PDA

View Full Version : உன்னுடனிருந்த நான்

சுகந்தப்ரீதன்
05-01-2008, 06:57 AM
எப்போதும் நீ இப்படித்தான்.....
வந்ததும் வராததுமாய் ஆரம்பித்து விடுவாய்!
என்னுடனான உன் சண்டையை!
இன்றைய ஊடலுக்கு ஏரிக்கரையை
காரணம் காட்டினாய் - உன்னைக்
கூட்டிக்கொண்டு ஊர் சுற்றவில்லையென்ற
கோபம் உனக்கு - சுற்றினால்
சுற்றியுள்ளவர்கள் ஏளனமாய் என்னையே
பார்ப்பார்கள் என்ற எண்ணமெனக்கு...!

சரி சரி சத்தம் போடாதே- ஏரி
விழித்துக்கொள்ள போகிறது என்றேன்!
இரண்டடி தள்ளி அமர்ந்திருந்தவள்
எழுந்து என்பக்கத்தில் வந்து உன்
பஞ்சுபோன்ற அஞ்சுவிரலால்- தப்புதப்பு
அஞ்சுவிரல் பஞ்சால் என்கன்னத்தை கிள்ளி
என்னை பிடிக்குமா? ஏரியை பிடிக்குமா என்றாய்!
இரண்டும் இல்லை எனக்கு ஏரியில்
நீ குளிப்பதுதான் பிடிக்கும் என்றேன்!

பொய்கோபத்துடன் நீ என்னையடிக்க
மெய்யன்பில் நான் உன்னையணைக்க
பார்த்துக் கொண்டிருந்த தவளைகள் ஏனோ
இணையைத்தேடி ஏரிக்குள் குதித்தன!
ஊடலில் கூடல் வந்ததா- இல்லை
கூடலில் ஊடல் போனதா தெரியவில்லை!
உன்கோபம் தணிய உன்தாகம் கூட
என்னையிழுத்து உன்மடியில் கிடத்தி
கீழ்நோக்கி என் முகம்நோக்கி கேட்டாய்!

எப்போதும் கேட்கும் அதேகேள்வியை இன்னும்
எவ்வளவு நேரம் என்னுடனிருப்பா யென்று?
இந்தமுறையும் எனது பதில் மிஞ்சிப்போனால்
இன்னும் கொஞ்சநேரம் இல்லையேல்
உன்னை கொஞ்சும் நேரம் என்றேன்!
வழக்கம்போல எந்தநொடியும் என்முகத்தை
முத்தமிடுவேனென்று கரைக்கட்டியது கண்ணீர்
நிறைமாத கர்ப்பிணியாய் உன் கண்ணில்!
நாமிருவரும் சேர்ந்திருப்பது சிலபொழுது
அதுவும் சிறுப்பொழுது- அதில் நீ என்னிடம்
சினுங்குவதை விட கலங்குவதே அதிகம்...!!

என்னசொல்லி உன்னைதேற்ற ஒன்றும் புரியாமல்
ஒப்புக்கு சொன்னேன்- ஆற்றங்கரையில்
அடுத்தமுறை சந்திக்கலாமென்று- அதைக்கேட்டு
ஆனந்தத்தில் உன் பிறைமுகம் பிரகாசிக்க
அழுதகண்ணீர் ஆனந்த கண்ணீராய்
என்முகத்தில் பட்டுத் தெறிக்க நித்திரை
கலைந்து நிமிர்ந்தேன்- இத்தனை நேரம்
உன்னுடனிருந்த நான்...?!

இதயம்
05-01-2008, 08:54 AM
சந்தம், எதுகை, மோனை, இலக்கணம் என்று எதைப்பற்றியும் கவலைப்படாதவை தபூசங்கரின் கவிதைகள். அந்த தடத்தை அப்படியே ஒற்றியபடி உங்கள் கவிதைகளும்..! சொற்சுவையை விட பொருட்சுவையை பிழிந்து, பிழிந்து பருகச்சொல்கிறது..! மலரும் நினைவுகளில் மூழ்கச்செய்து பழைய நினைவுகளில் வாழ வைக்கிறது இந்த கவிதை..!! நன்றியும் பாராட்டுக்களும்..!!

