PDA

View Full Version : மயூவின் வீதியோட்டமும் இரவல் ரீ-ஷர்ட்டும்மயூ
04-01-2008, 05:27 AM
ஏற்கனவே பதிந்ததுதான் .. தளவுத்தளக் குளப்பத்தில் இல்லாமல் போய்விட்டது. இப்படியான ஒரு வரலாற்றுக் குறிப்பேடு அற்றுப்போகக் கூடாது என்ற பரந்த நோக்கில் மீளப் பதிகின்றேன்!!! :)

http://graphics8.nytimes.com/images/2007/07/05/us/race600.jpg

அன்று மாலை ஜிம் கன்டீனீல் ஒய்யாரமான இருந்து இலங்கை இங்கிலாந்து கிரிக்கட் மாச் பார்த்துக்கொண்டு இருந்த போது யாரோ பின்னால் தோளில் கை போட்டார்கள்.

நாளைக்கு ரோட் ரேஸ் ஓடப் போறம் வாறீங்களா? ஜெஹான் ஐயா (அண்ணா) கேட்டார்.

அதெல்லாம் பள்ளிக்கூடத்தில ஓடினதோட சரி ஐயோ ஏலாது ஐயே

கமோன் மயூ வன் லாஸ்ட் டைம் தற்போது கேட்டது அயோமி. இதற்குப் பிறகு மறுக்க நான் என்ன முட்டாளா?

ஓ.கே ஐம் இன் கண் சிமிட்டி சரி என்று தெரிவித்ததுடன் அவர்களுடன் சென்று அடுத்தநாள் வீதி யோட்டத்திற்கு பதிவுசெய்து கொண்டேன்.

2000ம் ஆண்டில் பள்ளியில் படிக்கும் போது ஆண்டாண்டு நடக்குமம் ஓடியது அதற்குப் பிறகு எனக்்கும் விளையாட்டுகளுக்கும் எட்டாப் பொருத்தம். பள்ளியில் ஓடினதுக்குக் காரணம் அது கட்டாயம் எல்லாரும் ஓடவேண்டும் என்பதால். இப்போ ஓடுவது.. ஹி. ஹி

காலை 6 மணிக்கு ஓட்டப் பந்தயம் தொடங்குவதாக இருந்தது. அப்படியானால் நான் 5.30 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து புறப்பட வேண்டும். காலையில் எழும்புவதே 8 மணிக்குத்தான்.. சரி பரவாயில்லை ஒரு நாள் தானே என்று மனைதைத் தேற்றிக்கொண்டேன்.

எனது வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த இன்னுமொரு பொடியனும் ஓடியதால் அவன் உதவியுடன் காலையில் நேரத்திற்கு எழும்பி பல்கலைக்கழகத்திற்கு சென்று விட்டேன்

பல்கலை செல்லும் வழியில் பஸ்சில் வந்த மற்ற பொடியள் பெட்டையளைப் பற்றி ஒரே கொமன்ட் அடிச்சுக்கொண்டு வந்தம். அத்தோட புதிதாய் வாங்கிய சில்வர் சங்கிலி (நாய்ச் சங்கிலி மாதிரி இருக்கும்) அதையும் கழுத்தில் போட்டு வெள்ளோட்டம் விட்டேன்.

அண்ணா சங்கிலியை உள்ள விடுங்கோ என்னோட வந்த மற்றப் பொடியன் சொன்னான்

ஏன்?? அவ்வளவு பயங்கரமா இருக்குதோ?? கேட்டவாறே எடுத்து என்னோட டீ-ஷர்ட்டுக்குள் விட்டேன். எல்லாருக்குள்ளும் இருக்கும் சின்ன சின்ன ஆசைகள். இது என்னோட ஒரு சின்ன ஆசை.

கடைசியாய் பல்கலைக்கழகம் வந்து சேர்ந்தோம். ஜிம்மில் சென்று என்னுடைய காற்சட்டையையும் போட்டு, மச்சானின் சப்பாத்தையும் மாட்டிக்கொண்டேன். டீ சர்ட்டில் என் இலக்கத்தையும் மாட்டிக்கொண்டேன்். இன்னமும் அயோமியைக் காணவில்லை.

