PDA

View Full Version : ஏழு நாட்களும், எட்டு நாய்க் குட்டிகளும்!!!!.



இளஞ்சூரியன்
04-01-2008, 08:59 AM
ஏழு நாட்களும், எட்டு நாய்க் குட்டிகளும்!!!!.

உங்கள் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

நான், வங்கிப் பணியின் தணிக்கைத் துறையில் இருந்தபோது, தமிழகத்தின் மற்றும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் சென்றிருக்கிறேன். எங்கு சென்றாலும் குறைந்த பட்சம் ஒரு மாதம் தங்கியிருந்து தணிக்கை செய்ய வேண்டி வரும். திருமணம் செய்யாத வயதில் எனக்கு இது ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது. அவ்வாறு ஒரு முறை கோயம்புத்தூர் செல்ல நேர்ந்தது. இவ்வாறு தணிக்கைக்கு செல்கையில் பெரும்பாலும் வங்கியின் தணிக்கை ஆய்வாளர்கள் அனைவருமே ஒரு ஸ்டார் ஓட்டலில் (வங்கியின் செலவில்தான்!!!!) தங்கவே விரும்புவர்.

இதில் நான் கொஞ்சம் வித்தியாசமானவன். விடுதியில் தங்குவதை விட, தனியே ஒரு அறை கிடைத்தாலோ அல்லது, செல்லுமிடத்தில் கல்யாணம் ஆகாத ஊழியர்கள் இருந்து அவர்களுடன் தங்கிக் கொள்வதோ, அல்லது ஏதாவது ஊழியர்கள்/நண்பர்கள்/மற்றவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து பணமளிக்கும் விருந்தாளியாகவோ தங்குவதைத்தான் விரும்புவேன். இதனால் எனக்கு பணம் கொஞ்சம் மிச்சமாகும்; ஓரளவுக்கு வீட்டு உணவு கிடைக்கும்; மற்ற கலாசாரங்களை (குறிப்பாக வட நாட்டில்) அறிய முடியும். இன்ன பிறவும் உண்டு.

அப்படித்தான், கோவை சென்றதும், வங்கி மேலாளர் ஒருவர் வீட்டின் முன்னறை மட்டும் நான் தங்குவதற்காக விடப் பட்டது. அவர் ஈரோடு கிளையின் மேலாளர். குடும்பத்துடன் ஈரோட்டிலேயே இருந்தார். கோவை வரும்போதெல்லாம் தன்னுடைய வீட்டில், தங்கிச் செல்வார்.

அறைக்குத் திரும்ப, எனக்கு, ஒவ்வொரு நாளும் இரவு பத்து மணியாகிவிடும். குழுவிலேயே இளையவன், ஆதலால் மூத்தவர்களின் வேலையும் சேர்ந்து என் தலையில்தான்!! மூத்தவர்கள் மட்டும் மாலை ஐந்து மணிக்கு மேல் வேலை செய்வதில்லை. ஊர் சுற்றிப் பார்க்க, தண்ணியடிக்க, அல்லது சொந்தங்களைப் பார்க்க அல்லது எந்தக் காரணமும் இல்லாமல் சும்மா ஓய்வு எடுக்க என நேரத்திலேயே ஓடி விடுவார்கள். நான் வாயில்லாத அப்பிராணி; எடுப்பார் கைப்பிள்ளை என்பதெல்லாம் அவர்கள் கணிப்பு; எனக்கு வேலை கற்றுக் கொள்ளும் ஆர்வம்!!

போதும் போதும்! அய்யா உங்கள் வங்கியின் நடைமுறைகள் எதற்கு.. நாய்க்குட்டிகள் எங்கே . என்றெல்லாம் முனகாதீர்கள். இதோ நாய்க்குட்டிகள் வந்துவிட்டன.

முதல் நாள் திங்கள், ஓடியது. இரண்டாம் நாள் செவ்வாய், காலை ஏழு மணிக்குத்தான் எழுந்தேன்; அறைக்கு வெளியே ஒரே குரைப்பு சத்தம். வெளியே வந்து பார்த்தால் வீட்டின் சுற்றுச் சுவரின் உள்பக்கம் ஒரு பழுப்பு நிற நாய்; நிச்சயம் தெரு நாயாகத்தான் இருக்க வேண்டும். அதனைச் சுற்றி, பிறந்து சில மணி நேரமே ஆன குட்டிகள், அதன் மடியில் முட்டி மோதிக் கொண்டிருந்தன; இரவுதான் பிரசவித்திருக்க வேண்டும். மிகுந்த வியப்புடன் அவைகளைப் பார்த்தேன்.