வசீகரன்
05-01-2008, 11:50 AM
அழகான ஒரு கனவை.... அழகாக... லகுவான எழுத்து நடையில் உன்னைப்போல் யார் சொல்லிவிட முடியும் சுகந்த்.... படிக்கும்போது மனதில் கற்பனையாக விரிந்த காட்சிகளே எத்தனை அழகு!! அவ்விதம் கவியை.. தெளிந்த நிதான நடையில்.. நிதர்சணமாக வடித்து மனதை கொள்ளை கொண்டு விட்டாய் சுகந்தா...! அழகான காதலன் நீ..!

சுகந்தப்ரீதன்
05-01-2008, 12:16 PM
சந்தம், எதுகை, மோனை, இலக்கணம் என்று எதைப்பற்றியும் கவலைப்படாதவை தபூசங்கரின் கவிதைகள். அந்த தடத்தை அப்படியே ஒற்றியபடி உங்கள் கவிதைகளும்..! சொற்சுவையை விட பொருட்சுவையை பிழிந்து, பிழிந்து பருகச்சொல்கிறது..! மலரும் நினைவுகளில் மூழ்கச்செய்து பழைய நினைவுகளில் வாழ வைக்கிறது இந்த கவிதை..!! நன்றியும் பாராட்டுக்களும்..!!

தங்களின் பாராட்டில் மிகவும் மகிழ்ந்தேன் இதயM அண்ணா..! மிக்க நன்றி அண்ணா..!

அழகான ஒரு கனவை.... அழகாக... லகுவான எழுத்து நடையில் உன்னைப்போல் யார் சொல்லிவிட முடியும் சுகந்த்.... படிக்கும்போது மனதில் கற்பனையாக விரிந்த காட்சிகளே எத்தனை அழகு!! அவ்விதம் கவியை.. தெளிந்த நிதான நடையில்.. நிதர்சணமாக வடித்து மனதை கொள்ளை கொண்டு விட்டாய் சுகந்தா...! அழகான காதலன் நீ..!
இருந்தும் உன் அளவுக்கு என்னால் வசீகரிக்க முடிவதில்லையே நண்பா..! உனக்கு பின்தான் நான் கவிதையிலும் காதலிலும்... மிக்க நன்றி நண்பா.. அழகிய பின்னூடம் அளித்தமைக்கு..!

வசீகரன்
05-01-2008, 12:29 PM
இதுதான் அவையடக்கம் என்பதோ ப்ரீதா....! உண்மையில் எனக்கு இந்த
பதிவை படிக்கும் போது எவ்வளவு பொறுமை வேண்டும்... எத்தனை அழகான உள்மானதில் எண்ணங்கள் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது சுகந்த்..! இவையெல்லாம் எனக்கு இருந்ததில்லை...! உன் இந்த பதிவை பார்த்து நிதானமாக
எப்படி எழுத வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்...!

சிவா.ஜி
05-01-2008, 12:39 PM
இதைக் கவிதை என்பதா....ஒவ்வொரு வரிக்குள்ளும் உணர்வைச் சொல்லும் கதை என்பதா...
உணர்வுகள் அனைவருக்கும் தோன்றும் அதனை வெற்றிகரமாய் வெளிப்படுத்தும் சித்துவேலை தெரிந்தவன் தான் கவிஞன்.சுபி நீங்கள் கவிஞன்.அதற்கும் மேலாய் நல்ல கலைஞன்.வார்த்தைகளையே பாத்திரங்களாக்கி அபிநயிக்க வைத்துவிட்டீர்கள்.

கனவு கலைந்தபோது நாங்களும் அந்த மயக்கத்திலிருந்து வெளிவந்தோம்.
அழகான படைப்பு.வாழ்த்துகள் சுபி.