6 மணிக்குத்தான் ஓட்டம் என்று சொன்னாலும் 6.30க்குத்தான் ஓட்டம் தொடங்கியது. என் நண்பன் பல்கலைக்கழக உதைபந்தாட்டா அணியில் இருப்பதால் நல்ல ஃபிட்.

தம்பி நான் விழுந்து கிழுந்து போட்டன் எண்டால் தூக்கிக்கொண்டு ஓடுடா அவனிடம் விண்ணப்பம் போட்டேன்.

ஓ.கே அண்ணா நக்கலாகப் பார்த்தான்.

இவ்வாறு பேசியவாறே விஞ்ஞாணப் பீடத்தினுள் நுழைந்து போட்டி ஆரம்பிக்கும் இடத்தை அடைந்தோம். இப்போ தூரத்தில் அயோமி ஹேய் படி குட் லக் சீ யா இன் அக்சன்

அடிப் பாவி.. இப்பிடிக் கவுக்குறாளே!! ஓட வேற வைச்சுப் போட்டு இப்ப அக்சனில பாக்கிறாவாம். அதவிட என்னோட தலைலயிழுப்பு, நாய்ச் சங்கிலி பற்றி றேஸ் முடிய கொமன்ட் வேற தருறாவாம்.. யாருக்குத் தேவை இதெல்லாம்.. எங்க கிட்ட வேகாது இந்தப் பருப்பு.

எங்களுக்கு முன்னால பல்கலைக்கழக மரதன் அணயினர் பாதைகாட்டிக்கொண்டு ஓடுவதாக ஒழுங்கு பின்னால் நாங்கள் எல்லாரும் ஓட வேண்டும்.

அப்போ பல்கலைக் கழக மரதன் அணயினரைப் பார்த்து ஒருத்தன் நக்கலைப் போட்டான்.
டேய் பெட்டைகளை பின்னால விட்டிட்டு, பொடியங்கள் முன்னால ஓடுறீங்களெடா வெக்கமில்லையா?. நீங்க புரோஸ் என்றால் பின்னால நின்று ஓடுங்கடா

அதுதானே வெக்கமில்லையாடாநானும் பின்னால இருந்து சத்தம் இட்டன். இப்படியாக பின்னால் இருந்து தலைமறைவாகச் சத்தம் போடுவதில்நான் கில்லாடி.

நடுவர்கள் விசிலை வாயில் வைத்த ஊத தயார் ஆனார்

விசில் ஊதியதுதான் தாமதம் எல்லாப் பசங்களும் காற்றைப் போல விஷ்.. விஷ்.. என்று ஓடத் தொடங்கினார்கள். அடப் பாவி மயூரேசா.. ஓடுடா.. ஓடு என்று என்னை நானே உசார்ப்படுத்திக்கொண்டு ஓடத் தெடங்கினேன்.

பல்கலையைச் சுற்றி 5 வட்டங்கள் ஓடவேண்டும், பெண்கள் 2 வட்டம் ஓடவேண்டும் (அதாவது அயோமி மற்றும் சக நண்பிகள் ). முதல் வட்டம் ஓடி முடித்துவிட்டேன். மூச்சு வாங்குகின்றது பேசாமல் இருந்துவிடலாமா என்று தோண்றுகின்றது. முடியவேயில்லை. பெட்டைகள் எல்லாம் கூட என்னை ஓவர்டேக் பண்ணிக்கொண்டு போறாகள். அடக் கடவுளே என்ன கொடுமை இது. சீ.. என்ன கொடுமை சார்?

1.5 வட்டங்கள் ஓடிவிட்டேன் என் கூட ஓடிவந்த நண்பனைக் காணவில்லை அவன் எங்கேயோ ஓடிப்போய்விட்டான். நான் தனிமரமாக மூச்சு இழுத்து இழுத்து ஓடிக்கொண்டு இருந்தேன். குறைந்த பட்சம் பெண்களையாவத ஓவர்டேக் பண்ண விடக்கூடாது என்ற எண்ணத்தோடு தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்தேன்.

