PDA

View Full Version : கல்லூரியில் தவறவிடப்பட்ட பூ..!!



рокрпВроороХро│рпН
04-01-2008, 09:46 AM
கல்லூரியில் தவறவிடப்பட்ட பூ..!!



அப்போது நான் இறுதி ஆண்டின் ஆரம்ப நாட்களில் இருந்தேன். என் அதிர்ஷ்டம்(??)மட்டுமல்லЕ என்னோடு படித்த அனைவருக்கும் கிடைத்த நல்ல(??) வாய்ப்பு என்னவெனில் அப்போது முதல் செட் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களான எங்களுக்கு மொத்தமாக Уஆஃப் கேம்பஸ்Ф என்ற முறையில் தான் வேலைக்கு தேர்வு செய்யும் நிறுவனங்களின் தேர்வுகள் நடைபெறும்.

எல்லா கல்லூரியிலிருந்தும் குறிப்பாக நிறுவனம் தேர்வு நடத்த ஏற்பாடு செய்த கல்லூரிக்கு சென்று (சுமார் 1500 முதல் 2000 பேர் ஒரே நேரத்தில்)இண்டர்வியூக்களில் பங்குபெறுவதற்கு பெயர் தான் Уஆஃப் கேம்பஸ்.Ф என்று சொல்வாங்க. பல சுற்றுகள் கொண்டு நடத்தப்படும். முதல் சுற்று Ц எழுத்துத் தேர்வு(ஆப்டிட்டியூட் டெஸ்ட்), இரண்டாவது சுற்று Ц கலந்துரையாடல்(க்ரூப் டிஸ்கசன்), மூன்றாவது சுற்று Ц நேரடி இண்டர்வியூ(டெக்னிகல்), நான்காவது(இறுதி) சுற்று Ц ஹெச்.ஆர் (மனித வள திறன் ஆய்வு).

இந்த மாதிரியே, எல்கியூப் என்ற ஒரு பிரபல நிறுவனத்தின் இண்டர்வியூவுக்காக கேரளாவின் எல்லையில் அமைந்த ஒரு பிரபல கல்லூரிக்கு எங்கள் கல்லூரி பேருந்து புறப்பட்டது. வகுப்பில் டாப்பர்கள் என்ற முறையில் நானும் அதில் இருந்தேன்.(அட நிசமா தான் சொல்றேங்க.. நம்புங்க மக்களே..! :D:D)

நான், என் தோழிகள் புடைசூழ அங்கு சென்று பெரிய ஹாலில் அமர்ந்து, அவர்கள் கம்பெனி பற்றி சொல்லச் சொல்லЕ வாய் திறந்து கேட்டு வியந்து கொண்டு இருந்தோம்.

அதே ஹாலிலேயே அமர வைத்து எங்களுக்கு முதல் சுற்றுக்கான கேள்வித் தாள்கள் கொடுக்கப்பட்டது.

அந்த முதல் சுற்று, முதல் 40 நிமிடம் ஆப்டிட்டியூட் தேர்வாகவும், அடுத்த 1 மணி நேரம் ஆங்கிலத் திறனாய்வு மற்றும் பசில் தேர்வாகவும் இருந்தது.

எனக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் ஆங்கிலத் திறனாய்வு மற்றும் பசில் தேவுக்கானது.

மணி ஒலிக்க, எல்லாரும் எழுத ஆரம்பிக்க, பூவும் எழுதினேன்.. எழுதினேன்Е. ஓரக் கண்ணால் மற்றவரைப் பார்த்தால் வேறு ஏதோ கிறுக்கிட்டு இருக்காங்க கொடுத்த தாளில்.. எனக்கு லேசா சந்தேகம் மேலோங்க, யாரைக் கேட்பதுன்னு புரியாம, சரிЕ பக்கத்துல பக்கத்துல இருப்பதால , வேறு வேறு கேள்வித் தாள் கொடுத்திருப்பாங்கன்னு சமாதானம் படித்தி, சுத்தும் முத்தும் பார்த்துட்டு, இதுக்கு மேல் முழிச்சாЕ அப்புறம்.. காப்பி அடிக்கிறேன்னு நினைச்சுப்பாங்கன்னு பூவு அமைதியா குழப்பத்திலேயே எழுத ஆரம்பித்தேன்.

நாற்பது நிமிடம் முடிந்ததும், தேர்வு வைத்தவர்கள் வந்து விடைத்தாளையும், கேள்வித்தாளையும் வாங்க, என் விடைத்தாளைப் பார்த்து அவங்க அதிர்ந்தார்கள். காரணம், அடுத்த ரவுண்டுக்கான கேள்வித்தாள் நான் எழுதியது. நான் எனக்கு கொடுத்ததைத் தானே எழுத முடியும் என்று வாதாட, அதே போல் எழுதியவர்கள் யார் யார் என்று பார்த்தால் பத்து பேருக்கும் மேல் தேறினார்கள். (பூவுக்கு இப்ப தான் மனசுக்குள் சந்தோசம். நான் மட்டும் முட்டாள் இல்லை.. ஹீ ஹீЕ:D:D கூட இத்தனை பேரு முட்டாளாகிட்டாங்களே.. துணைக்கு ஆள் இருக்கு அப்படின்னு உள்ளுக்குள்ள சந்தோசம்Е :D:D )

