PDA

View Full Version : வரவேற்கிறேன்



Mano.G.
04-01-2008, 02:45 AM
உனது சகோதரனை
வரவேற்கும் பொழுது
சாதிக்க எண்ணி
திட்டங்கள் தீட்டப்பட்டன
புத்தாண்டின் குறிக்கோள்களாக,
இன்று வழியனுப்புகிரேன் உன் சகோதரனை,
சாதித்தது என்ன???
காரணங்களும் , சாக்குபோக்குகளும் தான் மிச்சம்

நீ வருவாய் என எதிர்பார்த்தேன்,
நீயும் வந்துவிட்டாய்,
உன் சகோதரனை வரவேற்கும் பொழுது
எடுத்த தீர்மானங்கள் மறுபடியும் முளைக்கிரது
நீ வந்த பிறகாவது அந்த
தீர்மானங்களை நிறைவேற்ற முடியுமா????

இல்லை மீண்டும் நீ போகும் பொழுது
மறுபடியும் காரணங்களும், சாக்கு போக்கும்தானா????

இருந்தாலும் உன்னை வரவேற்கிரேன்
2008ம் ஆண்டே.


மனோ.ஜி.

ஜெயாஸ்தா
04-01-2008, 03:31 PM
நல்ல கவிதை மனோ. ஒவ்வொரு புத்தாண்டும் இப்படித்தான் எவ்வளவோ விசயங்களை செய்யவேண்டும் என்று முடிவெடுக்கிறோம். மீண்டும் மீண்டும் ஒவ்வொரு புத்தாண்டிலும் முடிவெடுகிறோம். ஆனால் செயலில் காட்டுவதில்லை. இதைத்தான் மயான தீர்மானம் என்பார்கள். இடுகாட்டில் சடலத்தை அடக்கும்போது.... 'நாளைக்கு நமக்கும் இதே கதிதானே... இனிமேல் மற்றவர்களை ஏமாற்றக்கூடாது. நியாயமாக நடக்கவேண்டும். தர்மம்செய்யவேண்டும்' என்றெல்லாம் நினைப்பார்கள். வெளியே வந்த சில நிமிடங்களில் அந்த நினைவுகள் மறந்து மீண்டும் பழைய படியே தன் சுயரூபத்துடன் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதைத்ததான் 'மறு நொடியே மறைந்து போகும் மயானத்தீர்மானங்கள்' என்பார்கள். அருமையான சிந்தனைகளை தூண்டிய கவிதை. தொடர்ந்து எழுதுங்கள் மனோ.

சுகந்தப்ரீதன்
05-01-2008, 09:04 AM
வருடத்தை ஒரு உயிராக கற்பனை செய்து கவி வரைந்தது.. அருமை மனோஜ் அண்ணா..! வாழ்த்துக்கள்..!

மனோஜ்
05-01-2008, 09:57 AM
ஆண்டுகள் கடந்துவிடும்
அகன்று விடாது தீர்மாணங்கள்
அன்டிட செய்தல் நலம் என்று கவிதை தந்த மனோஜீ அண்ணாவிற்கு நன்றி