PDA

View Full Version : பிரிவினைவாதிகளுக்கு..



rambal
03-04-2003, 12:08 PM
[b]
மரக்கிளைகளுக்காய் மல்லுக்கட்டுபவர்களே
மரணித்துக்கொண்டிருக்கும் - மரத்தின்
ஆணிவேரைப்பற்றியும் சிந்தியுங்கள்...


*******************************

விடுதலை எனும் பெயரில் உன்னை
விரகாக்கி வெளிச்சம் பார்க்க நினைக்கும்
வினையர்கள் வலையில் நீ வீழ்ந்து
வீணாகிவிடாதே....


(பின் குறிப்பு: மூன்றடியாராயிருந்து ஒரு பதவி உயர்வு. அதாவது நாலடியாராய் ஆனது)

இளசு
03-04-2003, 01:12 PM
அருமை ராம்,
ஒருகிளைப் பறித்து கோடரி செய்து
மற்ற கிளை முறிக்கும்
விறகுவெட்டிகளின் இழிசெயலுக்கு சம்மட்டி அடி.
பாராட்டுகள்.

anushajasmin
03-04-2003, 01:13 PM
அருமையான பொருள் பொதிந்த கவிதை.... பாராட்டுகள் நண்பருக்கு

Narathar
04-04-2003, 02:50 AM
என்ன இது மூன்றடி இங்கே நாலடியாய்???
அடுத்தது ஐந்தடியோ.............. நாராயனா!!!!

Narathar
10-04-2003, 07:15 AM
நாராயணன் எப்பொது நாராயனன் ஆனார் நாரதரே ?

இது கலிகாலம் தெரியாதா???

எல்லாத்தையும் கழிக்கும் காலம்!!! அதுதான் "ண" சுருங்கி "ன" வானது!!

பின் குறிப்பு :-
யாராவது மதம் சார்பாக சர்ச்சை எழுப்பினால் இது அவரல்ல என்று தப்பிக்கத்தான்

இளசு
10-04-2003, 07:19 AM
நாரதரே
காலை உணவு என்ன...
சமாளிப்பு இட்லியும் சால்ஜாப்பு சட்னியுமா..?

(பலே முன்னெச்சரிக்கைதான் அது உண்மையான பட்சத்தில்!!!!)

Narathar
10-04-2003, 07:21 AM
நான் "சமாளிபிகேஷன் டிக்ரி" முடித்தவனாக்கும்!!...... நாராயனா!!

chezhian
10-04-2003, 12:16 PM
பிரிவினை வாத நோய் பிடித்தவர்களுகுநல்ல கேள்வி
அருமை ராம்பால்ஜி...

poo
10-04-2003, 01:35 PM
ராம்.. பாரட்டுக்கள்..

நான் கேட்க நினைத்ததை அண்ணன் கேட்டுவிட்டார்.. நாரதரே எந்த கல்லூரியில் பட்டம் வாங்கினீர்?.. (சொன்னால் உபயோகமாக இருக்கும்!!)

karikaalan
10-04-2003, 02:30 PM
ராம்பால்ஜி!

சவுக்கடி கொடுத்திருக்கிறீர்கள். அது தகும்.

===கரிகாலன்

Nanban
11-04-2003, 05:34 AM
ஆணிவேரை பலப்படுத்தி
புள்ளினங்களுக்காகவா
மரம் காக்கப் புறப்பட்டோம் -
காய்ந்த சுள்ளிகள்
பொறுக்கி
எங்கள் வீட்டு
அடுப்பெரிக்க வந்தோம்.
இந்த மரம் காலியென்றால்
கிட்டாமலா போய்விடும்
இன்னொருத்தன் வீட்டுமரம்?