இந்த களேபரம் முடிய, எல்லாருக்கும் மறுபடியும் அடுத்த தேர்வுக்கான கேள்வித்தாள் வழங்க, நான் வாங்கி மீண்டும் அதே கேள்விகளுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்தேன். தேர்வு முடிந்து விடைத்தாள் வாங்கினார்கள். எங்களை சிறப்பாக கவனிக்க தனியாக முன்னுக்கு அழைத்தார்கள். :D:D நான் என் உயிர்த்தோழியிடம்(Уதோழியே உனக்காகФ கவிதை பாருங்க..!-) Уவெயிட் பண்ணு.. சீக்கிரமா எழுதிட்டு வருகிறேன்Ф என்று சொல்ல, அவளும் சரி என்று தலையாட்டி செல்ல,

பின்பு, முதல் சுற்றுக்கான ஆப்டிட்டியூட் டெஸ்ட் எங்களுக்கு (அதாவது என்னோடு சேர்ந்து அறிவாளியான 10 பேருக்கு மட்டும் ;)) தனியாக அமர்த்தி டெஸ்ட் வைத்தார்கள். 40 நிமிடம் கழித்து, முன்வரிசையில் அமர்ந்து எழுதி பேப்பர் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. காரணம், பின்னால் இருந்த ஒருவரையும் காணலை. என் கல்லூரியைச் சேர்ந்த என் தோழிகளையும் காணலை. எனது காலேஜ் பேக் மட்டும் அனாதையாக்கபட்டு கிடந்தது. எடுத்துவிட்டு, அவசர அவசரமாக வெளியில் வந்தால், என் கல்லூரி பேருந்தையே காணலைЕ!! ஒரு கல்லூரி பேருந்தையும் காணலை.

இரு தினங்கள் கழித்து, கல்லூரிக்கு ஷாட் லிஸ்ட் பற்றி தகவல் வரும் என்று சொல்லியதாக தகவல் கொடுக்கப்பட்டது.

இதற்குள் மதியம் 1 மணி ஆகிவிட்டிருந்தது. என்னிடம் அலைப்பேசி இருந்தாலும், அங்கு சிக்னல் இல்லை. பல மைல் கொண்ட கல்லூரி வளாகம் எனக்கு மிகவும் புதிது. இதற்கு முன் ஒருமுறை மட்டுமே வந்த பரிச்சயம் இருந்தது. அங்கு தெரிந்தது கல்லூரி கேண்டின், மற்றும் பெண்கள் விடுதி. அங்கு இருக்கும் ஒரு டெலிபோன் பூத்.

வெயில் தீய்க்கத் துவங்க, வெளிவந்தால் திக்கு தெரியவில்லை. சரிЕ கேண்டினாவது செல்வோம் என்று நடந்தால் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. துவண்டு போய், அழுகை அழுகையாய் வர, கண்கள் கலங்க, அம்மா கொடுத்தனுப்பிய டிபன் பாக்ஸ் திறந்து கேண்டினில் தனியாய் அமர்ந்து சாப்பிட்டேன். அப்புறம் தான் கொஞ்சம் தெம்பு வந்தது.

எங்கள் கல்லூரியில் வேலை செய்து பின்பு இங்கு வேலைக்கு வந்த பெண் பேராசிரியர்கள் பற்றி ஏற்கனவே அறிந்ததால், அவர்கள் எதேச்சையாய் என்னைப் பார்க்க, நான் சிரித்த படியே பேசி சமாளித்து கிளம்பும் வழி கேட்டு அறிய அங்கு ஆட்டோ அல்லது ட்ரைன் பிடிச்சி தான் கோவை செல்ல இயலும் என்று ஒரு பெரிய குண்டை இந்தப் பூ தலையில் போட்டார்கள்.

இதற்கிடையில் என் வகுப்பின் பேக் பென்ச் பையன் ஒருவன் வர, எனக்கு அப்பாடாЕ என்று இருந்தது. ஆனால், நாம தான் ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல புள்ளையாச்சேЕ(யார தேடுறீங்கЕ என்னைத்தான் சொன்னேங்க..!:D:D) எப்படி உதவி கேட்பது என்று யோசித்து அவன் Уஎப்படி போவே?Ф அப்படின்னு கேட்க, நான் Уஅப்பா வருவார்Ф என்று தைரியமாக நடித்துச் சொல்லி வைத்தேன்.

சரி.. இனி நேரே போன் செய்ய வேண்டியது தான் என்று புரிந்து, பெண்கள் விடுதியில் இருக்கும் தொலைப்பேசி அழைப்பகத்துக்கு சென்றேன். அப்பாவுக்கு கூப்பிட்டு, போனிலேயே முழுக்கதையையும் சொல்லி மூக்கு சிந்த, அப்பா, Уஇருமா.. நான் உடனே வருகிறேன்.. வர 1 மணி நேரம் ஆகும்.. அதுவரை அங்கையே அமைதியா உட்காந்து இரு..!Ф அப்படின்னு சொல்லி வைத்தார்.

