PDA

View Full Version : மழை..!



பூமகள்
04-01-2008, 01:45 AM
வானத்து சல்லடை
நட்சத்திர ஓட்டையில்
யார் கொட்டினார்கள்
இத்தனை நீர் - "மழை"

குறிப்பு:
பழைய சுவடுகளின் கிறுக்கலில் கிட்டியது.
(பரண் தூசிலிருந்து விடுபட்ட ஒரு துரும்பு தான் இதுவும்..!:icon_ush:)

aren
04-01-2008, 01:52 AM
ஆமாம், கீழேயிருந்து எத்தனை வாளிகளில் தண்ணீரை கொண்டு சென்றிருப்பார்களோ தெரியவில்லை. அப்படி அடை மழையாக கொட்டுகிறர்களே.

பூமகள்
04-01-2008, 02:12 AM
ஆமாம், கீழேயிருந்து எத்தனை வாளிகளில் தண்ணீரை கொண்டு சென்றிருப்பார்களோ தெரியவில்லை. அப்படி அடை மழையாக கொட்டுகிறர்களே.
:D:D
ஒருவேளை டியூப் போட்டு மேலே ஏற்றியிருப்பாங்களோ???:rolleyes:

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் அரென் அண்ணா. :)

ஷீ-நிசி
04-01-2008, 02:53 AM
ம்ம்ம்....

வானம்... அதில் நட்சத்திரங்கள் அந்த ஓட்டைகளாய்.. அதின் வழியே மழை பொழிகிறது...


வளமான கற்பனை...

இரவு நேரத்திற்கு
மட்டும் பொருந்தும்....

'அட' போடவைத்தது..

அட போட வைக்கின்ற கவிதைக்கு பின்னூட்டமிடாமல் இருக்க முடியுமா?

வாழ்த்துக்கள் பூமகள்!

பூமகள்
04-01-2008, 03:10 AM
ம்ம்ம்....
'அட' போடவைத்தது..
அட போட வைக்கின்ற கவிதைக்கு பின்னூட்டமிடாமல் இருக்க முடியுமா?
வாழ்த்துக்கள் பூமகள்!
ஆஹா..! ஷீ...!
உங்கள் வாழ்த்துகிட்டியது மிக மிக ஆனந்தம். :)
மன்றத்து கவியரசர் கையால் பாராட்டு கிட்டியதை எப்படி சொல்லி என் மகிழ்வை புரியவைப்பேன்..! :)

மிக மிக நன்றிகள் ஷீ...!

ஆதி
04-01-2008, 05:40 AM
இதேப் பார்வையில் நானும் ஒரு கவிதை எழுதினேன்..

கவிசமர் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=296575&postcount=464)

பாராட்டுக்கள் பூமகளுக்கு

aren
04-01-2008, 05:48 AM
ஆஹா..! ஷீ...!
உங்கள் வாழ்த்துகிட்டியது மிக மிக ஆனந்தம். :)
மன்றத்து கவியரசர் கையால் பாராட்டு கிட்டியதை எப்படி சொல்லி என் மகிழ்வை புரியவைப்பேன்..! :)

மிக மிக நன்றிகள் ஷீ...!

முடிஞ்சா நீங்கள் எங்களுக்கு ஒரு 100 இ-பணம் அனுப்பி வையுங்கள். நாங்களும் சந்தோஷப்படுகிறோம்.

பூமகள்
04-01-2008, 05:52 AM
முடிஞ்சா நீங்கள் எங்களுக்கு ஒரு 100 இ-பணம் அனுப்பி வையுங்கள். நாங்களும் சந்தோஷப்படுகிறோம்.
அன்பின் ஆரென் அண்ணா, :D
கொஞ்சம் அப்புல சூடுங்க..! (மேல பாருங்க) :lachen001::lachen001:
ஐ-கேஷ் இருக்கும் இடமே தெரியவில்லை. இதில் எங்கு போய் 100 இ-பணம் அனுப்புவது???!!! :rolleyes::icon_ush::icon_ush:

aren
04-01-2008, 05:53 AM
அன்பின் ஆரென் அண்ணா, :D
கொஞ்சம் அப்புல சூடுங்க..! (மேல பாருங்க) :lachen001::lachen001:
ஐ-கேஷ் இருக்கும் இடமே தெரியவில்லை. இதில் எங்கு போய் 100 இ-பணம் அனுப்புவது???!!! :rolleyes::icon_ush::icon_ush:

