PDA

View Full Version : நரகவேதனை



தங்கவேல்
05-01-2008, 01:32 AM
காலை நேரம் பனிரெண்டு மணி இருக்கும். வீட்டிலிருந்து மனைவியின் அழைப்பு வந்தது. என்ன என்றேன்.... அய்யய்யோ என்னங்க... அம்மு.... வாயில நுரை நுரையாதள்ளுது.. என்று கதறி விட்டு கட் செய்ய, எனக்கு கண் இருட்ட ஆரம்பித்தது. கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிக்க உடம்பு வியர்த்து விருவிருக்க, வீட்டுக்கு மீண்டும் போன் செய்தேன்.. யாரும் எடுக்க வில்ல. எண்ணங்கள் என்னை அலைக்கழிக்க, செய்வதறியாத தவிக்க, கார் பறந்தது வீட்டை நோக்கி. இடையில் சிக்னல் வேறு. மனது பட்டபாடு இருக்கின்றதே அந்த வலியினை எழுத்தில் எழுதிவிட இயலாது. வீட்டுக்கு செல்லும் வழியில் வழியில் இருந்த ஆஸ்பிட்டலில் விசாரித்தோம். ஒரு ஆஸ்பிட்டலில் , குழந்தைக்கு பிட்ஸ் வந்து விட்டது. ரொம்ப சீரியஸ் என்றும் மற்றுமொரு ஹாஸ்பிட்டல் பெயரை சொல்லி அங்கு செல்லுங்கள் என்று சொன்னார்கள். வழியில் டிராபிக் வேறு. நண்பர் ஒன்னும் ஆகாது தங்கம். கவலைப்படாதீங்க என்று தைரியம் சொல்லச் சொல்ல எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. கண்களில் கண்ணீர் வெளியே வரட்டுமா வேண்டாமா என்று குளம் கட்டி நிற்க, ஆஸ்பிட்டலை அடைந்து விசாரித்து அறைக்குள் சென்றால் மனைவி கதறுகின்றாள். இன்னும் சிறிது நேரத்தில் டாக்டர் வந்து விடுவார் என்று நர்ஸ் சொல்ல, அம்மு பெட்டில் மயங்கி கிடந்தாள். புரண்டாள். எனக்கு அடி வயிற்றுக்குள் அமிலம் சுரந்தது. டாக்டர் வந்து விசாரித்தார். பின்னர் எனது நண்பரிடம் தனியாக பேசினார். நான் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். மனது சோர்வடைய செய்வதறியாது தினறினேன்...

டாக்டர் என்ன சொன்னார் ? அடுத்து என்ன நடந்தது ? .....

mukilan
05-01-2008, 02:00 AM
என்ன தங்கவேல்! இதற்குள்ளாக சஸ்பென்ஸா! எத்துணை சஸ்பென்ஸ் என்றாலும் எல்லாம் நலமே என்பதைக் கேட்கவே ஆவலாக உள்ளேன்.

தங்கவேல்
05-01-2008, 03:33 AM
முகில் நேர குறைவினால் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகின்றேன். அடுத்த பதிவில் முழுமை பெரும்.

lolluvathiyar
05-01-2008, 09:22 AM
இது உன்மை கதை என்பதால் மனம் அதர்ச்சியாகி விட்டது. அதனால் பின்னூட்டம் இட முடியவில்லை.

ஷீ-நிசி
05-01-2008, 09:28 AM
என்ன ஆச்சுன்னு சொல்லுங்க... ஒன்றும் ஆகியிருக்காது என்றே நம்புகிறேன்...

இதயம்
05-01-2008, 09:31 AM
தங்கவேல் அண்ணா... குழந்தை விஷயத்தில் சஸ்பென்ஸ் வைக்காமல் நடந்ததை சொல்லுங்கள். எதில் தான் சஸ்பென்ஸ் வைப்பது என்ற அளவே இல்லாமல் போய்விட்டது..!

குழந்தை இப்போது நலமா..?

நுரையீரல்
05-01-2008, 10:08 AM
தொடருங்கள் தங்கவேல் அண்ணா! என்ன ஆச்சுன்னு தெறிஞ்சுக்கணும். எல்லாம் நல்லதாகவே நடந்திருக்கணும்.

யவனிகா
05-01-2008, 11:04 AM
எல்லாம் நல்லபடியாக முடிந்ததால் நீங்கள் எழுதுகிறீர்கள் என்பதை யூகிக்கிறேன்....தொடருங்கள்....

தங்கவேல்
05-01-2008, 12:20 PM
ஐந்து நிமிடம் தான் மன்றத்தில் உலாவ இயலுகின்றது. விரைவில் முழு பதிப்பையும் பதித்து விடுவேன்.

அம்மு இப்போ பரம சவுக்கியம்.
மருத்துவமனையில் ஐ சி யு வில் இருக்கும் போது, நர்சிடம் " குத்தாதீங்க வலிக்குது, அம்மா போகேதேம்மா " என்று கதறியதை மட்டும் இன்னும் மறக்க முடியவில்லை.

aren
05-01-2008, 02:48 PM
குழந்தை பரம செளக்கியம் என்று கேள்விப்பட்டவுடன் மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.

கொஞ்சம் குழந்தையை கவனித்துக்கொள்ளுங்கள்.