அந்தக் கல்லூரியின் முகப்புக்கு நடந்து வரவே, கிட்டத்தட்ட அரைமணி நேரம் தேவைப்படும். அப்படி கால்குலேட் செய்து, மீண்டும் கேண்டின் சென்று, அமைதியாய் உட்காந்து துவண்ட மனதை தைரியம் சொல்லி சமாதானப்படுத்தினேன். விட்டுச் சென்ற தோழி பற்றி கோபத்திலும் இருந்தேன்.

அடுத்து கொஞ்ச நேரத்தில் அப்பா வரவும், நான் முகப்பைச் சென்று அடையவும் சரியாக இருந்தது.

வாடிய முகத்தோடு அப்பாவிடம் முறையிட, அப்பா, என் தோழி பெயர் சொல்லி, Уகால் பண்ணியிருந்தா.. பஸ் கிளம்பிட்டது அங்கிள். நான் வந்துட்டேன். பூ எப்பவுமே அப்பா வந்து கூப்பிட்டுப்பாரு.. பிரச்சனை இல்லைனு சொல்லுவா.... அதான் உங்களை கூப்பிட்டேன்Ф அப்படின்னு சொன்னதாக சொன்னார்.

எனக்கு கோபம் கொஞ்சம் தணிந்தாலும், சரி ஏன் விட்டு போகனும், வெயிட் பண்ணியிருந்தா, என் அப்பாவே என் வீடு செல்லும் வழியில் இருக்கும் அவள் வீட்டுக்கும் அவளை டிராப் செய்திருப்பாரே என்று ஒரு ஆதங்கம் மேலோங்க, அவளுக்கு கால் பண்ணினேன்.

நான், Уஏன் எனக்கு வெயிட் பண்ணலை? ஏதும் அவசர வேலையா வீட்டில்?Ф என்று கேட்க, அவள், Уபஸ் கிளம்பிட்டது. சாரி.. நீ தான் அப்பா வருவார்னு எப்பவும் சொல்லுவியே.. அதனால் நீயே வந்துடுவேன்னு வந்துட்டேன். அதுவுமில்லாம எனக்கு மதியம் தூங்கனும் வீட்டில்.. அதான் சீக்கிரமா வந்தேன்Ф என்று சொன்னாளே பார்க்கனும். எனக்கு ரொம்பவே வருத்தமாகிவிட்டது. நட்புகளிடையே இப்படியும் நடக்குமா?? நாம் அப்படி இல்லையே என்று யோசித்து வருந்தினேன். :traurig001:

வெகு நாட்கள் ஏனோ, இந்த சம்பவத்தை என்னால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலவில்லை. :mad:

நான் அவள் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால், அவள் அப்படிச் செய்தது எனக்கு பல நாட்கள் வருத்தமளித்தது என்பது அவளுக்கு இன்று வரை தெரியாது. :frown:

அப்புறம் அந்த தேர்வில் நான் செலக்ட் ஆகி, இண்டர்வியூவுக்கு செல்லாமல் விட்டதெல்லாம் வேறு கதை.:D என்ன கேக்க வர்றீங்கன்னு தெரியுது.:rolleyes: இந்த தேர்வில் என் தோழி ஷாட் லிஸ்ட் ஆகலை. :icon_ush:

பூவு நினைச்சி...கண்ணு கலங்கிடுச்சி தானே..! எனக்கும் இப்பவும் இதை நெனச்சா கண்ணு கலங்கிடுது..! :icon_rollout:

சரி சரி.. அழுவாதீங்க..:icon_ush:
நான் பத்திரமா மதியம் 3.45க்கு வீட்டுக்கு வந்துட்டேன்..!:icon_b:


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

рокро╛ро░родро┐
04-01-2008, 10:00 AM
உள்ளூரிலேயே இந்த கலாட்டாவா...?

ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும் - சில விசயங்கள் மிகச்சிறியவையாக இருந்தாலும் எளிதாக எடுத்துக்கொள்ள மனம் வருவதில்லை. புத்தரின் வார்த்தைகளை கடைபிடிப்பதே இதற்கு ஒரே மருந்து.

அசை போட ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா..! இனி எல்லாம் இன்பமயம்தான். வாழ்த்துக்கள் பூ.

ропро╡ройро┐роХро╛
04-01-2008, 10:11 AM
அடடா...கல்லூரி நாட்களின் கண்ணீர்க் கதை...இதுவே நானாய் இருந்தா அந்த ப்ரண்டோட காதே கருகிப் போற மாதிரி கத்தித் தீத்திருப்பேன்...
கல்லூரிப் பருவம் முடிந்தாலும் அதன் நினைவுகள் வசந்தம் தான்...இல்லையா பூவு...அப்போது வேதனை தந்த நினைவுகளாய் இருந்தாலும்...இப்போது நினைக்கையில் அவை சிறுபிள்ளைத்தனமாயும்,சில நேரங்களில் சிரிப்பை வரவழைப்பதாயும் இருக்கிறது.

ஒரு சமயம் இருக்கிற காசுக்கெல்லாம் கேண்டீனில் மெது பக்கோடாவும்,ஆமை வடையும் தின்று தீர்த்து விட்டு...நானும் என் தோழி மஞ்சுவும் பஸ் ஏறினோம்.வழக்கமாக செல்லும் பஸ் கூட இல்லை.கன்டக்டர் பக்கத்தில் வந்தவுடன் தான் தெரிகிறது. ரெண்டு பேரிடமும் சேர்த்து 3 ரூபாய் தான் இருக்கிறது.மொத்தம் 5 ரூபாய் வேணும்...வீடு போய் சேர. அப்புறம் இருந்த காசுக்கு டிக்கெட் எடுத்து பாதி தூரம் இறங்கி ந*டராசா சர்வீஸ் தான் 6 கிலோ மீட்டர்.நடந்தது கூட பெரிதாகத் தெரியவில்லை.