மலர்
05-01-2008, 01:16 PM
அழுதகண்ணீர் ஆனந்த கண்ணீராய்
என்முகத்தில் பட்டுத் தெறிக்க நித்திரை
கலைந்து நிமிர்ந்தேன்- இத்தனை நேரம்
உன்னுடனிருந்த நான்...?!
அழகான கவிதை...
வரிகளில் கூட வார்த்தைகள் நடனம் ஆடுது...

உங்க ஊரு பக்கத்துல ஏரி ஆறு குளம் எல்லாம் இருக்குதே :icon_hmm::icon_hmm:
அதனால கனவுன்னு சொன்னா தான் கொஞ்சம் நம்ப முடியலை.. :rolleyes::rolleyes:

சுகந்தப்ரீதன்
05-01-2008, 01:24 PM
இதுதான் அவையடக்கம் என்பதோ ப்ரீதா....! உண்மையில் எனக்கு இந்த
பதிவை படிக்கும் போது எவ்வளவு பொறுமை வேண்டும்... எத்தனை அழகான உள்மானதில் எண்ணங்கள் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது சுகந்த்..! இவையெல்லாம் எனக்கு இருந்ததில்லை...! உன் இந்த பதிவை பார்த்து நிதானமாக
எப்படி எழுத வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்...!
மிக்க நன்றி நண்பா.. உன் பாராட்டுதலில் உள்ளம் குதூகலிக்கிறது..!

இதைக் கவிதை என்பதா....ஒவ்வொரு வரிக்குள்ளும் உணர்வைச் சொல்லும் கதை என்பதா...
உணர்வுகள் அனைவருக்கும் தோன்றும் அதனை வெற்றிகரமாய் வெளிப்படுத்தும் சித்துவேலை தெரிந்தவன் தான் கவிஞன்.சுபி நீங்கள் கவிஞன்.அதற்கும் மேலாய் நல்ல கலைஞன்.வார்த்தைகளையே பாத்திரங்களாக்கி அபிநயிக்க வைத்துவிட்டீர்கள்.
கனவு கலைந்தபோது நாங்களும் அந்த மயக்கத்திலிருந்து வெளிவந்தோம்.
அழகான படைப்பு.வாழ்த்துகள் சுபி.
உங்களை போன்றவர்கள் தானே அண்ணா.. எனக்கு உந்துதல்.. பாராட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா..!

சுகந்தப்ரீதன்
05-01-2008, 01:29 PM
அழகான கவிதை...
வரிகளில் கூட வார்த்தைகள் நடனம் ஆடுது...

உங்க ஊரு பக்கத்துல ஏரி ஆறு குளம் எல்லாம் இருக்குதே :icon_hmm::icon_hmm:
அதனால கனவுன்னு சொன்னா தான் கொஞ்சம் நம்ப முடியலை.. :rolleyes::rolleyes:
மிக்க நன்றி மலர்..! பின்னூட்டம் இட்ட உன் பெருந்தன்மைக்கு..!

எங்க ஊரு பக்கத்துல ஏரி இருக்கு வாரி இருக்கு ஏன் ஓடைக்கூட இருக்கு.. ஆனா அங்கெல்லாம் மழை பெஞ்சாதான் தண்ணி ஓடும்..!
ஆறு அது இருக்கு ஆறு கிலோமீட்டருக்கு அந்த பக்கம் காய்ந்து போய்....!

rocky
05-01-2008, 03:27 PM
கவிதை(கனவு) மிகவும் அருமை தோழரே,

நம் காதலியைப்பற்றி கனவு கான்பது கூட ஒரு இனிமையான அனுபவம்தான். உங்களின் இந்த கவிதையை படித்தவுடன் முன்பு நான் கிறுக்கிய கனவுக்காதலி கவிதைதான் நியாபகம் வந்தது. அதிலும் நம் இருவரின் கனவும் கிட்டத்தட்ட ஒரு நிலையில் இருப்பதை என்னுடைய கனவுக்காதலி 3 என்ற கவிதையை படித்தீர்களானால் தெரியும். மிகவும் கவிதைத்துவத்துடன் இருக்கும் கவிதையின் சுவைக்கு இந்த எளிய கவிதைகளும் எந்த விதத்திலும் குறைந்தவைகள் இல்லை என்பதை நிச்சயமாக கூறலாம். வாழ்த்துக்கள் தோழரே.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10227

யவனிகா
05-01-2008, 03:34 PM
அய்யோ அள்ளுது சுகந்தா....அவனையும் அவளையும் ஏரிக்கரையில் மானசீகமாய்ப் பார்க்க வைத்த கவிதை...ஆனா கனவுதானா...ஒத்துக்கவே முடியலை...உங்க ஊர்ல ஏறி இருக்கு?