அது தெரிந்துதான் முடிஞ்சால் அனுப்புங்க என்று சொன்னேன். உங்களுக்கு புரிந்திருக்கும் என்ற நினைப்பில் அப்படி சொன்னேன்.

மயூ
04-01-2008, 01:31 PM
அட போங்கப்பா... எப்படித்தான் இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்களோ!

அமரன்
04-01-2008, 05:43 PM
இக்கவிதைகண்டவர்கள்
எல்லாரும்
நட்சத்திரங்களாகின்றனர்.

அமரன்
04-01-2008, 05:46 PM
எண்ணற்ற கண்ணுடையாள்
அழுதபடி சிரிக்கும்போது
தோன்றுகிறதோ வானவில்...

சுகந்தப்ரீதன்
05-01-2008, 08:49 AM
நல்லாவே கொட்டுது.. கற்பனை.. பாமகளுக்கு...!

வாழ்த்துக்கள் பூ..!

ஆதவா
05-01-2008, 06:39 PM
இரவு நேர மழை...

இத்தனை நீர் - அடைமழை...

வித்தியாசமான சிந்தனை... அதைவிட ஆரென் அண்ணாவின் பதில் நச் சென்று இருக்கிறது.....

இளசு
12-02-2008, 10:24 PM
பாமகள் வீட்டுப் பரண்தூசும் பண் பாடும்!

பரண்தூசுக்கு... ஹச்.. பாராட்டு தும்மல்!

(குலமகள் ராதை படத்தில் உன்னைச் சொல்லிக் குற்றமில்லை பாட்டுக்கு
நடிகர்திலகம் நனையும் செயற்கை மழை - சீராய் கோடுகளாய் இறங்குவதைக் கண்டபோது --- பெரிய்ய சல்லடையும் வாடகை தீயணைக்கும் வண்டி நீரும் நினைவுக்கு வந்தன - அப்போது..)

பூமகள்
16-02-2008, 06:25 AM
அழகிய கவிதைகள் எழுதி, பின்னூட்ட ஊக்கம் கொடுத்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் (ஆரென், ஷீ-நிசி, ஆதி, அமரன், சுகந்தப்ரீதன், ஆதவா) மனமார்ந்த நன்றிகள். :)

பாமகள் வீட்டுப் பரண்தூசும் பண் பாடும்!
பரண்தூசுக்கு... ஹச்.. பாராட்டு தும்மல்!
உங்கள் தும்மலில் அன்பு மட்டுமே அளவின்றி தெறிப்பதை உணர முடிகிறது.
பெரியண்ணாவின் கண்ணில் பட்டு என் கவிதை வீடுபேறு அடைந்துவிட்டது.
மிக்க நன்றிகள் அண்ணலே..!

நாகரா
16-02-2008, 09:18 AM
வானத்து ஒளிப் புள்ளிகளிருந்து
மண்ணுக்கு ஈரக் கோடுகளைத்
தீட்டியது யாரோ?

ஈரக் கதிர்களால்
மண்ணின் இமைகளைச்
சுட்டது யாரோ?

மேக உள்ளங்கையில்
மடக்கிய தன் விரல்களை
நீட்டியதோ வானம்?

வானக் கூரையின்
நட்சத்திர ஓட்டைகளிலிருந்து
ஒழுகும் அளிக்கற்றைகள்!

பூமிக் குழவியின்
வாய்க்குள் விழும்
வானத்தின் தாய்ப்பால்!

வானத்திலிருந்து பூமியை நோக்கி
ஆவேசத்துடன் ஈர ஈட்டிகளை
எறிவது யாரோ?

மண்ணின் புண்களை
ஆற்ற விண் நீட்டும்
அமுத மருந்து!