போற வழியில்....உண்ணி மாயா என்று ஒரு பானி பூரிக் கடை. எங்களிருவருக்கும் பானிபூரி பிடித்த அயிட்டம்.மஞ்சு, பானி பூரி சாப்பிட்டே ஆகணும்னு ஒரே பிடிவாதம்....தெரிந்த கடையாதலால் வாடி கணக்கு சொல்லிக்கலாம்னு...பஸ்ஸுக்கே காசில்ல...எருமை மாடு...கொட்டிக்கிட்ட மெதுவடைக்கி நடந்தாச்சு...இதில பானிபூரி வேறயான்னு நான் சொன்னதெல்லாம் அவ காதில எங்க ஏறிச்சு....பானிபூரி ஒரு பிளேட்...பேல் பூரி ஒரு பிளேட்...கணக்கு வெச்சு கலந்து கட்டினோம்.இடுக்கண் வருங்கால் நகுக...பழைய கதை...இடுக்கண் வருங்கால் உண்க....இது புதிய கதை

இன்னைக்கும் என்னோட நல்ல தோழி அவ...வருடத்துக்கொருமுறை பாத்துக்குவோம்...கல்யாணம் வேண்டாம்...அந்த சடங்கில நம்பிக்கை இல்லன்னு சொல்லிட்டு இருக்கா...பாக்கலாம்...எதாவது பானி பூரி கடைக்காரன் மாட்டுவானான்னு....

பூ...உன்னோட பதிப்புகள் எப்பவுமே எங்களுடைய ஞாபகங்களையும் சேர்த்துக் கிளறி விட்டுடுது...அப்புறம் அந்த தோழி கூட இன்னும் தொடர்பு இருக்கா?இல்லை அந்த இன்சிடென்டோட நட்பூ வாடிருச்சா?

рокрпВроороХро│рпН
04-01-2008, 10:24 AM
பூ...உன்னோட பதிப்புகள் எப்பவுமே எங்களுடைய ஞாபகங்களையும் சேர்த்துக் கிளறி விட்டுடுது...அப்புறம் அந்த தோழி கூட இன்னும் தொடர்பு இருக்கா?இல்லை அந்த இன்சிடென்டோட நட்பூ வாடிருச்சா?
உண்மை தான் யவனி அக்கா.
கல்லூரி என்றாலே பல நினைவுகள் எல்லார் மனத்திலும் வரும். இப்படி செய்தது என் உயிர் தோழி இன்று வரை.
அவள் தான் என் ஒரே சிறந்த நட்பாக நான் கருதுவது. இந்த சம்பவம் ஒரு சின்ன நெருடல் என் மனத்தில். ஆயினும், அவள் அப்போதைய மனநிலை எப்படி இருந்தது என்று என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாட்டியும், அவள் வேண்டுமென்று செய்திருக்க மாட்டாள் என்று என்றோ மன்னித்து விட்டேன்.

தீபாவளிக்கு வந்தவள், எனக்காக ஒரு செட் சுடிதாரும் பரிசளித்து தான் சென்றாள். மிக நல்ல தோழி அவள்.

роирпБро░рпИропрпАро░ро▓рпН
04-01-2008, 10:40 AM
ஐயோ பூவு தன்னந்தனி காட்டுக்குள்ள தனிமரமா ஆயிடுச்சா..

முதல் பகுதி வரிகளை படிக்கும்போது,
காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே
காட்டுப் புளி (மரம்) வழிமறிக்கும் கலங்கி நிற்காதே
அண்ணன் மம்முட்டியன் பேரச் சொன்னா... அப்படினு பாடி

நீ சொன்ன அ. மாதா பொறியியல் கல்லூரிக்கே படை திரட்டி வரலாம்ணு நினைக்கறதுக்குள்ளே, எங்க அண்ணனே வந்து உன்னை கூட்டிட்டுப் போயிட்டார்னு சொல்லி என் மனசில பாலை வார்த்தியே....

рокрпВроороХро│рпН
04-01-2008, 10:43 AM
ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும் - சில விசயங்கள் மிகச்சிறியவையாக இருந்தாலும் எளிதாக எடுத்துக்கொள்ள மனம் வருவதில்லை. புத்தரின் வார்த்தைகளை கடைபிடிப்பதே இதற்கு ஒரே மருந்து.
உண்மை தான் பாரதி அண்ணா.
இச்சம்பவத்துக்கு பிறகு என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் உருவாகவில்லை.
இன்பமயமாகத்தான் இருக்கிறது. :)

நன்றிகள் பாரதி அண்ணா.