அனுபவித்துப் படித்தேன்...வாழ்த்துக்கள் சுகந்தா...

ஆதவா
06-01-2008, 04:08 AM
பாராட்டுகள் சுகந்தபிரிதன்..

பெரும்பாலும் காதல் கவிதைகள் நான் வாசிப்பதில்லை, காரணங்கள் பலவுண்டு. உமது கவிதை யதேச்சயாக வாசிக்கக் கண்டேன். துள்ளித் திரியும் போலிக் கற்பனைகளை அவ்வளவாக அடக்காத ஒரு அழகிய கவிதையைக் கண்டேன்.

இந்த நிகழ்வுகள் உங்களுக்குக் கற்பனை என்றால் மேலும் தொடரலாம்.. கற்பனையான காதலை மேலும் வளர்த்தலாமே! ஒரு சம்பவத்தில் நாயகன் நாயகிக்குண்டான ஊடலை, ஒரு ட்ரான்ஸ்ப்ரண்ட் துணியைப் போல சொல்லியிருக்கிறீர்கள்.. காதல் மேகத்தில் உறங்கியவர்களுக்கு இது நல்ல தீனி. இந்த நடையை அப்படியே தொடர்ந்து தொடராக்குங்கள்...

நிறைமாத கர்ப்பிணியாய் கண்ணீர்.. அழகிய கற்பனை. முட்டி (தழும்பி) நிற்கும் நீரொடு இணைந்த விழிக்கு இப்படி ஒரு உவமை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை... உங்களின் உயர்வு நவிற்சிக்கு வந்தனம்..

சுகந்தப்ரீதன்
06-01-2008, 05:03 AM
பாராட்டுகள் சுகந்தபிரிதன்..
பெரும்பாலும் காதல் கவிதைகள் நான் வாசிப்பதில்லை, காரணங்கள் பலவுண்டு. உமது கவிதை யதேச்சயாக வாசிக்கக் கண்டேன். துள்ளித் திரியும் போலிக் கற்பனைகளை அவ்வளவாக அடக்காத ஒரு அழகிய கவிதையைக் கண்டேன்.
உங்களின் உயர்வு நவிற்சிக்கு வந்தனம்..
மிக்க நன்றி ஆதவா..! உள்ளம் மகிழ்கிறது.. உங்களின் பின்னூட்டம் கண்ட எனக்கு..! நான் சிலநேரங்களில் நினைத்ததுண்டு.. ஏன் ஆதவா இதுவரை என் எந்த கவிதையிலும் பின்னூட்டம் இடவில்லை என்று.. அதற்கான காரணத்தை தாங்களே கூறிவிட்டீர்கள்.. இது எனக்கு உங்களிடம் கிடைத்த முதல் பாராட்டு.. மிக்க மகிழ்ச்சி நண்பரே..!

சுகந்தப்ரீதன்
06-01-2008, 08:31 AM
கவிதை(கனவு) மிகவும் அருமை தோழரே,
மிகவும் கவிதைத்துவத்துடன் இருக்கும் கவிதையின் சுவைக்கு இந்த எளிய கவிதைகளும் எந்த விதத்திலும் குறைந்தவைகள் இல்லை என்பதை நிச்சயமாக கூறலாம். வாழ்த்துக்கள் தோழரே.

மிக்க நன்றி நண்பரே வாழ்த்தியமைக்கு... தங்களின் கவிதை கண்டேன்... நல்ல கவியாற்றல் தங்களிடமும் தங்கி இருக்கிறது... வாழ்த்துக்கள்..!

