்.கடலை போடப்போய் காதல் கடலிலேயே விழ வேண்டியதாகிவிட்டதா.இன்னும் அதில்தான் நீந்திக்கொண்டிருக்கிறீர்களா இல்லை....
எனி வே அருமையான நடை.தெளிவான ஆக்கம்.சுவாரசியமாய் சொல்லத்தெரிந்த இன்னொரு எழுத்துக்காரர் இந்த மன்றத்துக்கு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துகள் இளஞ்சூரியன்.

lolluvathiyar
06-01-2008, 07:02 AM
உங்கள் அனுபவம் மிக அருமையாக இருந்தது. சென்னையில் தான் இந்த மாதிரி அனுபவங்கள் கிடைக்கும். கோவையில் நிழற்குடையில் இது போல எல்லாம் கடலை போட முடிவதில்லை. (உள்ளூர் ஆச்சே). கடலையோடு நின்று விட்டால் யாருக்கும் தொந்தரவு இல்லை, காதல் நோக்கி நகர்ந்தால் நிச்சயம் திருமனம் நோக்கியும் சென்றால் நல்லது.

சரி அடுத்த விசயத்துக்கு வருகிறேன். நான் கிராமத்துகாரன் தோட்டத்தில் தென்னை மரங்கள் இருக்கு. அதிலிருந்து நிரைய பயன்படுத்தி இருகிறோம். ஆனால் நீங்கள் சொன்ன தென்னம்பூ சத்தியமாக இன்று தான் கேள்விபடுகிறேன். அப்படி ஒன்று விற்கபடுவது சென்னையில் மட்டும் தான் இருகிறதா அல்லது அனைத்து பகுதிகளிலும் இருகிறதா?

роЕрооро░ройрпН
07-01-2008, 06:13 PM
எங்கள் ஊரில் அத்தி பூத்தாற்போல தென்னம்பூ தரிசனம் கிட்டும். இளநீரில் தோய்ந்து, விரியாத தாமரை மொட்டாட்டம் பழுப்பு நிறத்தில் சுண்டி இழுக்கும். சுவைத்தால் இதமான உணர்வு உள்ளமெங்கும் பரவும். அதே உணர்வை கதையாலும் பெற்றேன். சிவா சொன்னது போல இன்னொரு சுவாரசிய எழுத்தாளர் நமக்குக் கிடைத்துவிட்டார்.

роЗро│роЪрпБ
07-01-2008, 07:20 PM
செவ்வந்திப்பூ, மூக்குத்திப்பூ, கொத்தமல்லிப்பூ, பூவரசம்பூ, பூப்பூப்பூ என பல பூக்களின் பெயர்களைப் பல்லவியாக வைத்து பாடல்கள் எழுதிக்குவித்த கங்கை அமரனும் சொல்லாத பூ - தென்னம்பூ!

பலர் அறியாத தென்னம்பூச் சேதி உள்வைத்து
பலர் அறிந்த காதலை மேலே சுற்றி
சுவையாக வெற்றிக்கதைச் சொன்ன இளஞ்சூரியனுக்கு
தென்னம்பூ மாலை ஒன்று அணிவிக்கிறேன் பாராட்டாய்..

நடையும் அதில் தொனிக்கும் லாவகமும் இதம்.. நிறைய எழுதுங்கள்..

(நம் மன்றம் இன்னும் விரிவடைந்து பூக்களின் பெயர்கள் இன்னும்
தேவைப்பட்டால் - இன்னொரு பூ கிடைத்துவிட்டது..)

роЗро│роЮрпНроЪрпВро░ро┐ропройрпН
16-01-2008, 01:49 AM
உங்கள் அனுபவம் மிக அருமையாக இருந்தது. சென்னையில் தான் இந்த மாதிரி அனுபவங்கள் கிடைக்கும். கோவையில் நிழற்குடையில் இது போல எல்லாம் கடலை போட முடிவதில்லை. (உள்ளூர் ஆச்சே). ...
சரி அடுத்த விசயத்துக்கு வருகிறேன். நான் கிராமத்துகாரன் தோட்டத்தில் தென்னை மரங்கள் இருக்கு. அதிலிருந்து நிரைய பயன்படுத்தி இருகிறோம். ஆனால் நீங்கள் சொன்ன தென்னம்பூ சத்தியமாக இன்று தான் கேள்விபடுகிறேன். அப்படி ஒன்று விற்கபடுவது சென்னையில் மட்டும் தான் இருகிறதா அல்லது அனைத்து பகுதிகளிலும் இருகிறதா?

லொள்ளு வாத்திக்கு, எல்லாம் அறிந்த வாத்திக்கு, தென்னம் பூ பற்றி தெரியாதா!!!! ஏனுங்க இப்படி காதுல பூ....!

சென்னையில் நாங்கள் குறிப்பிடும் தென்னம் பூ கோவையில் வேறு சொலவடையில் இருக்கலாம்.

புரசவாக்கத்தில் விற்பது தெரியும். சென்னை மற்றும் செந்தமிழ் நாட்டின் மற்ற பகுதிகள் குறித்து தெரியாது.

இளசுக்கு மிக்க நன்றி. தென்னம் பூ மன்றம்...... இது கூட நன்றாகத்தான் இருக்கிறது.

рооройрпЛроЬрпН
19-01-2008, 03:09 PM
தென்னம்பூ புதியவிஷயம் கதையும் அருமை நன்றி தங்களின் படைப்புக்கு