Log in

View Full Version : வானவில் - கவிதை



தாமரை
04-01-2008, 12:53 AM
இதய மேகத்தில்
அவள் பார்வை செய்த
நிறப்பிரிகை கவிதை..
வானவில்

இதய மேகத்தில்
அவள் பார்வை செய்த
நிறப்பிரிகை
வானவில்
கவிதை

அமரன்
04-01-2008, 12:30 PM
காணாமல் போன
பக்கங்களில்
கவிதைகள் பலவும்...

ஆர்.ஈஸ்வரன்
04-01-2008, 12:56 PM
வானவில் எப்போதும் இருப்பதில்லையே.

பாரதி
04-01-2008, 02:47 PM
வாநவில் கவிதை வானவில்!

யவனிகா
04-01-2008, 03:23 PM
ரொம்ப கலர்ஃபுல்லான கவிதைதான்....பார்வைக்கே நிறப்பிரிகை...அப்ப மின்னல்...இடி எல்லாம் எப்போ?

அறிஞர்
04-01-2008, 03:39 PM
பல மாற்றங்களில் உருவாவது.. வானவில்
அவள் பார்வையில் வரும் மாற்றங்களில் உருவாவது.. கவிதை..

அருமை தாமரை...

தாமரை
05-01-2008, 03:10 AM
ரொம்ப கலர்ஃபுல்லான கவிதைதான்....பார்வைக்கே நிறப்பிரிகை...அப்ப மின்னல்...இடி எல்லாம் எப்போ?

ஆமாம்.. உம்ம பார்வை வேகம் பட்டு நிறம் பிரிந்து முகம் வெளுத்ததாமே! ராஜா சொன்னார்.. இடி மின்னல் பற்றியும் தான்..

இடி மின்னல் எல்லாம் (அன்பு) மழையின் போதுதானே..

தாமரை
05-01-2008, 03:19 AM
இதய மேகத்தில்
அவள் பார்வை செய்த
நிறப்பிரிகை கவிதை..
வானவில்

இதய மேகத்தில்
அவள் பார்வை செய்த
நிறப்பிரிகை
வானவில்
கவிதை

கவிதை வானவில் :

வர்ணங்கள் கொண்டது
நிரந்தரமில்லாதது
மாயத்தோற்றம்
அந்த நேரத்து அதிசயம்

வானவில் - கவிதை


ஒன்றைப் பலவாக்கி வார்த்தைகளின் ஜாலத்தை
கவிவானில் காட்டுவது..
இந்த மேகம் நிரந்தரம்..
ஒளியும் முழு அகப் பிரதிபலிப்பு
உள்ளுக்குள் ஓராயிரம் அர்த்தங்கள்

அமரன்
05-01-2008, 07:28 AM
அசத்தல் அண்ணா....
இரண்டாவதை தப்பர்த்தம் கொண்டேன். முதலாவதை புரிந்ததும் மன்றத்தில் காணாமல் போன பக்கங்களுடன் சில கவிதைகளும் போயின. அதை எழுதியவர்கள் சிலர் மீள பதித்தல் கடினம் என்றது மின்னலாக் வெட்டியது..

சுகந்தப்ரீதன்
05-01-2008, 08:55 AM
சொல்லோடு மல்லாடும்
சொல்லின் செல்வ(ந்த)ரே....!
எங்களுக்கும் சொல்லி தாருமய்யா
உங்களின் சொல் வித்தையை..!

வாழ்த்துக்கள் அண்ணா..! (பாராட்டும் தகுதி இருக்கான்னு தெரியல எனக்கு)