рокрпВроороХро│рпН
04-01-2008, 10:50 AM
முதல் பகுதி வரிகளை படிக்கும்போது,
காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே
காட்டுப் புளி (மரம்) வழிமறிக்கும் கலங்கி நிற்காதே
அண்ணன் மம்முட்டியன் பேரச் சொன்னா... அப்படினு பாடி
அண்ணா.. பாட்டெல்லாம் ஜோராத் தான் கீது..!:D
உங்க பேர நம்ம நைனா எப்போ மம்முட்டியன்னு மாத்தினாக....??!!:icon_ush:

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் ராஜா அண்ணா. :)

родро╛рооро░рпИ
04-01-2008, 12:13 PM
தப்பு உங்க மேலதான் பூவு.

1. முதலிலேயே ஆங்கிலத் திறனாய்வு, பசில் தேர்வு எழுதியாச்சி இல்லையா.. அப்ப மத்தவங்க அந்தத் தேர்வை எழுதும் பொழுது அப்டிடியூட் டெஸ்ட் கொஸ்டின் பேப்பர் வாங்கி பதில் எழுத ஆரம்பிச்சிருக்கனும்.. டெஸ்ட் என்ன இம்போசிஸனா திரும்பத் திரும்ப எழுத..

2. கொஸ்டின் பேப்பரை லீக் அவுட் பண்ணி பணம் பார்த்திருக்கலாம்.. பஸ்சார்ஜூக்காவது ஆகியிருக்கும்

3. ஆனா பாருங்க காணாம போனாலும், கால்நடையா போனாலும் வயிற்றுப் பூசை மட்டும் சரியா செஞ்சிடுறீங்க..


ஆனால் பூவு.. அனுபவிச்சு எழுதற.. சின்ன விஷயம்னாலும் சொல்ற விதம் இருக்கே.. இவ்வளவு பில்டப் அந்த வாட்ச் கடைக்காரர் கூட கொடுக்கலை.

ропро╡ройро┐роХро╛
04-01-2008, 12:22 PM
தப்பு உங்க மேலதான் பூவு.

1. முதலிலேயே ஆங்கிலத் திறனாய்வு, பசில் தேர்வு எழுதியாச்சி இல்லையா.. அப்ப மத்தவங்க அந்தத் தேர்வை எழுதும் பொழுது அப்டிடியூட் டெஸ்ட் கொஸ்டின் பேப்பர் வாங்கி பதில் எழுத ஆரம்பிச்சிருக்கனும்.. டெஸ்ட் என்ன இம்போசிஸனா திரும்பத் திரும்ப எழுத..

2. கொஸ்டின் பேப்பரை லீக் அவுட் பண்ணி பணம் பார்த்திருக்கலாம்.. பஸ்சார்ஜூக்காவது ஆகியிருக்கும்

3. ஆனா பாருங்க காணாம போனாலும், கால்நடையா போனாலும் வயிற்றுப் பூசை மட்டும் சரியா செஞ்சிடுறீங்க..


ஆனால் பூவு.. அனுபவிச்சு எழுதற.. சின்ன விஷயம்னாலும் சொல்ற விதம் இருக்கே.. இவ்வளவு பில்டப் அந்த வாட்ச் கடைக்காரர் கூட கொடுக்கலை.

என்ன ஒரு வேறுபட்ட...மாறுபட்ட...தனிப்பட்ட....சிந்தனை.

ро╖рпА-роиро┐роЪро┐
04-01-2008, 12:49 PM
பூவு! சொல்ற விதம் மிக அருமை... கடந்த கால நினைவுகள் எப்பவுமே மனதுக்கு சுகம்தானே....
_______________________________

யவனிகா...


இன்னைக்கும் என்னோட நல்ல தோழி அவ...வருடத்துக்கொருமுறை பாத்துக்குவோம்...கல்யாணம் வேண்டாம்...அந்த சடங்கில நம்பிக்கை இல்லன்னு சொல்லிட்டு இருக்கா...பாக்கலாம்...எதாவது பானி பூரி கடைக்காரன் மாட்டுவானான்னு....

ஆனாலும் உங்க பதிவுகள் செம நகைச்சுவையா எழுதறீங்க.... நெஜாமாவே சத்தமிட்டு சிரித்தேன்....

உங்க கதைகளையும் கொஞ்சம் போடுங்க.. நல்லா வாய்விட்டு சிரிக்கிறோம்..

அன்புடன்

ஷீ-நிசி

роЖро░рпН.роИро╕рпНро╡ро░ройрпН
04-01-2008, 01:01 PM
இப்போது எங்கே, என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்

mukilan
05-01-2008, 12:39 AM
கேரளா பக்கம் என்று சொன்னதும் எனக்கு ஞாபகத்தில் வந்தது நம்ம பென்ஸ் படிச்ச நூருல் இஸ்லாம் காலேஜ்தான். கோயம்புத்தூர் பக்கத்தில் இருக்கிற இதுக்கு இத்துணை களேபரமா! ச்ச்சும்மா சொன்னேன். அனுபவத்தை அழகா பதிந்ததற்கு பாராட்டுக்கள்.

ஆமா யார் அந்த வாட்சு கடைக்காரர்???????