அருகில் சென்று அவைகளைப் பார்க்க முயன்றேன். தாய் நாய், தன் இயல்பான பயத்தை, குட்டிகளைப் பாதுகாக்கும் தாயாய், கொர்ர்ர்ர்ர் என்று உறுமிக் காண்பித்தது. வயிற்றைச் சுற்றி போடும் 14 ஊசிகளுக்குப் பயந்து, சற்று தொலைவிலேயே இருந்து கொண்டு குட்டி நாய்களின் நடவடிக்கைகளைப் பார்த்தேன். (ஆனால் இப்போது எல்லாம் அவ்வாறு 14 ஊசிகள் போடுவதில்லை என்றும், நாய்க் கடிக்கு ஒரு ஊசி மட்டும் போட்டால் போதும் என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.)

இன்னும் கண்கள் கூட முழுவதும் திறக்காத நிலையில் குட்டிகள். கொய்ங்க் என்று சொல்வதா; கீச் என்று சொல்வதா என்று சொல்ல முடியாத, ஒரு காதுக்கு இனிமையான சத்தம், மழலை நாய்களின் ஆரவாரம். நிச்சயமாக இது லொள் லொள் அல்லது வள் வள் இல்லை.

மிகுந்த ஆர்வத்துடன் அவைகளையே பார்த்துக் கொண்டிருந்ததில், மணித்துளிகள் ஓடி, வங்கிக்குப் போகும் சமயம் ஆகிவிட்டது. குளிக்காமலேயே வங்கிக்குச் சென்று விட்டேன். நான் சாதாரணமாகவே இரண்டு நாளைக்கு ஒரு முறைதான் குளிப்பேன். அன்று நான் குளிக்காமல் விட்டதற்கு குட்டி நாய்கள் சாக்காக அமைந்து விட்டன!!

வங்கியில் சாதாரணமாகவே, மற்றவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் நான், அன்றைய தினம், எனக்குப் பணித்திருந்த பணிகளைக் கூட செய்யாமல்; மனம் குட்டி நாய்களையே சுற்றி வந்தது. அதன் விளைவாக தணிக்கைக்குச் செல்கையில், சாதாரணமாக இரவு 09 மணி வரையில் வங்கியில் இருக்கும் நான், இருப்புக் கொள்ளாமல்,அன்றைய தினம் மாலை ஆறு மணிக்கே வங்கியை விட்டு கிளம்பிவிட்டேன்,

நாய் ஒரே பிரசவத்தில் எத்தனை குட்டிகள் போடும் என்று தெரியாது. ஆனால் இங்கு மொத்தம் எட்டுக் குட்டிகள். தாய் நாயைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. கோவையின் கார்த்திகை மாதக் குளிரில் நடுங்கியபடி இருந்தது. அதற்கே உணவு இல்லை; உடலில் தெம்பு இல்லை; குட்டிகளுக்கு எங்கிருந்து போதுமான பால் கொடுக்கும். குட்டிகளின் நிலை அதை விடப் பரிதாபம். அரைப் பட்டினி; குளிர்; என எல்லாமே கும்பலாக சுருண்டு படுத்திருந்தன.

பக்கத்தில் இருந்த கையேந்தி பவனில் (வெளி நாட்டு நண்பர்களில் எவ்வளவு பேருக்கு இந்த பவன்களைப் பற்றித் தெரியும்! உங்கள் நாட்டு உணவு விடுதிகளில் விடுதிக்கு வெளியே நடைபாதையில் உணவு ருசித்திருப்பீர்கள். இந்த பவன்கள் அது போன்றது அல்ல!!) கொஞ்சம் சோறும், இட்லியும் வாங்கி வந்து அதற்குப் போட்டேன். தாய் நாய் மிக ஆவலாகச் சாப்பிட்டு முடித்தது. குட்டிகளும் இட்லியை சாப்பிடத் தெரியாமல் கடித்துக் குதறி ஒரு வழி பண்ணி சாப்பிட்டன. குட்டிகள் சாப்பிட்ட இட்லியை விட அவைகளின் உடலில் ஒட்டியிருந்த இட்லித் துணுக்குகள் அதிகம்.