அய்யோ அள்ளுது சுகந்தா....அவனையும் அவளையும் ஏரிக்கரையில் மானசீகமாய்ப் பார்க்க வைத்த கவிதை...ஆனா கனவுதானா...ஒத்துக்கவே முடியலை...உங்க ஊர்ல ஏறி இருக்கு?
அனுபவித்துப் படித்தேன்...வாழ்த்துக்கள் சுகந்தா...

மிக்க நன்றி அக்கா...! எங்கள் ஊரில் ஏரி இருக்கு ஆனா.. எனக்கு இந்த அனுபவம் கனவில் மட்டும்தானே இருக்கு.. நிஜத்துல.. வேண்டாம் விட்டுடுக்கா.. எதுக்கு வழக்கு..?

இதயம்
06-01-2008, 08:34 AM
எங்கள் ஊரில் ஏறி இருக்கு
நீங்க பாட்டுக்கு எங்க ஊரில் ஏறி இருக்கு, இறங்கி இருக்குன்னு சொல்றீங்க.. ஆனா அது என்னன்னு சொல்ல மாட்டேங்கிறீங்க..!:D:D

ஆதவா
06-01-2008, 08:39 AM
மிக்க நன்றி ஆதவா..! உள்ளம் மகிழ்கிறது.. உங்களின் பின்னூட்டம் கண்ட எனக்கு..! நான் சிலநேரங்களில் நினைத்ததுண்டு.. ஏன் ஆதவா இதுவரை என் எந்த கவிதையிலும் பின்னூட்டம் இடவில்லை என்று.. அதற்கான காரணத்தை தாங்களே கூறிவிட்டீர்கள்.. இது எனக்கு உங்களிடம் கிடைத்த முதல் பாராட்டு.. மிக்க மகிழ்ச்சி நண்பரே..!

கொஞ்ச நாட்கள் நீங்கள் ஒரு கவிஞர் என்றே எனக்குத் தெரியாது ப்ரீதன். நான் வருவதும் மிகக் குறைவு, வந்தாலும் கவிதைகள் படிப்பதும் மிகமிகக் குறைவு. அதில் உங்கள் கவிதைகள் கண்ணைவிட்டுப் போனது ஆச்சரியமல்ல. எனினும் தற்போது ஒவ்வொன்றாய் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

சுகந்தப்ரீதன்
06-01-2008, 11:22 AM

மிக்க நன்றி நண்பரே..! தேடிப் பிடித்து படிக்கும் அளவுக்கா நான் தேறிவிட்டேன்.. இல்லையென்றே தோன்றுகிறது எனக்கு.. உங்களின் ஆர்வம் கண்டு அகமகிழ்ந்தேன் ஆதவா..!

அமரன்
06-01-2008, 06:26 PM
கவியரசரின் பாடல்களில் பாமரரும் புரியக்கூடிய வகையில் உவமைகள் இருக்கும். மக்களை எளிதில் சென்றடையும். அதுபோன்ற ஒரு படைப்பு. காட்சியைக் கண்முன் நிழலாட வைத்தமைக்கு விசேடமான சபாஷ்.

பஞ்சுபோன்ற அஞ்சுவிரலால்- தப்புதப்பு
அஞ்சுவிரல் பஞ்சால் என்கன்னத்தை கிள்ளி

வருங்கால அஞ்சு விரல் பஞ்சுக்கு அச்சாரம் சுபி...

சுகந்தப்ரீதன்
07-01-2008, 03:09 AM
கவியரசரின் பாடல்களில் பாமரரும் புரியக்கூடிய வகையில் உவமைகள் இருக்கும். மக்களை எளிதில் சென்றடையும். அதுபோன்ற ஒரு படைப்பு. காட்சியைக் கண்முன் நிழலாட வைத்தமைக்கு விசேடமான சபாஷ்.

வருங்கால அஞ்சு விரல் பஞ்சுக்கு அச்சாரம் சுபி...
மிக்க நன்றி அண்ணா..! ஆனாலும் கவியரசுருடன் இந்த தம்பியை கம்பேர் பன்னுறது உங்க அன்புக்கு கொஞ்சம் அதிகம்தான் அண்ணா..!