рокрпВроороХро│рпН
08-01-2008, 06:48 AM
1. முதலிலேயே ஆங்கிலத் திறனாய்வு, பசில் தேர்வு எழுதியாச்சி இல்லையா.. அப்ப மத்தவங்க அந்தத் தேர்வை எழுதும் பொழுது அப்டிடியூட் டெஸ்ட் கொஸ்டின் பேப்பர் வாங்கி பதில் எழுத ஆரம்பிச்சிருக்கனும்.. டெஸ்ட் என்ன இம்போசிஸனா திரும்பத் திரும்ப எழுத..
இது உங்களுக்கு தெரியுது.... குவஸ்டின் கொடுத்தவங்களுக்கு தெரியலையே...!! :icon_ush:


2. கொஸ்டின் பேப்பரை லீக் அவுட் பண்ணி பணம் பார்த்திருக்கலாம்.. பஸ்சார்ஜூக்காவது ஆகியிருக்கும்
இது செய்திருந்தா என்னை மலையில தூக்கி வீசியிருப்பாங்க..!!:aetsch013::D


3. ஆனா பாருங்க காணாம போனாலும், கால்நடையா போனாலும் வயிற்றுப் பூசை மட்டும் சரியா செஞ்சிடுறீங்க..
பூவை இப்பத்தான் சரியா புரிஞ்சிக்கிட்டீங்க...!! :icon_b:
எது நின்னாலும் இந்தப்பூசை செய்யலன்னா பூவு அசையாதே...!!:aetsch013::lachen001:


ஆனால் பூவு.. அனுபவிச்சு எழுதற.. சின்ன விஷயம்னாலும் சொல்ற விதம் இருக்கே.. இவ்வளவு பில்டப் அந்த வாட்ச் கடைக்காரர் கூட கொடுக்கலை.
வாட்ச் கடைக்காரர் உங்க சொந்தமா?? இப்படி வந்து வக்காலத்து வாங்குவது சரியில்ல ஆமா..!!:rolleyes::aetsch013::D (ஏன் அண்ணா??? உங்களுக்கு இலவசமா ஏதும் வாட்ச் தருவதா அவரு சொன்னாரா என்ன??:lachen001:)

роЗродропроорпН
08-01-2008, 07:10 AM
தங்காச்சி..
பரீட்சையையே மாத்தி எழுதி அண்ணன் பேரை காப்பாத்திட்டீங்க..! அதென்ன எங்க நீங்க போனாலும் மத்தவங்க உங்களை கழட்டி விடுறதும், நீங்க அழுதுக்கிட்டே வூடு வந்து சேர்றதும்..? என்ன விளையாட்டு இது..? தப்பு எங்கேன்னு தெரியலையே..!!:eek: ஒரு வேளை என் தங்காச்சி இவ்ளோ புத்திசாலின்னு மத்தவங்களுக்கு பொறாமையா இருக்கிறதால இருக்கும்..!!:sauer028:

உங்க அண்ணன் நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன்கிற மாதிரி நீங்களும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்ல புள்ளையா இருக்கிறது கடவுள் கொடுத்த வரம் தானே.!:icon_rollout: அப்பாவை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.. பின்ன என்னவாம்... நீங்க பண்ணுற எல்லா அழிச்சாட்டியத்தையும் தாங்கிக்கிட்டு உங்களுக்கு தொடர்ந்து இன்னைக்கு வரை அப்பாவா இருக்காரே..!! :icon_ush:

நீங்க எக்ஸாம்ல பாஸ் பண்ணினது, இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணாதது எல்லாத்தையும் எந்த பயபுள்ளைகளும் ஒத்துக்காதுங்கிறது உண்மை தான். அதைப்பத்தி நீங்க ஏன் கவலைப்படுறீங்க..? உங்க மேல ஏக பாச வச்சிருக்கிற என்னை மாதிரி அண்ணன், அக்கா, தம்பி, தங்கை எல்லாமார்களும் நம்புறோம்..! (அதுக்கு தனியா கவனிச்சுடணும் என்ன..?:D)

எங்க போனாலும் நீங்க பத்திரமா திரும்பி வந்துவீங்கன்னு எங்களுக்கு தெரியும்..! காரணம், நீங்க வெளியே போனா, வெளில உள்ளவங்களுக்கு தானே ஆபத்தே தவிர, உங்களுக்கு இல்ல..!! (அய்யய்யோ வாய் தவறி உண்மையை உளறிட்டேனே..!!:eek:)

காலேஜ் கேண்டின் சூடான சமோசா போல படிக்க ரொம்ப சுவையா இருக்கு. இன்னும் நிறைய எழுதுங்க..! நல்லா இருங்க..!!:icon_b:

рокрпВроороХро│рпН
08-01-2008, 07:22 AM
பூவு! சொல்ற விதம் மிக அருமை... கடந்த கால நினைவுகள் எப்பவுமே மனதுக்கு சுகம்தானே....
உண்மை தான் ஷீ...!! எப்போதுமே சில பழைய நினைவுகள் பூக்கள் போல் மனம் வருடும்..!!

உங்களின் பாராட்டு கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல ஷீ..!

