PDA

View Full Version : புதிய ஆண்டே வருக...!



வசீகரன்
05-01-2008, 03:50 AM
புதிய ஆண்டே வருக....
புன்னகை பூண்டோடி வருக....

புதிய எண்ணங்களை புகுத்திட வருக...
எண்ணிய தின்ணங்களை எளிதாக்கிட வருக..

தொடங்கிய செயல்கள் தொய்வன்றி
தொடர்ந்திட வருக.. வருக...

ஆற்றாமைகள் அகண்டோடி ஆக்கங்கள்
பல்கிப்பேருகிட ஆரவாரமாய் வந்துவிடு ஆண்டே....

கொண்டதுயரங்களையும்..
துர் நினைவுகளையும் துடைத்தெரிந்து...

கண்ட காயங்களையும் கசப்புகளையும்..
களைந்தெரிந்து

புதிய விடியலாய்
எங்கள் காலையில் விடிந்திடு புதிய ஆண்டே...

ஏற்றங்கள் பல எம் வாழ்வில்
ஏற்றுவித்து
மாற்றங்கள் பல மண்ணில் விதைத்து...

ஆதவக்கதிர்களாய் ஆரிருளை
விளக்கி......வசந்தகாற்றுடனே வந்து
எங்கள் வாயிலை நிரப்பிவிடு புதிய ஆண்டே...!

பகைமைகளை மறந்து
தோழமையை தோற்றுவிக்க தோதுவாக
வந்துவிடு புதிய ஆண்டே...

சாதி மாத இன வேறுபாடுகளை அற்று
சமத்துவம் ஓங்கியுரைத்து
மனிதம் வாழ்வில் மடமைகளை
களைந்து மாண்புற்ற நல்வாழ்வு மண்ணில் மலர
மலர்ந்துவிடு புதிய ஆண்டே....

யுத்த ரத்த சத்தங்களற்ற
விடியல்களையும்
குண்டுமழை அமிலமழைகளுமற்ற
பொழுதுகளும் புலர்ந்திட புதிய ஆண்டே வந்து விடு....

மனிதநேயம் மண்ணில் தழைத்தோங்கிட
புதிய ஆண்டே வந்து விடு...

புன்னகை பூக்களை புவி முழுதும் மலர்ந்து....
நறுமணம் கமழ்ந்த நந்தவனமென
பூவுலகு பூரித்திட புதிய ஆண்டே வந்து விடு...!

வானமெங்கும் வண்ணங்களை வரைந்து....
ஒளி வெள்ளம் தனில் புவிமுழுதும் நிறைந்து....

எங்கள் கண்கள் முழுதும்
புதிய நம்பிக்கையாக விரிந்து....

வற்றாத வாழ்வுதனில் மனிதம் மகிழ்ந்திட
வந்து விடு புதிய ஆண்டே வந்து விடு.....

வையகம் நலம் பெற வளைகொணாது
வளம் தந்துவிடு.......!

சென்ற ஆண்டின் கடைசி நாளன்று நான் மன்றத்தில் பதித்துவிட்டு சென்ற
இந்த புத்தாண்டு வாழ்த்து கவிதையும்... மன்றத்தில் மென்பொருள் மேம்படுத்தும் பணியின்போது அழிந்து போய்விட்டது.... நான் எனது சில பதிப்புகளை மெய்லில் சேவ் செய்து வைத்திருப்பேன்.... அப்படியாக இந்த பதிப்பையும் சேமித்திருந்தேன்....
நண்பர்கள் பார்வைக்கு இப்போது மீண்டும் பதிக்கிறேன்...! காலம் கடந்து சென்று விட்டாலும்....! மீண்டும் ஒருமுறை உங்களுக்காக....!

ஆன்டனி ஜானி
07-12-2010, 02:43 PM
இந்த புத்தாண்டு ஒரு இனிய புத்தாண்டாக அமைய

வாழ்த்துக்கள் .....

WISH YOU A HAPPY NEW YEAR