இப்போ 2 வட்டங்கள் ஓடி முடித்துவிட்டேன். அடோவ் மே பலபங். ஷேர்ட் கட் எகக் தியனவா (இங்க பாருடா குறுக்கு வழி ஒன்று இருக்குது) எனக் கத்தியவாறு குறுக்கு வழியால் சிலர் பாய்ந்தனர். அதாவது கிட்டத்தட்ட ஒவொரு வட்டத்திலும் 200 மீட்டர் வரை அந்த குறுக்குப் பாதையால் மிச்சமாகும்

என்மனம் அலை பாய்ந்தது குறுக்கு வழியா.. நேர் வழியா????

நேர் வழி குறுக்கு வழி பிரைச்சனையில் கடைசியாக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கும் கட்டாய நிலைக்கு என்னுடைய மூச்சு வாங்கல் தள்ளியது. வேறு வழியில்லாமல் குறுக்கு வழியில் ஓடத் தொடங்கினேன். கால்கள் தள்ளாடியது கண்கள் இருண்டது என்றாலும் உள்ளிருந்து ஒரு சக்தி உந்தித்தள்ளவே தொடர்ந்து ஓடத் தொடங்கினேன்.

கடைசியாக என்னைப் போல இழுத்து இழுத்து ஓடிய சில நண்பர்களுடன் 5ம் வட்டத்தையும் ஓடி முடித்தேன். ஓடி முடித்து எனது இலக்கத்தை அவர்கள் வைத்திருந்த பெட்டியுள் போட்டு விட்டு அருகில் இருந்த நீர் குளாயில் நீர் அருந்திவிட்டு, சும்மா இருக்காமல் தலையை குனிந்து குளாயில் பிடித்தேன். தலை முற்றும் ஈரமாகிவிட்டது. பின்னர் நிமிர்ந்ததும் ரீ-ஷர்ட் முழுவதும் ஈரமாகிவிட்டது.

போதுமடா சாமி.. வீட்ட போய் நீட்டி நிமிர்ந்து படுக்கலாம் என்று நினைத்தபோது. தூரத்தில் அயோமி. அருகில் சென்று பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன். பொதுவாக அவர்களுக்கு தமிழ் தெரியாததால் சிங்கிலீசில்தான் கதைப்போம்.

ஹல்லோ என்ன ஓடி முடிச்சீரா?

கமான் நான் முடிச்சன் நாக்கை வெளியே தள்ளிக்கொண்டு ஓடினதையும் பார்த்தன்

ஓ ஷட்டப் வில் யூ? செல்லமாகக் கடிந்துகொண்டேன்.

பை தி வே கென்சிடர் எ ஹெயார் கட், அன் துரோ தட் செய்ன் நவ் இட் செல்ப் இது அவ அட்வைசு. அட்வைசு யாருக்குத் தேவை. வீட்டில அப்பா அம்மா சொல்லியே கேக்கிறதில்லை இவ சொல்லித்தான் கேக்கப் போறமாக்கும். அப்படியே இவ்வளத்திற்கும் காரணமான அழகிய அரக்கி அயோமியிடம் விடைபெற்றுக்கொண்டு ஜிம்மிற்கு உடைமாற்றத் திரும்பினேன்.

அங்கே சென்றதும் தான் உறைத்தது. என் ரீ-ஷர்ட் ஈரம் இப்படியே பஸ்சில் செல்ல முடியாது. அப்படி சென்றாலும் கல்லால் விட்டு துரத்தி துரத்தி அடிப்பார்கள். ஏற்கனவே நல்லா நோண்டியாகி இருக்கிறம், இது என்னடா இது அநியாயம் என்று சிந்தித்துக் கொண்டேன்.