இரவில் சாப்பிடுவதற்கு மேலும் சில இட்லிகளை வாங்கிப் போட்டு விட்டு படுக்கப் போய் விட்டேன்.

எட்டு குட்டி நாய்களும், சுற்றுச் சுவரின் உள்ளேயே கொய்ங் கொய்ங் என்று கத்திக் கொண்டு இரவு முழுவதும் ஒரே அமளி. புதன், காலையில் தாய் நாய் தெம்பாக குட்டிகளுக்குப் பால் கொடுப்பதைப் பார்த்தேன். இட்லியின் காய்ந்த துணுக்குகள் கூட கண்ணுக்குத் தெரியவில்லை. தாய் நாய், என்னைப் பார்த்தவுடன் நட்புடன் வாலாட்ட ஆரம்பித்தது. என்னை அது எதிரியாகப் பார்க்கவில்லை. நான் போட்டிருந்த சோற்றிற்கும், இட்லிக்கும் அது வாலாட்டிதாகத் தோன்றவில்லை. உணவின் பின்னே இருந்த அன்பினை அது உணர்ந்திருக்க வேண்டும். அண்டிப் பிழைக்கும் நாய்தான்; அது மனிதருக்குத் தோழரடி பாப்பா என்ற பாப்பாப் பாட்டுக் கவி நினைவுக்கு வந்தார்.

இப்போது என்னால் குட்டி நாய்களைக் கூர்ந்து கவனிக்க முடிந்தது. ஒரு குட்டி பழுப்பு நிறத்தில்; ஒரு குட்டி முழுதும் வெண்மையாக; ஒரு குட்டி முழுதும் கறுப்பாக; கட்சிக் கொடி போல் ஒரு குட்டி பழுப்பும் வெள்ளையும் கலந்து; ஒரு குட்டி கறுப்பும் வெ ஒரு கூட்டியின் வண்ணத்தைப் பார்த்து கணக்குப் எடுக்கையிலெயே, அதன் மேல் புரண்டு மற்றொரு குட்டி.என் செம ரகளை.
தலப்பாக் கட்டு கவிஞன்தான் திரும்பவும் நினைவுக்கு வந்தான்.

தாய் நாய் தெம்பாக இருந்ததைப் போல் தோன்றினாலும் எட்டுக் குட்டிகளுக்கும் அது போதுமான தாய்ப் பாலைத் தருவதாகத் தோன்றவில்லை. தாய்ப் பாலைத் தவிர்த்து குட்டி நாய்களுக்கு கூடுதல் ஊட்டம் தேவைப் படுவது போல் எனக்கு தோன்றியது. குட்டி நாய்களுக்காக இரண்டு பாக்கெட் பாலும், நான்கு பிளாஸ்டிக் கிண்ணங்களும் கொண்டு வந்து, இரண்டு குட்டிகளுக்கு ஒரு கிண்ணம் வீதம் என்று பிரித்து, பாலைக் கிண்ணங்களில் ஊற்றி வைத்தேன்.

நாம் போடும் கணக்கு குட்டிகளுக்குத் தெரியவில்லை. ஒரு கிண்ணத்தில் பாலை நக்கிய குட்டிகள் அந்தக் கிண்ணத்தை விட்டு வர மறுத்தன. போட்டி போட்டுக் கொண்டு பாலைக் குடிக்க முயற்சித்த குட்டிகள்; ஊடாக தாய் நாய் வேறு. குட்டிகள், கிண்ணங்களைக் கவிழ்த்து நாசம் செய்து, பாலைக் கொட்டி, எப்படியோ நக்கி, இரண்டு பாக்கெட் பாலையும் காலி செய்தன. நாயால் நக்கித்தானே குடிக்கமுடியும் என்ற ஞானோதயம் எனக்கு அப்போதுதான் விளைந்தது. கிண்ணத்தில் பாலை ஊற்றிய தவறினை உணர்ந்தேன். இடையில் வங்கிக்கு செல்லும் நேரம் நெருங்கி விடவே, இன்றாவது குளிக்க வேண்டும் என்பதால், குட்டிகளைப் பற்றிய நினைவை அப்புறப் படுத்திவிட்டு, குளித்து, வங்கி செல்ல ஆயத்தமானேன்.