இப்போது எங்கே, என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்
தமிழ் மன்ற குடும்பத்தில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்..!:icon_ush::lachen001:
பூக்கள் நடுவில் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்..!!:)

கோயம்புத்தூர் பக்கத்தில் இருக்கிற இதுக்கு இத்துணை களேபரமா! ச்ச்சும்மா சொன்னேன். அனுபவத்தை அழகா பதிந்ததற்கு பாராட்டுக்கள்.
இப்படி சொன்னதால் தப்பிச்சீங்க...!! இருங்க இருங்க... இன்னொரு நாள் என்னிடம் மாட்டாமலா போவீங்க?? அப்போ இருக்கு உங்களுக்கு...!!:rolleyes:;)
பாராட்டுக்கு நன்றிகள் முகிலன் அண்ணா. :)

ஆமா யார் அந்த வாட்சு கடைக்காரர்???????
இந்தப் பதிவு போய் பாருங்க...!! எல்லாம் புரியும்..! :D:D

கிருஸ்மஸில் பூ வைத்த செ(கே)க்..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13961)

роЕрооро░ройрпН
08-01-2008, 07:27 AM
அநேக சம்பவங்கள் அன்பினால் கசப்புகளை அரித்து, மெல்லிய கீறல் போட்டுச் செல்லும். சில வேண்டாதவைகளை விதைத்து செல்லும். தோழமைகளை பொறுத்த மட்டில் சம்பவ நிறைவின் பின், உட்கார்ந்து யோசித்தால் எல்லாவற்றிலும் ஒரு நியாயம் ஒளிந்திருக்கும். வழக்கமான உங்கள் நடைமுறையை வைத்து தோழி முடிவு எடுத்திருக்கின்றார். தன்ன்ந்தனியாக பூமகள் நிர்கிறார் என்பதை அவர் ஏனோ நினைக்கத்தவறிவிட்டார்.

рокрпВроороХро│рпН
08-01-2008, 07:36 AM
தங்காச்சி..
பரீட்சையையே மாத்தி எழுதி அண்ணன் பேரை காப்பாத்திட்டீங்க..!
ம்..... அப்பாடா...:rolleyes: முதல்லயே ஒத்துக்கிட்டீங்களே...!! சந்தோசம்..!:D

அதென்ன எங்க நீங்க போனாலும் மத்தவங்க உங்களை கழட்டி விடுறதும், நீங்க அழுதுக்கிட்டே வூடு வந்து சேர்றதும்..? என்ன விளையாட்டு இது..? தப்பு எங்கேன்னு தெரியலையே..!!:eek:
ஒருமுறை தானே இப்படி ஆகியதாய் சொல்லியிருக்கேன்..!:icon_ush:
இதற்கு முன் எங்கும் நான் சொன்னதில்லையே...!!:confused::confused:
ஆனாலும், பூவு பத்தி உங்களுக்கு தெரிந்தும் இப்படி கேட்பது சரியில்ல அண்ணாவோவ்...!!:icon_ush:


நீங்க எக்ஸாம்ல பாஸ் பண்ணினது, இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணாதது எல்லாத்தையும் எந்த பயபுள்ளைகளும் ஒத்துக்காதுங்கிறது உண்மை தான். அதைப்பத்தி நீங்க ஏன் கவலைப்படுறீங்க..? உங்க மேல ஏக பாச வச்சிருக்கிற என்னை மாதிரி அண்ணன், அக்கா, தம்பி, தங்கை எல்லாமார்களும் நம்புறோம்..! (அதுக்கு தனியா கவனிச்சுடணும் என்ன..?:D)
சொல்வது என் கடமை. முடிவெடுப்பது உங்கள் உரிமை. (யாரோ சொல்லிய டையலாக் ஹீ ஹீ...!!:D)
எப்படி யோசிச்சாலும் பூவுக்கு பிரச்சனையே இல்லை இத் யம் அண்ணா!!:cool:

(அய்யய்யோ வாய் தவறி உண்மையை உளறிட்டேனே..!!:eek:)
அப்போ இது நாள்வரை பொய் மட்டும் தான் பேசியிருக்கிறார் என்பது திட்டவட்டமாக நிரூபனமாவதாய், இதற்கு த.ம.நீ(தமிழ் மன்ற நீதித்துறை) பிரிவு 405-இன் கீழ், அதிகபட்ச தண்டனையை வழங்குமாறு நீதிபதி அறிஞர் ஐயாவைக் கேட்டுக் கொள்கிறேன். :rolleyes:


---------------

உங்க பதிவுகள் பின்னூட்டமாக வரவில்லையெனில் மனம் கனத்துவிடுகிறது. பின்னூட்ட ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள் இதயம் அண்ணா. :)

роирпБро░рпИропрпАро░ро▓рпН
08-01-2008, 07:46 AM
உங்க பதிவுகள் பின்னூட்டமாக வரவில்லையெனில் மனம் கனத்துவிடுகிறது. பின்னூட்ட ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள் இதயம் அண்ணா. :)
மேற்கண்ட வாக்கியத்தில் வார்த்தைகள் சிதறிக்கிடக்கின்றன. கீழ்கண்டவாறு சேர்க்கிறேன்.

உங்க பதிவுகள் பின்னூட்டமாக கொடுத்தமை மனம் கனத்துவிடுகிறது. பின்னூட்ட ஊக்கம் வரவில்லையெனில் நன்றிகள் இதயம் அண்ணா. :)

роЗродропроорпН
08-01-2008, 07:51 AM
இதற்கு முன் எங்கும் நான் சொன்னதில்லையே...!!:confused::confused:
அண்ணன்கிட்டயே பொய் சொல்லலாமா..? நீங்க சின்ன வயசில் ஸ்கூல் சேர்ந்திருந்தப்போ எல்லாரும் விட்டுட்டு போய், அம்மா வந்து தேடி... நீங்க மூக்கொழுக அழுதது பொய்யா..? பொய்யா..?? பொய்யா..??? (அடுத்த இரண்டு....:D)

роЪрпБроХроирпНродрокрпНро░рпАродройрпН
20-01-2008, 09:34 AM
அட... இதெல்லாம் உண்மைதானா..? பொய்யில்லையே பூ..?

