PDA

View Full Version : கல்யாணக்காதல்



rocky
04-01-2008, 10:41 AM
காதலித்த பெண்னையே
மனைவியாக்கிக்கொள்ளும் எவனையும்
எனக்குப் பிடிப்பதில்லை, அவர்கள்
சுயநலக்காரர்கள்,
சோம்பேரிகள்,
திரோகிகள், இவர்கள்
காதலியிடம் காட்டிய
அன்பையும், பாசத்தையும்,
அவளுக்காக ஏங்கிக்காத்துக்
கிடந்ததையும் ஒருநாளும்
மனைவியிடம் தொடரமாட்டார்கள், ஆனால்
நான் அப்படியல்ல, முதலில்
உண்னை கரம்பிடிக்கிறேன்,
பின்பு காதலிக்கிறேன்.
உனக்கு சம்மதமா?

ஷீ-நிசி
04-01-2008, 12:59 PM
நல்ல தீம் ராக்கி...

இன்னும் கொஞ்சம் கவிதையோட அளவு அதிகம் வர முயற்சிக்கலாம்...

உங்க கவிதை உங்களுக்கு சீக்கிரத்துல திருப்தி தரக்கூடாது.. அதான் முக்கியம்...

தொடர்ந்து எழுதுங்க! வாழ்த்துக்கள்!

rocky
04-01-2008, 02:37 PM
நல்ல தீம் ராக்கி...

இன்னும் கொஞ்சம் கவிதையோட அளவு அதிகம் வர முயற்சிக்கலாம்...

உங்க கவிதை உங்களுக்கு சீக்கிரத்துல திருப்தி தரக்கூடாது.. அதான் முக்கியம்...

தொடர்ந்து எழுதுங்க! வாழ்த்துக்கள்!

நன்றி நிசி அண்னா, நாஅன் முன்னம்மே சொல்லியதைப்போல் கருவைக் கவிதையாக்கத் தெரியாமலேயே இப்படிக் கிருக்கிக் கொண்டிருக்கிறேன், இருந்தாலும் கவிதையும் எழுத முயற்சிக்கிறேன். உங்களின் தொடர்ச்ச்சியான ஊக்கத்திற்கு எனது நன்றிகள்.

அமரன்
04-01-2008, 05:53 PM
போராடிப் வென்றால்
அருமை தெரியும் என்பது
தோற்கும் சந்தர்ப்பங்களும்
வெல்லும் சமயங்களும்
முற்றும் அழியவில்லை....

குழந்தை அழகு..:icon_b:
இன்னும் சிங்காரிக்கலாம்..

rocky
06-01-2008, 06:33 AM
மிக்க நன்றி தோழர் அமரன் அவர்களே,

நானும் கவிதையெழுத போராடிக்கொண்டுதான் இருக்கிறேன், நிச்சயம் ஒரு நாள் வென்றுவிடுவேன் என்ற நம்பிக்கையிருக்கிறது அதுவரை உங்களின் ஆத்ரவு நிச்சயம் வேண்டும்.