வங்கிக்கு கிளம்பு முன் வந்த, வீட்டைப் பெருக்கித் துடைக்க வரும் வேலையாளிடம், காசு கொடுத்து, மதியமும் இரண்டு பாக்கெட் பால் வாங்கி ஊற்றச் சொன்னேன். மனுஷங்களுக்கே பால் இல்லை, நாய்க்கு பால் ஊத்தணுமா, பட்ணத்துக்கரங்க ரவுசு தாங்க முடியலப்பா என்று என் காது படவே முணுமுணுத்துவிட்டு என்னிடமிருந்து காசு வாங்கிக் கொண்டான். பால் நாய்க்குட்டிகளுக்கு கிடைத்ததா அல்லது மனுஷக் குட்டிகளுக்குப் போய்ச் சேர்ந்ததா என்பது என் மனதிற்குள் இன்றும் நடந்து கொண்டிருக்கும் விவாதம். ஆனாலும் அவன் சொன்னதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது.

அன்றும் வங்கியில் எனக்கு வேலை ஓடவில்லை. குட்டி நாய்கள் பராமரிப்பு சிந்தனைதான். பின்பென்ன கோவணச் சாமியாரும் பூனையும் கதைதான். மாலை நாலு மணிக்கெல்லாம் வங்கியை விட்டு கிளம்பி விட்டேன். கோவை வந்தவுடனேயே ஏதோ குட்டியை அசத்திட்டான்யா; மச்சக்கார பையன்; என் உயரதிகாரியின் பொன்னான, என் காது பட சொன்ன, கருத்து. உண்மைதானே; ஒரு (பெண்) குட்டி தரும் கவர்ச்சியை விட இந்த எட்டுக் குட்டிகளும், பொட்டை நாயும் என்னை ஈர்த்தது உண்மை.

அறைக்குச் செல்வதற்கு முன் ஒரு கடைக்குச் சென்று, நான்கு அலுமினியத் தட்டுகளை வாங்கினேன். பிறகுதான் ஞாபகம் வந்தது; நாய்கள் பொறை சாபிடும் என்று; இந்த பேக்கரி உணவை அங்கெல்லாம் வர்க்கி என்று அழைக்கிறார்கள். ஐந்து பெரிய பாக்கெட் வர்க்கியையும், நான்கு பாக்கெட் பாலும், கையேந்தி பவன் இட்லி என எல்லாம் வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றேன்.

இப்பொது குட்டி நாய்களும் என்னை இனம் கண்டு கொண்டு, ஓடி வந்து; குட்டி நாய்கள் ஓடி வருவது கூட அழகுதான்.

அலுமினியத் தட்டு, பால் பாக்கெட், கையேந்தி பவன் சாப்பாடு என குட்டி நாய்களின் ரசிகனாகவும், பாதுகாவலனாகவும் ஆகிவிட்டேன். குட்டி நாய்களும் என்னை அடையாளம் கண்டு கொண்டு, நான் வீட்டினுள்ளே நுழையும் போதெல்லாம் ஓடி வந்து என் கால்களைச் சுற்றி சுற்றி நடக்க முடியாமல் செய்துவிடும். இருப்பினும் வீட்டின் சுற்றுச் சுவருக்குள்ளேதான் ஓடி விளையாடிக் கொண்டிருக்கும். குட்டிகள் வெளியே செல்ல இயலாதவாறு, நான் வெளியே செல்கையில், சுற்றுச் சுவர் வாயிலை அடைத்துவிட்டுச் செல்வேன்.

வர்க்கியைக் கூட உடைத்துத் தின்ன அந்த குட்டிகளுக்குத் தெரியவில்லை. வர்க்கியைக் கையாலே உடைத்து, அலுமினியத் தட்டில் போட்டு, பால் ஊற்றி ஊற வைத்து; அப்பப்பா; எனக்குத் திருமணம் ஆகி, எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் கூட இவ்வாறு கவனிப்பேனோ? தெரியவில்லை!!

வியாழன் அன்று இரவு லேசான தூறலுடன் கோவைக்கே உரிய மழை. பாவம் குட்டிகள் மழையில் நனைந்து அவதிப் படுகிறதே என்று, வீட்டின் பரணில் இருந்த டி வி அட்டைப் பெட்டியைத் திறந்து, உள்ளே இருந்த தெர்மோகோல் அட்டையை மையமாக வைத்து, இன்னும் இரண்டு சிறிய அட்டைப் பெட்டிகளை உடைத்து, செல்லோ டேப்பினால் ஒட்டி, ஒரு வீடு, சிறிய தங்குமிடம் தயாரித்து, வெளியில் எடுத்து வந்து வைத்து, குட்டிகளை அதனுள்ளே, மழைக்குப் பாதுகாப்பாகத் தங்க வைத்து விட்டு, இரவு, படுத்து விட்டேன்.