காலேஜ்ல டாப்பரா..?ம்ம்ம் நம்பறதுக்கு கஸ்டமாதான் இருக்கு.. பின்ன நீ எப்பவும் கேண்டிண்லதான் இருப்பன்னு உங்க தோழி சொன்னாங்களே..! அதுக்கு காரணம் கூட சொன்னாங்க.. அது என்ன தெரியுமா..

நீங்க சாப்பாட்டு மேல ஆசைபட்டு கேட்டரிங்தான் படிப்பன்னு அடம் பிடிச்சிங்களாம்.. ஆனா நீ ஏற்கனவே குண்டா(பூவின் குறும்பாக குண்டாகலாம் பாருங்க மாக்கா..) இருந்ததால வேண்டாம் இந்த விளையாட்டுன்னு சொல்லி உங்க அப்பா கம்ய்ய்ய்யூட்ட்டடர்ர்ர் படிக்க சொன்னாராம்... ஆனா இதுவரைக்கும் பூ இதை மன்றத்துல சொல்லவே இல்லை...

ஏன்னு எனக்கு தெரியும்.. மன்றத்துல பொய் மட்டும்தான் சொல்லுவேன் சபதம் போட்டுருக்காங்க... நம்ம பூ... யாருகிட்டங்கிறீங்களா.. நம்ப எல்லோர்கிட்டயும்தான்...

இப்படி அழுது அழுது ஏமாத்தி இ-காசு வாங்கிகிட்டு போய் கடையில முட்டாய் திங்கறதே பூவுக்கு வேலையா போச்சு..! யாரும் ஏமாந்திடாதிங்க அப்புகளா..?!

рокрпВроороХро│рпН
20-01-2008, 11:32 AM
அட... இதெல்லாம் உண்மைதானா..? பொய்யில்லையே பூ..?
மூவாயிரம் தாண்டி பூவு பதிவு போட்டதுக்கப்புறமும் பூ சொல்வது நிஜமான்னு ஒரு சந்தேகம் வந்துவிட்டதா??:fragend005:
வெட்கம்..வெட்கம்.. .அவமானம்...!!:mad::wuerg019::icon_ush::rolleyes:

சுகந்தப்ரீதன்.. எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிக் கொண்டிருக்கும் உனக்கு எதிராக நான் படை திரட்டி வரப்போகிறேன்....! :rolleyes: :D:D

இப்படி அழுது அழுது ஏமாத்தி இ-காசு வாங்கிகிட்டு போய் கடையில முட்டாய் திங்கறதே பூவுக்கு வேலையா போச்சு..! யாரும் ஏமாந்திடாதிங்க அப்புகளா..?!
நான் சாப்பிட வாங்கிய முட்டாயை பிடிங்கித் தின்னுட்டு இப்போ வந்து இப்படி பேசுவது கொஞ்சமும் நியாயமில்லை ப்ரீதன்..!!:sprachlos020::eek:

இருங்க இருங்க....!:icon_ush::rolleyes: யவனி அக்காகிட்ட சொல்லி... அவங்க புள்ளய வச்சி நல்லா கழுதை உதை வைத்தியம் பார்க்க சொல்றேன்..:lachen001::lachen001:

рокрпВроороХро│рпН
20-01-2008, 12:51 PM
உங்க பதிவுகள் பின்னூட்டமாக கொடுத்தமை மனம் கனத்துவிடுகிறது. பின்னூட்ட ஊக்கம் வரவில்லையெனில் நன்றிகள் இதயம் அண்ணா. :)
இது நுரையீரலுக்கு,
:icon_b::icon_b:
:aktion033::aktion033:

இது இதயத்துக்கு,
:ohmy::ohmy:
:medium-smiley-100::medium-smiley-100:

рокрпВроороХро│рпН
20-01-2008, 12:54 PM
அநேக சம்பவங்கள் அன்பினால் கசப்புகளை அரித்து, மெல்லிய கீறல் போட்டுச் செல்லும். சில வேண்டாதவைகளை விதைத்து செல்லும். தோழமைகளை பொறுத்த மட்டில் சம்பவ நிறைவின் பின், உட்கார்ந்து யோசித்தால் எல்லாவற்றிலும் ஒரு நியாயம் ஒளிந்திருக்கும்.
உண்மை. ஆனால், பல சமயம், நட்புகள் சுயநலமாய் மாறிப்போவதையும் பார்த்திருக்கிறேன்..!
இந்த சம்பவத்தை விட பெரிய பிரச்சனைகள் எல்லாம் நட்புகளுக்கிடையே கண்டிருக்கிறேன் அமரன் அண்ணா. அவற்றை எழுதினா மன்றமே பூவுக்காக அழும்...!
அதனால் இத்தோடு நிப்பாட்டிக்கிறேன்..! :icon_ush:

உங்க பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் அமரன் அண்ணா. :)