எப்போதும் பிரைச்சனையில் நண்பர்கள் கை நீட்டுவது சகஜம்தானே, அவ்வாறுதான் ஜெகான் மீண்டும் வந்து என்ன பிரைச்சனை என்றான். நானும் என் நிலமையை எடுத்துச் சொன்னேன்.

ஐயோ அவ்வளவுதானா.. என்னோட ரூம் கீயைத் தாறன் அங்க போய் ஒரு ரீஷர்ட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு போடாப்பா. ஆனா திரும்பித் தரேக்க துவைத்துத் தரோணும் சரியா? என்று சிரிப்புடன் சொன்னான் நண்பன்.

நானும் அவன் ரூமிற்குச் சென்று உடைமாற்றிக்கொண்டு பல்கலை வீதியில் இறங்க நடக்கத் தொடங்கினேன். இப்போது ஒரு பெட்டை என்னையே முறைத்து முறைத்துப் பார்க்கிறாள். கண்களில் ஏதோ பயங்கரமான நெருப்புத் தெரிகின்றது.

ஹேய்.. வட்ஸ் ரோங் தேவையில்லாமல் வாயைக் கொடுத்தேன்.

ஒன்றும் இல்லை இந்த ரீ ஷர்ட் யாரிண்டது?

ஆ என்ன இது என்னோடதுதான் என்று கலாதியாகச் சொன்னேன்.

ஓ.கே என்று சொல்லியவாறே அந்த நண்பி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். சிறிது நேரத்தில்தான் எனக்கு மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது. இந்தப் பெட்டை ஜெகானிட காதலியல்லவா???

மாலை 6 மணிக்கு ஜெகான் அழைப்பு மேற்கொண்டான்.
டெய்! நீ அந்த நீல ரீ-ஷர்ட்டா போட்டனி?

ஓம்

அடப் பாவி எல்லாத்தையும் கெடுத்திட்டியே அது என்ட கேள்ஃபிரண்ட் வாங்கித்தந்த ரீ-ஷர்ட். எதுக்கு கண்டவங்களுக்கெல்லாம் கொடுக்கிறாய் என்று பெண்டை நிமிர்த்திப் போட்டாள்.. மவனே வாடா வா.. கம்பசுக்கு வருவாய்தானே!!

ஹல்லோ ஹல்லோ. மச்சான் கதைக்கிறது விளங்கேல.. சிக்னல் வீக்கா இருக்கிடா மச்சான் ஹல்லோ.. அப்படியே இணைப்பைத் துண்டித்தேன்!!!

(முற்றியது..)

mukilan
13-01-2008, 04:19 PM
பின்னே ஒரு காதலி அவள் காதலனுக்கு என ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுத்த டீ. சர்ட்டை வேறொரு பையன் போட்டிருந்தால் என்ன செய்வாள் கோபப்படாமல்? மாரத்தான் ஓட்டத்திற்கு வீதியோட்டம் என்ற பெயரா? அருமை. ஈழம் தமிழகத்திற்குத் தந்துள்ள மற்றுமொரு வார்த்தை (அல்லது மயூ எனக்கு கொடுத்த வார்த்தை). சரி அந்த சங்கிலியைத் தூக்கிப்போட முடியாவிடினும், அழகிய அரக்கி சொன்னதால் முடியாவது வெட்டி இருப்பாயே?

மனோஜ்
13-01-2008, 07:00 PM
அருமை மயு நல்லா ஓடுனுங்க ஆனா ஓடரதிலையும் ஒரு குறுக்கு வழியா நல்ல வேலை குறுக்கு வலி வராம இருந்ததே வாழ்த்துக்கள்

மயூ
14-01-2008, 07:30 AM
பின்னே ஒரு காதலி அவள் காதலனுக்கு என ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுத்த டீ. சர்ட்டை வேறொரு பையன் போட்டிருந்தால் என்ன செய்வாள் கோபப்படாமல்? மாரத்தான் ஓட்டத்திற்கு வீதியோட்டம் என்ற பெயரா? அருமை. ஈழம் தமிழகத்திற்குத் தந்துள்ள மற்றுமொரு வார்த்தை (அல்லது மயூ எனக்கு கொடுத்த வார்த்தை). சரி அந்த சங்கிலியைத் தூக்கிப்போட முடியாவிடினும், அழகிய அரக்கி சொன்னதால் முடியாவது வெட்டி இருப்பாயே?