மண் காதலியின் மெய் தீண்டும்
விண் காதலனின்
நீண்ட விரல்கள்!

தாகத்தோடு மண் நீட்டிய
மர நாவுகளில்
விண் கொட்டிய அமுதம்!

மண்ணின் வரண்ட உறக்கங் கலைத்து
மண்ணைப் பசுமையில் எழுப்பும்
விண்ணின் ஈர மணிகள்!

மண் பசுமையாய்
மொழி பெயர்க்கும்
விண்ணின் ஈரமொழி!

தன் மண் குட்டியை
அன்புடன் நக்கும்
விண் நாயின் ஈர நாவு!

மண்ணின் மரத் தவசிகளுக்கு
விண் தரும்
அமுத வரம்

பசுமைக் கோலம் போட
மண்ணில் விண் வைக்கும்
ஈரப் புள்ளிகள்

மேகச் சூரியன்
தன்னையே அழித்து
மண்ணுக்குத் தரும் ஈரக் கதிர்கள்

மண்மேலே பசுமைக் கோடுகளாய் உயர்ந்தெழ
மண்கீழ் வீரியப் புள்ளிகளாய்ப் புதைந்துபோன
விண்ணின் ஈரக் கோடுகள்

பூமகளே!
உன் பரண் தூசு
தும்மலோ தும்மலென்று
என்னைத் தும்ம வைக்க
ஈரம் இங்கே.

அனுராகவன்
17-02-2008, 12:53 AM
வானத்து சல்லடை
நட்சத்திர ஓட்டையில்
யார் கொட்டினார்கள்
இத்தனை நீர் - "மழை"

குறிப்பு:
பழைய சுவடுகளின் கிறுக்கலில் கிட்டியது.
(பரண் தூசிலிருந்து விடுபட்ட ஒரு துரும்பு தான் இதுவும்..!:icon_ush:)

ஆகா.. என்னே வியப்பு..!!
நல்லது பூ..
ம்ம் நன்றி பூ..

பூமகள்
30-03-2008, 04:41 PM
பூமகளே!
உன் பரண் தூசு
தும்மலோ தும்மலென்று
என்னைத் தும்ம வைக்க
ஈரம் இங்கே.
அற்புதம்...!!
அபாரம்..!!
எட்ட முடியாத கற்பனைக் கீற்றுகள்..!!
முட்டி என்னை வீழ்த்திவிட்டது..!!
மூச்சு முட்ட படித்துச் சுவைத்து
பதிலிட தாமதமாகிவிட்டது...
மன்னியுங்கள் நாகராஜன் அண்ணா.

உங்களின் அடுக்குத் தும்மலில்
எமக்கு கிட்டியது சீர்மிகு கவித்தூறல்கள்..!!

இப்படியான தும்மல்கள்
இன்னும் பிறக்கட்டும்..!
மன்றம் செழிக்கட்டும்..!! :rolleyes:

அழகிய கவித்துவத்துவ பின்னூட்டத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் 1000 இ-பண அன்பளிப்பும்..!!

பாராட்டுகள் நாகராஜன் அண்ணா. :)

பூமகள்
30-03-2008, 04:57 PM
ஆகா.. என்னே வியப்பு..!!
நல்லது பூ..
ம்ம் நன்றி பூ..
வியந்து பாராட்டிய
அனுவக்காவுக்கு 'ம்ம்' 'எம்' நன்றிகள்..!! :rolleyes: :D:D

ஓவியன்
31-03-2008, 02:15 AM
அழகான ஒரு கவிதை, அதற்கு அற்புதமான நாகராஜனின் பின்னூட்டக் கவிதை - பாராட்டுக்கள் இருவருக்கும்.....!!

நாகரா
31-03-2008, 04:07 AM
அற்புதம்...!!
அபாரம்..!!
எட்ட முடியாத கற்பனைக் கீற்றுகள்..!!
முட்டி என்னை வீழ்த்திவிட்டது..!!
மூச்சு முட்ட படித்துச் சுவைத்து
பதிலிட தாமதமாகிவிட்டது...
மன்னியுங்கள் நாகராஜன் அண்ணா.

உங்களின் அடுக்குத் தும்மலில்
எமக்கு கிட்டியது சீர்மிகு கவித்தூறல்கள்..!!

இப்படியான தும்மல்கள்
இன்னும் பிறக்கட்டும்..!
மன்றம் செழிக்கட்டும்..!! :rolleyes:

அழகிய கவித்துவத்துவ பின்னூட்டத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் 1000 இ-பண அன்பளிப்பும்..!!

பாராட்டுகள் நாகராஜன் அண்ணா. :)

உமது பாராட்டுகளுக்கும் இ-பண அன்பளிப்புக்கும் நன்றி பல பூமகளே!

நம்பிகோபாலன்
31-03-2008, 09:17 AM
என்னவளை
நெஞ்சில் நினைக்கும்
பொழுதெல்லாம்
வானத்தில் பூமழை...

அறிஞர்
31-03-2008, 01:30 PM
இயற்கை மழை பற்றி பூமகளில் சிந்தனை அருமை...
ஆரென் ஏணியில் ஏறி..நீரை கொட்டியிருப்பார் போல...

காதலியின் எண்ணத்தில்.. பூமழை காணும் நம்பிகோபாலின் சிந்தனையுன் அருமை...

பூமகள்
01-04-2008, 08:24 AM
என்னவளை
நெஞ்சில் நினைக்கும்
பொழுதெல்லாம்
வானத்தில் பூமழை...
அவளை நினைக்கும்
பொழுதெல்லாம்
கண்ணில் அடைமழை..!!
அழகிய கவிதைப் பின்னூட்டத்துக்கு நன்றிகள் அன்புச் சகோதரர் நம்பிகோபாலன் அண்ணா. :)

இயற்கை மழை பற்றி பூமகளில் சிந்தனை அருமை...ஆரென் ஏணியில் ஏறி..நீரை கொட்டியிருப்பார் போல...
ரொம்ப நன்றிகள் அறிஞர் அண்ணா.:icon_rollout:
அதெப்படி அண்ணா.. கரக்டா அரென் அண்ணா தான் நீர் கொட்டியிருப்பார்னு இத்தனை சரியா சொல்றீங்க?? ஹீ ஹீ..!!:D:D:rolleyes::icon_rollout: அவரு ஏறினா ஏணி உடைஞ்சிடாதோ??!!

அமரன்
01-04-2008, 08:29 AM
என்னவளை
நெஞ்சில் நினைக்கும்
பொழுதெல்லாம்
வானத்தில் பூமழை...


அவளை நினைக்கும்
பொழுதெல்லாம்
கண்ணில் அடைமழை..!!

வஞ்சப்புகழ்ச்சிக்கு பாராட்டுகள் பூமகள்.

பூமகள்
01-04-2008, 09:16 AM
அமரன் அண்ணா...
சத்தியமா இப்படி ஆகும்னு எழுதலை..!!
நம்பிகோபாலன் அண்ணா...
மகிழ்ச்சியின் துளிகளாக மழையைக் கண்டார்..
நான் மாற்றி கண்ணீரின் சுவடுகளாக மழையைக் கண்டேன்..!!

ஆனா பாருங்க.. இப்போ நீங்க சொன்ன பிறகு.. அழகா அர்த்தப்படுது..!!
சில சமயம்.. எனது எழுத்து வித்தியாசமா அமைஞ்சிடுதோ??!! :)

நம்பியண்ணா கோவிச்சிக்காம இருந்தா சரி தான். :D:D

நம்பிகோபாலன்
01-04-2008, 10:18 AM
இதுல கோபிக்கர்த்துக்கு என்ன இருக்கு.
கண்ணோட்டம் வித்தியாசபடும்பொழுது
கருத்துக்களும் வேறுபடும்.

நாகரா
04-04-2008, 05:13 PM
வள்ளலை நினைக்க
உள்ளமெல்லாம் வெள்ளமாய்
அருள் மழை