வெள்ளி காலையில் எழுந்து பார்த்தால். அட்டை வீடு துவம்சம். தெர்மோகோலில் குட்டிகள் நகருகையில் ஏற்படும் உராய்வு சத்தம் , எட்டு குட்டிக்கும், பொட்டை நாய்க்கும் சேர்த்து கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. வீட்டின் உரிமையாளரிடம் கிழிந்த அட்டைப் பெட்டிக்காக நான் வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மிச்சம்!!!!

அந்த வார இறுதியில் குட்டிகள் ஓரளவு புசு புசுவென்று வளர்ந்து, தெருவில் போவோர் வருவோர் என அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன.

சனியன்று இரவு, தொலைபேசியில் என் அம்மாவுடன் பேசினேன். அப்போது குட்டி நாய்களைப் பற்றியும் பேச்சு வந்தது. குட்டிகள் அழகாக இருப்பதை, அப்போது என் அம்மாவிடம் சொன்னேன். டேய், நாயெல்லாம் கூட குட்டியா இருக்கறபோது அழகாத்தாண்ட இருக்கும் என்றார்கள். அத்தோடு நின்றிருந்தால் கூட பரவாயில்லை. அதனைத் தொடர்ந்து நீ கூட குழந்தையிலே அழகாதாண்டா இருந்தே என்றார்கள்!!

எப்படி இந்தக் கருத்தினை எதிர்கொள்வது என்று தெரியாமல் நான் வாயடைத்துப் போய்; ஒரு 10 நொடிகள் கழித்து என் அம்மாவின் வெடிச் சிரிப்பு தொலைபேசியில் கேட்டது. என் அம்மாவின் வெடிச் சிரிப்பு, எங்கள் தெருவில் மிகவும் பிரபலம். பாசக்கார, குறும்ம்ம்ம்ம்ம்புக்க்க்க்க்கார அம்மா!!

ஞாயிறன்று காலையில், இவைகளின் ஆட்டத்தினை என் அறையின் ஜன்னலிலிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சுற்றுச் சுவர் நுழை வாயிலில் ஒரு குட்டிப் பெண் வந்து நின்றாள். சுமார் ஐந்து வயதிருக்கும். வசதியான வீட்டுப் பெண் போலிருக்கிறது. உடலில் செல்வச் செழுமை பரவி கிடந்தது. கொழு கொழுவென்றிருந்தாள். சுற்றுச் சுவரின் வெளியே நின்றிருந்து, குட்டிகள் விளையாடுவதையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குட்டி நாய்கள் அவளைப் பார்த்ததும், ஓடி ஓடிக் குரைத்தன. அவைகளுக்கு அது ஓர் விளையாட்டு போலும். அங்கிள் இங்க வாங்க என்று நாய்களுக்குப் பயந்து, என்னை அழைத்தாள். நான் நுழை வாயிலுக்குச் சென்று, என்னம்மா, எதுக்கு கூப்ட என்று கேட்டேன்.

ஒரு கறுப்பு நாய்க் குட்டியைக் காண்பித்து, அந்த நாய் எனக்கு வேணும் என்றாள். வேணும்னா எடுத்துக்கோ என்றேன். இல்ல பெரிய நாய் கடிக்கும்; அம்மா உங்க கிட்ட சொல்லிட்டு எடுத்து வர சொன்னாங்க என்றாள்.

முதலில் குட்டி நாயை இவ்வளவு விரைவில் தாயிடம் இருந்து பிரிப்பதா என்று தயக்கம்.. கடந்த இரண்டு நாட்களாகவே அவைகள் நான் ஊற்றும் பாலைத்தான் குடிக்கின்றன. தாயிடம் பாலருந்தி நான் பார்க்கவில்லை. இப்போதெல்லாம் காலை மாலை என மொத்தம் ஆறு பாக்கெட்டுகள் செலவாகிறது.

தெரு நாய்களுக்கு ஒரு வளர்ப்பாளர், ஆதரிப்பவர் கிடைப்பது கடினம். நான் என்னுடைய வங்கிப் பணியை முடித்து சென்னை கிளம்பினால், அவைகள் அப்புறம் ஒரு சராசரி தெரு நாய்களாகத்தான் அலைந்து கொண்டிருக்கும். சரி ஒரு குட்டியாவது வசதியாக வளரட்டும் என்று நினைத்தேன்.

வெளியே என் காலைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த மற்ற குட்டிகளை விரட்டிவிட்டு, அந்தப் பெண் காட்டிய கறுப்பு நாய்க் குட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு, அந்தக் குட்டிப் பெண்ணின் வீட்டுக்குக் கிளம்பினேன். அந்தக் குட்டிப் பெண், என் கையைப் பிடித்துக் கொண்டு; கூடவே குட்டி நாயை அவ்வப்போது தடவிக் கொண்டு.

போகும் வழியெல்லாம் ஒரே சிந்தனை!! வளர்ந்த பிறகு, மற்ற நாய்களுக்கு தன் சகோதரன் வசதியாக வளர்வது தெரியுமா; தெரிந்தால். வர்க்க பேதம், மித்திர பேதம் உண்டாகுமா. மனித இனத்திலேயே, வளரும் வரையில் ஒன்றாக, ஒரு தாய் மடியில், அன்பாக பாசமாக வளர்ந்தாலும், கல்யாணம் காட்சி என்று வந்தபின் சுயநலம் உருவாகி அதன் விளைவுகளைத்தான், நாம் வாழ்க்கையில் தினமும் பார்க்கிறோமே. நமக்கு ஆறறிவு; நாய்க்கு ஐந்தறிவுதான் என்கிறார்கள். நாய்க்கு இந்த பேதமெல்லாம் தெரியாது என்றே தோன்றுகிறது. எனக்கென்னவோ குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதற்கு பதிலாக, நாயிடமிருந்து தோன்றியிருக்கலாம் என்ற எண்ணம் வந்தது.

ஒரு வழியாக அந்த குட்டி நாயை, ஆசையோடு கேட்ட ஒருவர் வீட்டிலே விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்தால்; தன் சகோதரன் ஒருவன் காணாமல் போனதைப் பற்றி கூட கவலைப்படாமல் மற்ற ஏழு குட்டிகளும் ஒன்றன் மீது ஒன்று புரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. தாய் நாயைக் காணவில்லை. எங்கே பொறுக்கப் போயிருக்கிறதோ; ஒரு வேளை ஏதாவது குட்டியின் அப்பனைப் பார்க்கப் போயிருக்குமோ!!

ஞாயிறு காலை 10 மணிக்கு மேல், சாப்பிட்டுவிட்டு ஒரு தூக்கம் போடலாம் என்று படுத்தேன்.

இப்போது திரும்பவும் அங்கிள் என்று ஒரு குரல்; ஒரு மழலைக் குரல். சன்னல் வழியே எட்டிப் பார்த்தால் ஒரு ஐந்து வயது குட்டிப் பையன்.

ஆஹா அடுத்த குட்டிக்கு ஒரு வளர்ப்பாளர், ஒரு ஆதரவாளர் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியில் எழுந்து வெளியே வந்தேன்.

யவனிகா
04-01-2008, 10:32 AM
பிராணிகளுடனான அன்பு...சரளமான நடை...இயல்பான எழுத்து...உடன் பயணிக்க வைக்கும் அழகான ஆளுமை...
உங்களுடைய முதலாவது படைப்பு இதுதான்.. நான் படித்ததில்...நல்ல படைப்பு...அப்புறம் என்ன ஆச்சு?...மற்ற குட்டிகளுக்கும் ஸ்பான்சர்கள் கிடைத்தார்களா? நீங்கள் எத்தனை நாள் கோவையில் இருந்தீர்கள்?திரும்பிப் போகும் போது எத்தனை குட்டிகள் மிஞ்சின? தொடரும் போடாமலே முடித்ததால்....கேட்கிறேன்.

நேசம்
04-01-2008, 01:02 PM
உங்களின் பிராணிகள் மீதான் அன்பு ஆச்சர்யம் தர கூடியதாக இருக்கிறது.எல்லா குட்டிகளுக்கும் வளர்ப்பாளர் கிடைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.யவனிக்காக்கும் அன்பு அதிகம்.புள்ளிகிட்டே கேட்டா தெரியும்

lolluvathiyar
04-01-2008, 01:06 PM
அற்புதமான படைப்பு வந்தவுடன் சூப்பராக உங்கள் அனுபவத்தை தந்திருகிறீர்கள். நாய் குட்டிகளை கவனிப்பதை மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள். இதுதான் நகரத்து மக்களின் விசேசமே.
எனக்கு நாய் என்றாலே மிகவும் பிடிக்கும், கிராமத்து வீட்டில் பக்கத்து தோடத்து நாயெல்லாம் எங்க் வீட்லதான் இருக்கும். குட்டி போட்டா அத தூக்கீட்டு வந்தா 4 நாள் ஆகும் கன்னு முழிக்க, அதுகுள்ள நம்ம தூக்கம் சுத்தமா போயிடும்.
கன்னு முழிக்காத குட்டி நாய் கத்துவும் விதம்
க்ங்குகா (இதை உச்சரித்து பாருங்கள் சரியாக வரும் என்று நினைகிறேன்)

யவனிகா
04-01-2008, 01:28 PM
யவனிக்காக்கும் அன்பு அதிகம்.புள்ளிகிட்டே கேட்டா தெரியும்

நேசம்...ஒரு நாள் உங்க மனைவி சொன்னாங்க...அவங்க குரங்கு தான் வளக்கிறாங்களாம்...அதும் மேல த்ரீ மச் பாசமாம்..சேட்டை பண்ணும் போது அதும தலையில குடத்த வெச்சு...சுப்பிரமணி தண்ணி கொண்டா...அப்பிடின்னா போதுமாமா...சமத்தா அடி பம்பில போய் தண்ணி அடிச்சிட்டு வருமாம்...அப்பிடி வராட்டா அது முதுகில இல்ல அடி பழுக்கும்.....(இது எப்படி இருக்கு?)

பாதி நாள் காணாமப் போயிட வேண்டியது...அப்புறம் வந்து சும்ம இருக்கிற புள்ளைய வம்புக்கு இழுக்க வேண்டியது..நானும் திரிய பின்னூட்டம் மட்டும் இடனும், தவிர யாரையும் கலாய்க்கக் கூடாதுன்னு கையக் கட்டி வெச்சிருந்தாலும் விடறதில்லை...இதே பொழப்பாப் போச்சு...

மன்னிச்சுக்கோங்க சூரியன்....

யவனிகா
04-01-2008, 01:30 PM
க்ங்குகா (இதை உச்சரித்து பாருங்கள் சரியாக வரும் என்று நினைகிறேன்)

அய்யோ...அண்ணா...கத்திப் பாத்ததில...பக்கத்து வீட்டில் இருந்த அல்சேசன், எதிர் வீட்டு டால்மேசன் எல்லாம் எட்டிப் பாக்குது...மேல் வீட்டுப் பூனக் குட்டி பயந்து ஓடியே போச்சு.....

நேசம்
04-01-2008, 01:35 PM
நேசம்...ஒரு நாள் உங்க மனைவி சொன்னாங்க...அவங்க குரங்கு தான் வளக்கிறாங்களாம்...அதும் மேல த்ரீ மச் பாசமாம்..சேட்டை பண்ணும் போது

கோழிகுஞ்சுல்லாம் வாங்கி அம்ருக்கு கொடுத்திங்க.அதனால் உங்களுக்கும் அன்பு அதிகம் என்று சொல்ல வந்தென்.அதுக்கு ஏன் இந்த கோபம்..... இதையும் புள்ளிகிட்டே கேட்கணும்

யவனிகா
04-01-2008, 02:33 PM
கோழிகுஞ்சுல்லாம் வாங்கி அம்ருக்கு கொடுத்திங்க.அதனால் உங்களுக்கும் அன்பு அதிகம் என்று சொல்ல வந்தென்.அதுக்கு ஏன் இந்த கோபம்..... இதையும் புள்ளிகிட்டே கேட்கணும்

அய்யோ...பிரதர் நேசம்...உங்களையும் நான் தப்பாப் புரிஞ்சிட்டனா....புள்ளியோட க்ளோஸ் பிரண்டு நீங்கன்னு நினைச்சிட்டேன்....அதே புத்தி தான் இருக்கும்ன்னு போட்ட கணக்கு தப்பாயிடுச்சு....சரி அழிச்சு இப்பப் போடுறேன் அண்ணா...நேசம் அண்ணாவ நான் குரங்குன்னு சொல்லல...அவரு தான் அவங்க வீட்டு அம்மாக்கு தண்ணி பிடிச்சுக் குடுப்பாங்கன்னு சொல்லல...நேசம் அண்ணா ரெம்ப நல்லவர்...அவரொரு வல்லவர்...ஊரறிஞ்ச உத்தமர்...ஒ.கே.வா? இப்ப நிம்மதியா இஷா தொழுதுட்டு தூங்கௌவீங்க தான?

பாரதி
04-01-2008, 02:54 PM
அன்பு இளஞ்சூரியன்,
நல்ல நடையில் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
எந்த உயிராய் இருந்தால் என்ன..? பாசம் வைத்த பின் நம்மை கட்டிப்போடும் கயிறல்லவா அது. நண்பரே உங்களின் இந்த பதிவு தொடர்கிறதா..?

IDEALEYE
04-01-2008, 04:22 PM
சொன்னமாதரி
நல்லாவே தமிழ் நடைபயிலுகின்றீர்கள்......
முத்தமிழ் மணம் கமழ்கின்றது உங்கள் படைப்பில்...
வாழ்த்துக்கள் நண்பரே
இடையில் யவனி வந்து தன் "தமிழ் பயின்று சாகவேண்டும்" என்ற தார்மீக மந்திரத்தின் வாழ்விற்காய் ஒரு....................பண்ணிவிட்டு போயுள்ளார்.
கண்டுகொள்ளாதீர்கள்
ஐஐ

மனோஜ்
04-01-2008, 05:45 PM
மிக மிக அருமையான அனுபவ கதை
அடுத்த குட்டிகளின் கதையை கோட்க ஆவல் தொடர்ந்து எழுதுங்கள்

sureshkumaar1611
04-01-2008, 05:58 PM
தொலைபேசியில் என் அம்மாவுடன் பேசினேன். அப்போது குட்டி நாய்களைப் பற்றியும் பேச்சு வந்தது. குட்டிகள் அழகாக இருப்பதை, அப்போது என் அம்மாவிடம் சொன்னேன். டேய், நாயெல்லாம் கூட குட்டியா இருக்கறபோது அழகாத்தாண்ட இருக்கும் என்றார்கள். அத்தோடு நின்றிருந்தால் கூட பரவாயில்லை. அதனைத் தொடர்ந்து நீ கூட குழந்தையிலே அழகாதாண்டா இருந்தே என்றார்கள்!!

இந்த பகுதியைப் படித்ததும் என்னையறியாமல் சிரித்து விட்டேன்.

சிவா.ஜி
05-01-2008, 03:59 AM
வாழ்த்துகள் இளஞ்சூரியன்.அழகான எழுத்து நடை.சொல்ல வந்ததை மிகதெளிவாகச் சொல்லும் பாங்கு அருமை.முதல் படைப்பிலேயே...ஆண்டவனின் மற்ற படைப்புகளிடமும் அன்பு காட்டவேண்டுமென்ற அருமையான செய்தியை சொல்லிவிட்டீர்கள்.
இடையிடையே நகைச்சுவை,பாரதியின் மேற்கோள் என சுவாரசியமாகச் சொல்லதெரிந்திருக்கிறது உங்களுக்கு.
(ஆமா நெஜமாவே ரெண்டு நாளைக்கு ஒருமுறைதான் குளியலா...ஏன்னா சென்னைக் காரங்க...தண்ணிப் பஞ்சம் அதான் கேட்டேன்)

நுரையீரல்
06-01-2008, 07:23 AM
நல்ல இருக்குங்க இளஞ்சூரியன் உங்கள் கதை. எனக்கும் நாய் வளர்க்க ரொம்ப நாள் ஆசை. ஆனால், நேரம், காலம், சூழல் அமையவில்லை.

நேசம்
06-01-2008, 01:14 PM
அய்யோ...பிரதர் நேசம்...உங்களையும் நான் தப்பாப் புரிஞ்சிட்டனா....புள்ளியோட க்ளோஸ் பிரண்டு நீங்கன்னு நினைச்சிட்டேன்....அதே புத்தி தான்

சின்ன பையலை போய் தம்பின்னு சொல்லமா அண்ணன்னு சொல்லிகிட்டு.. அதுலெ வேறே புள்ளி புத்திதன் எனக்குன்னு ஒரு சந்தேகம்... இதுக்கு என்னை குரங்.. சொல்லலாம் தப்பில்லை