உண்மையைச் சொல்வதானால்... இப்போ சங்கிலியும் போடுறதில்லை முடியும் வெட்டியாச்சு... காரணம் அம்மாவிட்ட முறையாகப் பேச்சு வாங்கியது.... ஆனாலும் மறுநாள் பல்கலை சென்றதும் நீர் சொன்னதுக்காகத்தான் வெட்டினான் என்று ஒரு பீலா விட்டன்!!! :)

ஆமாம் மரதன் ஓட்டத்திற்கு வீதி ஓட்டம் என்று இங்கே சொல்வார்கள்.. இரண்டு சொற்களும் புழக்கத்தில் உள்ளது!

மயூ
14-01-2008, 07:32 AM
அருமை மயு நல்லா ஓடுனுங்க ஆனா ஓடரதிலையும் ஒரு குறுக்கு வழியா நல்ல வேலை குறுக்கு வலி வராம இருந்ததே வாழ்த்துக்கள்
அடுத்தநாள் உலகில் இருக்கும் எல்லா வலியும் உடலில் தெரிந்தது... சித்தாலேப, விக்ஸ், மூவ் என்று எல்லாத் தைலங்களையும் பாவித்துப் பார்த்தேன்!

ஓவியன்
17-01-2008, 09:50 AM
கமோன் மயூ, கமோன்...

இன்னும் வேகமா ஓடுங்க..........!!!

:icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap:

சூரியன்
17-01-2008, 10:03 AM
மயூ நீங்கள் எழுதியதில் பாதி விளங்கியது.
பாதி விளங்கவில்லை.

யவனிகா
17-01-2008, 10:59 AM
நிஜமாவே சுவையான சம்பவம் தான்.இலங்கைத் தமிழ் இனிக்கிறது மயூ...
சொல்லும் நேர்த்தி கூடுதல் இனிப்பு...அப்புறம் டி சர்ட்டை துவைத்துத் தானே குடுத்தீர்கள்?

ஓவியன்
17-01-2008, 11:08 AM
அப்புறம் டி சர்ட்டை துவைத்துத் தானே குடுத்தீர்கள்?

துவைக்கிறதா அப்படினா என்ன அக்கா..???

இப்படி மயூ வந்து கேட்கப் போகிறார் பாருங்க..... :)

மயூ
17-01-2008, 01:49 PM
கமோன் மயூ, கமோன்...

இன்னும் வேகமா ஓடுங்க..........!!!

:icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap: :icon_clap:
அது சரி...
நீங்க சொல்றத ப்பார்த்தா.... ஏதோ பெட்டையைக் கூட்டிக் கொண்டு ஓடச்சொல்றது போல இருக்குது!!! :icon_b: :cool: :cool:


மயூ நீங்கள் எழுதியதில் பாதி விளங்கியது.
பாதி விளங்கவில்லை.
ஏன்???? மற்றவர்களுக்குப் புரிகின்றதுதானே???? :fragend005: :fragend005:

மயூ
17-01-2008, 01:52 PM
நிஜமாவே சுவையான சம்பவம் தான்.இலங்கைத் தமிழ் இனிக்கிறது மயூ...
சொல்லும் நேர்த்தி கூடுதல் இனிப்பு...அப்புறம் டி சர்ட்டை துவைத்துத் தானே குடுத்தீர்கள்?
ஆமாம்... இலங்கையில் தேனீருக்கு சீனி போடுவதில்லை... கதைத்துக் கொண்டே குடிப்போம்!!! :aetsch013:

நன்றி.. நன்றி....

துவைக்கிறதா அப்படினா என்ன அக்கா..???

இப்படி மயூ வந்து கேட்கப் போகிறார் பாருங்க..... :)
அனுபவம் பேசுதுங்கோ!!!! :mad: