PDA

View Full Version : இது கவிதையா



rocky
04-01-2008, 03:06 AM
நான் கவிஞனல்ல,
எனக்கு கவிதை எழுதத் தெரியாது,

காசுக்கு கவிதையை விற்கும் அளவுக்கு
என்னிடம் வார்த்தைகள் விளைச்சலில்லை
நான் விதை விதைக்கவுமில்லை.

புகழுக்கு பொய் வார்தைகள் புனைக்க
எனக்கு விருப்பமில்லை, நான்
எதற்கும் பொய் சொல்லாத அரிச்சந்திரனுமல்ல,
எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் கவிஞனுமல்ல

பணத்திற்கு பாட்டெழுதும் அளவு எனக்குப்
படிப்பில்லை, நான் படிக்கவுமில்லை.
பாராட்டுகளுக்கே தகுதியில்லாத என் வரிகளுக்காக
பரிசுகளின்மேல் ஆசைகொள்ளும் பைத்தியம் நானில்லை.

மீண்டும் சொல்கிறேன்
நான் கவிஞனுமல்ல,
இது கவிதையுமல்ல.

ஆதி
04-01-2008, 06:24 AM
நிச்சயமாய் இது கவிதைதான்..
எந்த சந்தேகமும் வேண்டாம்..
விலையில்லா வார்த்தைகள்
விளைகிறது விழைகிறது உங்களிடம்..
இன்னும் நிறைய
எழுதுங்க ராக்கி
வாழ்த்துக்கள்..

அன்புடன் ஆதி

ஷீ-நிசி
04-01-2008, 06:29 AM
பிரமாதம்....

ரொம்ப நல்லாருக்கு....

காசுக்கு கவிதையை விற்கும் அளவுக்கு
என்னிடம் வார்த்தைகள் விளைச்சலில்லை

மிக அழகான வரிகள்....

வாழ்த்துக்கள் ராக்கி!

சிவா.ஜி
04-01-2008, 06:34 AM
ராக்கி அசத்திட்டீங்க.ஷீ-நிசி மேற்கோள் காட்டிய அதே வரிகளைத்தான் நானும் மிகவும் ரசித்தேன்.வரிகளெல்லாம் நல்ல விளைச்சலாய் விளைந்திருக்கிறது.

கவலைப் படாதீர்கள் காசுக்கு விற்கும் கவிஞனாய் இல்லாமல் மாஸுக்கு(Mass) படைக்கும் கவிஞனாய் இருப்பதில் நாம் பெருமைப் படுவோம்.
வாழ்த்துகள் ராக்கி.

ஜெயாஸ்தா
04-01-2008, 09:30 AM
நிச்சயம் உங்கள் கவிதை விதைதான்...!
களர்நிலமோ உலர்நிலமோ...
இவ்விதை வீரியமாய் முளைவிடும்...!

வாழ்த்துக்கள் ராக்கி தொடர்ந்து தாருங்கள்...!

ஆதவா
04-01-2008, 09:35 AM
காசுக்கு தான் தினமும் உடலையே விற்கிறோமே! கவிதை விற்பதில் தவறா?

வறுமைக்கு விற்பவனுக்கும்
வனப்புக்கு விற்பவனுக்கும்

வித்தியாசங்கள் உண்டு.

கவிதை எப்படி இருக்க வேண்டும்?

ஒரு பாமரன் புரியும்படி - இது பாரதி சொன்னது.

எனக்குப் புரிகிறது. இது கவிதை தான்.

வாழ்த்துகள்

அமரன்
04-01-2008, 09:41 AM
கவிதைக்கு பொய்யழகு என்பார்கள்.
பொய்யில்லாதது கவிதை என்று அர்த்தமல்ல..
பொய்யுரைக்காததும் கவிதைதான்...
இது கவிதை.. அப்போ நீங்கள்???

புலவர்கள் என்றாலே வறுமையின் செல்வர்கள் என்பதை மாற்றி அமைத்தவர்கள்,
யோசிப்பவர்கள் யாசித்ததை யோசித்து மாற்றியோர்கள் இங்குளர்..

நீங்களும் கவிஞனே..:icon_b:

rocky
04-01-2008, 10:43 AM
பின்னூட்டமிட்ட ஆதி, ஷி.நிசி, சிவா.ஜி, அமரன், ஆதவா, ஜெயாஸ்தா ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள். என் போன்ற சிறுவர்கள் உன்மையில் பாராட்டுகளுக்கு ஏங்கியே படைப்புகளை இடுகிறோம், உங்களைப் போன்றோரின் இந்த ஊக்கமே மீண்டும் எழுதலாம் (நன்றாக) என்ற தைரியத்தைத் தருகிறது. மிக்க நன்றி.